Jump to content

நந்தி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    188
  • Joined

  • Last visited

Everything posted by நந்தி

  1. உண்மைதான்! மனம் வேதனை அடையும்தான். ஆனால் அப்படியான மனம் மற்ற இனங்களுக்கும் இருக்குமில்ல.அவங்கட மனங்களும் வேதன அடையுமில்ல, அதையும் நினைச்சுப் பார்கணுமில்ல. சரி சரி, இந்த புத்தாண்டு லிஸ்ற் இல்லாட்டி என்ன , அடுத்த வெசாக் லிஸ்ற், பொசன் லிஸ்ற், இல்லாட்டி ஒரு ஸ்பெசல் லிஸ்ற் வராமலா போகும். அவர் வெளியில் வந்திருவார். அவர் வருவாரே ! வெளியில் வருவாரே !
  2. ஆனால் வடக்கு, கிழக்கில் வாழும் சகோதர்களுக்கும், அவர்களின் பிரச்சனைகளுக்கும் என்னிடம் எந்தத் தீர்வும் இல்லை, என்னால் எதுவும் கொடுக்கவும் முடியாது.
  3. இனமானம் காக்க இன்னுயிரை விதைத்த எம் தெய்வ மாவீரரே , மண்மீது உங்கள் மாபெரும் தியாகம் மரணத்தை வென்று வாழும். வீரவணக்கங்கள்.
  4. “ சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்”…. இவ்வாறு ஒரு ஊடகச்செய்தி கூறுகிறது.
  5. கனடா நாட்டுக்குப் பலர் செல்வதாக கேள்விப்படுகின்றோம். அவ்வாறு சென்று பின்னர் அமெரிக்காவுக்கு முயற்சிக்கலாமே.
  6. வாழைமரம் மங்கலத்தின் அடையாளம். அத்துடன் சந்ததி விருத்தியை நீண்டு நிலைத்து வாழ வைப்பது. வாழையடி வாழையாக தொடர்வது. ஆனால் கவிஞருக்கு மரம் என்று அப்பெண்ணைக்கூற மனம் வரவில்லை போலும். மேலும் பரந்த மனப்பாங்கு கூட்டுக்குடும்பப் பெண்ணுக்கு அவசியம் வேண்டும். ஒரு இலை பெரிய பரப்பு இந்த வாழையில்தானே.
  7. கணவன்- மனைவி அன்பாகவும், அடிக்கடி அரவணைப்பாகவும் இருப்பது மிக முக்கியம்.
  8. ஓ அப்படியா . அப்படித்தான் இருக்கும். நீங்கள் விட்டுக்கொடுத்து விட்டுத்தான் வெளிக்கிட்ட நீங்கள் என்னப்பு. ஆனால் உலகம் எல்லாம் கதை என்ன தெரியுமோ உங்கள நாட்டை விட்டே மக்கள் விரட்டி விட்டிவிட்டதாக. எப்படியோ விரைவில் உங்கள் நா(கா)ட்டில் மழைதான்.
  9. எங்களின் நிறத்தைக் கண்டாலே அந்த நாடுகளில் அப்படி ஒரு நல்ல எண்ணம் ஏற்கனவே இருக்கிறதாம்.இந்தச் செய்தியையும் அறிந்தான் என்றால் சுப்பர். இனிமேல் ஆத்திரவசரத்துக்குக் கூட ஒரு பொருளை அனுப்புவதென்றால் ? எத்தனை கடவுள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் எம்மவரைத் திருத்துவது இயலாது.
  10. மட்டக்களப்பில் சந்திரன்-புத்திரன்-வியாழன் இடையே மும்முனைப் போட்டி, வெந்ததைத் திண்டுவிட்டு விதிவந்தால் சாவோம் என்று திருமலை, அம்பாறையில் ஒரு அப்பாவி.என்னத்த சொல்வது. “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் இத் தமிழ்ச் சாதியை” என்பதுதான் நினைவில் வருகிறது. இலங்கை ஆட்சியாளர்கள் அனைவரையும் ஒரு சொகுசு விமானத்தில் ஏற்றி யாரும் இல்லாத வேற்றுக்கிரகத்தில் மோதி அழித்துவிட வேண்டும்.அந்தச் செய்தி கூட வெளிவராமல் “காணாமல் போனவர்கள்” என முடித்துவிட வேண்டும்.
  11. இதுவும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லக்கூடிய ஒரு மாமெரும் வெற்றிதானே. இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னரும் இதே வாக்கியத்தை இன்னுமொரு ஆட்சியிழந்த சனாதிபதி சொல்லுவார்.ஒரு தமிழனிடம் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்.
  12. சரியான கேள்வி.ஆனால் இப்போ எல்லாம் பெருமைக்கு மட்டும்தான் புல் பிடுங்குகிறார்கள். உதாரணம் புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பெற்றோர்கள் படும்பாடு. பிள்ளைக்குச் சோதனையா அல்லது பெற்றோருக்குச் சோதனையா ? ஒன்றுமே புரியலே உலகத்திலே .
  13. யுரியூப்பில் இணைத்தால் அதனை மற்றவர்களும் பார்க்க முற்படுவார்களே சகோ.
  14. ஐயையோ எப்பிடி இப்பிடி கண்டுபிடிச்சிட்டியல் இவ்வளவு காலமும் கட்டிக்காப்பாத்தின உண்மையை . ‘நுணலும் தம் வாயால் கெடும்” அல்லவா ?
  15. ஆடையை கொஞ்சம் அப்பிடி, இப்பிடி போடுவம் என்று வெளிக்கிட்டால் அந்த மனிசன் விடுதில்லை, வேற சோலிக்கு வெளிக்கிடுது.
  16. உண்மைதான். இவரின் அழகான சில வீடியோக்கள் உள்ளன. என்னால் வீடியோக்களை இங்கு பதிவேற்ற முடியாமலுள்ளதே .
  17. மேற்படி வினாவை நான் 8/ April இல் chatbox கேட்டிருந்தேன். சில உறவுகள் பதிலளித்திருந்தார்கள். ஐ என ஒரு தனியான எழுத்து இருக்கும் போது அய் என இரு எழுத்துக்களைச் சேர்த்து எழுதுவது வலிந்து கட்டாயப்படுத்தி சேர்ப்பது போல் உணர்கிறேன். இது போலவேதான் மையம்-மய்யம்.எழுத்துச் சீர்திருத்தத்திற்காக, எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக என்ற கருத்துக்கள் காரணங்களாக க் கூறப்பட்டாலும் இவ்வாறு எழுதுவதன் மூலம் அவ் எழுத்துக்களை இல்லாமல் செய்ய முடியதுதானே, அவை வேறு சொல்லாக்கத்திற்கு தேவைதானே. மையத்தை மய்யம் என எழுதலாம் என்றால் தை என்பதனை தய் என எழுதலாம்தானே.
  18. கால் நூற்றாண்டுகளாய் களம் கண்டு-நின்றியங்கும், யாழ் இணையம்- நூறாண்டு மேல் உயர வாழ்த்துக்கள் ! மச்சானின் நெல் வயலில் மகிழ்ந்திருந்த நெல் மணிகள், கச்சான் காத்தடித்ததனால் கதிர் விலகிச் சிதறினவே. அருகினிலே சில மணிகள் ஆழ மண்ணில் சில மணிகள் தெருவினிலே சில மணிகள் தேசம் விட்டுச் சில மணிகள். கலகலத்துச் சிரித்துவிட்டு கச்சான் காத்தோய்ந்து போக, வெலவெலத்துப் போன மச்சான் வெளிப்பட்டான்-செயற்பட்டான். பதறிப் போன மச்சானும் சிதறிப்போன மணிகளதைக், கதறிக் கொண்டு சேகரித்துக் கட்டிச் சேர்த்தான் கோணியிலே. சிதறிப் போன மணிகளாகச் சிறிலங்காத் தமிழர் இன்று. கட்டிச் சேர்த்த கோணியாக களம் இந்த யாழ் -இங்கு. ஒன்றாவோம் உரிமைகளை வென்றாவோம். நன்றாவோம் நாளை நமது என்றாவோம்.!
  19. சந்தேகத்திற்கிடமானவர்களை காலவரையறையின்றி தடுத்து வைக்க முடியாதென்ற சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.அவ்வாறு தடுத்து வைத்து குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அவ்வளவு காலத்துக்குமான இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.எப்படியோ இவர்கள் விடுதலை மிக்க மகிழ்ச்சி. இதுபோல் மற்றையோரும் விடுதலையாகி,மகிழ்வாய் வாழ வழி பிறக்கவேண்டும்.
  20. மனைவியைச்சந்தித்த மகிழ்ச்சியில் மனிசன் மற்ற மனிசாளைப் போட்டுத் தள்ளியிருக்கிறார்.வன்முறைதான் இப்போ வாழ்க்கை முறை ஆகிக்கொண்டு போகிறது.ஆழ்ந்த இரங்கல்கள்.
  21. ரணில் ஒரு நரி.எந்தத் தீர்வையும் அவர் வழங்கப்போவதில்லை.காலத்தை இழுத்தடித்து தன் காலத்தைக்கடத்தி செல்லுவார்.
  22. ஆட்சியில் அமர்த்திய மக்களை அன்பாகவும்,அறிவாகவும் அரவணைக்க முடியாதவர்கள்,அயல்நாட்டவனிடம் சென்று அவனின் விலங்குகளை அணைத்துக்கொள்ள வேண்டியதுதான்.காலம் சிறந்த ஆசிரியன்.
  23. இந்த ஒம்பத்தி தொண்ணூத்தி எட்டுக்கு ஒரே தொணதொணப்புத்தான். நொய் நொய் எண்டபடி.குள்ளநரியன் அள்ளிக் கொடுத்திருப்பான் கள்ளன் இவனுக்குப் பள்ளம் தோண்டச்சொல்லி.ஒருவன் இடையில் நுழைந்து பஞ்சாயத்தைக் குழப்பிவிட்டால் சரிதானே. அதுதான் நடக்கும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.