Jump to content

Leaderboard

  1. யாயினி

    யாயினி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      9112


  2. MEERA

    MEERA

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      5161


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      76771


  4. புங்கையூரன்

    புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      2

    • Posts

      13561


Popular Content

Showing content with the highest reputation on 11/09/16 in all areas

  1. அனைத்து எதிர்பார்ப்புக்களையும் கணிப்புக்களையும் மீறி, வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அதற்கான முக்கிய காரணங்கள்: விளம்பரம் டிரம்பின் வெள்ளை அலை வெள்ளை அலை முடிவுகள் தலைகீழாக மாறின. ஒஹியோ, ஃபுளோரிடா, வட கரோலினா ஆகிய அனைத்தும் டிரம்புக்கு ஆதரவாக மாறின. அதுதான், ஹிலரி கிளிண்டனின் பாதுகாப்பு அரணைத் தகர்த்தெறிந்தது. மத்திய மேற்கு பிராந்தியம் ஹிலரிக்கு பெருமளவில் கை கொடுக்கும் என்று நம்பினார்கள். பல பதிற்றாண்டுகளாக அந்தப் பிராந்தியம், ஜனநாயக் கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன. கறுப்பினத்தவர் மற்றும் வெள்ளையின உழைக்கும் வர்க்கம் அவர்கள் பக்கம் இருந்தது. அந்த வெள்ளையின உழைக்கும் வர்க்கம், குறிப்பாக கல்லூரிப் படிப்பு இல்லாத ஆண்களும் பெண்களும், இந்த முறை ஜனநாயகக் கட்சியைக் கைவிட்டார்கள். கிராம மக்கள் பெருமளவில் திரண்டு வாக்களித்தார்கள். கடலோரப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் அதிருப்தியடைந்திருந்தார்கள். இப்போது தங்கள் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். விர்ஜினியா, கொலராடோ மாகாணங்கள் விரைவில் விழந்த நிலையில், விஸ்கான்சினும் டிரம்புக்கு ஆதரவாக வீழ்ந்தபோது, ஹிலரியின் நம்பிக்கை தகர்ந்தது. டிரம்ப் அலை மிக வேகமாக தாக்கியிருக்கிறது. அதிர்வுகளால் அசையாத டிரம்ப் வெற்றியின் பக்கம் பலரை அவமானப்படுத்தியதாக, ஊடகங்களை பகைத்துக் கொண்டதாக விமர்சிக்கப்பட்டார். பெண்களிடம் பாலியல் ரீதியாக ஈர்க்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி பல குற்றச்சாட்டுக்கள் டிரம்பை கடுமையாகவும், வேகமாகவும் தாக்கின. ஆனால், உறுதியான குணம் கொண்ட டிரம்ப் அதனால் அதிர்ந்துபோய்விடவில்லை. குண்டுதுளைக்காத ஆடை அணிந்தவரைப் போல, அந்தத் தாக்குதல்களும் அவர் மீது பட்டுத் தெறித்துவிட்டன. அன்னியர் தீவிர பிரசாரம் தீவிர பிரசாரம் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிராகப் போராடினார். தனது கட்சியில் உள்ள செல்வாக்கு மிக்க சக்திகளுக்கு எதிராகவும் போராடினார். எல்லோரையும் வென்றுவிட்டார். அவரது அந்த போராட்ட குணமே, டிரம்புக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் பூர்வாங்க சுற்றில் மோதிய பெர்னி சேன்டர்ஸ், டெட் க்ரூஸ் உள்ளிட்ட தேசிய அரசியல்வாதிகள் வாக்காளர்களின் மனநிலையை ஓரளவு அறிந்திருந்தார்கள். ஆனால், டிரம்பை போல யாரும் முழுமையாக அறிந்து வைத்திருக்கவில்லை. ஹிலரிக்கு வந்த மின்னஞ்சல் சோதனை ஜேம்ஸ் கோமி ஜேம்ஸ் கோமி ஹிலரி கிளிண்டன், தனியார் சர்வர்கள் மூலமாக, தனது மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, எப்.பி.ஜ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்துவதா, இல்லையா என்ற குழப்பமும் இதில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளிண்டன் மீதான விசாரணையை மீண்டும் துவக்கப் போவதாக எப்.பி.ஐ யக்குநர் ஜேம்ஸ் கோமி அறிவித்தார். அப்போதிருந்து டிரம்ப் தனது பிடியை இறுக்கத் துவங்கினார். அவரது பிரசார வேகம், எடுத்து வைத்த கருத்துக்கள் அதிக ஆதரவாளர்களை அவரது பக்கம் கொண்டு வந்தது. அடுத்த இரு வாரங்களில், எப்.பி.ஐ நிலையை மாற்றிக் கொண்டது. ஹிலரிக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதில்லை என ஜேம்ஸ் கோமி அறிவித்தார். ஹிலரி, தனது அதிகாரப்பூர்வ பணிகளுக்கான மின்னஞ்சல்களுக்கு அரசாங்க சர்வர்களைப் பயன்படுத்தியிருந்தால் இந்தச் சிக்கல் எழுந்திருக்காது. அந்த சுமை அவரது தோள்களை விட்டு இறங்கவில்லை. உள்ளுணர்வை நம்பினார் வெற்றிக் களிப்பில் வெற்றிக் களிப்பில் அரசியல் மரபுகளுக்கு மாறான பிரசார யுத்திகளை மேற்கொண்டார் டிரம்ப். ஆனால் அதன் நுணுக்கங்களை, நிபுணர்களைவிட கூடுதலாகவே தெரிந்து வைத்திருந்தார். நெருங்கவே முடியாது என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்ட விஸ்கான்சின், மிச்சிகன் போன்ற மாகாணங்களில் மாபெரும் பேரணிகளை நடத்தினார் டிரம்ப். ஆனாலும், ஹிலரியின் பிரசாரத்துடன் ஒப்பிடுகையில் டிரம்பின் பிரசாரம் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பரிகாசிக்கப்பட்டது. ஆனால், சூட்சமத்தை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார் டிரம்ப். கடைசியில் வெற்றி முரசைக் கொட்டியிருக்கிரார் டிரம்ப். டிரம்பின் நெருங்கிய வட்டம், குழந்தைகள் மற்றும் ஆலோசகர்கள், இனி வெள்ளை மாளிகையில் இருந்து, அமெரிக்காவுக்கு மட்டுமன்றி, உலக அளவில் யுத்திகளை வகுக்கப் போகிறார்கள். http://www.bbc.com/tamil/global-37922427
    2 points
  2. மலர்கள் பறிக்கப்படவும் உதிரவுமே பிறந்திருந்தபோதும் அவை அதற்காய் எந்த வருத்தங்களையும் எங்கும் பதிவு செய்வதே இல்லை இல்லையா. எல்லாம் இயற்கையென்றாபின் பிறத்தலும் மரித்தலும் ஒன்றுதான். மகிழ்ச்சியோ துக்கமோ இரண்டையும் ஏற்பதுதான் நியதியும்கூட. by.Iyyappa Madavan
    1 point
  3. இங்கும் சக்தி விரயத்தை சேமிக்கும் முகமாகவே இந்த நேரமாற்றம் ஏற்படுத்தபடுவதாக அறியக் கூடியதாக இருக்கிறது..உண்மையாக நேரமாற்றம் என்ற ஒன்று தேவை தானா என்ற ஒரு கேள்வியும் எளத்தான் செய்கிறது..நடைமுறையில் இருப்பதை மாற்றுவதும் சற்று கடினம் தானே.
    1 point
  4. அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன்வெற்றி பெற்ற நாள் இன்று!06.11.1860: ஆபிரகாம் லிங்கன் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் எனக் கருதினார். 1860 ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக ஆபிரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவர் 1863ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார், தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல முயன்றதற்கு இடங்கொடாமல் அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் வெற்றி பெற்றதை லிங்கனின் தலையாய சாதனையாகக் கூறலாம். 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். தாயார் நான்சி ஹாங்க்ஸ். லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. அப்போதைய அமெரிக்க சமூகத்தில் நிலவி வந்த வெள்ளையார்-கறுப்பர் இடையேயான வேறுபாடு மற்றும் அடிமை முறை ஆகியவற்றை லிங்கன் முற்றிலுமாக எதிர்த்தார். அதன்படி 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. லிங்கனின் அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். அதற்கு பிறகு லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.