
... 64 வருட கால சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்தும், பார்த்தும் பாராதும் இருந்த சர்வதேசம், முதல் முறையாக விரும்பியோ, விரும்பாமலோ, அரைகுறையாக, தமது தேவைக்களுக்காக ஜெனீவாவில் ஓர் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. என்னதான் அப்பிரேரணையில் இருக்கின்றதோ இல்லையோ உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் அதனை வரவேற்று நிற்கிறது. நீதி கேட்டு நீற்கும் உலக தமிழின போராட்டத்துக்கு இது ஒரு ஆரம்ப வெற்றியையும், அதேநேரம் ஓர் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.
ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்க பிரேரணையை முறியடிக்க இலங்கை/இந்திய அரசுகள் எடுத்த முயற்சிகள் பல பல. ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறையினரையும் ஜெனீவாவில் களமிறக்கி மிக திட்டமிட்ட ஓர் யுத்தம் போன்றதையே நிகழ்த்தியது சிங்களம். சிங்களத்தின் இப்பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கியதே ஓர் நரம்பற்ற தமிழிச்சி, அதைவிட இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்களை விரும்பியோ, விரும்பாமலோ தாயகத்தில் இருந்து இழுத்தும் வந்தது. அதில் காலம் காலமாக தமிழின அழிப்புக்கு துணை போகும் ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் முன்னிலை படுத்தப்பட்டதோடு, முள்ளீவாய்க்காலில் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றிய வைத்தியர்கள் பலர் பல நிர்பந்தங்களின் மத்தியில் அழைத்து வரப்பட்டு, சிங்களத்தின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டனர்.
இவைகள் எல்லாவற்றுக்கும் மேலாக இருபதுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று எமது இனத்தில் தோன்றிய கறுத்தாடுகள் சிலவற்றையும் களமிறக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, அக்கறுத்தாடுகள் தாம் அங்குள்ள மக்களோடு தொடர்பில் இருப்பவர்கள், அடிக்கடி சென்று வருபவர்கள், ஏதோ தாயகத்தில் உள்ள மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றும் புலம்பெயர் தமிழ் தலைவர்கள் என்ற மாயையை தோற்று விக்க படாதபாடு பட்டார்களாம். புலத்தில் இருந்து எம் மக்களுக்காக எம்மில் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சென்றாலும், சிங்களத்தினால் இலங்கையில் இருந்து கும்பலாக கொண்டு வரப்பட்டவர்களோடு, இந்த புலத்தில் தமிழினத்தில் தோன்றிய கறுத்தாடுகளும் இணைந்து, இலங்கை திருநாட்டில் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று, சந்தோசமாக வாழ்கிறார்கள் என்ற மாயையை தோற்றுவிக்க முற்பட்டார்களாம்.
பிரித்தானியாவில் இருந்து இரண்டு உட்பட புலமெங்கும் இருந்து இருபது நாலறிவு கூட இல்லாத எம்மினத்தில் பிறந்து விட்ட மிருகங்களை சிங்களம் விலை கொடுத்து வாங்கி சர்வதேசத்துக்கு காட்சிப்படுத்தியதோடு, இம்மிருகங்களை கொண்டே, ஜெனீவாவில் பங்குபற்றிய புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்களாகிய எம்மவர்களில் சிலரையும் மிரட்டியும் உள்ளதாம். ஜெனிவாவில் பங்கு பற்றிய எம்மவர்களில் பலரை புகைப்படங்கள் எடுத்தும், அவர்களது நேரடி குடும்பங்கள் ஆபத்துக்களை சந்திக்கும் வண்ணம் அவற்றை சிங்களம் இணையங்கள், பத்திரிகைகளில் பிரசுரித்தும் உள்ளது.
காலாகாலமாக சிங்களத்துடன் ஒட்டியிருந்து இனவழிப்புக்கு துணை போனதற்கு புலிக்காச்சலை காரணமாக காட்டித்திரிந்த இந்த நாலுகால் மிருகங்கள், முள்ளிவாய்க்காலுக்கு பின்னும் தம்மை மாற்றத்தயாரில்லை என்பது மட்டுமல்ல சிங்களத்தின் இனவழிப்புக்கு எதிரான சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கும் உலகத்தமிழினத்துக்கு இடையூறுகளை உண்டு பண்ணத்தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த புலத்தில் இன்னும் எம்மத்தியில் இருக்கும் கறுத்தாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். மக்களுக்கு இந்நாலு கால் மிருகங்களை அடையாளம் காட்ட வேண்டும்.
இதை செய்ய தவறுவோமாயின், இன்னும்/இன்றும் பணத்துக்காக இனத்தை விற்றுப்பிழைக்கும் கூலிகள், தமது செயற்பாடுகளை அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போய் விடும்.



















