Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. உங்கள் ஊருலாவின் தேரில் நாங்களும் பின்னால் தொற்றிக்கொண்டு வந்து சேர்ந்திருக்கிறோம் அம்மாச்சி நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது வாழ்த்துக்கள்
  2. இன்றுதான் வாசித்தன் ரகுநாதன் உங்கள் ஆதங்கம் நினைவுகள் அனைத்தும் அருமை அடிக்கடி வாருங்கள் இலங்கைக்கு
  3. நடக்கும் நடந்த சம்பவங்களை தெளிவாக கூறியுள்ளார் எனக்கு தெரிந்த அருட் சகோதரி பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் ஆனால் அவருக்கு கிடைக்கும் சம்பளப்பணம் சபைக்கு செல்ல செலவுக்கு தேவையான பணம் முன்னர் 2500 ரூபா வழங்குவார்கள் தற்போது அதிகரித்திருக்கும் என நினைக்கிறன். (ஏனென்றால் நான் தான் அந்த புத்தகங்களை அப்டேட் பண்ண வங்கிக்கு செல்வேன் யாருக்கும் தெரியாமல் ) பல வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் பணங்களை வழங்கி இருக்கும் அவர்களுக்கு பெற்றோரால் காணிக்கை ஆக்கப்பட்டு சென்ற பல இளம் ( ஆண்) சபையின் கட்டுப்பாட்டுக்கும் தங்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாமலும் திரும்பி வந்த சம்பவங்களும் உண்டு ஏழைக்குடும்பங்களின் பிள்ளைகளே கடவுளுக்கு கூட காணிக்கையாக்கப்படுகிறார்கள் ( அதிகமாக)
  4. 3 வருடங்களுக்கு பிறகு அடுத்த பெண்குழந்தை பிறந்து 4 மாதமாகிறது . நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலையில் நிற்கிறன் பிறகு ஆறாகினால் நம்ம நிலை ?? 🙂
  5. இந்த அரசாங்கத்தில் இருந்து இந்த தமிழ் கட்சிகள் மொத்தமாக ராஜினாமா செய்து விலகினால் சரிதானே சிங்களவன் ஒரு தீர்வும் தருகிறான் இல்லையென அப்படி செய்வாங்களா சாமியார்?
  6. வேற என்ன கடனகிடன வாங்கத்தான் வாங்கி நம்ம தலையில் கட்டி கட்ட வைப்பான் இப்பதான் வங்காளிட்ட வாங்கின கடன கொடுத்து முடிச்சிருக்கானுகள்
  7. ஏனெனில் அங்கே செய்ய எவருமில்லை நீங்கள் உட்பட............................................. உண்மைதான் இன்னும் சில காலங்கள் கழிந்தால் செய்வதற்குக் கூட யாரும் இருக்க மாட்டார்கள் இன்னும் சிறு பான்மையாக இருப்போம் வடக்கு தப்பினாலும் கிழக்கில் ...................... இன்னும் பரீட்சை முடிவுகள் வெளிவரவில்லையே பிறகு எப்படி ஒரு வேளை அனைத்திலும் பாஸாகி இருந்தால்?
  8. கர்த்தால் இல்லை என்னத்தை போட்டாலும் சிங்கள அரசாங்கம் அசையாது
  9. கன இடத்துல கதை இப்படித்தான் போகிறது அநேகமாக பல விவகாரத்து வழக்குகள் இந்த சமூக சீர்கேட்டாலே நடக்கிறது.
  10. அதென்னவோ தெரியாது புலத்து தமிழர்கள் ஏமாந்து தான் போகிறார்கள் எத்தனையோ வைத்தியர்கள் இருக்கிறார்கள் புலத்தில் அவர்கள் ஓர் வைத்திய முகாம் நடாத்தினாலே சிலரின் வைத்தியச்செலவுகளை குறைக்கலாம் இன்று இந்தியா சாயி பாபாவுக்கு சொந்தமான அமைப்பு ஒன்று வந்து கிழக்கில் காணி வாங்கி அங்கே மருத்துவனை ஒன்றை நிறுவி இதய சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறது இதற்கு முதல் யாழில் செய்த கன இதய சிகிச்சைகள் இன்று மட்டக்களப்பில் செய்யப்படுகிறது கிரான் குளம் பகுதியில் அமைந்துள்ளது அந்த வைத்திய சாலை. நம்மவர்கள் கதைச்சு கதைச்சு காலத்தை ஓட்டுவார்கள் அண்மையில் புலத்து வைத்தியர் ஒருவர் வந்து கோடி கொடுத்து காணி வாங்கினார் தனியார் மருத்துவனை ஒன்றை நடாத்த என்னத்த சொல்ல மருத்துவ தொழில் இப்ப அமோகமாக நடக்கிறது .
  11. விடுப்பு பார்க்கிறதுல ஒரு விருப்பம்தானே அதான் கேட்டுப்பார்த்தன் இந்த 6 மாத விசிட்ட அப்ப போதும் என்று சொல்கிறீர்கள் போல அப்ப சரி ஆளை விடுவம் இது தெரியாம நாம திரிஞ்சு இருக்கிறம் என்றா பாருங்கோவன்
  12. நம்ம அதிஸ்ரம் தலை கீழாக வேலை செய்கிறது எங்க போனாலும் புலி கடந்து போன பற்றைக்காடுகள் போல் இருக்கிறது அதனால் இனிமேல் எந்த பிரயோசனமும் இல்லை மிக்க நன்றி அண்ணை 😷
  13. இந்தாள் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்க சிங்கள மக்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் நம்ம நாட்டு டிசைன் அப்படி
  14. எப்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ? பிள்ளைகள் கன்பேர் தங்களுக்கு பாலியல் அல்லாத சுதந்திரத்திரத்தை விரும்புகிறார்கள் ( சிலர்) அதற்கு பணம் வேண்டும் பணத்துக்கு பெற்றோர் என்ன செய்வார்கள் இலங்கை மீண்டும் பாதாளத்தில் விழுந்து வருகிறது அதற்கு உழைப்பு இல்லாத குடும்ப நிலை என்னாகிறது அந்த பிள்ளைகளின் ஆசைகளுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் நேற்று நான் பஸ்ஸில்வரும் போது இரு பெண்பிள்ளைகள் அடியே அவளின்ற 21வயது பிறந்த நாள் போட்டோ எல்லாம் சூப்பாராக இருக்கிறதென்றும் முகநூலில் பார்த்தேன் என சொல்லும் போது அந்த பிள்ளையின் ஆசையும் அதில் அடங்கியுள்ளது ( அவளுக்கும் ஆசை ( உலகம் இன்று பணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பணம் இருந்தால் வீட்டில் பிரச்சினை இல்லை ) அதிகம் எழாது பணம் அதிகம் இருந்தாலும் பிரச்சினை எழுகிறது இன்னும் நாம் கையாளத்தெரியாமல் பல பிரச்சினைகளை கைகளுக்கும் வைத்து பிரட்டிக்கொண்டிருக்கிறோம் புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்கள் அந்த படிப்பை ஈழத்தில் இன்னும் பயன் படுத்த வில்லை மாறாக உழைத்த பணத்தை யே இங்கு பயன் படுத்துகிறார்கள் இது நான் உங்கள் மீது வைக்கும் குற்றம் இல்லை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் புலத்து மூளையால் செய்யப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிடவும் கோவில் சாமர்த்திய வீடுகள் கல்யாண வீட்டு நிகழ்வுகளை தவிர்த்து ???..........................
  15. நன்றி அண்ணை உங்களை காண்பது குறைவாக உள்ளது களத்தில் நன்றி ரதி அனுபவங்கள் சம்பவங்கள் கதைகளாக வரும்
  16. கனபேர் ரோமேனியா வந்து அங்கால வந்து இறங்கின செய்திதான் ஊர் முழுக்க அடிபடுது அப்படி இருக்க இங்குள்ள சனமும் என்ன செய்யும் ஓடி வரத்தான் துடிக்கிறது இங்க இருப்பதை விட எங்காயவது போகலாம் என வெளிநாடுகளில் இருந்து நீங்கள் என்ன சொன்னாலும் இங்க உள்ள சனத்துக்கு எப்படியாவது இலங்கையை விட்டு வெளிக்கிடவேண்டும் என்ற நினைப்புதான் எனக்கே அந்த நிலையென்றால் பாருங்கோவன்
  17. கன நாளைக்கு பிறகு நண்பர்கள் கூடினோம் லண்டனில் இருந்து வந்த ஒரு கூட்டாளிக்கு இப்பதான் கல்யாணம் நடந்திச்சு அந்த பார்ட்டியில் குடிச்சிட்டு கிடந்த கூட்டாளீகள் குடிச்சிட்டு பழையதைக் கொட்டிவிட்டானுகள் கூடவே வாந்தியும் எடுத்து மறக்க முடியாமல் மனதில் குத்தப்பட்ட பச்சைப்புள்ளீகள் அவை அந்த நினைவுகள்
  18. பாடல் நன்றாக இசையுடன் கோர்த்து எம்மையும் இழுத்து செல்கிறது
  19. நான் சொல்ல வந்தது இழி சொற்கள் எப்படி வரும் என்பதை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.