-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இது விபத்துக்குள்ளாகவில்லை. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலில் இருந்து torpedo தாக்குதலின் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எந்த அரசியல் கட்சியினதும் பிரச்சார தளங்களில இருந்தோ, பிரச்சார YouTube channel களில் இருந்தோ - அது இலங்கையை சார்ந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, இந்தியாவை சார்ந்த கட்சியாக இருந்தாலும் சரி - பதிவுகள், காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது என்பது கள விதி. ஆனால் இதனை கொஞ்சமும் மதிக்காது, பல நூறு முறை இவ்வாறான தளங்களில் இருந்து நீங்கள் இணைத்துள்ளீர்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவற்றில் எம்மால் அவதானிக்கப்பட்ட அனைத்தும் நீக்கப்பட்டன. எதிர்காலத்திலும் அவை கண்டிப்பாக நீக்கப்படும். மீண்டும் மீண்டும் இவ்வாறான விதிகளை மீறும் செயல் தொடருமாயின் உங்கள் கருத்துக்களை மட்டுறுத்துனரின் பார்வைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படும். யாழில் எவரும் வேறு எந்த கட்சி சார்பாகவும் இவ்வாறு பதிவுகளை இடுவதில்லை. சீமான் ஆதரவாளர்களாக தம்மை வெளிப்படுத்துகின்றவர்கள் மட்டுமே இவ்வாறு விதிகளை கொஞ்சமும் மதிக்காது பதிவுகளை பகிர்வதையும் அவதானித்துள்ளோம். இதில் நீங்கள் ஒரு படி மேலே போய் ஒரு முறை தேவடியாள் எனும் மிகவும் ஆபசமான, அநாகரீகமான, பண்பட்ட பொருள் தருகின்ற ஒரு சொல்லை பயன்படுத்தி இருந்த ஒரு பதிவையும் யாழில் பகிர்ந்து அது என்னால் நீக்கப்பட்டது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். கருத்துக்களத்தில் சீமானை மட்டுமல்ல எந்த அரசியல்வாதியையும் நாகரீகமாக விமர்சிக்கும் உரிமை கள உறவுகளுக்கு உள்ளது. சுமந்திரனை, அனுரவை, சாணக்கியனை, மோடியை, கருணாநிதி போன்றவர்களை விமர்சிப்பது போல சீமான் எனும் அரசியல்வாதியையும் விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. அது தேவையற்ற இடத்தில் வலிந்து செய்த செயலாக உங்களுக்கு தோன்றினால், report செய்து முறையிடவும். நன்றி
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய அதிபர் கொல்லப்பட்டு விட்டார் ட்ரம் அறிவித்துள்ளார்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னை கூப்பிட்டீர்களா சார்?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 65 ஆவது வயதை அடைந்தமையை கொண்டாட சுமந்திரன் தலைமையில் கேக் வெட்டும் நிகழ்வை விரைவில் நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
சில நாட்களுக்கு முன் டி.ராஜேந்தர் பேசிய ஒரு காணொலி வைரலாயிட்டு இருந்துச்சு. அதில அவர் விரக்தியான புன்னகையுடன் கூறியது... “என்னுடைய மியூசிக்ல உயிருள்ளவரை உஷா படத்தில் வந்த பாடல்களை ஏ.வி.எம் ஆடியோ நிறுவனத்துக்கு ராயல்டி பேஸிஸ்ல கொடுத்தோம். இது வரைக்கும் சிங்கிள் பைசா எனக்கு கொடுக்கல. இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கறை காத்தே நில்லு பாடல்கள் எல்லாம் எவ்வளவு வியூவ்ஸ் வந்து நிறைய காசு பார்த்திருப்பாங்க. இந்த ராயல்டி வருமானத்தை ஏ.வி.எம் எங்களுக்கு எதுவுமே கொடுக்காம வேற யாருக்கோ வித்துட்டாங்க. இப்ப நான் உயிருள்ளவரை உஷா பட பாடல்களை என்னுடைய யூ டியூபில் அப்லோட் பண்ணினால் காப்பிரைட்னு வருது. இப்ப தான் எனக்கு ஒரு உணர்வு வருது. என்னுடைய பாடல்களின் காப்பிரைட்டை நான் எப்படி காப்பாத்தி வெக்கணும்னு” ஒரு இசையை படைத்த ஒரு படைப்பாளிக்கே அந்த பாடலை பயன்படுத்த உரிமை இல்லையாம்... ஆனால் இடைத்தரகராக அதை வாங்கி இன்னொருவருக்கு வித்தவர் அவரும் சம்பாரிச்சு அதை வாங்கிய கார்பரேட் நிறுவனமும் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை... இது தான் சமீபத்திய சரிகம நிறுவனம் பற்றிய சம்பவமும்... ஒரு விவசாயி தன்னுடைய விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்பதற்கும், அதையே கார்பரேட் கம்பெனிகள் விற்பதற்கும் உண்டான வித்தியாச அளவுகோல் தான் இந்த சம்பவத்தின் விபரீதமான எதிரொலி. இசைஞானி மட்டும் தன்னுடைய பாடல்களுக்கு காசு வாங்குவதாகவும், அதை கார்பரேட் கம்பெனிகள் என்னமோ சும்மா தூக்கி இலவசமாக மக்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரியும் பேசறாங்க... இதில வேற காப்பிரைட்டுக்கும் ராயல்டிக்கும் உண்டான வித்தியாசம் கூட தெரியாம கம்பு சுத்தறது தான் காலத்தின் கொடுமைன்னு சொல்லனும்.... அதாகப்பட்டது பார்த்தீங்கன்னா, 134 படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கு இசைஞானி உரிமை கோரவோ அல்லது நியாயமான பணத்தை கேட்கவோ வாங்கவோ முடியாது.. ஆனால் அந்த 134 படங்களுக்குமான காப்பிரைட் வாயிலாக கார்பரேட் நிறுவனம் மக்களிடம் யூடியூப் உள்ளிட்டவற்றின் வாயிலாக பணம் சம்பாதித்து கொள்ளலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இந்த போராளிகள் கம்பு சுத்தவோ அல்லது அட்டகத்தியை வெச்சிகிட்டு ஆட்டவோ முடியாது... காரணம் கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இசைஞானி போல் ஏமாளிகள் அல்ல... அவர்களது நோக்கங்கள் முழுக்க வணிகமும் பணமும் தானே தவிர கலையோ கலாச்சார முன்னெடுப்போ அல்ல என்பதை புரிந்து கொண்டால் நலம்.... இதில ஒரு சேனல்காரர் கொடுத்த தலைப்பை பார்த்தவுடன் நிஜமாகவே என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது... நன்றி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு பதிவு- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
செத்த பிறகு அவரை மாவீரர் என்றெல்லாம் போட்டு அஞ்சலி செலுத்தி என்னை வெறுப்பேற்றினார்கள்.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
Current அடித்து செத்தவரா?- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
இப்படி கேள்வி கேட்பவர்களை இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் படி இயங்குபவர்கள் என சொல்லிவிட்டால் அடுத்தாக துரோகி என முத்திரை குத்துவது இலகுவாகி விடுமல்லவா..! அப்படி குத்தியபின் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என முழக்கம் திரு நினைக்கிறார். இவர் தன் கூட்டாளிகள் என சொல்பவர்களில் ஸ்பைஸ்லாண்ட் கிருபாவும் உள்ளார். புலிகளின் காசினை ஆட்டையை போட்டவர்களில் கிருபாவும் ஒருவர். அதே போல் பாபு கேட்டரிங் முதலாளியும் இவரது நற்பெயர் லிஸ்டில் உள்ளார். தமிழ் தேசிய வியாபாரிகளை உயர்த்தி பேசி, கேள்வி கேட்பவர்களை துரோகி என முத்திரை குத்தி வயிறு வளர்க்கும் இவரை போன்றவர்கள் தான் தமிழ் மக்களிம் முதல் எதிரிகள். இறுதி வரைக்கும் அவர் சொல்லவில்லை. பாம்பு தானறிந்த இன்னொரு பாம்பின் கால்களை ஒரு போதும் வெளியே சொல்லுவதில்லை.- SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
யாரை குறிப்பிடுகின்றார்?- 1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
மிக மகிழ்ச்சியான செய்தி. மாதத்தில் 22 நாட்களாவது இவர்களுக்கு வேலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனுர அரசு, வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மலையக தமிழ் கட்சிகளுக்கும் ஆப்பு அடித்துக் கொண்டு இருக்கின்றது. மனோ, இராதாகிருஷ்ணன் போன்ற பம்மாத்து அரசியல்வாதிகளுக்கு இனி கடின காலம் தான்.- யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
பார்க்க பார்க்க மனசுக்குள் வேதனை தான் மிஞ்சுகின்றது. ஈற்றில் இதற்குத்தானா இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்களும், பொது மக்களின் இழப்புகளும் ??- கருத்துக்களில் மாற்றங்கள் - 2026
'தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)' எனும் திரியில் இணைக்கப்பட்ட அரசியல் நாகரீகமற்ற கருத்துகளும், தரமற்ற அநாமதேய தளங்களில் இருந்து பகிரப்பட்ட கருத்துகளும் நீக்கப்பட்டன. சுய அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கு வடிகால் அமைக்கும் எண்ணத்துடன் கருத்துக்களத்தில் பதிவுகளையும், கருத்துகளையும் பகிர்வதை நிர்வாகம் அனுமதிக்காது. நன்றி- கள்ளத்தீனி - T. கோபிசங்கர்
கள்ளத்தீனி ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான். சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு. எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது. கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது. மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும். மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும். ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும். வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும். வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”. புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும். Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள். பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான். சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும். ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது. மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும். என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம் - ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.