தலைப்பை மாத்தியதுக்கு நன்றி அண்ணா ஆனா இப்ப தலைப்பில தமிழ்க்கொலை நடந்திருக்கு. "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லவரும் நம்மவரும். இதில வல்லவர் என்பது உயர்திணை பலர்பால். "சாத்திரம்" என்பது ஒரு தொழில் அதனால் "சாத்திரம்" எனும் எல்லாம் வல்லதும் நம்மவரும் என்று தான் வர வேண்டும் என நினைக்கிறன்
.
தமிழில் இலக்கண வழுவமைதி என்ற ஒன்றிருக்குது. கேள்விப்பட்டிருப்பீங்கள் என்று நினைக்கிறன். ஆங்கிலத்திலும் உண்டு. இது திணை வழுவமைதிக்குள் வருவதாக எடுத்துக் கொள்ளலாமே.
[திணை வழுவமைதியில் காட்டிய எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.
(எ.டு.) முகிலனும் நாயும் விளையாடினர். ]
http://www.tamilvu.o...ml/a0214612.htm
அல்லது சாத்திரம் என்பது சாத்திரம் சொல்பவருக்கு ஆகுபெயராகி உள்ளதாகவும் எடுக்கலாம்..!
கொழும்பு பேசியது என்பது போல..! கொழும்பு எப்படி பேசும்..???!![]()
![]()
திணை வழுவமைதிக்கும் இதற்கும் தொடர்பில்லை. முதலில் பால் வழுவமைதி எனப் போட்ட பின்னர் எடிட் செய்து விட்டீர்கள்.
"உயர்திணைப் பெயரை அஃறிணைப் பெயர் சார்ந்து வரும் பொழுதும், உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும் எழுவாயாக வரும் பொழுதும், முடிக்கும் சொல்லை எத்திணையில் அமைப்பது என்னும் சிக்கல் எழுகிறது. இங்கெல்லாம் சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால் ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு அளிப்பதால் இவை தணை வழுவமைதி ஆகின்றன."
இது தான் திணை வழுவமைதி. அத்துடன் அப்படி ஆகு பெயராக வரும் என சொன்ன உதாரணமும் பிழை. "கொழும்பு பேசியது". இதில் கொழும்பு பேசினார் எனக் கூற முடியுமா??? முடியாது அதே போலத்தான் சாத்திரம் எனும் எல்லாம் வல்லவர் என வராது.
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
நான் இதில் திணை வழுவமைதிக்கு முக்கியம் கொடுக்கக் காரணம்.. சாத்திரி என்பது ஆண்.. பெண் இருபாலுக்கும் பொருந்தும்..! அந்த வகையில் தான் பால் வழுவமைதிக்கு தந்த முன்னுரிமையை திணை ரீதியான வழுவமைதிக்கு வழங்கினேன் அத்துடன் ஆகுபெயராகவும் இதனை இனங்காட்டியுள்ளோம்..!
அனுமன் வந்தார் என்கிறோம். அனுமன் குரங்காச்சே.. எப்படி வந்தார் ஆகும்..???! அணில் பிள்ளை சாப்பிட்டார் என்கிறோம்.. எப்படி அணில் உயர்திணையானது..? குருவியார் வந்தார்.. குரங்கார் உட்காந்தார் என்கிறோம்..! இவையும் வழுவமைதிகளே. ஆக ஆர் விகுதி.. உயர்திணைக்கு மட்டும் உரிய விகுதி என்ற பொருள் தவறானது.
● தொழிலாகு பெயர்
ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எ.கா) சுண்டல் உண்டான்.
இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
http://www.tamilvu.o...ml/a02113l4.htm
அந்த வகையிலும்.. தொழிலாகு பெயர் என்ற வகையிலும் தலைப்பில் தமிழ் இலக்கணத் தவறு இருக்க வாய்ப்பில்லை..! அதேபோல் பொருள் அளவிலும் தவறில்லை.. என்பது எமது தமிழ் அறிவுக்கு உட்பட்டு தெரிகிறது.
உங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் தலைப்பில் தவறுகான அது போதியதாக இல்லை..!
உந்த இலக்கணம் எல்லாம் எங்களுக்கு சரி வராது ,
ஆனா நாங்கள் சொன்னா பிழை என்றாலும் நீங்கள் சரி என்று கேட்கணும் அதுதான் நாம் கற்றறிந்த பாடம்.
"நமக்கு" சரிவாது என்று சொல்லிக் கொண்டு பிழை கண்டுபிடிக்கும்.. ஜாம்பவான்.. உலகில்.. நீங்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். தெரிந்து கொண்டு பிழை என்பது வேறு.. தெரியாமலே பிழை என்பவர் நீங்கள்..! உங்கள் அரசியல் "ஞாலக்" கருத்துக்களும் இதே அடிப்படையில் தான் வெளி வருகின்றன போலும்..!
Edited by nedukkalapoovan, 22 March 2012 - 09:31 AM.
















