Jump to content

melbkamal

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    5
  • Joined

  • Last visited

melbkamal's Achievements

Newbie

Newbie (1/14)

  • First Post
  • Conversation Starter
  • Week One Done
  • One Month Later
  • One Year In

Recent Badges

0

Reputation

  1. இவன் என்ன தமிழ் பற்றியெல்லாம் எழுதிப் போட்டுச் சிங்களத்தில தலையங்கம் வைத்திட்டான் என்று யாரோ புலம்பியபடி இதனைப் படிப்பது எனக்குப் புரிகிறது. ம்....சரி சரி கொஞ்சம் பொறுமையாயிருங்கோ....நான் விசயத்திற்கு வாறேன். சமாதான காலம் என்பது என் போன்ற இள வயதில் உள்ள யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்த காலமாகும், எண்பத்தியொன்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட பேரினவாதக் கனவுகளின் விளைவால் புகைவண்டி என்றால் மன்னிக்கவும் ரயில் என்றால் என்னவென்று நேரில் பார்க்கும் வாய்ய்புக் கிடைக்கவில்லை. இது மட்டுமன்றிக் கொம்பியூட்டர் என்றால் பேச்சளவில் மட்டுமே தெரிந்திருந்தும், தொலைக்காட்சியில் பார்த்துமறிந்திருந்த பெரும்பாலானவர்களுக்கு புகைவண்டி, தொலைக்காட்சி பிளாஸ்ரிக் கதிரைகள், கொம்பியூட்டர் எனப் பலப் பல இத்தியாதி அயிட்டங்களை எமக்கு அறிமுகப்படுத்திய வசந்த காலமது. ம்... ஏன் சொல்லப் போனால் கொழும்பையே எமக்கு அறிமுகப்படுத்திய காலமது, ஒரு பழைய கசற் ஒன்று எங்கட வீட்டு மூலைக்குள் இருந்தது, அது லூஸ் மாஸ்ரரின்ர பகிடிக் கசற். அதில வாற கொழும்புப் பகிடி சுவையாக இருக்கும். இப்படித்தான் யாழ்ப்பாணத்தில இருந்த்து ஒருவர் முதல் முதல் கொழும்புக்குத் தனது மாமனாருடன் கொழும்புக்குப் போனார். அவர் போகும் போது அவரின் அம்மம்மா சொல்லி விட்டது... 'எடேய் அப்பு... நீ போற இடம் கொழும்படா மோனை,,, வலு கவனம். சனம் நெரிச்சலுள்ள இடம்... மாவாவை விட்டிட்டு விலகிப் போடாதை.... உன்னை அங்க தேடிப் பிடிக்கிறது கரைச்சல்''என்று சொல்லியிருக்கிறா... கொழும்புக்குப் போனவரும் அங்கால இங்கால திரும்பவில்லையாம்..... தனது மாமனாருக்குப் பின்னாலே சென்றாராம்... கொழும்பெல்லாம் பார்த்து முடிஞ்ச பிறகு நம்மவரும் யாழ்ப்பாணத்திற்கு வந்ததும் நண்பர்கள் கேட்டார்களாம் எப்படி மச்சான் கொழும்பு என்று,.... அவர் யோசிச்சார்...நான் எங்க கொழும்பைப் பார்த்தனான்..மாமாவின்ர முதுகை எல்லோ பார்த்தனான்.... இதைச் சொன்னால் வெட்கக் கேடு என்று விட்டுக் கொழும்பில உள்ள புதுப் புது விடயங்கள் என்று ஏதோ எல்லாம் அவிழ்த்து விட்டாராம் மனுசன். இந்த லூஸ் மாஸ்ரர் கசற்றை நாங்களும் சின்னனில படிக்கும் போது கேட்டுக் கேட்டுக் சிரிப்பதுவும்....பின்னர் அதனை அப்படியே மனப்பாடம் செய்து ரியூட்டறியிலயும், எங்கட யாழ் மத்திய கல்லூரியிலயும் நாங்கள் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது தனி நடிப்பென்று நடித்து எல்லோரையும் ரசிக்க வைச்சதும் என் சின்ன வயது ஞாபகங்கள். நாங்கள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது எங்கட பள்ளிக் கூடத்தில ''D'' வகுப்புத்தான் பெஸ்ற் கிளாஸ் (Best Class) என்று சொல்லுவீனம். ஒரு மாதிரி கஸ்ரப் பட்டுப் படிச்சு ''D' வகுப்பை ஆறாம் ஆண்டில இருந்து (O/L) உயர் தரம் படிக்கும் வரை தக்க வைப்பதென்பதை பெரிய சாதனையாகத்தானே சொல்ல வேணும். எங்கட வகுப்பென்றால் கெட்டிக்கார வகுப்பென்று தான் எல்லொரும் சொல்லுவார்கள். வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லையென்றால் நாங்கள் பக்கத்து வகுப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் நாடகங்கள் எல்லாம் தயார் செய்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழுங்கமைத்து ஒரு நாற்பது நிமிடப் பாட நேரத்திற்குள் எதனையோ சாதித்ததாய் எங்கள் சின்ன வயதில் பெருமைப் பட்டுக் கொள்வோம். ஹர்சன், ஞானவேல், ரஜீவன், பிரசன்னா, அகீனன், திருக்குமார், நான் உட்பட இன்னும் பல பேர் சேர்ந்து ஆசிரியர் வகுப்பிற்கு வராத பாட நேரத்தில் ஏதாவது நாடகங்கள், இல்லை என்றால் பாடுக் கச்சேரி, பட்டி மன்றம் எனப் பல சுவையான நிகழ்ச்சிகள் உடனடியாகத் தயார் செய்து எமது சக மாணவர்களுக்கு வழங்கிச் சந்தோசப் பட்டுக் கொள்வோம். இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் தான் ஒரு நாள் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் போது எமது இரண்டாம் தவணை முடிந்து மூன்றாம் தவணை தொடங்கும் போது எமது தமிழாசிரியை அவர்கள் கேட்டார். எல்லோரும் இந்த விடுமுறைக் காலத்தில என்ன செய்தனீங்கள் என்று?? உடனே ஞானவேல் எழும்பி தான் கொழும்பிற்குப் போனனான் என்று சொல்ல அந் நேரம் நானும் என்ர தனி ரகத்தைக் காட்டப் போய் பக்கத்தில இருந்த ஹர்சனிடம் 'ஏன் மச்சான் உவன் மட்டும் தான் கொழும்புக்குப் போனவன்??? நானும் தான் கொழும்பிற்குப் போனனான் என்று சொல்ல ஹர்சனும் உடனடியாக எங்களாசிரியரிடம் ''ரீச்சர் இவன் கமலும் கொழும்புக்குப் போனவன் என்று கூற ரீச்சரும் உடனே ''எப்படிக் கொழும்பு??? கொழும்பில எங்க எங்க போனீங்கள்??? எங்க இருந்தீங்கள் என்று கேட்க??? நானும் எனக்குள்ளை இருந்த சமூகக்கல்விப் பாட அறிவை வைச்சு ஒரு மாதிரிக் கொழும்பைப் பற்றிச் சொல்லி ஜமாய்த்ததும் என்ர சின்ன வயசுச் சமயோசிதம் என்றே சொல்ல வேணும். இந்த ஏ ஒன்பது நெடுஞ்சாலை திறக்கும் வரைக்கும் எங்கடை வகுப்புப் பொடியளுக்கு கொழும்பு பார்த்த ஆட்கள் நானும் ஞானவேலுமாகத்தான் இருந்திருப்பம்.... இப்போது வரைக்கும் பாதை திறப்பதற்கு முன்னர் கொழும்பு பார்த்தது பற்றி நான் அப்போது சொன்னது பொய் என்று எங்கள் வகுப்புப் பொடியங்கள் யாருக்கும் தெரியாது,,,, எலியட்ட என்டே என்டாகவில்லை.....இன்னும் வளரும்..........
  2. nillamathy, Today, 06:50 AM வணக்கம் melbourne ,கமல் . நல்ல கவி வரிகள். ஏனையா ?மருந்துகளின் பெயர் வருகிறது . பதில் கிடைக்குமா ?நிலாமதி// வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நிலாமதி... நீங்கள் கேட்பது எந்த மருந்துகளின் பெயர் என்று புரியவில்லை..... எனது ஆக்கங்களை நீங்கள் மேலும் படிக்க விரும்பினால் எனது வலைத்தளத்திற்கு வருக....வருக ....என அன்புடன் வரவேற்கிறேன்....... இது எனது வலைத்தள முகவரி : http://melbkamal.blogspot.com/
  3. தமிழீழத் தேசியம் தனது புன்னகையின் இருப்பிடத்தைப் பறி கொடுத்து இன்றோடு ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. அந்தப் புன்னகையின் இருப்பிடத்தின் நினைவாக என்னால் எழுதி மெல்போர்னில் நித்திய புன்னகை அழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று படிக்கப் பட்ட கவிதையினை இப் பதிவில் உங்களுக்காகத் தருகின்றேன். இங்கு சில விடயங்கள் சிலேடையாகவும் மறைமுகமாகவும் இன்றைய கள யதார்த்த நிலமைகளுக்கு அமைவாகச் சொல்லப்பட்டுள்ளன. ஏன் இங்கு வந்துள்ளோம்?? காரிருள் அகற்றக் களமாடும் வீரர்கள் மண்ணில் பிறந்தவனாய் ஊரிழந்து உணர்விழந்து உயிர் காக்க வழி தேடி தேசம் விட்டுக் குளிர் வாட்டும் நாடு வந்து அவர் பெயரால் இங்கு கவி பாடும் தெருவோரப் பாடகன் யான் வந்துள்ளேன்! அபையோர் அனைவருக்கும் வணக்கம்! தேசமே விடுதலை எமை வதைக்கும் தென்னிலங்கையே நீசறு! / தேசமே விடுதலை எமை வதைக்கும் தென்னிலங்கையே நீயறு! மாசறு வேள்வியாம் விடுதலைத் தீயில் கலந்து அன்னை மண்ணுக்காய் உயிர் துறந்த அனைவரையும் நினைத்தபடி, நெஞ்சமதில் நிலை நிறுத்தி இங்கு நுழைகின்றேன்! ஏன் இங்கு வந்துள்ளோம்? எதற்காக இங்கு நாம் கூடியிருக்கின்றோம்? வேர்களாய் இருந்து எமையெல்லாம் தாங்கி நின்றோர் வீழ்ந்து விட்டார் என்றா?? சந்ததி வாழ்வதற்காய்(த்) தம் வாழ்வைச் சரித்திரமாக்கியவர்கள் போய்விட்டார்கள் என்றா? ஏன் இங்கு வந்துள்ளோம்? இல்லை! இல்லை! இல்லை! வீரர்கள் எப்போதும் இறப்பதில்லை! தமிழ்ச்செல்வன்! பெயர் உச்சரிக்கும் போதே மனதில் மட்டற்ற மகிழ்ச்சி பிறக்கும்! காரணம்? புன்னகையின் இருப்பிடம்! நாற்றாய் இருந்த விடுதலை நெருப்பு முகிழ்த்து வளரும் காலமதில் விடுதலையின் பாதையிலே தன்னையும் இணைத்த தமிழ் மன்னன் வழி வந்தோன்! ஆற்றல் மிக்க அண்ணன் சொல்லும் கூற்றைக் கேட்டு(ப்) பகையின் குரல் வளையைக் கடிக்கப் புறப்பட்டவன்! Taanko சேரா எனும் செல்லப் பெயர் கொண்டவனாய் மக்கள் மனங்களைக் கவரும் அரசியல் பணியாளனாய் அனைவரின் நெஞ்சிலும் இடம் பிடித்தவன்! தாக்குதல் நுட்பம் மிக்க தென்மராட்சித் தானைத் தளபதியாய் விளங்கியவன்! புன்னகைக்குப் பல பேர் பலவாறு அர்த்தம் சொல்லுவார்கள்! இவன் புன்னகைக்குள் புதைந்துள்ள அர்த்தங்கள் தான் எத்தனையோ? அப் புன்னகையின் அர்த்தங்களை இன்று தான் தென்னிலங்கை உணர்ந்து தெளிகிறதோ? பட்டறிவால் கைவரப் பெற்ற சமயோசிதம்! எதையும் நின்று நிதானித்து(ப்) புன்னகையோடு பதில் சொல்லும் அரசியல் சாணக்கியம்! மெது மெதுவாய் அனைவரையும் உள்வாங்கிப் பணிசெய்யும் தந்திரம்! தலைவன் என்பவன் ஒருவன் தான் நிரந்தரம்! இவை அனைத்தும் எங்கள் புன்னகை அழகனின் சிரிப்பில், நுட்பத்தில், காய் நகர்த்தல்களில் கண்டு நாம் தெளிந்துள்ளோம்! இவனின் பல வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் கண்டு விட்டோம்! இன்னும் சில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம் - ஆனால் இனித்தான் மிகப் பல பல வார்த்தைகளுக்கு விளக்கங்கள் காணவிருக்கிறோம்! 'எல்லாம் முடிந்து விட்டதென்றெண்ணி ஏன் தலை மீது கை வைப்பு! வன்னி மீது ஏன் இந்த வக்கிரப் பார்வை??' 'இப்போது உலை மூட்டலும் வழி மறிப்பும் மட்டுமே! விரைவில் பெரு நெருப்புப் புயல் வீசப் போகிறது! 'அரசன் அன்றறுப்பான்! தெய்வம் நின்றறுக்கும்! இனிமேல் தான் பேரினத் தென்னிலங்கைக்கும், பேய்களின் அரசிற்கும் பெரும் புயல், பெரும் இடி எப்படி எனப் புரியும்? ''பெரு நெருப்பு ஆங்காங்கே இப்போது சிறு சிறு கீற்றாய் வெடிக்கிறது! இனித்தான் மிளாசி எரியவிருக்கிறது"! ''பெரு நெருப்புப் பீறிட்டு வீசுகையில் ஊழிப் பேய்கள், சாத்தான்கள், மண் பிடி மமதையில் தவிக்கும் பொன்சேகப் புல்லுருவிகள் அனைத்தும் அகப்பட்டுச் செத்துவிடும்! தப்பி ஓட எவருக்கும் அங்கே தனிப் பாஸ்போர்ட் கிடையாது! ஓட வழி இன்றி(ச்) சுற்றி அடி விழும்!' வீரர்கள் சொல் எப்போதும் பொய்ப்பதில்லை! போரின் வலியது எப்படி என்று தென்னிலங்கையும் உணரும் எனும் தமிழ்ச்செல்வனின் சொல் இப்போது பேரூந்துகளிலும், வீதிகளிலும், வானூர்திகளாலும் நிருபணமகிறது! ""இது தான் ஆரம்பம்! ஓ அப்படி என்றால் அமர்க்களம் எப்போது என்று கேட்பது புரிகிறது! எல்லாமே இனித்தான் அதுவும் விரைவில் தான்! கதிர்காமர் என்றொருவர் இருந்தார்! அவர் புலிகளையும் தமிழர்களையும் கழுத்தறுக்க உலகெங்கும் கடிவாளங்கள் பல போட்டார்! ஆனால் புலிகள் பற்றி, தமிழர் சேனை பற்றி உலகெங்கும் பூசப்பட்ட பொய் முலாம்கள், பொய் முகங்கள் இந்தப் புன்னகை மன்னனின் பூவிழியால் துடைத்தழிக்கப் பட்டதனைக் கண்டுள்ளோம்! இன்றும் காணுகிறோம்! நித்தம் உந்தன் புன்னகையால் அந்த நீசர் விழி அழித்தவனே! நீ எங்கு சென்று வாழுகிறாய்? நீ செத்து விட வில்லையடா! செல்வா! உன் செந்தமிழால் எல்லோர் மனங்களிலும் நிறைந்து விட்டுச் சென்றுள்ளாய்! இலட்சிய வீரர்கள் செத்ததாய் எப்போதும் தத்துவம் இருந்ததில்லை! அவர்கள் என்றும் வாழ்வார்கள்! எம் மண்ணில் ஆயிரம் ஆயிரம் வேங்கைகளாய் மீண்டும் எழுவார்கள்! புலம் தனில் இருந்து எங்கள் நிலம் தனை மீட்க நித்தமும் பணி பல செய்வோம்- அடிமை விலங்கினை உடைத்து எம் அன்னை மண் காக்கும் பெரும் தமிழ்க் குலம் தனைத் தளைக்கச் செய்வோம்! எங்கள் புன்னகை அழகனின் இலட்சியக் கனவினை நனவாக்குவோம்! ''கடைசித் தமிழன் உள்ளவரைக்கும் கரிகாலன் படையை வெல்ல முடியாது! உலகில் தமிழன் உள்ளவரைக்கும் அவர் உணர்வையும் உதவும் பண்பையும் எவரும் அழிக்க முடியாது! உலகத் தமிழர் உணர்வுகள் உருக்குலையாது ஒன்றாகக் கட்டியெழுப்பப் பட வேண்டும் என்ற புன்னகை அழகனின் கூற்றினைச் செயலில் காட்டுவோம்! விரைவில் காட்டுவோம்! இலட்சிய வீரர்கள் செத்ததாய் எப்போதும் சரித்திரம் வரலாறு வரைந்ததில்லை! அவர்கள் என்றும் எப்போதும் எம்மோடு வாழ்வார்கள்! நன்றி!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.