Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. பைலை தூக்கி வெளியில் வந்த நாங்கள் உடன் நீதிபதியை சந்திச்சு இந்த சம்பவத்தை கண்டுபிடிக்க உதவும் படி கேட்கிறோம் அவரும் அனுமதி அளித்தார் சில நபர்களிடம் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் என்பவற்றிடம் விசாரணை செய்ய அனுமதி வாங்கிய பின்னர் கொலை நடந்த இடத்தில் ஏதும் தடயங்கள் உள்ளதா என பார்க்க செல்கிறோம். எந்த தடயங்களும் இல்லை ஆனால் அந்த மலை உயரத்திற்கு பெண்ணால் ஏறிச்செல்ல முடியாது என ஊகித்துக்கொண்டோம். சமந்த அவள் படித்த பல்கலைக்கழகத்துக்கு சென்று விசாரிக்க அங்கே எந்த பிரச்சினையும் அவளுக்கு இல்லை ஆரம்பத்தில் சேரும் போது பகிடிவதை மட்டும் தான் இருந்தது தற்போது எந்த பிரச்சினையும் அவளுக்கு இல்லை என அவள் நண்பி சொல்ல அதையும் வாக்குமூலமாக பெற்றோம். அடுத்த நாள் அவளுடைய அம்மா அப்பா ஆகியோரிடம் விசாரிக்க செல்கிறோம் அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எங்களிடம் என்ன பிரச்சினையாக இருந்தாலும் சொல்லுவாள் என இருவரும் சொல்ல அவளுடைய போண் எங்கே என கேட்க இருவரும் முளித்துக்கொண்டார்கள் .அதை நாங்கள் இன்னமும் காணவில்லை அவள் போண்நம்பரைக்கொடுங்கள் என வாங்கி அழைப்பை ஏற்படுத்த அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. நாங்கள் அவள் அறையை பார்க்க முடியுமா என கேட்க ஓம் தாரளாமாக பாருங்கள் என சொல்ல அறையில் நுழைந்து தேட எதுவும் கிடைக்கவில்லை அவளது கைப்பை மாத்திரம் கொழுவி இருந்தது . கைப்பையை எடுத்து அவளது போண் சில நேரங்களில் சார்ஜ் இல்லாமல் போயிருக்கும் என தேடினால் அதில் போண் இருக்க வில்லை மாறாக ஒரு தண்டப்பணம் அறவிடும் துண்டு ஒன்று இருந்தது அதில் ஒரு மோட்டார் சைக்கிள் இலக்கமும் தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓடியதற்கு எழுதப்பட்ட தண்டப்பணமும் அதை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தரின் இலக்கத்தகட்டின் இலக்கமும் இருந்தது. அவளுக்கு லைசன்ஸ் இருக்கா என கேட்க ஓம் தம்பி இப்பதான் புதுசா எடுத்தவள் என அவள் அம்மா சொல்கிறாள். அப்போது மேசையில் இருந்த‌ அவளது மடிக்கணணியில் கை தட்டுப்பட அவள் கணணி திரையில் முகநூலில் தகவல் ஒன்று வந்தது போல் இருக்க கணணி இயங்க மின்சாரமின்றி அணைகிறது. மீண்டும் அந்த கணணிக்கு மின்சாரத்தை ஏற்றி அவளது முகநூல் கணக்கை திறந்தால் மெசஞ்சரில் உடனே வா என தகவல் வந்திருந்தது ஆனால் அந்த கணக்கின் பெயர் மாற்றியும் கணக்கும் மூடப்பட்டிருந்தது அவள் இறந்த தினத்திலிருந்து....... ஏன்? எதற்கு? யார் அது? என்ற கேள்வி எழ பொலிஸ் நிலையம் விரைகிறோம். அப்போது அங்கு கடமைக்கு செல்ல நின்ற போக்கு வரத்து அதிகாரி முனசிங்க ஐயா கேஸ் எப்படி போகிறது ? ம் போகிறது ஐயா கண்டு பிடிச்சிட்டிங்களா? இல்ல ஐயா ஒரே குழப்பமா இருக்கு பேசாம தற்கொலை என மூடிட்டு வேலையை பாருங்க என சொல்கிவிட்டு கடக்கிறார் அவர் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற நாங்கள் அவளது சாரதி அனுமதிப்பத்திரம் அங்குள்ளதா என பார்க்க அவளது சாரதிப்பத்திரம் அங்கிருக்கவில்லை .. மீண்டும் அந்த இலக்க தகட்டுடைய மோட்டார் சைக்கிள் யாருடையது என போக்குவரத்து துறையின் கணனில் பார்க்க அந்த வண்டியோ அன்று பல்கலைக்கழகத்தில் அவளைப்பற்றி விசாரணை செய்யும் போது அவளைப்பற்றி விவரித்த அவளது நண்பியின் மோட்டார் சைக்கிள் அது அவளை மீண்டும் விசாரிக்க செல்கிறோம். தொடரும்
  2. தமிழ்நாடு எவ்வளவு முக்கியம் என்பது இந்தியாவுக்கு தெரியும் முக்கிய குறிப்பு தமிழன் எவ்வளவு நல்லவர்கள் என்று தெரியுமா ஒன்றை உடன நம்பி ஏமாந்து விட்டு பின்பு கத்துவார்கள்
  3. நான் மேலே கறுப்பு எழுத்துக்களால் காட்டியுள்ளேன் ஆதரிக்கலாம் ஆனால் வாக்கு அங்குள்ள மக்கள்தானளிக்க வேண்டும் அவர்களை காசுக்கு வாங்கும் அரசுகள் . நம்ம நாடு கெட்டு பல வருடம் ஆகிவிட்டது தம்பியா இனி நிமிர்த்த முடியாது அதை நான் இங்கிருந்து சொல்கிறேன் அவ்வளவுதான்
  4. புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் அதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் ? இங்கிருப்பவர்கள் சொல்லி எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை உதவி திட்டங்கள் , போராளிகளுக்கு உதவி செய்தல் , இங்கே அவர்கள் திட்டங்கள் வந்தாலே அது புலிப்பார்வையில் இருக்கும் . தமிழக தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ஆனால் அவர்களை சிந்திக்க ஆதிக்க சக்தி விடாது தங்களது கைக்குள்ளே வைத்துக்கொள்ளும் இந்தியா தமிழ்நாட்டை வைத்துக்கொள்வதைப்போல மத்திய அரசு சீமானுக்கு வைக்கும் ஒரு செக் விட்டு பிடிக்கிற அதாவது நெடிய கயித்தில விடுவதுதான்
  5. ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது
  6. இருக்காதா பின்ன கொடுக்கிறவன் கூரையை பிச்சிட்டு கொடுப்பானாம்
  7. இப்படி நாள் தோறும் அலைக்கழித்த வேலைகளை கொடுத்து வந்தார் உயரதிகாரி பின்னர் நீதிமன்றம் செல்ல வேண்டிய முக்கியமான கோப்புக்களை (பைல்களை) தாமதமாக தருவார் அங்கே கொண்டு சென்றால் ஏன் தாமதமாக கொண்டு வந்த நீங்கள் என நீதிபதி ஏசுவார், யாராவது பிரபலம் வந்தால் அவருக்கு அங்கு பாதுகாப்புக்காக கடமைக்கு செல்ல வேண்டும் அவர் போகும் வரைக்கும் அது பல மணித்தியாலங்கள் எடுக்கும் சில நேரம் சலம் கழிக்க கூட இடம் இருக்காது சாப்பாடும் நேரத்துக்கு வராது அந்த நேரம் வீட்டு நியாபகம் வரும் போக வேண்டாம் என சொன்னார்களே என‌. ஒரு நாள் நீதிபதி வீட்டுக்கு காவலுக்கு செல்ல சொன்னார் இருவருமே சென்றோம் அவருக்கு காவல் புரிந்தவர்கள் இருவருக்கும் காய்ச்சல் வர‌ ஏன் மச்சான் நம்மள இவ்வளவு வேலை வாங்குறான் இந்த ஆள் என ஆளாளுக்கு பேசிக்கொள்ள நீதிபதி அழைத்தார் சாப்பிட்ட நீங்களா? ஓம் சேர் சாப்பிட்டோம் நீங்க புதுசா? ஓம் சேர் புது ஆக்கள் ரெண்டு பேரும் என சொல்ல அவரும் நண்பர் போலவே பழகி கொண்டார் தானும் கைதிபோலதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நிகழ்வுகளுக்கும் நிம்மதியாக கலந்து கொள்ள முடியாத நிலையையும் சொன்னார் உங்க அதிகாரியிடம் கவனமாக இருங்கள் அவர் பெரிய இடத்து ஆள் என சொன்னார் ஓம் ஐயா எங்களை பிழிஞ்சு எடுக்கிறார் என நாங்களும் சொன்னோம். ஏதும் உதவி தேவைப்பட்டால் என்னை சந்தியுங்கள் எனவும் சொன்னார் சரி நேரமாகிறது ஆள் ஆள் மாறி தூங்கி கொள்ளுங்கள் என சொல்லி அவர் தூங்க போனார் அன்றைய நாள் பணி முடிந்த நிலையில் வேலை ஓவ் செய்ய போனால் யாரோ ஒரு பெண் தற்கொலை செய்திருக்காம் மலையில் இருந்து குதிச்சு. உடனே இருவரும் அங்கு போங்கள் என சொன்னார்கள் இல்லை எங்களுக்கு வேலை முடிகிறது என சொல்ல அவர்களோ இது ஸ்பெஷல் டியூட்டி போங்க என சொல்ல பெண் விழுந்த இடத்தை தேடிப்போகிறோம் இருவரும். விழுந்த பெண்ணை பார்க்க முடியாத அளவுக்கு அப்பெண்ணின் உடல் மலைக்குன்றில் விழுந்து சிதறிக்கிடந்தது அந்த உடலைப் பாரத்த போது ஒரு பெண் மீது இருந்த மோகம் எனக்கு மொத்தமாக குறைந்து விட்டது. அழுகி ஊதி உருப்பெருத்து இருந்தது மணமோ குடலை புடுங்கி எடுக்கும் அளவுக்கு வீச எனக்கு குமட்டல் எடுக்க சமந்த சத்தி எடுக்க ஆரம்பித்தான் இருவருக்கும் அது புதுசு இப்படி இறந்த உடலை நேரில் பார்ப்பது அவன் பின் நானும் சத்தி எடுக்க ஆரம்பித்தேன். இது தற்கொலையா? கொலையா? என சந்தேகம் வர இருவரும் பேசிக்கொள்கிறோம். ஐந்து மணிநேரமாக யாரும் வரவில்லை பொதுமக்கள் அதிகமாக கூடுகிறார்கள் ஆனால் பிள்ளையை அடையாளம் காணமுடியவில்லை மாலை 4 மணியளவில் நீதிபதி நீதிமன்ற கடமையைமுடித்து வரவே அவர் கூட‌ தடயவியல் நிபுணர்கள் வந்து பிணத்தை பார்த்த பின்னர் பிணம் அகற்றப்படுகிறது. அவர்கள் தற்கொலையாகவே இருக்கும் என பேசிக்கொள்கிறார்கள் காரணம் இதற்கு முன்னரும் 3 மாணவிகள் தற்கொலை பண்ணிய இடமாம் அந்த இடம். மருத்துவ அறிக்கையை சமர்பியுங்கள் அதன் பின்பே உன்மை நிலை தெரியும் நீதிபதியும் உத்தரவிட உடலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயல்கையில் அவளது பெற்றோர் கதறி அழுதுகொண்டு வருகிறார்கள். ஒரே ஒரு பிள்ளை இசுரிகா அவள் பெயர் பல்கலைக்கழக மாணவியென்றும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள் எனவும் அவளுக்கு அந்த துணிவும் இல்லை எனவும் அவளுக்கு ஒரு பிரச்சினையுமே இல்லையே எனவும் ஆண்டவா என் மக‌ளுக்கு என்ன நடந்தது என அழுது கதறுகிறார்கள் அவர்களை பொதுமக்கள் சமாதானமானப்படுத்தினாலும் அவர்கள் தங்கள் பிள்ளை இறந்ததை தாங்கிகொள்ள முடியாமல் விம்மி விம்மி அழுதார்கள். மருத்துவ அறிக்கையில் தடம் தெரியாத அளவில் உடல் சிதறி இருந்ததால் கொலையா தற்கொலையா என கண்டுபிடிப்பதில் சிரமமாக இருப்பதாக வைத்தியர்கள் சொல்ல தற்கொலையெனவே என தீர்ப்பை வழங்க இருந்தனர். இரண்டு நாட்கள் கழிந்த பின்னர் நானும் சமந்தயும் அந்த பிள்ளையின் வீட்டுக்கு சென்று அது கொலை போலவே தெரிகிறது எங்களுடைய பெரிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று இந்த தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக சொல்லி முறையிடுங்கள். மாணவர்களையும் சேர்த்துக்கொண்டு அப்போது தான் விசாரிக்க உத்தரவிடுவார்கள் ஆனால் நாங்கள் இருவரும் வந்து சொன்னதாக சொல்லி விடாதீர்கள் என சொல்லி விட்டு வந்தோம். அவர்களும் அவ்வாறு செய்யவே விசாரணையை ஆரம்பிக்க எங்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிக்கை வரவே எங்கள் அதிகாரியோ எங்கள் இருவரையும் கூப்பிட்டு நீங்கதான் பெரிய மெடல் எடுத்த நீங்களாமே? இந்த கேசை கண்டுபிடிங்க என பைலை தூக்கி மேசையில் போட்டார். மற்றவர்களோ தற்கொலை கேசை பிடிக்கப்போற ஆட்கள் என கொடுப்புக்குள் சொல்லி சிரித்தார்கள். அப்ப யாரோ எங்களைப் பற்றி புகழந்து பேசியதே இவருக்கு எங்களை பிடிக்காமல் போனது தெரிய வந்தது. இவருக்கு இந்த கொலைசெய்தவரை பிடித்துக்காட்ட வேண்டும் என உறுதிகொள்கிறோம் இருவரும் விசாரணை தொடர்கிறது. போர்த்தொழில் தொடரும் ....... எங்களது கிராமத்தில் மட்டும்
  8. இப்ப வரைக்கும் எண்ணினால் 700 ற்கு அதிகமாகவே இருக்கும் ஏராளன் தேசிய புலனாய்வு விமானப்படை , ஏன் ராணுவம் என்பவற்றில் சேர்ந்தவர்களை சேர்த்தால் இன்னும் அதிகமாக இருக்கும் காரணம் தொழில் பிரச்சினைதான்
  9. 2010 வெளிநாட்டிலிருந்து வந்து சேர்ந்தது ஆனால் சேர்க்க வில்லை உயரம் போதவில்லை என்றார்கள் அதன் பின்னர் ஈடுபாடில்லை ஆனால் சித்தியின் மகன்கள் 5 பேர் சேர்ந்தார்கள் ஒருவர் விலகி உங்க நாட்டில் இருக்கிறார் மற்றவர்கள் விலக இருக்கிறார்கள் என்ன வேலை எப்படி செய்தாலும் சிபாரிசும் காக்கா பிடித்தல் இல்லாவிட்டால் நாம் அங்கே பொலிஸ் நாய்தான் அண்ண இந்த கதை என் கற்பனைக்குள் உருண்டது அதனை எழுத வெளிக்கிட்டதே போர்த்தொழில் என தலைப்பிட்டு ஓம் எங்கள் ஊரில் சுமார் 700 பேர் வரை இருக்கும் வேலையில்லா பஞ்சத்தால் போய் இணைந்தார்கள் நன்றி நன்றி நுணாவிலன் கற்பனைக்குள் வைத்து நகர்த்துகிறேன் நன்றி ஜஸ்ரின் அண்ணை
  10. எனது பாடசாலையில் 10 மருத்துவர் 10 பொறியிலாளர் அந்த மாணவிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
  11. இலங்கையில் ஒரு தாதியர் குழு ஆர்ட்ஸ் 3 பாடம் இருப்பவர்களை சேர்த்துக்கொண்டது அரசு அவர்கள் விஞ்ஞான அறிவு மருத்துவ அறிவு எந்தளவு இருக்குமென தெரியவில்லை ? எனது ஊரில் சாதாரணமாக தற்போது வரைக்கும் நாட்டை விட்டு வெளியேறிய தாதியர் எண்ணிக்கை 20 பேர் வரை இந்த இடங்களை அரசு எப்படி நிரப்பும் ?? இப்படி இலங்கை முழுவதுமாக வெளியேறிய வைத்தியர் தாதியர்களைன் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டுகிறது அது மட்டுமல்லாமல் அவர்கள் சம்பளத்துக்கு விதித்த வரி இதனால் பலர் நாட்டை விட்டு செல்வதால் இலங்கையில் பூரண மருத்துவம் கிடைக்கவில்லை போன கிழமை மகளுக்கு காய்ச்சல் அடிக்காடி வர போய் இரத்தத்தை கொடுத்து விட்டு மகளை சோதனை செய்தார்கள் சரி மகளை விட்டு விட்டு வருகிறேன் வயசு மூண்டரை நிற்க மாட்டார் என நான் சொல்ல கொஞ்ச நேரம் தான் போதும் நில்லுங்கள் என சொல்லி 4 மணி நேரம் காக்க வைத்தார்கள் மகளோ காய்ச்சல் வேற சின்ன பிள்ளையை வைத்திருப்பதை நினைத்து ப்பாருங்கள் இதுதான் நிலை வெறுத்துப்போனது இப்ப கன சனம் வருத்தம் வந்தாலே போகப்பயப்படுது ஆஸ்பத்திரிக்கு
  12. என்ன சனல் என்ன வெளியீட்டாலும் இலங்கையை ஒன்றும் செய்ய ஒரு நாடும் முன்வராது எத்தனை மனித புதைகுழிகள் எத்தனையோ பேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள் இறுதிப்போரில் பல ஆயிரணக்கானவர்கள் இறந்தார்கள் என்ன நடந்தது ???
  13. பாதிக்கப்படுவதென்னவோ ஏழைதான் கொஞ்ச காலத்துக்கு முன்னர் கடை வைத்திருந்த எனது அம்மாவிடம் பொருட் களை வாங்கி விட்டு போலி காசை கொடுத்து விட்டு ஒருவன் போய் விட்டான் காசை வாங்கிய அவர் சந்தேகமாக இருக்கு தம்பி இந்த காசை பாரு என சொன்ன போது நான் பார்க்க அது கள்ள காசாகவே இருந்தது அதை நான் வங்கிக்கு கொண்டு சென்றால் என்னை விசாரிப்பார்கள் அதனால் அதை நான் கிழித்து எறிந்தன் அது 500 தாள் காசு சரிஞ்சு சிரிட்டு போயிடுவம் தல தெரிய சிரிச்சால் வெடி விழும்
  14. நான் ஆடவில்லை அண்ண ஆனால் ஆடாமல் பாடாமல் எந்த நிகழ்வும் இங்கு இல்லை அடுத்த கதையும் இவங்களைப்பற்றித்தான் எழுத இருக்கிறன் அதான் சொன்னன்னே அண்ண இதய வருத்தம் உள்ளவர்கள் பலர் வெளியில் கதிரையை போட்டுக்கொண்டு இருந்தனர் அவ்வலவு சவுண்ட்
  15. அனுமதி அரசு கொடுக்காது ஆனால் அவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாது அதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையா இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்து??
  16. எனது இடத்துக்கு சிலர் வந்திருந்தார்கள் அவர்களை ஏற்றி அடுத்த குழு நிற்கும் இடத்துக்கும் பஸ் சென்று களுத்துறை பயிற்ச்சி பாசறைக்கு செல்கிறது பேருந்து சுமார் 10 மணி நேர பயணத்தின் பின்னர் களுத்துறை சென்றடைகிறோம் மொத்த குழுவையும் அழைத்து அங்கு அறிவுறுத்தலை சொல்கிறார் அந்த பாசறை அதிகாரி பயிற்ச்சிக்காக 25 பேர் ஓர் குழுவாக பிரிக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பயிற்ச்சி ஆரம்பமாகும் விசில் சத்தத்திற்கு தயாராக மைதானத்தில் நிற்க‌ வேண்டும் யாராவது கொஞ்சம் தாமதமாக வந்தால் அந்த மொத்த குழுவுக்கும் தண்டனை வழங்கப்படும். என பயிற்ச்சி ஆசிரியரால் அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது. விசில் கொமான்ட்( வாயால் சொல்ல முடியாது விசில் சத்தத்திற்கு நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும்) எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது அடுத்த நாள் காலை பயிற்ச்சி ஆரம்பமாகிறது காலை 9 மணி நேரம் வரை பயிற்ச்சி ஓட்டம் அணிநடை மிக முக்கியமாக பழக்கப்பட்டது ஒருவர் காலை மாறி வைத்தாலும் பொல்லால் அடி விழும் மீண்டும் 10 மணிக்கு வகுப்புக்கள் ஆரம்பமாகும் அது சிங்கள பயிற்ச்சி எழுத பேச கற்பித்தார்கள், அதே போல சிங்கள பொடியங்களுக்கு தமிழ் எழுத‌ பேச வகுப்புக்கள் நடக்கும் மாலை வரை நடக்கும் அந்த நேரத்தில் எங்களது மற்ற குழுவில் இருக்கும் சமந்த எனது நண்பராகிறார். பயிற்ச்சியில் குறி பார்த்து சுடும் நிகழ்வு நடக்கிறது நானும் மொத்த சூட்டில் 10 பெறவே சமந்தவும் 10 சூட்டு சரியாக சுடுகிறான் அப்பப்ப பகிடியாக கேட்பான் நீ புலியில இருந்த நீதானே மச்சான் என நானோ சிரித்துவிட்டு கடந்து விடுவேன். எங்களது பயிர்ச்சி முடியும் தருவாயில் சிறப்பாக நடந்த அதி சிறப்பானவர்களை எடுத்து மேலதிகமாக கணணி பற்றிய படிப்புகளையும் சேர்த்து படிப்பித்தார்கள் அதில் நானும் அவனுமே சிறப்பாக படித்து வெளியேறினோம் . ஆனால் பயிற்ச்சி அதிகமாக இருக்கிறது அது எங்களுக்கு மிக கஸ்ரமாக இருக்கிறது என ஐவர் விலக்கிப்போனதும் உண்டு. இப்படி பயிற்ச்சி ஒரு வருடமாக இருந்தது. ஒரு வருடம் ஆறு மாத‌ங்களாக அரைவாசி சம்பளத்துடன் எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு படையணியாக வெளியேற காத்திருந்தது. வெளியேறும் நாள் வரவே அன்று உங்கள் குடும்பத்தார் அனைவரையும் வெளியேறும் (Paas Out) நிகழ்வுகளுக்கு வரச்சொல்லி தகவல் கொடுங்கள் என அறிவுறுத்தினார்கள். எல்லா பெற்றோரும் வரவே தமிழ் இளைஞர்களின் பெற்றோர்கள் விசேடமாக கெளரவிக்கப்பட்டார்கள் நிகழ்வில். அன்றைய அணிநடை சிறப்பு பயிற்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்கள் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது மிக பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது பொலிஸ் உயரதிகாரிகள் விசேட இராணுவ தளபதிகள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த நாட்டில் நடந்த யுத்தம் யுத்தத்தில் படையினரின் அர்ப்பணிப்புக்கள் பொலிஸாரின் அர்ப்பணிப்புக்கள் என்பதே முக்கியமாக அனைவராலும் பேசப்பட்டது. நிகழ்வு முடிவடைந்த பின்னர் வேலை இடம் அச்சடிக்க்ப்பட்ட கடிதங்கள் எல்லோருக்கும் கிடைக்கிறது. எனக்கு கண்டி அருகில் உள்ள சிறிய ஊர் காரணம் குறிப்பிட்ட சிங்கள பிரதேசங்களில் வேலை செய்த பின்னரே தமிழ் பிரதேசங்கள் வழங்கப்படும் என ஏற்கனவே சொல்லி விட்டார்கள். எனது இடத்திலே சமந்தவுக்கும் வேலை சந்தோசமாக இருக்க கடிதத்தை எடுத்து வேலைக்கு அந்த பிரதேசத்துக்கு செல்கிறோம் இருவரும். கடிதத்தை வாங்கிய அந்த பொலிஸ் நிலைய அதிகாரி இவங்களுக்கு வேலை பழக்குங்கள் என்றார் எல்லா பயிற்ச்சியும் முடித்த எங்களுக்கு என்ன வேலை பழக்குவது என இருவரும் யோசித்தாலும் அவரோ அந்த நிலைய வாகனங்கள் , நாய்கள் , நிலையத்தை ,தூசு தட்டி ,பைல்களை தூசு தட்டி அடுக்கி சுத்தமாக வைக்க சொல்லுங்கள் என சொல்லி விட்டு வாகனத்தில் ஏறி செல்கிறார். சமந்த ஏதோ புறு புறுக்க பொறு மச்சான் புதுசு தானே கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும் என கையை பிடித்து விட்டு நான் சொல்ல தங்கு மிடத்துக்கு சென்று உங்கள் பொருட்களை வைத்து விட்டு வாருங்கள் என இன்னொருவர் சொல்கிறார். போர்த்தொழில் தொடரும் ....... நன்றி மருதர் நன்றி அண்னை
  17. சந்துல சிந்து பாடி இருக்காரு சந்திரகாந்தன் அரசியல் முக்கியம் குமாரு என்ற நிலை
  18. ஓவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக காணி பற்றிய விபரங்களை திரட்டுகிறார்கள் அங்கே அரச காணியாக இருப்பது புத்தரை குடி வைக்க இடம் கேட் கிறார்கள் நம்மவர்கள் விற்பனை செய்கிறார்கள் நான் கூட நல்ல விலைக்கு வந்தால் எனது வீடு வளவையும் விற்க உள்ளேன்.
  19. 2009 யுத்தம் முடிவுக்கு வருகிறது. அப்போது தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற பொலிசில் சேருமாறு தமிழ் இளைஞர்,, யுவதிகளுக்கு இலங்கை முழுவதும் அழைப்பு விடுகிறது அரசாங்கம். தரம் 11 சாதாரண தரம் படித்தால் மட்டும் போதுமென அறிவித்தல் கொடுக்கிறது அரசு. யுத்தகாலத்தில் சுடுவதற்கு மட்டும் வெறும் 3 மாத காலம் பயிற்ச்சி கொடுத்தார்கள் அதில் அநேகமானவர்கள் ஊர்காவல்படையில் இருந்த முஸ்லீம்களும் , சிங்களவர்களுமே அதிகமாக இணைந்தார்கள் காரணம் சிலருக்கு சம்பளம் சிலருக்கு கட்டாயம் என பொலிசாராக இணைந்தார்கள். பொலிஸ் சேவையில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது ஆனால் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை நான் பொலிசில் இணைய யாரும் விரும்பவில்லை. காரணம் இந்த அரசாங்கம் படைவீரர்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை அநியாயங்களை சொல்லி சொல்லி காண்பித்தார்கள். நானோ அவர்கள் பேச்சை கேட்கவில்லை நான் போகத்தான் போகிறேன் என ஒரே விடாப்பிடியாக இருந்தேன். இணைவதற்கு ஒரு படிவத்தை நிரப்பி அனுப்பிவிட்டேன். நேர்முகத்தேர்வுக்கு கடிதம் வந்தது என்னுடன் சேர்த்து சுமார் 200 பேரளவில் நேர்முகத்தேர்வுக்கு வந்தார்கள். தமிழர்கள் குறைவு முஸ்லீம்கள் ,சிங்களவர்கள். தமிழர் என பார்த்தால் ஒரு 20பேர் மட்டுமே இருந்தார்கள் வேற வேற ஊரை சேர்ந்தவர்கள் தேர்வுகள் நடக்க ஆரம்பமாகிறது பிறப்பு அத்தாட்ட்சி பத்திரம் கிராம சேவகர் உறுதி பாடசாலை விடுகை பத்திரம் பாடசாலை தகமை என சரி பார்த்தபின்னர் குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்தில் 5 வளையம் ஓடி முடிக்க வேண்டும். ஓடி முடித்தவர்கள் ஓடி முடிக்காதவர்கள் என அனைவரும் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் படைப்பிரிவுக்கு காரணம் ஆட்கள் பற்றாக்குறை ஓடி முடிந்த பின்னர் வீட்டுக்கு செல்லுங்கள் உங்களுக்கு கடிதம் வரும் அந்த கடிதத்தில் எங்கே பயிற்ச்சி ஆரம்பமாகும் கொண்டுவரவேண்டிய பொருட்கள் பற்றிய தரவுகள் எல்லாம் அனுப்பப்படும் அவ்வளவு பொருட்களையும் வாங்கி கொண்டு பயிற்ச்சிக்கு வரவும் வந்த பிறகு யாரும் வீடு செல்ல முடியாது பயிற்ச்சி முடிந்த பிறகே வீடு செல்லலாம் என ஒரு அதிகாரி சொல்லிவிட்டு போகச்சொன்னார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி பொலிசில் இணைவதை எண்ணி. பல தமிழ் படங்களைப்பார்த்த எனக்கு பொலிசானால் பல விடயங்களை செய்யலாம் என மன கணக்கு போட்டு வைத்திருந்தேன் குற்ற‌ங்களை தடுக்கலாம் குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம், போதைகளை கட்டுப்படுத்தலாம் நல்ல சேவை செய்யலாம் என நினைந்திருந்தேன் ஆனால் அந்த தொழிலில் இருக்கும் மற்ற விடயங்களை என் கண்கள் மறைத்து விட்டது என்பதை விட அங்கே உயரதிகாரிகளை மீறி ஒன்றுமே செய்ய முடியாதென போக போக அறிந்தேன். களுத்துறை பொலிஸ் பயிற்ச்சி பாசறையில் இருந்து எனக்கு பயிற்ச்சிக்கு வரச்சொல்லி கடிதம் வர வீட்டில் சம்மதம் இல்லை இருந்தாலும் உன் விரும்பத்துக்கு நீ உன் எதிர்காலத்துக்கு சரி என்றால் நீ சந்தோசமாக போய் வா என்றார் அப்பா அம்மாவுக்கு சிறு துளியும் விருப்பம் இல்லை. நான் அம்மாவிடம் இனி பிரச்சினை வராதும்மா அரசாங்க தொழில் அம்மா ம் சரி நல்லபடியா போய் வா எல்லா சாமானும் எடுத்தாச்சா ஓம் அம்மா சரி மீண்டும் ஒரு தடவை சரி பாரு என சொல்லி என்னை வழி அனுப்புகிறார்கள் அங்கே போவதற்கு பேருந்து தயாராக நிற்கிறது கிழக்கில் இருந்து செல்ல‌. தொடரும் போர்த்தொழில் ..........
  20. இப்ப கல்யாண வீடுகள் எல்லாம் என்ன கோதாரி பாட்டு போடுறாங்கள் என்று விளங்கல்ல கல்யாண மண்டபத்துக்கு பின்னால ஒருத்தன் ஒரு பாட்டுக்கு பல மியுசிக் போட்டுக்கொண்டு அவனே ஆடித்திருந்தான் பல இதய நோய்க்காரர்கள் உள்ள வரல என்ன டிசைனோ தெரியல
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.