Jump to content

nirmalan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    542
  • Joined

  • Last visited

  • Days Won

    4

nirmalan last won the day on January 29 2011

nirmalan had the most liked content!

Profile Information

  • Location
    Canada
  • Interests
    Web Browsing

Recent Profile Visitors

2043 profile views

nirmalan's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Dedicated Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare

Recent Badges

69

Reputation

  1. ஊடக நண்பர்கள் தந்த தகவலைத்தான் இங்கே எழுதுகின்றேன். அவர்களும் புளொட்டின் சில நடவடிக்கைகளுக்கு உடன்படாதவர்கள். அதற்காக அவர்கள் செய்கின்ற நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ள முடியாது என்பது அவர்களின் வாதம். விடுதலைப் புலிகள் மட்டும் அனைத்தையும் சரியாக செய்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே. மாறி, மாறி அவர் நல்லவர் இவர் நல்லவர் என்று வாதிடுகின்றோமே தவிர எவரும் நல்லவராகவே இருந்தது இல்லையே. வியட்நாம் விடுதலைப் போரையும் தமிழீழ விடுதலைப் போரையும் ஒப்பீடு செய்யுங்கள் பார்க்கலாம். வியட்நாம் விடுதலைப் போராட்டம் மக்களின் பரிபூரண ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் பரிபூரண ஆதரவினை பெறாது ஒரு சாராரின் ஆதரவுடனும் மற்றவர்கள் பயந்தும் ஆதரவு அளித்தனர்? விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரே சினந்து கூறியது, "சனத்தையும் தொழில் செய்ய விடுங்கோடா" இரு தொழில்களை (சாதீ ரீதியானது என்பதனால் தவிர்த்துக் கொள்கின்றேன்.) தவிர மிச்ச எல்லாத்தையும் நீங்கள்தானடா செய்கிறியள்" என்றாராம். இதே பாலசிங்கத்தை கடைசியில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள். நாங்கள் வரலாறு கூறினால் திரிபுபடுத்துவதாக கூறுவீர்கள். எழுந்தமானமாக அறிந்த தகவலை நான் இங்கே பதிவிடவில்லை. அது மட்டும் உண்மை.
  2. வவுனியா எல்லைக் கிராமங்களில் புளொட் மக்களை குடியேற்றியதனால்தான் இன்று வவுனியா நகரமாவது எமது தமிழர்களின் கைகளில் உள்ளது. புளொட்டில் மாணிக்கதாசன் குழுவினர் பாரிய அட்டூழியங்களை செய்ததனால்தான் புளொட்டுக்கு கெட்ட பெயர் வந்தது. அதனை சித்தார்த்தன் தரப்பினரே பகிரங்கமாக ஒப்புக் கொண்ட விடயம். சந்திரிகா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பி. தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொழும்பில் புளொட் பாதுகாப்பு வழங்கிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. அதுதான் உண்மை. குமார் பொன்னம்பலத்துக்கு புளொட் வழங்கிய பாதுகாப்பை பின்னர் மீளப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அவர் கொல்லப்பட்டு விட்டார். குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டது கூட அரசியல் படுகொலை அல்ல. இதனை அரசியல் மட்டத் தொடர்புகளில் இருப்பவர்கள் பலருக்கே நன்கு தெரியும். அடுத்து இந்த மருத்துவர் படுகொலை தொடர்பாக நீதிபதி நெடுஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் பல விவாதங்களை முன்வைக்கின்றீர்கள். இந்த மருத்துவர் எமது தமிழ்ப் பெண்களுக்கு செய்த கொடுமைகளை தயவு செய்து நேரம் ஒதுக்கி வவுனியாவில் உள்ள மக்களிடம் அப்பகுதி காலகட்டங்களில் வாழ்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இங்கே கொலைகளை நியாயப்படுத்தவில்லை. ஆனால் அந்த தீர்ப்பு கூட தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது. எய்தவன் இருக்க அம்பை நொந்த கதைதான். விடுதலைப் புலிகளுடன் இணைந்து புளொட்டின் ஒரு பகுதி செய்த கொலைதான் இந்த கொலை என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நீதிபதி உண்மையான கொலையாளிக்கு தீர்ப்பினை வழங்கினால் நீங்கள் பாராட்டலாம். தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். நெடுஞ்செழியன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் கனவில் இருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரப்பினரின் ஆதரவினை திரட்டும் ஒரு நோக்கிலேயே இந்த தீர்ப்பினை அவர் வழங்கி இருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  3. வவுனியாவில் உள்ள எல்லைக் கிராமங்களில் புளொட்டினால் பெருமளவிலான மக்கள் குடியேற்றப்பட்டதனால்தான் வவனியா நகரம் வரை தமிழர்கள் இன்று ஓரளவு வாழ்ந்து வருகின்றனர். புளொட்டினால்தான் இன்று வவுனியா இந்தளவில் பறி போகாமல் இருக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை போராளிகள் உள்ளிட்ட அரசியல்துறை போராளிகளே ஒத்துக் கொண்ட விடயம். நீங்கள் இத்தகவலை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைய புளொட்டுக்கும் புலிகளின் புலனாய்வுத்துறையினர் அழைப்பு விடுத்த தகவல் எல்லாம் உண்டு. அதனுடன் தொடர்புபட்டவர்கள் எல்லாம் தற்போதும் உயிருடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கே நான் புளொட் செய்தவற்றை சரி என்று வாதாட வரவில்லை. சித்தார்த்தன் கூறிய கருத்தின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமே தவிர அதனை விடுத்து எப்போது பார்த்தாலும் பழையவற்றையே கூறிக் கொண்டு ஒருவரை தூற்றுவதிலேயே குறியாக இருக்கின்றீர்கள். தவறே செய்யாதவர்கள் எவரும் இல்லை. அது புலிகளாக இருக்கட்டும். தமிழரசுக் கட்சியாக இருக்கட்டும். ஏன் நீங்களோ நானோ தவறே செய்யாதவர்கள் என்று இருக்க முடியாது. குற்றம் செய்தவனை நோக்கி ஊர் மக்கள் கல்லால் எறிந்து தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போது யேசுநாதர் தவறே செய்யாதவர்கள் யாராவது இருந்தால் கல்லை எடுத்து குற்றம் செய்தவனை நோக்கி வீசுங்கள் என்று கூறினாராம். வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாம் எதனையும் கதைக்கலாம். இன்று வரை வெளிநாட்டில் உள்ள தமிழர்களால் அல்லது புலம்பெயர் அமைப்புக்களால் சிறிலங்கா அரசுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க முடிந்ததா? மாறாக, அங்குள்ள தமிழ்க்கட்சிகளுக்கு பணத்தினை வழங்கி தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நடக்குமாறு கூறி- ஒன்றுபட இருந்த கட்சிகளை எல்லாம் சிதைக்கின்ற வேலைகளைத்தான் எம்மவர்கள் கனகச்சிதமாக செய்கின்றனர். இதனை விட தமக்கு பிடிக்காதவர்களுக்கு வாள்வெட்டுக்கும் பணம் வழங்கி அதனை செய்ய முயற்சிக்கின்றனர். நாம் எப்படியான தமிழ் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம் என்பதனை நினைக்கவே தற்போது கவலையாக உள்ளது.
  4. "ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அண்ணாவின் பேரிழப்போடு இன்றைய காலை விடிந்திருக்கிறது. இதே நாளில் எம் ஈகைச் சுடர் தியாகி திலீபன் அண்ணாவின் நினைவிரங்கலைச் செய்யும் போது இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. ஈழத்தில் அவரின் தாயக எழுச்சிப் பாடல்களைக் கேட்ட காலம் தொட்டு அவரின் ரசிகனாகத் தொடர்ந்த பந்தம் கடல் கடந்த பின்னும் வாட்சாப் வழி தன் புதுப் புது இசைப் படைப்புகளைப் பகிர்வது வரை தொடர்ந்து இப்படிச் சடுதியாக ஓயுமென்று நினைப்பேனா? வர்ணராமேஸ்வரன் அண்ணாவுடன் 2008 இல் நிகழ்த்திய வானொலிப் பேட்டியில் எழுத்து வடிவம் http://www.madathuvaasal.com/2008/03/blog-post.html பேட்டியின் ஒலி வடிவம் பாகம் 1 https://www.youtube.com/watch?v=fVqie_3GaO8 பாகம் 2 https://www.youtube.com/watch?v=vih_dqTKS_c மாவீரர் துயிலுமில்லப் பாடல், எழுச்சிப் பாடல்கள் மற்றும் ஈழத்துப் பக்தி இசை இலக்கியங்களின் வழி அவர் எம்மில் வாழ்வார். கானா பிரபா 26.09.2021
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.