Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76717
  • Joined

  • Days Won

    768

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அமைச்சுக்களும்... மறுப்பறிக்கை விட்டது. 😂
  2. பொய் சொல்லலாம். ஆனால்... ஏக்கர் கணக்கில் பொய் சொல்லக்கூடாது. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன். வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.." என்ற மாதிரி, உங்கடை கதை போகுது. 😂
  3. சில காலத்துக்கு முன் அப்படி ஒன்றிரண்டு... நடந்து இருக்குது.
  4. @Kandiah57, @குமாரசாமி அண்ணை ஆட்களை இந்தப் பக்கம் காணேல்லை. சிலவேளை அவைதான்.... காதலர்களோ... 🤣
  5. அப்ப... அடுத்த ஒலிம்பிக் ஊரிலைதான். டக்ளஸ்... ஏற்கேனவே யாழ்.மத்திய கல்லூரியில் ஒரு நீச்சல்குளம் கட்டினவர் தானே... அது இப்ப, பாசி பிடித்து நுளம்பு குடித்தனம் நடத்துது.
  6. கைதிகளுக்கு பொது பொது மன்னிப்பு. சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இந்த சிறைக்கைதிகளை விடுதலைசெய்யும் நிகழ்வு இன்று காலை 10.00மணியளவில் நடைபெற்றது. சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377975 @ஈழப்பிரியன்
  7. ஈரான் – இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்: இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்து. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377957
  8. சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. குறித்த சந்திப்பு வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, பிலிப்பனைஸ் ஜனாதிபதி ஜூனியர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்று, ஜனாதிபதி, ஜோ பைடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377934
  9. ஹ்ம்ம்…. கள்ளக் காதலனுக்கு கட்டையிலை போற வயசு 63. 😂🤣 இந்தக் காதலனை நம்பி… 39 வயசு புருசனை கொன்று போட்டு இருக்குது விசர் மனிசி.
  10. வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை. சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய தினம் ஒலுமடு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதன் போது கூட்டத்திற்கு அழையா விருந்தாளிகளாக சிவசேனை அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன் தலைமையிலான குழு வருகை தந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்து குழப்பங்களை ஏற்படுத்தினர். அதன் போது, வெட்டுக்குநாறியில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் அடாவடியில் ஈடுபடும் போது , நீங்கள் எங்கே சென்றீர்கள் ? ஆலய பூசாரி உள்ளிட்ட 08 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போது எங்கே போனீர்கள் ? கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு நெடுங்கேணி மற்றும் வவுனியாவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது எங்கே போனீர்கள் ? என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்வி கேட்ட போது , அதற்கு பதில் அளிக்காது கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தனர். அதனை அடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. அவர்கள் அதற்கு பின்னரும் வெளியேறாத நிலையில் , குழப்பங்களை தவிக்கும் முகமாக கூட்டத்தினை மண்டபத்திற்கு வெளியே நடத்த முயன்ற போதும் குழப்பத்தை ஏற்படுத்தியமையால், தற்போதைய நிர்வாகமே அடுத்த ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து செயற்படும் என கூட்டத்தில் ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டு , கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டம் நிறைவு பெற்று மக்கள் அங்கிருந்து கிளம்பும் போது , மண்டபத்திற்குள் சென்ற சிவ சேனையினர் அங்கிருந்த மேசைகள் மீது படுத்து உறங்கினர். இதேவேளை சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட குறுந்தூர் மலை விகாரைக்கு சென்று அங்கிருந்த புத்தரை வழிபட்டதுடன் , விகாரதிபதியுடன் நல்லுறவில் உள்ளவர்கள் , வெடுக்குநாறியில் ஆதி சிவன் ஆலயத்தையும் அந்த விகாராதிபதியிடம் கையளிக்கும் ஏற்பாடாகவே சிவசேனையினர் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். https://athavannews.com/2024/1377874
  11. சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் : அமைச்சர் டக்ளஸ் கருத்து. ஜே.வி.பியின் மாநாட்டுக்கு அழையா விருந்தாளியாக சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தது விரும்பத்தகாத செயல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அண்மையில் ஜே.வி.பி கட்சி தனது கட்சி மாநாடொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காமல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் சென்றதாக ஜேவிபியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை. இதேநேரம் மாநாடொன்றிற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது இயல்பான ஒன்றுதான். அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைபை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும். அந்த வகையில்தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன். அந்தவகையில் சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கூறியுள்ளார் என்றே தான் கருதுவதாக குறிப்பிடடுள்ளார். https://athavannews.com/2024/1377856
  12. குடும்பத்தினருக்கும் காப்புறுதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை! தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய் ஆகும். இன்னிலையில் அந்த காப்புறுதித் தொகையில் இருந்து சில தொகையை குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீட்டு தொகையயாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்ற சபைக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அங்கும் இது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1377581
  13. இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு! 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆயுதப்படையின் 197 அதிகாரிகள் உட்பட எண்ணாயிரத்து நூற்று நாற்பத்தாறு பேர் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும், ஆயுதப்படைகளின் ஒன்பது அதிகாரிகளுடன் நானூற்று நாற்பத்திரண்டு பேர் ஆயுதப்படையை விட்டு வெளியேறியுள்ளனர் மேலும் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவ சேவையை விட்டு வெளியேறியவர்களில் 137 இராணுவ அதிகாரிகள், 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 19 விமானப்படை அதிகாரிகள் இராணுவ சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் நிர்வாக பிரச்சனைகள் காரணமாக இராணுவத்தை விட்டு விலகியுள்ளமையும் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1377613
  14. கந்தர்மட பனங்கிழங்கு நல்லாய்த்தான் இருக்குது. அதை பிடித்து இருப்பது உங்கள் கையா...? ஊர் வெய்யிலுக்கு கறுத்துப் போனியள் போலை கிடக்கு. 😂
  15. ஸ்பெயினில் காலநிலை மாற்றம் – பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியா (UK) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருகிறது. இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது. எனவே, வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் குறித்த இயற்கை மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1377266
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.