கரிக்காய் பொரித்தேன்
#61
Posted 04 April 2012 - 11:35 PM
கரிக்காய்-கரி என்றால் யானை என்றும் பொருள்படும்.யானை வாழைக்காய் என்று ஒரு வாழையினம் உண்டு.ஆகவே கரிக்காய் பொரித்தேன் என்பதை வாழைக்காய் பொரித்தேன் என்றும் சொல்லலாம்.

#62
Posted 04 April 2012 - 11:45 PM
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!
மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது
மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.
- வல்வை சகாறா and உடையார் like this
#63
Posted 05 April 2012 - 12:02 AM
நான் பாடல்களை இங்கு கொண்டு வந்து ஒட்டுவேன் பொருளெல்லாம் என்னிடம் எதிர்பார்க்கக்கூடாது...
நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டால் சத்தியமாக நான் அழுதிடுவேன்.. ஏனென்றால் எனக்கும் கன பாடலுக்குப் பொருள் தெரியாது. எல்லாம் சுயம்புலிங்கங்கள் மாதிரி தான்தோன்றித் தனமாக இருக்கும் ஆதாரத்தைக் கொண்டுவா என்றெல்லாம் அச்சுறுத்தல் செய்யக் கூடாது.
இனி இந்தப் பொரியல் சட்டியில் என்ன பொரியல் என்று யோசிக்கிறீர்கள் தெரிகிறது. அநேகமாக இப்ப பதியப் போகும் பதிவு எல்லோருக்கும் மிகப் பிடித்தமானதாக இருப்பதோடு மட்டுமல்ல எல்லோரும் தத்தம் அனுபவங்களையும் சொல்ல வழிவகுக்கும் பகுதியாகும். யார் யாரிடமெல்லாம் நீங்கள் இப்படியான உதவிகளை எதிர்பார்த்து....
இன்று இங்கு "தூது" பற்றிய பாடல்களைப் பார்ப்போம்.
இலக்கியத்தில் இல்லாத " தூதா?"
உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் "தூது " பாடல்களை தலைக்கு ஒவ்வொன்றாக இணையுங்கள் திரையிசையில் அழகான தூதுப்பாடல்கள் இருக்கின்றன. முக்கிய குறிப்பு ஆளுக்கு ஒரு பாடலைத்தான் இணைக்கலாம்..... ஒரு பதிவிலேயே பல பாடல்களை எங்கட அறிவிலி ஒட்டுகிற மாதிரி ஒட்டினா பொரியல் சட்டி கரிச்சட்டியாக மாறிவிடும் அதனால ஆளுக்கு ஒரு பாடல்தான் இணைக்கலாம். அப்போதுதான் ஒவ்வொருவருடைய இரசனையையும் அறிய முடியும். ஒருவர் இணைத்த பாடலை மற்றவர் இணைக்கக்கூடாது. அதே போல அழகான தூதுக் கவிதைகளையும் இணைக்கலாம். அப்போதுதான் நாம் அவற்றைப் பிரித்து மேய்ந்து தமிழை நயந்து வியந்து நடைபோடலாம் சரிதானே...
முதலில் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் தூது பாடல்
"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி"
இதையே கவிஞர் கண்ணதாசன் இன்னும் இலாவகமாக ஒரு பாடலுக்குள் புகுத்திவிடுகிறார் மிகச்சிறிய மாற்றத்துடன்
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது..
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது..
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..
என்ன எல்லாருக்கும் தலைமுடியைப் பிய்த்துக்கலாம் போலத் தோன்றுகிறதா?
சரி ஒவ்வொரு முடியாகப் பிய்த்து எண்ணிக் கொண்டு தூது பற்றிய உங்கள் சொந்த அனுபவங்களையும் இங்கு பதிவிடுங்கள் உங்களுடைய தூதுகளை நாங்கள் எத்தகைய தூதுகளாக உவமிக்கலாம் என்று பார்ப்போம்
மறக்கவேண்டாம் ஆளுக்கு ஒவ்வொரு தூதுப்பாடல்..
இந்தத் "தாதி தூது தத்தும் தத்தை சொல்லாது" பாடலைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்
http://www.esnips.co...045&pid=4373589
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!
மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது
மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.
ஓ... புலவர் நீங்களும் பதிவிட்டிருக்கிறீர்கள் கவனிக்காமல் நான் வேறொன்றை எடுத்துவந்து விட்டேன்.. மன்னித்துவிடுங்கள் இதற்கான பொருளையும் தூதுப் பாடல்களினுடே பேசுவோம்
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#64
Posted 05 April 2012 - 12:08 AM
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி?
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி?
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி - ஆஹா
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
பருவம் தூங்குமே தலைவி
வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே
பேசலாகுமோ தோழி?
இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி?
கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே
கலக்கம் வராதோ தோழி?
ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி?
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பான் மனைவி
ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி?
ஹூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி?
துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#65
Posted 05 April 2012 - 01:30 AM
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது
மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்."
இதனை நான் முன்னம் கேள்விப்பட்டனான், பிறகு எழதுகிறேன், நல்ல பாட்டு புலவர்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#66
Posted 05 April 2012 - 01:37 AM
Song: Karpanaikku Meni Thanthu
Singer: TMS
Music: M S Visvanathan
Lyrics: Kannadasan
கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன்
கால் சலங்கை போன இடம் கடவுழுக்கும் தோன்றவில்லை
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெரும் கூடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெரும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடிப் பறந்ததம்மா இளம்குயில் பேடு
இளம்குயில் பேடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
மாமலை மேகம் இன்று கண்களில் இருப்பு
மார்கழி பனி அன்றோ அவளது சிரிப்பு
அவளது சிரிப்பு !
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
Edited by உடையார், 05 April 2012 - 01:41 AM.
- வல்வை சகாறா likes this
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#67
Posted 05 April 2012 - 03:24 AM
http://www.youtube.com/watch?v=dCs77PZAV0Y
மல்லிகையே மல்லிகையே தூதாக போ..
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிறேன்..
தேயாமலே பிறை போலாகிறேன்..
தாங்காது இனி தாங்காது..
மல்லிகையே மல்லிகையே தூதாக போ..
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ..
சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..
சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே..
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..
பெண்ணே..
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது..
பெண்ணே....
மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா..
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா..
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா...
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை..
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..
என்னை..
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது..
என்னை..
கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்
ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேரும் நீ....
மல்லிகையே மல்லிகையே தூதாக போ...
.
Edited by esan, 05 April 2012 - 03:31 AM.
- வல்வை சகாறா likes this
#68
Posted 05 April 2012 - 04:23 AM
Movie: Paattum Barathamum
Song: Karpanaikku Meni Thanthu
Singer: TMS
Music: M S Visvanathan
Lyrics: Kannadasan
கற்பனைக்கு மேனி தந்து கால் சலங்கை போட்டு விட்டேன்
கால் சலங்கை போன இடம் கடவுளுக்கும் தோன்றவில்லை
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெரும் கூடு
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவளில்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நானொரு கோடு
பாடிப் பறந்ததம்மா இளங்குயிற்பேடு
இளம்குயிற்பேடு
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
நீர் வற்றிப் போனதென்று நினைவினில் வெடிப்பு
நெஞ்சத்தில் தோன்றுதம்மா வசந்தத்தின் துடிப்பு
மாமலை மேகம் இன்று கண்களில் இருப்பு
மார்கழி பனி அன்றோ அவளது சிரிப்பு
அவளது சிரிப்பு !
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்
கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்
நாயகியே எனது காவிய எல்லை
நாயகியே எனது காவிய எல்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
நரை விழுந்தாலும் நெஞ்சில் திரை விழவில்லை
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல தென்றலே ஓடு
http://www.dishant.c...hp?songid=59399
உடையார்,
இந்தப்பாடல் அந்தப்படம் பார்த்தபோது கேட்டதோடு சரி மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். எப்படி இந்தப்பாடலை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். இந்தப்பாடலையும் அதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் அல்லது மனதிற்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?
எல்லோரும் தூது சொல்லிவிடக் கெஞ்சிக் கூத்தாடுவார்கள் இந்தப்பாடல் கொஞ்சம் வித்தியாசமாக தென்றலை "ஓடு" என்று கலைக்கிறது
Edited by வல்வை சகாறா, 05 April 2012 - 04:26 AM.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#69
Posted 05 April 2012 - 04:52 AM
ப. விஜயகுமார்
#70
Posted 05 April 2012 - 04:54 AM
மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது
மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.
புலவர் இந்தப்பாடலில் அரசமரம்,மூங்கில், வேங்கைமரம், காட்டுமரங்கள், ஆல், அத்தி ஆகிய மரங்கள் பங்குபற்றியுள்ளன...
மரமது தேடி மரக்கும் உள்ளங்களுக்கு நாளை மாலையில் வந்து மறக்காமல் தெளிவான பொருளைக் கூறுகின்றேன்
அதற்கிடையில் இலக்கியச் சிறுத்தைகள் யாராவது பதிவிட்டு அசத்திவிடமாட்டீங்களா... எல்லாம் ஒரு நம்பிக்கைதான்...
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#71
Posted 05 April 2012 - 10:48 PM
சும்மா ஒதுங்கி இருக்காமல் வாங்கோ...இங்கு படித்த பீதாம்பரங்கள் என்று எவருமில்லை. முடிந்தவரைக்கும் நாங்களே கூழ் முட்டைகளாகவும் குஞ்சு முட்டைகளாகவும் இருப்போம்.
இனிய பொழுதில் ஓடியோடி பாடல்களை இணைக்கிற நீங்கள் இங்கு தூதுப் பாடல் இணைக்கச் சொல்லிக் கேட்டும் இணைக்கவில்லையே....
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#72
Posted 06 April 2012 - 12:54 AM
http://www.dishant.c...hp?songid=59399
உடையார்,
இந்தப்பாடல் அந்தப்படம் பார்த்தபோது கேட்டதோடு சரி மீண்டும் இப்போதுதான் கேட்கிறேன். எப்படி இந்தப்பாடலை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். இந்தப்பாடலையும் அதை இவ்வளவு தூரம் ஞாபகத்தில் அல்லது மனதிற்குப் பிடித்தமானதாக இருப்பதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?
எல்லோரும் தூது சொல்லிவிடக் கெஞ்சிக் கூத்தாடுவார்கள் இந்தப்பாடல் கொஞ்சம் வித்தியாசமாக தென்றலை "ஓடு" என்று கலைக்கிறது
இல்லை தேடினதில் பிடிச்சது, அப்படி ஏதும் விசேஷ காரணமில்லை
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#73
Posted 06 April 2012 - 01:00 AM
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏலக்காயின் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய். நாங்கள் வாழ்வதற்காக காய்வாய் ஆக.அது மட்டுமல்ல.வாழைக்காய் சற்று மருவி வாழைக் காயாக ஒலிக்கிறது.என்னே! தமிழின் வளம்!!!!!!!!!!!!
மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது
மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.
அரச(ன்) மரம் மரத்தால் சொய்த தேரில் ஏறி மூங்கிலால் செய்த வில்லை தோளில் போட்டு காட்டுக்கு வேட்டைக்கு போகிறான்,
அரச(ன்) மரம் வேங்கை மரத்தை கண்டு மூங்கிலால் குத்தி
அரச(ன்) மரம் காட்டு வழி திரும்பி அரண்மனை போகும் போது
அரச(ன்) மரத்தை கண்ட மக்கள் ஆல்(+)அத்தி எடுத்தார்கள்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#74
Posted 06 April 2012 - 07:36 AM
மரமது மரத்தில் ஏறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக்கண்டு மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று வளமனைக்கேகும் போது
மரமது கண்ட மாந்தர் மரமுடன் மரமெடுத்தார்.
ஒருவருக்கும் விளங்கவில்லை. புலவர் விளக்கினார்.
மரமது-அரசு என்பது ஒரு மரம்.அரசனாகிய மரம்.
மரத்திலேறி-குதிரைக்கு மா என்றும் பொருள் உண்டு.மா என்பது ஒரு மரம். ஆகவே மரமது மரத்திலேறி
வேல் என்பது ஒரு மரம்(ஆலும் வேலும் பல்லுக்குறுதி)வேலமரம்-வேப்பமரம்.(கருவேலமரம்-கருவேப்பமரம்) ஆகவே வேலாகிய மரத்தைத் தோளில் வைத்து
புலிக்கு வேங்கை என்றும் பொருள் உண்டு.வேங்கைமரம் என்று ஒரு மரம் இருக்கிறது.ஆகவே அரசனாகிய மரம் வேங்கையாகிய மரத்தைக்கண்டு வேலாகிய மரத்தால் வேங்கையாகிய மரத்தைக் குத்தி மரமாகிய அரசன் வெற்றியுடன் அரண்மனைக்குத் திரும்பும் பொழுது
மரமுடன் மரமெடுத்தார்.பெண்கள் ஆராத்தி எடுத்து வாழ்த்தினார்கள்.
ஆராத்தி =ஆல்+ ஆத்தி ஆல் என்பதும் அத்தி என்பதும் மரங்களின் பெயர்கள் ஆகவே மரமுடன் மரமெடுத்தார்.
ஆகவே இனியாராவது உங்களை மரம் என்று பேசினால் உங்களை அரசன் என்று புகழ்வதாக அவர்களுக்குச் சொல்லலாம்.
- வல்வை சகாறா likes this
#75
Posted 06 April 2012 - 10:22 PM
இப்போது நாரையைத் தூதாக்கிய சக்திமுத்தப்புலவரின் ஒரு பாடலைப் பார்ப்போம்.. நான் பாட்டை பதிகின்றேன் இதன் கருத்தையும் இந்தப்பாடலுக்கான சந்தர்ப்பத்தையும் நீங்கள் யாராவது பதிவிடுங்கள்.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவிப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

Edited by வல்வை சகாறா, 06 April 2012 - 10:24 PM.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#76
Posted 07 April 2012 - 06:24 AM
வறுமை தாங்காது, பணம் தேடித் புலவர் யாத்திரை போகின்றார்.
போகின்ற வழியில், கடும் குளிரின் அகப்பட்ட புலவர், யாருமில்லாத சத்திரத்தில் படுத்திருந்த படி, வான வெளியை அண்ணாந்து பார்த்த படி, தன்னிலையை, தனது துணைவியாரிடம் தெரிவிக்க விரும்பினார். அப்போது வானில் பரந்த நாரைக்கூட்டம் கண்ணில் பட, மேலுள்ள பாடலைப் பாடுகின்றார்.
சிவந்த கால்களையும், இரண்டு பாதிகளாகப் பிழந்த பனங்கிழங்கைப் போன்ற உதடுகளையுடையை நாரையே, நீயும் உனது கேர்ல் பிரண்டும், தென்திசை நோக்கிப் பறக்கையில், குமரியில் நீராடி, வடதிசைக்கு வரும் வழியில், சத்திமுத்து வாவியில் குளித்து, வருகையில் கூரை நனைந்த சத்திரத்தினுள்ளே, பல்லிகள் சத்தமிடஉள்ள வீட்டில் , எனது வருகையைப் பார்த்திருக்கும் எனது மனைவியைப் பார்த்து, எங்கோ பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், உடுப்புகள் அற்று, காற்றில் நடுங்கிய படி,இரண்டு கைகளாலும், கால்களாலும், உடம்பைப் பொத்தியபடி, பெட்டிக்குள் இருக்கும் பாம்பாக, அடங்கிப் போய் இருக்கும், எனது நிலையை எடுத்துச் சொல்வாயா, என்று பாடுகின்றார்.,
- வல்வை சகாறா likes this
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#77
Posted 07 April 2012 - 03:53 PM
சத்திமுத்துப் புலவர் பாடிய பாடல் இது!
வறுமை தாங்காது, பணம் தேடித் புலவர் யாத்திரை போகின்றார்.
போகின்ற வழியில், கடும் குளிரின் அகப்பட்ட புலவர், யாருமில்லாத சத்திரத்தில் படுத்திருந்த படி, வான வெளியை அண்ணாந்து பார்த்த படி, தன்னிலையை, தனது துணைவியாரிடம் தெரிவிக்க விரும்பினார். அப்போது வானில் பரந்த நாரைக்கூட்டம் கண்ணில் பட, மேலுள்ள பாடலைப் பாடுகின்றார்.
சிவந்த கால்களையும், இரண்டு பாதிகளாகப் பிழந்த பனங்கிழங்கைப் போன்ற உதடுகளையுடையை நாரையே, நீயும் உனது கேர்ல் பிரண்டும், தென்திசை நோக்கிப் பறக்கையில், குமரியில் நீராடி, வடதிசைக்கு வரும் வழியில், சத்திமுத்து வாவியில் குளித்து, வருகையில் கூரை நனைந்த சத்திரத்தினுள்ளே, பல்லிகள் சத்தமிடஉள்ள வீட்டில் , எனது வருகையைப் பார்த்திருக்கும் எனது மனைவியைப் பார்த்து, எங்கோ பாண்டிய நாட்டின் ஒரு மூலையில், உடுப்புகள் அற்று, காற்றில் நடுங்கிய படி,இரண்டு கைகளாலும், கால்களாலும், உடம்பைப் பொத்தியபடி, பெட்டிக்குள் இருக்கும் பாம்பாக, அடங்கிப் போய் இருக்கும், எனது நிலையை எடுத்துச் சொல்வாயா, என்று பாடுகின்றார்.,
ரோமியோ உங்களுடைய இம்சையை தாங்க முடியலையே....
நாரைக்கு அலகுகள்தானே உண்டு அவற்றை நீங்கள் எப்படி உதடுகள் என்று சொல்லாம்
Edited by வல்வை சகாறா, 07 April 2012 - 03:58 PM.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#78
Posted 07 April 2012 - 09:51 PM
தமிழ் சிறியின் ;உதட்டுச் சாயம்; திரியை வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, உடனே இந்தத் திரிக்கு வந்து கருத்தெழுதப் போக இப்படியாகிவிட்டது!ரோமியோ உங்களுடைய இம்சையை தாங்க முடியலையே....
நாரைக்கு அலகுகள்தானே உண்டு அவற்றை நீங்கள் எப்படி உதடுகள் என்று சொல்லாம்(எனக்கென்னவோ ரோமியோவின் கண்களுக்கு பறவைகளின் சொண்டுகள், பழுத்த இலைகள் எல்லாம் உதடுகள், இதழ்களாக தெரிகிறதுபோல இருக்கு என்னவோ எல்லாம் அசாதாரணமாகத் தெரியுது. ஆளைக் கொஞ்சம் இனி உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.)
நாங்கள் நிற்கிறது தமிழும் நயமும் பகுதி..... இதற்குள் கேர்ல் பிரண்டைக்கூட்டி வருவது நியாயமா?
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#79
Posted 08 April 2012 - 09:45 PM
எங்களுடைய காலத்தில் மட்டும்தான் இந்தத்தூது ஒரு இனத்தின் தூதாகப் பதியப்பட்டிருக்கிறது.
பண்பாட்டால், மொழியால் ஒன்றித்த இனமாகவும் பூகோளரீதியில் கடலினால் பிரிவுபடுத்தப்பட்ட ஒரு இனமாகவும் வாழும் தமிழினத்தின் இரு வேறு நிலங்களின் ஊடான வாழ்நிலைகளை இந்தத்தூதுப்பாடல் வெளிக்கொணர்கிறது. இந்தத்தூதுப்பாடலைப்பற்றி நிறையவே எழுதலாம்.
தமிழினத்தின் ஒரு பகுதியினர் வாழும் இந்திய நாட்டினால் ஈழத்தில் அதே தமிழினம் அழிக்கப்படும்போது உருவாக்கப்பட்ட பாடல்.
இன்னொரு நூற்றாண்டின் பின்னர் இந்தப்பாடல் தூது இலக்கியத்தின் மிகப்பெரும் பொக்கிசமாகக் கருதப்படும் நிலையை எய்தும். அதேபோல்தான் தூதுக்கவிதைகளும் தொடர்ந்து தூது என்ற பொருளுக்கமைய இருக்கும் படைப்புகளை இந்தத்திரியில் முடிந்தவரை இணைப்போம் உங்களுக்கும் தெரிந்த பற்பல தூது இருக்கலாம் இணையுங்கள். இதோ வாழ்விடத்தால் வேறுபட்ட ஒரே இனம் தன் வாழ்விடத்தின் துயரங்களை கடல்பிரித்த துயரோடு எடுத்து வருகிறது ...
வீசும் காற்றே தூது செல்லு - தமிழ்
நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும்வேதனைகள் - இதை
எங்களின் சோதர்ர் காதில் சொல்லு
(வீசும் காற்றே தூது செல்லு)
இங்கு குயிலினம் பாட மறந்தது - எங்கள்
வயல்வெளி ஆடை இழந்தது
மங்கைகளின் பெருமங்களம் போனது - சாவு
எமக்கொரு வாழ்வென ஆனது
(வீசும் காற்றே தூது செல்லு)
உங்கள் கொடிமலர் இங்கு மடியுது
ஊர்மனை யாவிலும் சாக்குரல் கேட்குது
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை - உங்களின்
இராணுவம் செய்து முடிக்குது.
(வீசும் காற்றே தூது செல்லு)
கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ - கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதர்ர் தூக்கமல்லோ
வேங்கையை வேட்டைகள் ஆடுகிறார் - புலி
வீர்ரை காட்டினில் தேடுகிறார்
தாங்க முடியல்லை வேதனைகள் - இதை
தாயகப்பூமியின் காதில் சொல்லு.
வீசும் காற்றே தூது செல்லு)
Edited by வல்வை சகாறா, 08 April 2012 - 09:46 PM.
- சுபேஸ் and கவிதை like this
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#80
Posted 08 April 2012 - 09:51 PM
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"