Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    15061
  • Joined

  • Last visited

  • Days Won

    167

Everything posted by goshan_che

  1. ஓம் இப்படியும் செய்யலாம். அதே போல் மேலே நான் சொன்னவற்றில் கம்பெனிக்கு பதிலாக ஒரு trust ஐ உருவாக்கியும் அதே இறுதிப்பலனை அடையலாம்.
  2. பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது. அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான். உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.
  3. https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣 #லண்டன் #அஜினமோட்டோ
  4. இன்னொரு திரியில் எழுதினேனே முன்னர் “ஓமான்” என அழைக்கப்பட்டு இப்போ “இலண்டன்” என அழைக்கப்படுவோர் பற்றி? அவர்களின் அச்சொட்டிய பிஹேவியர்களில் இதுவும் ஒன்று. முப்பது வருடம் முன் காலையில் எழும்பி பனங் குத்தியில் குந்தியவர்கள், இப்போ போய் அட்டாச் பாத் ரூம் இல்லையா என முகம் சுழிப்பர்🤣. அதே போல், இலண்டலில் BBC Panorama எலிப்புழுக்கையை படம் பிடித்து போட்ட தமிழ் கடைகளில் சப்பு கொட்டி உண்டு விட்டு, சம்பாந்துறையில் அஜினமோட்ட்டோ கூடீட்டு என்பார்கள். உண்மையில் இன, மத பேதமின்றி ஊரில் எல்லா மக்களும் இப்படியானவர்களை காமெடி பீசுகளா நடத்துகிறனர் என்பதே உண்மை🤣. 🤣 சோசல் காசு தரும் அரசாங்கம் என்னிடம் வாங்காத வேலையை - யாழ்களம் வாங்கி விடுகிறதப்பா🤣. துரையப்பா - இவர் ஊருக்கு போன சமயமே என் நிலைபாட்டை அந்த திரியில் எழுதிவிட்டேன். அப்போ நான் எழுதியதை இப்போ லேட் ரியாக்சன் போல கொடுக்கிறார் ராதிகா சிற்சபேசன். Better late than never.
  5. (நேரம் கிடைக்கும் போது) தேடி பகிர்கிறேன். இது சம்பந்தமாக நமக்கிடையே ஒரு சம்பாசணை நடந்தது.
  6. இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை. நான் யாரையும் எதுவும் ஆக்குவதுமில்லை. என்னை யாரும் எதுவும் ஆக்க முடியும் என நம்பவும் இல்லை. நான் பலமுறை சொல்லிவிட்டேன். நான் நீங்கள் நினைக்கும் நபர் இல்லை. எனக்கு நீங்கள் வைத்துள்ள உத்தேச வயது கூட மிகவும் அதிகம். ஆனால் என்னை அடையாளத்தை வெளிகொணர்வதில் இப்போதைக்கு எனக்கு உடன்பாடில்லை. நான் யார் என சொல்லி விட்டால் பிறகு நினைத்ததை எழுத முடியாது. அது தேவையும் இல்லாதது. அதேபோல் என் தந்தை யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர், ஹாஸ்டலில் தங்கி படித்தார். அவருக்கும் ஏனையோருக்கும் முள்ளு கரண்டியால் சாப்பிடும் முறை, எந்த கரண்டியை எப்படி, எந்த நேரத்தில் பாவிக்க வேண்டும் என்பதை, டைகட்டும் விதத்தை, சூ பாலிஷ் அடிப்பது, நேரம் தவறாமை இப்படி பலதை அதிபர் ஸ்மித் சொல்லி கொடுத்தார் என்பது பற்றி எல்லாம் முன்பே யாழில் எழுதியுமுள்ளேன் என நினைக்கிறேன்.
  7. ஜனாதிபதி சிங்களத்தில் பேசியதை இடை மறித்து நான் மொழிபெயர்கட்டுமா என கேட்டுவிட்டு, சிங்களத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்த அதிகாரி 🤣🤣🤣
  8. ஓ…உங்கள் வயதை வைத்து நீங்கள் இலங்கையில் வேலை செய்திருக்க கூடும் என நினைத்தேன். நானும் இலங்கையில் வேலை செய்யவில்லை, ஆனால் பெற்றாரின் விடயங்களை கையாளும் போது இது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.
  9. மேலே உள்ள திரியில் இலங்கையில் உள்ள பென்சன் பற்றிய சில தரவுகள் உள்ளன. இலங்கை ஒன்றும் G7 நாடு அல்ல. ஆனால் அங்கும் வேலையில் இருப்போருக்கு EPF இருக்கிறது. இலங்கையில் வேலை செய்த உங்களுக்கும் அநேகமாக இது இருக்கும். இந்த EPF சேமலாபம் ஓய்வுதியத்தின் போது ஒரு lump sum ஆக கொடுக்கப்படும். அதை வங்கியில் இட்டு, அதில் வரும் வட்டி, கீழ் வரம்புக்கு மேலே போவோருக்கு வரி என்பது எனக்கு நியாயமாகவே படுகிறது. இதை விட அரச ஊழியருக்கு மாதாந்த பென்சன். இத்தோடு 70+ வயதினர், மாதம் 3,000 கீழ் வருமானம் எனில், 2000 கொடுக்கப்படுகிறது. அதே போலவே மருத்துவமும் இலவசம். அமெரிக்காவில் தனியார் காப்புறுதி இல்லாவிடில் - கான்சர் வந்தால் சாவுதான் என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இலங்கையில் முடிந்தளவு அரசு செலவில் வைத்தியம் பார்ப்பார்கள். எனக்கு தெரியும் பல புலம்பெயர் தமிழர் பெற்றாரின் கணக்கில் பணத்தை வைப்பிட்டு, வயது முதிர்வால் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகை, வட்டி வீதங்களை அனுபவித்தனர். நான் மேலே எழுதியது போல் - நாடு வங்குரோத்தானமைக்கு இப்படியான loopholes உம் காரணம். அதை இப்போ அடைக்கிறார்கள். கிரிஸ் வங்குரோத்தான போதும் இது நடந்தது. https://www.oecd-ilibrary.org/sites/51b9c616-en/index.html?itemId=/content/component/51b9c616-en#:~:text=For comparison with other countries,on sex-specific mortality rates.&text=Senior Citizens over 70 years,payment of LKR 2 000.
  10. நான் யாழை தவிர வேறு எங்கும் எழுதுவதில்லை. பராக்கு பார்ப்பதோடு சரி. வேறு எங்கும் எழுத வேண்டிய தேவையும் எனக்கில்லை. என்னை பொறுத்து ஈழதமிழரின் அபிப்பிராயம் எனபதை அறிய யாழை தவிர வேறு திறமான இடம் இல்லை. பேச்சோடு பேச்சாக உங்களை சின்னப்பொடியள் லிஸ்டில் சேர்துள்ளதை கண்டிக்கிறேன்🤣. ஈழத்தமிழர் பெரும்பான்மையானோர் இன்றும் தமிழக அரசியலில் நடு நிலமைதான். சோசல் மீடியாவில் நாதக ஆதரவு உள்ளது ஆனால் தமிழ் நாட்டு தேர்தலில் 10% தாண்ட முக்கும். அதே போலதான் ஈழதமிழரில் உரக்க கத்துதும் சிறுபான்மை நாதக விசுவாசிகள். ஆனால் பெரும்பான்மை கட்சி சாராதோர்.
  11. அப்படி யாரும் சொல்லவில்லை. ஆனால் ஈழத்தமிழர் தளங்களில் எல்லாம், நாதக அபிமானம், திக,திமுக, அதிமுக, விசிக, மதிமுக மீதான விமர்சனம் மட்டுமே முன்வைக்கப்படின் - அப்படி ஒரு மாயத்தோற்றம் எழுவது தவிர்க்கவியலாலது.
  12. எனக்கு ஒரு புரட்சியும் நடத்தும் எண்ணமில்லை. ஒட்டுமொத்த ஈழதமிழரும் சீமான் பின்னால் என்ற மாயையை உடைக்க என்னால் எது முடியுமோ அதை மட்டுமே செய்கிறேன். மற்றும்படி சோசல் மீடியாவில் தேர்தல் வைத்தால் நாம் தமிழர் அமரிக்க காங்கிரசையே கைப்பற்றும் என்பதை நானும் ஏற்கிறேன்.
  13. எனது கேள்வி காளியம்மாள் பற்றிய தற்போதைய கருத்துக்கள் சர்சைகள் பற்றியதல்ல.
  14. வேட்டியை மட்டும்தான் உருவலாம்…. இப்படி ஜொக்காவையும் சேர்த்து உருவக்கூடாது….அனுமதியில்லை🤣 என்னிடம் இரெண்டு சாறம் மட்டுமே உள்ளது. மற்றும்படி வீட்டில் வேட்டிதான். சமர் எண்டால் ஐயப்பன் வேட்டி கட்டி பீச்சுக்கு போகலாம், வெள்ளைகாரிகள் எல்லாம் very trendy என பார்ப்பார்கள்🤣.
  15. பகிடி, நீங்கள் கேட்ட கேள்வியை நான் சரியாக விளங்கி கொண்டுள்ளேன் எனில், இலங்கை பிரஜாஉரிமை இல்லாமல் எப்படி ஒரு கனேடியன் சிட்டிசனாக இந்த காணியை உங்க பெயருக்கு மாற்ற முடியும் என்பதா? அப்படி எனில், short answer is முடியாது. இலங்கையில் வெளிநாட்டு பிரசைகள் காணியின் freehold ஐ வாங்க முடியாது. இதைத்தான் உங்கள் இலங்கை வக்கீலும் கூறியுள்ளார். ஆனால் பின்வரும் நடைமுறைகள் மூலம் இதை வளைய வரலாம் (circumvent). 1. காணியின் freehold ஐ அம்மா, அப்பாவிடமே விட்டு விட்டு, அதற்கு ஒரு 99 வருட லீஸ் ஹோல்டை எடுத்தல். அவர்களிற்கு பின் freehold ற்கு என்ன நடக்கும் ? புள்ளி 3 ஐ பார்க்கவும். 2. ஒரு கம்பெனியை தாபித்து அதன் பெயரில் freehold ஐ மாற்றி விட்டு, கம்பெனியிடம் இருந்து நீங்கள் லீஸ் ஹோல்டை பெறல் - வெளி நாட்டினராக நீங்கள் 49% கம்பெனி பங்குகளை மட்டுமே வைத்திருக்கலாம். ஆனால் கம்பெனி உருவாக்கும் போது, உங்கள் அனுமதியின்றி சொத்துக்களை எதுவும் செய்ய முடியாது என சரத்துகளை உருவாக்கி உங்கள் உரிமையை பாதுகாக்கலாம். 3. இதை உங்கள் வக்கீலிடம் கதைத்து பாருங்கள். இலங்கை சட்டத்தில் ஒரு loophole உள்ளதாக சொல்லப்படுகிறது. வெளி நாட்டினர் காணியை வாங்க முடியாது, ஆனால் பெற்றாரின் சொத்து அவர்களின் வாரிசுகளுக்குத்தான் செல்லும். இங்கே வாரிசுகள் வெளி நாட்டு பிரசைகள் என்றால் சொத்துக்கு என்னாகும்? என்ற கேள்வி தெளிவில்லாமல் உள்ளதாம். ஆகவே பெற்றாரின் காலத்தின் பின் - “வாங்குதல்” என இல்லாமல் சொத்து சந்ததி மாறல் என்ற வகையில் நீங்கள் இதை அடையக்கூடும். ஆனால் இது தெளிவில்லாததும், ரிஸ்க் அதி கூடியதுமாகும். 4. மிக பாதுகாப்பானது- சிக்கல் அறவே இல்லாதது - நீங்கள் மீள இலங்கை இரட்டை குடியுரிமையை எடுப்பது. பிள்ளைகளிற்கும் எடுத்து வைக்கலாம். சொத்துரிமை சந்ததிகளிற்கு பாதுகாக்கப்படும். ஒரே சிக்கல் - சில வேலைகள் வெளிநாட்டில் அந்த நாட்டு பிரசை/இரெட்டை குடியுரிமை இருந்தால் தரமாட்டார்கள். இது பிள்ளைகளை பின்னாளில் பாதிக்கலாம். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் - அவர்கள் காணியை விற்று விட்டு, இலங்கை குடியுரிமையை உதறலாம். பிகு 3வது ஆப்சன் பற்றி மேலதிகமாக அறிந்தால் இங்கே பகிரவும். ஒரு condominium அடுக்கு மடியில் 4ம் மாடி அல்லது அதற்கு மேல், அல்லது எந்த சொத்திலும் லீஸ் ஹோல்ட் மட்டுமே வைத்திருக்கலாம். 4ம் மாடிக்கு குறைந்த அல்லது காணியாக freehold ஐ வெளிநாட்டினர் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கவில்லை.
  16. பொய்யோ, மெய்யோ, பழசோ, புதிசோ…. யாழ்களத்தில், புலம்பெயர் மக்கள் மத்தியில், இலங்கை சோமாலியா ஆகிவிட்டது என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைக்க வேணும். பழைய காணொளி, புதிய செய்தி என மாறி, மாறி போட்டு அடித்து வாசகர்களை குழப்பி விட வேண்டும். அதுதான் சிறிதரன் அரசியலுக்கு உவப்பானது. அப்போதுதான் அவரின் தகிடுதத்தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டர்கள். அதற்குமாறா யாரும் போய் உண்மையை கண்டு வந்து எழுதினால் - அவர்கள் மீது வடை, பாயாசம், வடை சுட்ட சட்டி ஈறாக எறியப்படும். இவ்வண், #சிறிதரன் ஆமி - இலண்டன் கிளை🤣
  17. 🤣 ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். (நாங்களும் கெட்டவார்த்தைல திட்டுவம்ல🤣)
  18. பாவம் அந்த பொடியும்….தாத்தா…தாத்தா எண்டு பின்னால திரியுது🤣
  19. ஆனால் இந்த முன்னேற்றம் கி ஜேர்மன் சமதர்மத்தை கைவிடும் வரை ஏற்படவில்லை என்பதும் சரிதானே?
  20. கஞ்சா கடத்தும் ஆட்களிடம் காசு வாங்கும் கள்ளர் கூட்டம் திமுக. சரிதானே? இந்த கள்ளர்களோடு யோக்கியருக்கு இரவில் என்ன போன் பேசும் தேவை? எதை என்றாலும் நேரடியாக மேடையில் சொல்லலாம். பிகு திரி தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நீள்கிறது. இத்தோடு விடுவோம். ஒரே ஒரு கேள்வி : மேலே தோழர் சொன்ன low hanging fruits ஐ தன்னும் நாதக அடையாவிட்டால், அது ஒரு பின்னடைவு என்பதை ஏற்பீர்களா? இன்னொரு கேள்வி: நாதகவில் சீமானை கழட்டி விட்டு காளியம்மாள் போன்றோரை விஜை சேர்த்தால் உங்கள் ஆதரவு யாருக்கு?
  21. கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போதல்ல. அங்கிருந்து மேற்குக்கு அனுமதியின்றி வரும் போது உயிராபத்தை தாம் எதிர்கொண்டதாக சிலர் என்னிடம் கூறினர். அது ஒரு சிலராக இருக்கலாம். ஆனால் சட்டப்படியோ, விரோதமாகவோ, ஏன் சமதர்ம கி-ஜே யில் தங்காமல், முதலாளிதுவ மே-ஜே வந்தார்கள்? ஏதோ ஒரு வகையில் முதலாளிதுவ அமைப்பு விரும்பதக்கது என்பதால்தானே? முதலாளிதுவ சட்ட அமைப்பிலும் இதற்கு வழி உண்டு. குற்றம் தீர்த்த பின் (conviction), தண்டனை (sentencing) இன்னொரு தீர்ப்பாக தீமானிக்கபடும். தண்டனையின் அளவை தீர்மானிக்கும் போது, அளவை கூட்டும், குறைக்கும் காரணிகள் ஆராயப்பட்டு (aggravating and mitigating factors) அதன் படியே தண்டனை வழங்கப்படும். உதராணமாக ஒரு கடையில் களவு எடுத்தவர் சாதாரண ஆள் எனில் கிடைக்கும் தண்டனையை விட அவர் நம்பிக்கைக்கு பாத்திரமான காவலாளி எனில் தண்டனை கூடும். 2 மடங்கு இல்லை. ஆனால் குறித்த சதவீததால்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.