Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1242
  • Joined

  • Days Won

    14

valavan last won the day on July 20 2023

valavan had the most liked content!

1 Follower

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

valavan's Achievements

Mentor

Mentor (12/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

1.7k

Reputation

  1. யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம் ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட 36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான் நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே, நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  2. என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/seeman-reveals-his-sons-studied-in-english-medium-schools-594131.html
  3. போர் சூழல் இல்லாத நிலையில் காரணம் எதுவும் சொல்லாது எவரையும் சிறையிலடைக்கும் நிலமை இப்போது அமுல்படுத்தப்படுகிறதா தெரியவில்லை, நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் ஈழபிரியன் அண்ணா.
  4. இலங்கை அரசுக்கெதிராக இவர்கள் இயங்கியதுக்கு ஆதாரங்கள் வழக்குகள் எதுவும் இருந்தால்தானே பயங்கரவாத சட்டம் இவர்கள் மீது பாயும்?
  5. இந்தியாவில் அனைத்து வழக்குகளும் முடிந்த நிலையிலேயே நாடு திரும்புகிறார்கள், இலங்கையில் அவர்கள்மீது எந்த வழக்குகளும் இருப்பதாக தெரியவில்லை, உயிருடன் திரும்பினால் உடனடியாக சட்ட உதவியை நாடலாம் அதற்கு தமிழ்கட்சிகள் உதவுவார்களா அல்லது இந்திய/இலங்கை எஜமான விசுவாசம் காண்பிப்பார்களா என்பது எவருக்குமே தெரியல.
  6. பிளைட்டில் ஏத்தும்வரை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் உதவியை கோருவது நல்லது. அதுவரை உண்ணும் உணவிலிருந்து மருத்துவ பரிசோதனை என்று எதில் வேண்டுமென்றாலும் ஏதும் செய்து றோ அனுப்பினாலும் அனுப்பும். ஏற்கனவே சாந்தனின் இறப்பிலுள்ள சந்தேகமும் அதுவே.
  7. கருணாவுக்கு மஹிந்த 'வினதும் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளினடமும் இருந்த அரசியல் செல்வாக்குக்கு கிழக்கு மாகாணத்தின் நிரந்தர முதல்வர் ஆகியிருக்கலாம், எந்த பிரதேச வாதத்தை கையில் எடுத்தானோ அதே பிரதேசத்தை மக்கள் ஆதரவுடன் மட்டுவின் ஏக போக ராஜாவாக கோலோச்சி இருக்கலாம், ஆனால் இன்றுவரை அது முடியவில்லை. காரணம் ஒன்றேதான் ஆயிரம் ஆயிரம் போராளிகளை விடுதலைக்காக ஈந்த அந்த மண் கருணாவை ஒரு முன்னாள் புலிகளின் போராளியாகவோ தளபதியாகவோ ஏற்கவில்லை, ஒட்டுமொத்த இலங்கையையுமே நடுங்க வைத்த ஜெயந்தன் படையணி வாழ்ந்த மண் அது, அது எச்சகலகளுக்கு கெளரவம் கொடுக்காது, பிறந்த மண்ணே இவரை போராளியாய் ஏற்று கொள்ளாதபோது வடபகுதி வந்து முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் இணைக்க போகிறாரா? குடை வேணும் எண்டால் ஒரு ஓரமாய் உக்கார்ந்து விக்கலாம்
  8. ஏழுமலையான் ஏற்கனவே பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார், என்னமோ நிறுவன கிளைகள் போன்று பல்வேறு இடங்களீல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்று செய்தியிடுகிறார்கள், ஏற்கனவே கொழும்பில் பிரமாண்டமான பல கோவில்கள் அன்றுதொட்டு உண்டு ,அதையும்மீறி இன்னுமொன்று கட்டி தாருங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். திருப்பதி நிர்வாகத்தினால் கட்டி கொடுக்கப்படும் இந்த கோவிலின் ஒரு பகுதி வருமானம் கண்டிப்பா இந்தியாவுக்கு போக வழி உண்டு. தமிழன் எது கேட்டாலும் செய்து தராத சிங்கள், கோவில் கேட்டால் மட்டும் உடனடி அனுமதி வழ்ங்கிறான், இதன் பின் உள்ள சூட்சுமம் இனிமே வாய் திறந்து வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பது பற்றி எவரும் எதிர் கருத்து எழுப்பினால் அதற்கு சர்வதேசத்துக்கும் இந்தியாவும் பதில் சொல்ல கைவசம் பதில் தயார் செய்துவிட்டார்கள் என்றே கூறலாம். ஏழுமலையான் கோவில் கொழும்பில் எழுப்பப்படும் ஏக காலத்தில் மட்டு,யாழ்நகரத்தின் நடுவில் இலங்கையின் மிக பிரமாண்டமான விகாரைகள் எழுப்படலாம் எழுப்பப்பட்டால் எவரும் கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அவனிடம் பதில் இருக்கிறது.
  9. மந்திகையும் யாழ்போதனாவும் வடபகுதியில் உள்ள மிக பெரிய மருத்துவமனைகள். ஆனாலும் கொஞ்சம் சீரியஸ் எண்டாலும் மந்திகையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவசரநிலை வாகனம் ஓடவேண்டும். இரண்டு வைத்தியசாலைகளும் ஒரே தரத்திலிருந்தால் தமிழர் பிரதேசத்துக்கு ஓரளவு நிம்மதி. மருத்துவ விசயத்தில் ரணிலோ அணிலோ எவர் குத்தினா என்ன அரிசி நமக்கு வந்தால் சரிதான்.
  10. பவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு: சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார். சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார். ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி. -------- மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை. முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும் அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள், சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால் நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள் இயங்கவே முடியாது. என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும். வேறெதுவும் சொல்வதற்கில்லை.
  11. முன்பைவிட வேகமாக இயங்குவதுபோல் ஒரு உணர்வு. நன்றி,
  12. கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம். அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா? அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.
  13. பையன் சொன்னதையே எழுதலாம் என்று வந்தேன் ஏற்கனவே எழுதியிருக்கிறார். இணையவனின் அண்மைய மென்பொருள் மெருகேற்றலின் பின்னர் உள் நுழைவதும், நுழைந்தபின்னர் பக்கங்களை பார்வையிடுவதும் மிக தாமதமாகிறது. அண்டைக்கு மாறி என்னத்தையும் கிண்டி போட்டாரோ தெரியவில்ல😜 ( என்ர ரேஞ்சிலயே மற்றவர்களையும் நினைக்கிறது பொழைப்பா போச்சு) தயவு செய்து சரி பாருங்கள்.
  14. நடந்தது ஆயுத போராட்டம் இங்கே உயிர்காவுகள்தான் மூலதனம். இங்கே மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. சுமந்திரன் சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகள் தெற்கிலிருக்கும்போது ஒரு பேச்சு வடக்கு வந்தால் வேறு பேச்சு என்று செய்த சாக்கடை அரசியலால்தான். உங்கள் அரசியலில் நம்பிக்கையில்லாத தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்க காரணம். ஆகவே அந்த புதைகுழிகளுக்கு விதைபோட்டது உங்காளுங்களே என்று அனந்தி அப்போது பதில் சொல்லிருக்கவேண்டும். தமிழர் மத்தியில் மனித புதைகுழிகள் உருவாக மறைமுகமாக காரணமா இருந்த நீங்களே பேசும்போது நாங்கள் ஏன் பேசகூடாது எண்டு கேட்டிருக்கவேண்டும் எல்லாமே காலம் கடந்தவைதான் இதுவும் கடந்தே போகட்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.