Jump to content


Orumanam
Photo

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-1


 • Please log in to reply
24 replies to this topic

#1 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 18 March 2012 - 11:20 AM

ஆரம்ப உரை;-முதலிலே சொல்லி விடுகிறேன் நான் எந்த வித அரசியல் கட்சியிலோ அரசியல் இயக்கங்களிலோ அங்கத்தவனாக இருக்கவில்லை.ஆனால் நான் கடந்த வந்த வாழ்வின் பாதையில் சந்தித்த பார்த்த கேட்ட அறிந்த அரசியல் நிகழ்வுகளை தொகுத்து எழுதுவுது தான் நோக்கம் .இதன் நம்பக தன்மை அல்லது சரியானது பிழையானது என்ற விமர்சனம் இருக்குமாயின் அவர் அவர்களின் கருத்து என்று நினைத்து அதை தாண்டி எனக்கு பட்டதை எழுத முனைகிறேன் .பெரும்பாலும் இத் தொடரை புனைவாகவும் எடுத்து கொள்ளலாம் அல்லது தகவலகளின் தொகுப்பாகவும் எடுத்து கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு நினைவு தெரிந்து அது ஒரு அரசியல் நிகழ்வாக கணித்து தொடங்கும் காலத்தை எனது பத்தாவது வயதில் இருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.எனது அரசியல் குடும்ப பின்னனி தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்தது .தமிழ் காங்கிரஸ் கட்சி பிரபல சட்டதரணி ஜீஜீ பொன்னம்பலம் தலைமையில் இருந்தது என்று பலருக்கு தெரிந்து இருக்கும் .அந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாரளுமன்றம் சென்று உப சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட உடுப்பிட்டி சிங்கம் என்று பலரால் அழைக்கப்பட்ட சிவசிதம்பரம் அவர்களும் அப்பொழுது உள்ளூராட்சி அமைச்சருமாக இருந்த பிரமதாசாவும் கலந்து கண்ட வைபவத்தினை கண்ட நிகழ்விலிருந்து இந்த கட்டுரையை தொடரலாம் என்று நினைக்கிறேன்.எமது ஊரில் உள்ள கோயில் ஒன்றுக்கு மின்சாரம் வழங்கலை தொடங்கி வைப்பதற்குக்கு இவர்கள் அழைத்து வரும் பொழுது நூல் நாடா வெட்டும் பொழுது பிரமேதாசா ,சிவசிதம்பரம்,எனது உறவினர் ஆகியோரை எடுக்கும் புகைபடத்தில் நானும் ஒரு பத்துவயது சிறுவனாக நான் அகப்பட்டு இருந்தேன்.அது அடுத்த நாள் வீரகேசரி முதல் பக்கத்தில் வந்தது அதில் தெளிவாக எனது முகமும் இருந்தது .

இதன் மூலம் அந்த வயதிலே எனக்கு கிடைத்த அரசியல் அந்தஸ்த்து என்று அக மகிழ்ந்தேன்.உடுப்பிட்டி சிவசிதம்பரம் ஆரம்ப காலங்களில் ஒரு இடதுசாரி சிந்தனை பட்டவராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர் என்றாலும் பின் ஒரு படு வலதுசாரி போக்கு கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சி மூலம் பாரளுமன்றம் சென்றவர் .தமிழ் காங்கிரஸ் கட்சி அப்பொழுது யாழ் மேட்டுகுடிகளின் பலத்த ஆதரவு பெற்ற கட்சியாகவே இருந்தது. அது வட மாகணத்தை தவிர்த்து வேறு தமிழ் பிரேதசங்களில் வெற்றி பெற்று பாரளுமன்ற உறுப்பினர்களை ஒரு பொழுது கொண்டிருக்கவில்லை.ஒப்பீட்டளவில் அன்று தந்தை செல்வா தலைமையில் இருந்த தமிழரசு கட்சியின் போட்டிக் கட்சியாக தோற்றமளித்தாலும் மூன்று இடங்களுக்கு மேல் பாரளுமன்றத்துக்கு தெரிவானதாக எனக்கு ஞாபகமில்லை.

யாழ்ப்பாண தொகுதியில் தெரிவாகி ஜீஜீ பொன்னம்பலமும் உடுப்பிட்டி தொகுதியில் இருந்து மு .சிவசிதம்பரமும் வவுனியா தொகுதியில் இருந்து தா.சிவசிதம்பரமும் மட்டும் தான் நான் பார்த்த காலத்தில் தெரிவாகி இருந்திருந்தார்கள் .இந்த தா .சிவசிதம்பரம் என்பவர் வவுனியாவில் யாழ் பாணத்தவரின் மேலாதிக்கம் அதிகம் இருக்கு என்று சொல்லி முதல் முதலில் யாழ் அகற்று சங்கம் என்று உருவாக்கினவராவார்.60 களில் நடந்த பிரபல சத்தியாக்கிர போராட்டத்தை தமிழரசு கட்சியினர் நடத்திய பொழுது அப்பொழுது ஒரேயொரு எம்பியாக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மு.சிவசிதம்பரம் இணைந்து செயல் பட்டிருந்தார் என்று கேள்விபட்டிருந்தேன் .இதை பிற்கால தமிழ் காங்கிரஸ் அரசியல் மேடையில் சிவசிதம்பரத்தை வைத்து கொண்டு ஜீஜீ இந்த விடயம் பற்றி குத்தி பேசியதை நேரில் கேட்டு இருக்கிறேன்,தமிழரசு கட்சி அதிகமான தொகுதிகளில் வென்றாலும் தமிழ் காங்கிரஸுக்கு குடாநாட்டில் பரவலாக செல்வாக்கு இருந்தது.இந்ந தமிழ் காங்கிரஸ் கட்சி மலையக மக்களின் வாக்குரிமை பறிப்பதுக்கு உறுதுணையாக நின்றது குறிப்பாக ஜீஜீயை சாடுவோர் உளர்.அதே நேரத்தில் தமிழ் காங்கிரஸ் கட்சியினரில் ஜீஜீ புகழ் பாடுவோர் ஜீஜீ இலங்கையின் முதல் மந்திரிசபையில் கைத்தொழில் மந்திரியாக இருந்த காரணத்தினால் அதை பயன்படுத்தி எந்த வித தொழிற்சாலையும் இல்லாத தமிழ் பிரேதசத்தில் மூன்று தொழிறசாலைகள் அமைத்திருந்தார் என்று பெருமை கொள்வர், அந்த மூன்று தொழிற்சாலைகள் அவையாவன காங்கேசன்துறையில் அமைந்த சீமேந்து தொழிற்சாலை ,பரந்தனில் அமைந்த இரசாயன தொழிற்ச்சாலை கிழக்கில் வாழைச்சேனையில் அமைந்த காகித தொழிற்சாலை ஆகும். மேலும் ஜீஜீ பொன்னம்பலமும் பிரபல சட்டத்தரணியாக இருந்தமையால் அவரின் மிக விவேகமான வாதங்களை கதை வடிவில் கூறி பெருமையும் கொள்வர்.


இடம் இருந்து வலமாக மு,.சிவசிதம்பரம், ஜீ ஜீ பொன்னம்பலம், தா.சிவசிதம்பரம் Posted Image


50க்கு 50க்கு என்ற கோசத்துடன் ஜீஜீயின் தமிழ்காங்கிரஸும் .சமஸ்டி அரசியல் என்னும் மாநில சுயாட்சி கோரிக்கையுடன் செல்வாவின் தமிழரசு கட்சியும் அரசியல் நடத்தி கொண்டிருந்தனர் .அதே நேரத்தில் உது ஒன்று சரிவராது தமிழர் சுயாட்சி கழக நவரத்தினம் என்பவர் தனித் தமிழ் நாடு என்ற கோசத்துடனும் இருந்தார் .அவருடைய கட்சியில் சிங்கள தனி சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இருந்த கோடிஸ்வரன் என்பவரும் இருந்தார்

70 களில் நடைபெற்ற இலங்கை பொது தேர்தல் தான் எனக்கு முதன் முதலாக ஞாபகத்தில் இருந்த தேர்தலாகும் .அந்த தேர்தலில் தமிழர்களின் முக்கிய கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் மக்கள் முன் வைத்த கோசம் . தமிழரசு கட்சி தமிழர்களின் தாயகத்தின் தலை நகராகா திருகோணமலையில் பல்கலைகழகம் அமைக்க வழி வகை செய்வோமோனவும் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் யாழ்ப்பாண்த்தில் அமைக்க வழிவகை செய்வோமென தேர்தலில் மேடைகளின் பிரச்சாரம் செய்தனர்.

தமிழரசுகட்சியின் முக்கிய பொறி பறக்கு பேச்சளாராக ஆலாலசுந்தரமும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரகா ஆனந்த சங்கரியும் கொடிகட்டி பறந்தனர் ..70 களில் நடைபெற்ற தேர்தலில் பல முறை வென்ற தனது கோட்டையாக கருதிய உடுப்பிட்டி தொகுதியில் சிவசிதம்பரம் தோல்வியுற்றார் .அதே போல் வட்டுகோட்டை தொகுதியில் அமிர்தலிங்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தியாகராஜா என்பவரால் தோல்வி யடைந்தார். காங்கிரஸ் கட்சியில் மேலும் இருவர் தெரிவாகி இருந்தனர் நல்லூர் தொகுதியில் இருந்து அருளம்பலம் என்பவரும் கிளிநொச்சி தொகுதியில் இருந்து ஆனந்தசங்கரியுமாகும் ..70களில் பெரும் சிறிமா தலைமயிலான சுதந்திர கட்சி பெரு வெற்றியீட்டியது அந்த அரசாங்கத்தில் பீட்டர்கெனமென் தலைமையிலான சோவியத் சார்பு கம்னீயூஸ் கட்சி ட்ரொக்சிய கட்சியான என்.எம் பெரேரா வின் தலைமையிலான சமசமாஜகட்சி அங்கம் வகித்து இருந்தனர்

( தொடரும்)


http://www.yarl.com/...ndpost&p=739454 பாகம் -2

http://www.yarl.com/...ndpost&p=739617 பாகம் -3

http://www.yarl.com/...ndpost&p=740096 பாகம்-4

http://www.yarl.com/...ndpost&p=741662 பாகம் -5

Edited by அரக்கன், 23 March 2012 - 11:23 PM.

 • மோகன், நிழலி and வீணா like this
வாழ்க்கை வாழ்வதற்க்கே

ninaivu-illam

#2 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,567 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 18 March 2012 - 11:28 AM

தொடருங்கோ அரக்கன்....பார்ப்போம் உங்கள் அரசியலையும்...
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#3 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 18 March 2012 - 11:44 AM

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-2)
Posted Image70 களில் சிறிமாவின் ஆட்சி காலம்
சிறிமாவின் அரசாங்கத்தில்அமைச்சர்களாக நிதி மந்திரியாக என்.எம் பெரேராவும் கல்வி அமைச்சராக பதியூதின் முகமத்தும் தபால் தந்தி அமைச்சராக குமாரசூரியர் என்ற தமிழரும் இருந்தார்கள். என் .எம் பெரேரா என்பவர் ட்ரொஸ்கிய சிந்தனை அடிப்படையாக கொண்டவர் .இவரது கட்சியில் இருந்த இன்னொருவரும் அமைச்சராக இருந்தார் அவரின் பெயர் கொல்வின் ஆர் டி சில்வா ..அவர் தான் 1972 ஆம் வருடம் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டத்தை வரைந்தவர் .பிரித்தானிய அரசாங்கத்தால் தமிழருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை இல்லாமால் செய்தவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

Posted Image


என்.எம் பெரேரா போன்றோர் மேற்கத்தை ய பல்கலை கழகத்தில் படித்து திரும்பியமையால் இடதுசாரி வயப்பட்டு சுதந்திரத்துக்கு முன்பே பல போரட்ட வடிவங்களை முன்னெடுத்தவர் என்று கூறப்படுகிறது.

என்.எம் பெரேரா ,போன்றோர் சுதந்திர போராட்ட காலங்களில் தேடப்பட்ட பொழுது ..எல்லையற்ற காவலை உடைக்க கூடிய துறைமுகமாக இருந்த வல்வெட்டி துறை துறைமுகம் மூலம் இந்தியாவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது ,இந்த என்.எம் பெரேரோ நிதி மந்திரியாக இருந்த பொழுது நில உச்ச வரம்பு பண உச்ச வரம்பு சட்டங்கள் மற்றும் சீர் திருத்தங்களை கொண்டு வந்து தேசிய பொருளாதார திட்டத்தை கட்டி எழுப்பு நோக்கில் பல திட்டங்களை வகுத்தார்.இவரின் சில திட்டத்தால் மணியோடர் பொருளாதரத்தை நம்பி இருந்த இன்னொரு மாதிரி சொல்ல போனால் குறனோமேர்ந்து உத்தியோகத்தை நம்பி இருந்தவர்கள் மிகவும் கஸ்டப்பட்டார்கள்

..பணவீக்கம் குறைந்திருந்தது ..டச்சு காலத்து பயிரான புகையிலை உற்ப்த்தியால் மட்டுமே விவசாயத்தில் பணத்தை கண்ட யாழ் விவசாயிகள் மிளகாய் வெங்காயம் முதலானவற்றை பயிருட்டு வரலாற்றில் முதன் முறையாக லாபமீட்டினர்..ஏனெனில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான பம்பாய் வெங்காயம் மிளகாய் போன்றவை நிறுத்தபட்டிருந்தது அல்லது குறைக்க பட்டிருந்தது என்று கொள்ளலாம்.இவை எல்லாம் அன்னியசெலவாணியை குறைக்கும் நோக்கில் என்று சொல்லி கொண்டார்கள் . வன்னி ,மட்டகளப்பில் உற்பத்தியாகும் குறிப்பாக அரிசி யாழ் குடாவிற்க்குள் முற்றும் முழுவதாக வந்து நுகர்வதுக்கு தடை விதிக்கப்பட்டது ...ஆனையிறவு பகுதி ஒரு சுங்க பகுதி போல் தோற்றமளித்தது

..இந்த அரிசி தடைக்கு காரணத்தை அவர்கள் முற்போக்காக வேறு காரணங்களை கூறினாலாம் தமிழர்களுக்கு மேலுள்ள தடை போல் பார்க்கும் பொழுது தோற்றமளித்தது .விவசாயிகளுக்கு ஒரு மரியாதையும் பண வருவாயும் ஒரு தொழிலாக பரிமணிபதை கண்ட வேலையற்ற பட்டதாரிகள் கூட வன்னி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து காடு களை அழித்து விவசாயம் செய்ய தொடங்கி இருந்தனர்.அந்நிய செலவாணியை மட்டுபடுத்து நோக்கில் தமிழ் நாட்டு திரைபடங்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மிகவும் மட்டுபடுத்தப்பட்டளவிலேயே இறக்குமதி செய்யப்பட்டன் ..இவர்கள் நாட்டுக்கு முற்போக்காக செய்வதாக கூறினாலும் பார்க்கும் பொழுது தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையாகவே தோற்றமளித்தது.

கல்வியே நம்பி இருந்த வரண்ட யாழ் குடா மக்கள் மேல் தரப்படுத்தல் என்ற திட்டத்தையும் அப்போதைய அரசாங்கம் கொண்டு வந்ததின் மூலம் இனரீதியான அடக்குமுறை செய்திருந்தது ..பிரேதச ரீதியான தரப்படுத்தலை ஓரளவு ஏற்று கொண்டாலும் இனரீதியான தரப்படுத்தல் செய்தமை பேரினவாத அடிப்படையில் செய்வது மாதிரியே இருந்தது

.தமிழ் பிரதேசத்தில் இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களில் பார்க்க சிறிலாங்க சுதந்திர கட்சியினரால் ஒவ்வொரு தொகுதியில் அமைக்கப்பட்ட அமைப்பாளர்கள் பலமும் செல்வாக்கும் உள்ளவர்களாக காணப்பட்டனர். சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களுக்கு இருக்கும் செல்வாக்கை கண்டு முன் வேறு கட்சிகளில் இருந்த பிரமுகர்கள் அத்தருணம் கட்சி மாறினார்கள் .பருத்திதுறை தொகுதியில் தமிழரசு கட்சியில் கேட்கும் துரைரத்தினத்துக்கு போட்டியாக பல காலமாக போட்டியாயிருந்த நடராசா என்பவர் ,மற்றும் உடுவில் தொகுதியில் தமிழ் காங்கிரஸ் போட்டியிட்ட சிவநேசன் மருமகள் விநோதன் போன்றோர் ,தமிழ் காங்கிரஸில் இருந்து தெரிவான அருளம்பலம் ,தியாகராஜா போன்றோரும் கட்சி தாவினர் ...சிறுபான்மை மகாசபையில் அங்கம் வகித்த எம்.சி சுப்பிரமணியத்தை சிறிலங்கா சுதந்திர கட்சி மூலம் நியமன எம்பியாக்கியும் இருந்தனர் ,,சிறிமா அரசாங்கத்தில் ரஸ்சிய சார்பு கம்னீயூஸ் கட்சியும் அங்கம் வகித்தமையால் வட பகுதியில் இருந்த வி.பொன்னம்பலம் போன்றோரின் ஆதரவும் இருந்தது.இலக்கிய வட்டத்தில் கூட முற்போக்கு என்று கூறிக்கொண்டு ..பிரபல இலக்கிய விமர்சர்களான சிவதம்பி ,கைலாசபதி போன்றோரும் சிறி லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு வழங்கி கொண்டிருந்தனர்.யாழ் மேயராக இருந்த துரையப்பாவும் அப்போதைய அரசாங்கத்தின் சார்பாளராகவே இருந்தார்

ட்ட்லியின் யூன்பி அரசாங்க காலத்தில் சிறிமாவின் அனுசரணையுடன் ரஸ்ய லும்பிம்பா பல்கலை கழகத்தில் படிக்கவோ அரசியல் நோக்கத்துக்கோ அனுப்பி வைக்கப்பட்ட ரோகண விஜீவரா திரும்பி வந்து சேகுவரா என்று இயக்கத்தை கட்டி வளர்த்து கலக புரட்சி செய்தான்,,,தான் பால் ஊட்டி வளர்த்த பாம்பு சிறிமா அரசாங்கத்தை கொத்தியது ...1971 ஆண்டு ஒரு புரட்சியை சிறிமா அரசாங்கம் சந்தித்து

( தொடரும்)
 • மோகன் and வீணா like this
வாழ்க்கை வாழ்வதற்க்கே

#4 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 18 March 2012 - 11:48 AM

கொஞ்சம் பழை.....ய..... ஆள் போல இருக்கு.... தொடருங்கள்

#5 கிருபன்

கிருபன்

  வலைப்போக்கன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,002 posts
 • Gender:Male
 • Location:முடிவிலி வளையம்
 • Interests:போஜனம், சயனம்

Posted 18 March 2012 - 08:32 PM

வரலாறுகளையும் சொல்லவேண்டும்தானே.. சுவாரசியமான அரசியல் விடயங்களை அறிவதற்கு "அரக்கன்" (அது என்ன பெயர்!) துணை புரிவார்!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#6 சுபேஸ்

சுபேஸ்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,586 posts
 • Gender:Male
 • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 18 March 2012 - 08:43 PM

தொடர்ந்து எழுதுங்கள்...பழைய சம்பவங்கள் பலவற்றை அறியக்கூடியதாக இருக்கும்...பொய்யையும் கற்பனையையும் கலக்காமல் கவனமாக எழுதுங்கள்...வரலாற்றை எழுதும்போது மிகக் கவனமாக இருக்கவேண்டும்..இது கதை எழுதுவது போல அல்ல...எங்கட வரலாற்றை பாடப்புத்தகங்களில் திரித்தெழுதிய சிங்களத்துக்கு அடிக்கத்தான் கோபத்துடன் போராடினனாங்கள்.. எங்கட வரலாற்றை ஆர் திரித்தாலும் வன்மையாக வன்முறையுடன் அடிப்பம்...

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

 

Arguing with stupid people is like killing the mosquito on your cheek...... :D 

 

www.theeraanathi.blogspot.com/


#7 வல்வை சகாறா

வல்வை சகாறா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,545 posts
 • Gender:Female
 • Location:கனடா
 • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 18 March 2012 - 09:01 PM

தொடர்ந்து எழுதுங்கள் அரக்கன். உங்கள் எழுத்துக்கள் கடந்தகாலம் பற்றிய விடயத்தில் நம்பிக்கைக்குரியதாக அமையட்டும். ஏனென்றால் எங்களுக்கு முற்பட்ட காலத்தைப்பற்றி நாங்கள் அறிவதற்கு முயன்றால் அவற்றை எமக்குச் சொல்லக்கூடியவர்கள் தமக்காகவே சில விடயங்களையும் தற்பெருமைகளையும் இட்டுக்கட்டி வெறுக்கப்பண்ணிவிடுகிறார்கள். ஏன்டா கதை கேட்க வெளிக்கிட்டோம் என்று வேதனைப்பட வைத்துள்ளார்கள் சிலர்... உங்கள் வழிப்போக்கன் பதிவு அப்படி அமையாது என்று நம்புகிறோம். :)
 • மோகன் likes this

எழுதி முடிக்காத என் கவிதை

இறுதி மூச்சுவரை பயணிக்கும்.


#8 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 18 March 2012 - 09:24 PM

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள்(பாகம்-3)

சேகுவரா இயக்கம் என்று புரட்சி 1971 ஆண்டு செய்தற்கு தலைமை தாங்கியவன் ரோகண விஜேவீரா. நன்கு அறியப்பட்ட சீன சார்பு கம்னீயூஸ் கட்சி சண்முகதாசனின் அரசியல் வகுப்பு மாணவனாக ஆரம்பத்தில் இருந்தார் .தமிழர் சுயநிர்ணயமைக்கு எதிரான மற்றும் இந்திய விஸ்திரிப்பு வாதத்தை இங்குள்ள தமிழர்கள் மேல் புகுத்தி பார்த்தவை என்பவற்றினோடாக சண்முகதாசனுடன் முரண்பட்டு கொண்டு தனிய சென்று இயக்கம் கட்டியது தான் அந்த சேகுவரா இயக்கம். அப்பொழுது அரசாங்கத்துக்கு சோவியத் யூனியனும் சீனாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த கால கட்டத்தில் தான் அந்த புரட்சிக்கான முயற்சி நடந்தது . வட கொரியா புரட்சிக்கான முயற்சி நடைபெற்ற சமயத்தில் நடுக்கடலில் இருந்து ஆயுதம் வெடி பொருட்கள் வழங்கினார்கள் என வதந்தி உலாவினாலும் அவர்கள் நவீன ஆயதங்களை பாவித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரம் இல்லாமால் இருந்தது.

Posted Image


புரட்சி முற்பட்ட காலத்தில் கொழும்பு ஹைட் பார்க்கில் ரோகண விஜவீரா உரையாற்று பொழுது <


தென்மாகண பகுதியில் அநேகமாகன பொலிஸ் நிலையங்களை புரட்சிக்கு முயற்ச்சியின் கைப்பற்றிய பொழுதும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்ட புரட்சிக்கான முயற்சியும் தலைநகரை நோக்கி நகர்த்தப்பட் முயற்சியும் பிசு பிசுத்து போனது . அது பிசுபிசுத்து போனதுக்கு பல புனை கதைகள் மாதிரி பல கதைகள் உலாவி வந்தன. அதன் உண்மை தன்மை எவ்வளவு என்று தெரியாத போதிலும் .அது உண்மை போல உருவாக்க பட்டு இருந்தன. அப்படியான கதைகள் ஒன்று தான் இது.ஓரே நேரத்தில் நாட்டை பிடிக்கும் நோக்கில் தான் புரட்சிக்கான வேலைத்திட்டம் இருந்தனவாம்.அதுக்கான நேரத்தை பல பாகங்களாக பல இடங்களுக்கு பிரிக்கபட்ட குழுக்களுக்கு தெரியபடுத்துவதுக்கு இப்படி ஒரு முறையை கையாண்டார்களாம். அந்த நேரத்தில் இப்ப இருக்கு மாதிரியான தொடர்பு சாதன வசதி இருக்கவில்லை என்பது தெரிந்ததே. வானொலிக்கு மரண அறிவித்தல் கொடுத்து இருந்தார்களாம் அதில் அடக்கம் செய்யப்படும் நேரத்தை புரட்சிக்கான நேரமாக கை கொள்ளவேணுமெண்டு தீர்மானித்தார்களாம் ..அந்த மரண அறிவித்தல் ஒரு முஸ்லிமினதை கொடுத்திருந்தார்களாம் .அப்பொழுது அறிவிப்பாளராக இருந்த எச்.எப் முகதீன் என்ற அறிவிப்பாளர் அடக்கம் நேரம் இஸ்லாமியர்களின் அடக்கத்துக்கு உகந்த நேரமாக இல்லாத கருத்தில் கொண்டு சிறிது திருத்தம் செய்து வாசித்தாராம் .

அதனால் தலைமை குழுக்குள் புரட்சிக்கான ஒரு நேரத்தையும் நாட்டின் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பட்ட இன்னொரு நேரத்தையும் தெரிவு செய்வதனால் பிசுபிசுத்து போனதாக இப்படியான பல கர்ண பரம்பரை கதைகள் கூறியிருந்தனர். இந்த புரட்சியை மழுங்கடிப்பதுக்கு உடனடியாக குண்டு வீசும் ஹெலிகொப்டரை இந்தியா அனுப்பியது அனுராதபுர மற்றும் காடுகளில் ஒளிந்திருக்கும் போராளிகளை சரண்டையமாறு துண்டு பிரசுரங்களை வீசியும் குண்டுகளை வீசியும் இந்த கலகத்தை அடக்கியது


Posted Image
71 புரட்சியின் பொழுது சரண்டைந்த அல்லது கைது செய்யப்பட்ட சேகுவரா இயக்கத்தவர்

வெறும் ஆர்ப்பாட்டம் தொழிற்சங்க வேலை நிறுத்தம் போன்றவற்றை மட்டுமே அரசுக்கு எதிரான முறையாக அதுவரையும் கண்ட இலங்கை அரசு இப்படியான கலக புரட்சி முதன்முறையாக கண்டமையால் கலக்க முற்றது ,அந்த பய கலக்கத்தில் பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடி பொது மக்கள் கதைப்பது கூட சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க பட்டது மட்டுமன்றி அப்படி நடந்தால் மூர்க்கமாக அடக்கினார்கள். ஊடகங்கள் ,பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் திரைபடங்களில் புரட்சி அது போன்ற சொற்கள் விடயங்கள் பாவனைகள் சொற்பமாக இருப்பது தெரிந்தால் கூட தணிக்கை செய்யப்பட்டது. உதராணத்துக்கு டைரக்டர் சிறீதர் சிவாஜி வைத்து வெளிநாட்டில் எல்லாம் படமாக்கபட்ட சிவந்த மண் படத்தை தடை செய்ய முனைந்தார்கள் .ஏனெனில் அதில் ஜமீன்தாருக்கு எதிராக புரட்சி செய்வது போல காட்சிகள் வருகின்றன என்று. பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு அத்திரைபடம் இலங்கையில் திரைபட பட்டன என்று நினைக்கின்றேன்

இந்த புரட்சி தோற்கவேணும் என்று வட பகுதி தமிழர்கள் தான் அரசாங்கத்தை விட கூட நினைத்து இருப்பார்கள் .அப்படி சேகுவாரா இயக்கத்தை பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் அப்படி ஒரு பய பீதியை வளர்த்திருந்தார்கள். புரட்சி தோல்வியின் பின் கைது செய்யப்பட்ட ரோகண விஜை வீராவை யாழ்ப்பாண சிறையில் வைத்திருந்தார்கள் . சில நேரத்தில் நிர்வாணமாக கூட....பிற்ப்பட்ட காலங்களில் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் நணபர்களாக மாறினார்கள் என்று உதவினார்கள் என்று அப்பொழுது கதைகள் உலாவின.இந்த காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் பகுதி பங்களாதேஸாக மாறியது முக்திபானி இயக்கங்களின் புரட்சிகர அணுகுமுறை மற்றும் இந்தியாவின் உதவியுடன்

..மூன்று இரண்டு பெருபான்மையாக இருந்த சிறிமாவோ அரசு சிலோன் என்பதை சிறிலங்காவாக மாற்றிக்கொண்டது மட்டுமன்றி உயர் பீடமாக இருந்த பிரித்தானிய ராணியின் சில சட்ட சரத்துக்களில் இருந்து விடுவித்து கொண்டு இலங்கை குடியரசாகிக்கொண்டது .அது மட்டுமன்றி பிரித்தானியாவின் சோல்பரி என்பரானால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை மாற்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி கொண்டது ..தமிழர்கள் அனுபவித்த கொஞ்ச நஞ்ச உரிமைகளும் இந்த சட்டத்தில் இல்லாமாகபட்டன என்று தமிழ் தலைமகள் குரல் கொடுக்க தொடங்கின...அந்த காலகட்டம் 1972ம் ஆண்டு (தொடரும்)

வாழ்க்கை வாழ்வதற்க்கே

#9 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,085 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 18 March 2012 - 09:31 PM

நல்ல விடயம் அரக்கன்........... உங்கள் முதல் பதிவில் பின் எழுதும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பதிவுகளுக்கான இணைப்புகளையும் வழங்கினால் வாசிக்கும் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு 'சாட்சி' யாக உங்கள் தொடர் வெளி வரட்டும். அது இன்னொரு விவாத வெளியைத் தோற்றுவிக்கட்டும்.

உங்கள் தொடர் வெற்றி அடைய நிர்வாகப் பிரிவில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தாரளமாகக் கேளுங்கள்

#10 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 18 March 2012 - 10:05 PM

நல்ல விடயம் அரக்கன்........... உங்கள் முதல் பதிவில் பின் எழுதும் ஒவ்வொரு அத்தியாயத்தின் பதிவுகளுக்கான இணைப்புகளையும் வழங்கினால் வாசிக்கும் பலருக்கு உதவியாக இருக்கும்.

ஈழப் போராட்டத்தின் இன்னுமொரு 'சாட்சி' யாக உங்கள் தொடர் வெளி வரட்டும். அது இன்னொரு விவாத வெளியைத் தோற்றுவிக்கட்டும்.

உங்கள் தொடர் வெற்றி அடைய நிர்வாகப் பிரிவில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்படின் தாரளமாகக் கேளுங்கள்


நிழலி அவர்கட்கு நன்றி ..நீங்கள் சொல்லும் இணைப்பு கொடுத்தால் நல்லது தான் எப்படி யாழ் இணையத்தில் கொடுப்பது என்று தெரியவில்லை ...உங்களால் அந்த உதவி செய்ய முடியுமானால் செய்யவும் நன்றி
வாழ்க்கை வாழ்வதற்க்கே

#11 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,085 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 18 March 2012 - 10:39 PM

நிழலி அவர்கட்கு நன்றி ..நீங்கள் சொல்லும் இணைப்பு கொடுத்தால் நல்லது தான் எப்படி யாழ் இணையத்தில் கொடுப்பது என்று தெரியவில்லை ...உங்களால் அந்த உதவி செய்ய முடியுமானால் செய்யவும் நன்றி


ஒரு திரியில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு தொடர் இலக்கம் இருக்கும். உதாரணமாக உங்கள் மூன்றாவது பதிவு 8 ஆவது post ஆக இருக்கு. அந்த 8 என்பது வலப்பக்க மூலையில் தெரியும். அதை அழுத்தினால் (Click பண்ணினால்) ஒரு link சின்ன சாளரத்தில் திறக்கும். அதை copy பண்ணி போடுங்கள்

Posted Image

Edited by நிழலி, 18 March 2012 - 11:11 PM.


#12 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,160 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 18 March 2012 - 11:09 PM

வணக்கம் அரக்கன்.

#13 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 18 March 2012 - 11:13 PM

நன்றி நிழலி உதவிக்கு ..நன்றி குமாராசாமி அவர்களே வணக்கமும் நன்றிகள்
வாழ்க்கை வாழ்வதற்க்கே

#14 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,567 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 19 March 2012 - 06:02 AM

இந்த புரட்சியை மழுங்கடிப்பதுக்கு உடனடியாக குண்டு வீசும் ஹெலிகொப்டரை இந்தியா அனுப்பியது அனுராதபுர மற்றும்


கொழும்பில் இந்தியா படையினர் காவலில் இடுபட்டிருந்தனர் என் கேள்விபட்டேன்...
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#15 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,911 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 19 March 2012 - 10:28 AM

நல்லதொரு திரி
ஆரம்பத்தில் என்ன நடந்தன? தமிழனது வழிகள் எவ்வாறு தடைப்பட்டன? அவன் ஏன் வன்முறையை தெரிவு செய்தான்? போன்றவற்றுக்கு பலரும் தெளிவு தேடும் நேரமிது. அதை தங்களது இத்திரிமூலம் எமது போராட்டம் பற்றிய ஆரம்ப வரலாற்றை அறிய முடியுமாயின் அது வரலாற்றுப்பொக்கிசமாக இருக்கும். தொடருங்கள்.

அதே நேரம் இதே வரலாற்றுடன்தான் நாமும் வளர்ந்தோம். எனவே எமக்குத்தெரிந்தவை வரும்போது நாமும் பெருகூட்டுவோம். அல்லது தெளிவுபத்துவோம்.

தெளிவு படுத்துவோம்

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#16 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 20 March 2012 - 02:35 AM

ஒரு வழிபோக்கன் திரும்பி பார்த்த அரசியல் திருக்கூத்துக்கள் -பாகம் -4


72 இல் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சட்டத்துக்கு பின்

1948 சுதந்திரத்துக்கு கிட்டிய காலத்தில் உருவாக்கப்பட்ட சோல்பரி சட்டத்தின் படி இலங்கையின் அதி உயர் பீடம் இராணிக்கு வழங்கபட்டிருந்தது .சட்ட நீதி போன்றவற்றிலும் ஆக கடைசியான அப்பீல் பிரித்தானியாவிடம் இடம் இருந்தது . இதை மாற்றி சிறிலங்காவிற்க்குள் எல்லாவற்றையும் உயர் பீடமாக்கி கொண்டார்கள் .மாவிட்டபுரம் கோயில் உள் நுழைவு போராட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமாக அடங்கா தமிழர் சுந்தரலிங்கம் பிரித்தானியாவில் உள்ள ராணியிடம் அப்பீல் செய்ய போவதாக பேசப்பட்டது இதை உடனடியாக இல்லாமால் ஆக்கவேண்டும் நோக்கில் அவசரம் அவசரமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்வோரும் உளர்

.இந்த சட்டத்தின் படி சிறிலங்கா குடியரசு மே மாதம் 22 திகதி உருவானது .இதை சிங்கள தரப்பு கோலகாலமாக கொண்டாடியது .இதில் நடைபெற்ற வைபங்களை தமிழர் பிரநிதிகள் பகிஸ்ரித்ததுடோ மட்டுமல்லாது கரி நாளாக பிரகடப்படுத்தியது. இதற்கு காரணம் இவ்வளவு காலமும் சோல்பரி சட்டத்தில் இருந்த சிறுபான்மையிருக்கு உரித்தான பாதுகாப்பான சரத்துக்கள் நீக்கப்பட்டு இருந்தன. இலங்கை பெளத்த நாடு என பிரகனபடுத்த பட்டிருந்தது

சிறிமா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் ஆதரிக்கும் தமிழர்கள் எவரும் துரோகிகள் என்ற கண்ணோட்டத்துனூடனே தமிழர் தரப்பினரால் பார்க்கபட்டன.அப்போதைய தாபல் தந்தி அமைச்சர் குமாரசூரியர், யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றரை குறி வைத்து உரும்பிராய் சேர்ந்த யாழ் இந்து கல்லூரி மாணவன் சிவகுமார் இயங்கி கொண்டிருந்தார் ..துரையப்பா ,சந்திரசிறி போன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தினார் ...தாக்குதலில் துரையப்பாவுக்கு எதுவும் சேதம் ஏற்படவில்லை .அவருடைய காருக்கு தான் சேதம் ஏற்பட்டது .இன்ஸ்பக்டர் சந்திரசிறி மீது நடத்திய தாக்குதல் காரணமாக தேட படவேண்டியவராக மாறுகிறார் ...தமிழ் தமிழ் என உசுப்பேத்திய தமிழரசு கட்சியின் எம்பியாக சிவகுமாரின் தொகுதியில் இருந்த கதிரேவற்பிள்ளையிடம் நிதி உதவி கேட்கபட்டதாம் அதற்கு அவரிடம் இருந்து உதவி நிராகரிக்கப்பட்டதாம்

நிதி வளத்துக்காக கோப்பாய் வங்கியை கொள்ளை அடிக்க சென்ற பொழுது பொலிசாரல் மடக்கி பிடிக்க முற்பட்ட பொழுது தப்பியோட முயன்று சயன்ட் அடித்து இறக்கும் நிலை ஏற்பட்டது .சிவகுமாரின் தாய் தந்தையர் கால காலமாக தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளர்கள். சிவகுமாரின் இந்த இறப்பு இளைஞர் சமுதாயத்தை உசுப்பேத்தி தமிழரசு கட்சியினர் தமக்கு சாதகமான அரசியலை தொடர்ந்து செய்வதற்க்கு வசதியாக இருந்தது.

முதல் உலக தமிழராட்சி மகாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இரண்டாவது தமிழாரட்சி மகாநாடு சென்னையில் நடைபெற்றது. மூன்றாவது தமிழராட்சி மகாநாடு பிரான்சில் உள்ள பாரிஸில் நடைபெற்றது. நான்காவது தமிழராட்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு மகாநாடு குழுவினர் தீர்மானித்து இருந்தனர்.இதற்கு அப்போதைய அரசாங்கம் போதிய ஆதரவு கொடுக்காத்து மட்டுமன்றி பல முட்டுகட்டைகளை நிபந்தனைகளை விதித்தது.விழாவை நடத்துவதில் தனிநாயகம் அடிகள் அண்மை காலத்தில் யாழ் உப வேந்தராக இருந்த வித்தியானந்தன் இருந்தனர்.தமிழ நாட்டில் இருந்து அரசியல் ஆர்வலர்கள் வருவதை கட்டு படுத்தியது .குறிப்பாக அப்போதைய உலக தமிழர் இளைஞர் பேரவை தலைவராக இருந்த ஜனார்த்தனத்துக்கு மகாநாட்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.சென்னையில் நடைபெற்ற தமிழராட்சி மகாநாடு ஊர்திகளின் ஊர்வலத்தை தியேட்டர்களில் திரைபட இடைவேளைகளில் அந்த நேரம் காட்டுவார்கள்.பார்த்திருக்கிறேன் பார்க்கு பொழுது கண்கொள்ள காட்சியாக இருக்கும் .அது போல சென்னை ஊர்திகளின் ஊர்வலத்துக்கு வராவிட்டாலும் மகாநாடு நடைபெறும் கடைசி நாளுக்கு முதல் நாள் ஊர்தி ஊர்வலம் யாழ் நகரை சுற்றி வலம் வந்தது கண் கொள்ள காட்சியாக இருந்தது.மகாநாட்டின் கடைசி நாள் கூட்டம் வீரசிங்க மண்டபத்தில் உள் நடைபெறாமால் வெளியில் நடத்துவதற்க்கு தீர்மானித்து இருக்கவேண்டும் அதற்க்கு பொலிஸ் தரப்பிலோ மாநகரசபை தரப்பிலோ போதிய ஒத்துழைப்பு கொடுக்கபடமால் இருந்திருக்க வேண்டும். அதை விட அனுமதி மறுக்க பட்ட ஜனார்தனம் ஏதோவகையில் தமிழ் நாட்டில் இருந்து இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறார் என்று பொலிஸ் தரப்பு மோப்பம் பிடித்திருக்க வேண்டும்.

கடைசி நாள் வைபவத்தில் ஒரு முஸ்லீம் பேராசிரியர் பேசி கொண்டிருக்க தவறுதலாக அவர் தான் ஜனார்த்தனம் என்று கைது செய்ய முனைந்த பொழுது ஏறப்பட்ட களேபரத்துக்கு பின் ஏற்பட்ட பொலிஸ் தாக்குதலில் சன நெரிசலில் சிக்குண்டு மின்கம்பிகளுக்குள் அகப்பட்டும் மக்கள் இறந்தனர் .அப்பொழுது யாழ் மேயராக இருந்தவர் அல்பிரட் துரையப்பா

Posted Image


மேலே உள்ள படத்தில் உள்ளவர் தான் அந்த ஜனார்த்தனம்


துரையப்பாவை அரசாங்கத்துக்கு ஆதரவனாவர் என்று தமிழர் தலைமைகளால் துரோக பட்டம் கொடுக்கப் பட்டாலும் யாழ் மாநகரத்துக்குட்பட்டவற்றில் வாழும் உழைக்கும் மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார் எனவும் அவரை கதாநாயகனாக கணிக்கும் பிரிவினர் இருந்து தான் உள்ளார்கள் .யாழ் நகரத்தின் மையத்தில் இன்றும் அமைந்துள்ள நியூ மார்க்கட் கட்டிடத்தை உருவாக்கின பங்கில் துரையப்பா இருப்பதினால் அதை பாரட்டுவோர் சிலர் உள்ளனர்.


துரையப்பா ஒரு ஸ்தீரிலோலன் அவரை விட்டு விட்டு டாக்டரான அவரது மனைவி மலேசியாவுக்கு சென்று விட்டதகாக கூறுவர் .சிறிமாவின் மகன் அநுரா பண்டராநாயக்கா அந்த காலக்கட்டத்தில் இளைஞன் அதோடை ஒரு பிளே போய் அவருக்கு யாழ்ப்பாணம் வரும் போது எல்லாம் தமிழ் பெண்களை ருசி பார்த்தால் என்ன என்று எண்ணம் வரும் போலும் .அந்த நாட்களில் பத்திரிகைகளில் கிசு கிசு செய்திகளாக வந்தது அநுரா குடித்துவிட்டு யாழ் பெரியாஸ்த்பரி அண்மையிலுள்ள தாதி பயிற்சி கல்லூரி மதிலையும் யாழ் பிரபல பெண்கள் கல்லூரி விடுதி மதிலையும் தாண்ட முற்பட்டார் என்று .இதற்க்கு அவசியம ஏற்படாத வகையில் துரையப்பா அநுராவுக்கு மாமா வேலை பார்த்துள்ளார் என்று கூறுவர் .குறிப்பாக இலங்கையில் வெளியான தமிழ திரைபடத்தின் நடித்த தென்னிந்தய நடிகை போல் தோற்றத்தை கொண்ட அவரை அநுராவுக்கு தீனியாக வழங்கினார் துரையப்பா என்று கூறுவோரும் உளர்.ஆனால் இச்செய்தியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கியது ஏனெனில் அநுரா ஓரின சேர்க்கை ஆர்வலர் அதனால் அவர் திருமணம் செய்யமாலே கடைசி காலம் மட்டும் இருந்தவர் .இரு பால் சேர்க்கை விருப்பம் உள்ளோரகளும் இருக்கிறார்கள் என்று பின்னர் வாசித்து இருக்கிறேன்

துரையப்பாவை முடிப்பதற்கு அப்பொழுது அங்கு அங்கு சிறு சிறு இளைஞர் குழுக்களில் இருந்தவர்கள் பல முனைகளில் பல பேர் முயன்று கொண்டிருந்தனர்.

பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் வழியில் சுட்டு கொல்லப்பட்டார்... அரியாலையை சேர்ந்த கிருபாகரன் வல்வெட்டித்துறைய சேர்ந்த கலாபதி பொலிஸில் மாட்டி கொண்டதை தொடர்ந்து பிரபாகரன் என்பவர் தான் சுட்டுக் கொண்டார் பொலிஸ் தரப்பு அறிந்து கொண்டது.

அன்று தமிழ் பிரதேசங்களில் போட்டி கட்சிகளாக போட்டி போட்டு கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சி மற்று இதொக போன்றவை இணைந்து வல்வெட்டித்துறையில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர் வீட்டில் தமிழ்ர் விடுதலை கூட்டணி கட்சியை உருவாக்கினார்கள்

வட்டுக்கோட்டை தீர்மான பிரகடனத்தை செய்தார்கள் தமிழர் விடுதலை கூட்டணியர் செய்த ஆண்டு 1976(தொடரும்)

Edited by அரக்கன், 20 March 2012 - 12:15 PM.

 • மோகன் and தமிழ் சிறி like this
வாழ்க்கை வாழ்வதற்க்கே

#17 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,829 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 20 March 2012 - 03:34 AM

ஆரம்பகால அரசியல். அதுகும்... படங்களுடன்.
அவசரப்பட்டு எழுதாமால்..... ஆற அமர யோசித்து, பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து எழுதுங்கள். அரக்கன்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#18 Elugnajiru

Elugnajiru

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,345 posts
 • Gender:Male
 • Location:காலப்பொதுவெளி
 • Interests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.

Posted 20 March 2012 - 07:33 AM

நல்ல பதிவு, ஆனால் நீங்கள் மிகவும் வேகமாகப் போகின்றீர்கள் எதோ தெரியாத்தனமாக தொடங்கிற்ரன் முடிச்சுப்போடவேணும் என்பதுபோல்.

மேலும் சிவகுமார் அவர்கள் கோப்பாய் கதிரவேல் அவர்களிடம் உதவி கேட்டது உண்மை, மற்றும் சாவகச்சேரி நவரத்தினம் அவர்களிடமும் உதவியை நாடினார் அதற்கு அவர் கூறுய பதில் இந்தியாவுக்குப் போங்கோ அங்கு நான் ஏதாவது உதவி செய்ய முயர்சிக்கிறேன் என. அவ்வேளைகளில் அல்பிரட் துரையப்பா சிவகுமாரனை மிகவும் அடையாளம் கண்டே இருந்துள்ளர், அதாவது யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள யாழ் வாடிவீட்டுக்கு துரையப்பா மாலை வேளைகளில் வருவது வழக்கம், அங்குதான் சிவகுமாரன் அவரைக் கொலைசெய்ய இடத்தைத் தேர்ந்தெடுத்தார் விடையம் தோல்வியடைந்து உடனடியாக உர்ம்பிராய் திரும்பிய சிவகுமார் தனது மாமனாரை எந்தவிதக் கேள்விமுறையுமோ அல்லது காரணமோ இல்லாது அடித்துள்ளார் அவர் கோவத்தில கோப்பாய் காவற்துரைக்குப் போய் சிவகுமார்மீது முறைப்பாடு கொடுத்துள்ளார், எதிர்காலத்தில் எதாவது சிக்கலாக வருமாகவிருந்தால் வழக்கில் தப்பிக்கொள்ள . மேலும் யாழ் கோவில் வீதியில் அப்போதைய சிங்கள் காவற்துறை அதிகாரி சந்திரசேகரா தங்கியிருந்தார் அதாவது யாழ் கைலாசபிள்ளையார் கோவிலியிருந்து நல்லூர்ப்பக்கமாக ஐந்து அல்லது ஆறாவது வீட்டினில் என நினைவிருக்கின்றது அதுவும் ஒரு மாலைவேளை தாக்குதல் நடந்தது கைக்குண்டுத்தாக்குதலின் பின்பு தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சிவகுமாரன் சுட முயன்றார். அனால் அக்கைத்துப்பாக்கி அவ்வேளையில் வேலைசெய்யவில்லை (பதட்டமோ என்னவோ தெரியாது) அழித்தொழிப்பு முயற்சி தோல்வியடைந்ததும் நேரடியாக வீட்டிற்குபோய் பின்வளவில நிண்டு கைத்துப்பாக்கியை மீண்டும் இயக்கிப்பார்த்திருக்கிறார் முதலாவது கிளிக்கர் தட்டும்போதே குண்டு சீறிப்பாய்தது. சிவகுமாரன் வீட்டிற்குப் போனதும் அவருக்கு எதிர் வந்த அவரது தாயார் முதலில் கேட்டகேள்வி "என்னடாப்பா என்னமாதிரிப் போச்சு" என சந்திரசேகரா மீதான தாக்குதல் திட்டத்தை அவரது தாயார் முதலே அறிந்திருந்தார். அடுத்த நாள் சிவகுமார் தனது நண்பருடன் கைலாசபிள்ளையா கோவிலடிக்குப் போயிருக்கிறார் சம்பவம் நடந்த இடத்தினைப்பார்க்க அந்த இடத்துக்கு இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை சிறிதுனேரத்துக்கு முன்புதான் இரண்டாவது தடவையாக வந்துவிட்டுப் போனவர். பின்பு சிவகுமாரது நண்பன் "முல்லை " கைதின்பின்னதான விசாரணயில் வஸ்தியாம்பிள்ளை முல்லையிடம் கூறியிருக்கிறார். முல்லையைக் கைது செய்தது பஸ்தியாம்பிள்ளை அவருடன் கூஅ இருந்தது ரஞ்சன் எனும் புலனாய்வு அதிகாரி. பூலோகசிங்கம் எனும் ஒருவர் சிங்களத்துக்கு விசுவாசமானவர் கனடா இலங்கைத் தூதரகத்தில் இரண்டாம் நிலை அல்லது முதலாம் நிலை அதிகாரியாக வேலை செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவர் முல்லையின் தய்மாமனாக இருக்கலாம்.

தமிழர்விரோததேசம் இந்தியா, சர்வதேசரீதியில் தமிழர்தரப்பிற்கு ஏற்பட்டுவரும் நியாயபூர்வமான ஆதரவையும், தமிழீழ விடுதலக்கான ஆதரவின் நியாயபூர்வங்களையும் நீர்த்துப்போகச்செய்வதற்காகத் தமிழர் தாயகப்பிரதேசங்களில் சிறுதாக்குதல்கள் மற்றும் வன்செயல்களில், தனது கூலிப்படைகளை ஈடுபடுத்தும் முயற்சியை முன்னெடுக்க ஆயத்தப்படுத்துகிறது.

 

இதில் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவும்.


#19 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,567 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 20 March 2012 - 11:39 AM

அரியாலையை சேர்ந்த இன்பமும்

இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#20 அரக்கன்

அரக்கன்

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Male

Posted 20 March 2012 - 12:04 PM

//எதோ தெரியாத்தனமாக தொடங்கிற்ரன் முடிச்சுப்போடவேணும் என்பதுபோல்.//

#
நீங்கள் சொல்வது தான் உண்மை போல என் மனகிடங்கு சொல்லுது :lol:...மற்றுமு உங்கள் விவரணமான கருத்துக்கு நன்றி ...நான் என்ன செய்யிறது எனக்கு தெரிந்த அல்லது கேள்விப்ட்டதை தானே சொல்லமுடியும் ....நன்றி
வாழ்க்கை வாழ்வதற்க்கே


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]