Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   70

  • Content count

   36,732


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   51

  • Content count

   33,714


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   34

  • Content count

   21,449


 4. MEERA

  MEERA

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   30

  • Content count

   2,338Popular Content

Showing most liked content since 01/11/2017 in all areas

 1. 11 likes
 2. அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., என்னிலும் ஒருவயதால் மூத்தவன் அவன். நான் அவனை அண்ணாவென்றும் அவன் என்னை அக்காச்சியென்றும் அழைத்துக் கொள்வோம். என்னோடு கூடப்பிறக்காதவன். ஆனால் அதிகம் என்னை நேசித்தவர்களுள் அவனும் ஒருவன். அண்ணா என்ற சொல்லை எனக்கு அர்த்தப்படுத்தியவன். ஓரு காலத்தின் பெருவீரம் அவன். அவனுக்கான பாதுகாவலர் தொடக்கம் களங்கள் சமர்கள் அவனை அடையாளப்படுத்திய காலங்களில் அவன் பெயர் அறிமுகமாகியது. பின்னர் அவனே உறவாகினான் அண்ணாவாக. காலங்கள் போக கடமைகள் பணிகள் அவனோடும் பயணிக்கத் தொடங்கிய போது தினசரி பேசவும் விடயங்களைப் பகிரவும் வழியமைத்தது காலம். எதையும் ஒளிவுமறைவின்றி பேசக்கூடிய நெருக்கத்தை காலம் தந்தது. மணிக்கணக்காய் தொலைபேசவும் சேர்ந்து பிடித்த பாடல்கள் கேட்கவும் தொடங்கினோம். நாம் வௌ;வேறு நாடுகளில் இருந்தாலும் இணையம் தொலைபேசி இவையே எங்களது உறவுப்பாலம். நேரில் சந்தித்துக் கொள்ளவோ அடிக்கடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளவோ எதையும் நாம் செய்து கொண்டதில்லை. காலை மாலை மதியம் இரவு என பேச வேண்டிய தருணங்களில் பேசிக்கொள்வோம். காலம் எங்களையும் நெருப்பில் போட்டு சோதித்த காலங்களையும் நாங்கள் சந்தித்தோம். அப்போதெல்லாம் ஆளாளுக்கு துயர் பகிரவும் கண்ணீர் விட்டு அழவும் காற்றலைகளே எங்களுக்கு கைக்குட்டையாகியது. ஆறுதல் சொல்லி என்னை அமைதிப்படுத்திய நம்பிக்கைகளில் அவனுக்கு பெரும்பங்குண்டு. அக்காச்சி நீங்கள் அழப்படாது. நீங்கள் சாதனைப்பெண். நீங்கள் செய்ய ஆயிரக்கணக்கில பணிகள் இருக்கு. உங்களைப் புரிந்து வாழத் தெரியாத ஒருவரால் உலகில் யாரோடும் வாழ முடியாது. இப்படித்தான் என் அழுகையின் நிமிடங்களை ஆற்றுப்படுத்திய அண்ணா அவன். என் வாழ்வைத் தெருவில் இழுத்து வைத்து காலம் பங்கிடத் தொடங்கிய போது அவன் அருகில் இருக்கவில்லை. தொலைபேசி வழியாக தினம் தினம் என்னை தைரியப்படுத்திய அவனது வார்த்தைகளும் அவன் அனுப்பும் பாடல்களும் இன்றும் என் ஞாபகங்களில் பத்திரமாய். எல்லோருமே ஒரு கட்டத்தில் தற்கொலை பற்றி யோசித்திருப்போம். அப்படி பலமுறை நானும் எண்ணியதுண்டு. என் மனநிலையைத் தானே புரிந்து கொண்டு பலமுறை சொல்லியிருக்கிறான். அக்காச்சி என்ன பிரச்சனையும் வரட்டும் அதை தாண்டி நாங்கள் தான் வர வேணும். எந்தவிதமான அவசர முடிவுகளும் எடுக்கப்படாது. உங்களுக்கு எந்த நேரம் என்ன தேவையெண்டாலும் என்னோடை கதையுங்கோ நானிருக்கிறேன். ஓண்டுக்கும் யோசிக்கப்படாது. நல்லா சாப்பிடுங்கோ நித்திரை கொள்ளுங்கோ இதுவும் கடந்து போகும். பலருக்கு நான் சொன்ன அறிவுரைகள் தைரியமூட்டல்களை அவன் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான். என்ன சமையல் ? சாப்பிட்டீங்களோ ? தினசரி அவனது அக்கறையும் விசாரிப்புமே பல தருணங்களில் எனக்கு உணவின் சுவையை ஞாபகப்படுத்தியிருக்கிறது. தன் வாழ்வின் கடந்து வந்த பயங்கரங்களை துயரங்களை ஏமாற்றங்களைச் சொல்லிச் சொல்லி என்னை தைரியப்படுத்திய நம்பிக்கை அவன். நான் மனம் குழம்பிய தருணங்களை அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான். என்னாலை ஏலாதாமண்ணா வரவர தொல்லை கூடுது. செத்திடலாம் போல. பிரிஞ்சு போறதுதான் இனி வேறை முடிவு எனக்கு தெரியேல்ல. இரத்த உறவுகள் கூட பழிசொல்லி ஊரெங்கும் என்பற்றி எழுதப்பட்ட பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுவைக்க வேண்டிய தேவையை 2012ம் ஏப்றல் மாதம் எடுத்த போது முழுமையாக என்னைப்புரிந்து கொண்ட முதலாம் ஆள் அவன்தான். பழிசொன்னவர்கள் எல்லோரும் என் இரத்த உறவுகள் , காணும் போதெல்லாம் கைநீட்டி அணைத்த நண்பர்கள் பலரும் இருந்தார்கள். யாருமே துணைக்கு வராமல் நான் தனித்து நின்ற போது.., நான் உங்களை நம்பிறன்..நீங்கள் யோசிக்கப்படாது. ஒவ்வொரு வார்த்தையிலும் என்மீதான தனது நம்பிக்கையை அன்பை அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பான். உது சரிவராது பேசாமல் விடுங்கோ. நீங்கள் தனிய வாழலாம். பதினேழு வருசத் தொல்லைக்கு முடிவு கட்ட அவன் தந்த முதல் அனுமதி. இனி யாரும் ஆலோசனை ஆதரவு தர வேண்டாமென்றிருந்தது அவன் தந்த ஆறுதல் தன்னம்பிக்கை. நீ இரும்புப்பெண் நீ நெருப்பு நீ வீரம் என அடிக்கடி என்னை ஊதிஊதி அணையாமல் காத்தவன். கவனமாயிருங்கோ. வெளியில போக வர உங்களை பின்தொடரும் ஆக்கள் எல்லாரையும் அவதானியுங்கோ. காசைக்குடுத்தா ஆபிரிக்கனோ எவனோ எதுவும் செய்ய முடியும். எங்கடை இனத்துக்கு நீங்கள் வேணும். உங்களால எத்தனையோ பேர் வாழுகினம் அவைக்காக நீங்கள் வாழ வேணும். மனம் அமைதியைத் தொலைத்து அந்தரிக்கும் நேரங்களில் அவன் என் அந்தரிப்பை ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டு அழைப்பான். வீட்டுக்குள்ளிருந்து என்னை மரணம் துரத்துவதை கொலைஞன் என்னை கொல்லும் கனவோடிருப்பதை அண்ணாவின் அன்போடும் பாதுகாப்பாளனின் அவதானங்களோடும் அடிக்கடி உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். ஓருநாள் விடியற்காலை 5.30இற்கு அழைத்தான். அக்காச்சி எனக்கு இரவிரவா நித்திரையில்லை. உங்களைக் கனவு கண்டனான். கவனம். உங்களுக்கு பெரும் சிக்கல் வரப்போகுது. வுpடியட்டுமெண்டுதான் இரவு எடுக்கேல்ல. இரத்தக்காயம் காணப்போறமாதிரியிருக்கு. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு எனக்கும் ஏதோ மனம் அமைதி தொலைந்து போயிருந்தது. அன்று பலமுறை அவன் அழைத்தான். அடிக்கடி கவனம் சொல்லிக் கொண்டிருந்தான். அன்றைக்குப் பின்னேரம்....> எனது மன அமைதி நிம்மதி குலைத்து அதில் மகிழும் என்வாழ்வை ஊரூராய் விற்கும் எமன் என் வீட்டுக்கதவை உடைத்தான். நான் நிதானிக்க முதல் என்னை மரணம் நெருங்கியிருந்தது. முதல் உங்களைப் பாதுகாக்க கையில எது கிடைக்குதோ அதை கையில எடுங்கோ. அவன் அடிக்கடி சொல்வது போல என்னை பாதுகாக்க நான் வைத்திருந்த கோடரி அன்று என்னை பாதுகாத்தது. மறுநாள் என் அண்ணாவை அழைத்தேன். அவன் எச்சரித்தது போல அன்று எனது உயிர் போக இருந்ததைச் சொன்ன போது.., நான் வரட்டே அக்காச்சி ? ஏன் அந்தரிப்பை அழுகையை கேட்டவன் உடனே யேர்மனி வருவதாக நின்றான். இல்லை நான் சமாளிக்கிறன் நில்லுங்கோ பாப்பம். உடனடியாக ஒரு பணயம் வெளிக்கிடுவதில் உள்ள சிக்கலை நானும் அறிவேன். அவனது வேலை இன்னொரு நாட்டிலிருந்து வந்து போவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அவனை வர வேண்டாமென்றேன். ஆனால் யாராவது அருகில் இருந்தால் மனம் அமைதி பெறும் போலிருந்தது. அன்றைய அந்தரத்தை அவன் தொலைபேசியூடாக கதைத்துக் கதைத்து என்னை ஆற்றினான். ஓவ்வொரு வார்த்தையும் என்னைப் பாதுகாப்பதில் தான் இருந்தது. நானெல்லாம் இந்த உலகத்துக்குப் பெரிய ஆளில்லையண்ணா. சொல்லும் போதெல்லாம் உங்கடை பலம் உங்களுக்கு விளங்கேல்ல. சொல்லிச் சொல்லிப் பலம் தந்தான். புதினேழு வருடப்பிணியிடமிருந்து விலகிக்கொள்ளுமாறு பிள்ளைகளும் வலியுறுத்திய போது 'இனியென்ன யோசிக்கப் போறியள்' விட்டுத்துலையுங்கோ. அவனும் தந்த துணிச்சலோடு என் முடிவை நிரந்தரமாய் மாற்றிக் கொண்டேன். இனி கருணையில்லை இரக்கமில்லை மன்னிப்பில்லை. ஓரே முடிவு. என் முடிவை எடுத்த போது.., இனித்தான் நீங்கள் கவனமா இயங்க வேண்டிய தருணம். உங்களைக் கோபப்படுத்த வேணுமெண்டு பிரச்சனையளைத் தருவினம். உங்கடை மன அமைதியை குழப்பி மனம் சமநிலையில்லாமல் அந்தரிக்க வைப்பினம் , எதையும் யோசிக்கப்படாது உங்கடை இலக்கு அது மட்டும் தான் இப்ப உங்கடை கண்ணில கனவில நினைவில. சுரியோ. தினமும் தொலைபேசுவோம். சட்டத்தை நாடி என் காலத்தை மாற்றும் தருணத்துக்காக ஓடிக்கொண்டிருந்தேன். அவனது இருபது வருடக்காதல் கைகூடி வந்த தருணம் அது. அவனது மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இப்போது நான் அவனுக்கு ஆலோசகராகியிருந்தேன். என்ர வாழ்க்கையில எல்லா தருணங்களிலயும் நீங்களும் இருந்திருக்கிறியள் அக்காச்சி. நான் சோர்ந்த நேரங்களில அழுத நேரங்களில நீங்கள் தந்த ஆறுதல் ஆற்றுப்படுத்தல் எவ்வளவு பெரிய நம்பிக்கை தந்தனீங்கள். வாழ்க்கையில நான் மறக்க முடியாதவர் நீங்கள். மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்திட்டு செத்திட்டாலும் அதுதான் மகிழ்சியண்ணா. உங்கடை வாழ்க்கையை நீங்கள் வாழுங்கோ. இடையில வாறவையளை விலத்திக் கொண்டு நடவுங்கோ. அடடு;தவைக்காகவே வாழ்ந்த என்னால இண்டைக்கு என்னத்தை சாதிக்க முடிஞ்சது? உங்களுக்குப் பசிச்சா இந்தக் கதைசொல்றவை யாரும் உங்களுக்காக சாப்பிடமாட்டினம். உங்களுக்கு நித்திரை வந்தா உங்களுக்காக யாரும் நித்திரை கொள்ளமாட்டினம். ஏன் உங்களுக்கு ஒருயூரோ அவசர தேவையெண்டால் கூட தரமாட்டினம். கைதர வேண்டிய நேரத்தில கைவிட்டு ஓடுற ஆக்கள் தானனண்ணா இந்த உறவுகள். நான் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவன் அன்றைக்குத் தான் இறுதியாய் நிறைய நேரம் கதைத்தான். வுpடியற்காலை 3மணிவரையும் பேசிவிட்டு உறங்கப் போனான். இன்னொருவருக்கு இலகுவாய் ஆற்றுப்படுத்தல் செய்யும் நம்மால் நம்மை ஆற்றுப்படுத்த இன்னொருவரையே நம்புகிறோம். நாங்கள் இருவரும் ஆளாளுக்கு நம்பிக்கையாயிருந்து நமது துயர்களை தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்தோம். தனது காதலியை அறிமுகம் செய்தான். என்பற்றி அவளுக்கும் நிறையச் சொல்லியிருக்கிறான் என்பதை அவனது காதலி பேசுகிற தருணங்களில் பகிர்ந்து கொள்வாள். நாம் பேசிக்கொள்ளும் நேரங்கள் குறைந்தது. அவனாக எடுத்தாலன்றி நான் அவனை தொல்லைப்படுத்த விரும்பியதில்லை. தனக்குப் பிடித்த வாழ்வை அவன் வாழத் தொடங்கினான். ஒருநாள் அழைத்தான். கலியாணம் செய்யப்போறன். நீங்கள் வரவேணும். திருமணநாள் குறித்ததும் முதலில் எனக்குத் தான் அறிவித்தான். திருமண அழைப்பிதழ் அனுப்பினான். அவனது திருமணவிழாவுக்கு போக வேண்டுமென நினைத்திருந்தும் அந்த சந்தர்ப்பம் தவறியது. கோவிக்கவில்லை என் நிலையை புரிந்து கொண்டான். சரி பிள்ளைக்கு பிறந்தநாளுக்கு சொல்லுங்கோ வாறன். பின்ன அக்காச்சிக்குச் சொல்லாமல்? சிரித்தான். அவ்வப்போது குறுஞ்செய்தியனுப்புவான் சுகநலன்களைக் கேட்டுக் கொள்வான். எப்போதாவது தொலைபேசுவான். பழைய பாடல்கள் பகிடிகள் கதைகள் பற்றியும் பரிமாறிக் கொள்வோம். 2016 அவனது பிறந்தநாளன்று குறுஞ்செய்தியனுப்பினேன். வருடம் வருடம் தொலைபேசியில் வாழ்த்தும் நான் குறுஞ்செய்தியனுப்பிய போது நன்றியென்று பதிலிட்டான். மறுநாள் தொலைபேசியில் அழைத்தான். எனக்கும் சட்டப்படி தொல்லை நீங்கீட்டுதண்ணா. சொன்ன போது இனி நீங்கள் நிம்மதியா இருங்கோ. இருப்பியள். இதயம் நிறைய வாழ்த்தினான். மனம் நிறைந்த அவனது வாழ்த்து மீண்டும் தைரியம் தந்தது. 2016 கிறிஸ்மஸ் வந்தது அவன் வாழ்த்து வரவில்லை. புதுவருடம் வந்தது அன்றும் வாழ்த்து வரவில்லை. அந்த நாட்களில் அவனது வாழ்த்தை எதிர்பார்த்திருந்தேன். என்ர அண்ணாச்சி என்னை மறந்து போயிட்டார். நண்பனுக்குச் சொன்னேன். இந்தமுறை அவரும் நீங்கள் வாழ்த்தேல்லயெண்டு நினைச்சிருக்கக்கூடுமெல்லோ ? நீங்கள் புதவருட வாழ்த்து அனுப்புங்கோ. நண்பன் சொன்ன போது எனக்கும் அது சரிதானெனப்பட்டது. அவனது மனைவியின் இலக்கத்திற்கு புதவருட வாழ்த்து அனுப்பினேன். அக்காச்சி எப்பிடி சுகம் ? ஏன் தொடர்பில்லை ? என்ன செய்றியள் ? மறந்திட்டியளோ எங்களை ? எப்ப இங்காலை வாறியள்? மறுமுனையில் இருந்து வந்த அக்கறையும் அன்பும் மீண்டும் எங்களது பழைய நாட்களை நினைவுபடுத்தியது. நண்பன் சொன்னது போல அவர்களும் எனது வாழ்த்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அக்கா நாங்கள் அம்மா அப்பா ஆகப்போறம். நான் சொன்னது போல அவர்களது குழந்தையின் பிறந்தநாளுக்கு போக வேணும் மனதுக்குள் குறித்துக் கொண்டேன். 10.01.2017 இன்று கொஞ்சம் மனச்சோர்வாக இருக்கிறது. அவன் நினைவுகளில் நீண்ட நேரம் வந்து போகிறான். கதைக்க வேண்டும் போலிருந்தது. அவனும் நானும் சேர்ந்து கேட்ட பாடல்களை யூரியூப்பில் கேட்கத் தொடங்கினேன். ரிதம் படத்தில் வரும் 'நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே' என்ற பாடல் பற்றி ஒருமுறை அதிகம் பேசிக்கொண்டோம். இன்றைக்கு நதியே நதியே பாடல் 30வது தடவை தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னை ஒருகாலம் தாங்கி என் நம்பிக்கையாய் நின்று என்னை உயிர்ப்பித்தவன் தந்த நம்பிக்கைகள் நினைவுகளாகி அடிக்கடி சோர்கிற போது புத்துயிர் தந்து கொண்டேயிருந்தது. என்மீது அவன் கொண்ட நம்பிக்கை தந்த ஆற்றுப்படுத்தல் அன்புக்காக கைமாறாக கூலி வாங்காத கூலி கேட்காத சுயநலமில்லாத தூயவன். இவன் என்னோடு கூடிப்பிறந்திருக்கலாம். காலம் அந்த வாய்ப்பைத் தரவில்லை. கடந்து வந்த தடங்களில் ஏத்தனையோ பேர் வந்தார்கள் போனார்கள் பணிகளோடு கடமைகளோடு. அத்தனைபேரிலும் பலரை மறந்து போயிற்று. நினைவுகளில் அவர்கள் முகங்கள் கூட சரியாக நினைவுவருவதில்லை. சிலர் காலமும் காவிவரும் புனிதமானவர்களாகி என்னோடு பயணிக்கிறார்கள். என்னோடு தொடரும் உறவுகளில் அவனும் சக பயணியாக வந்து கொண்டேயிருக்கிறான். சாந்தி நேசக்கரம் 10.01.2017 https://mullaimann.blogspot.de/2017/01/blog-post.html
  8 likes
 3. 7 likes
 4. அடிப்படையான தவறுகளை கண்டுகொள்ளாமல் விவாதம் வெறுமனே அரசியல் மயப்படுத்தப்படுகிறது. எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் உள்ளது. என்றாலும் தமிழர்களை இனப்படுகொலை செய்யவே இந்த திடடம் என்று வாதிப்பது இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்க நகைசுவை. தமிழர்கள் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாலும் சிந்திக்க முனைவது அவர்களுக்கும் மனித குலத்துக்கும் நன்மை பயக்கும். பொருத்தது வீடு என்ற கருதுகோளில் எந்த தவறும் இல்லை. இன்று சீனா பொருத்து வீடுகளை உலகெங்கும் கொண்டைனர்களில் அனுப்புகிறது. நான் வசிக்கும் நாட்டிலே அத்தகைய ஒரு கட்டுமானத்தில் தற்போது ஈடுபட்டுள்ளேன். வளர்ச்சியடைந்த நாடுகளில் அந்த நாடுகளில் உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு இசையவே இந்த பொருத்து வீடுகள் அமைக்கப்படுகிறது. பல அரச நிறுவனங்களிடம் வெவ்வேறு அம்சங்களுக்கு அனுமதி பெற்ற பின்னரே இந்த வீடுகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறல்ல. பல் தேசிய நிறுவனங்கள் ஒரு அமைச்சரை பிடித்து தங்கள் எச்சங்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இலங்கையில் கொட்டிவிட்டு காசு சம்பாதிக்கின்றன. உலக சந்தையில் உருக்கின் விலை வீட்சியால் லட்சுமி மிட்டேலின் வியாபாரம் சென்ற வருடம் பெரும் நட்டத்தை கண்டது. விற்பனை தேங்கியது. அதை ஈடுகட்டுவதற்குத்தான் இலங்கை உதவுகிறதே தவிர மக்களின் நலனுக்காக அல்ல. இதே போன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் சுனாமி வந்த சூட்டொடு தெற்கிலே ஆயிரக்கணக்கான வீடுகள் அமைக்கப்பட்ட்து. அந்த வேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Director General ஆகவிருந்த எனது பல்கலைக்கழக நன்பனிடம் விசாரித்தபோது தனக்கு ஏதும் தெரியாது என்றான். அமைச்சர்களாலும் ஜனாதிபதியாலும் நிறைவேற்றப்படும் எந்த திட்ட்ங்களுக்கும் தங்களிடம் அனுமதி பெறுவதில்லை என கவலையுடன் கூறினான். ஏதோ தருகிறார்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ல இது ஒன்றும் அமச்சர்களின் சொந்த பணத்தில் செய்யும் தானமல்ல. மக்களுடைய கலாசாரத்துக்கும் மண்ணுக்கும் ஏற்ற வீடமைப்புகள் என சம்பந்தப்படட அரச நிறுவனங்கள் அங்கீகரித்த திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஏதும் இல்லாத ஏழைகள் எதை தந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நினைப்பில் பெருமுதலைகள் பொருளீட்ட அனுமதிப்பது எங்களை நாங்களே ஏமாற்ற இடம் கொடுப்பதாகும். மேலும் இலவசமாக வீடுகள் வழங்குவதை விட அவர்களே வீடுகளை அமைக்க நிதி வழங்குவது அவர்களை அந்த வீட்டுடன் கலாசார பொருளாதார ரீதியில் இணைக்க உதவும். இதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மிகப்பெரிய வெற்றி கண்டார். இதை பற்றி நிறைய எழுதலாம் பேசலாம்.
  7 likes
 5. குமாரசாமி அண்ணா, போல், மீரா, வாத்தியார், நீங்கள் எல்லாம் உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் கருத்துக்கள் கூறுகின்றீர்களா அல்லது உலகில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அங்கே தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெறும் விடயங்கள் மட்டும் எல்லாம் நேர்த்தியாக, நீதி, நேர்மையின்படி நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? பிச்சைக்காரர்கள், அடிமைகளாக உள்ளவர்களுக்கு எஜமான்கள் எறிகின்ற எலும்புத்துண்டுகளும் இல்லையென்றால் ஜீவனோபாய போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? 1990ம் ஆண்டு நாம் இடம்பெயர்ந்தபோது சொந்தவீடு இல்லை, வருமானம் இல்லை, ஆதரிக்க எவரும் இல்லை. அரசாங்கம் கொடுத்த நிவாரணப்பொருட்களும் கிடைத்திருக்காவிட்டால் வேறுவழி இல்லாமல் இயக்கத்தில் இணைவதே ஒரேயொரு தீர்வாய் அமைந்து இருக்கும். நாம் இடம்பெயந்து நட்டாற்றில் கைவிடப்பட்டதற்கு யார் காரணம் என்ற தர்க்கம் தேவையில்லை. ஆனால், அங்கே கடைசியில் கைகொடுத்தது கப்பல்களில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்களே. அரிசியில் கல்லை மண்ணை கலந்து அனுப்பினாலும் அதை ஏற்றுக்கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. இது ஓர் உதாரணம். இந்தக்கோணத்திலேயே நான் பொருத்துவீடுகளை பார்க்கின்றேன். இங்கே இருந்து நாங்கள் எதுவும் கதைக்கலாம், எழுதலாம். ஆனால், கடைசியில் அங்கே அரசாங்கம் என்ன செய்கின்றதோ அதுதான் யதார்த்தம். தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று பாடத்திட்டத்தில் அச்சிடப்பட்டால் பரீட்சை வரும்போது வந்தேறு குடிகள் என்று மறுமொழி எழுதினால்தான் புள்ளி. எங்கள் கெட்டித்தனத்தை காட்ட நினைத்தால் முட்டைதான் வரும். அரசாங்கம் சொல்வதுதான் வேதவாக்கு. முரண்டுபிடித்தால் இழப்பு அங்கே வாழும் மக்களுக்குத்தான். ஒவ்வொரு திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தும்போதும் எவ்வளவோ தில்லுமுள்ளுக்கள் நடக்கின்றன. அரசியல்லாபம் பார்ப்பவனே அரசியல்வாதி. வியாபாரத்தில் இலாபம் பார்ப்பவனே வியாபாரி. தமக்கு லாபம் இல்லாமல் எவருமே எதிலும் இறங்கமாட்டார்கள். நாங்கள் பொருத்துவீட்டு விசயத்தில் அதிபுத்திசாலிகளாக எங்களை காட்டிக்கொள்ள முயன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்கள் கிடைக்காதவண்ணம் விசயங்களை இழுத்தடிப்பதாகவே எனக்குப்படுகின்றது. வெறும் அரிசியை பெற்றுக்கொண்டு கஞ்சியை மட்டும் செய்து குடிக்கக்கூடியதாக உள்ள நிலமையில் நாங்கள் இட்லி, சாம்பார் கிடைத்தால்தான் உண்போம் அல்லது உண்ணாவிரதம் செய்வோம் என்பதுபோல் இருக்கின்றது உங்கள் பலரின் வாதம். பொருத்துவீட்டில் ஏதாவது விபத்துக்கள், இடர்ப்பாடுகள் எதிர்காலத்தில் வந்தால் அதற்கு பதில்கூறவேண்டிய தார்மீககடமை அந்ததிட்டத்தை உருவாக்கி செயற்படுத்துபவர்களுக்கு உள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் உண்மையான ஜனநாயக விழுமியங்கள், நீதி, நேர்மை உள்ள ஆட்சியில். அவை இல்லாத இடத்தில் எதுவுமே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் நடக்கப்போவது இல்லை. அலைவரும்போதே தலைமுழுகு!
  5 likes
 6. இரண்டாம் உலகப் போரிலே தோற்ற நாடுகள்தான் (ஜப்பான் + ஜெர்மனி) உலகை பின்னர் புதிய தொழில் நுட்பத்தால் வெற்றிகொண்டன. பழமையை பேசி புதியன புகுதலை மூர்க்கமாக எதிர்காது புதியன செய்து உலகை தமதாக்கினார். இன்று சீனா இந்தியா போலல்லாது அந்த வகையில் உலகை பொருளாதார நிலையில் ஆடசி செய்கிறது. எமது பாரம்பரியமென்று கொங்கிறீட் சுவரும் ஓட்டு வீடும்தான் வேண்டும் என்று கேட்பது எம்மை முன்னேற விடாது. மேலும் இந்த கொங்கிறீட் எங்களின் பாரம்பரியத்தில் வந்ததும் இல்லை. இன்றுவரை கட்டப்படும் வீடுகள் கூட எமது சூழலுக்கும் மக்களுக்கும் இசைய காலப்போக்கில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்படட ஐரோப்பிய வீடமைப்புகளே. எமது பாரம்பரிய வட்ட வீடுகள் நாற்சார் வீடுகள் காலனித்துவ ஆடசிகாலத்தில் முற்றாக கைவிடப்படடன. சூழலுக்கும் எமது மக்களுக்கும் பொருத்தமான புதிய வீடமைப்புகள் உருவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை யுத்தம் அல்லது யுத்தத்தில் அழிவு அல்லது தோல்வி நமக்கு வழங்கியுள்ளது. அதை சரிவர பயன்படுத்தும் ஆற்றலும் அறிவும் எம்மிடம் நிறையவே உள்ளது. மகாவலி அபிவிருத்தி திடடத்தின்போது எனது சக சிங்கள கடடடக்கலைஞர்களால் மிக கவனமாக நீண்ட ஆய்வுகள், மாதிரி அமைப்புகள் ஊடாக புதிய வீடமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. வெறும் வீடுகள் மட்டுமன்றி கிராமங்களே வடிவமைக்கப்படடன. இப்போது வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் வீடுகளின் கடடமைப்புகளில் எமது கடடடக் கலைஞர்களின், நாடு நகர திட்டவியலாளர்களின் பங்களிப்பே இல்லை என்பதை திடமாக சொல்லலாம். கல்வி அறிவற்ற அரசியல் பலமற்ற ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த விளையாடடை மேட்ற்கு நாடுகளால் செய்ய முடியாமல் உள்ளது. ஆனால் இலங்கை அவர்கள் விளையாட களம் அமைத்து கொடுக்கிறது. அதுவும் கல்வியில் உயர் நிலையில் இருந்த வடக்கு மக்களுக்கு. இது மிகவும் வேதனையானது. மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் கீழ் நிலையில் உள்ளதை காட்டுகிறது. அவர்களுக்கு எந்த அரசியல் பலமும் இல்லை என்பதை காட்டுகிறது. இப்போது நிறுவப்படும் வீடுகள் மக்களுடைய கலாசாரத்தையும், சூழலையும், சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பெரும் அளவில் பாதிக்கும் என நிறுவுவதற்கு அதிக அறிவு தேவை இல்லை. அதை எழுத இப்போதுகால அவகாசமில்லை. முடிந்தால் விரைவில் நீண்ட கட்டுரையே எழுதுகிறேன். . பிரேமதாசாவின் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து மிக பெரிய சம்பளத்தில் நான்கு நிபுணர்கள் 1984இல் 3 வருட ஒப்பந்தத்தில் வீடமைக்க வந்திருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம் இருந்த அமைப்புகளை பிரதி பண்ணி சில பொருத்தமில்லாத மாற்றங்களை செய்து சமர்ப்பித்தார்கள். மிகவும் ஆற்றலும் துணிவும் உள்ள எனது மேலதிகாரி (Turner Wickramasinge) அவர்களின் கையாலாகாத்தனத்தை விமர்சித்தது போராடி ஏழு மாதத்துள் அவர்களை நாட்டிடை விட்டு வெளியேற வைத்தார். பிரேமதாசாவுக்கு அது தோல்வியானாலும் உண்மையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை முறித்தார். இப்போது தேவையானது பிரேமதாச போன்ற அரசியல் தலைவர்களும் விக்ரமசிங்கே போன்ற அதிகாரிகளுமே. மக்களுக்கு சரியான வழியை காட்டும் பொறுப்பு கற்றவர்களுக்கு தலைவர்களுக்கும் உண்டு. மக்கள் விரும்புகிறார்கள். ஏன் தடுக்கிறீர்கள் என்றால் நாங்கள் கற்று என்ன பயன்.
  4 likes
 7. இவங்க நியூ இயர் நைட் பார்ட்டிக்காக வைய்ட் பண்ணல ..... புடிச்ச தலைவன் படத்தை பார்க்க காத்திருக்கல ! நம்ம அடையாளத்துக்காக குளிர்ல படுத்திருக்காங்க . சென்னை மெரினாவில் விடிய விடிய போராட்டம் .
  4 likes
 8. இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம். - ஆடம்பரம் கௌரவம் - மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை - இயற்கை வளங்கள் இயற்கை மாசுபடுதல் பற்றிய போதிய அறிவூட்டல் இல்லாமை களி மண்ணால் சீமெந்து போல் அடுக்கு மாடிகள் கட்ட முடியாவிடினும் மரப் பலகையையும் சேர்த்தால் விசாலமான மாடி வீட்டினை அமைக்கலாம். மண் வீடுகளின் அனுகூலங்கள் சில - 100 வீதம் இயற்கையானது - இலவசமானது - வீடு கட்ட வேண்டிய இடத்திலேயே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம் - சுகாதாரமானது - சீமெந்தை விடச் சுலபமாகக் கையாளலாம் - மண் சுவர் வீட்டினுள் காற்றின் ஈரப் பதனைச் சீராக்கும் - தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி இல்லாமல் நாமே கட்டிக் கொள்ளலாம் - மண்சுவர் சிறந்த ஒலித் தடுப்பைக் கொண்டது - 0 வீதமான CO2 வெளியேற்றப் படுவதால் சுற்றாடலையும் பாதுகாக்கிறது இவை எல்லாவற்றையும் விட இயற்கையோடு இணைந்த வாழ்வு என்ற திருப்தியைத் தரும். பாதகங்கள் சில - வெள்ளப்பெருக்கைத் தாக்குப் பிடிப்பது கடினம் - சுவர்கள் அகலமாக இருக்கும் - கூரை சற்று அகலமானதாக இருக்க வேண்டும் - சீமெந்து வீட்டை விடப் பராமரிப்பு அதிகமாக இருக்கும் வாசித்து அறிந்து கொண்டவற்றையும் எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது. - தொடரும் -
  4 likes
 9. என்னது அக்காவா?கிழிஞ்சுது கிருஸ்ணகிரி போகேக்கை எனக்கும் சொல்லுங்கோ.இந்த வயகிரா போத்தலை எடுத்து ஒழிச்சு போட்டாங்கள்.தேடி எடுத்து கொண்டு வாறன்.
  4 likes
 10. 4 likes
 11. நீங்கள் அவிக்கின்றபடியால் மற்றவர்களையும் அப்படி நினைக்க வேண்டாம். யாழ்ப்பாணத்தில் வருடக்கணக்காக சிறீலங்கா புலனாய்வினரே இல்லை என்று அவித்த ஆள் அல்லவா தாங்கள். அங்குள்ள மக்களை பற்றி எழுத உங்களை விட எனக்கு மிக அதிக உரிமை உள்ளது.
  4 likes
 12. அந்த இறுதி வரிகள் அருமை.. அதேபோல் பால் குடிப்பது, இறைச்சி சாப்பிடுவது, KFC, McDonald's போன்ற காட்டுமிராண்டி வேலைகளையும் நிறுத்த வேண்டும் கொழும்பான்..
  4 likes
 13. 4 likes
 14. காஸ்மீரில் தினமும் உயிர் இழக்கும் நமது சிப்பாய்களை நினைத்து பெருமையடைகிறேன்.. அவர்களின் தியாகத்தின் முன்பு யாரும் ஈடு இணை இல்லை .. அதை திசை திருப்புவதற்காக எதிர்கட்சிகள் செய்யும் அல்ப விளையாட்டுகளுக்கு நாம் அடி பணிய போவது இல்லை..!! இப்படிக்கு புரியாணி ஜெயம் பார்டி செய்தி தொடர்பாளர் : சுனா பானா... டிஸ்கி : எவன் எங்க செத்த எனக்கு என்ன ? செத்து ஒழிங்க நாராதி... களா ... ஏற்கனவே பூமி லோடு அதிகமாகி அதன் சுற்று பாதையில் இருந்து விலகுவதாக அறிகிறன் .. நீங்க எல்லாம் தனி தனியாக இல்லாமல் ...மொத்தமா மேலே போனால் பூமி பாரம் குறையும் . பூமியும் தனது சுற்று பாதையில் இயங்கும் குறிப்பாக நிறைய இனங்கள் இறையமையோடு வாழும் ..!!
  4 likes
 15. நீங்கள் எழுதியதை மீண்டும் வாசியுங்கள். சிங்கள பகுதியில் அறிமுகப்படுத்தப்படாத பொருத்து வீடு தமிழருக்கு கொண்டு வரும்போது அதில் உள்ள சிக்கல் விளங்கவில்லையா? 90ம் ஆண்டு நீங்கள் மட்டும் இடம்பெயரவில்லை ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள், கப்பலில் வந்த உணவை நீங்கள் மட்டுமல்ல இலட்சக்கணக்கான மக்களும் உண்டார்கள் புலிகளும் உண்டார்கள். அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே தவிர அரசாங்கத்திற்காக மக்கள் அல்ல. மக்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு அடிமைகள் எனும் தொனியில் எழுதியுள்ளீர்கள், ஆயுத போராட்ட கால சூழ்நிலைகளும் தற்போதைய சூழ்நிலைகளும் ஒன்றல்ல.
  4 likes
 16. கோழிப்புக்கை,றால்புக்கை,கீரைப்புட்டு,எண்ணைப்புட்டு,வத்தல்கறி,பிரட்டல்கறி எண்டு அந்தமாதிரி சாப்பாடுகளுக்கு வடமராட்சியை கேட்டுத்தான்.... எல்லாம் அவையின்ரை கைராசியப்பா.. மூண்டு பேரும் வாழ்க்கையிலை அரைவாசியை இழந்துட்டிங்க... ஏன்....ஏன்...கண்ணிலை காட்டக்கூடாது? எங்கையோ சமைக்கத்தெரியாத இடத்திலை கையை நனைச்சிட்டீங்க மேடம்
  4 likes
 17. 1. திட்டத்தை அமுல்பபடுத்துபவர்கள் அரசாங்கம் 2. திட்டம் யாருக்காக? அந்த நாட்டு வரியிறுப்பீளராகிய குடிமக்களுக்கு. 3. திட்டத்தை எதிப்பவர்களில் முக்கியமானவர்கள் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள். 4. திட்டத்தை இங்கு விமர்சிப்பவர்களும் நாட்டு குடிமக்களே. அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வரும போது அதை விமர்சிக்க கருத்து சொல்ல அந்த நாட்டு குடிமக்களுக்கு உரிமை உண்டு. நிலைமை இப்படி இருக்க வீட்டு திட்டத்தை விமர்சிப்பது விடுத்து நீ வழங்கலாமே என்று ஒரு தனி நபரிடம் கேள்வி கேட்டு வடிகட்டிய முட்டாள்்தனமாக விதண்டாவதம் புரிந்தால் யார் தான என்ன செய்ய முடியும். இந்த பொருத்து வீட்டு திட்டத்தை அமுல் படுத்தாவிட்டால் மக்களுக்கு வீடு இல்லை என்று அரசாங்கள் அறிவித்துவிட்டதா? இல்லையே. அப்படியிருக்க பொருத்து வீட்டை விமர்சிப்பவர்களுடன் நீங்கள் பாய்வது ஏனோ? அதை கல் வீடுகளாக அதிக மக்களுக்கு உதவமுடியும் என்றே கூறுகிறார்கள். புலம்பெயர்ந்து வெளி நாட்டில் உல்லாசமாக வாழ்கிறாரகள் என்றால் அப்படி புலம்பெயர்ந்து வாழ்ந்துவிட்டு இறுதிக்காலத்தை உல்லாசமாக கழிக்க அங்கு சென்று வாழ்பவர்களுக்கு உள்ள அதே உரிமை புலம்பெயர்ந்து தற்போது வாழந்துவரும் தாயக மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிவரும் மக்களுக்கும் உண்டு.
  3 likes
 18. நீங்கள் எதோ கூரை தகட்டில் Phd முடிச்ச மாதிரி எங்களுக்கு நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டாம். உங்களை போல நாங்கள் வெளி வேஷம் போடவில்லை. நீங்கள் மட்டும்தான் தமிழ் மக்களை காக்க வந்த ரட்ச்சகர் மற்றவர் எல்லோரும் தமிழர்களுக்கு எதிராவனவர்கள் என்ற உங்களது வாதம் அருவறுக்கத்தக்கது. இதுதான் இந்த திரியில் எனது கடைசி பதிவு.
  3 likes
 19. நட்டு கழண்டது அரையா? இல்ல முழுசா ..? ஏண்டா மின்சாரம் துண்டித்தால் போராட்டம் நின்று விடுமா..?அவனவனிடம் செல்போன் இருக்கு என்ற குறைந்த பட்ச அறிவு வேண்டாம் ? டிஸ்கி : பிரச்சனைய தீர்ப்பதை விட்டு போட்டு .. அரை லூசூ மாதிரி ஒரு சிந்தனை ..
  3 likes
 20. 1. மேலே காட்டப்பட்டுள்ள கூரைத்தகடு பெரும்பாலும் அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றால் செய்யப்படுகின்றது. 2. வெப்பக் கடத்துத்திறன் (Thermal conductivity) என்பது பொருளுக்கு பொருள் மாறுபடும். மேலும் ஒரு பொருளின் வெப்பக் கடத்துத்திறன் ஆனது watts per meter kelvin (W/(m·K) மூலம் அளக்கப்படுகின்றது. 3. மேலே கொடுக்கப் பட்ட அட்டவணையில் அலுமினியத்துக்கான வெப்பக் கடத்துத்திறன் 205W/(m·K) இரும்புக்கான வெப்பக் கடத்துத்திறன் 79.5W/(m·K) உருக்குக்கான வெப்பக் கடத்துத்திறன் 50.2W/(m·K) சீமெந்துக்கான (concrete) வெப்பக் கடத்துத்திறன் 0.8W/(m·K) செங்கலுக்கான (Brick, red) வெப்பக் கடத்துத்திறன் 0.6W/(m·K) ஆகவே மேலே உள்ள தரவுகளின் படி அலுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றின் வெப்பக் கடத்துத்திறன் மிக மிக மிக அதிகம். எனவே லுமினியம் (Aluminium) , இரும்பு (iron) மற்றும் உருக்கு (Steel) என்பவற்றை விட சீமெந்து மற்றும் செங்கல்லு என்பவையே வெப்ப வலைய நாடுகளுக்கு மிகவும் பொருத்தம் . குறிப்பு: இதுவும் விளங்காவிடில் யாராவது physics படித்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். நாங்கள் எதையும் வாசித்து போதுமான அளவு விளங்கிக் கொண்ட பின்புதான் இந்தப் பொது வெளியில் இணைக்கிறோம். மேலும் ஆதாரம் இல்லாமல் விஞ்ஞானம் சம்பந்தமான எதையும் கண்டபடி இணைப்பதில்லை.
  3 likes
 21. 3 likes
 22. நான் வாசித்துத் தெரிந்து கொண்டதிலிருந்து - - பொருத்து வீடுகள் விலை கூடியுது ஆனால் இலகுவாகக் கட்டக் கூடியது. - வெயில் வெப்பத்தையோ குளிரையோ ஒலியையோ தாங்காது (இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டனவா என்று தெரிய வேண்டும்) - வீட்டிற்குள் தீ ஏற்பட்டால் இலகுவாக இடிந்துவிடும் - சரியான பராமரிப்பு இல்லையெனில் அதிக காலம் பாவிக்காது - பராமரிப்பு இலகுவாக இருந்தாலும் திருத்த வேலைகள் செய்வது அல்லது பெருப்பித்தல் இலகுவானதல்ல மேற்கூறியவைகள் பொதுவானவை. கட்டப்பட இருக்கும் வீடுகள் எவ்வாறு வடிவமமைக்கப் பட்டுள்ளன என்று விபரமாக ஆராய்ந்தால் மட்டுமே சரியான நன்மை தீமை பற்றி எழுதலாம். பிரான்சில் பொதுவாக இரும்பு வீடு அமைப்பதற்கு இலகுவாக அனுமதி தர மாட்டார்கள். முன்னர் சொன்னதுபோல் இத் திட்டத்தால் மக்கள் பயன் அடைவதை விட இத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்களே அதிக பயன் அடைவார்கள். அவர்களிடம் பேசி மாற்றீடான திட்டத்தைக் கொண்டு வர முடியுமானால் நல்லது.
  3 likes
 23. 3 likes
 24. யாயினி,நீங்கள் அதிகம் சத்தான உணவுகளாகப் பார்த்து சாப்பிட வேண்டும்.பால்,கீரை,இறைச்சிவகை,பழங்கள் போன்றன...பெண்களுக்கு முதுகு வருத்தம் வாறாது சத்தான உணவு உண்ணாமை என்பது எனது கருத்து...யாராவது வைத்தியம் தெரிந்தவர்கள்,நெடுக்ஸ் போன்றவர்கள் யாயினிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  3 likes
 25. 3 likes
 26. இழுப்பாணி - குழவி சப்பாணி - அம்மி ஆகவே குழவி, அம்மி என்று வரவேண்டும்
  3 likes
 27. அலங்காநல்லூரில் தடையை மீறி... காளைகளை அவிழ்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு- இளைஞர்கள் பெரும் உற்சாகம்!!மதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி மதுரை அருகே அலங்காநல்லூரில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் இக்கருத்து தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாட்டுப் பொங்கலான நேற்று மதுரை பாலமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தடையை மீறி உணர்ச்சி பெருக்குடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தடியடி- கைது: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குவியும் இளைஞர்கள்: இந்த நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தவும் விரைந்துள்ளனர். போலீஸ் குவிப்பு: இதனால் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட போலீசாரும் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கருப்பு கொடி போராட்டம்: அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து குவிவதை தடுக்க வழியெங்கும் சோதனை சாவடிகள் போடப்பட்டுள்ளன. இதனிடையே அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.உச்சகட்ட பதற்றம்: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோயில் காளைகளுக்கு அலங்காநல்லூர் மக்கள் பூஜை நடத்தினர்.வாடிவாசலுக்குள் அனுமதி மறுப்பு: வழக்கமாக கோயில் காளைகளுக்கு பூஜை நடத்தியபின்னர் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்படும். ஆனால் தற்போது வாடிவாசலுக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலை இருக்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. திடீர் ஜல்லிக்கட்டு: இதனிடையே திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு அலங்காநல்லூர் மைதானத்தில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இறக்கிவிடப்பட்டது. சிறிது நேரம் களமாடிய ஜல்லிக்கட்டு காளையை கண்டு அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் சீறிப் பாய்ந்தன. வாடிவாசல் வழியே அல்லாமல் மைதானத்தில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நன்றி தற்ஸ் தமிழ். உலகிலே Studio போய், குடும்ப photo வில் வளர்ப்பு பிள்ளைகளுடன் (மாடு) photo எடுத்த இனம், தமிழ் இனம்.
  3 likes
 28. சரியான பதில்: மின்சாரம் பதில் தந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் இப்போதைய சம்சாரம் விட்டால் வேலை செய்ய மாட்டினம், நாம்தான் முறியனும்
  3 likes
 29. 3 likes
 30. எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை. ஒரு பொருத்து வீட கட்டும் பணத்தில் பல கல்வீடகள் கட்டலாம் என்கிறார்கள்.அப்படி இருக்க பொருத்து வீடுதான் கட்டிக் கொடுப்போம் என்று ஏன் அடம் பிடிக்கிறார்கள். ஒன்றில் இந்த்த்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மறைகேடாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். அல்லது நினைத்த நேரத்தில் அந்த வீடுகளைக் கழட்டி வேறு இடத்தில் பொருத்தலாம் என்பதற்காக இருக்கும்.கல்வீடகள் நிரந்தரமானவை யாராலும் இடம் மாற்றிப் பொருத்த முடியாதவை.தமிழருக்கு நிரந்தர வீடுகளே தேவை.
  3 likes
 31. 3 likes
 32. 3 likes
 33. ஜேசுதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒன்று
  3 likes
 34. இந்தப் பொருத்து வீடுகள் லக்ஸ்மி மித்தாலின் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாக சில வருடங்களுக்கு முன்னர் கேள்விப் பட்டுள்ளேன். விபரம் தெரிந்தவர்கள் உறுதிப் படுத்துங்கள். இவை மித்தால் வீடுகளாக இருந்தால் வீடுகளில் வசிக்கப் போகும் ஏழை மக்களை விட லக்ஸ்மி மித்தால் மற்றும் வீட்டு உடம்படிக்கைகளில் தொடர்புடைய அரசியல் வாதிகள்தான் அதிக பயன் அடைவார்கள். ஏனென்றால் இந்தியா முதல் ஐரோப்பா வரை ஏழை உழைப்பாளிகளின் வையிற்றில் அடித்துக் கொழுத்த உலகின் முதல்தர பணக்காரர்களில் ஒருவர்தான் இந்த லக்ஸ்மி மித்தால். இவ் வீடுகளில் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் asbestos போன்ற ஐரோப்பிய நாடுகளால் முற்றாகத் தடை செய்யப்பட்ட ஆபத்து நிறைந்த மூலக்கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்ற அத்தாட்சியைப் பெற்றிருக்கின்றதா ? அல்லது வேறு ஆபத்தான பொருட்கள் கலந்திருக்கப்படவில்லை என்ற அத்தாட்சிகள் சர்வதேச விதிமுறைகளுக்கேற்றவாறு வழங்கப்பட்டுள்ளனவா ? இது தவிர மலையகத்தில் லயன் வீடுகள் தந்த அனுபவத்தையும் கவனிக்க வேண்டும். பசித்தவனைப் பட்டினி போடுவதை விட எதையாவது உண்ணக் கொடுக்கலாம் என்ற கோட்பாட்டில் பொருத்து வீடுகளை ஆதரிக்கலாம். ஏனென்றால் நாம் வெளிநாட்டில் இருந்து வீரம் பேசுவதை விட வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.
  3 likes
 35. உங்களுக்கு சில கிழமைகளுக்குள் பதில் தருகின்றேன் ஊகத்தில் இல்லை விஞ்ஞான ரீதியாக + மக்களின் மனம் ரீதியாக மக்களின் அவலங்களை படம் எடுக்க விரும்பாத என்னையும் உங்கள் அறியாமையால் அதற்குள் தள்ளுகிறீர்கள் நல்லது நடந்தால் சரி.
  2 likes
 36. மூட்டு வலிகள் வருபவர்கள் இப்படியான பாதுகாப்பு அல்லது நிவாரண அணிகளை அணிந்து பாருங்கள். சில வேளைகளில் நிவாரணம் தரலாம். உணவுவகைகளும் பல நோய் நொடிகளுக்கு காரணமாக இருந்தாலும்...... உலகளாவிய இன்றைய காலநிலைகளும்..... நாகரீக மாற்றங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல வலிகளுக்கு நாகரீக உடைகளும் ஒரு காரணம்...... நிலத்தில் இருந்து சாப்பிட்ட காலம் போய் செற்றி சோபாவில் இருந்து சாப்பிடுகின்றோம். குந்தியிருந்து மலசலம் கழித்த காலம் போய் இன்று கதிரையில் அமர்ந்திருப்பது போல் காலைக்கடன்களை கழிக்கின்றோம். நிலத்தில் இருந்து சாப்பிட்டால் எல்லா அவயங்களுக்கும் பயிற்சி.. குந்தியிருந்து காலைக்கடன்களை கழிக்கும் போது பெருங்குடல் சிறுகுடல் தொடக்கம் சிறுநீரகம் வரைக்கும் புது நிவாரணம் கிடைக்கின்றதாம்..அழுத்தங்கள் மூலம் அனைத்தும் சுகம் பெறுமாம். எம் மூதாதையருக்கு இல்லாத வருத்தங்கள் இன்றைய சமுதாயத்தினருக்கு வருகின்றது கொஞ்சம் சிந்திக்கலாம். மொடேர்ன் வாழ்க்கை மோட்டு வருத்தங்கள். மூட்டு வலிகளுக்கு பாத அணிகள் மிக மிக முக்கியம். வலிகள் உள்ளவர்கள் வைத்தியம் சம்பந்தப்பட்ட பாத அணிகள் விற்பவர்களிடம் கலந்தாலோசித்து வாங்கவும். நிச்சயம் பலன் கிடைக்கும். விலைகள் அதிகம்.ஆனால் நல்ல பலன் கிடைக்கக்கூடும்.
  2 likes
 37. பெண்ணின் வாழ்க்கை முரண்பாடு நிறைந்த வரலாறு
  2 likes
 38. ஒன்றல்ல ஆனால் மத ஸ்தலங்கள் மனிதனுக்கு மதம்பிடிக்க வைக்கிறது அவ்வளவுதான் களுத்துறையை விட்டு பிற இடங்களை நோக்கினால் அதிக கோவில்கள் இந்து கோவில்கள் சரிக்கு சமனாக இருக்கும் போல் எண்ணத்தோன்றுகிறது உதாரணத்திற்க்காக எழுதினேன் மீரா இலங்கையில் யாழ் இணையம் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று தெரியாது ஆனால் நாம் இதுக்க கிடந்து மல்லு க்கட்டுகிறோம் நான் சில செய்திகளை உறுதிப்படுத்த வேண்டுமென்பதற்க்காகவே யாழில் எழுதுவேன் இனி தவிர்க்கலாம் என நினைக்கிறேன் நன்றி . எனக்கு எந்த கோபமும் இல்லை ஒரு தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது என்றால் அந்த தூரம் வரைக்கும் நமது பார்வை செல்லும் அதற்க்கு அப்பால் நடப்பதை யாரும் சொல்ல முடியாது
  2 likes
 39. 2 likes
 40. பாடல் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் ..... படம் : ரிதம் பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கவிதா பாடல் ஆசிரியர் : பாடல் இசை : A.R. ரஹ்மான்
  2 likes
 41. ஜனவரி 15: திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இரண்டடியில் வாழ்க்கை தத்துவத்தை போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் பிறந்த தினம் இன்று கொணாடப்படுகிறது. இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு பிடித்த திருக்குறளை பகிர்ந்து அவரை போற்றுங்கள். 'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்'
  2 likes
 42. உண்மையில் ஆர்வம் இருந்தால் தேடி பதிலை பெற்றுக்கொள்ளவும்! இல்லையென்றால் ஏன் இவை தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கவும். நித்திரை கொள்பபவர் போல நடிப்பவர்களுக்கு பதில் கூறுவது விழலுக்கு இறைத்த நீர் போலவே! ஜீவன் சிவாவின் நோக்கங்களை நாம் அறிவோம்!
  2 likes
 43. முதல் எழுத்தால் நாட்டை ஆளலாம், கடையிரண்டால் வித்தைகளும் காட்டலாம், முதலும் முடிவும் தாத்தாவுக்கு , மூன்றெழுத்து வார்த்தை அது என்ன?
  2 likes
 44. அதிகம் கற்றவனாய் இரு.ஆகப் பிடிவாதக்காரனாய் இருக்காதே
  2 likes
 45. எதோ நாங்கள் வீடில்லாதவர்களுக்கு வீடுகளை வழங்கக்கூடாது என்று கருத்து எழுதுவது போல் பலரும் நினைக்கின்றனர். செய்யும் உதவிகளை செவ்வன செய்யுங்கள் என்பதே எங்கள் கோரிக்கை.
  2 likes
 46. 2 likes
 47. தீயாய் பரவும் தந்திரக்காட்சி ஐநூறு அடி தூரம். பல படிக்கட்டுகள், அகலமான ஸ்நூக்கர் மேசைகள், குறுகலான கட்டைகள், மேடுகள், பள்ளங்கள். அனைத்து தடைகளையும் தாண்டி இறுதி இலக்கான ஸ்நூக்கர் பந்துக்கான பள்ளத்தில் போய் விழுவதைப்போன்ற ஒரு தந்திரக்காட்சி பிரிட்டன் பிரிஸ்டலில் இருக்கும் விளையாட்டு விடுதியில் படம்பிடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஆல்ஸ்டார் விளையாட்டு விடுதியில் இந்த தந்திரக்காட்சி படமாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டது. பல லட்சம் பேர் பார்த்து, பகிர்ந்ததில், சமூக வலைத்தளங்களில் இது தீயாய் பரவி வருகிறது. இந்த காட்சிகளை வடிவமைத்து படமாக்க 11 மணி நேரம் பிடித்ததாக கூறுகிறார்கள் இதை உருவாக்கிய ஆல்ஸ்டார் விளையாட்டு விடுதியின் மேலாளர் ஷேன் ஒஹராவும் அவரது உதவியாளர் டாம் உல்மேனும்.
  2 likes
 48. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தது சுவாமி நாதன் தான். அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான் இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர். மக்களுக்காக வீடுகளோ? அல்லது துருப்பிடிக்கும் இரும்புகளை விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா?
  2 likes
 49. நல்லது கெட்டதை சொல்லி அறிவுறுத்த வேண்டியது நலன் விரும்பிகளின் கடமை. பொருளாதார விஞ்ஞான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கே பொருத்து வீடுகளின் நல்லது கெட்டது தெரியாமல் இருக்கும் போது அங்கிருப்பவர்களுக்கு எப்படி எல்லாம் தெரியப்போகின்றது. பசியின் அவதியை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைவதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா?.
  2 likes
 50. எதோ என்னால் முடிந்தது - தூரம் அதிகம். ஆனாலும் பருந்தும் கருடனும் மாட்டியது சந்தோசம்.
  2 likes