யாயினி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  6,691
 • Joined

 • Last visited

 • Days Won

  9

யாயினி last won the day on November 9 2016

யாயினி had the most liked content!

Community Reputation

1,184 நட்சத்திரம்

About யாயினி

 • Rank
  Advanced Member
 • Birthday March 30

Contact Methods

 • AIM
  ----------------------------------------
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female

Recent Profile Visitors

6,515 profile views
 1. ஏறுதழுவல் போராட்டத்திற்கு பின்னராக அனேக தமிழக மக்களின் மன மாற்றம்! #தமிழன்டா ·
 2. சென்னை: மெரினாவில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் நடிகை நயன்தாரா பங்கேற்றுள்ளார். நடிகைகளில் இவர் மட்டுமே பங்கேற்றது சிறப்பு. மெரினாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் முழு மூச்சாக களப் பணியாற்றி வருகிறார்கள். முன்னணி நடிகர் விஜய் தனது முகத்தை மூடியபடியே மெரினா சென்று போராட்ட களத்தில் கால் பதித்து திரும்பினார். நடிகைகளை பொறுத்தளவில், முன்னணி நடிகையான நயன்தாரா இன்று மெரினா சென்று இளைஞர்கள் போராட்டத்தை நேரில் கண்டார். இவர் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இருப்பதாக அறிக்கை வெளியிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
 3. Posted Date : 12:27 (21/01/2017) Last updated : 12:27 (21/01/2017) ’மெரினாவில் மாணவர்கள் திரண்டது எப்படி?’ மத்திய அரசை அதிரச் செய்த உளவுத்துறை ரிப்போர்ட் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறாக மாறிய போராட்டம்! தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. வழக்கமாக ஒரு போராட்டம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பது உளவுத்துறையின் முக்கிய கடமை. ஆனால் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த தகவல்களை சரியாக உளவுத்துறை போலீஸார் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சட்டம், ஒழுங்கு போலீஸார். அதற்கு மாநில உளவுத்துறை போலீஸார், ’நாங்கள் ஏற்கெனவே தகவலைச் சொல்லி விட்டோம். ஆனால் உயரதிகாரிகள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை’ என்று சட்டம், ஒழுங்கு போலீஸாரை சாடுகின்றனர். மாநில உளவுத்துறை மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் இடையே இந்த பிரச்னை இப்படியிருக்க, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கே அதிர்ச்சித் தரும் அறிக்கையை அளித்து இருக்கிறது. தவறான 'ரிப்போர்ட்'! இதுகுறித்து பேசிய மத்திய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், "மாநில அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வருவதே எங்களது வேலை. ஜல்லிக்கட்டுக்குத் தடை இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றே மத்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்தோம். தற்போது எங்கள் ரிப்போர்ட் தவறாகி விட்டது. உடனடியாக போராட்டங்கள் நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்குள்ள நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து ரிப்போர்ட் தயாரித்தோம். அதில், மக்களின் எழுச்சிப் போராட்டம், நிச்சயம் பெரியளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், வழக்கமாக ஒரு போராட்டம் என்றால் அதற்கு தலைமை ஒன்று இருக்கும். தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமையே இல்லை. இதனால் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் சிக்கல் இருப்பதையும் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த விமர்சனங்களை அப்படியே சுட்டிக்காட்டி இருக்கிறோம். இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு உடனடியாக சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக பெரியளவில் புரட்சி கூட வெடிக்கலாம். அதன்பிறகு மக்கள் சக்தியை தடை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முடிவு, மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தோம். எங்களது அறிக்கையின் முழுவிவரத்தை பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதன்பிறகே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருக்க வேண்டும்!’’ என்றார். இளைஞர்கள் பட்டாளம்! மாநில உளவுப்பிரிவு போலீஸார் கூறுகையில், "அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடந்தவுடன் உடனடியாக எங்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்களும் வழக்கம் போல இந்த போராட்டத்தை பெரியளவில் கண்டுகொள்ளவில்லை. எங்கள் ரிப்போர்ட் குறித்து ஆலோசனை கூட உயரதிகாரிகள் நடத்தவில்லை. ஆனால் அதற்குள் மெரினாவில் இளைஞர்கள் பட்டாளம் குவிந்து விட்டனர். குறிப்பாக மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்றனர். இந்த தகவலையும் எங்கள் உயரதிகாரிகளுக்கு ரிப்போட்டாக கொடுத்தோம். அதன்பிறகே உயரதிகாரிகள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த விவகாரத்தில் தலையிட்டனர். இதற்கிடையில் தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாகவும் உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. உளவுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரிவித்த போது அங்கிருந்து எந்த பதிலும் உடனடியாக வரவில்லை. அமைதி காத்த அரசு! 'அமைதியாகவும், அறவழியில் போராட்டத்தை நடத்த வழிவகை செய்யுங்கள்' என்ற பதில் மட்டும் அரசிடமிருந்து கிடைத்தது. இதனால் போராட்டத்துக்கு எந்தவித இடையூறு செய்யாமல் பாதுகாவலர்களாக போலீஸார் மாற்றப்பட்டனர். அதற்கு போராட்டக்குழுவிடமிருந்தும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. நள்ளிரவில் நிலைமையை எப்படி சமாளிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அதையும் சுமூகமாக போராட்டக்குழுவினரே சமாளித்துக் கொண்டனர். இதனால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்துச் சூழ்நிலைகளும் சாதகமாக இருப்பதால் மெரினா உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துபவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக பெண்களும், குழந்தைகள், முதியோர்கள் போராட்டக்களத்தில் இருப்பதால் அவர்களைப் பாதுகாப்பதே எங்களது முக்கிய கடமையாக உள்ளது. ஜல்லிக்கட்டு அனுமதி கிடைத்தவுடன் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் போராட்டக்குழுவினரை வீட்டுக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றனர். - எஸ்.மகேஷ் vekatan.com
 4. Tamil News >> பத்திரிகை >> home Sunday, 22 Jan, 12.44 am முகப்பு A A A தமிழக இளைஞர்கள், உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டார்கள்! இளையராஜா புகழாரம் சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக போராடி வரும் இளைஞர்கள் உலகத்துக்கு வழிகாட்டியாக மாறிவிட்டார்கள் என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா புகழ்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் இன்று 5வது நாளாக லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். காந்தி பிறந்த நாட்டில், அகிம்சை வழியில் தமிழர்கள் நடத்தி வரும இந்த போராட்டம் உலக மக்களையே வியப்படை வைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு இசைஞானி இளையராஜா புகழாரம் சூட்டி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "மாணவர்களே, இளைஞர்களே.. இந்த உலகத்துக்கே வழிகாட்டும் முறையாக இப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான, ஒரு தலைவன் இல்லாமல், ஒரு கட்சியினுடைய துணையில்லாமல், வேறு எந்த ஒரு இயக்கத்தின் ஆதரவுமில்லாமல், ஆதரவையும் நாடாமல் யாரும் வரக் கூடாது என தடை செய்துவிட்டு நீங்களாக நடத்துவது உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை காட்டுகிறது. இந்தத் தன்னம்பிக்கையை, அமைதியான போராட்ட வழியை இந்த உலகம் கண்டிப்பாக பின்பற்றப் போகிறது. உலகத்துக்கே வழிகாட்டியாக மாறிவிட்டீர்கள். அவ்வளவு உத்வேகமும், உணர்ச்சியும், உள்ளுணர்வும் உங்களுக்குள் இத்தனை நாள் வரை அடங்கிக் கிடந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. இது தொடரட்டும். இடையிலே புகுந்து சில அரசியல் கட்சிகள், சில தலைவர்கள், சில அமைப்புகள் இதில் மீட்டர் போட பார்த்தார்கள். அதெல்லாம் பலிக்கவில்லை. பொதுமக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள். உங்களுடைய ஒற்றுமை, உணர்விலே ஒன்றியிருப்பதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு வெற்றி நிச்சயமாக கிட்டும். இடையில் யார் புகுந்தும், நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்வதற்கு வழியே கிடையாது. உங்களுடைய ஒற்றுமையையும், உத்வேகத்தையும் மட்டுப்படுத்துகின்ற வகையிலே சிலர் நாளை வந்துவிடும் சட்டம் என்று கூறி கலைந்து போய்விடுவீர்கள் என்று சொல்வார்கள். அதெல்லாம் நீங்கள் செவிசாய்க்க வேண்டாம். உங்கள் உத்வேகத்துடனும், உணர்வுடனும் ஒன்றிப் போய் ஒன்றாக நிற்பது என்று தொடரட்டும். அந்த தீர்ப்பு வரும்வரை தொடரட்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். பெரிய சாதனை செய்துள்ளீர்கள் என்று நான் நினைத்து மகிழ்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார். Sponsored Links
 5. ஐல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரியம் . ·
 6. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்: மெரினாவில் ஹீரோவான காவலர் மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும். மேலும், தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கு, இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்து காவலர்களுக்குமே இதே போன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார். இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே அவர் பேசும் போது, சில காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியழகை தொடர்ந்து பேச வைத்தனர்.
 7. Ethirajan Ponnurangam 14 hrs · · தாமரை இலைத் தண்ணீர்... ·
 8. சிதம்பரத்தின் ஐந்து சபைகள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் பஞ்ச சபைகள் உள்ளன.அவை முறையே சிற்றம்பலம்,பொன்னம்பலம்,பேரம்பலம்,நிருத்தசபை,ராஜசபை என்று அளைக்கப்படுகிறது. சிற்றம்பலம்:நடராஜர் ஆடுகின்ற இடமான சித்சபையை சிற்றம்பலம் என்பர்.இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, அவரது தேவி சிவகாமி எப்போதும் கண்டு மகிழ்கிறாள். இதற்கு "தப்ர சபா" என்றும் பெயர் உண்டு. இச்சபைக்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் பொன் வேய்தான். இதில் உள்ள படிகளை "பஞ்சாட்சரப்படிகள்" (நமசிவாய படிகள்)என்பர். பொன்னம்பலம்: சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம் என்னும் கனகசபை. இங்கு தான் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும்.இவ்விடத்தில் ஸ்படிகலிங்கத்திற்கு ஆறுகால பூஜையும்,ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பேரம்பலம்:பேரம்பலத்திற்கு தேவசபை என்று பெயருண்டு. வினாயகர், முருகன், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருள்வர்.இச்சபைக்கு பொன் வேய்ந்தவன் மூன்றாம் குலோத்துங்கன். நிருத்தசபை:நிருத்தசபை நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே உள்ளது.இங்கு அவர் ஊர்த்துவதாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார். ராஜசபை: இங்குள்ள ஆயிரங்கால் மண்டபமே ராசசபை,ஆனி,மார்கழியில் நடக்கும் விழாவில் தேரில் பவனி வரும் நடராஜர்,ராசசபைக்கு எழுந்தருள்வது வளக்கம்.ஆருத்ராதரிசனம் இங்கு தான் நடக்கும்.சிவகாமியம்மன் முன்னால்,நடராஜர் முன்னும் பின்னும் நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு "அனுக்கிரக தரிசனம்" என்று அளைப்பர்.
 9. ஒவ்வொருவரது தீர்க்க முடியாத ஏங்கங்களும் ஆசைகளும் தீர்ந்து போகா வண்ணம் மனதின் ஓரத்திலோ - இல்லை எங்கோ ஓர் மூலையில் தான் ஆணி அடித்தால் போலவோ... இல்லை தூசி தட்டப்படாமலோ அதுவும் இல்லையன்றால் தந்தியறுந்த வீணை போல் மீட்டப்படாமலோ தான் இருந்து கொண்டிருக்கிறது...!
 10. பெரும் திரட்சியை சொல்லும் இது... ஓவியம் - ஹாசிப் கான். ·
 11. கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது. ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது , விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடுத்துச் சென்று உணவாக்குவது. தமிழ் நாட்டில் மாட்டை அப்படி யாராவது கொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா ? வெளிநாட்டு மாடு இனத்தை இந்தியாவில் திணிக்கும் சதியே இந்த 'பீட்டா' சட்டம். உண்மையிலேயே விலங்கினத்தை பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்ட தென்றால்,ஆங்கிலேயர் காலத்தில் துவங்கி,இன்றும்,தினம், லட்சக்கணக்கான மாடுகளை, ஈவு இரக்கமின்றி கொன்று, அதன் இறைச்சிகளை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது, 'கோமாதா நம் குல மாதா'என்று பசுவைக் கும்பிடும் பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா ? பசு வதைத் தடைச்சட்டம் இதற்குப் பொருந்தாதா? சீறும் சிங்கங்களாக தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியுடன் போராடுகிறார்கள்... மக்கள் நலனுக்காகவே சட்டம் . நீதிமன்றம் இதைப் புரிந்து கொண்டு ஜல்லிக்கட்டு தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்... -சிவகுமார்
 12. பா. வெங்கடேசன் 15 hrs · மூன்றாவது நாளாக மெரினா! ·
 13. " இதைத்தான் பாவேந்தரும் சொல்லி வைத்தார். சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே? அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே இதுவரை தொடர்ந்த பழங்கதை எல்லாம் புரண்டு போனதே தோழா வெற்றியின் விதைகள் விழியில் தெரித்ததே தொல்விகள் இல்லை தோழா சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே? அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே ஆழியும் புலமும் நம் பெயர் சொல்லும் அடுத்தவன் ஆழ உரிமை இல்லை நிழலுக்கும் கூட ஆயுதம் தந்து உரிமையை வெல்லுமே எங்கள் படை யார்க்கும் இளைத்தவர் இல்லை இங்கே பூனையும் கோழை இல்லை ஆண் பெண் படையணி நாங்கள் எமை வென்றிட எவனும் இல்லை வெடிப்புற கிளர்ந்திடும் வீரம் எங்கள் மண்ணின் வாசம் இது உரிமையின் முழக்கம் கேட்டே எல்லா திசைகளும் நொறுங்கியது சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே? அடிமையின் உடம்பில் வலிமைகள் செலுத்த வீரன் வந்தான் வெளியே சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே?
 14. Thursday, 19 Jan, 9.25 pm தற்போதைய செய்திகள் A A A தடையை மீறி வரும் 26-ஆம் தேதி ஜல்லிக்கட்டு!: அன்புமணி ராமதாஸ் "தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மைக்கு எதிராக இளைஞர்களும், பாணவர்களும் லட்சக்கணக்கில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியாக குவிந்து மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் வெல்ல வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, இந்திய நலனுக்கு எதிராக செயல்படும் பீட்டா என்ற அமைப்பு முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் தடை செய்ததையோ, அந்த தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததையோ ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறிவந்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் நம்பிக்கை துரோகம் செய்ததைக் கண்டித்து தான், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை போராட்டத்தை இப்போது தான் காண முடிகிறது. போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டிருப்பது தமிழர்களின் போராட்ட குணத்தைக் காட்டுகிறது. தமிழக இளைஞர்களின் மொழி உணர்வை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள், மாணவர்களின் போராட்டக் குணத்தை மழுங்கடிக்கும் முயற்சிகளில் தான் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தன. மதுவை வெள்ளமாக பாயவிட்டும், திரைப்படங்களுக்கு அடிமையாக்கியும் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் முயற்சிகளை ஆட்சியாளர்கள் செய்தனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் பன்னாட்டு கலாச்சாரத்திற்கும், மதுவுக்கும் அடிமையானவர்கள்; அவர்களிடம் போராட்டக் குணம் வற்றிப் போய்விட்டது எண்ணம் மெல்ல மெல்ல தலைதூக்கிய நிலையில், தமிழக இளைஞர்களின் போராட்டக் குணம் ஒரு போதும் குறையாது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் சக்தி வெகுண்டு எழுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டுக்குத் தடை என்ற ஒற்றை பண்பாட்டு அழிப்பு முயற்சிக்காக மட்டும் தமிழக இளைஞர்கள் போராடவில்லை. ஈழத்தமிழர் படுகொலையை தடுக்கத் தவறியது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியையும், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரளத்தின் முயற்சிகளையும், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் ஆந்திரத்தின் சதியையும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்க்க நடவடிக்கை எடுக்காதது, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்காதது, வர்தா புயலுக்கு நிவாரணம் வழங்காதது, தமிழக மாணவர்கள் மீது நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வையும், சமஸ்கிருத மொழியையும் வலிந்து திணிப்பது என தமிழகத்திற்கு மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்து வந்த துரோகத்தையும், அதை தடுக்கத் தவறிய தமிழக அரசையும் கண்டித்தும் தான் மாணவர்கள் உரிமைக்கலகம் மேற்கொண்டிருக்கிறனர். தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வரும் அநாகரீக அரசியல் மாற்றங்களை சகிக்க முடியாததும் போராட்டத்திற்கு காரணமாகும். மாணவர்களின் இந்த போராட்டம் மதிக்கத்தக்கது; பாராட்டத்தக்கது. அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு சிறந்த உதாரணங்கள் சீனாவின் தியானன்மென் சதுக்கப் போராட்டம், அரேபிய நாடுகளில் நடைபெற்ற அரேபிய வசந்தம், ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கானா தனிமாநிலப் போராட்டங்கள், தில்லியில் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை தான். 1989-ஆம் ஆண்டில் தியானன்மென் சதுக்கப் போராட்டம் பெய்ஜிங் நகரை மையமாகக் கொண்டு மொத்தம் 400 நகரங்களில் நடைபெற்றது. அரேபிய வசந்தம் என்ற பெயரிலான மக்கள் எழுச்சி 2010 ஆம் ஆண்டு துனிசியாவில் தொடங்கி எகிப்து, லிபியா, சிரியா, பஹ்ரைன், ஏமன் என பலநாடுகளுக்கு பரவியது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தை மையமாக வைத்து தெலுங்கானா முழுவதும் நடைபெற்றன. அதேபோன்று. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம் சென்னை மெரினா கடற்கரையை மையமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் 200 இடங்களிலும், தமிழர்கள் அதிகம் வாழும் 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. முந்தைய போராட்டங்கள் எப்படி வெற்றி பெற்றனவோ, அதேபோல் இந்த போராட்டமும் மிகப்பெரிய வெற்றி பெறும்; மாணவர்கள் வரலாறு படைப்பார்கள் என்பது உறுதியாகும். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக நான் புதுதில்லி வந்திருந்தாலும் என் மனம் முழுவதும் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் மீது தான் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க மனது துடிக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் தங்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்கச் சென்ற தலைவர்களை திருப்பி அனுப்பியதாலும் என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு தார்மீக ஆதரவையும், பாராட்டுக்களையும் வழங்கி வருகிறேன். மக்கள் பிரச்சினைக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் விருப்பம். இதைத் தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், நானும் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பா.ம.க. எதிர்பார்த்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான மற்ற விஷயங்கள் இனி தானாக நடக்கும். மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26&ஆம் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும். இப்போட்டிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார். Dailyhunt Smartied