கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  10,506
 • Joined

 • Last visited

 • Days Won

  56

கிருபன் last won the day on June 25 2016

கிருபன் had the most liked content!

Community Reputation

2,031 நட்சத்திரம்

About கிருபன்

 • Rank
  வலைப்போக்கன்
 • Birthday

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  முடிவிலி வளையம்
 • Interests
  போஜனம், சயனம்

Recent Profile Visitors

5,669 profile views
 1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை எதிர்ப்போரும் - செய்ய வேண்டியது என்ன? யதீந்திரா இதுவரை சம்பந்தன் தொடர்பில் பேசப்பட்டு வந்த விடயங்கள் அனைத்தும் இவ்வாண்டில் கூட்டமைப்பின் விடயங்களாக உருமாறவுள்ளன. தொடர்ந்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் என்னும் பெயர்களை முன்னிறுத்தி விவாதங்கள் செய்துகொண்டிருக்க முடியாது. அது ஆரோக்கியமான ஒன்றுமல்ல. இதுவரை சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவந்த குற்றச்சாட்டுக்கள், அவர்கள்தான் சகல விடயங்களையும் கையாளுகின்றனர்- எனவே அவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. ஒரு வகையில் அது சரியாக இருப்பினும் கூட, அவர்களது அனைத்து முன்னெடுப்புக்களும் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், அதனை ஏற்பதா அல்லது இல்லையா என்னும் முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு தற்போது அனைவரையும் சார்த்த ஒன்றாக உருமாறியிருக்கிறது. எனவே இப்பத்தி இனி பொதுவில் கூட்டமைப்பு என்றே அழுத்திக் குறிப்பிடவுள்ளது. ஆனால் ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதான அரசியல் கூட்டொன்றின் தலைவர் என்னும் வகையில், அனைவரது செயற்பாடுகளிற்கும் இறுதியில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சம்பந்தரையே சாரும். இது ஒரு வகையில் அவரால் தவிர்த்துச் சொல்ல முடியாத ஒன்றும் கூட. அரசியல் யாப்பு தொடர்பான விடயங்கள் இம்மாதம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. விவாதம் இடம்பெறுகிறதோ இல்லையோ அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் ஏதோவொரு வகையில் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. இந்த நிலையில் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பு என்பது அதில் அங்கம் வகித்துவரும் நான்கு கட்சிகளையும் குறிக்கும். இதுவரை முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நோக்கினால், கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் சார்பில் அனைத்து முடிவுகளும் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரனாலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்த சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளுடன் ஏனையவர்கள் ஒத்துப் போவதா, இல்லையா என்னும் இறுதி முடிவை எடுப்பதற்கான சூழல் கனிந்திருக்கிறது. இனி இதிலிருந்து ஏனைய கட்சிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது முடிவுடன் உடன்படாதவர்கள் அதனை பகிரங்கமாக மக்கள் முன்னால் வைப்பதற்கான காலம் வந்துவிட்டது. வெறும் குற்றச்சாட்டுக்களை மட்டும் முன்வைத்துவிட்டு, ஏனைவர்கள் தொடர்ந்தும் நழுவிக் கொண்டிருக்க முடியாது. சம்பந்தனுடன் ஒத்துப் போகக் கூடியவர்கள் ஒத்துப் போவதும், உடன்பாடு இல்லாதவர்கள் விலகிச் செல்வதும் பிரச்சினைக்குரிய விடயமல்ல. அதுவும் ஒரு ஜனநாயக அணுகுமுறையே! அதேபோன்று சம்பந்தனும் தனது நிலைப்பாட்டை மிகவும் வெளிப்படையாக மக்கள் முன்னால் முன்வைக்க வேண்டும். அப்போதுதான், கட்சியரசியலுக்கு வெளியில் சிந்திக்கும் ஊடக தரப்பினர், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் என பலரும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதை முன்னிறுத்தி இடம்பெற்ற அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவாக, இதுவரை கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தீர்வு என்றால், அது மாகாணசபை முறைமை ஒன்றுதான். அதன் பின்னர் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டுமொரு அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றனவா? அப்படி இருப்பது உண்மையாயின் எந்தெந்த வழிகளில் அவை பயனுடையவை? அதனை ஏற்பதால் வரப்போகும் நன்மை என்ன? நிராகரிப்பதால் வரப்போகும் நன்மை என்ன? உடன்படுவதால் உனடியாகவும் நீண்டகாலத்திலும் வரப்போகும் நன்மை, தீமைகள் என்ன? அதேபோன்று நிராகரிப்பதால் வரப்போகும் உடனடி, நீண்டகால நன்மைகள் என்ன? இப்படியான கேள்விகளை முன்னிறுத்தி சிந்திப்பவர்களுக்கு கூட்டமைப்பு தெளிவான பதிலை அளிக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு முடிவிலும் நன்மை தீமை என்று இரண்டும் கலந்தே இருக்கும். நூறுவிகிதம் சாதகமான முடிவு என்று ஒன்றில்லை. அதேபோன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றும் இல்லை. அந்த வகையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தலைவர்கள் அனைவரும் தங்களின் தீர்க்கமான முடிவை அறிவிப்பதில் தொடர்ந்தும் மௌனம் சாதிக்க முடியாது. அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் அது எவ்வாறு வடிவம் பெறப் போகிறது என்பது வெளித்தெரியாவிட்டாலும் கூட, அதன் தோற்றம் தெளிவாகவே தெரிகிறது. அதாவது, ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படப் போவதில்லை. அதேபோன்று வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை. ஒற்றையாட்சி இல்லையெனின் சமஸ்டி இல்லையென்பதை அழுத்திக் கூற வேண்டியதில்லை. எனவே வரவுள்ள அரசியல் தீர்வில் மேற்படி விடயங்களை கழித்தே விடயங்களை நோக்க வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது – அதாவது கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாடு? இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பின் முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உண்டு. ஒரு இடைக்கால ஏற்பாடு என்னும் அடிப்படையில் உடன்பட்டுச் செல்வது அல்லது முற்றிலுமாக நிராகரித்துவிட்டு வெளியேறுவது. வெளியேறுவது என்று முடிவெடுத்தால் அது அர்த்தமுள்ள வெளியேற்றமாக இருக்க வேண்டும். தற்போது கூட்டமைப்பின் வசமிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் தலைவர் பதவி, மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிகள் என அனைத்திலிருந்தும் வெளியேறுவதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாது வெறும் வாய்ச்சொல் வெளியேற்றமாக இருக்கக் கூடாது. அப்படியொரு வெளியேற்றத்திற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றதா? கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தயாராக இருக்கின்றனவா? கூட்டமைப்பின் நிலைமை இதுவென்றால், கூட்டமைப்பின் முக்கியமாக சம்பந்தனின் நகர்வுகளை விமர்சிக்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் அவருக்கு ஆதரவானவர்களும் ஒரு தீர்க்கமான முடிவை அறிவிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது. இனியும் வெறுமனே அறிக்கைகளை வாசித்துக் கொண்டும் மேடைகளில் பேசிக்கொண்டும் இருக்க முடியாது. ஏனெனில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது மறுபுறமாக கொழும்பு விடயங்களை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான வழிகள் தொடர்பில் சிந்தித்து அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தனை எதிர்க்கும் அரசியல் தரப்பினருக்குண்டு. எனவே அந்த வகையில் இது அனைவரும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய காலமாகும். தென்னிலங்கையின் நிலைமை 30 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறிருந்ததோ அவ்வாறுதான் தற்போதும் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை அனைத்துமே தென்னிலங்கையை ஒரு வழிக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள்தான். இதில் விடுதலைப் புலிகளின் வழி, தென்னிலங்கையை முற்றிலுமாக தோற்கடித்து, தங்கள் இலக்கை அடைவதாக இருந்தது. இந்த பின்புலத்தில் நோக்கினால், 30 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு ஒரு தீர்விற்கு அனைத்து சமூகங்களின் ஆதரவும் தேவையென்னும் வாதத்தை கொழும்பு முன்வைத்ததோ அவ்வாறானதொரு வாதத்தைத்தான் தற்போதும் அது முன்வைக்கவுள்ளது. 30 வருடங்களுக்கு முன்னர் மாகாண சபை தீர்வு யோசனை முன்வைக்கப்பட்ட போது கூட, அது ஒரு இலங்கை தழுவிய தீர்வு யோசனையாகவே முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தங்களுக்கு பணிந்து வடக்கு – கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கும் முடிவுக்கு கொழும்பு இணங்கியது. ஆனால் இன்று அந்த இந்திய அழுத்தமும் இல்லை. இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில்தான் தமிழர் அரசியல் 2017இல் வந்து நிற்கிறது. இவை அனைத்தையும் கூட்டியும் கழித்தும் விடயங்களை தொகுப்பதாயின், பின்வரும் மூன்று தெரிவுகள் தொடர்பிலேயே சிந்திக்க முடியும். ஒன்று, ஒருவேளை சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ஒரு இடைக்கால ஏற்பாடு என்னும் வகையில் தற்போது சில விடயங்களை ஏற்றுக் கொள்ளுவதென்று முடிவெடுத்தால் அதனுடன் ஏனைய கட்சிகள் ஒத்துப்போவது. இரண்டு, சம்பந்தனின் முடிவை நிராகரித்து, முன்னெடுப்புக்களிலிருந்து வெளியேறுவது – வெளியேறுவது என்பது இப்பத்தியாளர் மேலே குறிப்பிட்டவாறு அதன் முழுமையான அர்த்தத்தில் - அதனோடு வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் வடக்கு முதலமைச்சர் உள்ளடங்கலாக, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவது. இதன் மூலம் புதிய அரசியல் யாப்பை முற்றிலும் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் என்னும் உண்மையை வெளிப்படுத்துவது. மூன்று, அவ்வாறு வெளிப்படுத்தியதோடு நிற்காமல், முதலமைச்சர் மற்றும் ஏனைய அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வடக்கு கிழக்கு தழுவிய வகையில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பது. ஆரம்பத்தில் இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு தரக்கூடிய நிலையிருக்காது எனினும் தலைவர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து பின்னர் மக்கள் பெருந்திரளாக இணைந்து கொள்ளக்கூடும். இதில் எதனை தலைவர்கள் தெரிவு செய்யப் போகின்றனர்? இந்த இடத்தில் பிறிதொரு விடயத்தையும் இப்பத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறது – ஒருவேளை தென்னிலங்கை அரசியல் குழப்பமடைந்து, மகிந்த மீளெழுச்சி பெற்றால் இவை அனைத்துக்கும் வேலையில்லாமலும் போகலாம் அல்லது மகிந்தவின் அணியை சமாளிக்க முடியாமல் மைத்திரி கையை விரிக்கலாம். அத்துடன் அரசியல் தீர்வு விவகாரம் கிடப்பிற்குச் செல்லலாம். இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்ந்தும் ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மேற்குறிப்பிட்ட விடயங்களில் எதுவும் நிகழலாம். http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=251aa324-f600-411f-bf82-2babda0ca3f7
 2. பின்லாந்து – இரசியாவின் வாசல் JULY 31, 2016 / மீராபாரதி பின்லாந்து – இரசியாவின் வாசல் பின்லாந்திற்கு (finland) காலை எட்டு மணிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தோம். நோர்வேஜியன் விமானம் மிகவும் மலிவாக பயணச் சீட்டு கிடைத்தது. குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டிருப்பின் பயணச் சீட்டை மிக மலிவாக வாங்கலாம். ஐரோப்பாவிற்குள் நோர்வேஜியன், ரையன் ஏயார் போன்ற சில விமானங்கள் முன்கூட்டி பதிவு செய்தால் மிக மலிவாக பயணச் சீட்டுகளை தருகின்றார்கள். இல்லாவிடினும் மற்ற விமானங்களுக்கான விலைகளுடன் ஒப்பிடும் பொழுது மலிவானது. விமான நிலையத்திலிருந்து புகையிரதமும் பஸ்சும் உள்ளது. நாம் புகையிரதத்தை எடுத்தோம். புகையிரத நிலையத்தில் நமது சுமைகளை 4 ஈரோக்கள் கட்டி பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்துவிட்டு வெளியே வந்தோம். நமது முதல் வேலை இரசிய தூதுவர் ஆலையத்திற்கு செல்வது. ஆனால் எப்படிச் செல்வது எனத் தெரியவில்லை. உல்லாசப் பயணிகளுக்கு தகவல்கள் கூறுவோர் வாசலில் நின்றனர். அவர்களிடம் கேட்டபோது வரைபடத்தையும் தந்து எங்கே உள்ளது எப்படி போக வேண்டும் என்பதையும் காண்பித்தார்கள். கையில் வரைபடம் இருந்ததால் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்துச் சென்றோம். அங்கு சென்றபோது அவர்கள் நம்மை உள்ளே விடமால் முடிய வாசலின் சுவரிலிருந்த தொலைத் தொடர்பினுடாக உரையாடினார்கள். முன்கூட்டிய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது என்றார்கள். நமது நல்ல காலம் ஆங்கிலம் தெரிந்த இரசியர்கள் உள்ளேயிருந்து வந்தார்கள். அவர்களிடம் எங்களை இரசிய விசா நிலையத்திற்கு (visa center) செல்லச் சொல்லி தொலைத் தொடர்பிலிருந்தவர் கூறினார். இரஸ்ய விசா எடுக்கும் நிலையம் காம்பி (Kamppi) என்ற இடத்தில் இருக்கின்றது. வரைபடத்தின் உதவியுடன் காம்பிக்கு நடந்து சென்றோம். அது ஒரு மோல் (Mall). நேற்றிரவு வாங்கிய மூன்று பன்களை அதிகாலையிலையே சாப்பிட்டுவிட்டோம். இப்பொழுது பசித்தது. ஒரு கடையில் மரக்கறி சன்விச் ஒன்றை ஐந்து ஈரோக்களுக்கு வாங்கிச் சாப்பிட்டோம். அதன்பின் இரசிய விசா நிலையத்திற்கு சென்று விசாவுக்குரிய விபரங்களை கேட்டோம். அவர்கள் விளக்கமாக பல விடயங்களைக் கூறினார்கள். நாம் சகல ஆவணங்களையும் கொடுத்தால் 7 வேலை நாட்களில் விசாவைப் பெறலாம் என்றார்கள். ஒரு ஆளுக்கு 81 ஈரோக்கள். இதில் 21 ஈரோக்கள் இவர்களது சேவைக்கானது. பாஸ்போட் மற்றும் விண்ணப்பத்தை தவிர நாம் தங்குகின்ற ஹோட்டலிலிரு்ந்து ஒரு உறுதிப் பத்திரமும் வழங்க வேண்டும். ஆனால் நாம் விசாவைப் பெறாமல் எந்த ஒரு ஹோட்டலையும் இன்னும் பதிவு செய்யவில்லை. மேலும் நாம் அங்கு வேலை செய்வதற்காக ஒரு இடத்தில் தங்கப் போகின்றோம். அவர்கள் தர மாட்டார்கள். ஏனெனில் தனிநபர்களிடம் இவ்வாறன உறுதிப் பத்திரத்தை வாங்கினால் குறிப்பிட்ட தனிநபர்களுக்கு அரசாங்கத்தால் பிரச்சனைகளை உருவாகலாம். இப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக இணையத்தில் பல சேவைகள் இருக்கின்றன. அதில் நமது விபரங்களை கொடுத்தால் நாம் ஏதோ ஒரு ஹோட்டலில் தங்குவதாகவும் கூறி அதற்கான உறுதிப் பத்திரத்தை ஒரு இலக்கத்துடன் தருவார்கள். இதற்காக அவர்கள் ஒருவருக்கு 30 ஈரோக்கள் பெறுகின்றார்கள். இது ஒரு வகையான சுத்துமாத்துதான். இதை இரசிய அரசாங்கமும் அறியும் என்றே நம்புகின்றேன். ஆனால் நமது சந்தேக மனதுக்கு இதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. பணத்தைக் கட்டியபின் ஏமாத்தி விட்டால் என்ன செய்வது? நாம் இரசிய விசா நிலையத்தில் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தபோது இரண்டரை மணி. இந்தியன் உணவகம் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்து சாப்பிட்டோம். நாம் விரும்பிய கறிகள் இல்லாவிட்டாலும் ஒன்பது ஈரோக்களுக்கு புவே (Buffet) இருந்தது. வயிறு நிறைய நன்றாக சாப்பிட்டோம். இன்று இரவு நாம் தங்கும் இடத்திற்கு செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று மாலை நாம் வரலாம் வந்து ஏற்ற முடியுமா என தகவல் அனுப்பினோம். அதேநேரம் அவர்களிடத்திற்கு போவத்திற்கு இருவருக்கும் சேர்த்து 50 ஈரோக்கள் செலவாகும். மீண்டும் விசா எடுக்க வருவதானால் மேலும் போய் வர என 100 ஈரோக்களை செலவு செய்ய வேண்டும். ஆகவே இன்று இங்கு தங்கி நாளை விசாவிற்கு விண்ணப்பித்து விட்டு செல்வோம் என முடிவு செய்தோம். நாம் செல்லவிருக்கின்ற இடத்திற்கும் தகவல் அனுப்பினோம் நாளை மாலை வரலாம் என தகவலை அனுப்பிவிட்டு உல்லாசப் பயணிகள் தகவல் (Tourist information center) நிலையத்திற்கு சென்றோம். இவர்கள் சிறப்பான பங்களிப்பை செய்தார்கள். நாம் தங்கும் இடத்தில் உள்ளவர்களுடன் நேரடியாக உரையாடினால் நல்லது என்பதால் தொலைபேசியைப் பயன்படுத்தலாமா எனக் கேட்டோம். அதற்கு 3 ஈரோக்கள் என்றார்கள். அதேநேரம் 7 ஈரோக்களுக்கு சிம் காட் ஒன்று உள்ளது. அதைப் பயன்படுத்தியும் கதைக்கலாம் என்றார்கள். நாம் சிம் காட் வாங்குவதே நல்லது என நினைத்து அதை வாங்கினோம். இப்பொழுது எங்களுக்கு இன்னுமொரு மூளை கிடைத்த மாதிரி. நாம் தங்கப் போகின்ற இடத்திற்கு நமது புதிய தொலைபேசி இலக்கத்தை அறிவித்து விட்டு இங்கு தங்குவதற்கான ஒரு ஹோஸ்டலைத் தேடினோம். இதுவே கொஞ்சம் விலை கூடத்தான் ஆனால் வேறு வழியில்லை. அதைப் பதிவு செய்து விட்டு கடற்கரை ஓரமாக நடந்தோம். சின்ன சின்ன கடைகள் திறந்து காலையிலிருந்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் இப்பொழு மூட ஆரம்பித்தார்கள். நாம் அதைப் பார்த்துக் கொண்டு பெரிய தேவாலையம் ஒன்றைப் பார்க்கச் சென்றோம். அப்படியே நடந்து புகையிரநிலையத்தில் நமது பொதிகளையும் எடுத்துக் கொண்டு தங்குமிடத்திற்கு சென்றோம். தங்குமிடம் மாணவர் ஹோஸ்டல். இப்பொழுது விடுமுறைக்காலமாததால் உல்லாசப் பயணிகள் தங்குவதற்குப் பயன்படுத்துகின்றார்கள். சுமைகளை அறையில் வைத்துவிட்டு மீண்டும் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் போனோம். இப்பொழுது நகரம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகிக் கொண்டிருக்கின்றது. ஏழு மணியான போதும் வெளிச்சம் இருந்தபோதும் மனிதர்கள் குறைவாகவே இரு்ந்தார்கள். சில இடங்களில் மட்டும் இசைஞர்கள் இசைத்து நகரத்தையும் மாலைப் பொழுதையும் அழகாக்கிக் கொண்டிருந்தார்கள். நாம் ஒரு பீசா மற்றும் பலாவல் கடையைக் கண்டுபிடித்தோம். இன்று மாலை அனைத்தும் 5 ஈரோக்கள் என்றார்கள். ஒரு பீசாவையும் மூன்று ஈரோக்களுக்கு உருளைக்கிழங்குப் பொரியலையும் வாங்கினோம். நல்ல சாப்பாடு. சாப்பிட்டு விட்டு மெல்ல மெல்ல நடந்து இரவு தங்குமிடத்திற்கு சென்றோம். அறையில் வந்து இரசியாவில் தங்குவதற்கான உறுதிப் பத்திரத்திற்கு (visahouse) இணையத்தினுடாக விண்ணப்பித்தோம். பணத்தைக் கட்டிய இரண்டு நிமிடங்களில் நாம் தங்கும் ஹொட்டலின் பெயர், விலாசம். நம்மை அழைப்பவர்கள், மற்றும் அதற்கான உறுதி எண் என்பவற்றை அனுப்பி இருந்தார்கள். (உண்மையில் இந்த ஹொட்டலில் நாம் தங்கப் போவதில்லை. வெறுமனே விசாவிற்கான பொய்யான தகவல்கள்). இது எந்தளவு நம்பகத்தன்மை என்பது தெரியாததால் ஒருவரின் பெயரில் மட்டுமே பதிவு செய்தோம். மற்றவரின் பெயரை சேர்த்தபோது அது இன்னுமோரு விண்ணப் படிவத்தை நிரப்பும்படி கூறியது. அதற்கு மேலும் பணம் கட்ட வேண்டும் என்பதால் நாளை விசா நிலையத்தில் கதைத்துவிட்டு வி்ண்ணப்பிக்கலாம் என முடிவு செய்தோம். இரவு தாமதாக படுத்ததாலும் நேற்று அதிகாலையிலையே எழும்பியதாலும் நல்ல நித்திரை கொண்டு காலை ஒன்பது மணிக்குத் தான் எழும்பினோம். எழுப்பி குளித்து விட்டு சுப்பர் மார்க்கட்டில் பனிசையும் தேநீரையும் வாங்கி சாப்பிட்டுக் குடித்துவிட்டு விசா நிலையத்திற்கு சென்றோம். விசா நிலையத்தில் விசாரி்த்தபோது ஒவ்வொருவரும் தனித்தனியாக உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்றார்கள். ஆகவே மீண்டும் இணையத்தினுடாக விண்ணப்பிக்க ஐந்து நிமிடங்களில் உறுதிப் பத்திரம் மின்னஞ்சலுக்கு வந்தது. இரசியாவில் இரண்டு நகரங்களுக்குப் போகின்றோம். ஆகவே இரண்டு நகரங்களிலும் தங்குமிடம் தொடர்பான தகவல்களை விசா விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்கள். நேற்றிரவு விண்ணப்பித்தபோது ஒரு இடத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். ஆகவே அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி மற்ற இடத்தையும் சேர்த்து அனுப்ப முடியுமா எனக் கேட்க சில நிமிடங்களில் புதிய உறுதிப் பத்திரம் மின்னஞ்சலுக்கு வந்தது. இது நிம்மதி அளித்தபோதும் விசா வி்ண்ணப்பத்தை நிரப்புவது எரிச்சலைத் தந்து. நாட்டின் அதிபர் முன்னால் (கேஜிபி) உளவுத்துறைத் தலைவராக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டிற்கு விருந்தாளிகளாக உல்லாசப் பயணம் வருபவர்களை இப்படி கேள்வி கேட்டு துன்புறுத்த வேண்டுமா? நாம் ஏற்கனவே செய்த இரண்டு வேலை இடங்களின் சகல விபரங்களையும் கேட்டிருந்தார்கள். பல்கலைக்கழக படிப்பும் படித்த இடங்களின் விலாசமும். மற்றும் கடந்த பத்து வருடங்களில் நாம் சென்ற நாடுகளின் விபரங்களையும் கேட்டிருந்தார்கள். இதைவிட வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்கள், சிறைச் சாலை சென்ற விபரங்கள், குற்றம் புரிந்த விபரங்கள், அம்மா அப்பாவின் விபரங்கள். இதை எல்லாம் எழுதி முடித்து அவர்களிடம் சமர்பித்து உறுதி செய்ய இரண்டறை மணியாகிவிட்டது. ஒருவகையான மன அழுத்தத்தை உருவாக்கியது. இப்பொழுது, “அப்பாடா” பெரிய மூச்சொன்றை விட்டுக்கொண்டு வெளியே வந்து கட்டிடத்தின் முன்னால் இருந்த சீன உணவகத்தில் மரக்கறி முட்டை கலந்து செய்த சோற்றுப் பார்சல் ஒன்றை வாங்கிக் கொண்டுவந்து வெளியே இருந்து சாப்பிட்டோம். காம்பியின் கீழ் தளத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு சென்று நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பஸ்சிற்குப் பதிவு செய்தோம். நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பஸ் மாலை 4.30ற்கு இரு்ந்தது. அதற்குள் நாமிருந்த ஹொஸ்டலுக்குச் சென்று நமது சுமைகளைத் தூக்கி கொண்டு வரவேண்டும். இதை எல்லாம் செய்து விட்டு நிம்மதியாக பஸ் நிலையத்திற்கு 4 மணிக்கு வந்தோம். இதற்கிடையில் கடையில் எதாவது சாப்பிட வாங்கி வர Shirley சென்றார். பஸ் 4.25 வந்து அனைவரும் ஏறிவிட்டனர். Shirleyயைக் காணவில்லை. எனக்குப் பதட்டமாகிவிட்டது. ஏற்கனவே சுமைகளை பஸ்சிற்குள் வைத்துவிட்டேன். ஆனால் பற்றுச்சீட்டுகள் shirleyயிடம். அவர் மெதுவாக நடந்து வந்தார். ஏன் தாமதம் என்று கேட்டதற்கு தான் இன்னும் நேரமிருப்பதாக நினைத்ததாக கூறினார். ஒருவாறு நிம்மதியாக பஸ்சில் ஏறி உட்கார்ந்து நமது அடுத்த புதிய அனுபவத்தைப் பெறுவதற்காக கிராமத்தை நோக்கிப் பயணித்தோம். அவர்களும் இன்று வரும்படியும் தாம் சந்தியில் வந்து ஏற்றுவதாகவும் நேற்று உறுதி செய்தார்கள். சரியாக ஒர வாரத்தின் பின்பு நமக்கு விசா கிடைத்ததாக உறுதி செய்தார்கள். ஒரு காலத்தில் கனவு கண்ட ஒரு நாட்டிற்கு செல்வது உறுதியாகியது. அடுத்த பதிவில் பின்லாந்தில் நமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்வோம். https://ajourneytowardssun.wordpress.com/2016/07/31/பின்லாந்து-இரசியாவின்/
 3. ஏன் பேலியோ எல்லாருக்கும் சரிப்படாது ஆர். அபிலாஷ் அனைவருக்கும் பேலியோ பொருந்தாது. என் தோழி ஒருவருக்கு நீரிழிவு உண்டு. அவர் பேலியோ உணவை உண்டதில் அவருக்கு சர்க்கரை அளவு வெகுவாய் குறைந்து மயக்கம் போடும் நிலைக்கு சென்று விட்டார். அதற்கு முக்கிய காரணம் அவர் தன் உடல்நிலை என்ன, அதற்கு போதுமான உணவு எவ்வளவு என்பது குறித்து போதுமான ஆய்வு செய்யவில்லை. தமிழில் பேலியோ குறித்து வந்துள்ள சில நூல்கள், கட்டுரைகள் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்கின்றன. ஆனால் ஆங்கிலத்தில் நான் படித்த மட்டிலும் பழங்களை நிச்சயம் உண்ணலாம். தமிழ் பேலியோ நிபுணர்களை கராறாய் பின்பற்றின தோழி வெறுமனே காய்கறிகளை மட்டும் உண்டார். அவரால் அதிகமாய் அசைவம் உண்ண முடியாது. இதனால் அவரது உணவு கலோரிகள் மிகவும் குறைந்து, ஆரோக்கியமற்றதாக மாறி விட்டது. மற்றொரு நண்பரும் இதே தவறை செய்தார். முதல் தவறாக (படிப்படியாய் அன்றி) தடாலடியாக பேலியோவுக்கு மாறினார். இரவு அவர் வெறும் வெண்ணெய் கட்டி மற்றும் காய்கறி உணவை எடுத்துக் கொண்டார். இதனால் அவருக்கு வாயுத்தொல்லை அதிகமாகி விடிகாலையில் கடும் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தார். மாரடைப்பு வந்து விட்டதென அஞ்சி அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெறும் வாயுத்தொல்லை தான் என உறுதிப்படுத்தினர். அதனால் நண்பர் இனிமேல் பேலியோ விளையாட்டெல்லாம் வேண்டாம் என ஒதுங்கி விட்டார். ஓவியர் சண்முகவேல் இதே போல் பேலியோ உணவை சரிவர புரிந்து கொள்ளாமல் பின்பற்றியதில் அவருக்கு நரம்பு கோளாறு ஏற்பட்டு மிகவும் நொடிந்து போனதாய் கேள்விப்பட்டேன். பேலியோவை பொறுத்த மட்டில் customization என்பது மிக முக்கியம். அதாவது யாரோ கொடுக்கிற உணவு அட்டவணையை நாம் கண்ணை மூடி பின்பற்றக் கூடாது. நாமாக நிறைய படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இறுதியாக நம் சுவைக்கு, உடல் நிலைக்கு எது பொருந்தும் என நாமாக தான் முடிவு செய்ய வேண்டும். என் நண்பர் ஒருவர் பேலியோவை முன்னெடுக்கும் ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றார். அவர் கொடுத்த் அட்டவணைப்படி உண்ணத் துவங்கினார். அது அவருக்கு தோது படவில்லை என்பது மட்டுமல்ல உடம்பிலும் சிக்கல்களை ஏற்படுத்தின. எப்படி ஆண்டிராய்ட் போனை நம் தேவைக்கு ஏற்றபடி customize செய்கிறோமோ அதே போல் பேலியோவையும் வடிவமைக்கலாம். உதாரணமாய், பேலியோவில் பால் உணவு கூடாது. ஆனால் எனக்கு பால் பிடிக்கும். அதனால் நான் பால் எடுத்துக் கொள்கிறேன். காலையிலும் மதியமும் ஏன் இரவிலும் கூட கறி, மீன், முட்டை உண்ண பேலியோ நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் அது முடியாது. அதனால் நான் ஒரே வேளை தான் கறி சாப்பிடுகிறேன். மீதி நேரம் காய்கறி, பழங்கள் உண்கிறேன். எனக்கு சிறுவயதில் இருந்தே பழங்கள் மிக பிடிக்கும். தேங்காயும் பிடிக்கும். ஆக, இந்த இரண்டையும் உணவில் அதிகமாய் சேர்க்கிறேன். முடிந்தளவு காய்கறிகளும் உண்கிறேன். பழங்களிலும் எவை எவை என் ரத்த சர்க்கரையை பாதிக்கும் என சோதித்து அறிந்து வைத்து அவற்றையே உண்கிறேன். மதியம் உண்பதற்கு எனக்கு தேங்காயும் பழங்களுமே தாராளம். ஆனால் மற்றொருவருக்கு இவை பிடிக்காமல் போகலாம். அவர் தன் சுவைக்கு, உடல்வாகுக்கு ஏற்றபடி உணவை வடிவமைக்க வேண்டும். பேலியோ உணவுமுறை கீட்டோஜெனிக் டயட் எனப்படுகிறது. அதென்ன கீட்டோஜெனிக்? பொதுவாக நாம் உண்ணும் உணவு சர்க்கரையாக மாறும். அதன் பிறகு அது ஆற்றலாக மாற்றப்படும். ஒருவேளை நாம் விரதம் இருந்தால் உடம்பு கொழுப்பை ஆற்றலாக மாற்ற முயலும். அப்போது உபவிளைவாக தோன்றுகிறவை தான் கீட்டோன். இப்படி கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்தும் முறையை தான் ketogenic டயட் என்கிறோம். பேலியோவில் நேரடியான மாவுச்சத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. காய்கறி, பழங்கள் ஆகியவற்றில் உள்ள சத்துகள், கறியில் உள்ள புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடல் கீட்டோஜெனிக் முறையில் ஆற்றலாக மாற்ற வேண்டும். அதாவது உணவில்லாத வேளைகளில் உடம்பு செயல்படும் முறைக்கு அதை நிரந்தரமாக மாற்றுகிறோம் (போனில் power saving mode போல). இதன் ஒரு பலன் என்னவென்றால் ரத்த சர்க்கரை அதிரடியாய் ஏறி இறங்கி சிக்கல் ஏற்படுத்தாது. இது நீரிழ்வு நோயாளிகளுக்கு அருமையான விசயம். ரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரே சீராக இருக்கும். உடல் பருமன் கொண்டோருக்கும் கூட இது பலன் தரும். உடல் தன் ஆற்றலுக்காய் கொழுப்பை கரைக்கும் போது இயல்பாகவே எடை குறையும். பேலியோவில் உடல் எடை குறைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மாவுச்சத்து மிக்க தானிய உணவு ஒருவித போதை தரக் கூடியது. சுவையான சாம்பார் ஊற்றி ஒரு தட்டு சோறு சாப்பிடுகிறீர்கள். அடுத்து நல்ல வாசனையுடன் ரசம் வருகிறது. இன்னொரு கரண்டி சோறு சாப்பிடத் தோன்றும். பாயசம் வருகிறது. பிரமாதம். இன்னொரு கிண்ணம் சாப்பிட ஆசை ஏற்படும். இப்படி தானிய உணவு நம்மை மேலும் மேலும் கூடுதலாய் சாப்பிட தூண்டும். அது மட்டுமல்ல வயிறும் விரிந்து கொண்டே போகும். ஆனால் புரத உணவு அப்படி அல்ல. நீங்கள் என்னதான் சுவையாக உணர்ந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சிக்கனை தின்ன முடியாது. பழங்களும் அப்படியே. ஐந்து லட்டு முழுங்கலாம். பத்து இட்லியை சூடாய் சட்னியுடன் தின்னலாம். வயிறு இன்னும் கொடு என கேட்கும். ஆனால் ஐந்து ஆப்பிள்களை சேர்ந்தாற் போல் தின்ன முடியுமா? இரண்டு சாப்பிட்டாலே வெறுத்து விடும். பேலியோ உணவு அதன் இயல்பிலேயே போதையானதோ ஒரு பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்குவதோ (addictive) அல்ல. அளவாகத் தான் உண்ண முடியும். அது மட்டுமல்ல, பேலியோ பழகின பின் எனக்கு இப்போது தானிய உணவுகளைக் கண்டால் எச்சில் ஊறுவதில்லை. இனிப்பை யாராவது வழங்கினால் கூட கொஞ்சம் சுவைத்ததும் வயிறு வேண்டாம் என்கிறது. முன்பு வெகுசுவையாய் நான் கருதிய பல உணவுகள் மீது இப்போது ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. நானாகவே வெறுத்து ஒதுக்கவில்லை. என் நாவே அவற்றை மறுக்கிறது. சுவை என்பது முழுக்க நம் பழக்கங்களால் கட்டமைக்கப்பட்டது தானே! இதனால் தொடர்ந்து பேலியோவை பின்பற்றுகிறவர்கள் உடற்பயிற்சி இல்லாமல் கூட இளைத்து விடுவார்கள். ஆனால் ஏற்கனவே ஒல்லியாக இருப்பவர் பேலியோவுக்குள் வரலாமா? இது சற்று சிக்கலானது. அவர்கள் தம் உடல் தேவைக்கு ஏற்ப சரியான அளவு உண்ண வேண்டும். ஏனென்றால் உடம்புக்கு பேலியோ உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் போதுமானதாக இல்லாவிட்டால் கரைப்பதற்கு உடம்பில் போதுமான கொழுப்பு இருக்காது. புத்தாண்டு இரவில் உயிர்மையில் உணவருந்திக் கொண்டிருக்கும் நண்பர் விநாயக முருகனை கண்டேன். பிரியாணியை புரட்டி போட்டு எடுத்துக் கொண்டிருந்தார். “நீங்க எப்போ பேலியோவை கை விட்டீங்க?” என கேட்டேன். அவர் ”சமீபமாக” என்றார். அவர் வெகுவாக எடையை குறைத்து விட்டார். (ஏற்கனவே அவருக்கு நடுவாந்தரமான எடை தான்.) இப்போது ஜிம்மில் எடை தூக்கி பயிற்சி செய்வதால் பேலியோ உணவு போதுமானதாக இல்லை, அதனாலே தானிய உணவுக்கு மீண்டதாய் சொன்னார். இது மிகச்சரியான அணுகுமுறை. அவர் தன் உடலுக்கு ஆற்றல் எவ்வளவு தேவை என புரிந்து அதற்கு ஏற்றாற் போல் உணவையும் தீர்மானிக்கிறார். உணவைப் பொறுத்த மட்டில் பிடிவாதம் கூடாது. நம் தேவைகளே நாம் பேலியோவில் இருக்கிறோமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே ரத்தக்கொழுப்பு உள்ளவர்கள் பேலியோவுக்குள் வரலாமா? அவர்கள் மிகுந்த கவனம் காட்ட வேண்டும். கொழுப்புணவை குறைத்து, புரத, காய்கறி, பழ உணவுகளை அதிகப்படுத்த வேண்டும். ரத்த பரிசோதனை செய்து பேலியோவினால் ஏதாவது சிக்கல் ஏற்படுகிறதா என பார்க்க வேண்டும். இதையே மாரடைப்பு வியாதிக்காரர்களுக்கும் சொல்லலாம். சமீபத்திய ஆய்வுகள் நமது ரத்த கொழுப்புக்கு காரணம் கொழுப்புணவு அல்ல என வலியுறுத்துகின்றன. நாம் சர்க்கரை (மாவு) சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்பதனால் தான் நமது ரத்த கொழுப்பு அதிகமாகிறது. அதாவது வாழைக்காய் சிப்ஸை விட, வெண்ணெயை விட அரிசி, கோதுமை, மைதா மற்றும் கோக், பெப்ஸி ஆபத்தானவை. இவை தான் உடம்பில் சென்று கொழுப்பாய் மாறி தமனிகளை அடைக்கின்றன. ஆக, மாரடைப்பு கோளாறு கொண்டவர்களுக்கு கூட பேலியோ உதவும் என்றே தோன்றுகிறது. முக்கியமாய், பேலியோ அனைவருக்கும் ஆனது அல்ல. சிலர் உடல்வாகுக்கு அது ஒவ்வாமல் ஆகலாம். அவர்கள் தவிர்ப்பது நல்லது.அவரவர் தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்த வேண்டும். உடல்வாகு, வியாதிகள், சுவைக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப இவ்வுணவு முறையை வடிவமைக்க வேண்டும். முக்கியமாய், அடுத்தவர் உணவு அட்டவணையை கண்மூடித்தனமாய் நாம் பின்பற்றுதல் ஆகாது. பேலியோ உணவு நம் மனச்சோர்வுக்கு நல்லது. ஆற்றலை பெருக்கி நம் இயல்பான உற்சாகம் வடியாமல் பார்த்துக் கொள்கிறது. இது எப்படி என அடுத்த பதிவில் சொல்கிறேன். http://thiruttusavi.blogspot.co.uk/2017/01/blog-post_1.html?m=1
 4. முப்பது வருடங்கள் மாத்திரமே இருக்கக்கூடிய பொருத்துவீடுகளை விட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு நல்ல சுவாத்தியமான வீடுகளை குறைந்த செலவில் அமைக்கலாம். அப்படி இருந்தும் உருக்கிலான பொருத்து வீடுகளை அமைப்பதால் லாபமீட்டுபவர்கள் இந்தத் திட்டத்தில் முன்னின்று செயற்படும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும்தான். வீடுகள் முப்பது வருடம் நிலைக்குமா என்பதும் சந்தேகமே. பொருத்துவீடுகள் பற்றி மாற்றம் இணையத்தில் வந்த கட்டுரை ஒன்றை பல மாதங்களுக்கு முன்னரே இணைத்திருந்தேன். http://maatram.org/?p=4315
 5. உறைப்பான செத்தல் மிளகாய்க்கொட்டை போடுவதில்லையா?🤔
 6. உயர்தர தேர்வில் சித்தி எய்தி சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். பின் தங்கிய பிரதேசங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் இருந்து பல மாணவர்கள் சாதனை படைத்தது பெருமையாக விடயம்.
 7. நான் பேலியோவுக்குள் வந்த கதை - ஆர். அபிலாஷ் நான் கடந்த சில மாதங்களாக பேலியோவை பின்பற்றி வருகிறேன். என் நோக்கம் எடை குறைப்பு அல்ல. (ஆனாலும் சில கிலோக்களை இந்த காலகட்டத்தில் குறைத்து விட்டேன் தான், அதுவும் உடற்பயிற்சி இல்லாமல்.) பத்து வருடங்களாக நீரிழிவுடன் போராடி வருகிறேன். இந்த வருடங்களில் மருந்துகளும் உடற்பயிற்சியும் காப்பாற்றாத நிலையில், பேலியோ உணவு எனக்கு அபாரமாய் உதவியது. என் ரத்த சர்க்கரையை வேறென்றுமே சாத்தியப்படாத ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மருந்துகளை வெகுவாக குறைத்து விட்டேன். இதை ஒரு அற்புதம் என்று தான் என்னளவில் சொல்வேன். என்னுடைய நீரிழிவை brittle diabetes என்பார்கள். அதாவது ரத்த சர்க்கரை அளவு ஒன்று மிக குறைவாக ஆகி 40க்கு கீழ் செல்லும். அல்லது எகிறி 400ஐ தொடும் (ஆரோக்கியமான அளவு 120-180 வரை). மாத்திரை, இன்சுலின் என் சர்க்கரை அளவு நிலையாக வைக்க உதவவில்லை. எனக்கு brittle diabetes உடன் dawn phenomenon எனும் சிக்கலும் உண்டு. அதாவது விடிகாலை என் ரத்த சர்க்கரை தானாக எகிறும். நான் உணவே எடுக்காத போதும் என்னை மீறி நிகழும் பிரச்சனை இது. இதை சமாளிக்க நான் இரவு முழுக்க நீடிக்கும் நீண்ட வேளை இன்சுலின் எடுத்து வந்தேன். இந்த இன்சுலின் என் சர்க்கரை அளவை விடிகாலையில் சீராக வைக்கும். ஆனாலும் காலை உணவின் போது என் சர்க்கரை அளவு மீண்டும் ஹை ஹம்ப் அடிக்கும். இதனால் நான் காலையில் மிக அதிகமாய் இன்சுலின் (60-70 யூனிட் வரை) எடுத்து விட்டு குறைவான கலோரிகள் கொண்ட ஓட்ஸ் போன்ற உணவை எடுத்து வந்தேன். இந்த அளவு அதிக இன்சுலின் பகல் முழுக்க என் ரத்த சர்க்கரை தேவைக்கு அதிகமாய் அளவை குறைத்தபடியே வரும். இதனால் நாள் முழுக்க பசியும் அசதியுமாய் இருப்பேன். விளைவாக எதையாவது சாப்பிட்டபடி இருப்பேன். இன்சுலின் பசியை தூண்டுவதுடன் எடையையும் அதிகரிக்க வைக்கும். 24 மணிநேரமும் பசியில் இருக்கிறீர்கள். அதை தணிக்க அதிகமாய் உண்டால் ரத்த சர்க்கரை எகிறும். இது தான் ஐந்து வருடங்களாய் என் விதியாக இருந்தது. ஊசி முனையில் தலைகீழாக தவமிருக்கும் நிலை அது. என் பிரச்சனை இவ்வளவு தீவிரமாக காரணம் நான் எடுத்து வந்த தானிய உணவு. தானிய உணவு உடனடியாய் சர்க்கரையாக மாறி உடல் முழுக்க செல்லும். அப்போது என் ரத்த சர்க்கரை அதிகமாக, அதை கட்டுப்படுத்தும் இன்சுலின் என் உடலில் இயல்பாக இல்லை. நான் வெளியில் இருந்து இன்சுலின் ஊசில் மூலம் செலுத்த வேண்டும். இந்த இன்சுலின் என் ரத்த சர்க்கரையை குறைக்கும். ஆனால் இன்சுலின் தன் பணியை முடித்து கொஞ்ச நேரத்தில் உறங்க செல்லும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. முன்பு நான் உண்ட உணவின் ஒரு பகுதி ஆற்றலாய் மாறி திசுக்களுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும். இன்சுலின் ஆற்றல் இழக்கும் வேளையில் இந்த சேமிக்கப்பட்ட சர்க்கரை வெளியே வந்து மீண்டும் என் ரத்தசர்க்கரையை எகிற வைக்கும். அதாவது நான் மதியம் உண்ணும் உணவின் கலோரிகள் என் ரத்த சர்க்கரையை உயர்த்தாமல் இருக்கும்படி என் இன்சுலின் பார்த்துக் கொள்ளும். ஆனால் இன்சுலின் தன் பணியை முடித்து உறங்கப் போனதும், மாலை ஆறு மணிக்கு உடம்பில் காலியாகாத கலோரிகள் விழித்துக் கொண்டு ரத்த சர்க்கரையை தட்டி எழுப்பும். இரவு நாம் தூங்கும் போது வீட்டில் பல ஓட்டைகளில் இருந்து எலிகள் வெளியே வந்து கும்மாளமடிப்பது போன்றது இது. அதே போல நான் அதிகமாய் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் நாள் முழுக்க என் உடம்பில் வேலை செய்வதால் அடிக்கடி ரத்த சர்க்கரை வெகுவாய் குறைந்து மயக்கம் ஏற்படும். என்னால் இன்சுலின் அளவையும் குறைக்க முடியாது – சர்க்கரை எகிறும். சரி, இன்சுலினை குறைவாக போட்டாலோ அடிக்கடி உடம்பு சர்க்கரைப் பாகாய் மாறி விடும். இவ்வளவு பிரச்சனைகளோடு நான் தவித்துக் கொண்டிருந்தேன். மருத்துவர்கள் மருந்தை மாற்றுவார்கள். உடற்பயிற்சி செய்ய சொல்வார்கள். ஆனால் எதுவும் எனக்கு உதவவில்லை. ஏனென்றால் என் பிரச்சனை உணவில் இருந்தது. மருத்துவர்கள் என்னை வழக்கமான உணவை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார்கள். கொழுப்பும் இனிப்பும் மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி சோறு, தோசை, இட்லி, சப்பாத்தி என பிரதானமாய் உண்ண வேண்டும். நான் ஏற்கனவே பேலியோ குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது ஒரு சமநிலையற்ற உணவுமுறை எனும் எண்ணம் இருந்தது. பல நூறு வருடங்களாய் நம் முன்னோர்கள் உண்டு நீண்ட ஆயுள் வாழ்ந்த உணவுமுறையில் என்ன குறை இருக்க முடியும் என வியந்தேன். சில மாதங்களுக்கு முன்பு நண்பர் விநாயக முருகனை ஒரு இலக்கிய கூட்டத்தில் சந்தித்த போது அவர் நன்றாய் இளைத்திருந்தார். பேலியோ தான் காரணம் என்றார். தான் பின்பற்றும் உணவு அட்டவணையை குறிப்பிட்டார். அப்போது தான் எனக்கும் தூண்டுதல் ஏற்பட்டது. நான் எதையும் தடாலடியாய் செய்பவன் அல்ல. அதனால் மெல்ல மெல்லத் தான் உணவுமுறையை மாற்றினேன். முதலில் காலை உணவாக காய்கறி சாலட் முயன்று பார்த்தேன். மதியம் சோற்றை குறைத்து காய்கறிகளை அதிகப்படுத்தினேன். சில நாட்கள் கழித்து மதியம் கறியும் சோறும் சமமாக உண்ணத் துவங்கினேன். ஒருநாள் முழுக்க சோற்றை தவிர்த்தேன். மதிய உணவை முழுக்க மாற்றியதும் எனக்கு வயிறு கொஞ்சம் சிரமம் கொடுத்தது தான். அதற்கு முக்கிய காரணம் புதிய உணவு முறையில் எவ்வளவு இன்சுலின் எடுக்க வேண்டும் என எனக்கு தெரியாதது. பொதுவாக, உணவின் கலோரிகள் பொறுத்து இன்சுலின் அளவை தீர்மானிக்க வேண்டும். பாதி தட்டு சோறு உண்கிறேன் என்றால் 8 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்வேன். மதியம் பழம், முட்டை, காய்கறி சாப்பிடும் போது இந்த அளவு இன்சுலின் எடுத்தால் அரைமணியில் மீண்டும் பசியெடுக்க ஆரம்பிக்கும். கொஞ்சம் வாயு உபத்திரவமும் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களில் அது சரியாகி விட்டது. தோதான இன்சுலின் அளவையும் சுயபரிசோதனைகள் மூலம் அறிந்து கொண்டேன். காலை உணவை பேலியோவுக்கு மாற்றியதுமே என் ரத்த சர்க்கரை சிறப்பான கட்டுப்பாட்டில் வருவதை உணர்ந்தேன். இன்சுலின் அளவையும் மூன்றில் ஒரு பங்காய் குறைத்துக் கொண்டேன். இது தான் எனக்கு பேலியோவுக்குள் தொடர்வதற்கான தூண்டுதலாக அமைந்தது. மதிய உணவை மாற்றிய பின் மாலையில் குறைவான ரத்த சர்க்கரை காரணமாய் நேரும் மயக்கம் நின்றது. நாள் முழுக்க அபாரமான ஆற்றல் கிடைத்தது. முன்பு எப்போதும் இல்லாத புத்துணர்ச்சியுடன் இருந்தேன். பொதுவாய் நீரிழிவு உள்ளோருக்கு எப்போதும் ஒரு சடவு, அசதி இருக்கும். ஒன்று, ரத்த சர்க்கரை குறையும் போது சோர்வு வரும். உணவை எடுத்துக் கொண்டதும், இன்னொரு பக்கம், ரத்த சர்க்கரை ஒரு ஜம்ப் அடிக்கும். அப்போதும் ஒரு மயக்கம், சோர்வு, தள்ளாட்டம் ஏற்படும். ஆனால் பேலியோவுக்கு மாறின பின் இந்த சடவு முழுக்க இல்லாமல் ஆனது. நாள் முழுக்க துடிப்பாக இருக்க முடிந்தது. ஆனால் இரவுணவு தான் எனக்கு தலைவலியானது. இரவில் நான் வழக்கமாய் 32 யூனிட் இன்சுலின் எடுத்துக் கொள்வேன். இரவில் பேலியோ உணவு எடுத்துக் கொண்ட போது முதலில் இதை 20 யூனிட்டாக குறைத்தேன். இரவு ஒரு மணிக்கு சர்க்கரை அளவு மிகவும் குறைந்தது. நள்ளிரவில் மீண்டும் அவசரமாய் உணவு எடுத்துக் கொள்வேன். இதற்காகவே முதல் 10 நாட்கள் நான் இரவு மூன்று மணி வரை விழித்திருப்பேன். உணவு உண்டு இரண்டு மணிநேரம் கழித்து சோதித்து பார்த்து, மீண்டும் உணவு அருந்தி மீண்டும் சோதித்து பார்த்து… இப்படி இரவு பதைபதைப்பாக கழியும். இன்சுலினை இரவில் மிகவும் குறைத்தால் சர்க்கரை அளவும் மிகவும் அதிகமாகி விடும். அந்த ரிஸ்கை எடுக்க நான் விரும்பவில்லை. மெல்ல மெல்ல இரவு நேர இன்சுலின் அளவை புரிந்து கொண்டேன். இரவில் சிக்கன் மட்டும் உண்பதென்றால் ஒரு அளவு, வெறும் முட்டை என்றால் அதை விட குறைவான அளவு. இந்த கடைசி கண்டத்தையும் தாண்டிய பின் என் நீரிழிவு யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. கடந்த பத்து வருடங்களில் சாத்தியப்படாத ரத்த சர்க்கரை கட்டுப்பாடு இப்போது வந்து விட்டது. இத்தனை வருடங்களும் இந்த உணவு முறையை பின்பற்றவில்லையே என நான் என்னை நொந்து கொண்டேன். ஏனென்றால் நீரிழிவால் இரண்டு முறை மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பினேன். பேலியோவுக்கு பிறகு நீரிழிவின் மீதுள்ள அச்சம் விலகி விட்டது. பயிற்சி பெற்ற போலீஸ் நாய் போல் ரத்த சர்க்கரை என் ஆணைகளுக்கு இணங்கி ஒரே சீராக என்னுடன் ஓடி வருகிறது. முக்கியமாய் முன்பு நான் ஒருநாளைக்கு 110 யூனிட் இன்சுலின் எடுத்து வந்தேன். இப்போது அதை 50 யூனிட்டாக குறைத்து விட்டேன். அதுவும் எனக்கு dawn phenomenon சிக்கல் இருப்பதால் தான் இவ்வளவும் கூட எடுக்க வேண்டியதாகிறது. இல்லாவிட்டால் மொத்தமே 20 யூனிட்டுக்குள் இன்சுலினை குறைக்க முடியும். நான் முதல் வகை நீரிழிவு நோயாளி. அதாவது இன்சுலினை உடம்புக்குள் செலுத்தியாக வேண்டும். இரண்டாவது வகை நீரிழிவாளர்களுக்கு உடம்பில் சொற்ப இன்சுலின் இயற்கையாக சுரக்கும். மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டால் சமாளிக்கலாம். இவர்கள் பேலியோவுக்கு மாறுவதானால் மாத்திரையை கூட விட்டு விடலாம் என தோன்றுகிறது. அதாவது தாம் நீரிழிவாளன் என்பதையே மறந்து வாழலாம். இவ்வளவு விபரமாய் நான் பேலியோ பற்றி கூறியது ஒரு நோக்கத்திற்காகத் தான். பேலியோ அனைவருக்குமானது அல்ல. ஏதாவது உடல் உபாதை இருந்தால் அதை சீராக்க பேலியோவுக்குள் வரலாம். சில மாதங்களில் உடல் எடையை குறைக்க பேலியோ பயன்படும். மற்றபடி மரபான உணவு முறையே பெரும்பாலானோருக்கு போதும். தேவையின்று உணவு முறையை மாற்றக் கூடாது. ஏன் என அடுத்த பதிவில்கூறுகிறேன். http://thiruttusavi.blogspot.co.uk/2017/01/blog-post.html?m=1
 8. அக்னியஷ்த்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 9. வாழ்த்துக்கள் சாத்திரியார். இலண்டனில் எங்காவது கிடைக்குமா? பெளசரிடம் இருந்தால் சொல்லுங்கள்
 10. சசிகலா எனும் alpha male ஆர். அபிலாஷ் ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”. இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்? அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உறுதியானவர். துணிச்சலானவர். பன்னீர் யார் மிரட்டினாலும் பணிந்து விடக் கூடியவர். அவரால் கட்சியை ஒருங்கிணைத்து நடத்த முடியாது என பா.ஜ.க அறியும். அதனால் சசிகலாவே பா.ஜ.கவின் தேர்வாக இருக்கும்.” ஆனால் ஜெயாவின் மரணத்திற்கு பின்பான மத்திய அரசின் போக்கு இக்கூற்றுக்கு எதிராக இருந்தது. சசிகலா தன்னை தலைவர் ஆக்கக் கோரும் ஒரு குழுவினரை தனக்காக கூச்சல் இடும்படி களத்தில் இறக்கினார். அதிமுக தலைவர்கள் சிலரே சசிகலாவுக்கு ஆதரவாக பேசினர். சசிகலாவே முதல்வராக வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன. பன்னீர் உடனே தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தார். அதிகாரிகள் கூட சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தன்னை மதிப்பதில்லை என்றும் புகார் கூறினார். உடனே சசிகலாவுக்கு ஆதரவான தலைமைச்செயலாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரியினர் ரெய்ட் செய்தார்கள். மிரட்டினார்கள். அடுத்து சசிகலாவின் சொத்துகளை ரெய்ட் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. சசிகலாவை வீட்டை காவல் காக்கும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நீக்க்கப்பட்டனர். சசிகலா கட்சியில் இருந்து விலக வேண்டும் என பா.ஜ.க நிர்பந்திப்பதாக கூட பத்திரிகைகள் எழுதின. ஆனால் சசிகலா அஞ்சி வெளியேறுவார் என நான் நம்பவில்லை. கட்சியின் மீது கணிசமான கட்டுப்பாட்டை வைத்திருக்கும், ஜெயாவின் சொத்துக்களை கைவசம் வைத்திருக்கும் ஒருவரை எளிதில் அகற்றி விட முடியாது. மேலும் மிரட்டினால் உடனடியாய் வெளியேறும் சுபாவக்காரர் அல்ல சசிகலா. அதற்குப் பதிலாக சசிகலா – பன்னீர் – பா.ஜ.க தரப்பினர் இடையில் ஒரு சமரசம் நடக்கிறது. பன்னீரை தொந்தரவின்றி ஆட்சி செய்ய சசிகலா அனுமதிப்பார். சசிகலாவின் இடத்தை பன்னீர் கேட்க மாட்டார். (அவர் என்றுமே அந்த வம்புக்கு போக மாட்டார்.) முக்கியமாக, பா.ஜ.கவின் பிடியில் இந்த ஜல்லிக்கட்டு மாடு வந்து விட்டது. சசியை அடக்கியது பா.ஜ.கவுக்கு ஒரு குறியீட்டு வெற்றி. ஆனால் சசிகலாவை நீண்ட காலம் பா.ஜ.கவால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. பா.ஜ.கவுக்கு என்றும் அவர் மீது நம்பிக்கை இருந்ததில்லை என விகடன் இணையதளத்தில் சில கட்டுரைகள் சொல்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே அவருக்கும் பா.ஜ.கவுக்கும் முழு ராசியில்லை. அவர் காங்கிரசுடன் சற்று இணக்கம் காட்டுகிறார். கலைஞரின் நலம் விசாரிக்கிறேன் எனும் சாக்கில் கலைஞர் குடும்பத்தை சந்திக்கிறார். அவர் தனக்கென ஒரு அணியை அமைக்க முயல்கிறார். ஏனென்றால் ஜெயாவுக்கு பிறகு பன்னீரை கொண்டு தான் பா.ஜ.க காய் நகர்த்தும் என சசிகலா அறிந்திருந்தார். இப்போது மோடிக்கு முன் முழுக்க தலைவணங்கி விட்டார். அதனால் அவரை பொதுச்செயலாளராக இருக்க அனுமதித்திருக்கிறார்கள். இப்போதே ஒரு வலுவான தலைவருக்கான சில அறிகுறிகளை அவர் காட்டி விட்டார். பதவியேற்கும் போது கண்கலங்குகிறார். எம்.ஜி.ஆர். ஜெயா சமாதிகளுக்கு சென்று வணங்குகிறார். அங்கு அதிமுக மந்திரிகளையும் வரச் செய்கிறார். பல இடங்களில் ஜெயலலிதாவின் பிம்பத்தை பின்னணியில் வைத்து சசிகலாவின் வணங்கி நிற்கும் படத்தை தாங்கிய சுவரொட்டிகள் பளிச்சிடுகின்றன. பன்னீர் செல்வம் இந்த பிம்பம் கட்டியமைக்கும் பணிகளில் இதுவரை ஒன்றை கூட செய்ய முயலவில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு தன்னை வலுவாக முன்னெடுக்கும் ஒரு தலைவர் தேவை. இப்போதைக்கு அது சசிகலா தான். ஒரு சிறந்த தலைவர் யார்? மக்களுக்கு நல்லது செய்கிற தலைவர் யார் என நான் கேட்கவில்லை. மக்களை வசீகரிக்கிற, கட்சியை கட்டுப்படுத்துகிற தலைவர் யார்? ஆணவமும், துணிச்சலும், பிடிவாதமும், சிறப்பாய் மீடியா பிம்பத்தை கட்டமைக்கிறவரும், கட்சியை விரல் நுனியில் வைத்திருக்கும் நிர்வாகத் திறனும் கொண்டவர் தான் சிறந்த தலைவர். அதாவது ஆங்கிலத்தில் alpha male என்பார்கள். இங்கு அது சசிகலா மட்டுமே. அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனால் அதிமுக ஒரு கட்சியாக நிலைபெற வேண்டுமென்றால் அது சசிகலாவின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும் எனத் தோன்றுகிறது. தலைமைப் பண்பை நாம் ஒழுக்க, அற மதிப்பீடுகள் இன்றி அளவிட வேண்டும். இந்த மதிப்பீடுகளுக்கு அரசியலில் எந்த மதிப்பும் இல்லை. பா.ஜ.க இதை நன்கு அறியும். அதனால் சசிகலாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை அது சுலபத்தில் அனுமதிக்காது. பல முட்டுக்கட்டுகள் போடுகள். குழு அரசியலை வளர்த்து அவரை முடிந்த வரை தளர்த்த பார்க்கும். ஆனால் இப்போதைக்கு அதிமுகவிற்கு பன்னீர் செல்வத்தினால் பலன் இல்லை என தோன்றுகிறது. அவர் ஒரு பா.ஜ.க பினாமி மட்டுமே. மேலும் அவர் ஒரு இயல்பான தலைவரும் அல்ல. அவர் கீழ் அதிமுக நிர்மூலமாகி விடும். அவ்விதத்தில் சசிகலாவின் முதல் கட்ட வெற்றி திமுகவுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கும். அடுத்த தேர்தலில் திமுக வெல்லும் என்பது 99% உறுதி என்றாலும், திமுகவுக்கு தலைவலி கொடுக்கும் வண்ணம் அதிமுகவை முன்னெடுக்க சசிகலாவால் முடியும். இதை உணர்ந்ததனால் தான் ஸ்டாலின் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலக வேண்டும், அதற்கான விசாரணை வேண்டும் என கோரி இருக்கிறார். ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது எனும் செய்தி வளர்வது சசிகலாவுக்கு பங்கமாக இருக்கும் என அவர் அறிவார். ஆனால் இந்த கோரிக்கை ஒரு விசயத்தை காட்டுகிறது: ஸ்டாலின் சசிகலாவை பொருட்படுத்த துவங்கி விட்டார். http://thiruttusavi.blogspot.co.uk/2016/12/blog-post_31.html?m=1
 11. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டு நலமாகவும், திடமாகவும், சந்தோஷமாகவும் எல்லோருக்கும் அமைய வாழ்த்துக்கள்!
 12. யாழில் சூடான திரிகள் பற்றி எரிந்து பல காலம் ஆகிவிட்டது. விவாதங்கள் மூலம் அறிவூட்டல் செய்யலாம் என்பதில் முன்னர் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அத்தோடு சமூக வலைத்தளங்களில் நடைபெறும் விவாதங்கள் அவரவர் நட்புவட்டங்களில் நடைபெறும்போது அவை காத்திரமானவையாக இருக்கமாட்டா என்பதால் இவற்றில் நான் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. சில முகநூல் இலக்கிய, அரசியல் விவாதங்கள் வெறும் விளம்பரங்களுக்காகவும், ஒருவரை ஒருவர் முதுகு சொறியவும், அல்லது அவதூறு செய்யவுமே வழிவகுக்கின்றன. இவற்றினால் சமூக முன்னேற்றம் உண்டாகப்போவதில்லை. ஆனால் ஆங்கிலத் தளங்கள் Reddit, Guardian பின்னூட்டங்கள் போன்றவை முக்கியமான கருத்தாடல்களை புரிய உதவுகின்றன. அதே போன்று யாழ் இணையமும் தொடர்ந்தும் கருத்தாடலை ஊக்குவிக்கும் நோக்கோடு இயங்கினாலும், உறுப்பினர்களாகிய நாங்கள் (என்னையும் சேர்த்துத்தான்) கருத்தாடலில் ஈடுபடாது விடயங்களை வாசித்துவிட்டு மட்டும் போவது பெரிய குறைபாடுதான். இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று சிந்திக்கவேண்டும். இன்னுமொருவனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
 13. தமிழர்களின் வரலாற்றில் 30-40 வருடங்களை மறைப்பதற்கான எல்லா செயற்பாடுகளும் சிறுகச்சிறுக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அகிம்சையைப் போதித்த காந்தி சிலையை அமைத்து தமிழர்களை எதையும் சகித்துக்கொள்ளக்கூடிய சமூகமாக மாற்றினால் யாருக்கு நன்மை என்பது இலகுவாக எவருக்கும் புரியும்.
 14. கிறிஸ்தவ நாடுகளில் குடியேறி இருப்பவர்கள் என்பதால் எமது சந்ததியினர் மேற்கு நாடுகளின் அடிப்படைக் கலாச்சாரங்களை பின்பற்றுவது நல்ல விடயமே. கிறிஸ்மஸ் மரம் வைத்து பரிசுப் பொருட்களைப் பரப்பி, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களையும் மகிழ்வான தருணங்களையும் பகிர்வது யாருக்கும் பிரச்சினைகளைத் தந்ததாக நான் அறியவில்லை. இதேபோல் தீபாவளிக்கும், தைப்பொங்கலுக்கும், சித்திரை வருட பிறப்புக்கும் கொண்டாட்டங்கள் நடாத்துவதும் அவற்றினைப் பகிர்வதும் நடக்கின்றதுதானே.