Jump to content


Orumanam
Photo

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய 5மில்லியன் ரூபா உதவி

குறுகியகால பேருதவி

 • Please log in to reply
17 replies to this topic

#1 shanthy

shanthy

  முல்லைமண்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,201 posts
 • Gender:Female
 • Location:Germany

Posted 19 March 2012 - 10:05 AM

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா

2011 செப்ரெம்பர் முதல் இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாடு, வழக்கு உதவிகள், கைதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளை நேசக்கரம் வழங்கி வருகிறது. இவ்வுதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகள் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றம், பயன்கள் பற்றிய விபரத்தை அனைத்து ஊடகங்களுக்கும் அறியத் தருகிறோம்.
தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நேசக்கரம் உதவிகளை ஒன்றிணைத்து சுமார் 5328517,50Rs (ஐம்பத்து மூன்று லட்சத்து இருபத்தெண்ணாயிரத்து ஐநூற்றிப் பதினேழு ரூபா 50சதம்) ரூபாவிற்கான உதவிகளை வழங்கியுள்ளது.
நாம் தொகுத்த விபரக்கோவையில் பயனாளிகளின் பெயர்கள், காலம் போன்ற விபரங்களையும் இணைத்துள்ளோம். சில பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. (அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி, அவர்களின் பெயர்கள் இவ்விபரக்கோவையில் தவிர்க்கப்பட்டுள்ளன)
இக்கைதிகளின் நலனுக்காக தமது ஆதரவினை வழங்கிய ஐஎல்சி வானொலி நிர்வாகம் , நேயர்கள் , மற்றும் உலகுவாழ் புலம்பெயர் தமிழர் உறவுகளுக்கு நேசக்கரம் தனது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
கைதிகள் நலன் உதவித்திட்டத்தினை விடவும் குடும்ப இணைப்பு, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான மாதாந்த உதவி, கல்விகற்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான உதவி, ஊனமுற்றோருக்கான உதவிகள், விதவைகளுக்கான வாழ்வாதார மேம்பாடு போன்ற முயற்சிகளை முன்னெடுத்து வருகிற எமது நிறுவனத்திற்கு உலகுவாழ் உறவுகள் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

கணக்கறிக்கை விபரத்தினை பார்வையிட இணைப்பில் அழுத்துங்கள்.
Posted Image
Posted Image
Posted Image
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image
உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.
விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

Edited by shanthy, 19 March 2012 - 10:06 AM.

 • குமாரசாமி, samiyar, விசுகு and 3 others like this

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

 

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


ninaivu-illam

#2 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,426 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 19 March 2012 - 10:28 AM

நிர்கதியாகி உள்ள எம் தமிழ் சொந்தங்களுக்கு நேசக்கரத்தின் மூலமும் உதவிகள் சென்றடைவது கொஞ்சம் ஆறுதல் தரும் விடயமே. தங்கள் சேவைக்கும் நேசக்கரத்திற்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்..! :icon_idea:
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#3 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,641 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 19 March 2012 - 10:38 AM

நிர்க்கதியாகி உள்ள தாயக உறவுகளுக்கு நேசக்கரத்தின் மூலமும் இவ்வாறு சிறிது சிறிதாக பெரும் உதவிகள் சென்றடைவது ஆறுதல் தரும் விடயமே. தங்கள் சேவைக்கும் நேசக்கரத்திற்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#4 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,476 posts
 • Gender:Male

Posted 19 March 2012 - 10:43 AM

'நேசக்கரம்' தனது பெயருக்கேற்ப இயங்குவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி!
அமைப்பாளர்களுக்கும், உதவிய உறவுகளுக்கும் நன்றிகளும், பாராட்டுகளும்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#5 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,898 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 19 March 2012 - 11:22 AM

நன்றிகள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#6 Elugnajiru

Elugnajiru

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,332 posts
 • Gender:Male
 • Location:காலப்பொதுவெளி
 • Interests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.

Posted 19 March 2012 - 11:48 AM

காலத்தினாற் போற்றப்படவெண்டிய சேவையெனிலும். இச்சேவையில் இதுவரை நான் இணைந்திருக்கவில்லை என்பதில் மனம் வருந்துகிறேன். எதிர்காலத்தில் நேசக்கரத்துடன் இணைய முயற்சிசெய்கிறேன். அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்.

தமிழர்விரோததேசம் இந்தியா, சர்வதேசரீதியில் தமிழர்தரப்பிற்கு ஏற்பட்டுவரும் நியாயபூர்வமான ஆதரவையும், தமிழீழ விடுதலக்கான ஆதரவின் நியாயபூர்வங்களையும் நீர்த்துப்போகச்செய்வதற்காகத் தமிழர் தாயகப்பிரதேசங்களில் சிறுதாக்குதல்கள் மற்றும் வன்செயல்களில், தனது கூலிப்படைகளை ஈடுபடுத்தும் முயற்சியை முன்னெடுக்க ஆயத்தப்படுத்துகிறது.

 

இதில் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும்.


#7 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,030 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 19 March 2012 - 12:37 PM

எனக்குத் தெரிந்து எம் மக்களுக்கு நாம் அனுப்பும் பணம் அப்படியே போய் சேர வைக்கின்ற அமைப்புகளில் நேசக்கரமும் ஒன்று. முகம் தெரியா பல உறவுகளின் தேவைகளுக்காக முகம் தெரியா இன்னும் பல உறவுகளை நேரடியாக இணைத்து வைக்கவும் நேசக்கரம் உதவியிருக்கின்றது

எம்மால் தனிப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்டவற்றுக்கு உதவ முடியாமல் போனாலும், எம் உற்றார் உறவுகளில், நண்பர்களில் எவருக்காகவது நேசக்கரம் பற்றி அறியத் தந்து அவர்களையும் இந்த உதவும் திட்டங்களில் இணைக்கலாம்.

சக கள உறவு சாந்திக்கு நன்றிகள்
 • பையன்26 likes this

#8 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,388 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 19 March 2012 - 01:17 PM

சாந்தி அக்காவுக்கும் அவருடன் இணைந்து செயற்படும் அனைவருக்கும் நன்றிகள்.உதவி செய்தவர்களுக்கும் நன்றி.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#9 samiyar

samiyar

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 105 posts
 • Gender:Male
 • Location:பூலோகம்
 • Interests:அறிவியல், சமயம், கலை , கலாச்சாரம், சினிமா,புதிய நட்பு,

Posted 19 March 2012 - 01:30 PM

நேசக்கரத்திற்கு நன்றிகள் ....
அன்புடன் சாமியார்

அன்பே சிவம் ! / Love is God!

#10 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 19 March 2012 - 02:20 PM

நன்றி அக்கா.  உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள். 

நான் நம்பி காசு கொடுத்த(கொடுக்கும்)  ஒரே அமைப்பு நேசக்கரம். 

 • shanthy likes this
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#11 சுமங்களா

சுமங்களா

  உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPip
 • 203 posts
 • Gender:Female
 • Location:இத்தாலி
 • Interests:அச்சமில்லை..அச்சமில்லை..எதுவும் மிச்சமில்லை

Posted 19 March 2012 - 03:23 PM

எங்களது நேர்டோவும்தான் எவ்வளோ உதவிகளை செய்கிறார்கள் அதென்ன நேசக்கரம் எண்டதும் ஓடியந்து பாராட்டுகிறார்கள் :unsure: :unsure:

#12 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,039 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 19 March 2012 - 03:25 PM

நேசக்கரத்திற்கு என் பாராட்டுக்கள்.

#13 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,388 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 19 March 2012 - 03:59 PM

எங்களது நேர்டோவும்தான் எவ்வளோ உதவிகளை செய்கிறார்கள் அதென்ன நேசக்கரம் எண்டதும் ஓடியந்து பாராட்டுகிறார்கள் :unsure: :unsure:
கோத்தபாயவிடம் கொடுத்த காசிக்கு முழு தமிழ் அகதிகளுக்கும் உதவி செய்திருக்கலாம். :mellow: :mellow:

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#14 shanthy

shanthy

  முல்லைமண்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,201 posts
 • Gender:Female
 • Location:Germany

Posted 19 March 2012 - 09:28 PM

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள். கருத்திட்ட அனைவருமே ஏதோ ஒருவகையில் (சுமங்களாவைத்தவிர) நேசக்கரத்தோடு உங்கள் கரங்களையும் இணைத்து ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்த உங்கள் ஆதரவினைத் தாருங்கள் தேவைகள் அதிகமாக உதவிகள் அதிகமாக தேவைப்படுகிற காலமாக உள்ளது.

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

 

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#15 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 19 March 2012 - 09:34 PM

நேசக்கரத்திற்கு மிக நன்றி.

#16 shanthy

shanthy

  முல்லைமண்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,201 posts
 • Gender:Female
 • Location:Germany

Posted 22 March 2012 - 08:26 AM

எனக்குத் தெரிந்து எம் மக்களுக்கு நாம் அனுப்பும் பணம் அப்படியே போய் சேர வைக்கின்ற அமைப்புகளில் நேசக்கரமும் ஒன்று. முகம் தெரியா பல உறவுகளின் தேவைகளுக்காக முகம் தெரியா இன்னும் பல உறவுகளை நேரடியாக இணைத்து வைக்கவும் நேசக்கரம் உதவியிருக்கின்றது

எம்மால் தனிப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்டவற்றுக்கு உதவ முடியாமல் போனாலும், எம் உற்றார் உறவுகளில், நண்பர்களில் எவருக்காகவது நேசக்கரம் பற்றி அறியத் தந்து அவர்களையும் இந்த உதவும் திட்டங்களில் இணைக்கலாம்.

சக கள உறவு சாந்திக்கு நன்றிகள்

நிழலி, உங்கள் மூலம் ஒரு பெற்றோரை இழந்த இரு பிள்ளைகள் நிரந்தர உதவியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அத்தோடு நின்றுவிடாமல் உங்கள் உறவினரையும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவ ஒழுங்குபடுத்திக் கொடுத்திருப்பது அப்பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு பேருதவியாக உள்ளது. ஒவ்வொருவர் ஒவ்வொரு குடும்பத்துக்கான உதவியை ஒழுங்குபடுத்தினாலே பல பிள்ளைகள் எதிர்காலம் சிறப்படையும். உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் மிக்க நன்றிகள்.

நிர்க்கதியாகி உள்ள தாயக உறவுகளுக்கு நேசக்கரத்தின் மூலமும் இவ்வாறு சிறிது சிறிதாக பெரும் உதவிகள் சென்றடைவது ஆறுதல் தரும் விடயமே. தங்கள் சேவைக்கும் நேசக்கரத்திற்கும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்


இக்கட்டு மிகுந்த நிலமையில் இருந்த பலருக்கு உங்கள் ஆதரவு தந்து உதவிய உங்கள் காலமறிந்த எல்லா உதவிகளும் பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. நன்றிகள் விசுகு.

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com /nesakkaram@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh

உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

http://www.nesakkaram.org

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/

nesakkaram1.gifஎனது வலைப்பூ :- www.mullaimann.blogspot.com முல்லைமண் வலைப்பூ

 

Facebook :- https://www.facebook.com/rameshsanthi

Nesakkaram facebook :- https://www.facebook.com/pages/Nesakkaram-e-V/131188003615653?ref=hl

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#17 கந்தப்பு

கந்தப்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 11,684 posts

Posted 29 March 2012 - 12:39 AM

நேசக்கரத்துக்கும் சாந்தி, சாத்திரி ஆகியோருக்கும் நன்றிகள்.
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#18 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,487 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 29 March 2012 - 06:09 AM

நேசக்கரத்திற்க்கு நன்றிகள்
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]