கரிக்காய் பொரித்தேன்
#21
Posted 25 March 2012 - 01:46 PM

#22
Posted 25 March 2012 - 01:50 PM
சகாரா அக்கா, உங்களுக்கு முழுப் பாட்டின் பொருள் விளக்கம் வேணும் என்றால் சொல்லுங்கோ, இணைத்து விடுகிறேன்...
எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே...
Edited by வல்வை சகாறா, 25 March 2012 - 01:55 PM.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#23
Posted 25 March 2012 - 02:00 PM
எனக்குத் தெரியாதா நான் இதற்குப் பொருள் வேணும் என்று கேட்டால் கூகிளில் கொட்டிக் கிடக்கும் அத்தனையையும் இணைத்துவிடுவீர்களே.... பிறகு நான் கரிக்காய் பொரிப்பதில் அர்த்தம் இல்லையே...![]()
![]()
ஒரு இணைப்பில் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது...
#24
Posted 25 March 2012 - 02:07 PM
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#25
Posted 25 March 2012 - 02:40 PM
வணக்கம் எல்லோருக்கும்..
இந்தப்பகுதியில் கலகலப்பாக தமிழின் பொருளை...., புலவர்களின் கலகலப்பை... தமிழால் விளைவிக்கப்பட்ட கிண்டல் கேலிகளை இணைக்கலாம். எனக்கு அதிகம் தெரியாது இருப்பினும் தேடலின் அவா நிறையவே உள்ளது. அத்தேடலின் அவா கைகொடுக்கும் தருணங்களில் நான் இரசித்த அல்லது இரசிக்க எத்தனிக்கும் தமிழ் மொழியின் பொருள் நிறைந்த நயங்களை பதிவிடலாம் என்று ஒரு சின்ன அடியெடுத்து வைக்கின்றேன்... இது இவளுக்கானது என்று நீங்கள் எவரும் ஒதுக்கி விடாமலும் ஒதுங்கிப் போகாமல் கூட இணைந்து தமிழை நயந்து நடக்கலாம் வாருங்கள்.
“கரிக்காய் பொரித்தேன் கன்னிக்காய் நெய்து வட்டலாக்கினேன்
பரிக்காயைப் பச்சடியாகப் பண்ணினேன்”
கொஞ்சம் இதன் பொருளைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....
என்னடா ஆரம்பமே இப்படி.......![]()
![]()
என்னுடன் சேர்ந்து நடக்க வந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நிட்சயம் எனக்குத் தெரிந்தவற்ரையும் இணைப்பேன் . தமிழால் இணைவோம் .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#26
Posted 25 March 2012 - 02:59 PM
என்னுடன் சேர்ந்து நடக்க வந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நிட்சயம் எனக்குத் தெரிந்தவற்ரையும் இணைப்பேன் . தமிழால் இணைவோம் .
மன்னிக்கவும் என்னுடைய பாதையில்தான் என்னால் நடக்க முடியும். தற்சமயம் இந்தத் திரியின் மூலம் என்னுடன் இணைந்து நயப்பதற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். வந்தாரை வரவேற்பது எமது பண்பாடு. வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக. தமிழின் சிறப்பை நயந்து வியந்து பயணிக்கலாம். ஒருவேளை வாழ்வியல் கருவூலத்தை திறந்து எனக்கு முன்பாக நீங்கள் தமிழும் நயமும் பகுதியில் இணைந்து கொண்டுள்ளதால் உங்கள் கூற்று வெளிப்பட்டிருப்பின்..... மன்னிக்கவும் உங்களுக்கு முன்னராகவே இதே தமிழும் நயமும் பகுதியில் எம்முடைய பயணிப்பு நிகழ்ந்துவிட்டது.
Edited by வல்வை சகாறா, 25 March 2012 - 03:00 PM.
- குட்டி likes this
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#27
Posted 25 March 2012 - 03:36 PM
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்ற கண்ணதாசனின் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இதை வெறும் சினிமாப்பாட்டு
என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். சங்ககாலத்துப் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளை எடுத்து கண்ணதாசன் திரையிசையில் கலக்கிய பாடல். இதை சினிமாவில்
போடுகிறேன் என்றதற்கு எம் எஸ் வி கண்ணதாசனை விடவில்லை. இதெல்லாம் மக்கள் ரசிக்க
மாட்டார்கள் என்று புறந்தள்ளிவிட்டார்.
கண்ணதாசன் கண்களில் கண்ணீர். அழுதார்... அடடா கண்ணதாசா இதுக்கெல்லாம் அழலாமா...
சரி சரி போடலாம் விடு என்று எம் எஸ் வி சம்மதித்திருக்கிறார் இந்தப் பாட்டில் வரும் காய்களை உற்றுக்கவனியுங்கள். அவற்றுள் வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன.
இது மிகமிக இலக்கியத்தரம் வாய்ந்த சினிமாப் பாடல். அதனால் எனக்கு மிக மிகப் பிடித்தபாடல்.
தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஒரு சுவாரசியமான விசயம் சிலேடை. இரு பொருளைத்தரும் ஒரு சொல் அல்லது வரி அல்லது பாடல்தான் சிலேடை. நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் அந்தப் பா வகைக்குள் ஒளிந்துகிடக்கும். இதற்கு உதாரணமாய் எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த அத்திக்காய் காய் காய். இந்த சங்ககாலப்பாடலில் வருவது சில காய்கள்தான். ஆனால் இதைத் தழுவி கண்ணதாசன் எழுதிய திரையிசைப்பாடலில் ஏகப்பட்ட காய்கள். கொத்தவால் சாவடிக்குள் நுழைந்துவிட்டதைப் போல கமகமக்கும்
அத்திக்காய்
ஆலங்காய்
இத்திக்காய்
கன்னிக்காய்
ஆசைக்காய்
பாவைக்காய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
விளங்காய்
தூதுவிளங்காய்
மிளகாய்
சுரைக்காய்
கொற்றவரைக்காய்
இது ஒரு சங்ககாலப் பாடல் என்று முன்பே சொன்னேன். சங்ககாலப் பாடலில் இருந்தது இரண்டுமூன்று காய்கள்தான். ஆனால் கண்ணதாச மரத்தில் காய்த்ததோ இருபதையும் தாண்டி,
தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல்
இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்....
எப்படி
அத்திக்காய் காய் காய்
ஏ நிலாவே..... நீ காய்கிறாய் நான் தேய்கிறேன். என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்தத் திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். அவனை இந்தக் காதல் நோய் பற்றட்டும். அப்படிப்பற்றினால்தான் அவன் ஓடி என்னிடம் வருவான்.
ஆலங்காய் வெண்ணிலவே
வெறுமனே காய்ந்துவிடாதே. அது அவனுக்குப் போதாது. பொறுப்பில்லாம அங்கேயே இருந்துவிடுவான். நீ காய்க்கும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும் இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ என்னிடம் வந்து இந்தத் திக்கில் நின்று காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தாபம் புரியாதா? தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம் அறிய்மாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா? அடடா எத்தனை அருமை பாருங்கள். இந்த இலக்கிய ரசனைதான் என்னை நம் பழந்தமிழ் இலக்கியத்தின்முன்
மண்டியிடச் செய்யும். விடவே மாட்டேன் பழைய இலக்கியங்களை.
அத்திக்காய் என்பது அத்திக்காய் அல்ல அது அந்தத் திக்காய் ஆலங்காய் என்பது ஆலமரக்காயல்ல அது விசம்போல் காய் இத்திக்காய் என்பது நாம் அறியாத காயல்ல அது இந்தத் திக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
4. கன்னிக்காய்
5. ஆசைக்காய்
6. பாவைக்காய்
7. அங்கேகாய்
8. அவரைக்காய்
9 கோவைக்காய்
மேலும் ஆறு காய்கள். அடடா அதற்குள் ஒன்பது காய்களை அடுக்கிவிட்டார் பாருங்கள் கவியரசர் கண்ணதாசன்.
தலைவி பாடுகிறாள். நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு
தவியாய்த் தவிக்கும் இந்தக் கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவள் சின்னஞ்சிறு வயதுமுதல், ஞாபகம் முளைக்காத நாள் முதல் அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதான் காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே. என் மீது இரக்கப்படு, நான் தகிக்கும் உன் காதல் கதிர்களைத் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன காதல் மறந்து என் மீது இரக்கமற்ற அவனிடம் நீ சென்று காய்,
அங்கேகாய்.
என்காதலரான அவரைக் காய் (அவரைக்காய்) இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் கோ (கோ என்றால் அரசன். இளங்கோ என்றால், இளைய அரசன்) வைக்காய் (கோவைக்காய்). அப்போதுதான் அவன் என்னிடம் காதல்நாடி என்னைத்தேடி ஆசையாய் வந்து தொலைப்பான்.
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இப்போது தலைவியின் அந்தப்பக்கப் பாட்டுக்கு தலைவன் இந்தப் பக்கம் இருந்துகொண்டு எசப்பாட்டு பாடுகிறான். நிலவே, இவள் சொல்கிறாள் என்று என்மீது காய்ந்துவிடாதே! நான் அவளைவிட கொதிப்பில் இருக்கிறேன். அவள் அப்படித்தான் பழியை என்மீது தூக்கிப் போட்டுவிடுவாள். அவள் உள்ளம் காய். என்மீது கனியாத காய்.
தொழில் நிமித்தமாகவே நான் இங்கே வந்து இப்படித் துடித்துச் சாகிறேன். அவளென்னவோ நான் அவளைப் பிரிவதற்காகவே இப்படிப் புறப்பட்டுவந்துவிட்டதைப் போல் உன்னிடம் முறையிடுகிறாள். நான் அப்படியல்ல
மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்) மாது அவள் உள்ளம் காய்தான் - என் மீது கனிவின்றிச் சாடுகிறது. என்னை நெருப்பாய்ச் சுட்டெரிக்க உன்னைத் தூண்டிவிடுகிறாள். அவள் என் மீது மிகுந்த அன்பு
உள்ளவள்தான். ஆனால் அவளது காதல் அவளை உண்டு இல்லை ஒரு கை பார்க்கிறது. அதனால் அவள் உள்ளம் காயாகிவிட்டது. அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா?
என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? அவளுக்கு முன்பே நீதானே என் காதலி. என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக் காயாதே. பாருங்கள் ஆண் இங்கே நிலாவை என்னைக் காயாதே அவளைப் போய் காய் என்று மூட்டிவிடவில்லை. என்னைக்காயாதே நீயும் என் உயிர்தானே என்னை அறிந்தவள் தானே என்று கூறுகிறான். அட எப்படிப்பார்த்தாலும் ஆண்கள் நல்லவர்களப்பா
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
இது ஆண்பாடும் வரிகள். பெண்கள் எப்போதுமே தூரமாய் இருக்க்கும்போது, வா வா என்பார்கள். ஏங்கித் தவிக்கிறேன் என்பார்கள். தூங்காமல் துவள்கிறேன் என்பார்கள். அருகே வந்தால் போதும், அது அச்சமோ நாணமோ மடமோ பயிர்ப்போ, அந்த வள்ளுவனுக்குத்தான் வெளிச்சம், ஒரே பிகுதான்.... வெட்டிக்கு ஒரு சண்டை வேறு போடுவாள். ஏன் சண்டை போடுகிறாய் கெண்டை மீனே என்று கேட்டால், வள்ளுவன் வேறு வக்காலத்துக்கு வருவான். இது ஊடலடா மடையா. நீ ஊடிக்கூடு அதில்தான் உற்சாக வெள்ளம் கரைபுறண்டோடும் என்று சூடுபோடுவான். ஆக, தவிப்பும் துடிப்புமாய் ஆண்களில் நிலை பாவம் பாவம் அந்தோ பரிதாபம். கெஞ்சுடா நீ கெஞ்சலேனா மவனே கஞ்சிடா என்று மிதப்பாய் நிற்பாள் அவள். சரி வேண்டாம் போலும் என்று விட்டு விலகித் தொலைச்சால் போதும், பிறகு ஒரு ரகளையே
நடக்கும். வேற வழி. கெஞ்சிக் கொஞ்சி பின் கிடைப்பாள் அந்த வஞ்சி ஒரு ஒன்றையணா முத்தத்துக்கு.
இரவுக்காய்.... ம்ம்ம்... இறைவன் ஏன் இரவைப்படைத்தான்? அட இரவில்லையேல் இன்பமே இல்லை. பலரும் அது உறங்குவதற்குத்தான் என்று நினைத்துக்கொண்டு குறட்டையோடு தயாராக இருப்பார்கள். சோத்தப்போடு ஒரு சங்கீதம் மிச்சம் வெச்சிருக்கேன் என்ற மிதப்பு கண்களில் மின்னியலையும். இரவு காதலுக்குச் சொந்தம். இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஜிவ்வென்று ஏறும், அந்த இரவுக்காய். சரி இரவு வந்தாச்சு. வந்து? உறவில்லேன்னா? தொலைஞ்சுதே சங்கதி. ஆக இரவும் வேண்டும் அதில் அதனோடு உறவும் வேண்டுமே. இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய். யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. மாடி வீட்டில் இருந்தாலும், தன் தேவைக்காக கையேந்தினால் அவன் ஏழைதான். பெண்கள் ஆண்களை ஏழையாக்கிப்பார்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஏங்கும் ஏழையாகிறான் காதலன் தன் காதலியின் முன். இல்லேன்னு யாராச்சும் சொல்லுவீங்களா?
அடியே ஆருயிர்க் கற்றாழை ஆசையாய் ஒரு முத்தம்தா செவ்விதழ் சுழித்து என்று கேட்டுவிட்டால் போதும், உடனே பதில் வரும். "மாட்டேன்" அடடா இந்த ஏழைகள்படும் பாடு இருக்கிறதே
தலைவன். அதுவும் எப்படி? எலிதான் காயுதுன்னா எலிப்புழுக்கையும் ஏன் சேந்து காயிதுன்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க. தஞ்சாவூர் கிராமங்களில் சொல்லப்படாத பழமொழிகளே இல்லேன்னு
சொல்லலாம். காதல் படுத்தும் பாட்டில் தலைவன் காய்ந்துதான் கிடக்கிறான். அட நிலா ஏன் காயுது. அது யாரின் வரவுக்காகக் காயுது. சூரியனாய் இருக்குமோ? இருக்கும் இருக்கும்.
நிலாவே உனக்குத் தெரியுதா காய்வதென்பது எத்தனை கொடுமை என்று எனவே நீயும்காய்,
நிதமும் காய். பவுர்ணமிக்கு மட்டும் விருவிருப்பா காந்தால் போதாது. தினமும் காயவேண்டும். இல்லேன்னா இவள் சரிவரமாட்டாள். இதெல்லாம் சொல்லிட்டு கடைசியா நிலாவிடம் தலைவன் சொல்கிறான். நேரில் நிற்கும் இவளைக்காய் என்று. அடடா இதற்குள் என்னே ஒரு மந்திரப் பொருள் பாருங்கள். நேர்ல தான் நிலாவே இவள் நிற்கிறாள். பாவி படுபாவி. மனுசன் வேதனை புரியுதா இவளுக்கு? பாரு அப்படியே கல்லு மாதிரி நிக்கறா? பொண்ணுன்னா அனல் பட்ட வெற்றிலையாய்த் துவள வேண்டாம்? அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே சிலை மாதிரி நிற்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான் இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் நீயும்காய் நிதமும்காய் நேரில் நிற்கும் இவளைக்காய் அட என்னாங்க வேறு யாருமே இந்தக் காய்களைக் கண்டுக்க மாட்டேங்கறீங்க. இதெல்லாம் காய் காய் தாங்க. ஆனால் அத்தனையும் உண்ணத் திகட்டாத கனி கனி கனி கண்ணதாசன் கனிகள்ங்க. வாங்க. அடுத்த இருவரிகளை அப்படியே அலசயெடுக்க வாங்க. இதோ அடுத்த இரு வரிகள்
பெண்:
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
18. உருவங்காய்
19. பவ்ருவங்காய்
காதலனோ மிகத் தெளிவாக ஏழு காய்களை வீசி, இவளே இரக்கம்ற்றவள் இவளையே காய் நிலாவே. அருகிருந்தும் அப்படியே நிற்கிறாள், நீ காய்ந்தாலே இவள் கழுத்தைக் கட்டிக்கொள்ள ஓடிவருவாள் என்று தன் மனக்குறையைச் சொன்னதும், பெண் மனமல்லவா. அப்படியே இளகுகிறது வளைகிறது தாழ்கிற்து அவனுக்காகப் பாடுகிறது அதுதான் பெண்மை. பெண்மையின் மேன்மையான ரகசியம். தருவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள். அவர்கள் அழகில் மட்டும் தாராளம் இல்லை அன்பிலும் தாராளம், அணைப்பிலும் தாராளம், கனிவிலும் தாராளம், காதலிலும் தாராளம். என்ன வித்தியாசம் என்றல் ஆண் எப்போதும் துடித்துக்கொண்டே நிற்பான். பெண் அதற்கென்று ஒரு சூழலில் அமர்க்களமாய் எழுவாள். எழுந்தால் இவன் விழுந்தான், அவ்வளவுதான்.
என்னுடைய உருவம்தான் நான் முரண்டுபண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து ஒட்டிக் கிடக்கிறது என்பதைச் சொல்ல வேண்டுமே அவளுக்கு. நிலவைப் பார்த்து நிலவிடம் சொல்வதுபோல் சொல்கிறாள்.
உருவங்காய் ஆனாலும் உள்ளம்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவா
சிலையைப்போல் சலனமற்று நிற்பதாய்த் தோன்றும் பெண்ணின் உள்ளே பல வண்ணத்துப்பூச்சிகள் பலகோடி சிறகடித்துப் பறப்பதை யாரறிவார்? இப்போது அவளால், அவனைக் காய் என்று சொல்லமுடியவில்லை. அவன் தான் கொதித்து நிற்கிறானே. ஏழு காய்களை எடுத்துவீசி இந்தக் கனியின் கனியிதழுக்காகக் காத்திருக்கிறானே.
இருவரும் சேர்ந்து இனி பாடுகிறார்கள்..
அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஒருவழியாய் இருவரும் யார் யார் மடிமீது என்று அறிந்துகொள்ள முடியா வண்ணம், யார் கரம் யாரை வளைத்துக்கொண்டு என்று தெரியாமல், உஜாலாவுக்குத் தாவுகிறார்கள். அதோடு நின்றார்களா. இல்லை இத்திக்காய் காயாதே. எங்களை விட்டுவிடு. அத்திக்கில் ஊடலில் கிடக்கும் பிற காதலர்களைக் காய் என்று டாடா சொல்லி அனுப்பிவைக்கிறார்கள்.
ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல் தனிமை இன்பம் கனியக்காய்
நான் பிறந்த ஊர் ஒரத்தநாடுங்க. ஒரத்தநாடு தஞ்சைமாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூர் கடற்கரையோரம் வாழும் மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேனீர் அருந்தும்போது வெறும் பால் மட்டும் சேர்க்கமாட்டார்கள். கூடவே ஏலக்காய் வேண்டும் அல்லது இஞ்சி வேண்டும் அப்படியே பல சுவைமிக பொருட்களைச் சேர்த்து அருமையாய் கமகமக்கும் மசாலா தேநீர் ஆக்கிவிடுவார்கள். ஒருமுறை அதைப் பருகிப் பழகிவிட்டால் அவ்வளவுதான். நாக்கு மீண்டும் அதையே கேட்டு மல்லுக்கு நிற்கும். ஏலக்காய் பல்லுக்கு நல்லது என்பதால் அழகிய காதல் சொல்லுக்கும் நல்லது. ஏலக்காய் தொண்டைக்கு நல்லது என்பதால் காதலில் கனிந்துபாடும் பாட்டுக்கு நல்லது.
அதுமட்டும் இல்லீங்க இன்னொரு மிக முக்கியமான விசயம் ஏலக்காயிடம் இருக்குங்க. அது இந்தக் காதல் என்றால் முகம் சுழித்து காத தூரம் ஓடுபவர்களின் மலட்டுத் தனத்தை உடைத்து ரத்தம் சுத்திகரித்து ஆண்மையை வலிமையாக்கி.... இவ்ளோ போதுமா இன்னும் சொல்லவேண்டுமா? தேநீருக்கே இந்த ஏலக்காய் தரும் வாசமும் வீரியமும் இத்தனை என்றால், வாழ்க்கைக்கு? அதான் தலைவி சொல்கிறாள், ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழக்காய் என்று. ஒரு தரம் அந்த வாசனையைத் தேநீரில் பருகிவிட்டால் எப்படி விடமுடியாதோ அதே போல அவர்கள் உள்ளமும் ஒருவரை ஒருவர் விடாமல் வாழவேண்டும் என்று கண்ணதாசன் முடிவுபண்ணிட்டுத்தான் இப்படி எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சரி அவர் அதோடு நிக்கலீங்க, ஒருககால் அதுகூட கைகொடுக்கலேன்னா இந்த ஜாதிக்காயைக் கொண்டுவருகிறார் வாழ்க்கைக்குள். தலைவியின் கவலையே அதுதானே? எபோதும் இன்பமாய் தங்கள் வாழ்க்கை குறைவின்றி அமையவேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் காதல் விருப்பம். ஜாதிக்காயும் வாசம் வீசும் சமாச்சாரம்தான். ஏன் கண்ணதாசன் இப்படி வாசனை வீசும் சமாச்சாரமாக வேண்டுவருகிறார் என்று நீங்கள் யோசிக்கலாம். எல்லாம் காரணமாகத்தான். முதலிரவு என்றால் மல்லிகை மணம் வேண்டுமல்லவா? திருமணம் என்ற பேச்சு வந்தாலே பூக்கள்தான். அவை தரும் வாசனைதான். அப்படியே கிளர்ச்சியை ஊட்டி, ஊட்டியையே வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும். ஜாதிக்காயை கொஞம் அதிகமாகப் பயன்படுத்திவிட்டால் என்னாகும் தெரியுமோ மயக்கம்தான் கிறக்கம்தான் போதைதான். அந்த ஜாதிக்காய் வைத்திருக்கும் பெட்டகத்தைப்போல அதாவது பெட்டியைப்போல அதைத் திறந்தால் அந்த வாசனையில் அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கிடைக்க அதனுள் இன்பம் கனியக்காய் என்று நிலாவை காயச்சொல்லிக் கேட்கிறாள். ஏன் இப்போதுமட்டும் காயச் சொல்கிறாள் என்றால் தலைவன்
தலைவியின் மடிக்கு வந்துவிட்டான். இனி நிலா காய்வது அவசியமாகிவிடுகிறது. அமாவாசையோ தேய்பிறையோ கூடாது அவளுக்கு. அப்போதுதானே காதல் ஊட்டப்பட்டு அவர்கள் அற்புதமாய் வாழலாம் அல்லவா!
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
அப்படியே 23 காய்கள் இதுவரை வந்துவிட்டன. இத்தோடு நிற்கலீங்க. கண்ணதாசன் அவ்வளவு எளிதில் திருப்தி பட்டுவிடுவாரா என்ன? மேலும் அவர் தன் பாட்டுச் சாவடிக்குள் குவித்த காய்களை அடுத்த இடுகையில் காண்போம்.
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
தலைவி சொல்லிவிட்டாள் நிலாவே நாங்கள் ஏலக்காய் வாசனையாய் வாழக்காய் என்றும் ஜாதிக்காய் பெட்டகத்தின் வாசனையாய் எங்கள் வாழ்வில் இன்பம் கனியக்காய் என்றும். நிலாவை இனி காயாதே என்று சொல்லாமல் வந்து எங்களிடம் காய் அதனால் எங்களை வாழவைப்பாய் என்று சொல்லிவிட்டாள். இனி தலைவன் என்ன சொல்வது?
தலைவன் ஒரு ரகசியத்தை ரகசியமாய் சொன்னதைக் கேளாத வான் நிலாவுக்குச் சொல்லுகிறான். நிலாவே, தலைவி சொன்னதெல்லாம் உனக்கு விளங்கியதா இல்லையா? ஒழுங்காய் விழங்கிக்கொள். உனக்கு எப்பவும் சொல்வதைக் கேட்கும் பழக்கம் கிடையாது. எதையாவது குண்டக்க மண்டக்க செய்துகொண்டிருப்பாய். தூதுபோ என்றால் முகில் படுதாக்குள் பதுங்கிவிடுவாய். காயாதே என்றால் உடனே வந்து காயோ காயென்று காய்வாய். காரணம் என் மீதுள்ள ஊடல் என்று நானறிவேன்.
ஆனால் நீ புரிந்துகொள் நிலாவே, நீ தலைவியைக் காய்ந்தால்தான் அவள் என்னைத் தேடுவாள். எனக்கு நீ காயவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நான் எப்போதும் காய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். ஆகவே என்னைக் காய்வதை விட்டுவிட்டு நீ தலைவியையே காய். அப்போதுதான் காதல் கனியும் காமம் சுவைக்கும் வாழ்க்கை வசமாகும். என்ன விளையாடுகிறாயா என்கிறாயா? உண்மையை உனக்குமட்டும் ஒரு கிசுகிசுப்பாய் உன் காதோடு சொல்கிறேன் கேள்.
தலைவியைக் காதலிக்கும்முன் நான் உன்னைத்தானே காதலித்தேன். அதில் மாற்றமில்லை என்றென்றும் நீ என்னுயிர்தான். என் செல்லம்தான். நீ தூரத்து நிலா என்பதால் உன்னை அருகில் கொண்டுவரும் வரமாகத்தான் இந்தப் பக்கத்து நிலா. உன்னைக் கிள்ளி எடுத்து வைத்தச் சின்ன நிலாதான் இவள். இந்தப் பக்கத்து நிலாவோடு நான் சொர்க்கம் காண்பது நீ காய்வதால்தான். அதாவது தலைவியிடம் நான் காணும் சுகமெல்லாம் நீ காய்வதால் அவள் கொள்ளும் காதலால்தான். அதாவது உன் காதலைத்தான். அவளைத் தூண்டிவிட்டு அவளோடு கூடும் போது நான் கொள்கிறேன். நீதானே என் உயிர் என்று நிலாவிடம் தலைவன் கதைவிடுகிறான்.
நிலா அவன் வார்த்தைகளில் மயங்கி ஓ அப்படியா கதை? நீ என்னைத்தான் காதலிக்கிறாயா என்னோடு கொஞ்சிக் குலவுதாகத்தான் நீ அவளுடன் இருக்கிறாயா என்று புரிந்துகொண்டு நாள் தவறாமல் தலைவியைக் காய நிலா அக்கறையாய் வந்துவிடும் என்று நினைப்பு தலைவனுக்கு! லஞ்ச லாவண்யங்களில் உச்சிக்கே போனவர்களாயிற்றே ஆண்கள். ஏமாற்றும் கலையைச் சொல்லித்தரவேண்டுமா? ஊடலை உடைக்க இவர்கள் சொல்லும் பொய் யுகம் தாங்குமா?
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
இணையத்தில் தேடியபோது கிடைத்தது
- வல்வை சகாறா, BLUE BIRD and உடையார் like this
#28
Posted 25 March 2012 - 03:51 PM
அங்கால நெடுக்காலபோவான் இதை வாசித்து புகையிறது மணக்குது எதற்கும் பார்த்துக் கொண்டு வாறேன்.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#29
Posted 25 March 2012 - 06:42 PM
உண்மையிலேயே உங்கள் தேடலில் அற்புதமான எழுத்து அகப்பட்டிருக்கிறது குட்டி உங்கள் தேடலில் கிடைத்த இப்பதிவு எனக்கு இரட்டிப்பு மகிழ்வைத் தருகிறது...
அங்கால நெடுக்காலபோவான் இதை வாசித்து புகையிறது மணக்குது எதற்கும் பார்த்துக் கொண்டு வாறேன்.
கரிக்காய் பொரிக்கும் (சட்டியில்
#30
Posted 25 March 2012 - 07:28 PM
கரிக்காய் பொரிக்கும் (சட்டியில்
) பகுதியில் இணைக்க அனுமதித்தமைக்கு நன்றி அக்கா
![]()
கரிக்காய் பொரிக்கும் சட்டியில் குதித்து நீங்களும் பொரியலாம் ஆனால் மற்றவர்கள் உங்களைப் பொரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்ன பார்க்கிறீர்கள் அப்படியே கடுகு, சீரகம் , வெங்காயம் , செத்தல் , கருவேப்பிலையைப் போட்டு மூடி விட்டுவிடுவார்கள் கவனம்.
1. அத்திக்காய்
2. ஆலங்காய்
3. இத்திக்காய்
4. கன்னிக்காய்
5. ஆசைக்காய்
6. பாவைக்காய்
7. அங்கேகாய்
8. அவரைக்காய்
9. கோவைக்காய்
10. மாதுளங்காய்
11. என்னுளங்காய்
12. இரவுக்காய்
13. உறவுக்காய்
14. ஏழைக்காய்
15. நீயும்காய்
16. நிதமுங்காய்
17. இவளைக்காய்
18. உருவங்காய்
19. பருவங்காய்
20. ஏலக்காய்
21. வாழக்காய்
22. ஜாதிக்காய்
23. கனியக்காய்
24.விளங்காய்
25. தூதுவழங்காய்
26. மிளகாய்
27. சுரக்காய்
28. வெள்ளரிக்காய்
29. கொற்றவரங்காய்
இங்கு நிறமூட்டப்பட்டவை.... ஏன் என்று சொல்லுங்கள்
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#31
Posted 25 March 2012 - 07:43 PM
கரிக்காய் பொரிக்கும் சட்டியில் குதித்து நீங்களும் பொரியலாம் ஆனால் மற்றவர்கள் உங்களைப் பொரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். என்ன பார்க்கிறீர்கள் அப்படியே கடுகு, சீரகம் , வெங்காயம் , செத்தல் , கருவேப்பிலையைப் போட்டு மூடி விட்டுவிடுவார்கள் கவனம்.
இங்கு நிறமூட்டப்பட்டவை.... ஏன் என்று சொல்லுங்கள்
இப்பிடிச் சொல்லிப் போட்டு என்னை எண்ணெய்ச் சட்டிக்குள் போட்டு தாழிக்க நினைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை அக்கா...
#32
Posted 26 March 2012 - 02:49 PM
Edited by அலைமகள், 27 March 2012 - 09:44 AM.
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#33
Posted 27 March 2012 - 01:14 AM
குட்டி நல்லதொரு இணைப்பு, நன்றி
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#34
Posted 27 March 2012 - 12:48 PM
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.
இந்த ஒரு பாடலுக்குள்ளே வசையும் உள்ளது வசை மீட்சியும் உள்ளது. எப்படியென்று ஆச்சர்யம் உங்களுக்கு உண்டாவது எங்களுக்குப் புரிகின்றது. முதலில் வசைக்கானப் பொருளைப் பாப்போம்.
Edited by BLUE BIRD, 27 March 2012 - 12:50 PM.
- வல்வை சகாறா likes this
#35
Posted 27 March 2012 - 04:32 PM
கத்து = ஒலிக்கும்
நாகை = நாகைப்பட்டினம்
அத்தமித்தல் = மறைதல், அந்தி, சூரியன் மறைதல்
வெள்ளி = வைகறை விண்மீன்
‘ஒலிக்கும் கடல் சூழ்ந்த நாகைப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலைப்பொழுதில் அரிசி வந்து சேரும்; அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும் முன்னிரவாகும்; சமைத்துப் பரிமாறும் பொழுது வெள்ளி முளைத்துவிடும். அதாவது விடிந்துவிடும்’ என்பது பாடற்பொருள்.
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#36
Posted 27 March 2012 - 06:44 PM
கத்து = ஒலிக்கும்
நாகை = நாகைப்பட்டினம்
அத்தமித்தல் = மறைதல், அந்தி, சூரியன் மறைதல்
வெள்ளி = வைகறை விண்மீன்
‘ஒலிக்கும் கடல் சூழ்ந்த நாகைப்பட்டினத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலைப்பொழுதில் அரிசி வந்து சேரும்; அதனைக் குத்தி உலையில் போட ஊரே அடங்கும் முன்னிரவாகும்; சமைத்துப் பரிமாறும் பொழுது வெள்ளி முளைத்துவிடும். அதாவது விடிந்துவிடும்’ என்பது பாடற்பொருள்.
கெட்டிக்காரி!
இப்படித்தான் தமிழ் அக்கறையாய் படிக்கவேண்டும். நாளைக்கு மிச்சம் படிப்போம்.இனிமேல் மற்றவர்களும் பதில் சொல்ல சந்தர்பம் கொடுங்கோ
#37
Posted 27 March 2012 - 07:31 PM
கெட்டிக்காரி!
இப்படித்தான் தமிழ் அக்கறையாய் படிக்கவேண்டும். நாளைக்கு மிச்சம் படிப்போம்.இனிமேல் மற்றவர்களும் பதில் சொல்ல சந்தர்பம் கொடுங்கோ
எல்லாம் உங்களிடம் படித்தது தான் ( வெட்டி, ஒட்டுதல்)
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
#38
Posted 27 March 2012 - 07:44 PM
நாகை = நாகைப்பட்டினம்
அலை,
'நாகை' என்பது நாகபட்டினமல்ல. வேறு ஒரு பொருளைக் குரிக்கும்மென பத்தாம் வகுப்பில் படித்த ஞாபகம்.
#39
Posted 27 March 2012 - 09:01 PM
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.
இந்த ஒரு பாடலுக்குள்ளே வசையும் உள்ளது வசை மீட்சியும் உள்ளது. எப்படியென்று ஆச்சர்யம் உங்களுக்கு உண்டாவது எங்களுக்குப் புரிகின்றது. முதலில் வசைக்கானப் பொருளைப் பாப்போம்.
நல்ல முயற்சி நீலப்பறவை பொருள் தெரிந்தவர்கள் பலர் இங்கு உலா வருவார்கள் அவர்களின் பதிவிடல்களுக்கும் வழி சமைத்து வைப்போம்.
குட்டாஞ்சோறு கறிக்கும் அமிழ்தின் சுவை இருக்கும். நாங்கள் குட்டாங் சோறாக்குவோம் அவற்றை ஆக்கமும் ஊக்கமும் உள்ளவர்கள் அமிழ்தாக்கட்டும்....
அலை,
'நாகை' என்பது நாகபட்டினமல்ல. வேறு ஒரு பொருளைக் குரிக்கும்மென பத்தாம் வகுப்பில் படித்த ஞாபகம்.
தப்பிலி நான் அறிந்தவரைக்கும் " நாகை" என்பதற்கு நாகப்பட்டிணம் என்பதாகும். ஒருவேளை நீங்கள் "நாகு" என்பதை "நாகை" என்று எண்ணுகிறீர்களோ தெரியவில்லை.
கெதியாய் கரிக்காயைப் பொரித்து முடியுங்கோ
கரிக்காயை பொரித்தாயிற்று.....
காய்களைக் கணக்கெடுக்கிறோம்.
அலை கரிக்காய் பொர்த்த சட்டி அடுப்பை விட்டு இறக்கினால் நாங்கள் தொடர்ந்து தமிழை நயந்து நடக்கேலாது.
நல்ல முயற்சி சகாறா (பழம் தின்று கொட்டை போட்ட நீங்க இப்ப காய்களை பொரிக்க வெளிக்கிட்டீங்க, வாழ்த்துகள்), தொடருங்கள்,
குட்டி நல்லதொரு இணைப்பு, நன்றி
உடையார் உங்களைப் போன்றோர் விமர்சித்தால் ஒன்றுக்கு பல தடவை பொருளை உன்னிப்பாக கவனிக்கவேண்டி இருக்கிறது..... காலம் செய்த கோலம் சிலேடைப்பக்கமெல்லோ நிற்கிறோம்.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#40
Posted 28 March 2012 - 09:01 AM
தப்பிலி நான் அறிந்தவரைக்கும் " நாகை" என்பதற்கு நாகப்பட்டிணம் என்பதாகும். ஒருவேளை நீங்கள் "நாகு" என்பதை "நாகை" என்று எண்ணுகிறீர்களோ தெரியவில்லை.
பின்வாங்கில இருந்து கேட்டபடியால் பிழையாக விளங்கிட்டனோ தெரியாது.














