முனிவர் ஜீ

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  3,989
 • Joined

 • Last visited

 • Days Won

  6

Everything posted by முனிவர் ஜீ

 1. வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிற‌து அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்கு முன்னர் அதாவது 1998ம் ஆண்டளவில் எங்கள் ஊருக்கு அந்த பாத யாத்திரிகர்கள் வருவது வழமை ஊரில் உள்ள கோவில்களில் அன்றைய இரவை போக்க வருவார்கள் அவர்களை போய் பார்ப்பது வழக்கம் அதில் ஒரு அமெரிக்கரும் உள்ளடக்கம் அவர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சன்நிதியில் இருந்து வந்தார்கள் ஊரில் உள்ள சனங்கள் அவர்களை போய் பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது வழக்கம் அவர்கள் ஊர் வந்து சென்றதில் இருந்து நான் அவர்களுடன் சென்றால் என்ன ஒரு உணர்வு ஏற்பட்டது ஆனால் சிறு வயது என்பதால் அம்மா அப்பா விரும்பமாட்டார்கள் அந்த வேளையில் அம்மம்மாவும் அப்பம்மாவும் கதிர்க்காமம் செல்ல போகிறோம் என்று சொல்ல நானும் வரட்டுமா என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக வீட்டில் அனுமதி பெற்று செல்ல ஆயத்தமானேன் அந்த வருடம் . யாத்திரைக்கு தேவையான பொருட்கள் உடைகள் , சாப்பாடுகள் ,போதிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பாடல் வசதி மிக குறைவு 10 நாட்கள் தேவை கதிர்க்காமத்தை சென்றடைய என்று சொன்னார்கள் யாத்திரை தயாரானது ஊரில் இருந்து நடக்க வில்லை காரணம் அந்த நேர பாதுகாப்பு நிலை காரணமாக யாத்திரை அதிகாலை புறப்பட்டது ஒவ்வொரு சோதனை சாவடியிலும் பொருட்களை ஏற்றி இறக்கி களைந்து காண்பித்து சென்றடைய சங்கமான்கண்டி வடக்கில் முறிகண்டி பிள்ளையார் எவ்வளவு முக்கியமான ஆளோ அதே போல் கிழக்கில் சங்கமன்கண்டி பிள்ளையார் முக்கியமான ஆள் யாத்திரை செல்லும் போது அவரை வழிபட்டு விட்டு நேரம் 1.00 மணியாகிவிட்டது பாணமையை போய் சேர பாணமையில் பாரிய சோதனை சாவடி அதன் பிறகு அந்த இடத்தில் இருக்கும் பிள்ளையாரை தரிசித்த பின்னர் நடை தொடங்கியது வாகனம் உகந்தை வரை செல்ல முடியாது அதற்கு பாதையும் இல்லை காட்டு வழி வேறு நடக்க நடக்க இரு மருங்கிலும் காடுகள் விலங்கள் பறவைகள் , என பார்த்து பார்த்து போய் முதல் இடம் உகந்தைசெல்வதற்கு முன்னர் சன்நியாசிமலை என்ற ஒரு மலை அதன் கீழ் பிள்ளையார் ஒருவர் வீற்றிருக்க அவரை தரிசனம் அவருக்கு கொஞ்சம் அவலை பிரட்டி படைத்து விட்டு செய்து நடை ஆரம்பமானது ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக உகந்தையை சென்றடைந்தோம் சுற்றி வர காடு கிழக்கில் கடல் மேற்கில் அடர்ந்த காட்டில் ஒரு கோவில் மனதிற்கு ஒரு இதமான அமைதி அந்த இடத்தில் தெரிகிறது யாத்திரை தொடரும். போய் வந்த பிறகு தமிழ் சிறி அண்ணன் எழுத சொன்னவர் படங்கள் கிடைக்க வில்லை இப்போது அந்த படங்களை கமறாவிலிருந்து எடுத்துக்கொண்டேன் இது தான் பாணமை பிள்ளையார் கோவில்           click image upload click image upload
 2. சப் ஸ்டோரி ஒன்று செல்ல கதிர்காமத்திலே இனிப்பு பொருட்கள் ( குட்டான் , பனங்கட்டடி , மஸ்கட், அல்வா , பனங்கிழங்கு மற்றும் இன்னும் இருக்கும் சில இனிப்பு பண்டங்கள் ) விலை குறைவு என்று சொல்வார்கள் அங்கே போய் பார்த்த போது வியாபாரத்தை ஈர்ப்பதற்க்காக அழகிய சிங்கள‌ இளம் பெண்கள் அண்ணா வாங்க, ஐயா வாங்கா அக்கா வாங்க அம்மா வாங்க என்று கூவி அழைத்தாலும் கையை வேற பிடிச்சு இழுபாழுகள் தன் விபாரத்துக்கு ஒரு கிலோ சும்மா தாரம் வாங்க வாங்க என்று கூப்பிடுவாள் அடிக்கடி மேக்கப் போட்டு சுண்டி இழுக்கும் அதுக்கு பிறகு சொல்லவில்லை ............... கற்பனை பண்ணி கொள்ளுங்கோ. நம்ம பொடியங்களை கேட்கவா வேணும் எது நல்லா இருக்கோ ( பொருட்களை சொல்கிறேன் ) அங்கே விழுந்து இருக்கிற பொருட்களை அள்ளுவானுகள் அவள் மொத்தமா சேர்த்து ஒரு பில் போடுவா பிறகென்ன கொடுத்து வாரது தான் காசை (மனசையும்) வாங்கினதுக்கு ஒரு கிலோ துதலும் தந்து ஒரு விசிட்டிங் காட்டையும் தருவா அடுத்த வருஷம் வந்தால் எங்க கடைக்கு வாங்க என்று சொல்லுவா அடுத்த வரிஷம் மெனக்கட்டுப் போனல் வேற ஒரு பிள்ளை நிற்கும் பிறகென்ன அடுத்த கடைதான் .
 3. நம்ம இனம் ஆச்சே அண்ண மீண்டும் பனை நட வேண்டும் அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது ஆனால் அபிவிருத்தியில் அது இறந்து விடுகிறது வீதிகள் , வீடுகள் , சாலைகள் அமைவதால்
 4. சாத்துவை புத்தக கண்காட்சியில் கண்டதாக பார்த்தேன் இந்தியாவில் வந்து போராட்டத்தை ஆரம்பித்து விட்டுநைசா ஆள் மாறிட்டியலே சும்மா பகிடிக்கு சாத்து இலங்கையில் கிடைக்குமா ஐயா ??
 5. சில வேளைகளில் விடு விக்கப்படலாம் எல்லாம் அரசியல் game
 6. யோவ் என்ன பகிடியா என்ன ?? ஒரு 400 கிலோவுக்கும் மேலான கரடிகள் உண்டு ஆள் பட்டால் அடிதான் , சிறுத்தை வேறு அதனால் தான் பின்நேரம் நடக்க விடுவதில்லை மக்களை போன வருடம் நண்பன் ஒருவன் அந்த இடத்தில் வேறு மிருகத்துக்கு வைத்த பொறியில் கரடி ஒன்று சிக்கி இறந்ததாக சொன்னான் அவனால் நம்ப முடியலையாம் அந்த பெரிய கரடி இருக்கும் என்று அவன் பல் மிருக வைத்தியருடன் சென்றால் அதை அறிய முடிந்ததாகவும் சொன்னான் அப்ப பாருங்கோவன் நானெல்லாம் மாட்டினால் சொல்ல வா வேண்டும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணை நன்றி நண்பரே கதிர்காமத்தில் நடந்த சம்பவங்கள் வரும் அண்ணை ம் நன்றி கொழும்பான் சப் ஸ்டோரி என்று எதை கேட்கிறீங்கள் கதிர்காமத்தில நடந்த சம்பவங்களையோ??
 7. அக்காவின் வீட்டு ரகசியங்களை வெளியில் சொல்வதை மென்மையாக கண்டிக்கிறேன் இன்னும் கொஞ்சம் சொல்லுங்களன் அண்ணை
 8. ஒரு சாதரண குடிமகனின் கருத்து கூட அப்படியே
 9. என்னத்தை சொல்ல மீரா இவர்கள் பொங்கள் விழாவுக்கு மக்கள் செல்ல வில்லை பஸ்ஸில ஏற்றி வந்ததாக கேள்விப்பட்டேன் மக்களை இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்படுகிறது இலங்கை அரசாங்கத்தின் அரசியலுக்கு இவர்கள் சிங்சக் அவ்வளவுதான்
 10. கந்தனுக்கு ,குமரனுக்கு ,வேலனுக்கு அரோகரா....அரோகரா
 11. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் இவர்களால் என்னதான் நடந்து இருக்கு ஆனால் இவர்கள் நல்லா நடத்துகிறார்கள்
 12. இந்த வருடம் சிங்கள மக்களால் வழங்கப்பட்ட உணவு பொதியில் இருந்த வாசகங்கள் மாணிக்க கங்கை கதிர்காம ஆலயத்தின் முகப்பு தோற்றம் கங்கையின் தோற்றம் பாலத்தில் இருந்து மாணிக்க கங்கை இரவு நேரத்தில் திருவிழா ஆரம்பிக்கும் நேரம் ஏழு மலையில் இருந்து வள்ளிமலை யானைகள் சோடிகப்பட்ட பெரகரா நிகழ்வு
 13. கட்டகாமத்தில் உள்ள விலங்குகள் காட்டுப்பன்றிகள் v இந்த புத்தர் சிலைக்கு முன்னால் பெரிய பந்தல் ஒன்ரு வைத்து நடந்து வரும், கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களு க்கும் கொடுக்கப்படும் சிங்கள் தொழிலதிபர்களால் செல்ல கதிர்காமம்
 14. வள்ளியம்மன் பாலம் g இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் கதிர்காமத்தில் உள்ள ஏழு மலை
 15. வியாலை என்ற இடத்தை அடைந்தோம் என்னுடன் வந்தவர்கள் வருவார்கள் என வழியில் காத்து இருந்தேன் வரவில்லை சுமார் இரண்டரை மணிநேரத்தின் பின்பே வந்தார்கள் வந்தவர்களிடம் நான் நடந்தவற்றை கூற திகைத்து போனார்கள் சரி வா இப்படி எல்லோருக்கும் பார்க்க கிடைப்பதில்லையென்று சொல்லி ஒரு அழகான ஆற்று நீர் ஓடிய தரையில் அமர்ந்து கொண்டோம். அந்த நேரம் தண்ணீர் இல்லை ஆற்றில் ஒரு ஓரம் மட்டுமே நீர் சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் நான் போன உடனேயே பொருட்களை அங்கே இறக்கிவிட்டு ஆற்றில் மிதக்க ஆயத்தமானேன் அவர்களூம் வந்த களைப்பில் நல்ல தேநீர் போட்டு குடிப்போம் பிறகு சமைக்க ஆயத்தம் செய்வோம் என்று நல்ல தேநீர் செய்து தந்தார்கள் அந்த இடத்தில் கொண்டு சென்ற பிஸ்கட் பைகள் , சிற்றுண்டிகளை சுவைத்தும் நல்ல தண்ணீரை கண்ட சந்தோசத்தில் நான் இருந்தாலும் சுட வைத்து தான் குடிங்கள் என்றார்கள் நல்ல தண்ணீராக இருந்தாலும் குடிக்க முடியாது காரணம் ஆற்றில் மிருகங்களீன்,பறவைகளின் எச்சங்கள் , மிருகங்கள் இறந்து கிடக்கலாம் என்ற அச்சத்தில் நீரை சுட வைத்தே பருகினோம் 3 நாட்கள் நல்ல சாப்பாடு நல்ல குளியல் நல்ல தூக்கம் நடந்த களைப்பு எல்லாம் கடந்து போனது இரவில் நல்ல பஜனைகள் பாட்டு கச்சேரிகள் என்று அந்த 3 நாட்கள்சென்றது கொண்டு போன பொருட்களையெல்லாம் அங்கே முற்று முழுதாக குறைத்து விட்டோம் இருப்பது தேநீருக்கான பொருட்கள் மட்டும் மற்றும் அவரவர் சொந்த சிற்றுண்டிகள் . இந்த வியால ( யால ) என்ற காட்டுப்பகுதியில் இருந்து வள்ளியம்மன் பாலம் என்ற இடத்திற்கு செல்ல வேண்டும் அந்த இடம் ராணுவ சோதனை சாவடி ( சண்டை முடிந்த பிறகு சோதனை இல்லை ராணுவத்தால் சோதனை இடப்பட்ட பின்னரே அனுமதிப்பார்கள் அடுத்த இடமான கட்ட காமத்துக்கு . யாத்திரிகர்களை மாலை நேரத்தில் நடக்க அனுமதிப்பதில்லை காரணம் அதிக கரடிகள் இக்காட்டில் இருப்பதாலும் மாலை நேரங்களில் மிருகங்கள் தண்ணீர் அருந்த வருவதாலும்) இந்த வள்ளியம்மன் என்ற பாலத்திற்கு செல்லும் போது நடந்த சம்பவம் வேறு ஒரு வருடத்தில் மாலை நேரத்தில் நாங்கள் நடையை குறைப்பதற்க்காக வள்ளியம்மன் பாலத்துக்கு செல்ல ஆயத்தமானோம் கடும் மழை காட்டுமழை கொஞ்ச அதிகமாக இருக்கும் காட்டில் போகும் போது மரம் ஒன்று முறிந்து விட்டது அதை தடையென்று நினைத்து ஒரு குழு சுமார் 50,60 பேர் கொண்ட குழு காட்டின் உள் பகுதிக்குள் சென்று விட்டார்கள் என்னுடடன் வந்தவர்களை நான் சரியாக அழைத்து சென்றேன் ஏனேன்றால் இரண்டு வருட அனுபவம் அந்த நேரத்தில் அதுவும் அந்த பாதை முடியும் வரைக்கும் ஆற்றை தொடர்ந்து கொண்டே போகவேண்டும் . போனவர்கள் இரண்டு நாளாக வரவில்லை ராணுவத்துகும் அறிவித்தும் அவர்களால் முடியாது போனது அவர்களோ இது பெரிய காடு ஹெலிமூலம்தான் தேட வேண்டும் என்று சொன்னார்கள் வந்தவர்களில் எங்களுடன் கொஞ்சபேரும் சென்றவர்களுடன் கொஞ்ச பேருமாக பிரிந்து விட்டார்கள் இவர்கள் அவர்களை நினைத்து அழுவதுமாக அந்த பயணம் மிகபயங்கரமாக இருந்தது பொருட்களை மாறி மாறி பொதிகளில் கட்டுவதால் சீனி வைத்து இருப்பவர் எங்களிடம் இருக்க தேயிலை வைத்திருப்பவர்கள் அவர்களிடம் இருக்க இப்படி எல்லா பொருட்களும் மாறி மாறி இருந்தது இதனால் அந்த நாள் மிகவும் கஸ்ரமான சாப்பாடு, தண்ணீர் இல்லாத நாளாகவும் அமைந்தது போனவர்களுள் ஒரு நில அளவையாளரும் அடக்கம் இப்பவும் வருவார் நடந்து அவர் குடும்பத்துடன் மூன்றாவது நாளாக அவர்கள் எங்களை வந்தடைந்தார்கள் எல்லோர் கேள்வியும் எப்படியிருக்கும் இருக்கும் எப்படி வழி கண்டு பிடித்தீர்கள் அவர்களோ மாறி மாறி ஆளை ஆள் பிடித்து கட்டி பிடித்து அழுது கொண்டிருந்தார்கள் . அவர்கள் சென்ற காட்டுப்பகுதியில் மழை பெய்யவில்லையென்றும் குடிநீருக்கு தண்ணீர் இல்லாத போது மலையில் ஏறி நின்றதாகவும் கடவுளை பிரார்த்தனை செய்த போது மழை பெய்ததாகவும் அந்த நீரை பொலித்தீன் பைகளை வைத்து பிடித்து தான் இரு நாட்கள் கடத்தியதாகவும் இறுதி நாளன்று சேவலும் மயிலும் கூவியும் ஆடியதாகவும் அந்த வழியில வந்து சேர்ந்த தாகவும் சொன்னார்கள் அப்போதே ஆறுதல் வந்து சேர்ந்தவர்களுக்கு நம்பினோரை கைவிடுவதில்லை இந்த கதிர் வேலன் என்ற சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். இந்த வருடம் வந்த வெள்ளைக்காரர்கள் வியால என் கிற ஆற்றுப்பகுதி இதன் கரையினில் தங்குவோம் அது மணல் கடல் மணல் போன்றது மணல் தரையில் மக்கள் v வள்ளியம்மன் பாலத்தையடைந்து சோதனைகள் முடிவடைந்ததும் கட்டகாமம் என்ற இடத்துக்கு செல்ல அனுமதிப்பார்கள் கட்டகாமம் என்ற இடம் அதுவும் ஒரு சோதனை சாவடி போலவே காட்சியளிக்கும் தற்போது ரானுவம் இல்லை வன விலங்கு பாதுகாப்பு பிரிவினர் மட்டுமே நிற்கிறார்கள். போகும் இடைவெளி தூரத்தில் கதிரமலை கண்ட இடம் என்று சொல்வார்கள் அந்த இடத்தில் பூசைகள் நடக்கும் அவல் பிரட்டுவார்கள் எல்லோரும் .காரணம் அந்த இடத்திலிருந்து பார்த்தால் கதிர்காமத்தில் இருக்கும் ஏழு மலை தெரியும் அந்த இடத்தை தான் கதிரமலை கண்ட இடம் என்று சொல்வார்கள். பூசை முடிந்ததும் கட்டகாமம் சென்றோம் அங்கே சென்றவுடன் வைத்திய சோதனைக்காக வைத்திய குழு அனைவரது இரத்தையும் பரிசோதனை செய்து கொண்டிருந்தது காரணம் மலேரியா மற்றும் இதர நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பார்கள் சில நேரம் காட்டுப்பாதையில் நோய் தொற்று அடைந்திருக்கலாம் என்பதற்க்காக அங்கே பரிசோதிப்பது வழக்கம். நமது சுய விபரத்தை எழுதியும் வாங்கி விடுவார்கள் கட்டகாமத்தை அடைந்து அங்கே ஒரு தேநீர் வைத்து குடித்து விட்டு நடக்க ஆயத்தமானோம் நடந்து நடந்து கதிர்காம பின்புரமா இருக்கும் வழியே சென்று (தற்போது போகும் வழியில் சிங்கள தொழிலதிபரால் உணவு வழங்கப்படுகிறது பல வருடங்களாக ) கதிர்காமத்தை அடைந்தோம் அடைந்த கையோடு அங்கு செல்ல வில்லை .செல்ல கதிர்க்காமத்துக்குத்தான் முதலில் செல்ல வேண்டும் என்று சொல்வார்கள் அங்கே சென்று மாணிக்க கங்கையில் மூழ்கி குளித்து விட்டு பிள்ளையாரை வணங்கிய பின்னரே கதிர்காமத்தை வந்து அடைந்தோம் வந்த நாங்கள் பொருட்களை இறக்கி மூடிவிட்டு கோவிலகளை சுத்த ஆயத்தமானோம் கோவில்களை சுத்தி சுத்தி எல்லாம் முடிந்த அன்றிரவு பெரகரா உற்சவ நிகழ்வு நாட்களுக்கேற்றால் போல் யானைகளின் தொகையுடனான பெரகரா நிகழ்ச்சி இரவு 10.30 வரை நடந்தது பல லட்சம் மக்கள் காண்பார்கள் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் கூட இந்த திருவிழா நேரத்தில் படையெடுத்து விடுவார்கள் அந்த நிகழ்வை கண்டு கழிப்பதற்க்காக. நடந்து செல்பவர்களுக்கு கதிர்காமத்தில் உள்ள வள்ளியம்மன் மடத்தில் ஒரு அட்டை தருவார்கள் எப்போது போனாலும் சாப்பாடு தருவார்கள் மற்றவர்கள் லைனிதான் நிற்க வேண்டும் இது நடந்து போகும் யாத்திரிகளுக்கு மட்டும் கிடைக்கும் ஒரு வாய்ப்பு ஆனால் தற்போது இந்தமுறையில்லை. இதை நடத்துபவர்கள் தமிழர்கள் திருவிழா அதாவது கொடியேறிய நாளிலிருந்து முடியும் நாள் வரைக்கும் அன்னதானம் கொடுக்கப்படும் . இந்த மடத்தில் இந்த அன்னதானம் கொடுக்கப்படுவதால் அங்கு நாங்கள் சமைக்க வில்லை நேரத்துகு போய் சாப்பிட்டு வந்து கடைகளை சுற்றி இனிப்பு பண்டங்களை வாங்கி வைத்து விட்டு மலையேற விடியற்க்காலை வரை காத்திருந்தோம். அடுத்த நாள் விடியற்க்காலை நேரத்துடன் எழும்பி மலையேறுவதற்க்காக சென்றோம் இரண்டு மணித்தியாலங்கள் எடுத்தது மலையேற போகும் வழியில் குரங்குகளின் சேட்டைகள் இருந்தாலும் தற்போது கொண்டு போகும் பொருட்களை பறிக்கிறது இந்த குரங்குகள் பழத்தட்டுகள் , உணவு பொருட்களை. கொன்டு செல்ல முடியாது துரத்தி வரும் கூட்டமாக . தற்போது மலையேற வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது கால் இயலாதவர்கள் மற்றும் ,உடல் உபாதைக்குள்ளானவர்கள் என அவர்களூக்கு அதாவது அந்த வாகன சாரதிகளுக்கு சிறு தொகை பணம் கொடுக்க வேண்டும். மலையில் ஆரம்பத்தில் சுளகு போல ஒரு வேல் ஊண்டப்பட்டிருந்தது தற்போது அந்த வேல் இருந்த இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது வேல் மலையில் வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக நான் மலையேறுவதில்லை பல வருடங்களாக . பின்பு மீண்டும் வந்து அன்றிரரவு பெரகரா பார்த்து விட்டு பஸ் ஏறுவோம் தற்போது நாங்கள் கதிர்காமத்தை சென்றடைந்ததும் செல்லக்கதிர்க்காமம் போய் வருவது வந்து கதிர்காமம் கோவில் சுற்றுவது அப்படியே பஸ் ஏறுவது ஒரு இரவு கூட நிற்பதில்லை கதிர்காமத்தில் .மலையேறுவதும் இல்லை வீடு திரும்புவோம் இப்படி எங்களது பாத யாத்திரை இனிதே முடிகிறது வருடா வருடம்
 16. பழைய பதிவு ஒன்று
 17. ஒரு சின்ன கோப்பையில் வச்சு அனுப்புங்கோ அந்த நாட் களில் கறி பரிமாறல்கள் இன்று ??
 18. இதென்ன புதுனமா இருக்கு வேண்டி வந்த சேலையை தோளுக்கு மேல போட்டு பார்க்காட்டி இந்த பொம்புளையளுக்கு தூக்கமே வராதே இதுல வேற 2 வருடம் பார்க்கலையாம் ஆனால் பக்காவா குஞ்சத்துக்கு ஏமாந்துட்டயலே சுமே ரொம்பதான் அண்ணாச்சி நொந்து போயிருக்கு போல் பட்டு புடைவையால
 19. நீங்கள் எப்படி விளங்கி கொண்டீர் என்று எனக்கு தெரியாது அவர் பற்றி எரிய வேண்டும் என்பது அந்த பிள்ளைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் என்னவோ அப்படி இருக்கலாம் அல்லவா .
 20. ஹாஹா அண்ணே முருக பக்தன் தான் ஆனால் ராமனாக்கும் அந்தாள் மாதிரி இல்லை (முருகன்) மன்னிக்கவும் கொஞ்சம் தாமதமாகும் கொஞ்சம் வேலை இருக்கிறது
 21. ஆனால் எல்லோரும் இல்லை புதிய சட்டங்கள் அரசுனால் வந்துள்ளது நிழலி ஒரு வகுப்பறையில் 30 பிள்ளைகள் மாத்திரமே இருக்க முடியும் அதிக பிள்ளிகளை சேர்ப்பதால் 40 நிமிடத்திற்குள் ஒரு ஆசிரியரால் எத்தனை பிள்ளைகளை பார்க்க முடியும் அவர்கள் சொப்பிகளை சரி பார்க்கமுடியும், இது ஒவ்வொரு நாளும் நான் காணும் அனுபவம் . அதிகார துஸ்பிரயோகம் யார்தான் செய்ய வில்லை இலங்கையில் ?? அதிபர் முதல் அல்லக்கை வரைக்கும்
 22. செய்தி கிளிநொச்சி என்பதால் என்னால் உறுதி படுத்த முடியாமல் உள்ளது அக்கா அதிக மாணவ‌ மாணவிகள் கிராமத்தில் இருந்து நகர பாடசாலைகளுக்கு நகர்வதால் கிராம பாடசாலைகள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் உள்ளது அதனால் அரசாங்கமே புதிய கட்டுப்பாடு வித்தித்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும் பாடசாலையில் அண்மித்து வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கிராமத்தில் இருக்கும் பல பாடசாலைகள் இயங்காமல் இருக்கிறது இதன் காரணமாக இங்கே பாடசாலைகள் , மாகாண சபை பாடசாலை , மத்திய அரசு பாடசாலை என பிரிக்கப்பட்டுள்ளது அதில் தற்போது மாகாண சபைக்குள் இருக்கும் சிறு பாடசாலைகல் இயங்கவில்லை காரணம் பிள்ளைகள் வேற , பெரிய பாடசாலை நோக்கி நகர்வதால் இது பலருக்கு விளங்குவதில்லை இதனால் என்னவோ அதிபர் அவர்கள் சேர்க்க இயலாது என்று சொல்லி இருக்கலாம். எனக்கு தெரிந்த ஒரு பாடசாலையில் தரம் 1ற்கு 120 மாணவர்களை சேர்ப்பதற்க்காக அனுப்பிய அப்பிளிகேசன் என்று சொல்கின்ற அனுமதி கோரல் 800 ஐ தாண்டியது என்றால் அது ஒரு தேசிய பாடசாலை மற்ற பாடசாலைகளின் நிலை?? இப்படியிருக்கு நிலமை இங்கு அதிபர் சேர்க்கவில்லை என்றால் அவரிடம் காரணம் கேட்டு பெற்று இருக்க வேண்டும் தரம் 5 மாணவர்கள் அடுத்த பாடசாலைக்கு அதாவது தேசிய பாடசாலைக்கு போக வேண்டும் என்றால் கொலசீப் பாஸ் பண்ணியிருந்தால் இலகுவாக சேர்க்கலாம் அதற்கு சேக்குலர் உண்டு. இதை அதிபர் தட்டிக்களிக்க முடியாது ஊரில் உள்ள பொடியங்களுக்கு தொழிலைக்கொடுங்கள் என்றால் பலருக்கு கமறாவை கொடுத்து செய்தியாளராக்கிவிடுறார்கள் அவர்கள் போடும் செய்திக்கு ஒரு அளவு கணக்கே கிடையாது. நீங்கள் ஏழுதியதால் நான் இதை எழுத வேண்டிய நிலை அண்மையில் கிழக்கு வந்த ஜீவன் சிவா மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கிழக்கில் பின் தங்கிய படுவாங்கரை சென்றனர் அங்கே 7 பாட‌சாலைகளை தெரிவு செய்து இருக்கிறார்கள் அதற்கு தேவையான நீர் வசதி தற்போது சேர்க்கபட்ட புதிய பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவருக்கான மாத‌ சம்பளம் மற்றும் அவர்களூக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய இவர்களுக்கு சேவை செய்ய ஒரு விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம் , ஒரு வைத்தியர் ஆகியோரையும் இணைத்துள்ளார் மற்றது கிராம புறங்களில் பெயர் சொல்லும் ஆசிரியர்கள் யாரும் போய் படிப்பிப்ப தில்லை அண்ண அதனால் கஸ்ரப்படும் மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முன் வந்துள்ளார் இதை நான் சந்திப்பு பகுதியில் எழுத வில்லை. வடக்கிலும் 5 பாட‌சாலைகள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கிறோம் எல்லோரும் எமது மக்களே என்ற நினைப்பில் தான் கருத்து மட்டுமே வேறு
 23. ஹிஹிஹிஹிஹிஹி
 24. மீதி வரும் வெள்ளிக்கிழ்மையுடன் முடிவடையும்