Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5416
  • Joined

  • Last visited

  • Days Won

    6

nochchi last won the day on August 24 2023

nochchi had the most liked content!

Profile Information

  • Gender
    Male
  • Location
    Germany
  • Interests
    புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Recent Profile Visitors

9842 profile views

nochchi's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

1.3k

Reputation

  1. இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். நன்றி
  2. தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக.
  3. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வி தமிழ்த்திறன் 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
  4. அழகான எழுத்துநடை. எனக்கு முறிப்புக் குளத்தால் ஏறி அப்படியே கோணாவில் ஊடாக மல்லாவி வரை ஓடிய நினைவைத்தருகிறது. அந்த வீதியிலும் விளாமரங்களைக் காணலாம். இன்று இயற்கை தொலைந்த செயற்கை வாழ்வினுள் தொலைந்துகொண்டிருக்கின்றோம். நாம் நாட்டை மட்டுமல்ல எம்மையும் சேர்த்தே தொலைக்கின்றோம். நன்றி
  5. தமிழினவிடுதலைக்கும், விடுதலை உணர்வுக்கும் மற்றும் தனிமனித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இடையேயான ஊடாட்டம் என்பது சம்பவச்சூழலை மையங்கொண்டே நகரும். கூட்டுச்சேர்ந்து அழிகப்படுகின்றோம், கொல்லப்படுகின்றோம், கொடுமைகளுகுள்ளாக்கப்படுகின்றோம் என்ற சிந்தனையோடு வீதியால் செல்லும் ஒருவரது கண்ணிலே, தனது இனத்திற்கு எதிரான அவதூறாளனைக் காணும்போது உணர்சிமேலீட்டினால் இயல்பாக எழுகின்ற கொந்தளிப்பு வன்முறை எதிர்ப்பாக வடிவம் பெறுகிறது. மனித நடமாட்டப் பகுதிகளில் அது சில மணித்துளிகளில் குழுச் செயற்பாடாகப் பரணிமிக்கிறது. சிலர் இதனை ஏன் மிதிப்பான் எனக் கடந்துவிட சிலரோ அகற்றிவிட முனைந்து அதன்மேல் வீழ்தல் நிகழ்கிறது. தமிழர்களுள்ளே பண்டாரவன்னியன் காலம் முதல் தொடர்கதைதானே. இதுபோன்ற பிழைப்புவாதிகள் இருக்கவே செய்வர். சமகாலத்திலே சட்டாம்பிள்ளை; சும் செய்யததை, செய்வதை நாம் கடந்து செல்வதுபோல் இதுபோன்ற தரங்கெட்டோரைக் கடந்துவிட வேண்டும். ஈடுபட்டவரால் கடந்துவிட முடியவில்லை. கைக்கூலிகளை நாம் இனங்காணவேண்டும். வெளிப்படுத்த வேண்டும் என்ற அளவிலே இருப்பதற்கான கருத்தாடல்கள் வலுப்பெற வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. உண்மை, தமிழகத்திரைத்துறை ஆடம்பரங்களுக்கு அளிக்கும் முன்னுரிமையை ஆக்கங்களுக்குக்கொடுப்பதில்லை என்பது தொடர்ந்துவரும் நிலை. விஜய் அல்லது அஜித் போன்றவர்கள் நடித்திருந்தால் ஆகா ஓகோ என்று பேசப்பட்டிருக்கலாம். இன்று இயற்கையைகாக்க அரசுகளும் ஆர்வலர்களும் படும்பட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் 'காடு' . சுவியவர்களுக்கு நன்றி
  7. விமர்சனத்தை படித்துக் கருத்தையும், விருப்பையும் பதிவுசெய்து உற்சாகமூட்டும் சுவியவர்களுக்கும், ஈழப்பிரியனவ்ர்களுக்கும் மற்றும் வாசித்த உறவுகளுக்கும் நட்பார்ந்த நன்றி.
  8. வணக்கம், காடு திரைவிமர்சனம் வண்ணத்திரை பகுதியிற் பதிந்துள்ளேன். அகவை26க்கான பகுதியில் மாற்றி இணைத்துவிட முடியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார். குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. சிலவற்றை மாற்றமுடியாது. மாற்றமடையாதது குயிலின் குரலோசை.ஆண்மயிலின் நடனம். யானையின் பிளிறல்.புலியின் உறுமல், சிங்கத்தின் கர்சனை, எனப் பல உள்ளன. ஆனால் முன்னவர் செய்த அரசியல் பிழையென்றால் அதிலே தொங்குவதை விடுத்து பின்னவர் நல்லதைச் செய்யலாம் அல்லவா? நன்றி
  11. என்னுடன் சிரியாவைச் சேர்ந்த குர்திஸ் இனத்து முசுலிம் ஒருவர் வேலை செய்கிறார். அவர் ஒரு குர்திஸ் என்னோடு உரையாடுவார். கடந்த வியாழன் உரையாடும்போது தனது மகனதும் மகளினதும் பிந்தநாளை ஒரு சிலநண்பர்களோடு கொண்டாட உள்ளதாகக் கூறினார். அப்போ நான் மண்டபத்திலா என்று கேட்க, இல்லை வீட்டிலே என்றார். வீடு காணுமா என்றேன் மெய்பாட்டினூடாகச் சமாளிக்கலாம் என்றவர். தனது நண்பனுக்கு எட்டுப் பிள்ளைகள் என்றார்.நான்கு சிரியாவிலும் நான்கு துருக்கியிலும் பிறந்ததாகக் கூறினார். அப்போ நான் இங்கு என்றேன். இங்கு இல்லை என்றார். இங்கும் நாலென்றால்.... யேர்மனியில் ஒரு சிறிய முசுலிம் கிராமம் உதயமாகிவிடும். இதுதான் யதார்த்தம். நாமோ இருவராக வந்து ஒருவரோடு அல்லது இருவரோடு மட்டுப்படுத்தி நிற்க அவர்கள் சுயமாக விட்டுள்ளார்கள். மற்றவரைக் குறைகூறி யாது பயன். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா... என்ற கணியன் பூங்குன்றானாரவர்களது வரிகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி
  12. இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளோ தமக்குள் குத்திமுறிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களோ அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் அவலநிலை. இதில் எப்படியொரு நிலைபேறான அரசியல் முனையைத் திறப்பதெனச் சிந்திக்காதவரை மாற்றங்கள் வராது. குறைந்த பட்சம் யாழ். இந்துவில் நடந்த கருத்தாடலையாவது செவிமடுப்பார்களா? நன்றி
  13. தமிழ்த் தேசிய அரசிலின் மௌனத்தைக் கலைக்க முயலும் வளரிளம் தலைமுறையே தலைவணங்குகின்றேன். நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.