Jump to content


Orumanam
Photo

வீரவெவ பகுதி விமான விபத்துக்கு புலிகளே காரணம்; பதினொரு வருடங்களின் பின் கண்டுபிடித்தது படைத்தரப்பு!


 • Please log in to reply
2 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 26 March 2012 - 01:31 PM

Posted Image
2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அநுராதபுரம் – வீரவெவ பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தமை தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் இரு ரஷ்ய பிரஜைகளை ஏற்றிச் சென்றபோதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப சிக்கலே விபத்துக்கான காரணம் என விசாரணைகள் மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விமான விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விமானம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வில்பத்து வனப் பகுதியில் பதுங்கியிருந்து மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாகவே விழுந்து விபத்துக்குள்ளானதாக கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையின் பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விமான விபத்து தொடர்பான வழக்கு இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.saritham.com/?p=55283
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 26 March 2012 - 05:40 PM

ஜெனீவாவில் கூட மக்களுக்காக நம்பிக்கை தரும் செய்திக்கு காரணமானவர்கள் இவர்கள் - உயிர்க்கொடை தந்து இன்றும் வரலாறு படைப்பவர்கள் இவர்கள் !!

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,783 posts
 • Gender:Male
 • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
 • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 27 March 2012 - 06:25 PM

வீரவெவ பகுதி விமான விபத்துக்கு புலிகளே காரணம்; பதினொரு வருடங்களின் பின் கண்டுபிடித்தது படைத்தரப்பு!1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட்டு போருக்கு புலிகள் தான் காரணம் சிங்கள ஆராய்ச்சியாளர் டிசில்வா பெராரெ கண்டு பிடிப்பு :rolleyes: :rolleyes:

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]