Leaderboard

 1. நவீனன்

  நவீனன்

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   325

  • Content count

   36,732


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   245

  • Content count

   33,714


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   124

  • Content count

   21,448


 4. MEERA

  MEERA

  கருத்துக்கள உறவுகள்


  • Likes

   112

  • Content count

   2,338Popular Content

Showing most liked content since 12/18/2016 in all areas

 1. கிருபன், சுகன், ரதி, ஜீவா, சுபேஸ், ஜஸ்ரின், நிழலி, தப்பிலி, நந்தன், தும்பளையான், சாத்திரி, நுணாவிலான், காவலுர்கண்மணி, பகலவன், ஷாந்தி, சஹாரா, ஈசன், அர்யுன், கோமகன், சுவைப்பிரியன், ஈழத்திருமகன், குளக்காட்டான், மீராபாரதி, தயா, வினித், சபேசன், இளங்கோ, நாரதர், விசுகு, சுவி, புத்தன், புங்iயூரான், மாப்பிள்ளை, சினேகிதி, தமிழிச்சி, சாணக்கியன், பண்டிதர், இணையவன், மோகன், இசைக்கலைஞன், வல்க்கேனோ, அபராஜிதன், வசிசுதா, தூயவன், எழுஞாயிறு, காவடி, அறிவிலி, குறுக்காலபோவான், ஐ.வி.சசி. ப்பிறியசகி, வசம்பு, ஜோக்கர், கரு, துல்பன், ஸ்மோல்பொயின்ற், ஓல்ற்றனேற்றிவ், பரணி, ஆதித்தியஇளம்பிறையன், ஜமுனா, சுண்டல், புலவர், கோஷன், உடையார், வாத்தியார், கறுப்பி, மருதன்கேணி, மாதரசி, யாயினி, நொச்சி, குட்டி, குமாரசாமி, சின்னக்குட்டி, குக்கூ, வசீ, துளசி, சோளியன், பொயெட், சுமேரியர், விசசாயிவிக், அஞ்சரன்.... பத்து வருடங்களாகின்றன யாழில் அங்கத்தவனாகி. இணையவெளி இந்தப் பத்துவருடங்களில் பெரிதும் மாறிவிட்டது. யாழிலும் அந்த மாற்றம் வெட்டவெளிச்சமாக வெளித்தெரிகிறது. எவரிற்கும் நீண்ட நெடிய விவாதங்களில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. இரு வினாடிகளிற்குள் பார்த்துப் பச்சை குத்திவிட்டு நகரும் போக்கே உலகில் வியாபித்திருக்கிறது. வாசிப்பதற்குப் பதில் வீடியோக்களையே மக்கள் நாடுகிறார்கள். அந்தவகையில் யாழும் ஒரு முகநூல் போன்று மட்டும் தொழிற்படுவது தவிர்க்கமுடியாதது தான். இருப்பினும், பத்து வருடங்கள் என்பது நீண்ட காலம். அந்தவகையில் யாழ் சார்ந்தே பல ஞாபகங்கள் இருக்கவே செய்கின்றன. நான் மேலே பட்டியலிட்ட பெயர்களில் எத்தனை டுப்பிளிக்கேட் பெயர்கள் என்று தெரியவில்லை ஆனால் மூன்று ஐடிக்கள் தற்போது உயிருடன் இல்லை. முன்பெல்லாம் எதையாவது எழுதும் போது, இன்னார் இந்தக் கேள்வி கேட்பார்கள் எனத் தோன்றும். அவர்கள் கேள்விகளிற்கான பதிலை ஆரம்பப்பதிவிலேயே உள்ளடக்கிப் பதிவிடத் தோன்றும். விவாதங்கள் நாம் சிந்திக்காக கோணங்களில் சிந்திக்கத் தூண்டும். சில வாசகரின் கேழ்விகள் திணறடிக்கும்—எமது நிலை சார்ந்தும், நாம் முன்வைத்த கருத்துச் சார்ந்தும் ஆழ்ந்து சிந்திக்க நிர்ப்பந்திக்கும். இதனால் யாழிற்கு வருவது ஒரு போதை போன்று நாளாந்தம் நிகழும். தற்போது யாழில் விவாதங்கள் வெகுவாக அருகிவிட்டன. இன்னமும் சொல்வதானால், காத்திரமான பின்னூட்டங்கள் அருகிவிட்டன. எவரும் எவரையும் சவாலிற்கு அழைப்பதில்லை என்றே சொல்லலாம். யாழை விடுவோம், தமிழ் இணையவெளியில் எங்கேயாவது காத்திரமான விவாதங்களிற்கான முனை தெரிகிறதா என்று தேடினால் அப்படி எதுவும் கண்ணில் படுவதாக இல்லை. எனவே எழுத்து என்பதை விடுத்து எங்காவது எப்போதாவது அலைவரிசை ஒத்தவர்களைக்கண்டால் அவர்களுடன் விவாதிப்பது என்பதோடு தமிழ் மொழி விவாதம் நின்றுவிடுகிறது. இது தமிழ் இணையவெளிக்கு மட்டுமானதல்ல. சந்தை மீண்டும் தனது வெற்றியினை அறிவித்துக்கொள்கிறது. இணையவெளியினை முடக்கி மீண்டும் காத்திரமான விவாதங்களைப் பல்கலைக்களகங்களிற்குள்ளும் பிரத்தியேக விடுதிகளிற்குள்ளும் ஆனவையாகப் பூட்டிக்கொள்கிறது. இணையம் பரபரப்புடன் புரட்சி போல ஆரம்பித்துப் பிசுபிசுத்துப் போகிறது. "சிந்திப்பவர்கள்" என்பவர்கள் மீண்டும் எலீற்றுக்களாக மட்டும் சிறு குழுமங்களிற்குள் தங்கிவிட, சந்தை பெரும்பான்மையினரை நுகத்தில் பூட்டி உழுதபடி நகருகிறது... புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவரிற்கும்.
  20 likes
 2. வ‌ண‌க்க‌ம் ஒரு யாத்திரை யாத்திரை என்பது ஒரு சிலருக்கு பிடிக்கும் சிலர் நாடு விட்டு நாடு தேடி சென்று இடங்களுக்கு செல்வார்கள் சிலர் புனித ஸ்தலங்களுக்கு செலவார்கள் அது அவரவர் விரும்பும் இடங்களை பொறுத்தே. எனது பயணம் என்பது கதிர்க்காம பாத யாத்திரை நோக்கி இருந்தது பல வருடங்களாக யாத்திரை செல்லுகிறேன் ஏன் எதற்காக என்பது பற்றி என மனம் கேள்விகேட்டாலும் அதில் ஒரு நம்பிக்கை இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று இல்லை மனிதனை விட ஒரு சக்தி இருக்கிறது அதை சொல்ல முடியாது அதாவது காற்றை யாராவது பிடித்து காட்டச்சொன்னால் முடியுமா முடியாது அதே போல் தான் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிற‌து அதை காண்பிக்க இயலாது ஒரு சிலர் அதை இறைவன் என்கிறார்கள் கடவுள் என்கிறார்கள் நானும் அவ்வழியே பலவருடங்களுக்கு முன்னர் அதாவது 1998ம் ஆண்டளவில் எங்கள் ஊருக்கு அந்த பாத யாத்திரிகர்கள் வருவது வழமை ஊரில் உள்ள கோவில்களில் அன்றைய இரவை போக்க வருவார்கள் அவர்களை போய் பார்ப்பது வழக்கம் அதில் ஒரு அமெரிக்கரும் உள்ளடக்கம் அவர்கள் யாழ்ப்பாணம் செல்வச்சன்நிதியில் இருந்து வந்தார்கள் ஊரில் உள்ள சனங்கள் அவர்களை போய் பார்த்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது வழக்கம் அவர்கள் ஊர் வந்து சென்றதில் இருந்து நான் அவர்களுடன் சென்றால் என்ன ஒரு உணர்வு ஏற்பட்டது ஆனால் சிறு வயது என்பதால் அம்மா அப்பா விரும்பமாட்டார்கள் அந்த வேளையில் அம்மம்மாவும் அப்பம்மாவும் கதிர்க்காமம் செல்ல போகிறோம் என்று சொல்ல நானும் வரட்டுமா என்று கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக வீட்டில் அனுமதி பெற்று செல்ல ஆயத்தமானேன் அந்த வருடம் . யாத்திரைக்கு தேவையான பொருட்கள் உடைகள் , சாப்பாடுகள் ,போதிய மருத்துவ உபகரணங்கள் தொடர்பாடல் வசதி மிக குறைவு 10 நாட்கள் தேவை கதிர்க்காமத்தை சென்றடைய என்று சொன்னார்கள் யாத்திரை தயாரானது ஊரில் இருந்து நடக்க வில்லை காரணம் அந்த நேர பாதுகாப்பு நிலை காரணமாக யாத்திரை அதிகாலை புறப்பட்டது ஒவ்வொரு சோதனை சாவடியிலும் பொருட்களை ஏற்றி இறக்கி களைந்து காண்பித்து சென்றடைய சங்கமான்கண்டி வடக்கில் முறிகண்டி பிள்ளையார் எவ்வளவு முக்கியமான ஆளோ அதே போல் கிழக்கில் சங்கமன்கண்டி பிள்ளையார் முக்கியமான ஆள் யாத்திரை செல்லும் போது அவரை வழிபட்டு விட்டு நேரம் 1.00 மணியாகிவிட்டது பாணமையை போய் சேர பாணமையில் பாரிய சோதனை சாவடி அதன் பிறகு அந்த இடத்தில் இருக்கும் பிள்ளையாரை தரிசித்த பின்னர் நடை தொடங்கியது வாகனம் உகந்தை வரை செல்ல முடியாது அதற்கு பாதையும் இல்லை காட்டு வழி வேறு நடக்க நடக்க இரு மருங்கிலும் காடுகள் விலங்கள் பறவைகள் , என பார்த்து பார்த்து போய் முதல் இடம் உகந்தைசெல்வதற்கு முன்னர் சன்நியாசிமலை என்ற ஒரு மலை அதன் கீழ் பிள்ளையார் ஒருவர் வீற்றிருக்க அவரை தரிசனம் அவருக்கு கொஞ்சம் அவலை பிரட்டி படைத்து விட்டு செய்து நடை ஆரம்பமானது ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக உகந்தையை சென்றடைந்தோம் சுற்றி வர காடு கிழக்கில் கடல் மேற்கில் அடர்ந்த காட்டில் ஒரு கோவில் மனதிற்கு ஒரு இதமான அமைதி அந்த இடத்தில் தெரிகிறது யாத்திரை தொடரும். போய் வந்த பிறகு தமிழ் சிறி அண்ணன் எழுத சொன்னவர் படங்கள் கிடைக்க வில்லை இப்போது அந்த படங்களை கமறாவிலிருந்து எடுத்துக்கொண்டேன் இது தான் பாணமை பிள்ளையார் கோவில்           click image upload click image upload
  16 likes
 3. 11 likes
 4. இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம். - ஆடம்பரம் கௌரவம் - மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை - இயற்கை வளங்கள் இயற்கை மாசுபடுதல் பற்றிய போதிய அறிவூட்டல் இல்லாமை களி மண்ணால் சீமெந்து போல் அடுக்கு மாடிகள் கட்ட முடியாவிடினும் மரப் பலகையையும் சேர்த்தால் விசாலமான மாடி வீட்டினை அமைக்கலாம். மண் வீடுகளின் அனுகூலங்கள் சில - 100 வீதம் இயற்கையானது - இலவசமானது - வீடு கட்ட வேண்டிய இடத்திலேயே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம் - சுகாதாரமானது - சீமெந்தை விடச் சுலபமாகக் கையாளலாம் - மண் சுவர் வீட்டினுள் காற்றின் ஈரப் பதனைச் சீராக்கும் - தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி இல்லாமல் நாமே கட்டிக் கொள்ளலாம் - மண்சுவர் சிறந்த ஒலித் தடுப்பைக் கொண்டது - 0 வீதமான CO2 வெளியேற்றப் படுவதால் சுற்றாடலையும் பாதுகாக்கிறது இவை எல்லாவற்றையும் விட இயற்கையோடு இணைந்த வாழ்வு என்ற திருப்தியைத் தரும். பாதகங்கள் சில - வெள்ளப்பெருக்கைத் தாக்குப் பிடிப்பது கடினம் - சுவர்கள் அகலமாக இருக்கும் - கூரை சற்று அகலமானதாக இருக்க வேண்டும் - சீமெந்து வீட்டை விடப் பராமரிப்பு அதிகமாக இருக்கும் வாசித்து அறிந்து கொண்டவற்றையும் எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது. - தொடரும் -
  10 likes
 5. நன்றி கலைஞன்.. இதோ சேர்ந்தே கும்மி அடிப்போம்.. பொருத்துவீடுகளை கனடாவிலும் அமைத்திருக்கிறார்கள் (பூர்வ குடி மக்களின் இடங்களில்.. அவர்களால் வீடு கட்டி பராமரிக்க முடியாததால் இந்த ஏற்பாடு..). ஆகவே, வழியே இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்புதான் இந்த பொருத்து வீடுகள். நன்மைகள்: செலவு குறைவு துரிதமாகக் கட்டலாம். எடை குறைந்தது. அரசாங்கம் நினைத்தால் குடியிருப்பவர்களை அப்படியே வீட்டோடு இடம் மாற்றலாம். புயல் மழை எல்லாவற்றையும் தாங்குமாறு வடிவமைக்கலாம். எதுவுமே இல்லாதவர்களுக்கு ஏதோ ஒன்று. தீமைகள்: அடிப்படையில் தற்காலிக தேவைகளுக்கே பயன்படுத்தப்படுவன. (short-term measure) A/C இல்லாமல் உள்ளே வெப்பம் தாங்கவே முடியாது. அதுபோல குளிர் நேரத்தில் குளிரும் அதிகமாக இருக்கும். பத்து வருடங்களுக்குள் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும். ஒலி கட்டுப்பாடு (sound proofing) இல்லாதது. மிகவும் தட்டையான இரும்பால் ஆக்கப்படுவன.. (சுவர்களுக்கு sheet metal ga. 22 இது 1mm தடிமனுக்கும் குறைவானது). திருட்டுப் பயம். Blow torch ஒன்று போதும்.. உள்ளே நுழைவதற்கு. மின் இணைப்பு சரியாக Grounding செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் மின் கசிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த வீடும் மின்வசப்படும். வெட்டை வெளிகளில் கட்டினால் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது. அரசாங்கம் நினைத்தால் மக்களை இடம் மாற்றலாம் (வீட்டுடன்). கடந்த 10 வருசமா அகிழான் வேலை..
  10 likes
 6. எங்களது யாத்திரை என்பது கதிர்காம ஆரம்ப கொடியேற்ற நிகழ்வுக்கானது அல்ல அதன் பிறகான‌ யாத்திரயே ஆரம்ப‌ கொடியேற்றம் பார்க்க ஒரு சில ஆயிரம் பேர் நேரத்துடன் சென்று விடுவார்கள் நாங்கள் அடுத்த யாத்திரியர்களாக சென்றது. உகந்தையில் இருந்து எமது யாத்திரை குமுக்கனுக்கானது ஆனால் அந்த இடம் அதிக தூரம் என்ற படியால் நடையை குறைக்க வேண்டிய‌ நிலை அதானால் இடையில் உள்ள வண்ணாத்து வில்லுவரைக்கும் மட்டுமே என்றார்கள். யாத்திரை ஆரம்பமாக பொருட்களை எல்லாம் பிரித்து ஆட்களின் தொகைக்கு ஏற்றால் போல் உரப்பையில் பிரித்து கொடுத்தார்கள் நாங்கள் சின்ன ஆட்கள் என்ற படியால் சிறிய பொதிகள் எங்களுக்கு கிடைத்தது பொதிகள் தலையில் எங்களது உடுப்பு பைகள் முதுகில் நடப்பதற்கு சுலபமென மனது நினைத்தாலும் தூக்கி தலையில் வைக்க கனத்தது உகந்தையில் இரு நாட்கள் நின்றோம் நடக்கும் நாள் பின்நேரம் நேரம் சரியாக 2.30 மணியளவில் உகந்தை கோவில் கொடியேறிய பின்பு நடக்க ஆயத்தமானோம் ஆண்கள் எல்லாம் காவி உடையுடனும் பெண்கள் எல்லாம் ஒரு சிலர் காவிச்சட்டை அணிந்து இருந்தனர். அந்த நாட்களில் வனவிலங்கு அதிகாரிகள் யாரும் இருக்க வில்லை காட்டுப்பாதை தொடங்கும் இடத்தில் ஆனால் தற்பொழுது நேவிப்படையினர்,வன விலங்கு பாதுகாவலர் , மீன்பிடிக்கும் மீனவர்கள் கூட உகந்தை கோவிலை அண்டிய பகுதிகளில் வந்து கூடிவிட்டார்கள் ,பொத்துவில் பகுதியில் வரும் உல்லாச பிரயாணிகள் கூட தற்போது உகந்தை கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள் , கோவில் அழகிய தோற்றத்தை படமெடுத்து செல்கிறார்கள் அவர்கள் வரும் வழியில் அடர்ந்த காட்டுப்பகுதியென்பதால் அவர்கள் கமறாவுக்குள் நல்ல போட்டோக்களை எடுத்து கொள்கிறார்கள் , சிங்கள் மக்கள் உகந்தைக்கு வரும் வழியில் இடையில் குடும்பி மலையென்று இருக்கிறது ஆரம்ப காலத்தில் விகாரை கட்ட முற்பட்டபோது அது தடுக்கப்பட்டது விகாரையின் அண்டம்பகுதி மட்டும் தெரிவதால் அது தூரத்தில் இருந்து பார்க்கும் போது குடும்பி போல் தெரிவதால் அதை குடும்பி ஹல என்று சிங்களத்திலும் தமிழில் குடும்பி மலை என்றும் அழைக்கிறார்கள் சிங்கள மக்கள் அதிகமாக வருகை தருகிறார்கள் உகந்தைக்கும் அந்த குடும்பிமலைக்கும் தற்போது அந்த மலையை சிங்கள மக்கள் , பிக்குகள் கையகப்படுத்தியுள்ளார்கள் . யாத்திரைக்கு வருவோம் பொதிகளை தூக்கி கற்பூரத்தை இருந்த இடத்தில் எரித்து விட்டு பெரியவர்களால் கழுகுமலைப்பத்து பாடியும் தேவாரங்கள் பாடியும் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமானது யாத்திரை பல் ஆயிரக்கணக்கான மக்களுடன் (இந்த வருடம் எங்களுடன் வந்தவர்கள் சுமார் 12000 பேர்) முருகனின் பெயரை சொல்லியும் அரோகரா கோஷத்துடனும் நடை தொடங்கியது உகந்தை முருகன் கோவிலிருந்து போகும் வழியில் பாலப்பழம் , வீரப்பழம் என்பவற்றை கந்து கந்தாக‌ முறித்து சுவைத்தேன் பாலப்பழத்தை விட அதிக வீரப்பழம் கிடைத்தது. அதிகம் வேற சுவைக்க இயலாது பின்விளைவுகளை இறுக்கி விடுமாம் அதனால் பாலப்பழங்களை மட்டும் சுவைத்து தொடர்ந்தது வண்ணாத்து வில்லு என்ற தரிப்பிடத்தை நோக்கி நடந்தோம் முதன் முதலாவதாக நட‌ப்பதால் எனக்கு களைப்பு காட்ட வில்லை முந்தி முந்தி ஓடியோடி நடந்தேன் முதலில் செல்லும் போதே சில காட்சிகள் காண‌ முடியும் காட்டில் மான்கள் , மயில்கள் , நரிகள் , காட்டுக்கோழிகள் ,உடும்புகள் , மிகப்பெரிய காட்டுமாடுகள் பார்க்க சந்தோசமாகவும் வியப்பாகவும் இருந்தது மாலை 4.30 மணியளவில் போய் சேர்ந்தோம், ஆனால் வயது போனவர்கள் அடிக்கடி இருந்து ஓய்வெடுத்தே நடப்பார்கள் அந்த தங்குமிடத்தில் போன நான் நல்ல இரு இடமாக பிடித்து வைத்தேன் இரவை கழிப்பதற்காக நடுக்காட்டில் ஓரத்தில் எல்லாம் தூங்கமுடியாது காரணம் இரவு வேளைகளில் மிருகங்கள் வரும் என்று ஏற்கனவே சொல்லி விட்டார்கள் . போன இடம் ஒரு வெட்ட‌வெளி ஆனால் ஒரு கிணறு அந்த கிணற்றில் உப்புத்தண்ணீர் மட்டுமே பக்கத்தில் ஓடும் பெரிய ஓடை கூட உப்பாறு தண்ணி இல்லை. அந்த தண்ணீரைத்தான் குடித்தாக வேண்டும் கொஞ்ச நேரம் அமர்ந்து கொண்டேன் என்னுடன் வந்தவர்கள் வந்து சேர்ந்தனர்.சேர்ந்த உடனேயே வாங்கோ காட்டுக்க போவோம் விறகு எடுக்க என்று சொல்லி கூட்டிகொண்டு போனார்கள் போகும் போது கிளைகளை முறித்து கொண்டுதான் போனோம் காட்டுக்குள் காரணம் சிலவேளைகளில் வழி மாறினால் அந்த கிளைகளின் உதவியால்தான் மீண்டும் வரமுடியும் இல்லையென்றால் திண்டாட வேண்டிய நிலைதான் தேவையான‌ விறகுகளை எடுத்து வந்து வந்த பெண்மணிகளிடம் கொடுத்தோம் அவர்களும் உப்பு தேனீர் தயாரிக்க ரெடியாகினார்கள் மீண்டும் காட்டுக்க போக வேண்டும் இரவில் மிருகங்கள் வரும் என்ற படியால் பெரிய தீனா போட வேண்டும் என்றார்கள் அதற்கு பெரிய கட்டைகள் வேண்டுமென்றனர் காட்டுக்குள் போனோம் தேவையான கட்டைகளை எடுத்து வந்து மொத்த குவியலாக போட்டு விட்டோம் பின்னர் பெண்கள் சமைக்க தயாரானார்கள் அடிக்கும் காற்று சூறைக்காற்று போல் அந்த வெளியை சனத்திரளுக்குள் தூசும் புழுதியுமாக அள்ளி எறிந்து கொண்டே இருந்தது காற்று தொடர்ந்தது காட்டில் இருள்வது விரைவாக நடந்து கொண்டிருந்தது இவர்களும் சமைத்து முடிய இருட்டானது வெளிச்சம் குறைவானதால் மெழுகுதிரியை கொழுத்தினோம் ம்கும் காற்று விடுவதாக இல்லை பின்னர் ஐடியா ஒன்று ரப்பர் போத்தல் ஒன்றின் கீழ் பகுதியை வெட்டி அதை தலை கீழாக நிறுத்தி அதற்குள் மெழுகு திரியை வைத்து இருக்கும் இடத்தில் ஒளியை தக்க வைத்துக்கொண்டோம் கொண்டு போன டோச் லைட்டை எந்தநேரமும் அடித்து கொண்டு இருக்க முடியாதல்லவா அதனால் மெழுகுதிரி பாவனையே அதிகமாக இருந்தது . நேரம் செல்ல செல்ல ஒரு குறுப் பஜனை ஆரம்பிக்க ஒரு குறுப் பக்திப்பாடலகளை அரையும் குறையுமாக ஆரம்பிக்க தொடங்கியது இசை விடாத கச்சேரி கடைசியில் பைலாவாக மாறியது கொண்டு போன சில்வர் பீங்கான் கள் சிலுசிலுக்க சினிமா பாட்டுக்கள் அனல் பறந்தது அன்றைய இரவில். ஒரு மாதிரியாக பைலாக்கள் இரவு 12.00 மணீயளவில் நிற்க அந்த விறகு கட்டைகளுக்கு நெருப்பு வைத்து விடுவார்கள் அது விடிய விடிய எரியும் ஒரு சிலர் பீடி பிடிப்பவர்கள்( மூலிகையும் கூட) அடிக்கடி அதை சரி செய்து மேலதிக கட்டைகளை போடுவதால் அந்த நெருப்பு இடைவிடாமல் எரியும் விடியும் வரை அதனால் எந்த விலங்கும் வராது என்ற நம்பிக்கை இருந்தாலும் தூரத்தில் யானைகள் மரங்களை உடைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் ,பிளீருவதும் கேட்கும் இரவு வேளைகளில் , சில நேரங்களில் நான் சொன்ன சூறைக்காற்று அப்படியே தூங்கும் இடங்களில் அப்படியே விழும் ஆளை தூக்காத குறையாக அப்படியே எல்லாவற்றையும் தூக்கும் அதை பேய் என்று சிலர் சொன்னாலும் , சிலர் ஓடுவார்கள் அந்த நேரத்தில் அதனால் சில வேளைகளீல் அல்லோல கல்லோலப்படும் சனம் பிறகு என்ன அந்த இரவு சிவராத்திரி பயந்தவர்களுக்கு எங்களுக்கு நித்திரைதான். காரணம் அந்த இடத்தில் கதிர்காமம் நடந்து வந்த ஒரு வயது போன அம்மா இறந்ததாகவும் அவரை அந்த இடத்தில் எரித்து விட்டு சென்றதாகவும் கதை உலாவும் நடந்து இருக்கலாம் அந்த நேரத்தில் காவிச்செல்ல முடியாது அந்த இடத்தில் எரித்து விட்டு செல்வது வழமையே. ஆரம்ப காலத்தில் பாதயாத்திரை செல்பவர்கள் தங்கள் சொத்துக்களை கூட மக்களுக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களாம் ஏனென்றால் காட்டுப்பாதையில் எதுவும் நடக்கலாம் என்ற காரணத்திற்க்காக. இந்த இடத்தில் தற்போது அதாவது வருடா வருடம் பாதயாத்திரை போகும் போது வன காவலர்களால் குடிநீர் வவுச்சர்களீல் வைக்கப்பட்டுள்ளது.அதனால் தண்ணீர் பிரச்சினை இல்லை ஆனால் இது வைக்ககூடாது என்ற விருப்பம் எனக்கு இந்த பாத யாத்திரை சிலருக்கு பொழுது போக்குவது என்றாகிவிட்டது தண்ணீர் கஸ்ரம் என்றால் கன பேர் வரமாட்டார்கள் . அந்த நாட்களில் இந்த பாதை வெறும் அரவம் என்று சொல்கின்ற ஒற்றையடிப்பதை மட்டுமே தற்போது வனக்காவலர்கள் செல்ல பாதை அமைத்துள்ளார்கள் காரணம் வெளிநாட்டு பயணீகள் விலங்குகள் , பறவைகள் சரணாலயம் என்பவற்றை பார்வையிட‌ அதிகமாக வருகிறார்கள் குமுக்கன் என்ற இடம் வரைக்கும். அதிகாலை எழும்பி நேரத்துடன் காலை உணவுக்கான வேலைப்பாடுகள் ஆரம்பிக்கும் கடலை அல்லது கவ்ப்பி அவிப்பார்கள் அதை சிறிய பைகளில் இட்டு ஆளுக்கொரு பையில் தருவார்கள் கழைப்பு ஏற்படும் இடத்திலிருந்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதும் தான் பிறகு தேநீராக நல்ல பால் கோப்பி ஒன்று கிடைக்கும் காலையில் அதை குடித்து விட்டு முகம் கழுவி விட்டு சூரியன் உதிக்கும் முதல் நடக்க வேண்டும் காரணம் சூரியன் வந்தால் அதிக கழைப்பாக இருக்கும் அதானால் விடியச்சாமமே டோச் லைட்டின் உதவியுடன் நடக்க ஆரம்பித்து விடுவார்கள் யாத்திரிகர்கள். அடுத்த இடம் குமுக்கன் ஆறு தொடரும் அந்த இடம் இது தான் வண்ணாத்து வில்லு வெட்ட வெளி
  10 likes
 7. எனது கருத்து: பொருத்து வீடுகள், வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும் வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும் கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும் மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும் இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும் மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும் பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும் ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும் அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும் இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும் இந்த பொருத்து வீடுகள் எமது சக உறவுகளான தமிழ் மக்களுக்கு குறுகிய கால சிறு நன்மைகளைவிட நீண்டகால பெரும் தீமைகளையே விளைவிக்கும்.
  9 likes
 8. மறக்க முடியாத நினைவுகள்... ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம். இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான். யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம். கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. அதைவிட முன்பு இதே இடத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் லண்டனில் இருந்து வரும்போது அவர்களும் எம்மோடு சேர்ந்து விளையாடுவது. அந்த வருடத்திற்கான செலவு எல்லாம் அவர்கள் கணக்கில் எழுதிவிடுவோம். நாங்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க ஒரு சில ரசிகர் கூட்டம். விளையாடும் ஆட்களை பார்க்க என்று ஒரு சிலர் அந்த பாதையால் நாலுதரம் சைக்கிளில் சவாரி.... வந்து போவார்கள். அந்த நேரம் நாங்கள் சிக்ஸ் அடிக்க போய் விக்கெட் பறிபோவதும் நடக்கும். விளையாட்டு முடிய பலரும் கலைந்து போக நாங்கள் ஒரு சிலர் உந்த மதிலோடு இருந்து கதைக்க தொடங்கி.. இரவு 9 மணிவரை தொடரும்... இதுகளை மறக்கத்தான் முடியுமா? பிற்குறிப்பு: இந்த பதிவை எழுத தூண்டியது.. நேற்று இங்கு ஈழப்பிரியானால் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் படம் தொடர்பானபதிவு. அதை பார்த்தபின் இந்த பதிவை முகநூலில் பதிந்தேன்.அதை இங்கு உங்களோடும் பகிர்கிறேன்.
  9 likes
 9. நன்றி கிருபன் வாங்கோ ஒரு தரம் நடந்து பாருங்கோ இந்த தடவையும் வெள்ளைகள் நடந்து வந்தது , நான் ஏன் இதுவ்ரை கதிர்காமம் நடக்கிறேன் என்ற சுவாரசியமான நிகழ்வு ஒன்று இருக்கிறது அதயும் எழுகிறேன் படிக்கவும் ஓம் அண்ண அதன் சுவை தனியே நான் ஒவ்வொரு முறை போனாலும் மடத்தில் சமைக்கும் நண்பர்களுடன் இணைந்து கொள்வேன் சமைத்து வரும் மக்களுக்கு கொடுப்பது வழமை ஹாஹா ஜீவன் அண்ணை அதற்கென்ன அழைக்கிறேன் வாங்கோ அடுத்த வருடம் மட்டுவில் தேவையில்லை நாம் உகந்தையில் இருந்தே நடப்போம் ஆவலாக நானும் நல்ல இடம் பித்து பிடித்து போய்விடும் உங்க கமறாவுக்குள் விழும் போட்டோக்களை கண்டு அதிகாலை நடை ஆரம்பமானது இருட்டு வேற‌ டோச் லைட்டின் உதவியுன் ஒருவர் பின் ஒருவராக நடக்க ஆரம்பித்தோம் சிறிது நேரத்தில் யானை ஒன்று போகும் வழியில் நிற்க அனைவரும் அப்படியே நின்று கொண்டோம் ஆனால் அது ஒன்றும் செய்ய இல்லை அதன் பாட்டுக்கு இலை குழைகளை முறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது கொன்ஞ்ச‌ நேரம் போன பின்பு அது அதன் பாட்டுக்கு சென்றது பயம் இருந்தாலும் இது வரை எந்த மிருகமும் நடக்கும் யாத்திரிகர்களை ஒன்றும் செய்தது இல்லை என்ற‌ நம்பிக்கை ஆனால் பயம் ஒன்று மனிதனுக்கு இருக்கிரதல்லவா அதுவும் மரணபயம் அதற்கு பயப்பட்டுதானே ஆகவேண்டும். போகும் வழிகள் சற்று சகதிகள் ,சுரிகள் நிறைந்த இடங்கள் முட்கள்,வள்ளி முள் என்பார்கள் சிலர் வெள்ளி முள் என்பார்கள் அந்த முட் மரங்களையெல்லாம் தாண்டி ஒரு வழியாக காலை 8.30 மணிக்கு பறவைக்குளம் என்ற இடத்தை அடைந்தோம். அந்த இடம் குமுக்கன் ஆற்றுக்கு செல்லும் வழியில் தான் இருக்கிறது பற‌வைகள் சரணாலயம் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளி நாட்டு பறவைகள் வந்து தங்கும் இடம் அந்த இடம் தான் கிழக்கு மாகாணத்தின் எல்லை போல ஆரம்ப காலத்தில் ஒரு எல்லை கல் இருந்தது அதில் கூமுனை என்று அந்த கல்லில் செதுக்கப்பட்டிருந்தது தற்பொழுது அந்த கல் இல்லை. தற்போது அந்த இடத்தில் ஒரு மூன்று (மாடி) அடுக்கு கோபுரம் போல் உள்ள கட்டிடம் அமைத்துள்ளர்கள் அதில் ஏறி நின்றுதான் வெளிநாட்டு பிரயாணிகள் போட்டோக்களை எடுப்பார்கள் அவ்வளவு அழகாக இருக்கும் அந்த இடம் அந்த இடத்தில் இருந்து பார்த்தால் ஒரு சிறிய தென்னந்தோப்பு தெரியும் ஆனால் நான் இதுவரை அந்த இடத்துக்கு சென்றதில்லை. . அந்த இடத்தில் கொஞ்சநேர‌ம் இருந்து விஸ்கட்டும் தண்ணீரும் குடித்து விட்டு குமுக்கன் ஆற்றை அடைந்தோம் ஆஹா ஆற்று நீர் சலசலவென சத்தத்துடன் நடந்து சென்றவர்களை இன்முகத்துடன் வரவேற்றது நான் யாரையும் பார்க்க வில்லை போன‌வுடன் பொருட்களை இறக்கி விட்டு ஆற்றில் பாய்ந்தேன் கடும் குளிராக இருந்தது .குளிக்க குளிக்க‌ வந்த களைப்பு தெரியவில்லை நான் ஒரு மணீ நேரம் இளகிய பின்பே என்னுடன் வந்த அனைவரும் வந்து சேர்ந்தார்கள் ஒரு இடத்தை மரத்தின் குப்பைகளை கொஞ்சம் விலக்கிவிட்டு கொஞ்ச நேரம் மட்டும் தங்குமிடமாக அமைத்து கொண்டோம் ஏனென்றால் மாலை அடுத்த கரைக்கு போக வேண்டுமாம் . அன்றைய நாளுக்கு குடிபதற்கு தன்ணீர் ஆற்றங்கரையோரம் மணலில் ஒரு குழியை தோண்டி அதிலிருந்து வடிகட்டி எடுப்போம் நீரை. சுத்தமான நீராக‌ இருந்தாலும் சுட வைத்தே பருகுவம். அந்த நீரை ஒரு கேனில் எடுத்து நடந்து வரும் யாத்திரிகர்களுக்கு அவர்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் இடம் வரை சென்று கொடுப்போம் சிறு உதவியாக கிட்ட தட்ட 4,5 கிலோமீற்றர் சென்று அவர்கள் தாகம் தீரும் வரைக்கும் தண்ணீர் கொடுபோம் அதற்கு அவர்கள் நீங்க நல்லா இருக்கணும் சாமி என்பார்கள் எல்லோரையும் சாமியென்றே அழைப்பார்கள் யாத்திரிகர்கள் பிறகு நாங்கள் இருக்கும் இடத்தில் சமையலுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு மீண்டும் குளிக்க தொடங்குவோம் நன்றாக குளித்து விட்டு அங்கே மிகப்பழையான ஒரு அம்மன் கோவில் இருக்கிற‌து மிகவும் சக்தி வாய்ந்தது கூட ( தற்போது அந்த அம்மனுக்கு காவலாக ஒரு சின்ன விகரையும் வந்துள்ளது அது சிங்களவர்களின் வேலை ) அம்மனை தரிசித்துவிட்டு நல்ல ஒரு சாப்பாடு காட்டில் அது சாப்பிட்டவர்களுக்கே தெரியும் அதன் சுவை சாப்பாடு முடிந்த பின் தூக்கம் ஒன்று போட்டு விட்டு மாலை 4.30 மணிக்கு நேநீர் ஒன்றை சுவைத்து விட்டு அடுத்த கரைக்கு செல்ல வேண்டும் ஏனென்றால் அடுத்த நாள் காலை நேரத்துடன் செல்ல வேண்டும் அந்த நேரம் சில வேளைகளில் ஆற்றுநீர் கழுத்துக்கு மேலாக செல்லும் போகமுடியாது அதை தவிர்ப்பதற்க்காகவே அடுத்த கரைக்கு சென்றோம் அங்கே மீண்டும் ஒரு இடத்தை துப்பரவாக்கி இருந்தோம் அன்றைய இரவு தூங்க வேண்டும் என்பதற்க்காக. சிறிய வண்டுகள் , பூச்சிகள் , தேள்கள் , கட்டெறும்புகள் அதிகமாக இருந்தாலும் சருகுண்ணிகள் அதிகம் இந்த இடத்தில் கால்களில் விரல்களுக்குள்ளே என்ன கவட்டுக்குள்ளும் ஏறி ரத்தத்தை உறுஞ்சிக்கொள்ளூம் அதனால் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அன்றைய இரவை நெருப்புடன் தான் கழிக்க வேண்டும் நல்லபெரிய மர‌கட்டைகளை எடுத்து எரிக்க ஒரு இடத்தில் போட்டுக்கொண்டோம் மாலை மெல்ல மெல்ல இருளாக சூழ சின்ன சின்ன வெளிச்சம் போட்டு பஜனை பைலா தொடங்கியது பெண்கள் பஜனை பக்திப்பாடல்கள் பாடுவார்கள் இரவு சாப்பாடு அந்த சின்ன வெளிச்சத்திலிருந்து சாப்பிட்டோம் பிறகு மரக்கட்டைகளுக்கு தீ வைத்த் எரித்தார்கள் எரிக்கும் நேரத்தில் சூடு தாங்க முடியாமல் ஜந்துகள் ஊர தொடங்கியது. அன்றைய இரவு தூக்கம் நாங்கள் தூங்க பெரியவர்கள் காவல் இருந்தார்கள் . இந்த இடத்தில் நடந்த சில சம்பவங்கள் கூறுகிறேன் நான் இப்படியே சில ஆண்டுகள் சொந்தங்களுடன் சென்றேன் பிறகு நண்பர்களுடன் முதல் முதலாக‌ சென்ற வேளை பகல் சாப்பாட்டை சமைத்த பிறகு மூன்று நண்பர்கள் விளாம்பழம் எடுத்து வருகிறோம் என்று சொல்லிவிட்டு போன நண்பர்கள் காட்டுக்குள் சென்று வரவில்லை 12.00 மணீக்கு போனவர்கள் 3.00 மணியாகியும் வரவில்லை தொடரும் யாத்திரை
  9 likes
 10. அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., என்னிலும் ஒருவயதால் மூத்தவன் அவன். நான் அவனை அண்ணாவென்றும் அவன் என்னை அக்காச்சியென்றும் அழைத்துக் கொள்வோம். என்னோடு கூடப்பிறக்காதவன். ஆனால் அதிகம் என்னை நேசித்தவர்களுள் அவனும் ஒருவன். அண்ணா என்ற சொல்லை எனக்கு அர்த்தப்படுத்தியவன். ஓரு காலத்தின் பெருவீரம் அவன். அவனுக்கான பாதுகாவலர் தொடக்கம் களங்கள் சமர்கள் அவனை அடையாளப்படுத்திய காலங்களில் அவன் பெயர் அறிமுகமாகியது. பின்னர் அவனே உறவாகினான் அண்ணாவாக. காலங்கள் போக கடமைகள் பணிகள் அவனோடும் பயணிக்கத் தொடங்கிய போது தினசரி பேசவும் விடயங்களைப் பகிரவும் வழியமைத்தது காலம். எதையும் ஒளிவுமறைவின்றி பேசக்கூடிய நெருக்கத்தை காலம் தந்தது. மணிக்கணக்காய் தொலைபேசவும் சேர்ந்து பிடித்த பாடல்கள் கேட்கவும் தொடங்கினோம். நாம் வௌ;வேறு நாடுகளில் இருந்தாலும் இணையம் தொலைபேசி இவையே எங்களது உறவுப்பாலம். நேரில் சந்தித்துக் கொள்ளவோ அடிக்கடி புகைப்படங்கள் பரிமாறிக் கொள்ளவோ எதையும் நாம் செய்து கொண்டதில்லை. காலை மாலை மதியம் இரவு என பேச வேண்டிய தருணங்களில் பேசிக்கொள்வோம். காலம் எங்களையும் நெருப்பில் போட்டு சோதித்த காலங்களையும் நாங்கள் சந்தித்தோம். அப்போதெல்லாம் ஆளாளுக்கு துயர் பகிரவும் கண்ணீர் விட்டு அழவும் காற்றலைகளே எங்களுக்கு கைக்குட்டையாகியது. ஆறுதல் சொல்லி என்னை அமைதிப்படுத்திய நம்பிக்கைகளில் அவனுக்கு பெரும்பங்குண்டு. அக்காச்சி நீங்கள் அழப்படாது. நீங்கள் சாதனைப்பெண். நீங்கள் செய்ய ஆயிரக்கணக்கில பணிகள் இருக்கு. உங்களைப் புரிந்து வாழத் தெரியாத ஒருவரால் உலகில் யாரோடும் வாழ முடியாது. இப்படித்தான் என் அழுகையின் நிமிடங்களை ஆற்றுப்படுத்திய அண்ணா அவன். என் வாழ்வைத் தெருவில் இழுத்து வைத்து காலம் பங்கிடத் தொடங்கிய போது அவன் அருகில் இருக்கவில்லை. தொலைபேசி வழியாக தினம் தினம் என்னை தைரியப்படுத்திய அவனது வார்த்தைகளும் அவன் அனுப்பும் பாடல்களும் இன்றும் என் ஞாபகங்களில் பத்திரமாய். எல்லோருமே ஒரு கட்டத்தில் தற்கொலை பற்றி யோசித்திருப்போம். அப்படி பலமுறை நானும் எண்ணியதுண்டு. என் மனநிலையைத் தானே புரிந்து கொண்டு பலமுறை சொல்லியிருக்கிறான். அக்காச்சி என்ன பிரச்சனையும் வரட்டும் அதை தாண்டி நாங்கள் தான் வர வேணும். எந்தவிதமான அவசர முடிவுகளும் எடுக்கப்படாது. உங்களுக்கு எந்த நேரம் என்ன தேவையெண்டாலும் என்னோடை கதையுங்கோ நானிருக்கிறேன். ஓண்டுக்கும் யோசிக்கப்படாது. நல்லா சாப்பிடுங்கோ நித்திரை கொள்ளுங்கோ இதுவும் கடந்து போகும். பலருக்கு நான் சொன்ன அறிவுரைகள் தைரியமூட்டல்களை அவன் எனக்குச் சொல்லிக் கொண்டேயிருந்தான். என்ன சமையல் ? சாப்பிட்டீங்களோ ? தினசரி அவனது அக்கறையும் விசாரிப்புமே பல தருணங்களில் எனக்கு உணவின் சுவையை ஞாபகப்படுத்தியிருக்கிறது. தன் வாழ்வின் கடந்து வந்த பயங்கரங்களை துயரங்களை ஏமாற்றங்களைச் சொல்லிச் சொல்லி என்னை தைரியப்படுத்திய நம்பிக்கை அவன். நான் மனம் குழம்பிய தருணங்களை அவன் உணர்ந்து கொண்டிருக்கிறான். என்னாலை ஏலாதாமண்ணா வரவர தொல்லை கூடுது. செத்திடலாம் போல. பிரிஞ்சு போறதுதான் இனி வேறை முடிவு எனக்கு தெரியேல்ல. இரத்த உறவுகள் கூட பழிசொல்லி ஊரெங்கும் என்பற்றி எழுதப்பட்ட பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுவைக்க வேண்டிய தேவையை 2012ம் ஏப்றல் மாதம் எடுத்த போது முழுமையாக என்னைப்புரிந்து கொண்ட முதலாம் ஆள் அவன்தான். பழிசொன்னவர்கள் எல்லோரும் என் இரத்த உறவுகள் , காணும் போதெல்லாம் கைநீட்டி அணைத்த நண்பர்கள் பலரும் இருந்தார்கள். யாருமே துணைக்கு வராமல் நான் தனித்து நின்ற போது.., நான் உங்களை நம்பிறன்..நீங்கள் யோசிக்கப்படாது. ஒவ்வொரு வார்த்தையிலும் என்மீதான தனது நம்பிக்கையை அன்பை அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பான். உது சரிவராது பேசாமல் விடுங்கோ. நீங்கள் தனிய வாழலாம். பதினேழு வருசத் தொல்லைக்கு முடிவு கட்ட அவன் தந்த முதல் அனுமதி. இனி யாரும் ஆலோசனை ஆதரவு தர வேண்டாமென்றிருந்தது அவன் தந்த ஆறுதல் தன்னம்பிக்கை. நீ இரும்புப்பெண் நீ நெருப்பு நீ வீரம் என அடிக்கடி என்னை ஊதிஊதி அணையாமல் காத்தவன். கவனமாயிருங்கோ. வெளியில போக வர உங்களை பின்தொடரும் ஆக்கள் எல்லாரையும் அவதானியுங்கோ. காசைக்குடுத்தா ஆபிரிக்கனோ எவனோ எதுவும் செய்ய முடியும். எங்கடை இனத்துக்கு நீங்கள் வேணும். உங்களால எத்தனையோ பேர் வாழுகினம் அவைக்காக நீங்கள் வாழ வேணும். மனம் அமைதியைத் தொலைத்து அந்தரிக்கும் நேரங்களில் அவன் என் அந்தரிப்பை ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டு அழைப்பான். வீட்டுக்குள்ளிருந்து என்னை மரணம் துரத்துவதை கொலைஞன் என்னை கொல்லும் கனவோடிருப்பதை அண்ணாவின் அன்போடும் பாதுகாப்பாளனின் அவதானங்களோடும் அடிக்கடி உணர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். ஓருநாள் விடியற்காலை 5.30இற்கு அழைத்தான். அக்காச்சி எனக்கு இரவிரவா நித்திரையில்லை. உங்களைக் கனவு கண்டனான். கவனம். உங்களுக்கு பெரும் சிக்கல் வரப்போகுது. வுpடியட்டுமெண்டுதான் இரவு எடுக்கேல்ல. இரத்தக்காயம் காணப்போறமாதிரியிருக்கு. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை எச்சரித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு எனக்கும் ஏதோ மனம் அமைதி தொலைந்து போயிருந்தது. அன்று பலமுறை அவன் அழைத்தான். அடிக்கடி கவனம் சொல்லிக் கொண்டிருந்தான். அன்றைக்குப் பின்னேரம்....> எனது மன அமைதி நிம்மதி குலைத்து அதில் மகிழும் என்வாழ்வை ஊரூராய் விற்கும் எமன் என் வீட்டுக்கதவை உடைத்தான். நான் நிதானிக்க முதல் என்னை மரணம் நெருங்கியிருந்தது. முதல் உங்களைப் பாதுகாக்க கையில எது கிடைக்குதோ அதை கையில எடுங்கோ. அவன் அடிக்கடி சொல்வது போல என்னை பாதுகாக்க நான் வைத்திருந்த கோடரி அன்று என்னை பாதுகாத்தது. மறுநாள் என் அண்ணாவை அழைத்தேன். அவன் எச்சரித்தது போல அன்று எனது உயிர் போக இருந்ததைச் சொன்ன போது.., நான் வரட்டே அக்காச்சி ? ஏன் அந்தரிப்பை அழுகையை கேட்டவன் உடனே யேர்மனி வருவதாக நின்றான். இல்லை நான் சமாளிக்கிறன் நில்லுங்கோ பாப்பம். உடனடியாக ஒரு பணயம் வெளிக்கிடுவதில் உள்ள சிக்கலை நானும் அறிவேன். அவனது வேலை இன்னொரு நாட்டிலிருந்து வந்து போவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அவனை வர வேண்டாமென்றேன். ஆனால் யாராவது அருகில் இருந்தால் மனம் அமைதி பெறும் போலிருந்தது. அன்றைய அந்தரத்தை அவன் தொலைபேசியூடாக கதைத்துக் கதைத்து என்னை ஆற்றினான். ஓவ்வொரு வார்த்தையும் என்னைப் பாதுகாப்பதில் தான் இருந்தது. நானெல்லாம் இந்த உலகத்துக்குப் பெரிய ஆளில்லையண்ணா. சொல்லும் போதெல்லாம் உங்கடை பலம் உங்களுக்கு விளங்கேல்ல. சொல்லிச் சொல்லிப் பலம் தந்தான். புதினேழு வருடப்பிணியிடமிருந்து விலகிக்கொள்ளுமாறு பிள்ளைகளும் வலியுறுத்திய போது 'இனியென்ன யோசிக்கப் போறியள்' விட்டுத்துலையுங்கோ. அவனும் தந்த துணிச்சலோடு என் முடிவை நிரந்தரமாய் மாற்றிக் கொண்டேன். இனி கருணையில்லை இரக்கமில்லை மன்னிப்பில்லை. ஓரே முடிவு. என் முடிவை எடுத்த போது.., இனித்தான் நீங்கள் கவனமா இயங்க வேண்டிய தருணம். உங்களைக் கோபப்படுத்த வேணுமெண்டு பிரச்சனையளைத் தருவினம். உங்கடை மன அமைதியை குழப்பி மனம் சமநிலையில்லாமல் அந்தரிக்க வைப்பினம் , எதையும் யோசிக்கப்படாது உங்கடை இலக்கு அது மட்டும் தான் இப்ப உங்கடை கண்ணில கனவில நினைவில. சுரியோ. தினமும் தொலைபேசுவோம். சட்டத்தை நாடி என் காலத்தை மாற்றும் தருணத்துக்காக ஓடிக்கொண்டிருந்தேன். அவனது இருபது வருடக்காதல் கைகூடி வந்த தருணம் அது. அவனது மகிழ்ச்சிக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இப்போது நான் அவனுக்கு ஆலோசகராகியிருந்தேன். என்ர வாழ்க்கையில எல்லா தருணங்களிலயும் நீங்களும் இருந்திருக்கிறியள் அக்காச்சி. நான் சோர்ந்த நேரங்களில அழுத நேரங்களில நீங்கள் தந்த ஆறுதல் ஆற்றுப்படுத்தல் எவ்வளவு பெரிய நம்பிக்கை தந்தனீங்கள். வாழ்க்கையில நான் மறக்க முடியாதவர் நீங்கள். மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்திட்டு செத்திட்டாலும் அதுதான் மகிழ்சியண்ணா. உங்கடை வாழ்க்கையை நீங்கள் வாழுங்கோ. இடையில வாறவையளை விலத்திக் கொண்டு நடவுங்கோ. அடடு;தவைக்காகவே வாழ்ந்த என்னால இண்டைக்கு என்னத்தை சாதிக்க முடிஞ்சது? உங்களுக்குப் பசிச்சா இந்தக் கதைசொல்றவை யாரும் உங்களுக்காக சாப்பிடமாட்டினம். உங்களுக்கு நித்திரை வந்தா உங்களுக்காக யாரும் நித்திரை கொள்ளமாட்டினம். ஏன் உங்களுக்கு ஒருயூரோ அவசர தேவையெண்டால் கூட தரமாட்டினம். கைதர வேண்டிய நேரத்தில கைவிட்டு ஓடுற ஆக்கள் தானனண்ணா இந்த உறவுகள். நான் சொல்லச் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவன் அன்றைக்குத் தான் இறுதியாய் நிறைய நேரம் கதைத்தான். வுpடியற்காலை 3மணிவரையும் பேசிவிட்டு உறங்கப் போனான். இன்னொருவருக்கு இலகுவாய் ஆற்றுப்படுத்தல் செய்யும் நம்மால் நம்மை ஆற்றுப்படுத்த இன்னொருவரையே நம்புகிறோம். நாங்கள் இருவரும் ஆளாளுக்கு நம்பிக்கையாயிருந்து நமது துயர்களை தடைகளைத் தாண்டிக் கொண்டிருந்தோம். தனது காதலியை அறிமுகம் செய்தான். என்பற்றி அவளுக்கும் நிறையச் சொல்லியிருக்கிறான் என்பதை அவனது காதலி பேசுகிற தருணங்களில் பகிர்ந்து கொள்வாள். நாம் பேசிக்கொள்ளும் நேரங்கள் குறைந்தது. அவனாக எடுத்தாலன்றி நான் அவனை தொல்லைப்படுத்த விரும்பியதில்லை. தனக்குப் பிடித்த வாழ்வை அவன் வாழத் தொடங்கினான். ஒருநாள் அழைத்தான். கலியாணம் செய்யப்போறன். நீங்கள் வரவேணும். திருமணநாள் குறித்ததும் முதலில் எனக்குத் தான் அறிவித்தான். திருமண அழைப்பிதழ் அனுப்பினான். அவனது திருமணவிழாவுக்கு போக வேண்டுமென நினைத்திருந்தும் அந்த சந்தர்ப்பம் தவறியது. கோவிக்கவில்லை என் நிலையை புரிந்து கொண்டான். சரி பிள்ளைக்கு பிறந்தநாளுக்கு சொல்லுங்கோ வாறன். பின்ன அக்காச்சிக்குச் சொல்லாமல்? சிரித்தான். அவ்வப்போது குறுஞ்செய்தியனுப்புவான் சுகநலன்களைக் கேட்டுக் கொள்வான். எப்போதாவது தொலைபேசுவான். பழைய பாடல்கள் பகிடிகள் கதைகள் பற்றியும் பரிமாறிக் கொள்வோம். 2016 அவனது பிறந்தநாளன்று குறுஞ்செய்தியனுப்பினேன். வருடம் வருடம் தொலைபேசியில் வாழ்த்தும் நான் குறுஞ்செய்தியனுப்பிய போது நன்றியென்று பதிலிட்டான். மறுநாள் தொலைபேசியில் அழைத்தான். எனக்கும் சட்டப்படி தொல்லை நீங்கீட்டுதண்ணா. சொன்ன போது இனி நீங்கள் நிம்மதியா இருங்கோ. இருப்பியள். இதயம் நிறைய வாழ்த்தினான். மனம் நிறைந்த அவனது வாழ்த்து மீண்டும் தைரியம் தந்தது. 2016 கிறிஸ்மஸ் வந்தது அவன் வாழ்த்து வரவில்லை. புதுவருடம் வந்தது அன்றும் வாழ்த்து வரவில்லை. அந்த நாட்களில் அவனது வாழ்த்தை எதிர்பார்த்திருந்தேன். என்ர அண்ணாச்சி என்னை மறந்து போயிட்டார். நண்பனுக்குச் சொன்னேன். இந்தமுறை அவரும் நீங்கள் வாழ்த்தேல்லயெண்டு நினைச்சிருக்கக்கூடுமெல்லோ ? நீங்கள் புதவருட வாழ்த்து அனுப்புங்கோ. நண்பன் சொன்ன போது எனக்கும் அது சரிதானெனப்பட்டது. அவனது மனைவியின் இலக்கத்திற்கு புதவருட வாழ்த்து அனுப்பினேன். அக்காச்சி எப்பிடி சுகம் ? ஏன் தொடர்பில்லை ? என்ன செய்றியள் ? மறந்திட்டியளோ எங்களை ? எப்ப இங்காலை வாறியள்? மறுமுனையில் இருந்து வந்த அக்கறையும் அன்பும் மீண்டும் எங்களது பழைய நாட்களை நினைவுபடுத்தியது. நண்பன் சொன்னது போல அவர்களும் எனது வாழ்த்தை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அக்கா நாங்கள் அம்மா அப்பா ஆகப்போறம். நான் சொன்னது போல அவர்களது குழந்தையின் பிறந்தநாளுக்கு போக வேணும் மனதுக்குள் குறித்துக் கொண்டேன். 10.01.2017 இன்று கொஞ்சம் மனச்சோர்வாக இருக்கிறது. அவன் நினைவுகளில் நீண்ட நேரம் வந்து போகிறான். கதைக்க வேண்டும் போலிருந்தது. அவனும் நானும் சேர்ந்து கேட்ட பாடல்களை யூரியூப்பில் கேட்கத் தொடங்கினேன். ரிதம் படத்தில் வரும் 'நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே' என்ற பாடல் பற்றி ஒருமுறை அதிகம் பேசிக்கொண்டோம். இன்றைக்கு நதியே நதியே பாடல் 30வது தடவை தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னை ஒருகாலம் தாங்கி என் நம்பிக்கையாய் நின்று என்னை உயிர்ப்பித்தவன் தந்த நம்பிக்கைகள் நினைவுகளாகி அடிக்கடி சோர்கிற போது புத்துயிர் தந்து கொண்டேயிருந்தது. என்மீது அவன் கொண்ட நம்பிக்கை தந்த ஆற்றுப்படுத்தல் அன்புக்காக கைமாறாக கூலி வாங்காத கூலி கேட்காத சுயநலமில்லாத தூயவன். இவன் என்னோடு கூடிப்பிறந்திருக்கலாம். காலம் அந்த வாய்ப்பைத் தரவில்லை. கடந்து வந்த தடங்களில் ஏத்தனையோ பேர் வந்தார்கள் போனார்கள் பணிகளோடு கடமைகளோடு. அத்தனைபேரிலும் பலரை மறந்து போயிற்று. நினைவுகளில் அவர்கள் முகங்கள் கூட சரியாக நினைவுவருவதில்லை. சிலர் காலமும் காவிவரும் புனிதமானவர்களாகி என்னோடு பயணிக்கிறார்கள். என்னோடு தொடரும் உறவுகளில் அவனும் சக பயணியாக வந்து கொண்டேயிருக்கிறான். சாந்தி நேசக்கரம் 10.01.2017 https://mullaimann.blogspot.de/2017/01/blog-post.html
  8 likes
 11. சிந்திக்க வைத்த பதிவை தந்த இன்னுமொருவனுக்கு நன்றி..... போராட்டத்தின் பின்னடைவு என்பது முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளிவைக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக அது ஒரு தொடர்ச்சிக் குறி. தோல்வி என்பது விஸ்தரிக்கப்படுகின்றது. ஒரு சுயநலம்மிக்க சுரண்டல் சமூகத்தில் பல பத்தாயிரம் பேர் இனம் என்ற பொது உடன்பாட்டிற்காக தமது உயிரைக்கொடுத்தார்கள். ஒரு பெரும் மாற்றம்மிக்க காலமாக 30 வருடகால போராட்டம் வரலாற்றில் பதியப்பட்டது. இருந்தும் பாரம்பரிய சுயநலமே இவ் முப்பது வருட காலத்தைக் கடந்து எஞ்சி நிற்கின்து. நிற்க முனைவதே தெடர்ச்சியான தோல்வி. நீங்கள் சுட்டிக்காட்டிய பல விசயங்கள் நுணுக்கமாக இத் தொடர்ச்சிக்குள் அடங்குகின்றது. யாழ்கள விவாதங்களின் சோர்வும் கூட இத் தொடர்ச்சிக்குள்ளகவே நுணுக்கமாக அடங்குகின்றது. கருத்துக்களால் பொதுத் தன்மையை எட்டமுடியாத நிலை கருத்துக்கள் தன்னை பாதிப்பதாக அதீதமாக உணர்தல் - அறிவுபூர்வமாக அன்றி உணர்சிவசத்துடன் அணுகும் நிலை கருத்தாடுவதால் என்ன பயன் என்ற குழப்பம் கருத்தெழுதும் நேரத்தை வீணாணதாக கருதும் நிலை இவ்வாறு இன்னும் சில தன்மைகள் இருக்கின்றது. ஆனால் இத் தன்மைகள் எல்லாம் போராட்ட பின்னடைவுக்கு முன்னரும் பின்னரும் வேறுபடுகின்றது. தெடர் தோல்வியில் இந்த வேறுபாடும் அடங்குகின்றது. கருத்துக்களத்திற்கு வருதல் முரண்படுதல் வெளியேறுதல் ஒதுங்குதல் என்பனவெல்லாம் கூட எமது இனம் சார், பொதுத் தன்மைசார் உளவியல் நிலையை சுட்டிக்காட்டுகின்றது. முள்ளிவாய்க்காலும் சிங்களப்பேரினவாதத்திற்கு பெருவெற்றி, தமிழரின் சுயநலம் நோக்கிய நகர்வும், பொருள் தேடும் பாய்ச்சலும் பேரினவாதத்தின் வெற்றியே, தமிழில் இருந்து தள்ளிப்போதலும் வெற்றியே, கருத்துக்களத்தில் இருந்து தள்ளிநிற்பதும் கூட வெற்றியே. ஒருவன் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கவேண்டுமானால் என்னுமொருவன் தோற்றுக்கொண்டே இருக்கவேண்டும். இறுதியாக.. பொதுத்தன்மையை நோக்கி விதைக்கப்படும் கருத்துக்கள் அதை உடனே எட்டாவிடினும் ஒருநாள் வளர்ந்து விருட்சமாகி பலன் தரும் என்ற நம்பிக்கையே யாழ்களம். அதை எந்த விதத்திலும் சிதைக்கக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் புத்தாண்டு பிறக்கட்டும்.
  8 likes
 12. வேலையால் வந்த களைப்பு தீர ,தேனீர் குடிப்பதற்காக கேத்தலின் பட்டனை அழுத்தியவன் ,கப்பை கழுவி சமையலறை மேசையில் வைத்து விட்டு தேயிலை பாக்கை தேடினான்.வழமையாக பாவிக்கும் லிப்டன் தீர்ந்து போயிருந்தது.டில்மா தேயிலை பெட்டி அவனைபார்த்து சிரித்து"ஆபத்துக்கு பாவமில்லை என்னை குடித்து பார்" என்பது போல் தோன்றியது. எத்தனை தரம் சொன்னாலும், உவள் சிங்களவனுக்கு பிழைப்பு காட்டுறது என்றே அடம் பிடிக்கிறாள் என புறுபுறுத்தபடியே அக்கம் பக்கம் பாரத்தவன் ,தன்னை ஒருத்தரும் கவனிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு டில்மா தேயிலை பக்கற்றை கோப்பையினுள் போட்டு சுடுதண்ணியை ஊற்றி ஊற வைத்து பிளிந்தெடுத்த தேயிலை பக்கற்றை குப்பை தொட்டியில் எறிந்தவன், பாலை கலந்து ருசிக்கத் தொடங்கினான்,மனம் குணம் எல்லாம் சரியாக இருக்கவே ,அலுமாரியிலிருந்த பிஸ்கட் டப்பாவையும் ,தேனீர் கோப்பையையும் எடுத்து கொண்டு கணனிக்கு முன்னால் போய் குந்தினான். "வேலயால வந்து உவ்வளவு நேரமும் ஊதுலய குந்திகொண்டிருக்கிறீயள்" "அடி ஆத்தே நான் சும்மா விடுப்பு பார்த்து கொண்டிருக்கிறன் என்று நினைச்சிறோ? ஒன் கொல் அப்பா,அமெரிக்கா,கனடா ,லண்டன் லொக்கல் எல்லாம் நான் தான் கான்டில் பண்ண வேணும்" "எப்ப தொடக்கம் தமிழ் பிஸ்னஸ் லன்குஜ் ஆனது,எனக்கு தெரியும் நீங்கள் என்ன எழுதிகொண்டிருக்கிறீயள் என்று,ஒரு சதத்திற்கு பிரயோசனம் இல்லாத வேலை பார்க்கிறீயள்" "அப்படி சொல்லாதையும் ஒரு நாளைக்கு உம்மை 'எழுத்தாளனின் மனைவியோ'? என்று அடையாளப்படுத்தி கேட்பினம்." "ஓ ஓ ஓ....அது வேற நினைப்பு......சும்மா விசர் கதையைவிட்டிட்டு எனக்கு ஒரு தேத்தண்ணி போட்டுதாங்கோ" "போட்டு தரலாம் ஆனால் லிப்டன் இல்லை,டில்மா தான் இருக்கு ,டில்மா டி குடிக்கவும் மாட்டேன் போடவும் மாட்டேன்"என்று கூறிய படியே கணனியில் மூழ்கிபோனான் சுரேஸ். இறுக்கி கதவை சாத்திவிட்டு சென்ற சுதா சிறிது நேரம் கழித்து இரு தேனீர் கோப்பைகளுடனும் மைக்ரோவேவில் சூடாக்கின சமோசவுடன் உள்ளே வந்தாள். தேனீரையும் சமோசாவையும் சுவைத்தபடியே அன்று அவன் எழுதிய கிறுக்கலை வாசிக்கும்படி அவளிடம் கேட்டுகொண்டான்.அவளும் வாசித்து சுமாராக இருக்கு என சொல்வே இணையத்தில் பதிவிட்ட பின்,. எத்தனை லைக்,எத்தனை கொமண்ட்ஸ் வருகின்றது என்ற‌ எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பான். . "கிறுக்கலை இணைச்சாச்சோ ?இனி என்ன உதுல இருந்து அசையமாட்டியள்,எத்தனை லைக்,கொமண்ட்ஸ் என்று பார்த்துகொண்டு இருங்கோ" "ஒரு எழுத்தாளன் என்றால் அப்படித்தான்" " எப்ப‌ கல்லெறி நடக்குதோ" "அதுதான் நான் என்னை அடையாளப்படுத்தாமல் கிறுக்கிறேன்" வாசகர்கள் லைக்கை போட்டு கருத்துக்களை எழுதியவுடன் அவனை அறியமாலயே அவனுக்கு தான் ஒரு படைப்பாளி என்ற எண்ணம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கிவிட்டது இணையத்தில் எழுதிய கிறுக்களுக்கு ஆயிரம் வாசகர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை தானே இலக்கியவாதி என்று அடையாளப்படுத்தி. கொண்டு புத்தக வெளியீடுகள்,இலக்கிய சந்திப்புகள் போன்றவற்றுக்கு செல்ல தொடங்கினான். புத்தக வெளியீடுகளுக்கு செல்வது அவனுக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை பின்வரிசையில் போயிருந்து கைதட்டி போட்டு சிற்றுண்டிகளை சுவைத்து வீடு வரும் பொழுது ஒரு புத்தகத்தை வாங்கி வந்து நானும் ஒரு எழுத்தாளன் ,இலக்கியவாதி என வீட்டிலுள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் பெருமையடிப்பது அவனது வழக்கம். கம்பரமாயணம்,ஐம்பெரும் காப்பியங்கள் இவைகள்பற்றி தெரிந்திருந்திருப்பவன் இலக்கியவாதி என அவன் எண்ணியிருந்தான்.இவற்றில் ஒன்றைப்பற்றியும் அறியாதவன் எப்படி ஒரு இலக்கிய சந்திப்புக்கு போவது என்ற மனக்குழப்பத்திலிருந்தவனுக்கு எட்டாம் வகுப்பில் படித்த இராமயணக்கதை ஞாபத்திற்கு வர கூடவே இந்திய தொலைக்காட்சிகள் ராமாயண அறிவை அள்ளிவழங்க ,இது போதுமே ஒரு இலக்கிய கூட்டத்தில் பங்கு பற்ற என்ற துணிவுடன் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்ல தொடங்கினான்.இடக்கு முடக்காக யாரவது இலக்கிய விவாத்திற்கு வந்தால் "நான் ஒரு சிவபக்தன் ,ராமரைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை "என்று சொல்லி சமாளிக்கலாம் என தன்னைத்தானே சாமாதானப்படுத்திக்கொள்வான். வார இறுதி சிட்னியில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்று முகப்புத்தகத்தையும்,அவுஸ்ரேலியா இணைய பத்திரிகைகளையும் தட்டி பார்த்துகொண்டிருந்தவனின் கண்ணில் பட்டது "இலக்கிய சந்திப்பும் கருத்து பகிர்வும்" என்ற விளம்பரம், விளம்பரத்தை பார்த்தவன் வார இறுதியன்று போக தீர்மானித்துக்கொண்டான். இரண்டு மூன்று அவனைப்போன்ற இளசுகளும் ஐந்தாறு முதியோரும் கலந்து கொள்ளவந்திருந்தனர். ஒவ்வொருத்தரும் தங்களது பெயர்களையும் படைப்புக்களையும் சொல்லி அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.அவனும் தன்னை இணையஎழுத்தாளன் ,வலைப்பூ கிறுக்கன் என அறிமுகப்படுத்தி கொண்டான். செங்கைஆழியன்,சுஜாதா போன்ற ஒரு சில பிரபல எழுத்தாளர்களை மட்டும் அறிந்திருந்த அவனுக்கு ஒரு இளம்படைப்பாளி ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை கூறி கருத்துக்களை பகிர்ந்ததை கேட்டு சிறிது நேரம் தடுமாறிபோய்விட்டான்.சுதாகரித்து நிமிர்ந்த பொழுது அவனுக்கு பரிச்சமான டக்கிளஸ் என்ற பெயரை அந்த இளம் எழுத்தாளர் சொல்ல மீண்டும்தடுமாறிபோனான்.இலக்கியகூட்டத்தினுள் என்ன நாசமறுப்புக்கு இந்த பெடியன் அரசியல்வாதிகளை இழுக்கிறார் என்று மனதினுள் எண்ணியபடி தொடர்ந்து டக்கிளஸின் அரசியல் கதைத்தால் வெளிநடப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்துடன் அமர்ந்திருந்தான். டக்கிளஸ் ஒரு ஏதிஸ்ட் ரைட்டர் அவரின் கதைகளை வாசிக்கும் பொழுது மிகவும் சுவார்சியமாக இருக்கும் என்று அந்த இளைஞர் சொன்ன பின்புதான் ,ஓஓ உவர் எங்கன்ட டக்கிளஸ் இல்லை வெள்ளைகார எழுத்தாள டக்கிளஸ் என்று புரிந்துகொண்டான். "இலக்கியத்தின் லெபனான்" என்று பரிஸ் தலைநகரத்தை சொல்லுவார்கள் அவ்வளவுக்கு வன்முறைகள் இலக்கியகூட்டங்களில் நடக்கும் என்று ஒரு அன்பர் கருத்து பரிமாறினார்.உடனே அவன் அங்கிருந்த படைப்பாளிகளை ஒரு நோட்டம் விட்டான் சகலரும் புத்தபெருமானின் சாந்தமே சொருபமாக காட்சியளித்தனர்.நிச்சயம் இவர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள் என சமாதானம் அடைந்தான்.இருந்தாலும் சிட்னி முருகனை நினைத்து பையா நான் உன் அப்பனின் தீவிர பக்தன் நினைவில் வைத்துகொள் என்று சிட்னிமுருகனுக்கு ஒரு சின்ன ரிக்குயஸ்ட்டை வைத்து விட்டு தொடர்ந்து, கருத்து பரிமாறலில் ஈடுபட்டோரின் கருத்தை உள்வாங்கிகொண்டிருந்தான். மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் .மண்டபத்தில் இருப்பதற்கு இருக்கைகள் காணமல் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மேடையில் நடுநாயகமாக அவன் அமர்ந்திருந்தான்.அவனை புகழ்ந்து பேச ஆறு பேர் அவனின் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். மேடையில் பாரதியின் கவிவரிகளை பேசி அவனைப்பற்றி புகழ்ந்தனர் சிலர்.வேறு சிலர் கம்பனின் வரிகளை சொல்லி ஒப்பிட்டனர் .கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து என சகல படைப்பாளிகளின் பெயர்களும் மேடையில் ஒலித்து கொண்டிருந்தன அவனுக்கோ புல்லரிப்பு தாங்கமுடியவில்லை. நன்றியுரை முடிவடைய மேடையை விட்டு இறங்கி நடக்கின்றான்.மைதானம் நிறைய வாசகர்கள் அவன் எழுதிய நாவல்களுடன் காத்திருந்தனர் ,கையொப்பத்தையிட்டபடி சென்றவனுக்கு சில பெண்கள் தங்களது கன்னத்தை காட்டினர் முத்தமிடுவதா ஒப்பமிடுவாத என திகைத்து ஒப்பமிட்டு சென்றான்.அடுத்த பெண் ....... ரிங்க் ரிங்க் அலாரம் அலற திடுக்கிட்டு எழுந்தான் .....நாசமபோன கனவுக்கு ஒரு எல்லையில்லை ......கண்ணா இலக்கியம் என்பது வேறு விளையாட்டு என்பது வேறு..... வேலைக்கு செல்லும் பொழுது சுரேஸ் ,கனவுக்கும் கற்பனைக்கும் ஆண்டவன் ஒரு எல்லை வைக்காதது நல்லதுதான் என நினைத்தபடியே புன்முறுவலுடன் காரை செலுத்தினான்...
  8 likes
 13. "மதம் மாறியது வெக்கப்படவேண்டிய விசயம். ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னம்பிக்கை அற்ற செயல்." இவ்வாறு எல்லம் கூறுவதற்கு எந்த அடிப்படைத் தகுதியும் எமக்கில்லை. மதம் மாறுவது அவனவன் சொந்த விருப்புக்கு உட்பட்டது. இந்து மதம் அல்லது சைவ மதம் என்ற கோட்பாட்டின் கீழ் ஈழத்தமிழன் என்ற பதம் எப்போதும் இல்லை. மேலும் தமிழ்மொழியை பேசுவதாலும் வடகிழக்கில் வாழ்ந்ததாலும் கூடுதலாக சிங்களவன் தமிழன் என்று சுட்டிக்காட்டி ஒடுக்குமுறையைச் செய்வதாலும் தமிழர் என்று பொதுவாக நாம் அடைமொழியை எமக்கு ஏற்படுத்துகின்றோம். தவிர நாம் ஏனைய இனங்கள் போல் வலுவான தேசிய இனம் இல்லை. அவ்வாறு வலிமையாக இருப்பதானால் அது மதத்தை கடந்த நிலையை எட்டிய பின்னரே சாத்தியாமகும். இங்கு மதங்கள் மேலான வெறுப்பு என்பதுக்கும் பிரதேசரீதியான வெறுப்பு சாதீய வெறுப்பு மற்றும் முரண்பாடுகளுக்கும் இடையில் அதிக அளவு இடைவெளி இல்லை. இவ்வாறான வெறுப்பு மற்றும் முரண்பாட்டால் தான் தேசீய இனம் என்பது வலிமையற்று போராட்டம் படுதோல்வியடைந்தது. இந்து அல்லது சைவமதம் என்பது ஒரு கட்டமைப்புக்கு அப்பாற்பட்டதும் சுயநலத்தையும் அடயாளத்தேடலையும் வியாபாரத்தையும் அடிப்படையாகக்கொண்ட மதம் சார்ந்த செயற்படுகளுக்குள் ஒருவன் இருக்கவேண்டிய அவசியம் எப்போதும் இல்லை. ஒரு பொதுத் தன்மையற்ற மதச் செயற்பாட்டின் அடிப்படையிலேயே பெருமளவு பணம் கோயில் புதிப்பிப்பு. கும்பாபிசேகம். திருவிழாவுக்கான ஆடம்பரம் போக்குவரத்து என செலவு செய்யப்படுகின்றது. இதில் நூறில் ஒரு பகுதி போதும் போராளிகளின் புனர்வாழ்வுக்கு. ஆனால் அடயாளத்தேடலும் சுயநலமும் வியாபாரமும் என்ற பொதுத் தன்மையற்ற நிலையால் அவை பற்றி சிந்திப்பதில்லை. இன் நிலையில் ஒருவன் மதம் மாறும்போது அதைப்பற்றிக் கருத்துக்கூற என்ன அடிப்படைத்தகுதி இருக்கின்றது ? அல்லது அவ்வாறான கருத்தால் என்ன பிரயோசனம் ஏற்படப்போகின்றது? ஈழத்தமிழன் வெட்கப்படவேண்டிய காணொளியாம் !! அம்மணமாக்கப்பட்டது அறியாமல் முருகனுக்கு கோமணம் கட்டுபவர்களுக்கு எல்லாம் வெட்கம் என்ன வேண்டிக்கிடக்கின்றது ? வெட்கப்படவேண்டிய ஆயிரம் நிகழ்வுகள் கடந்து போனபோது வரமறுத்த கூச்சம் இப்போது வர முற்படுகின்றது என்றால் அது வழமையான பழைய அரிப்பு ! அடுத்தவனை சொறிய முடியாது அவரவரே சொறிய வேண்டியதுதான்.
  8 likes
 14. விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர், அவர்களின் தியாகத்தை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள். ஆனால் இது அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தியை வைத்து பிழைப்பு நடத்தும் அளவிற்கு கேவலமாக மாறியுள்ளது மிகவும் மோசமானது.
  8 likes
 15. 7 likes
 16. அடிப்படையான தவறுகளை கண்டுகொள்ளாமல் விவாதம் வெறுமனே அரசியல் மயப்படுத்தப்படுகிறது. எல்லா நடவடிக்கைகளிலும் அரசியல் உள்ளது. என்றாலும் தமிழர்களை இனப்படுகொலை செய்யவே இந்த திடடம் என்று வாதிப்பது இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்க நகைசுவை. தமிழர்கள் தமிழ் உணர்வுகளுக்கு அப்பாலும் சிந்திக்க முனைவது அவர்களுக்கும் மனித குலத்துக்கும் நன்மை பயக்கும். பொருத்தது வீடு என்ற கருதுகோளில் எந்த தவறும் இல்லை. இன்று சீனா பொருத்து வீடுகளை உலகெங்கும் கொண்டைனர்களில் அனுப்புகிறது. நான் வசிக்கும் நாட்டிலே அத்தகைய ஒரு கட்டுமானத்தில் தற்போது ஈடுபட்டுள்ளேன். வளர்ச்சியடைந்த நாடுகளில் அந்த நாடுகளில் உள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு இசையவே இந்த பொருத்து வீடுகள் அமைக்கப்படுகிறது. பல அரச நிறுவனங்களிடம் வெவ்வேறு அம்சங்களுக்கு அனுமதி பெற்ற பின்னரே இந்த வீடுகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறல்ல. பல் தேசிய நிறுவனங்கள் ஒரு அமைச்சரை பிடித்து தங்கள் எச்சங்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இலங்கையில் கொட்டிவிட்டு காசு சம்பாதிக்கின்றன. உலக சந்தையில் உருக்கின் விலை வீட்சியால் லட்சுமி மிட்டேலின் வியாபாரம் சென்ற வருடம் பெரும் நட்டத்தை கண்டது. விற்பனை தேங்கியது. அதை ஈடுகட்டுவதற்குத்தான் இலங்கை உதவுகிறதே தவிர மக்களின் நலனுக்காக அல்ல. இதே போன்று அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் சுனாமி வந்த சூட்டொடு தெற்கிலே ஆயிரக்கணக்கான வீடுகள் அமைக்கப்பட்ட்து. அந்த வேளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Director General ஆகவிருந்த எனது பல்கலைக்கழக நன்பனிடம் விசாரித்தபோது தனக்கு ஏதும் தெரியாது என்றான். அமைச்சர்களாலும் ஜனாதிபதியாலும் நிறைவேற்றப்படும் எந்த திட்ட்ங்களுக்கும் தங்களிடம் அனுமதி பெறுவதில்லை என கவலையுடன் கூறினான். ஏதோ தருகிறார்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ல இது ஒன்றும் அமச்சர்களின் சொந்த பணத்தில் செய்யும் தானமல்ல. மக்களுடைய கலாசாரத்துக்கும் மண்ணுக்கும் ஏற்ற வீடமைப்புகள் என சம்பந்தப்படட அரச நிறுவனங்கள் அங்கீகரித்த திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். ஏதும் இல்லாத ஏழைகள் எதை தந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நினைப்பில் பெருமுதலைகள் பொருளீட்ட அனுமதிப்பது எங்களை நாங்களே ஏமாற்ற இடம் கொடுப்பதாகும். மேலும் இலவசமாக வீடுகள் வழங்குவதை விட அவர்களே வீடுகளை அமைக்க நிதி வழங்குவது அவர்களை அந்த வீட்டுடன் கலாசார பொருளாதார ரீதியில் இணைக்க உதவும். இதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச மிகப்பெரிய வெற்றி கண்டார். இதை பற்றி நிறைய எழுதலாம் பேசலாம்.
  7 likes
 17. அங்கே வாழ்விடம் தேவைப்படும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் தமக்கு பொருத்துவீடு வேண்டுமா இல்லையா என்று. அவர்களுக்கு கிடைப்பது ஒரு பிடி மண் என்றாலும் ஒரு செங்கல் மாத்திரமே என்றாலும் அதை தட்டிப்பறிப்பதற்கான உரிமையை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. பொருத்து வீடு கேட்பவர்களுக்கு பொருத்து வீடுகளை கொடுக்கலாம். கல்வீடுதான் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அதற்கான காலம் கனியும்போது கல்வீடு கொடுக்கலாம். பொருத்துவீடு தேவையில்லை என்று கூறுபவர்களுக்கு பொருத்துவீடுகளை கொடுக்கத்தேவையில்லை. எங்களில் உள்ள குறைபாடு ஒன்று என்ன என்றால் இடைக்கால தற்காலிக தீர்வுகளை நாம் விரும்புவது இல்லை. தனித்தமிழீழத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனும் மனநிலையில் இருந்த எமக்கு கடைசியில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுத்திட்டத்தையே எட்டமுடியாமல்போனது. நாங்கள் தரையில் இருந்து பத்தாம் மாடிக்கு தாவிக்குதிப்பதையே விரும்புகின்றோம். ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே செல்வது எமக்கு கசப்பாக இருக்கின்றது. இலங்கையில் ஊழல் இல்லாமல் வியாபார நோக்கம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதை யாராவது கூறமுடியுமா? பொருத்துவீடுகளின் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலன்கள், வியாபாரிகளின் இலாபநோக்கு இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்தவிசயங்கள் இல்லாமல் இலங்கையில் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் அவற்றை குறிப்பிடுங்கள். பொருத்துவீடு தீப்பிடிக்கும் என்று சிலர் கூறுகின்றீர்கள். ஆனால், ஓலைவீட்டுடன் ஒப்பிடும்போது எது விரைவில் தீப்பிடிக்கும்? குளிர், வெப்பம் பற்றிய முறைப்பாடு உண்டு. வெப்பத்திற்கு சுற்றிவர மரங்களை நடலாம். குளிருக்கு போர்வை பயன்படுத்தலாம், உடையை அதற்கு ஏற்றபடி போடலாம். வெளிநாடுகளில் நாங்கள் காணாத குளிரா? எப்படியான கொடுங்குளிருக்குள் எல்லாம் நாங்கள் மாட்டுப்பட்டு இருக்கின்றோம். -20, - 30 டிகிரி செல்சியஸ் உள்ள இடங்களில் வேலை செய்து இருக்கின்றோம். குளிருக்குள் வெளிச்சூழலில் எத்தனை அலுவல்கள் பார்க்கின்றோம். குறைபிடிப்பது என்றால்கல்வீட்டிலும் ஆயிரம் குறைகள் பிடிக்கலாம். பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும். அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம். பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.
  7 likes
 18. ஆனாலும் இங்கு பலருக்கு கவலையான செய்தி என்னெவென்றால் நேற்று முதல் அவை அகற்றப்படுகின்றன என்பது. ஆனால் காங்கேசன்துறை மக்களுக்கு சந்தோசமான ஒரு செய்தி இன்றைய நிலை படங்களில்: ஆனாலும் பலருக்கு இதை அகற்ற வந்த இன்ஜினின் பெயர் சிகிரியா என்பது மட்டும்தான் முதலில் முழுசா புரியும்.
  7 likes
 19. கள உறவுகள் அனைவருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  7 likes
 20. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும். உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி யாழிணையம்
  6 likes
 21. நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்.யாழின் மூத்த உறுப்பினரும் சகல கலாவல்லவனுமான நெடுக்ஸ் திருமணம் செய்கிறார். nedukkalapoovan 4,301 கருத்துக்கள உறவுகள் 27,423 posts Posted 25 minutes ago (edited) · நண்பருக்கு அடுத்தபடியாக.. நாங்களும் திரு"சூரி"யன்" (திரு"மதி"க்கு எதிர்ப்பால்- நாங்களும்.. அறிமுகம் செய்வமில்ல.. எதிலும் சமத்துவம் வேண்டும்..) ஆவதற்குரிய ஒப்பந்தத்தில்.. கையெப்பம் இடும் நிகழ்வைச் செய்ய தடல்புடல் ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்குது. ஒப்பந்தம் நின்று நிலைக்க.. எல்லாம் எம்மை உருவாக்கி விளையாட்டுக் காட்டிக்கிட்டு இருக்கும் இயற்கையிடம்.. வரம் கிடைக்கும் என்று.. எதிர்பார்க்கிறம். தனித்தலைப்பு எல்லாம் இதுக்கு அவசியமில்லை.. உறவுகளே.. அதனால் இங்கேயே பதிவிடுகிறம். சில நண்பர்கள் நினைக்கப்படாது.. இவர் எப்படி எங்களை எல்லாம் உந்த ஒப்பந்தத்திற்கு எதிராக உசுப்பி விட்டிட்டு.. தான் இப்ப ஒப்பந்தம் போடலாம் என்று.. எல்லாம் காலத்தின் பெற்றோரின் உறவுகளின் காலக் கட்டாயம் என்றாகிவிட்டது. அதுமட்டுமன்றி எதிர்பால் தரப்பு மும்மரமாக உள்ளது.. ஒப்பந்தத்தை செய்து.. சிக்கல்பட. எல்லாம் விதி. விதி யாரை விட்டிச்சு. Edited 22 minutes ago by nedukkalapoovan Like this Quote Quote this
  6 likes
 22. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தது சுவாமி நாதன் தான். அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான் இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர். மக்களுக்காக வீடுகளோ? அல்லது துருப்பிடிக்கும் இரும்புகளை விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா?
  6 likes
 23. கோழிப்புக்கை,றால்புக்கை,கீரைப்புட்டு,எண்ணைப்புட்டு,வத்தல்கறி,பிரட்டல்கறி எண்டு அந்தமாதிரி சாப்பாடுகளுக்கு வடமராட்சியை கேட்டுத்தான்.... எல்லாம் அவையின்ரை கைராசியப்பா.. மூண்டு பேரும் வாழ்க்கையிலை அரைவாசியை இழந்துட்டிங்க... ஏன்....ஏன்...கண்ணிலை காட்டக்கூடாது? எங்கையோ சமைக்கத்தெரியாத இடத்திலை கையை நனைச்சிட்டீங்க மேடம்
  6 likes
 24. முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய். முடிந்த வகைகளில எல்லாம் நன்மை செய். முடிந்த இடஙகளில் எல்லாம் நன்மை செய். முடிந்த நேரங்களில் எல்லாம் ந்ன்மை செய். முடிந்த மனிதருக்கு எல்லாம் ந்ன்மை செய். இது எதுவுமே செய்யாட்டிலும் பரவாயில்லை. தீமை மட்டும் செய்யாது இரு.
  6 likes
 25. நீரை எடுக்கும் காட்சி போன வருடம் யாலயை சென்றவுடன் பொருட் களை பிரித்து வைத்து தேநீர் வைப்பதற்காக நீரை எடுக்க சென்ற வேளை நமதுசங்கத்து உறுப்பினர்கள் ஆட்டையை போட்டுக்கொண்டு ஓடிவிட்டார்கள் மரக்கறிகளை அவைகளை சுட்ட படம் இது மரத்தின் கலரில் உருமறைப்பு செய்ததால் பக்கிகளை கண்டு பிடிக்க முடியல சொதி வைக்க வைத்திருந்த தக்காளியை சுவைக்கிறார்
  6 likes
 26. இந்த திரி அரசியலுக்கப்பால் மக்கள் நலன் விரும்பிகளுக்காக தொடரும். காங்கேசன்துறையில் தனியார் காணிகளுக்குள் தள்ளி விடப்பட்ட புகையிரத வண்டிகள். இது கல்லூரி வீதியின் பருத்தித்துறை வீதியின் நுழைவாசலையும் தடை செய்திருந்தது. உள்ளிருந்த பகுதிகளில் சில விடப்பட்டுள்ளன. பலவீடுகளில் இன்னமும் இராணுவமும் முட்கம்பி வேலிகளும்தான்.
  6 likes
 27. 6 likes
 28. அனைவரது வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்pறி. முதலில் எனது பந்தியில் விடுபட்ட உறவுகளிற்கு. பட்டியல் முழுமையற்றது என்பதைக் குறிக்கவே Ellipsis குறியுடன் பட்டியிலை முடித்திருந்தேன். ஆங்கிலத்தில் பல பதங்களைப் போல 'இலிப்சிஸ்' என்ற பெயரும் புராதன கிரேக்கத்தின் எச்சம். இந்தப்பெயரின் அர்த்தமே தோல்வியினை ஒத்துக் கொள்வது தானே (falling short). ஒரு தோப்பு நமது நினைவில் ரம்மியமாகப் பதிந்திருக்கிறது என்றால் அதற்கு ஒரு மரம் மட்டும் காரணமும் அல்ல எந்த மரமும் காரணமல்லாமலும் அல்ல. யாழ் தோப்பும் விதிவிலக்கு அல்ல. அடுத்து, யாழ் களம் அமைந்ததற்கான அடிப்படையே எமது ஈழக்கனவு தான். அதனால் விவாதம் என்றவுடன் பின்னூட்டங்களும் இனி என்னத்தை விவாதிப்பது/விளக்குவது என்ற விரக்த்தியினையே வெளிப்படுத்துகின்றன. இன்னுமொருபுறம் விவாதம் பொழுதுபோக்காவது கண்டிக்கப்படுகிறது. புரிந்துகொள்ளக் கூடியது தான். ஆனால் இவை இரண்டுமே கூட விவாதப்பொருளாகின்றன, பொழுதுபோக்கு அவரவர் வசதிக்கும் தேடலிற்கும் ஏற்ப மாறுபடும். சக்கை உணவும் பசிபோக்கும் நிறையுணவும் பசிபோக்கும். இருப்பினும் உண்டவர் வாழ்வு உண்டதைப் பிரதிபலிக்கும். பசி என்பது வெறும் அறிகுறி. ஒவ்வொருமுறை பசிக்கும் போதும் பசியின் தார்ப்பரியத்தை எவரும் ஆராய்வது இல்லை. இயந்திர ரீதியில் பசி அடக்கப்பட்டபடி வாழ்வு நகர்கிறது. இது பசிக்கும் மற்றும் பசி குறியிடும் அனைத்திற்கும் பொருந்தும். பொழுதுபோக்கு முனையில் யாழ் களம் தனித்துவத்துடன் நிறையுணவு வழங்குவது சாத்தியமானது. எமது சமூகத்தில் பலர் நாற்பது வயதில் அறுபது வயது மனிதர்கள் போல் தெரிகிறார்கள். ஆண் பெண் இருபாலாரிற்கும் இது பொருந்தும். இளமை என்பது மனத்தில் இருந்து வரவேண்டியதே அன்றி நரைக்கடிக்கும் மையினால் அல்ல. அசதி நம்மவர்களைப் பற்றியுள்ளது. இதற்கான காரணம் முள்ளிவாய்க்கால் என்று கூறுவது ஒரே ஒரு வகையில் மட்டும் உண்மை. அதாவது, ஈழத்தமிழனிற்கு போராட்டம் இருந்தவரை ஒரு ஆரோக்கியமான நிறையுணவு போன்ற பொழுதுபோக்கு இருந்தது. பொதுமை பற்றிப் பேசினர். ஆதரிப்போரும் விமர்சிப்போரும் ஓயாது தேடினர். அன்றாட உழல்தல்களிற்கப்பால் ஒரு குவியம் இருந்தது. முள்ளிவாய்க்காலில் அனேகம் பேரிற்குத் தொலைந்தது உண்மையில் இது தான். போராட்டம் வகித்த அச்சாணி பாத்திரம் போராட்ட தொலைவில் தான் பலரால் உணரப்படுகிறது. ஒயாது செல்வத்தைப் பெருக்குவதிலும், குளந்தைகளைப் படிப்பிப்பதிலும், பக்கத்துவீட்டுக் காரனையும் இனசனத்தையும் மிஞ்சியவராய்க் காட்டிக்கொள்வதிலும் மகிழ்ந்திருப்பதாய் வெளிப்படைக்குக் காட்டிக்கொள்ளினும் பலர் வெற்றிடத்தை உணருகின்றனர். பல்கலைக்களகம் சென்றிராத பெற்றோர் தம் குழந்தைகளை பல்கலைக்கழகம் வாயிலாகப் பெருநிறுவனங்களின் அலுவலகங்களில் அமர்த்திவிடப் போராட, தாம் பல்கலைக்கழகம் சென்ற பெற்றோர், பள்ளிக்கூடங்களின் worker-bee தர்ப்பரியத்தைப் புரிந்து கொண்டு, ராணித்தேனியாவதற்காய் ஹாவர்டும் ஸ்ரான்போட்டும் வேண்டி ஓட, இரு சாராரும் நிறையவே வெற்றிகள் பெற்று, மில்லியன்களும் அதிகாரங்களும் அதிகரித்து விட்டது உண்மை தான். ஆனால் ஒரு வெற்றிடம் அவர்களிற்குள் அசதி ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதனால் எமது சமூகத்திற்குள் மது என்பது போத்தலலோடு கவிழ்ப்பதாய் இருக்கிறது. உணவு என்பது மெல்லாது முழுங்குவதாய் இருக்கிறது. ஆன்மீகம் என்பது மொட்டை அடித்து ஜோஹா செய்வதாக இருக்கிறது. முகநூலில் தமது வாழ்வு பரிபூரணமானது என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காய் போடப்படும் படங்களிற்கு உண்மையில் அப்படங்களைப் போடுபவர்களே பச்சைகுத்த மாட்டார்கள் என்ற நிலையில் அசதி பற்றிக் கொள்கிறது. அடுத்த சந்ததிகளை விட்டுவிடுவோம். குறைந்த பட்சம் நாற்பது வீதமான எமது சந்ததியினர் தமிழில் உரையாடும் தேவை அற்றவர்களாக வாழ்கிறார்கள். தென்னிந்திய திரைப்படத்துறைக்கு அப்பால் தமிழ் தமிழர் வாழ்வில் அகன்றபடி இருக்கிறது. உடலும் உளமும் புத்துணர்வு பெறுவதற்கு 'வெற்றி பெற்ற' தமிழர்கள் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்திற்கு அந்நியமான முனைகளிலேயே நுகர்கின்றனர். பாவிக்காது விடப்படும் மொழி நிச்சயமாக அகன்று செல்லும். ஈழம் என்பது பொதுமை சார்ந்தது. இலக்கிய வட்டங்கள் மற்றும் இதர வட்டங்கள் அனைத்தும் முதுகுசொறிவதற்காக மட்டும் இயங்குவதால் இவையும் முகநூல் மட்டத்தில் தான் செயற்படுகின்றன. ஆனால் தமிழில் மட்டும் உரையாடும் எத்தனையோ குடும்பங்கள் பாரம்பரிய பேசாப்பொருட்களிற்கு அடிமைப்பட்டு, பேச நாதியின்றி, செய்வதறியாது உழல்வது புலத்தில் இன்னமும் இருக்கின்றது. புலத்தில் வறுமை இருக்கின்றது. ஈழம் என்பதன் அடிப்படை சக தமிழன் மீதான பரிவு. ஒரு இனமாக நாம் தொடர்வது அவசியமாயின் இனம் ஆரோக்கியமாவது அவசியம். Activism என்பதற்குப் புலத்தில் தமிழன் மத்தியில் கூட நிறைய இடமிருக்கிறது. நாம் ஒரு புராதன சமூகமாக இருந்தும் முதிர்ச்சி அற்ற சமூகமாகத் தொடர்வதற்கான காரணம் நாம் விடுதலையடையாத சமூகம். விடுதலை என்பது சிங்களவரிடம் இருந்து அல்ல, எமது பயத்தின் நிமித்தம் வஞ்சனையால் கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை மனவமைப்பில் இருந்து பலர் இன்னமும் விடுதலைபெறவில்லை. எவர் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, தமிழ் என்பதும் அதன் அனைத்து விழுமியங்களும் இன்றைய தேதிக்கு பொருளீட்டுவதற்குப் பயனற்ற ஒன்றாகவே பலரிற்கும் இருக்கிறது. எனவே வெறும் பிறான்ட் அளவில் தான் இன்று தமிழ் அடையாளம் இருக்கிறது. எவரிற்கெல்லாம் தமிழ் நிலைப்பது அவசிமோ அவர்கள் இந்த பிறான்டினைக் கவர்ச்சி மிக்கதாய் ஆக்குவது தவிர்க்கமுடியாதது. தமிழர்களையே தமிழோடு இணைந்து இருக்கச் செய்வதற்கு தமிழ் பிராண்ட் முனைந்தால் தான் சாத்தியம். அப்படி முனைகையில் தொலைந்த பொதுமை மீழலாம் அசதி நீக்கும் குவியம் கிடைக்கலாம். யாழ்களம் நிறையுணவொத்த பொழுதுபோக்கினை தமிழ் சமூகம் மற்றும் மொழி சார்ந்து வழங்குவதன்மூலம் ஒரு தலைமைத்துவத்தை இம்முனையில் உருவாக்கமுடியும்.
  6 likes
 29. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இன்னுமொருவன்! நுணாவிலானின் கருத்து.. ஓரளவுக்காவது எம்மவரின் நிலையைத் தெரிவிக்கின்றது! வளம் மிகுந்த நதிக்கரைகளில் ஒரு காலத்தில் நாகரீகத்தின் தொட்டிலாக வாழ்ந்த ஒரு இனம்...! யாதும் ஊரே...யாவரும் கேளிர் என ஓங்கிக் குரல் கொடுத்த இனம்! வாழ்வை எவ்வாறு வாழ்வது என்று வள்ளுவன் வாய் மொழி மூலம் உலகுக்கு உணர்த்திய இனம்! ஓட...ஓடத் துரத்தப் பட்டு....ஒதுங்க இடமின்றி..மணல் வெளிகளிலும், வளம் குறைந்த நிலங்களிலும் வாழ நிர்பந்திக்கப் பட்ட இனம்! இனி ஓடுவதற்கு நிலமில்லை என்ற போதில் மட்டும்... ஆயுதம் தூக்க நிர்பந்திக்கப் பட்ட இனம்! துரத்தியவர்களாலேயே ...தோற்கடிக்கப் பட்ட இனம்! இன்று வெறும் மாயைகளிலும், வசதிகளிலும்....மயங்கிச் சுயம் தொலைத்து நிற்கின்றது! செத்துப்போன ராஜராஜனின் பெயர் சொல்லிப் பெருமை பேசுகின்றது! அதே ராஜ ராஜனுக்கு..அவன் கட்டிய ..காலத்தால் அழியாத வரலாற்றுக் கோவிலிலேயே..அவனுக்குச் சிலையாக நிற்கக் கூட அனுமதியில்லை என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை! ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்து விடும் பலம் அதனிடம் இருந்தும்...அதனை உணராது..அந்தப் பொருளாதாரத்துக்கு மிண்டு கொடுக்கும் மௌனியாக அது வாழ்ந்து கொண்டிருக்கின்றது! அந்த இனத்திடமிருந்து எதனை எதிர்பார்கின்றீர்கள்? இரந்து வாழும் புலவர்களிடமிருந்து....மன்னனை வாழ்த்தும் வரிகள் வருமேயன்றி....உணர்வு மிகுந்த எழுத்துக்கள் என்றும் பிறக்கப் போவதில்லை! வரப்போகும் புத்தாண்டாவது,,,,பழையன கழித்துப்..புதுமையான மாற்றங்களைக் கொண்டு வரட்டும்! கிருபன் மேலே கூறியது போன்று...மற்றவர்களின் முதுகு சொறிதலைக் காலம் கடந்தே புரிந்து கொண்டவர்களின் நானும் ஒருவன்! புதிய நம்பிக்கைகள் சுமந்து....யாழில் பயணிப்போம்!
  6 likes
 30. பாடல்: கங்கை நதி ஓரம் படம்: வரப்பிரசாதம் (1976) இசை: ஆர். கோவர்த்தன் பின்னணி இசை: ராஜா இந்தப்பாடலின் மெட்டும், அதன் பின்னணி இசையும் எனக்கு மிகப் பிடித்தவை. குறிப்பாக ஒரு மந்தகரமான ஒரு மாலையின் உணர்வுகளை இதன் இசை உள்ளுக்குள் ஏற்படுத்தும். குறிப்பாக அந்த ஆரம்ப இசையில் 0:10 நொடிகளில் ஒரு chord கொடுப்பார்கள். அது பாடலை ஒரு வேறு தளத்துக்குள் கொண்டுவரும். அதுபோல 0:28 நொடிகளில் பாடல் தொடங்கும்போது பின்னணியில் ஒரு பேஸ் கிட்டார் துள்ளி விளையாடும். அட.. பின்னணி இசையில் இப்படி பின்னி எடுக்கிறார்களே என்று பார்த்தால் அதை அமைத்தவர் ராஜாவாம்.. ஆமாம்பா.. அவரேதான்..
  6 likes
 31. நல்ல விடயம் நடந்திருக்கிறது ....அவர்கள் விஷமிகள் அல்ல முதுகெலும்பு உள்ளவர்கள்
  6 likes
 32. குமாரசாமி அண்ணா, போல், மீரா, வாத்தியார், நீங்கள் எல்லாம் உலகில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் கருத்துக்கள் கூறுகின்றீர்களா அல்லது உலகில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அங்கே தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெறும் விடயங்கள் மட்டும் எல்லாம் நேர்த்தியாக, நீதி, நேர்மையின்படி நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? பிச்சைக்காரர்கள், அடிமைகளாக உள்ளவர்களுக்கு எஜமான்கள் எறிகின்ற எலும்புத்துண்டுகளும் இல்லையென்றால் ஜீவனோபாய போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது? 1990ம் ஆண்டு நாம் இடம்பெயர்ந்தபோது சொந்தவீடு இல்லை, வருமானம் இல்லை, ஆதரிக்க எவரும் இல்லை. அரசாங்கம் கொடுத்த நிவாரணப்பொருட்களும் கிடைத்திருக்காவிட்டால் வேறுவழி இல்லாமல் இயக்கத்தில் இணைவதே ஒரேயொரு தீர்வாய் அமைந்து இருக்கும். நாம் இடம்பெயந்து நட்டாற்றில் கைவிடப்பட்டதற்கு யார் காரணம் என்ற தர்க்கம் தேவையில்லை. ஆனால், அங்கே கடைசியில் கைகொடுத்தது கப்பல்களில் அனுப்பிவைக்கப்பட்ட உணவுப்பொருட்களே. அரிசியில் கல்லை மண்ணை கலந்து அனுப்பினாலும் அதை ஏற்றுக்கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. இது ஓர் உதாரணம். இந்தக்கோணத்திலேயே நான் பொருத்துவீடுகளை பார்க்கின்றேன். இங்கே இருந்து நாங்கள் எதுவும் கதைக்கலாம், எழுதலாம். ஆனால், கடைசியில் அங்கே அரசாங்கம் என்ன செய்கின்றதோ அதுதான் யதார்த்தம். தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று பாடத்திட்டத்தில் அச்சிடப்பட்டால் பரீட்சை வரும்போது வந்தேறு குடிகள் என்று மறுமொழி எழுதினால்தான் புள்ளி. எங்கள் கெட்டித்தனத்தை காட்ட நினைத்தால் முட்டைதான் வரும். அரசாங்கம் சொல்வதுதான் வேதவாக்கு. முரண்டுபிடித்தால் இழப்பு அங்கே வாழும் மக்களுக்குத்தான். ஒவ்வொரு திட்டங்களை உருவாக்கி செயற்படுத்தும்போதும் எவ்வளவோ தில்லுமுள்ளுக்கள் நடக்கின்றன. அரசியல்லாபம் பார்ப்பவனே அரசியல்வாதி. வியாபாரத்தில் இலாபம் பார்ப்பவனே வியாபாரி. தமக்கு லாபம் இல்லாமல் எவருமே எதிலும் இறங்கமாட்டார்கள். நாங்கள் பொருத்துவீட்டு விசயத்தில் அதிபுத்திசாலிகளாக எங்களை காட்டிக்கொள்ள முயன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்கள் கிடைக்காதவண்ணம் விசயங்களை இழுத்தடிப்பதாகவே எனக்குப்படுகின்றது. வெறும் அரிசியை பெற்றுக்கொண்டு கஞ்சியை மட்டும் செய்து குடிக்கக்கூடியதாக உள்ள நிலமையில் நாங்கள் இட்லி, சாம்பார் கிடைத்தால்தான் உண்போம் அல்லது உண்ணாவிரதம் செய்வோம் என்பதுபோல் இருக்கின்றது உங்கள் பலரின் வாதம். பொருத்துவீட்டில் ஏதாவது விபத்துக்கள், இடர்ப்பாடுகள் எதிர்காலத்தில் வந்தால் அதற்கு பதில்கூறவேண்டிய தார்மீககடமை அந்ததிட்டத்தை உருவாக்கி செயற்படுத்துபவர்களுக்கு உள்ளது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் உண்மையான ஜனநாயக விழுமியங்கள், நீதி, நேர்மை உள்ள ஆட்சியில். அவை இல்லாத இடத்தில் எதுவுமே நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் நடக்கப்போவது இல்லை. அலைவரும்போதே தலைமுழுகு!
  5 likes
 33. யாழில் சூடான திரிகள் பற்றி எரிந்து பல காலம் ஆகிவிட்டது. விவாதங்கள் மூலம் அறிவூட்டல் செய்யலாம் என்பதில் முன்னர் இருந்த நம்பிக்கை இப்போது இல்லை. அத்தோடு சமூக வலைத்தளங்களில் நடைபெறும் விவாதங்கள் அவரவர் நட்புவட்டங்களில் நடைபெறும்போது அவை காத்திரமானவையாக இருக்கமாட்டா என்பதால் இவற்றில் நான் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. சில முகநூல் இலக்கிய, அரசியல் விவாதங்கள் வெறும் விளம்பரங்களுக்காகவும், ஒருவரை ஒருவர் முதுகு சொறியவும், அல்லது அவதூறு செய்யவுமே வழிவகுக்கின்றன. இவற்றினால் சமூக முன்னேற்றம் உண்டாகப்போவதில்லை. ஆனால் ஆங்கிலத் தளங்கள் Reddit, Guardian பின்னூட்டங்கள் போன்றவை முக்கியமான கருத்தாடல்களை புரிய உதவுகின்றன. அதே போன்று யாழ் இணையமும் தொடர்ந்தும் கருத்தாடலை ஊக்குவிக்கும் நோக்கோடு இயங்கினாலும், உறுப்பினர்களாகிய நாங்கள் (என்னையும் சேர்த்துத்தான்) கருத்தாடலில் ஈடுபடாது விடயங்களை வாசித்துவிட்டு மட்டும் போவது பெரிய குறைபாடுதான். இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று சிந்திக்கவேண்டும். இன்னுமொருவனுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
  5 likes
 34. உண்மையான அன்பையும் அரவணைப்பையுமே எதிர்பார்ப்பவன் என்ற வகையில்... இதுவரை அது கிடைச்சுக்கிட்டு இருப்பதால்.. சம்மதித்தேன். தொடர்ந்து கிடைக்கும்.. என்றே எதிர்பார்க்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் போது இங்கிருந்தும் வழங்கப்படும். வாழ்த்திய எல்லா யாழ் கள நல்லுள்ளங்களுக்கும் நன்றி. தனித்திரியை இதற்கு விரும்பாத போதும் ஆர்வமிகுதியால் திறந்த ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் நன்றி. ஒரு கவலை.. எப்பவும் சார் கெதியா செட்டிலாங்க சார் என்று.. ஒரு நற்செய்திக்காகக் காத்திருந்த சோழியன் அண்ணா.. இதனை யாழில் காண முடியாதது தான். இருந்தாலும் அவர் மேலிருந்து வாழ்த்துவார் என்றே நம்புகிறோம். சம காலத்தில் திருசூரியன் நிலையை அடைய இருக்கும் கலைஞன்.. சுண்டல் மற்றும் பதிவுத்திருமணத்துக்குப் பின் திருமணச் சடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சேவியருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். மேலும்.. முனிவர்ஜீ மற்றும் மருதங்கேணி ஆகியோரும் இந்தப் பட்டியலில் விரைந்து இணையவும் வாழ்த்துகிறோம்.
  5 likes
 35. மெக்கானிக்கல் என்ஜினியருக்கு குழந்தை பிறந்ததுபோது மனைவியின் SMS "உங்க புது வண்டி லாஞ்ச் ஆயிடுச்சு" கணவன்: "வித் கியரா, வித்தவுட் கியரா?"
  5 likes
 36. இலங்கையின் மிகவும் வறிய மாவட்டங்களாக முல்லைத்தீவும் மட்டக்களப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதேமாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு பாஉ ஒருவரினால்வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை அமைக்கும் கேவலத்தை என்ன வென்று சொல்வது. சுனாமி நினைவு நாளில் ஒரு விடயத்தை நினைத்து பார்க்கிறேன்....... சுனாமி ஏற்பட்ட அடுத்த நாளில் எமது Gemeinde (council)இல் ஒரு அறிவிப்பு வருகிறது ஆசியவில் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது நாம் அணைவரும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டுமன..... டிவிகளில் சுனாமி அவலத்தினைப் பார்த்த் மக்கள் பதை பதைக்கிறார்கள் உடனடியாக அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள் அந்த வருடப்பிறப்பிற்கு தாம் வெடிகொழுத்துவதினை தவிர்த்து அந்தப் பணத்தினை சுனாமி உதவியாக வழங்குவதென..... (சுமார் இருபது ஆயிரம் பிராங்குகள் வரை அவர்களால் சேர்த்து வழங்கப்பட்டது) உலகில் ஏதோ ஒரு மூலையில் நடந்த அவலத்திற்கு துடிதுடித்து தமது களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து உதவிகளை வழங்கிய இந்நாட்டினர் மத்தியில்.... தனது சொந்த மக்கள் பேரவலத்தில் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியில் காந்தி எனும் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் அதே மக்களின் பிரதிநிதியினை நினைத்துப் பார்க்கிறேன்.
  5 likes
 37. அடேல் அன்ரியையும் துரோகி ஆக்கியாச்சு. ரிசிசியில் எத்தனையோ முன்னாள் போராளிகள் இருந்தார்கள். பாலா அண்ணருக்கு மாற்று சிறுநீரகம் வழங்கியதும் முன்னாள் போராளி. இவற்றைவிட புலம்பெயர் நாடுகளில் எத்தனையோ போராளிகள் இருந்தார்கள். TS ற்கு பந்தம் பிடித்து முன் வந்தவர்கள் பலர், அவ்வாறானவர்களில் ஒருவர் தான் தீயிட்டவர். அது சரி உந்த சங்கீதன் என்பவருக்கு 2011 இல் தனது Chrysler வாகனத்தையும் ( மக்களின்/ TRO அமைப்பின் பணத்தில் வாங்கப்பட்டது) தனது ட்ரைவர் "கே......வரன்" என்பவரையும் கொடுத்து எல்லாவற்றையும் பின்னால் இருந்து இயக்கியவர் 2016 வரை ஏன் அஸ்தியை இரகசியமாக வைத்திருந்தார்? அட புண்ணாக்கு பயலே அடேல் அன்ரி தனது கணவருக்காக அறிக்கை விடுகிறார். இயக்கவிடயம் அன்ரிக்கு தெரியாதாம்???? அடங்கொக்கமக்கா..... இயக்கவிடயம், வன்னி சம்பந்தப்பட விடயம் என்கிறீர்களே சாந்தன் கைதுசெய்யப்படும் வரை, அஸ்தி அவரது பாதுகாப்பில் இருந்ததை கமலுக்கோ அன்ரிக்கோ சொல்லாமல் விட்டிருப்பாரா? TCC க்கும் இயக்கத்திற்கும் தொடர்பே இல்லாத எழுதியிருக்கிறார்
  5 likes
 38. இலச்சியங்களை வகுத்தே நாம் வாழ்க்கிறோம். தூய உணர்வுகள் என்னும் ஒளிக்கதிர்களாலே நாம் புகழ் பெறுகிறோம்.
  5 likes
 39. விட்ட தவறுகள் இனியும் வரக்கூடாது. ஓசி...ஓசி...ஒசி...ஓசியெண்டால் பொலிடோலும் குடிக்கிற சமுதாயத்தில் தான் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றோமா???? வாழ்க்கைக்கு/கல்விக்கு/தொழிலுக்கு தேவையான அவசியமான மொழிகள் பல இருக்கின்றன. அவற்றை படியுங்கள். கிந்தி எதுக்குமே உதவாதது. சீன மொழியை கற்க ஐரோப்பாவில் கூட பரிந்துரை செய்கின்றார்கள். ஆனால் கிந்தியை????? கிந்தி பிறரை கழுத்து அறுப்பதற்கே தவிர...... ஈழத்தமிழன் ஏதோ இவ்வளவுகாலமும் கருநாடக சங்கீதம் படிக்க இயலாமல் கரைச்சல் படுறமாதிரியும்......வாழ்க்கைக்கு அத்தியாவசியம் மாதிரியும் கதை விடுறாங்கள்.
  5 likes
 40. 5 likes
 41. இரண்டாம் உலகப் போரிலே தோற்ற நாடுகள்தான் (ஜப்பான் + ஜெர்மனி) உலகை பின்னர் புதிய தொழில் நுட்பத்தால் வெற்றிகொண்டன. பழமையை பேசி புதியன புகுதலை மூர்க்கமாக எதிர்காது புதியன செய்து உலகை தமதாக்கினார். இன்று சீனா இந்தியா போலல்லாது அந்த வகையில் உலகை பொருளாதார நிலையில் ஆடசி செய்கிறது. எமது பாரம்பரியமென்று கொங்கிறீட் சுவரும் ஓட்டு வீடும்தான் வேண்டும் என்று கேட்பது எம்மை முன்னேற விடாது. மேலும் இந்த கொங்கிறீட் எங்களின் பாரம்பரியத்தில் வந்ததும் இல்லை. இன்றுவரை கட்டப்படும் வீடுகள் கூட எமது சூழலுக்கும் மக்களுக்கும் இசைய காலப்போக்கில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்படட ஐரோப்பிய வீடமைப்புகளே. எமது பாரம்பரிய வட்ட வீடுகள் நாற்சார் வீடுகள் காலனித்துவ ஆடசிகாலத்தில் முற்றாக கைவிடப்படடன. சூழலுக்கும் எமது மக்களுக்கும் பொருத்தமான புதிய வீடமைப்புகள் உருவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை யுத்தம் அல்லது யுத்தத்தில் அழிவு அல்லது தோல்வி நமக்கு வழங்கியுள்ளது. அதை சரிவர பயன்படுத்தும் ஆற்றலும் அறிவும் எம்மிடம் நிறையவே உள்ளது. மகாவலி அபிவிருத்தி திடடத்தின்போது எனது சக சிங்கள கடடடக்கலைஞர்களால் மிக கவனமாக நீண்ட ஆய்வுகள், மாதிரி அமைப்புகள் ஊடாக புதிய வீடமைப்புக்கள் உருவாக்கப்பட்டது. வெறும் வீடுகள் மட்டுமன்றி கிராமங்களே வடிவமைக்கப்படடன. இப்போது வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் வீடுகளின் கடடமைப்புகளில் எமது கடடடக் கலைஞர்களின், நாடு நகர திட்டவியலாளர்களின் பங்களிப்பே இல்லை என்பதை திடமாக சொல்லலாம். கல்வி அறிவற்ற அரசியல் பலமற்ற ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த விளையாடடை மேட்ற்கு நாடுகளால் செய்ய முடியாமல் உள்ளது. ஆனால் இலங்கை அவர்கள் விளையாட களம் அமைத்து கொடுக்கிறது. அதுவும் கல்வியில் உயர் நிலையில் இருந்த வடக்கு மக்களுக்கு. இது மிகவும் வேதனையானது. மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் கீழ் நிலையில் உள்ளதை காட்டுகிறது. அவர்களுக்கு எந்த அரசியல் பலமும் இல்லை என்பதை காட்டுகிறது. இப்போது நிறுவப்படும் வீடுகள் மக்களுடைய கலாசாரத்தையும், சூழலையும், சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பெரும் அளவில் பாதிக்கும் என நிறுவுவதற்கு அதிக அறிவு தேவை இல்லை. அதை எழுத இப்போதுகால அவகாசமில்லை. முடிந்தால் விரைவில் நீண்ட கட்டுரையே எழுதுகிறேன். . பிரேமதாசாவின் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து மிக பெரிய சம்பளத்தில் நான்கு நிபுணர்கள் 1984இல் 3 வருட ஒப்பந்தத்தில் வீடமைக்க வந்திருந்தார்கள். வந்தவர்கள் எங்களிடம் இருந்த அமைப்புகளை பிரதி பண்ணி சில பொருத்தமில்லாத மாற்றங்களை செய்து சமர்ப்பித்தார்கள். மிகவும் ஆற்றலும் துணிவும் உள்ள எனது மேலதிகாரி (Turner Wickramasinge) அவர்களின் கையாலாகாத்தனத்தை விமர்சித்தது போராடி ஏழு மாதத்துள் அவர்களை நாட்டிடை விட்டு வெளியேற வைத்தார். பிரேமதாசாவுக்கு அது தோல்வியானாலும் உண்மையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தை முறித்தார். இப்போது தேவையானது பிரேமதாச போன்ற அரசியல் தலைவர்களும் விக்ரமசிங்கே போன்ற அதிகாரிகளுமே. மக்களுக்கு சரியான வழியை காட்டும் பொறுப்பு கற்றவர்களுக்கு தலைவர்களுக்கும் உண்டு. மக்கள் விரும்புகிறார்கள். ஏன் தடுக்கிறீர்கள் என்றால் நாங்கள் கற்று என்ன பயன்.
  4 likes
 42. தேசியத் தலைவர் பிரபாகரனின், முன்பு கண்டிராத..... பல படங்களை இணையத்தில் கண்டேன். அவற்றை, ஒரு தொகுப்பில் இணைத்தால், பலரும் பார்க்கக் கூ டியதாக இருக்கும் என்பதால்.... இந்தத் தலைப்பில், இணைக்கின்றேன்.
  4 likes
 43. காஸ்மீரில் தினமும் உயிர் இழக்கும் நமது சிப்பாய்களை நினைத்து பெருமையடைகிறேன்.. அவர்களின் தியாகத்தின் முன்பு யாரும் ஈடு இணை இல்லை .. அதை திசை திருப்புவதற்காக எதிர்கட்சிகள் செய்யும் அல்ப விளையாட்டுகளுக்கு நாம் அடி பணிய போவது இல்லை..!! இப்படிக்கு புரியாணி ஜெயம் பார்டி செய்தி தொடர்பாளர் : சுனா பானா... டிஸ்கி : எவன் எங்க செத்த எனக்கு என்ன ? செத்து ஒழிங்க நாராதி... களா ... ஏற்கனவே பூமி லோடு அதிகமாகி அதன் சுற்று பாதையில் இருந்து விலகுவதாக அறிகிறன் .. நீங்க எல்லாம் தனி தனியாக இல்லாமல் ...மொத்தமா மேலே போனால் பூமி பாரம் குறையும் . பூமியும் தனது சுற்று பாதையில் இயங்கும் குறிப்பாக நிறைய இனங்கள் இறையமையோடு வாழும் ..!!
  4 likes
 44. ஈழத்திலிருந்து, காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை. - திரு ராஜேஸ்வரன்.-
  4 likes
 45. பிரிகேடியர் துர்க்கா பொன்னுத்துரை கலைச்செல்வி தமிழீழம் (யாழ் மாவட்டம்) தாய் மடியில்:24.03.1971 மண் மடியில்:04.04.2009 அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது. 1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர். இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார். உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி ‘எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க’ என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்புலிகளின் ஒரு படையணியை வழிநடத்திச் சென்ற ஒரு சிறந்த தலைவி. உலகில் எந்த மூலையிலும் எந்தப் பெண்களாலும் செய்ய இயலாத ஒரு செயல் அது. உலகப் போர்களின் போதும் ஏனைய உள்நாட்டு யுத்தங்களின் போதும் முயன்று முயன்று தோற்றுப் போன ஒரு எண்ணக்கரு. முழுவதுமாக, எந்த வித ஆண்களின் தலையீடும் இன்றி, பயிற்சி தொடக்கம், நிர்வாகம், தொழில்நுட்பம், மற்றும் களமுனை வரை பெண்களை மட்டுமே வழிநடத்திச் செய்து முடித்த, செய்து வெற்றி கண்ட பெருமை எங்கள் பிரிகேடியர்களான விதுசா அக்கா மற்றும் துர்க்கா அக்கா ஆகியோரை மட்டுமே சாரும். எந்த ஒரு விடயத்தையும் அக்காவிட்டைக் கேட்டுச் செய்ய வேணும் என்று சொல்லிவிட்டு விதுசா அக்காவின் கருத்தை நாடி கலந்து ஆலோசித்து செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. வீரச்சாவிலும் இருவரும் பிரியாமல் சென்றது ஈழப் பெண்களுக்குரிய தலைமைக்கு ஒரு பாரிய இழப்பென்றே சொல்ல வேண்டும். தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில பொத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட ‘ஏன் எனக்கு எடுக்க இயலாதா… நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்’ என அன்பாகக் கடிந்து கொள்வார். விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் ‘காட்டுக் கோழி’. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார். அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார். களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட ‘அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா… மறைக்காமல் எடுங்கோ..’ என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார். வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை. ‘என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?’ ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்’ என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது. குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும் போது எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள். பிரிகேடியர் துர்க்கா அக்கா ஆற்றிய சில உரைகள் எங்கள் உறவுகளுக்காக. தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி வீரச்சாவடைந்த எங்கள் அக்கா பிரிகேடியர் துர்க்கா அவர்களுக்கும் இதே சமரில் களமாடி வீரச்சாவடைந்த தளபதிகளுக்கும் மற்றும் போராளிகளுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். http://eelamalar.com/தமழீழத்தின்-தேவதையாக-வந்/
  4 likes
 46. மறுபடியும் முகப்புத்தகத்தில் இருந்து சில பதிவுகள் இங்கு இன்னுமொருவன் யாருமேயில்லை சாட்சாத் நானேதான். நிர்வாகத்திற்கு களவிதிகளை நான் மீறினால் முடிவெடுக்கும் உரிமையை முழுமையாக வழங்குகின்றேன். ஆனால் எனது நோக்கம் நல்லது என்றே நினைக்கின்றேன். இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 1 நோர்வேயில் இருந்து வந்த நண்பன் ஒருவருடன் (எனக்கும் சில வேலைகள் வவுனியாவில் இருந்தமையாலும்) வவுனியா சென்றிருந்தேன். நானும் பல சகாப்த்தங்களை நோர்வேயில் கழித்திருந்தாலும் இந்த அமைப்பிற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமிருந்திருக்கவில்லை. வழமைபோல புகையிரத்தத்தின் வெளியே காமராவுடன் சூரிய உதயத்தை ரசித்தபடி ஒரு அழகான பயணம். சூரியன் பனைகளூடாக எழுவதை எப்படியாவது படம் பிடித்துவிட வேண்டுமென்ற ஆவலை தனது பேச்சால் குழப்பியவாறே இருந்தார் நண்பரும். என்னடா யாழ்ப்பாணத்தில் இருப்பவன் பனைகளினூடாக சூரிய உதயத்தை படம் எடுப்பது அவ்வளவு கஷ்ட்டமா என்றுதானே யோசிக்கிறீர்கள். ஆமாங்க ரொம்ப கஷ்டம்தான். சூரிய பகவான் உதித்து பனைக்கு மேலேயும் வளர்ந்து ஜன்னலுக்கால வந்து பின்புற உடலை சுடும்வரை குப்புறப் படுத்து குறட்டை விடுபவர்களுக்கு மட்டுமே அந்த கஷ்டம் புரியும் - மொத்தத்தில் நான் ரொம்ப சோம்பேறி. ஆனாலும் இண்டைக்கு அதிஷ்டம் என்பக்கமில்லை. தென்னையாவது மாட்டிச்சே என்றவகையில் கொஞ்சம் திருப்தி. இன்னொருவனின் பார்வையில் - "தமிழ் நோர்வே உதவி அமைப்பு" 2 வவுனியாவுக்கும் வந்தாச்சு நெல்லி ஹோட்டலிலும் குந்தியாச்சு - காலை உணவுக்கு. ரூமில போய் பொதியை வைத்தபின் நண்பனும் சொன்னான் "உனக்குத்தான் இண்டைக்கு ஒரு வேலையும் இல்லை, சும்மாதானே ஊர் சுத்தப்போறாய் என்னோட வா". இந்த நண்பர்களின் தொல்லை எப்பவுமே வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டதாச்சே (எவனாவது சும்மா ஊர் சுத்துவானா, அவனவனுக்கு ஊர் சுத்த ஆயிரம் காரணம் இருக்குமே - மனதுக்குள் கறுவியபடி) சரி என்றேன். சென்ற அன்று எதுவித வேலைகளுமற்று வெட்டியாக ஊர் சுற்ற ஆசைப்பட்ட என்னை வலுக்கட்டாயமா இழுத்துச் சென்றார் நண்பர். ஆட்டோவில் SEEDS என்ற நிறுவனத்துக்கு போனோம். அழகான இயற்கையான கட்டிடம், ரசித்து ரசித்து கட்டியிருந்தார்கள். மரக்கிளைகளில் விறாந்தை வேலிகள், தென்னை மர தூண்கள், கிடு்கினால் வேயப்பட்ட சில தட்டிகள், சாணகத்தால் மெழுகிய நிலம் ஆனாலும் உள்ளே நவீன தொழில்நுட்பம் நிறைந்திருந்தது. சிறிய உரையாடலின் பின்னர் ஒரு வானில் மூன்று உதவியாளர்களுடன் ஏத்தி எங்கோ அனுப்பினார்கள். எங்குபோகின்றோம் என்று தெரியாவிட்டாலும் அலுவலக உரையாடலில் இருந்து ஓரளவு ஊகிக்க முடிந்தது. "பெண் தலைமைத்துவ குடும்ப வாழ்வாதார உதவிகள்" சம்பந்தமாக இந்திரா காந்தியை சந்திக்கப் போகின்றோம் என்கிறார் அருகிலிருந்த உதவியாளர். "ஆ... மறுபடியும் இந்திரா காந்தியா" என்று மனதுக்கு நினைத்தாலும் வெளிக்காட்டாமல் அவரைப் பற்றி சொல்லுங்களேன் என்றேன். இவர் போரினால் பாதிக்கப் பட்டவர், கணவனை இழந்தவர் + உயர்தரம் படிக்கும் ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார். சொந்தமாக நிலமிருந்தாலும் விவசாயம் செய்ய விதைகளுக்கு கூட பணமில்லாதிருந்தார். தமிழ் நோர்வே உதவி அமைப்பு இவருக்கு சொந்தமாக தொழில் செய்ய 2015 இல் இருந்து ஒரு வருடத்திற்கு உதவி செய்ததாகவும், இந்திரா காந்தியும் இப்போது சொந்தக்காலில் நிற்பதாயும், மகளின் படிப்புக்கு மட்டுமே சிறிய உதவி இப்போது வழங்கப்படுவதாயும் சொல்லி முடித்தார் உதவியாளர் பிரமீளா. சரி பாக்கலாம் என்றது மனது. வானும் ஒரு கரடு முரணான பாதையில் போய்க்கொண்டிருந்தது. ஒரே துள்ளலும் குலுக்கமும்தான். பக்கத்திலிருந்த உதவியாளர் கலை இண்டைக்கு உங்களுக்கு மசாஜ் தேவையில்லை நல்லா நித்திரை வரும் இரவுக்கு எண்டார். ம் ம் என்றபடி இருந்தால் ஒரு வாசலில் வான் நின்றது. உள்ளே போகும்போது இரு புறமும் தோட்டம் ஒரு பக்கம் கச்சான் + உளுந்து, மறுபக்கம் குண்டு மிளகாய். ரொம்ப உறைக்குமே என்று நினைத்தபடி உள்ளே போனால் புன்சிரிப்புடன் இந்திரா காந்தி. துப்பரவான காணி, அழகான தோட்டம், வீட்டுத் தேவைக்கான அனைத்து பயிர்களும் அங்கே. சேர்ந்து வந்த உதவியாளர்களும் எதோ தமது குடும்ப உறவினர் போல அவருடன் பழகினார்கள். அடிக்கடி வந்து போகின்றார்கள் என்பது அப்படியே தெரிந்தது. அதுவும் அந்த வாலு கலை அங்கேயிருந்த விளாம்பழம், மாங்காய் என்று ஒவ்வொண்டாய் கடித்து குதறியதை பார்க்க இவங்களுக்கு இந்த வளவு ரொம்ப பரிச்சயமானது என்பதும் நிச்சயமானது. இந்திரா காந்தியும் இன்று வயல், கச்சான், உளுந்து, மிளகாய், கத்தரிக்காய் என்று தனியாளாக விளைவித்து, அதன் வருமானத்தில் தானும் வாழ்ந்து மகளையும் படிக்க வைப்பதை பார்க்க பிரமிப்பா இருந்தது. ஆனாலும் சுற்றத்தவர், உறவினர்களின் தொடர்பு இல்லை என்று கூறும்போது அவரின் கண்கள் கரைந்தது. மகளைப் படிக்க வைச்சு நான் நல்லா வருவன் அப்ப வருவானுக இவங்கள், அப்ப வைக்கிறன் ஆப்பு என்கிறார். அப்படி போடம்மா அரிவாளை! உறுதியும் உழைப்பும் இருந்தால் எப்படியும் முன்னே வரலாம் என்பதுக்கு உதாரணம் நீங்கள். எனது நோக்கம் நல்லது என்றே நினைக்கின்றேன். இப்பதிவுகளை நிர்வாகம் அனுமதித்தால் மிகுதியை நாளை தொடர்கின்றேன்.
  4 likes
 47. ஓரளவு கிட்ட போய் மரத்துக்கு கீழே நின்று சுட்டது
  4 likes
 48. 4 likes
 49. சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..! பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் …! கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !அந்த பெண் நீதிபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் …. அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..? “மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்….” “ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?” “உங்கள் அப்பா – அம்மா …?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..” “ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ … உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை..” இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?” “இல்லை..” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்து கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க … சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் . அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க … ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க … டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?” ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழம்பி .. “மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக ….” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ…ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?…..ஓகே …போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா …பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது . கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன் …!” நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள். ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ..?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் . அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே - See more at: http://www.canadamirror.com/canada
  4 likes
 50. 4 likes