கலைஞன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  7,584
 • Joined

 • Last visited

 • Days Won

  11

கலைஞன் last won the day on March 21 2016

கலைஞன் had the most liked content!

Community Reputation

250 ஒளி

About கலைஞன்

 • Rank
  உங்களில் ஒருவன்
 • Birthday January 19

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

12,133 profile views
 1. வெண்பொங்கலும், சக்கரை பொங்கலும் என் வயிற்றுக்கை போய் விளையாட்டை காட்டுது. ஐயோ தூக்கி தூக்கி அடிக்கிது. தூக்கம் வராத ஆட்கள் இரவில ஒரு தலுசை பொங்கல் சாப்பிடலாமோ?
 2. யாழில் களத்தில் மீண்டும் சல்லிக்கட்டு 2017இல்.
 3. குமாரசாமி அண்ணா, போல், மீரா, வாத்தியார், நீங்கள் எல்லாம் உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் கருத்துக்கள் கூறுகின்றீர்களா அல்லது உலகில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அங்கே தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெறும் விடயங்கள் மட்டும் எல்லாம் நேர்த்தியாக, நீதி, நேர்மையின்படி நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? பிச்சைக்காரர்கள், அடிமைகளாக உள்ளவர்களுக்கு எஜமான்கள் எறிகின்ற எலும்புத்துண்டுகளும் இல்லையென்றால் ஜீவனோபாய போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? 1990ம் ஆண்டு நாம் இடம்பெயர்ந்தபோது சொந்தவீடு இல்லை, வருமானம் இல்லை, ஆதரிக்க எவரும் இல்லை. அரசாங்கம் கொடுத்த நிவாரணப்பொருட்களும் கிடைத்திருக்காவிட்டால் வேறுவழி இல்லாமல் இயக்கத்தில் இணைவதே ஒரேயொரு தீர்வாய் அமைந்து இருக்கும். நாம் இடம்பெயந்து நட்டாற்றில் கைவிடப்பட்டதற்கு யார் காரணம் என்ற தர்க்கம் தேவையில்லை. ஆனால், அங்கே கடைசியில் கைகொடுத்தது கப்பல்களில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்களே. அரிசியில் கல்லை மண்ணை கலந்து அனுப்பினாலும் அதை ஏற்றுக்கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. இது ஓர் உதாரணம். இந்தக்கோணத்திலேயே நான் பொருத்துவீடுகளை பார்க்கின்றேன். இங்கே இருந்து நாங்கள் எதுவும் கதைக்கலாம், எழுதலாம். ஆனால், கடைசியில் அங்கே அரசாங்கம் என்ன செய்கின்றதோ அதுதான் யதார்த்தம். தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று பாடத்திட்டத்தில் அச்சிடப்பட்டால் பரீட்சை வரும்போது வந்தேறு குடிகள் என்று மறுமொழி எழுதினால்தான் புள்ளி. எங்கள் கெட்டித்தனத்தை காட்ட நினைத்தால் முட்டைதான் வரும். அரசாங்கம் சொல்வதுதான் வேதவாக்கு. முரண்டுபிடித்தால் இழப்பு அங்கே வாழும் மக்களுக்குத்தான். ஒவ்வொரு திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தும்போதும் எவ்வளவோ தில்லுமுள்ளுக்கள் நடக்கின்றன. அரசியல்லாபம் பார்ப்பவனே அரசியல்வாதி. வியாபாரத்தில் இலாபம் பார்ப்பவனே வியாபாரி. தமக்கு லாபம் இல்லாமல் எவருமே எதிலும் இறங்கமாட்டார்கள். நாங்கள் பொருத்துவீட்டு விசயத்தில் அதிபுத்திசாலிகளாக எங்களை காட்டிக்கொள்ள முயன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்கள் கிடைக்காதவண்ணம் விசயங்களை இழுத்தடிப்பதாகவே எனக்குப்படுகின்றது. வெறும் அரிசியை பெற்றுக்கொண்டு கஞ்சியை மட்டும் செய்து குடிக்கக்கூடியதாக உள்ள நிலமையில் நாங்கள் இட்லி, சாம்பார் கிடைத்தால்தான் உண்போம் அல்லது உண்ணாவிரதம் செய்வோம் என்பதுபோல் இருக்கின்றது உங்கள் பலரின் வாதம். பொருத்துவீட்டில் ஏதாவது விபத்துக்கள், இடர்ப்பாடுகள் எதிர்காலத்தில் வந்தால் அதற்கு பதில்கூறவேண்டிய தார்மீககடமை அந்ததிட்டத்தை உருவாக்கி செயற்படுத்துபவர்களுக்கு உள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் உண்மையான ஜனநாயக விழுமியங்கள், நீதி, நேர்மை உள்ள ஆட்சியில். அவை இல்லாத இடத்தில் எதுவுமே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் நடக்கப்போவது இல்லை. அலைவரும்போதே தலைமுழுகு!
 4. இசை, பொருத்துவீடுகளினால் ஏற்பட்ட தீமைகள், விபத்துக்கள் இவைபற்றி ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றதா? வியாபாரப்போட்டிகளினாலேயே இவ்வாறு பொருத்துவீடுகளிற்கு எதிர்ப்பு தோன்றி இருக்கலாம். இந்திய நிறுவனமே பொருத்துவீடுகளை கட்டப்போகின்றது என்றால் குறிப்பிட்ட நிறுவனத்தினால் முன்பு செய்யப்பட்ட பொருத்துவீட்டு திட்டங்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்குமே.
 5. நிச்சயம் பொருத்துவீடுகளின் தன்மை, அவற்றின் நன்மைகள், தீமைகள் பற்றி அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஆனால், நாங்கள் அவர்கள்மீது எங்கள் கருத்துக்களை வலிந்து திணிக்கக்கூடாது. தகவல்கள் அவர்களிற்கு செல்லட்டும், முடிவை அவர்கள் எடுக்கட்டும். ஆனால், பொருத்துவீடு என்றாலும் பரவாயில்லை என்று விரும்பும் ஒருவருக்கு பொருத்துவீடு கிடைக்காதவகையில் மற்றவர்கள் திட்டங்களை காலதாமதப்படுத்துவது, இழுத்தடிப்பது, தங்கள் விறுப்பு, வெறுப்புக்களை அவர்கள் மீது திணிப்பது தவறானது. பொருத்துவீடுகளை எதிர்ப்பதற்கு இதன்பின்னால் வியாபார நோக்கம், அரசியல் இலாபம் உள்ளன எனும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இப்போது உலகில் பெரும்பாலும் அனைத்துமே வியாபார நோக்கம், அரசியல் இலாபங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றது. புனித ஆட்சி நிருவாகம் உலகில் எங்கும் இல்லை. போல் நீங்கள் அங்கே சென்றபோது படங்கள், காணொலிகள் எடுத்திருந்தால் பகிர்ந்துகொள்ளலாமே.
 6. உண்மையில் இது அங்குள்ள மக்களிடம் தனித்தனியாக கேட்டு செய்யவேண்டிய விசயம் இது. ஏன் என்றால் வாழப்போவது அவர்கள்தான். நான் சற்றுமுன் வீட்டிற்காக காத்திருக்கும் அங்குள்ள ஒருவரிடம் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டேன். அவர் தனக்கு பொருத்துவீட்டை பற்றி அதிகம் தெரியாது என்று கூறினார். ஆனால், பொருத்துவீடு நீண்டகாலம் தாக்குப்பிடிக்கமாட்டாது என்று ஆட்கள் கதைப்பதாய் கூறினார். இதனால், அரசாங்கம் தனக்கு பொருத்துவீட்டை தந்தால் தான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறினார். தான் கல்வீடு தனக்கு தரப்பட்டாலே அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார். தான் கல்வீட்டிற்காக காத்திருப்பதாய் கூறினார். அங்கேயுள்ள மக்களின் தேவைகளை அறிந்து திட்டத்தை செயற்படுத்தவேண்டும்.
 7. அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?
 8. அங்கே வாழ்விடம் தேவைப்படும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் தமக்கு பொருத்துவீடு வேண்டுமா இல்லையா என்று. அவர்களுக்கு கிடைப்பது ஒரு பிடி மண் என்றாலும் ஒரு செங்கல் மாத்திரமே என்றாலும் அதை தட்டிப்பறிப்பதற்கான உரிமையை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. பொருத்து வீடு கேட்பவர்களுக்கு பொருத்து வீடுகளை கொடுக்கலாம். கல்வீடுதான் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அதற்கான காலம் கனியும்போது கல்வீடு கொடுக்கலாம். பொருத்துவீடு தேவையில்லை என்று கூறுபவர்களுக்கு பொருத்துவீடுகளை கொடுக்கத்தேவையில்லை. எங்களில் உள்ள குறைபாடு ஒன்று என்ன என்றால் இடைக்கால தற்காலிக தீர்வுகளை நாம் விரும்புவது இல்லை. தனித்தமிழீழத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனும் மனநிலையில் இருந்த எமக்கு கடைசியில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுத்திட்டத்தையே எட்டமுடியாமல்போனது. நாங்கள் தரையில் இருந்து பத்தாம் மாடிக்கு தாவிக்குதிப்பதையே விரும்புகின்றோம். ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே செல்வது எமக்கு கசப்பாக இருக்கின்றது. இலங்கையில் ஊழல் இல்லாமல் வியாபார நோக்கம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதை யாராவது கூறமுடியுமா? பொருத்துவீடுகளின் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலன்கள், வியாபாரிகளின் இலாபநோக்கு இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்தவிசயங்கள் இல்லாமல் இலங்கையில் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் அவற்றை குறிப்பிடுங்கள். பொருத்துவீடு தீப்பிடிக்கும் என்று சிலர் கூறுகின்றீர்கள். ஆனால், ஓலைவீட்டுடன் ஒப்பிடும்போது எது விரைவில் தீப்பிடிக்கும்? குளிர், வெப்பம் பற்றிய முறைப்பாடு உண்டு. வெப்பத்திற்கு சுற்றிவர மரங்களை நடலாம். குளிருக்கு போர்வை பயன்படுத்தலாம், உடையை அதற்கு ஏற்றபடி போடலாம். வெளிநாடுகளில் நாங்கள் காணாத குளிரா? எப்படியான கொடுங்குளிருக்குள் எல்லாம் நாங்கள் மாட்டுப்பட்டு இருக்கின்றோம். -20, - 30 டிகிரி செல்சியஸ் உள்ள இடங்களில் வேலை செய்து இருக்கின்றோம். குளிருக்குள் வெளிச்சூழலில் எத்தனை அலுவல்கள் பார்க்கின்றோம். குறைபிடிப்பது என்றால்கல்வீட்டிலும் ஆயிரம் குறைகள் பிடிக்கலாம். பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும். அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம். பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.
 9. நன்றி இசை, ஆங்கிலத்தில் பொருத்துவீட்டை எப்படி அழைப்பார்கள்? இவற்றை காண்பிக்கும் யூரியூப் வீடியோ இருந்தால் போடுங்கள் பார்க்க. வெவ்வேறு நாடுகளில் உள்ள எல்லா பொருத்துவீடுகளும் ஒரேமாதிரியாகவா இருக்கும்? இந்தியாவில் பொருத்து வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளனவா? இங்கு ஏதும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் முறைப்பாடு செய்யப்பட்டுளனவா?
 10. எங்கே கனடாவில், டொரோன்டோ மாநகரில் பல்லடுக்கு மாடி பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப்பணிகளில் பங்கெடுத்த கட்டட பொறியியலாளர் இசைக்கலைஞன்? எதற்கு வம்பு என்று ஒன்றும் தெரியாததுபோல் இங்கே ஒளித்து திரிகின்றாரோ?. அவரை இங்கே இழுத்து வாருங்கள், அவரது அபிப்பிராயத்தை முதலில் பொறுமையாக கேட்போம். பின்னர் எல்லாருமாய் சேர்ந்து கும்மி பின்னி எடுக்கலாம்.
 11. இசை, இது நமது தெரிவு அல்ல, தமிழ்நாட்டு மக்களின் தெரிவு. இவரை சமூக நலத்துறை அமைச்சராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக ஏற்று க்கொள்வதால் ஒன்றும் பிரச்சனை இல்லை.
 12. அவர் தமிழ்நாடு அரசில் முன்பு சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார் என்றால் இந்தப்புதிய பொறுப்பையும் அவரால் செய்யக்கூடியதாய் இருக்கும்தானே? பெண் என்பதற்காக மட்டமாக எடைபோடக்கூடாது.