Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14953
  • Joined

  • Days Won

    166

நிழலி last won the day on December 1 2023

நிழலி had the most liked content!

1 Follower

About நிழலி

  • Birthday 12/15/1974

Profile Information

  • Gender
    Male
  • Location
    பனி வனம்
  • Interests
    காமமும் கலவியும்

நிழலி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

7.7k

Reputation

  1. செய்தியில் எந்த ஒரு இடத்திலும் நாய் இறைச்சி என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் ஆதவன் தலைப்பில் வேண்டும் என்றே நாயிறைச்சி என்று போட்டுள்ளது. இணைப்பைத் தாருங்கள். நம்பகமான தளமா என சரிபார்க்கவும். ஏனெனில் அண்மையில் இங்கு கரப்பத்தான் கிடந்ததாக படம் எடுத்தது ஒரு உணவு விடுதியில், ஆனால் வேண்டும் என்றே இன்னொரு கடையின் பெயரை போட்டு முகனூலில் வதந்தி பரப்பி இருந்தார்கள்.
  2. பொது சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கட்டுரை என்பதால் இங்கு இணைப்பை தருகின்றேன்.
  3. பகிர்வுக்கு நன்றி. இன்றைய அரசியலுக்கு ஏற்ற கட்டுரை
  4. அவரை பத்து கிலோ மீட்டர் ஊர்வலமாக நடத்திக் கொண்டு, அதை காணொளி எடுத்து எல்லாருக்கும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
  5. ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.
  6. இவர் அன்றில் இருந்து இன்று வரைக்கும் மாறாமல் அப்படியே இருக்கின்றார். கடும் புலி எதிர்ப்பு / கடும் தமிழ் தேசிய எதிர்ப்பு என்பவை மட்டுமே இவரது கொள்கைகள். ஒரு காலத்தில் சந்திரிகா அம்மையாரின் சேலை நுனியில் தொங்கிக் கொண்டு புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். இன்று அனுரவின் ஷேர்ட்டில் தொங்குகின்றார். காற்று எந்தப்பக்கம் பலமாக அடிக்கப் போகுதோ என்று தானே கணித்து, அதில் தொங்கிக் கொண்டு தமிழ் தேசியத்தை எதிர்த்து சீவியம் நடத்தும் ஒரு சீவன் இவர்.
  7. நேற்று வாழ்வில் முதல் தடவையாக ஒரு பெண்ணினது வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். என் நெருங்கிய உறவு ஒருவரது மருமகள் என்பதால் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியவில்லை. இந்தியாவில் நடப்பது போன்று வித விதமாக வண்ணமயமான காப்புகளை கர்ப்பிணிக்கு ஏனைய பெண்கள் (மட்டும்) அணிவித்து கொண்டாடினனர். இதில் லைட்டா மனசில் ஒரு வெறுப்பை உணர்ந்தாலும் அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு இளம் ஈழத் தமிழ் பெண் தம்பதியையும் (lesbian couple) நிகழ்வுக்கு அழைத்து இருந்தனர். அவர்களும் எல்லாரையும் போல, ஏனைய நண்பர்கள் உறவினர்களுடன் சந்தோசமாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயத்தில் எம் இளம் சமூகத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளமை மனசுக்கு திருப்தியாக இருந்தது.
  8. //``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் இழிசொல் இல்லை என்றாலும் பொதுச் சமூகத்தின் பார்வையில் `தாழ்ந்த’ என்கிற அர்த்தம் தொனிக்கும் சொல்லாகவே புரிந்துகொள்ளப்படும் என்பதால் `அட்டவணை சாதியினர்’ என்றே குறிப்பிடலாம்” என்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.// என நீங்கள் தந்த இணைப்பில் உள்ளது. இதே போன்ற புரிதலைத் தான் நானும் கொண்டிருக்கின்றேன் என்பதால் அச் சொல்லை கண்டவுடன் கேள்வி எனக்கு எழுந்தது.
  9. இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்...? மாட்டுறைச்சி சாப்பிடுகின்ற இந்துக்களை சாதியத்துடன் தொடர்பு படுத்தியதாக இது அமைந்திருக்கு என உணர்கின்றேன்.
  10. ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை. நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
  11. IPTV யில் Disney Hotstar ரில் வெளியாகி இருந்தமையால் நேற்றிரவு இப் படத்தின் தரமான பதிப்பை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் குடியும் கொண்டாட்டமுமாக காட்சிகள் தொடங்கினாலும், குணா குகைக்கு இளைஞர்கள் சென்றபின் படத்தின் tone னே மாறி, நல்லதொரு திரை அனுபவத்தை முடிவு வரை க்கும் கொடுத்தது. இத் திரைப்படம், நாளாந்தம் சிறு சிறு வேலைகள் செய்து உழைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்களின் நட்பின் உச்சத்தை பேசுவதால் தான் எளிதாக பலரின் மனசை கவர்கின்றது என நினைக்கிறேன். நல்ல படம். வாய்ப்பிருப்பின் பாருங்கள்.
  12. வாழ்த்துக்கள்! 33 வருடங்களுக்கு மேலாக, பிரிந்து இருவரும் தனித் தனிச் சிறையில் இருந்தும், இவர்களுக்கிடையிலான காதல் இன்னும் மாறவில்லை என்பதை அறிய ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் உள்ளது.
  13. புலி நீக்கிய அரசியல் செய்ய சொல்கின்றவர்கள் விரும்புகின்ற மாற்றங்கள் தான் இப்படியான மனித விரோத சம்பவங்கள். இதைத் தான் சிங்களமும் விரும்புகின்றது. ஒரு இனத்தின் மனித விழுமியங்களை மழுங்கடித்து விட்டால், பண்பாட்டை அருவருக்கத்தக்கதாக மாற்றி விட்டால், அந்த இனம் எக்காலத்திலும் மீண்டு வராது என்பது அவர்களுக்கு தெரியும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.