கிருத்திகன்7

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    19
  • Joined

  • Last visited

Community Reputation

10 Neutral

About கிருத்திகன்7

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday August 16

Contact Methods

  • Website URL
    http://tamilpp.blogspot.com
  • Skype
    kiruthiskype

Profile Information

  • Gender
    Male
  • Location
    jaffna
  • Interests
    Blog, Web Design, Film Making

Recent Profile Visitors

256 profile views
  1. பகிர்வுக்கு நன்றி கிருபன். இப்போது தான் இந்த பேட்டி பார்த்தேன். //2002 - 2003களில் என்னுடன் கடமையாற்றிய கிருத்திகன் இன்றும் இந்தத்துறையில் இருக்கின்றார்.// 😀 ஞாபகங்கள் அற்புதமானவை. குறிப்பிட்டமைக்கு நன்றி இயக்குனர் ஷாலினி சால்ஸ்.
  2. மனமார்ந்த நன்றிகள் கலைஞன் சகோதரா! யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன். www.facebook.com/kiruthigan ஹா!! ஹா!! நன்றி சகோ 😊😀
  3. வெட்டு கொத்து நடிப்பு : கிருத்திகன் | வரோதயன் | கோபிரஞ்சன் | மயூரப்பிரியன் திரைக்கதை - வசனம் : கிருத்திகன் இயக்கம் : கானா வரோ ஒளிப்பதிவு : நிஷாந்தன் படத்தொகுப்பு : நிரோஷ் இசை : தர்ஷனன் படத்தை பாரத்து முடிந்ததும் படத்தின் முடிவை யாருக்கும் சொல்லாதீர்கள் 😜 அழுத்தும் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்! நன்றி -கிருத்திகன் My facebook page இங்கு க்ளிக் செய்து மூன்று நிமிட வெட்டு கொத்து குறும்படத்தை பாருங்கள்
  4. l தாங்கள் அனுப்பிய இணைப்பு செயலிழந்துள்ளது. 2002ல் கொளதமனின் செருப்பு போன்ற படங்கள் வெறிவந்துள்ளது, ஒரு படைப்பு வெளிவருவது, வேறு ஒரு சினிமா உலகம் துளிர்விடுவது வேறு!
  5. நன்றி சசி வர்மன் அண்ணா தமிழினி அக்காவின் கதை படித்தேன் அருமை. இணைப்பிற்கு நன்றி. கதைக்களங்கள் பற்றிய மேலும் தகவல்கள் இருப்பின் தெரியப்படுத்தி உதவுங்கள். யாழ்ப்பாணத்தில் பிரசன்ன விதானகே, அசோக் ஹந்தகம ஆகிய சிங்கள இயக்குனர்கள் என்னையும் இன்னும் சில கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கினார்கள். இன்னும் நாம் நிறைய முன்னேற வேண்டியுள்ளது. மீண்டும் காத்திரமான கருத்துகளுக்கு நன்றி. நன்றி SUVY சகோ! முதன்முதலில் சிங்கள படங்களை தயாரித்ததும், இந்திய தமிழ்படங்களை இலங்கையில் திரையிட்டதும் தமிழர்கள் தான். முதலீட்டில் இந்திய படங்களுடன் போட்டியிடவே முடியாது, கதை விடையத்தில் இனி சாத்திய படலாம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடையங்களை பகிர்ந்துள்ளீர்கள். வாடைக்காற்று போன்ற இலங்கை தமிழ் படங்கள் அக்காலத்தில் திரையரங்கை விட்டு தூக்கியதும் பாடசாலைகளில் காண்பிக்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளேன். 83க்கு பின் வந்த படங்களில் நல்ல பேச்சு தமிழ், மக்கள் அவலங்கள் வெளிப்பட்டன, நிதர்சனம் இவற்றை தயாரித்திருந்தது. புலம்பெயர் தமிழரின் அடுத்த தலைமுறையில் இத்தகைய நல்ல படங்கள் வருமா என்பது சந்தேகமே! நமது இனத்தின் வாழ்வியலை சினிமாவில் உலக அரங்கில் பதிவுசெய்ய வேண்டியது நம் கடமை, மீண்டும் நன்றிகள்.
  6. வணக்கம் உறவுகளே! மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு. 2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது. இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது, நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள் நமது சினிமா ஊடாகவே உலக அரங்கில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய கட்டாயமும் நமக்கே இருக்கின்றது. சினிமா அடித்தட்டு மக்களிடையேயும் ஆளப்பதியும் வலிமையான ஊடகம். ஈழகலைஞர்களுக்கு ஓர்படைப்பை உருவாக்குவதில் தம் உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் போது முதல் தடை பணம், அதை தாண்டி படைப்பை உருவாக்கினால் ஊடகங்கள் தென்னிந்திய சினிமாவுக்கும், விளையாட்டு செய்திகளுக்கும், கள்ள தொடர்பு செய்திகளுக்கும் ஒதுக்கும் இடத்தில் ஒரு பகுதியை கூட ஈழசினிமா கலைஞர்களுக்கு ஒதுக்க தயங்கும். இதனால் சாதாரண மக்களுக்கு இங்கிருந்தும் படைப்புகள் வருகிறது என்ற செய்தியே தெரியாமலுள்ளது. அதையும் தாண்டி படத்தை முடித்து திரையரங்கிற்கோ, இறுவட்டுகளையோ பணம்கொடுத்து பார்க்க மக்களுக்கு ஆர்வமில்லை, இதனால் அடுத்த படைப்பை தயாரிக்க இருந்த பணமும் தர்ம கணக்கில் போய்விட்டதால் மறுபடியும் முயற்சி செய்ய முடியாத நிலை. நல்ல கதைகளை வைத்து கொண்டு தயாரிப்பாளர் கிடைக்காமல் சிலர், தயாரிப்பாளர் கிடைத்துவிட்டாரே என்பதற்காக கதையே இல்லாமல் படத்தை உருவாக்கும் சிலர், தரமற்ற படைப்புகளை 'இது தான் ஈழசினிமா' என நம்பி பார்த்ததால் அடுத்த படைப்பை பார்க்க தயங்கும் பார்வையாளர்கள். அரசாங்க அனுமதி, தியேட்டர் அனுமதி, வெளிப்புற படப்பிடிப்புக்கான பொலிஸ் அனுமதி இன்னும் பல அனுமதிகள் கிடைப்பதிலுள்ள சிக்கல்கள் இவற்றை தாண்டி வரும் படைப்பாளிகளின் முயற்சிகள் சிலவற்றையே நாம் யூடியூப்பில் இலவசமாக பார்வையிடுகின்றோம். என்றாவது நமக்கான சினிமா உருவாகும், செலவளிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் பயனிருக்கும், தென்னிந்திய கலைஞர்களுக்கு நமது மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை போல் நமது கலைஞர்களையும் அங்கீகரிப்பார்கள், ஓர் படத்திற்கு உழைக்கும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்கள், படத்தொகுப்பாளர்கள் அனைவருக்கும் நமது சினிமா வணிகரீதியில் பணமீட்டி சம்பளம் கொடுக்கும் காலம் வரும், நமது சினிமாவை நம் மண்ணின் படைப்புகளை நமது மக்களும் புலம்பெயர் உறவுகளினதும் பேராதரவுடன் உலக அரங்கில் தலைநிமிர்ந்து பயணிக்கும் என நம்புகிறேன். மேலும் நமது சினிமா வணிகரீதியில் முன்னேறுவதற்கும், படைப்புகளின் தரங்களில் முன்னேற்றமடையவும் தங்கள் ஆலோசனைகள், கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி நண்பர்களே! -கிருத்திகன்
  7. வன்னியிலிருந்து வெளிவந்த 'அம்மா நலமா? அனைவரும் சுகமா?' பாடலுக்கு இசையமைத்து மக்கள் மனதை வென்ற இசைப்பிரியன் அவர்களுடைய இசை மற்றும் குரலில் 'வெள்ளை பூக்கள்' குறும்படத்திற்காக வெளியான பாடல் இது.. எனது காதல் அழகிய காதல் நீ தந்து போனாய் பெண்ணே! என ஆரம்பிக்கும் இப்பாடலின் வரிகளை நெடுந்தீவு முகிலன் எழுதியுள்ளார். கிருத்திகன் , இந்து நடிப்பில் யாழ்ப்பாணத்து கிராமிய பாடலாக இப்படைப்பு வெளிவந்துள்ளது. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள . https://m.youtube.com/watch?v=GrqjbOcNhWs நன்றி :)
  8. M Entertainment நிறுவன வெளியீட்டில் Colombo MBZ நிறுவனத்தின் தயாரிப்பில் கிருத்திகன் ஒளிப்பதிவில் உருவாகி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் என் சுவாசமே வீடியோ ஆல்பம் இங்கே! தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் தமது கலாசாரங்கள், பண்பாடுகளை ஈழ சினிமா மூலம் வெளிப்படுத்த முயலும் இக்காலப்பகுதியில் அங்குள்ள கலைஞர்களை கொண்டு இலங்கையின் பிரபல சினிமா நிறுவனங்களும் களத்தில் இறங்கி தமது படைப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள் http://m.youtube.com/watch?v=KYKJt-erQes நன்றி.
  9. நன்றி Sasi Varnam தங்கள் பேராதரவுக்கும் அன்புக்கும் நன்றிகள் புங்கையூரன் சகோதரா! :)
  10. பாடசாலை நட்பு பள்ளி நாட்களை தாண்டியும் தொடரும் அனைத்து உறவுகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம். யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களே இதில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் நடிகர்களாக பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம். கிருத்திகன் இயக்கத்தில் வெளிவந்த இப்பாடல் அனைவரிடமும் பிரபலமாகி போனது. இணையத்திலும் முகப்புத்தகத்திலும் விரும்பி பகிரப்பட்டது, சினிஉலகம் விமர்சனம் http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104686/ இயக்குனர் கிருத்திகன் பேட்டி http://www.jaffnahindu.org/news/interview-with-young-hindu-director-kuhendran-kiruthigan-103.html இணையத்தளங்கள் கல்லூரி படையணி பாடலை பற்றஇ http://www.e-jaffna.com/archives/25634 இலங்கையின் பிரபல Mp3 Download தளத்தில் கிருத்திகனின் கல்லூரி படையணி பாடல் http://m.music.lk/download.php?index=15534 பாடலை பார்வையிட இங்கு க்ளிக் செய்யுங்கள் http://m.youtube.com/watch?v=9iconxKni-Q நன்றி.
  11. படத்தை பார்வையிட இந்ந இணைப்பை க்ளிக் செய்யுங்கள் :)
  12. வாழ்த்துக்கள் சுதர்சன்,
  13. யாழ்ப்பாண பெற்றோரின் வெளிநாட்டு மோகத்தால் பள்ளிச்சிறுமி ஒருத்தியின் வாழ்விலேற்படும் விபரீத முடிவு பற்றிய உண்மைக்கதை ஒன்றை குறும்படமாக தந்துள்ளோம். யாழ்ப்பாணம் HNBதிரையரங்கு, கொழும்பு ஈரோஸ் திரையரங்கு, பிரான்ஸ், லண்டன், ஹட்டன், இணுவில் கந்தசுவாமி கோவில், நல்லூர் ஆலைய முன்றல், வேம்படி பாடசாலை, மட்டக்களப்பு என பல இடங்களில் திரையிடப்பட்ட குறும்படம் தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. கானா வரோ இயக்கத்தில், கிருத்திகன் ஜன்னி நடிப்பில் தர்ஷன்ன் இசையில் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்த குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. http://m.youtube.com/watch?v=weag-YKuTuA
  14. கடந்தவருடம் நண்பர்களின் படைப்புகளான சூனியவளையம், தழும்பு ஆகியவை தேர்வாகியிருந்தது இம்முறையும் பல படைப்புகள் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  15. வாழ்த்துக்கள் சகோ, மேலும் பல படைப்புகளை உருவாக்கி ஈழசினிமாவிற்கு தர வாழ்த்துக்கள்.