கவிப்புயல் இனியவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  1,623
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by கவிப்புயல் இனியவன்

 1. அடுக்கு மொழி பேசி ....... கவிதை எழுதும் நேரம் ..... இதுவல்ல -என்றாலும் ..... அடக்க நினைப்பவனை .... அடுக்கு மொழியால் ..... சாட்டை அடி அடிக்கவே ..... அடுக்கு மொழியை ...... பயன்படுத்துகிறேன் ......!!! ஜல்லியாய் பாயும் காளையை ...... கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ...... தமிழினத்தை - கிள்ளி எறியலாம் ..... என்று தப்பு கணக்கு போடும் ..... சில்லறைகளே - நாம் கல்லறை .... என்றாலும் நிறைவேறாது ..... உங்கள் எண்ணம் ..............!!! பாய்ந்து வரும் காளைகள் ...... எங்கள் நெஞ்சின் மேல் ..... பாய் வதில்லை நாங்கள் ..... நெஞ்சுசோடு அணைக்கவே ..... பாய் கின்றான் - அடக்காதீர் .... அடக்கினால் உங்கள் நெஞ்சின் ..... பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்
 2. தமிழன் ஜல்லி கட்டுக்காக ....... மட்டும் இங்கு போராடவில்லை ...... தமிழனை ஒரு சில்லியாய் ..... நினைக்காதே என்பதற்கு ........ சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!! ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ...... காளைகள் கூட அடங்காமல் ...... சீறிப்பாய்ந்தன காளையை ..... அடக்குபவன் சீறிப்பாய் வான் .... எனபதை மறந்து விடீர்களே .......??? போதும் உங்கள் அடக்குமுறை ...... இதற்கு மேல் அடக்கினால் ...... அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!! தூபமிடாதீர்கள் இளைஞரின் ...... உணர்வுகளுக்கு தீயாக மாறினால் ..... தாங்கவே மாட்டீர்கள் ...............!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்
 3. ஆங்கில புத்தாண்டே என்..... காதல் சொன்ன தினம்..... அதுவே என் காதலர் தினம்.....!!! அவள் சொன்ன வார்தையே..... ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்..... இன்று பல ஆண்டுகள் ஆயினும்...... அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!! என்ன வேண்டும் உனகென்றேன் ....... உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் ....... பாக்கியம் வேண்டுமென்றாள்........... கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்....... வெளியூரில் வேலை செய்வதால்.....!!! ^ கவி நாட்டியரசர். கவிப்புயல் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ ++++++யாழ்ப்பாணம்+++++++ நீ நட்புக்காக..... பழகுகிறாயா ...? காதலுக்கு .... பழகுகிறாயா ...? கண்டுபிடிக்க முன்.... படாத பாடு படும் மனம் ...!!! பூ பறிக்கப்படுவது...... இரண்டு சந்தர்பத்தில்.. ஒன்று இறைவனுக்கு.... மற்றையது காதலுக்கு... இரண்டுமே ஏக்கம்.... தந்து வரம்கிடைக்கும் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
 4. இரவில் ,,,,, நீ தரும் இன்பமும் ..... நினைவுகளும்.... நான் காணும் கனவும்.... என் ஏக்கமுமே...... பகலில்........ வரிகளாக வந்து..... வார்த்தைகளாய் உருவாகி.... கவிதையாய் படைக்கிறேன்.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
 5. நிலத்தில் கோடுகள் வறுமை கோடானது நீடிய வறட்சி & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
 6. இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி @ கடத்தல்காரன் கையில் பணம் வன அதிகாரிகள் பாராமுகம் ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் @ காடழிப்பு ஆற்று நீர் ஆவியானது புலம்பெயரும் அகதியானது கொக்கு @
 7. காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள் தாயின் கையை தட்டி விட்டது குழந்தை நிலா சோறு & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ வயல் நிலங்கள் வெடித்தது வறட்சியால் பயிர்கள் இறப்பு வெட்டிய மரங்களின் சாபம் & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
 8. மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே பூசகரும் பூரண சைவம் கோயிலில் மச்ச அவதார சிலை & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ பண்பாடுகள் பாழாய் போகிறது கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
 9. -------------- ஓடுகின்ற நீரில் ஒட்டி நின்று இரைதேடும் மீன் குஞ்சுபோல் ...!!! நீ வரும் பாதையை.... ஒழுங்கை ஒன்றில்... ஒட்டி நின்று... ஓரக்கண்ணால்... பார்க்கிறேன் ....!!! சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன் ---------- நீ ................. சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. முத்தாய் இருக்கிறாய் ....! சிறு மழைதுளிதான் முத்தாக மாறுவது போல் ... உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் ..........! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..? & கவிப்புயல் இனியவன்
 10. இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! ^^^^^ நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^^^^^ காதலில் கண்ணீர் ... வரவில்லையென்றால் ..... இன்பமில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன் சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் ------------------------------------ காதல் அழகும் ... அழுக்கும் நிறைந்தது ... ஆனாலும் அழகு ...!!! ^^^^^ கண்ணுக்குள்.... கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! ^^^^^ என் காதல் நினைவு உன் காதல் நினைவு எப்படி தாங்கும் என் இதயம் ....!!! ^^^^^^ கவிப்புயல் இனியவன்
 11. இனிய பொங்கல் வாழ்த்துகள் இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!! இரவு பகலாய் வயலில் புரண்டு...... இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து..... இன் முகத்தோடு அறுவடை செய்து..... இவுலகுக்கே உணவு படைக்கும்..... இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு..... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!
 12. பாசத்தோடும் .... அன்போடும் ...... இரக்கத்தோடும் .... வளர்த்த குழந்தையிடம் எதிர்பார்ப்புடனும் ... ஒரு கேள்வி கேட்டேன்...?? * யாரை ரொம்பப் பிடிக்கும் ? * ஒரு நொடி கூட தயங்காமல் ... தோழியின் பெயரைச் சொல்லி... நட்பைப் பெருமைப்படுத்திவிட்டாள் ...!!! ^^^ கவிப்புயல் , கவி நாட்டியரசர் + + + இனியவன் + + +
 13. நீ ...... என்னை ஒரு கனமேனும்.... காதலிக்காமல் நான் உயிர்.... துறக்க போவதில்லை ...!!! என் ............... காதல் நினைவுகளை.............. வீட்டின் ஒட்டடைபோல்......... துடைத்து எறிந்து விட்டாயே ...!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 184 காதற்ற ............ ஊசியும் கூட..... வராது என்பது..... உண்மைதான் ...!!! நீ ............. காதோரம் பேசிய..... வார்த்தைகள்... கல்லறை வரை....... தொடருதே ....!!! உன்னை ''''''''''' கண்ட நாள் முதல்'''''''''''''''' உள்ளங்கையில் இருக்கும்''''''''''''''''' ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 185
 14. நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
 15. எனக்காக கவிதை எழுது.... என்று அடம் பிடிகிறாய்..... எழுதிய கவிதையில் நீ இல்லாத ஒரு கவிதையை.... சொல் பார்க்கலாம்........? போராட்டம் தான் காதல்...... எனக்கு உன்னை பார்க்காத.... பொழுதெல்லாம் போர்க்களம்.... ஆகுறது மனசு.........!!! உன்னை சந்திக்கும்..... நேரமெல்லாம் உன் அருகில் .... இருக்கவே தோன்றுகிறது...... காதலில் தவிர்ப்பும் அழகு......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 182
 16. மனதில் இருள் ஆடையில் வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் காயவில்லை கிழிந்த ஆடை @@@ கார் கதவை திறந்து சலுயூட் அடித்தான் காவலாளி இறங்கி வந்தது நாய் @@@ கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
 17. காதல்....... ஆனந்த கண்ணீரில்... ஆரம்பித்து....... ஆறுதல் கண்ணீரில்..... முடிகிறது..........!!! முகில்களுக்கிடையே.... காதல் விரிசல்....... வானத்தின் கண்ணீர்...... மழை..........................!!! நான் வெங்காயம் இல்லை.... என்றாலும் உன்னை..... பார்த்தவுடன் கண்ணீர்.... வருகிறது................!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல்
 18. மெல்லிய ..... வலியால் பிரசவித்ததே ...... கஸல் கவிதை ..........!!! கவிதையை ..... ரசிக்கிறாய் என்றால் ..... நீயும் என்னைப்போல் .... வலியை சுமக்கிறாய் .....!!! அவள் கண்ணில் .... இப்போ தான் பட்டாள்...... இதய சேதவிபரம் ...... இன்னும் தெரியவில்லை .....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் மெல்லிய வலி கவிதை
 19. கண்கள் ..... சந்திக்கமுன் .... யாவரும் ..... சந்தோசமாய் .... இருந்தோம் .......!!! நான் புகையிரதம் ..... நீ தண்டவாளம் ..... அனுமதித்தால்..... பயணம் தொடரும் ....!!! உயிர் கூட ..... இரட்டை வேடம் .... போடுகிறது ...... இருந்தால் உயிர் .... மறைந்தால் சாவு .....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் மெல்லிய வலி கவிதை உயிரை வதைப்பது ..... தண்டனை குற்றம் ..... உயிரே உனக்கு ..... தெரியுமா .............? கண் இமைக்கும் .... கணப்பொழுதில் .... நடக்கும் விபத்து ..... காதல் .......................!!! காதல் .... இல்லாத இடத்திலும் ..... இருக்கும் ...... காதல் இல்லாத ..... இடமே இல்லை ...........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் மெல்லிய வலி கவிதை
 20. கண்ணீர் ..... காதலின் வலியின்..... திரவம் ........ தண்ணீர் தான்..... மருந்து...........!!! முதலை கண்ணீரை..... நிஜக்கண்ணீரென்று.... நம்பிவிட்டேன்.........!!! காதலில் போடும்.... முடிச்சு திருமணத்தில்.... அவிழ்க்கபடுகிறது.........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் 02 மற்றுமொரு காதல் கஸல்
 21. கோபமான உன் முகத்தை பார்த்தாலே எனக்கு ரசிக்கதான் தோன்றுகிறது உன்னில் கோபமே வரமாட்டேன் என்கிறதே ....!!! & கவிப்புயல் இனியவன் நீ ................. சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. முத்தாய் இருக்கிறாய் ....! சிறு மழைதுளிதான் முத்தாக மாறுவது போல் ... உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் ..........! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..? & கவிப்புயல் இனியவன்
 22. தொழிலாளியை ..... சுரண்டுவதற்கு அவர்களிடம் ...... சதையில்லை ..... எலும்புகள் தான் மீதியாய் ...... இருக்கின்றன ...........!!! குடிகாரர் மட்டுமல்ல ..... அரசியல் வாதிகளும் .... உளறுகிறார் ................!!! நீ தீக்குச்சி தலைக்கனம் .... உன்னை சாம்பலாக்கும் ....!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்
 23. சண்டை போடுவதாயின்... சட்ட சபையில் போடுங்கள்... வீட்டில் சண்டை போட்டால்... சட்டம் தன் கடமையை... செய்யும்........!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ பகல் முழுவதும்.. தன்னை கஷரப்படுதி... உழைக்கிறான்..... இரவு குடும்பத்தை... கஷ்ரப்படுத்துகிறான்....!!! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் ^^^^^ ஆடம்பர வீடு... அழகாக இருக்கிறது... வீட்டில் இருக்கும்... சில்லறை காசு ... துர் நாற்றம் வீசுகிறது....! சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்
 24. ஒவ்வொரு பிறந்த நாள் ..... கொண்டாட்டமும் ..... இறக்கும் நாளின் .... திறப்பு விழா ..............!!! நீ அடையாளப்படும் .... போதுபிரச்சனையை ...... எதிர் கொள்கிறாய் ......!!! மெழுகு திரி ..... தொழிற்சாலையில் ...... உழைப்பாளிகள் .... உயிருள்ள மெழுகுதிரி .......!!! & சமுதாய கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்
 25. அன்புள்ள காதலே .....!!! உன்னை வெறுக்கத்தான் ... துடிக்கிறேன் - நெருப்பின் ..... மேல் விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ...!!! காதலிக்க முன் கற்று கொள்ளுங்கள் ... காதல் நிலையானது ... காதலி நிகழ்தகவானது ...!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 183