இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதாக சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இருக்கிறார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு, தாமே அந்தச் சீட்டை வாங்கியதாக £156 659 தொகைக்கு உரிமை கோரியுள்ளார்கள். அதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டு எங்கே வாங்கியது என்று உரிமை கோரியவர்களால் திட்டவட்டமாகக் கூறமுடியாமல் போய்விட்டது. 14 மாதச் சிறைத்தண்டனை முடியும் வரை இவர்களின் 10 வயது மகளை அவர்களது உறவினர்கள் பராமரித்துக் கொள்ளுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gwyn Badham-Davies க்கு கிடைக்க வேண்டிய முழுத்தொகையும் அவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மூலம்... http://www.dailymail...y-winnings.html
Edited by குட்டி, 21 March 2012 - 06:24 PM.

















