Jump to content

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15891
  • Joined

  • Last visited

  • Days Won

    23

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.? 1) 8% - 12% மேல் 2) மூன்றாவது பெரிய கட்சி 3) சின்னத்தை தக்க வைத்தல் 4) 1 கோடி வாக்குகள் - இலக்கு நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம் வேறு அல்லவா.? இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.
  2. 1 கப் கோதுமை மாவில் இதுவரை சுவைக்காத முற்றிலும் புதுமையான டிபன் ரெசிபி
  3. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4)7%-8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) ( தர்மபுரி, ஆரணி,தேனி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 32 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0
  4. சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை ப்ரை
  5. இரவோடு இரவாக பட்டுவாடா...போட்டி போடும் DMK- ADMK-BJP! தேர்தல் திகில்..!
  6. என்னப்பா றோக்கன் குடுக்கினம்.. ஜெயித்துவிட்டால் றோக்கனை குடுத்து பணத்தினை பெற்று கொள்ள வேணுமாம் ( ! ) .. இதல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..? டிஸ்கி : ..பிம்பிளேக்கி பிலெப்பி..
  7. பூமியின்ர பாரம் குறைய வாய்ப்பு உண்டா. மக்கள் தொகை குறையுமா ? ரெல் மீ கிளியர் லி ..
  8. “மைக்” சின்னத்திலும் சிக்கல்.. ஓட்டு மெஷினில் ஸ்விட்ச் உள்ள மைக் உள்ளதாக நாம் தமிழர் கட்சி புகார்.! சென்னை: எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம், ஆனால், ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டு வந்த நிலையில், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அதனை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என கைவிரித்தது தேர்தல் ஆணையம். சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்ததையடுத்து சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் தொகுதி வாக்கு இயந்திரம் தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு, வாக்குப்பதிவு எந்திரங்களில் தற்போது ஒட்டப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஆன் - ஆஃப் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம், ஆனால், ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்காத கரும்பு விவசாயி சின்னத்தை ராமநாதபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கியதற்கு நாம் தமிழர் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்விட்ச் இல்லாத மைக்கை ஒதுக்கிவிட்டு, தற்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் ஸ்விட்ச் உடன் கூடிய மைக் படத்தை ஒட்டி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-katchi-has-complained-to-election-commission-that-the-mic-symbol-is-different-597419.html டிஸ்கி : அரசியல் தலையீடு அற்ற சுயாதீனமான இந்திய அமைப்புகளுல் தேர்தல் ஆணையுமும் ஒன்று..
  9. சாமி காசை வாங்கி புள்ளடிய மாத்தி குத்தினியள் .. என்டா சாமி கண்ணை குத்தி போடும்..
  10. கோடி கோடியா கடத்துபவனை எல்லாம் இந்த தேர்தல் பறக்கும் படை விட்டு விடுவினம்..
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் .யாயினி..
  12. கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!
  13. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை.. சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு. இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்‌ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது. லொள்ளு சபா விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியில் நடித்து கலக்கியவர். மேலும், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் இவர் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். ஹார்ட் பேஷன்ட் ஆனாலும்: வாட்டர் பாட்டில் கூட தூக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு, நான் ஒரு ஹார்ட் பேஷன்ட்.. ஆனாலும், 5 கிலோ அரிசி, 10 கிலோ அரிசி மூட்டையை மாடியிலிருந்து தூக்கிட்டு வந்து கொடுக்கிறேன். நம்மாள முடிந்த உதவியை மத்தவங்களுக்கு பண்ணனும், என கஷ்டப்பட்டாலும் பிறருக்கு உதவி செய்து வந்த சேஷு இலவசமாக பல பேருக்கு திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார். 10 லட்சம் இருந்தா: காவேரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும் 10 லட்சம் வரை பணம் செலவாகும் என சொல்லப்பட்டது. மேலும், சேஷுவை காப்பாற்ற பணம் கொடுங்க என்றும் சினிமா துறையினரிடம் அவரது உறவினர்கள் கெஞ்சிக் கேட்டனர். யாருமே உதவல: ஒரு சிலர் சேஷுவிற்கு உதவி செய்ய ஜீபேயில் பணம் போட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், பெரிதாக யாருமே உதவி செய்யாத நிலையில், சேஷுவிற்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுத்தான் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எத்தனை கோடி செலவானாலும் காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், நலிந்த கலைஞர்களுக்கு உதவி பண்ண பெரிய நடிகர்கள் மற்றும் உடன் பல ஆண்டுகள் நடித்து வந்த நடிகர்களும் உதவி செய்ய முன் வருவதில்லை என்பது தான் வேதனையான விஷயமாக உள்ளது. நடிகர் சந்தானம், வடிவேலு, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர் சேஷு என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இறுதிச்சடங்கு: பள்ளிக்கரணையில் உள்ள சாய் பாபா நகரில் உள்ள 3வது மெயின் ரோடு, 3வது குறுக்குச் சந்தில் உள்ள சேஷுவின் வீட்டில் அவரது உடல் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamil.filmibeat.com/news/no-one-helps-lollu-sabha-seshu-for-his-treatment-at-the-last-time-details-shocks-fans-130057.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider டிஸ்கி : இப்போது பார்த்தாலும் அந்த மூதாட்டி வேடத்தில் கலக்கி இருப்பார்.. இன்றைய திரை நகைச்சுவையாளர்கள் யோகிபாபு, சந்தானம் எல்லாம் லொள்ளு சபாவின் அங்கத்தினர்களே.. நன்றி கெட்ட உலகமப்பா..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.