Jump to content

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    7216
  • Joined

  • Days Won

    24

இணையவன் last won the day on July 2 2023

இணையவன் had the most liked content!

About இணையவன்

  • Birthday 03/19/1970

Profile Information

  • Gender
    Male
  • Location
    பிரான்ஸ்

Recent Profile Visitors

12337 profile views

இணையவன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

2.2k

Reputation

  1. ஒருபுறம் பெலாருஸ் அதிபர் புடினுக்கு எதிரான கருத்தைத் தெரிவிக்க மறுபுறம் பெலாருஸ் டெலிகிராம் தளமான NEXTA இந்தத் தாக்குதல் தொடர்பான இன்னொரு தலையிடியை புடினுக்குக் கொடுக்கின்றது. மேலதிக செய்திகள் வரட்டும் பார்க்கலாம். 🙂
  2. எனது தந்தை சினிமா அரங்கு ஒன்றில் வேலை செய்தவர். சிறுவனாக இருந்தபோது நீங்கள் குறிப்பிடும் அத்தனையையும் அச்சொட்டாக நானும் அனுபவித்துள்ளேன்.
  3. தனது பொய்கள் எடுபடவில்லை என்று தெரிந்துகொண்டு புடின் இஸ்லாமியப் பயங்கரவதிகளின் தாக்குதல் என்று தன் வாயாலேயே தயங்கித் தயங்கிக் கூறுகிறார். ஆனாலும் உக்ரெயின் தானாம் இவர்களை ஏவியது. மேலே சிலர் சொல்வதுபோல் எந்த இடத்திலும் மேற்கு நாடுகளையோ அமெரிக்காவையோ ISIS மூலமாக இத் தாக்குதலைச் செய்ததாகக் கூறவில்லை. ஏன் ? அடுத்த தடவை புடின் விசுவாசிகள் அவர் வாய் திறக்குமுன் கச்சேரியை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 😂
  4. நல்லது. தனிப்பட்ட காழ்ப்புணர்வினால் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது என்ற தவறான கருத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதற்காக. இது தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க எதுவுமில்லை.
  5. பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?
  6. பொருத்தமற்ற திரி என்பதால் உங்களுக்கான பதில் இங்கே. அட்விகா மட்டுமல்ல Orlivka விலும் உக்ரெயின் தோல்வியுடன் வெளியேறிறியது. தேர்தலுக்கு முன்னரான இந்த வெற்றிக்கு ரஸ்ய படைகள் கொடுத்த விலை மிக அதிகம். 9 மாதங்கள் போராடி Bakhmout வெற்றி. 6 மாதங்கள் போராடி பாரிய இழப்புகளுடன் அட்விகா வெற்றி. இப்படியே போனால் உக்ரெயினை வீழ்த்த 10 - 15 வருடங்கள் ஆகும். உக்ரெய்னுக்கு வெளிநாட்டு உதவிகள் குறைந்துள்ளதால் அடுத்த உதவி கிடைக்கும்வரை பீரங்கிக் குண்டுகளைச் சிக்கனமாகப் பாவிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆட் பற்றாக்குறையும் உள்ளது. மக்ரோன் திடர்பான உங்கள் கருத்து தவறானது. தேவை ஏற்பட்டால் தனது படைகளை அனுப்புவது பற்றிய யோசனையைப் புறம்தள்ள முடியாது என்றுதான் கூறியுள்ளார்.
  7. Andreï Morozov. இவர் பிரபலமான ரஸ்ய புளொக்கர். ரெலிகிராமில் இலட்சம் பேர் இவருடன் இணைந்திருந்தனர். 2014 இல் உக்ரெய்னுக்கு எதிராகப் போரிட்டவர். இராணுவத்திலுள்ள தனது தொடர்புகளால் ரெலிகிராம் மூலம் களச் செய்திகளையும் வீடியோக்களையும் பகிர்ந்தவர். அட்விக்கா சமரில் மட்டும் 16000 ரஸ்ய படையினர் இறந்தும் காயமடைந்தும் களத்தை விட்டு நீக்கப்பட்டதை முதலில் தெரிவித்தவர் இவர்தான். ரஸ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளாலும் இழப்புகளைக் குறைத்துக் காட்டுமாறு இவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இறக்குமுன் தனது வீட்டை விற்று ரஸ்ய படையினருக்கு ட்றோன்கள் வாங்கிக் கொடுக்குமாறு எழுதி வைத்துள்ளார்.
  8. ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ? உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ? பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான் ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை. ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.
  9. அநாவசிய திசைதிருப்பல்கள் வேண்டாம். தமிழ்நாடு 100 வருடம் பிந்தங்கியுள்ளது என்று ஏன் எழுதினீர்கள் என்பதை விளக்கினால் நீங்கள் அரசியல் அறிஞர் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முடியாவிட்டால் பதில் தரவேண்டாம். பொய்யான கற்பனைத் தகவல்கள் யாழுக்கு நல்லதல்ல.
  10. ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.
  11. உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம் என்று நினைத்து எழுதுகிறீர்கள். மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.
  12. போர் ஆரம்பித்தபோது சாதாரண பிரெஞ்சு இளைஞர்கள் இங்கிருந்து போய் உக்ரெய்ன் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கியபோது அவற்றைப் பராமரிப்பதற்காக இராணுவத்தினர் சென்றிருக்கலாம். ஆனால் உத்தியோகபூர்வமாக இல்லை. இந்தப் போர் ஐரோப்பாவை நோக்கிய அச்சுறுத்தலாக இருப்பதால் அமெரிக்காவின் உதவிகள் பின்னடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் தன்னை முன்னிலைப் படுத்த முயல்கிறது. பிரெஞ்சு அதிபருக்கு உள்நாட்டில் முற்றிலும் ஆதரவு இல்லாத நிலையிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரெய்னுக்கான உதவிகள் தொடர்பாக மிகப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. இதனால் மக்ரோன் பிரஞ்சு இராணுவம் உக்ரெய்னுக்குச் செல்லவேண்டி வரலாம் என்ற கருத்தைக் கைவிடவில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.