பிரிட்டிஷ் ராணியாக மகுடம் சூட்டப்பட்டு 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள பிக் பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் சூட்டுமாறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோபுரத்தின் உண்மையான பெயர் கிங்ஸ் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்று வரும் ஜூன் மாதத்துடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பிக்பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, பார்லிமென்டில் டோபியாஸ் எல்வுட் தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.seithy.co...&language=tamil
















