இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....
நன்றி உங்கள் தகவல் சரி ...அரியாலை சேர்ந்த இன்பம் என்ற இடத்தில் ..அரியாலை சேர்ந்த கிருபாகரன் என்று வர வேண்டும் இப்ப திருத்தி இருக்கிறேன்
Posted 20 March 2012 - 12:14 PM
இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....

Posted 20 March 2012 - 12:26 PM
இன்பம் நவாலி தான்.இன்பம் அரியாலையை சேர்ந்தவரா? நவாலியை சேர்ந்தவர்....சாத்திரியார் மேடைக்கு வரவும்.....
Posted 21 March 2012 - 12:24 AM
ஆரம்பகால அரசியல். அதுகும்... படங்களுடன்.
அவசரப்பட்டு எழுதாமால்..... ஆற அமர யோசித்து, பல்வேறு நிகழ்வுகளையும் தொகுத்து எழுதுங்கள். அரக்கன்.
Edited by I.V.Sasi, 21 March 2012 - 12:27 AM.
Posted 23 March 2012 - 07:35 AM
நன்றி உங்கள் தகவல் சரி ...அரியாலை சேர்ந்த இன்பம் என்ற இடத்தில் ..அரியாலை சேர்ந்த கிருபாகரன் என்று வர வேண்டும் இப்ப திருத்தி இருக்கிறேன்
Posted 23 March 2012 - 10:52 PM
ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழத்தை அமைப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணிப்போம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இதுவே பாதுகாப்பானதாக அமையும்.''
வட்டுக்கோட்டை தீர்மானம் அதே காலத்துக்கு கிட்டத்தட்ட தான் புதிய தமிழ் புலிகள் செட்டி என்பவரின் தலைமையில் கீழ் குழுவாக இயங்கி வந்த பிரபாகரனும் மற்றவர்களும் சேர்ந்து தமிழ் ஈழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை தொடக்கினார்கள்.புதிய தமிழ் புலிகள் தலைவராக இருந்த செட்டி பிற்காலத்தில் கொள்ளை போன்ற விடயங்களுக்காக சுட்டு கொல்லப்பட்டதை அறிந்திருக்க கூடியதாயிருந்தது . இந்த செட்டி விடுதலை புலிகளில் இருந்த செல்லக்கிளி டெலோ இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்துக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.
தமிழ விடுதலை புலிகளை உருவாக்கியவர்கள் இறுக்கமான கட்டுபாடுகளை சட்டத்திட்டங்களை வகுத்து கொண்டு தமிழ் ஈழ இலட்சியத்துக்காக இயங்க வேண்டுமென்று பிரகடனபடுத்தி கொண்டனராம் .அதற்க்காக மது அருந்துதல் காதல் செய்தல் இயக்கத்தை விட்டு வெளியேறி வேறு இயக்கத்துக்கு செல்வது போன்றவற்றிக்கு அதி உட்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று தீர்மானித்து கொண்டார்களாம் .இயக்கத்தை இறுக்கமாக வழிநடத்த மத்திய குழு போன்றவற்றை உருவாக்கி மிக நம்பக தன்மையான லட்சிய வேட்கையுடைய மேலே உள்ள கட்டுபாடுகளை இதய சுத்தியுடன் கடைப்பிடிக்கூடியவர்கள் மட்டுமே உள்வாங்கி மிக குறுகிய எண்ணிகை உடையவர்களாக மட்டுமே இருந்தார்களாம்.வேறு விதமாக சொன்னால் எவரையும் விரைவில் உள் வாங்குவதை தவித்து கொண்டிருந்தார்களாம்.பிற்காலத்தில் இயக்கங்கள் தமிழ் நாட்டில் இருந்த பொழுது ஒரத்த நாட்டில் நடந்த பண்ணையார் கொலையில் சம்பந்த பட்ட விச்சு அண்மையில் புத்தகம் வெளி\யிட்ட ஜயர் ,இலங்கை வானொலியில் பணியாற்றி பிற்கால இயக்களில் ஒன்றான தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவைக்கு ஆலோசகராக இருந்த நாகராசா போன்றவர்கள் அக்காலங்களில் மத்திய குழுவில் இருந்ததாக பேசிக் கொள்வர்.
வட்டுக்கோட்டை பிரகடனம் செய்த தமிழர் விடுதலை கூட்டணியினர் தாங்கள் பிரகடனம் செய்த தமிழ் ஈழம் சம்பந்த மாக யாழ் பஸ் நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த பொழுது கைது செய்யப்பட்டனர் .துண்டு பிரசுரம் செய்தவர்களில் தந்தை செல்வாவை தவிர மற்றவர்களான சாவகச்சரி நவரத்தினம் ,அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் துரைரத்தினம் போன்றவர்களை தேச துரோகம் செய்ததாக கூறி அவசர கால விதிகள் கீழ் கைது செய்து சிறையில் தள்ளினர் .
ட்ரயல் அற் பார் வழக்கில் மேலே உள்ள படத்தில் குற்றுவாளி கூட்டில் அமிர்தலிங்கத்தை பார்க்கலாம்
இவர்கள் பற்றிய வழக்கு மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் வெளிநாட்டு சட்ட பிரமுகர் பார்வையாளர்ளாக இருக்க ட்ரயல் அற்பார் அடை மொழியொடன் நடை பெற்றது ..அந்த நாட்களில் நடைபெற்ற வழக்குகளில் பிரபலமான வழக்காக கொள்ளப்படுகிறது.இந்த வழக்கில் இவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகளாக முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் தமிழரசுகட்சி பிரமுகரமான திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தையார்). செல்வநாயகம், ஜீ ஜீ பொன்னம்பலம் வாதிட்டனர் .ட்ரயல் அற்பார் வழக்கின் தீர்ப்பில் அவசர காலவிதி சரியான முறையில் அமைக்கப்படவில்லை அதனால் அதனூடாக அமைக்க பட்ட இந்த ட்ரயல் அற் பார் என்ற வழக்கு மன்றம் செல்லாது என்று சட்ட நுணுக்கத்துடன் வாதாடினது மூலம் கைது செய்ய பட்டவர்கள் விடுவிக்க பட்டதுடன் ஒரு அரசியல் வெற்றியாகவும் தமிழர் தரப்பினால் பார்க்கப் பட்டது.தமிழர் அரசியல் சம்பந்தமாக எந்த விதமான வழக்கில் இதுவரை ஆஜராகாத ஜீஜீ இதில் கடைசி நேரம் ஆஜரானது குறிப்பிடதக்கது.இதே காலகட்டத்தில் தான் கலைஞர் கருணாநிதி செய்த ஊழல் பிரபல வழக்கான சன்சோனி கமிசன் போன்றவற்றில் இருந்து காப்பற்ற ஜீஜீ ஆஜாராகிறார் என்று பத்திரிகைகளில் வெகுவாக பிரபலபடுத்த பட்டிருந்தது
பெரிய தேசிய முற்போக்கு அரசாங்கத்த்தை அமைப்பதில் புரட்சி செய்வதாக பெரிய தம்பட்டம் அடித்து கொண்டு செயல் பாடுகளை செய்த சிறிமா அரசாங்கம் அப்படி அதை நோக்கி போக முடியாத நெருக்கடி ஏற்பட்டது .நிதியமைச்சராக இருந்த என் எம் பெரேரா மாற்றப்பட்டு பீலிக்ஸ் டயஸ் பண்டராநாயக்காவுக்கு வழங்கபட்டு நாட்டின் பொருளாரதிட்டத்தை பழைய பாணிக்கு திருப்பினர் . இது சிறிமா அரசாங்கத்தின் பாரளுமன்ற ஆட்சி காலத்தின் கடைசி காலமாகும் . இந்த காலகட்டத்தில் தான் முற்போக்கு தமிழ் இலக்கிய மகாநாடு ஒன்று நடைபெற்றது .அரசாங்கத்தின் தமிழ் இலக்கிய ஆதரவாளரான இலக்கிய பிரமுகர் பிரேம்ஜி தலைமையில் கைலாசபதி சிவத்தம்பி ஆதரவு இருக்க மிக அரிதாகவே தமிழர்களின் கூட்டம் நடக்கும் மிக இறுக்கமான பண்டராயக்கா சர்வதேச மண்டபத்தில் வெகு கோலாலமாக நடைபெற்றது.இதில் முற்போக்கு இலக்கியவாதிகள் என்று அழைக்கப்ட்டவர்கள் மட்டுமே அழைக்க பட்டு பங்கு பெற்றி இருந்தனர்..
இதே நேரத்தில் தமிழ்ஈழ விடுதலை புலிகள் தலை மறைவு இயக்கத்தை சுதந்திரமாக ஆரம்பித்து இருந்தாலும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையின் ஆலோசனையை கேட்டு நடந்து கொண்டார்கள் என்று கூறுவர் .அப்போதைய எகிப்திய இளம் அதிபர் கடாபி நாடுகளில் நடைபெறும் தேசிய விடுதலை போரட்டங்களில் ஆதரவு வழங்கி கொண்டிருந்தார் . அந்த அடிப்படையில் அமிர்தலிங்கத்துக்கு கடாபிக்கும் நட்பு ஏற்பட்டதாக கூறுவர் .அதன் மூலம் தலைமறைவு இயக்கத்துக்கு உதவி செய்ய முனைந்தார் என்றும் கூறுவர்.ஆரம்ப காலங்களில் நடைபெற்றதை பார்க்கும் பொழுது தமிழர் விடுதலை கூட்டணி தலைமை கூறிய ஏவலை நிறைவேற்றவேண்டியவர்களாக இருந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. என்றாலும் அக்காலத்தில் தமிழ் விடுதலை புலிகளால் அறிக்கை பரவலாக விநியோகிக்கப்பட்டிருந்தது அதில் ஒரு வாசகம் இருந்தது நிபந்தனையற்ற குறுகிய காலகட்டத்துக்கு அரசியல் தேவை கருத்து கொண்டு தமிழர் விடுதலை கூட்டணிக்கு தங்கள் ஆதரவு இருக்கும் என்று .துண்டு அறிக்கை வெளியிட்ட காலகட்டங்களில் ஒருசில வெகுஜனத்தினரின் பார்வையில் உப்பிடி ஒரு தலை மறைவு இயக்கம் இல்லை எனவும் வேறு சில பொது மக்களின் பார்வையில் பொடியள் என்று அழைக்கப்பட்டு உச்ச திறமை வாய்ந்த சாகசம் நிறைந்த அதி உயர் மனித நிலையில் வைத்து மகிழ்ந்து மிகைபடுத்தி கொண்டார்கள்.
சிறிமா அரசாங்கம் 47 தமிழ் இளைஞர்களை பல்வேறு காரணங்களை சொல்லி சிறையில் நீண்ட காலம் வைத்திருந்தது .தனது பதவி காலம் முடிவடைய அண்மிக்க இன்னொரு பொது தேர்தல் வர இருக்கும் தருணம் பார்த்து அவ் இளைஞர்களை விடுதலை செய்தது .அதில் காசி ஆனந்தன் மாவை சேனாதிராசா போன்றோரும் அடக்கம் ....1977 பொது தேர்தல் அண்மித்தது ...தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடிக்க தொடங்கின........
[Edited by அரக்கன், 23 March 2012 - 11:29 PM.