Jump to content

Orumanam
Photo

பாமினி

 • Please log in to reply
52 replies to this topic

#1 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 March 2012 - 07:12 AM

" என்ன கண்ணன் இங்கை தனிய இருக்கிறியள் ?"

எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன . என்னிடம் வந்தது பாமினியே .

"வா.....வா.... பாமினி உன்னைத் தான் யோசித்துக் கொண்டிருந்தன் ".

கலகலவென்று கள்ளமில்லாது சிரித்தாள் பாமினி .ஏனோ தெரியவில்லை போனகிழமை பாத்ததை விட இந்தமுறை கொஞ்சம் தெளிவாக இருந்தாள் .

"நான் வீட்டடியால வரக்கை உங்கடை தங்கைச்சி சொன்னா நீங்கள் இங்கையெண்டு , அது தான் சும்மா பம்பலடிக்க வந்தனான் ".

பாமினியும் எனக்குப் பக்கத்தில் கேணிகட்டில் இருந்துகொண்டாள் .

"பாமினி எனக்குக் கொஞ்சம் கதை சொல்லன்".

"என்னகதை ?"

"இல்லை , முக்கியமான கட்டங்களில நான் இங்கை இல்லை . நீ வன்னீல இருந்தனி , இங்கையும் இருந்தனி , நீயாவது உள்ளதைச் சொல்லன் எனக்கு . ஏன் எங்களுக்கு இப்பிடியெல்லாம்.......... ? இந்தியன் ஆமி நிக்கேக்கை என்ன நடந்திது "?

அவள் முகம் சிறிது இறுகியது . சிரிப்பு மெதுமெதுவாக அவளிடம் விடைபெற்றது . நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்பட்டது .

"அதுதான் கண்ணன் எனக்கும் விளங்கேல . ஆனால் , இப்ப கால ஓட்டத்தை வைச்சு கூட்டிக்களிச்சுப் பாத்தால் எங்களுக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் மண்டைக்கனத்தால எட்டி உதைச்சுப்போட்டம். இந்தியாக்காறன் எங்களுக்கு ஒரு மாநில அரசாங்கத்தை எடுக்கச் சொல்லி அப்ப ஒரு பெரிய கூட்டம் முத்தவெளில நடந்திது . அதில பேசின பத்மநபா சொன்னார் < இது எங்களுக்கு கிடைச்ச சந்தர்பம் . இதை அடிப்படையா வச்சு எங்கடை போராட்டத்தை நடத்துவம் . எங்களுக்குப் பதவி வேண்டாம் . நீங்களே எடுங்கோ . எங்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு > . ஆனா , நாங்கள் என்ன சொன்னம் < ஈப்பி யை இந்தியா வாங்கிப்போட்டுது . நாங்கள் போராட்டத்தை விடேலாது > எண்டு நெம்பினம் . அப்ப வடக்கு கிழக்கு இணைஞ்ச பெரிய நிலப்பரப்பு எங்களிட்டை இருந்திது . ஆனா , இண்டைக்கு............... ஒரு சென்ரிமீற்ரர் நிலம் கூட எங்களிட்டை இல்லை ".

பாமினியின் குரல் உடைந்து கமறியது .அவள் அழத்தொடங்கினாள் . நான் அவளை அழவிட்டேன் .

" எத்தினை , இழப்புகள் , தியாகங்கள் , நாங்கள் உருவாக்கின போரியல் முறைகள் , ஒருகாலத்தில பால்றாஜ் எண்டாலே ஒண்டுக்குப் போனவங்கள் , இண்டைக்கு......... எல்லாமே மூண்டு மாசத்தில முடிஞ்சு போச்சுது கண்ணன் . இந்தியன் ஆமி பெரிய திறம் எண்டு சொல்லேல . உலகத்தில இருக்கிற ஆமியள் செய்யிற வேலையளைத் தான் அதுவும் எங்களுக்குச் செய்தது . ஆனா அவங்களிலையும் கனக்க நல்லபேர் தமிழ் ஆக்கள் மெட்றாஸ் றெஜிமன்ட் இல இருந்தாங்கள் . எங்கடை சனம் படுற கஸ்ரத்தை பாத்து இரங்கினாங்கள் . அப்ப இங்கையும் ஒருக்கா சணல் அடி நடந்திது . இந்தியன் ஆமி உரும்பிராய் சந்தியால கோப்பாய்க்கு வாறான் . இந்தக் கேணியடில , அங்கால குளறியர் வீட்டு புளியமரத்தடில , எல்லாம் இயக்கப்பெட்டையள் குவிஞ்சு நிண்டு அடிக்கிறாளவை. மேல தும்பி பறக்குது . கோப்பாய் ரணகளமாய் போச்சுது . நாங்கள் இப்படியே தரவைக்கால அங்கால கைதடிக்க போட்டம் . நாங்கள் தரவையைக் கடக்கவே எங்களுக்கு உயிர் போட்டு வந்திது . பேந்து நாங்கள் ஆடு மாடுகளைப் பாக்கவந்தால் , கோப்பாய் சந்தில இருந்து வாசிகசாலை வரைக்கும் ஒரே செத்த சனங்களின்ர சவங்கள் புழுத்து நாறுது . எல்லாம் வயசு போன சனங்கள் .பிறகு எல்லாரும் சேந்து கூட்டிஅள்ளி எரிச்சம் . அப்ப யோசிச்சன் இவங்களுக்கு குடுத்துத் தான் கலைக்க வேணும் எண்டு . நாங்கள் கைதடில நிக்கேக்கை அடுத்த கூத்து நடந்திது".

என்மனம் உலைகளமாகியது . என்னையறியமல் என் கண்ணில் நீர் பொட்டுகள் எட்டிப் பாத்தன .

"பாமினி ஒரு சிகரட் பத்தப்போறன் , குறை இனைக்காதை ".

பாமினி வெறுமையாகச் சிரித்தாள் . நான் அவளின் அனுமதியில்லாமலே சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தேன் . என் வாயில் இருந்து , எனது மன வெக்கை புகையாகச் சீறிப் பாய்ந்தது .

"சொல்லு பாமினி".

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர் . கடைசீல இயக்கம் இவரைப் பாவிச்சுப் போட்டு , நுணாவிலுக்கை வைச்சு போட்டுத்தள்ளிப் போட்டாங்கள் . கைதடில எங்களுக்கு சனி தொடங்கீச்சுது . நாங்கள் சாவகச்சேரி பக்கம் ஓடத்தொடங்கினம் .............

"வேண்டாம் கண்ணன் என்னால ஏலாமல் இருக்கு".

அழுகையுடன் பாமினி சொன்னாள் . இருள் படரத்தொடங்கியிருந்தது . தூரத்தே மோட்டச்சைக்கிள் ஒலி கேட்டது . எங்களை நோக்கி அண்ணை வந்து கொண்டிருந்தார்.எங்களிடம் கிட்ட வந்த அண்ணை என்னை வீட்டை வரும்படி சொன்னார் . நான் பாமினியிடம் விடைபெற்றேன் .

Edited by கோமகன், 15 March 2012 - 07:21 AM.

 • DAM likes this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

ninaivu-illam

#2 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 15 March 2012 - 08:13 AM

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் கோமகன்?...பெடியங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் வீணாக்கிப் போட்டார்கள் என்டா? அல்லதி ஈப்பி ரொம்ப நல்லம் அவர்களை நம்பி இருக்கலாம் என்டா?...இதை 2009 ஆம் ஆண்டுக்கு முதல் சொல்லி புலிகளுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருக்கலாம்...ஏற்கனவே இணைத்த கதையின் ஒரு பகுதியினை திருப்பி இணைப்பதில் ஏதோ உள் குத்து உள்ளது என நினைக்கிறேன்...யூ ரூ கோமகன்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#3 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,567 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 15 March 2012 - 08:39 AM

அப்ப மேஜர் குமார் எண்டு இந்தியன் ஆமீல இருந்தவர் . எங்கடை சனத்துக்கு தன்ர பதவியைப் பாவிச்சு எவ்வளவோ செய்தார் , இயக்கத்துக்கும் செய்தவர்
அப்ப தொடங்கிய இந்தியாவின் முயற்சி முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்துள்ளது
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#4 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,923 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 15 March 2012 - 09:25 AM

:( :( :( :( :( :(

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#5 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 March 2012 - 10:13 AM

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் கோமகன்?...பெடியங்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் வீணாக்கிப் போட்டார்கள் என்டா? அல்லதி ஈப்பி ரொம்ப நல்லம் அவர்களை நம்பி இருக்கலாம் என்டா?...இதை 2009 ஆம் ஆண்டுக்கு முதல் சொல்லி புலிகளுக்கு அரசியல் வகுப்பு எடுத்திருக்கலாம்...ஏற்கனவே இணைத்த கதையின் ஒரு பகுதியினை திருப்பி இணைப்பதில் ஏதோ உள் குத்து உள்ளது என நினைக்கிறேன்...யூ ரூ கோமகன்

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .
 • Thumpalayan and தப்பிலி like this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#6 BLUE BIRD

BLUE BIRD

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,774 posts
 • Gender:Male
 • Location:canada
 • Interests:watching news,need a freedom

Posted 15 March 2012 - 12:35 PM

ஆம்! விடுதலைப்புலிகள் தவறான பாதையில் திசை திருப்பப்பட்டார்கள் இது தான் உண்மை.அவர்களுக்கு தேவையான நேரத்தில் பணம் போய் சேரவில்லை,சரியான சந்தர்பங்களில் தேவையான ஆயுதங்கள் அல்லது அதற்கான ரவைகள் கிடைக்கவில்லை.போர் நிறுத்தகாலத்தில் பணப்பற்றாக்குறையால் போராளிகளை வீடுகளுக்கு அனுப்ப நேர்ந்தது.ஒரு சில கட்டத்தில் போர் முனையில் இருந்த போராளிகளுக்கு சாக்கிலேட் அனுப்ப பட்டது.அச் சந்தர்பத்தில் பெண் போராளிகள் எமக்கு சாக்கிலேட்டில் விட உள் ஆடைகள் தான் முக்கியமாயுள்ளது.அதனை முதலில் வழங்குங்கள் என்ற கேள்வி எழுந்தது.இப்படித்தான் கள நிலைமை இருந்தது.மொத்ததில் பாலா அண்ணாவின் மறைவின் பின் தவறான பாதையில் தான் நாம் அனைவரும் பயணித்தோம் இதுதான் உண்மை.ஏன் இப்போது கூட ஏகன் என்பவர் சனல்4 தொலைக்காட்சி தலைவரின் இருப்பை அறிய முற்படுகிறது என்று இணையங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்.இப்படியே கேட்டு கேட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.தலைவர் இருந்தால் வரும்போது வருவார் அப்போது வரவேற்போம்.அதுவரையும் ஆக்கபூர்வமாக ஏதவது செய்யலாம்தானே.இலங்கை அரசு புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழிக்கவேண்டும் என்று உதவி கோரினார்கள்.ஒருசில ஆதாரத்துடன்,இனப்படுகொலை நடந்துமுடியும் வரை அனைவரும் அமைதி காத்தார்கள்.இலட்சக்கணக்கில் படுகொலை நடந்தேறியது.இப்போ ஒரு சிலர் விழித்துகொண்டார்கள் அல்லது தமது இருப்பை இலங்கையில் தொடர இருக்கிறார்கள் எனலாம்.இப்படித்தான் காலம் ஓடுகிறது.இதில் எங்களுக்கு சாதகமாக ஏதும் அமைந்தால் கச்சிதமாக பிடிக்க வேண்டியதுதான்

Edited by BLUE BIRD, 15 March 2012 - 12:35 PM.

 • ஆரதி likes this
BLUE BIRD

#7 Eas

Eas

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,578 posts
 • Gender:Male
 • Location:யாதும் ஊரே
 • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 15 March 2012 - 12:53 PM

தலைவர் இருந்தால் வரும்போது வருவார் அப்போது வரவேற்போம்.அதுவரையும் ஆக்கபூர்வமாக ஏதவது செய்யலாம்தானே.

தலைவன் ஒரு வழிகாட்டி. தானே உங்களை செல்லும் இடத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது. நாம் ஒன்று பட்டு (இங்க தான் இடிக்குது) காட்டிய வழியை பாவித்து முன் செல்ல வேண்டும்.

#8 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 March 2012 - 03:11 PM

அப்ப தொடங்கிய இந்தியாவின் முயற்சி முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்துள்ளதுஅதற்கும் ஒரு காரணம் இருந்தது , நாங்கள் அதிமேதாவிப் புத்திசாலிகள் என்ற உளப்பாங்கே :) :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#9 Justin

Justin

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,625 posts
 • Location:USA

Posted 15 March 2012 - 04:08 PM

ஒரு சம்பவத்தை அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்காமல் "stand alone" ஆக பாமினி பார்த்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். ஈ.பி.ஆர்.எல்.எவ் குறிப்பிட்ட பத்மனாபா உரைக்கு முன்னர் என்ன செய்தது என்றும் பாமினி சொல்லவில்லை (இது அவர்கள் சொல்வதை நம்பலாமா என்பதற்கு ஒரு குறி காட்டி). பின்னர் இந்திய ராணுவம் புலிகளை காட்டுக்குள் அனுப்பி தேர்தல் நடந்து அதில் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஒரு மாகாண அரசு அமைந்த போது என்ன மாதிரியான வேலைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட அமைப்புகள் ஈடு பட்டன என்றும் பாமினி செலக்டிவாக மறந்து விட்டார். இந்த மாதிரியான "செலக்டிவ்" ஞாபக மறதி எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் இருக்கும் ஒருவர் சில திறந்திருக்கும் வழிகளூடாகத் தப்பிச் செல்வதற்காக மனமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிலை தான். அப்போது புலிகள் ஒரு நம்பிக்கையான வழியாக இருந்ததால் பத்மனாபா பேச்சு ஈழத்தில் எடுபடவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற புலிகளை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் வும் மற்ற இயக்கங்களும் ஏதாவது செய்திருந்தால் (அல்லது சில வேலைகளைச் செய்யாமல் விட்டிருந்தால்) சில சமயம் பத்மனாபா பேச்சு எடுபட்டிருக்கும் என நினைக்கிறேன். இது என் தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே!

Edited by Justin, 15 March 2012 - 04:08 PM.

"நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே நடுநிலைமை என்று ஒன்று இல்லை"
புதுவை இரத்தின துரை

#10 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 15 March 2012 - 07:52 PM

ஆம் என்பதே எனது தாழ்மையான கருத்து . காலம் தனது கடமைகளை ஈன இரக்கம் பாராது செய்து கொண்டே இருக்கின்றது . நாங்கள் எப்பொழுதும் உணர்ச்சிக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உணர்வுக்குப் பெரும்பாலும் கொடுப்பதில்லை . எங்களுக்கு உவப்பான செய்திகள் வரும் பொழுது பின்புலம் பாராது கடவுள் நிலைக்கு உயர்த்துவதும் , அதே செய்திகள் உவப்பில்லா பொழுது என்னென்ன பட்டங்கள் கட்ட முடியுமோ அதைக் கட்டுவது எமது வளக்கமாகவே இருக்கின்றது . எப்பதான் திருந்தப்போறம் அக்கா ??????? உங்கள் இறுதிக் கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை :( .விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#11 ரதி

#12 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 March 2012 - 08:01 PM

விமர்சனம் வைப்பதில் தப்பில்லை ஆனால் அதை அந்தந்த நேர‌த்தில் வைக்க வேண்டும்...நீங்கள் கூட‌ நாணயத்தின் ஒரு பக்கத்தை வைத்துத் தான் விமர்சனம் எழுதுகிறீர்கள் மற்றப் பக்கத்தையும் புர‌ட்டிப் பாருங்கள்...நாம் முதல் எழுதிய பதிவில் இறுதிப் பகுதி தப்பு என்டால் இந்தக் கதையை திருப்பிக் கொண்டு வந்து தற்போது இணைத்த தன் நோக்கம் என்ன?...உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.நான் என்றுமே விமர்சனத்திற்கு கட்டுப்பட்டவன் ரதியக்கா . முக்கியமாக உங்களைப்போல் சுயவிமர்சனத்திற்கும் கட்டுப்பட்டவன் . உங்கள் தபால் பெட்டியை திறந்து பாருங்கோ ரதியக்கா :) :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#13 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 15 March 2012 - 08:01 PM

வணக்கம் கோமகன்,
இது நீங்கள் எழுதும் கதையா? ஏன் கேட்கிறேன் என்றால் நிறைய தமிழ் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் எழுதும் பொழுது அவற்றை காண்பது அரிது, மற்றையவர்கள் எழுதும்பொழுதே பிழைகளை நீங்கள் திருத்துவது உண்டு. ஒருவேளை பேச்சு வழக்கில் உள்ள தமிழ் என எழுதிவிட்டீர்களா?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#14 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 March 2012 - 08:22 PM

வணக்கம் கோமகன்,
இது நீங்கள் எழுதும் கதையா? ஏன் கேட்கிறேன் என்றால் நிறைய தமிழ் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன. பொதுவாக நீங்கள் எழுதும் பொழுது அவற்றை காண்பது அரிது, மற்றையவர்கள் எழுதும்பொழுதே பிழைகளை நீங்கள் திருத்துவது உண்டு. ஒருவேளை பேச்சு வழக்கில் உள்ள தமிழ் என எழுதிவிட்டீர்களா?உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் அகூதா . பாமினி எனது கதைதான் . கிராமிய வழக்கு என்றபடியால் இலக்கணரீதியாகத் தவறுகள் உண்டு . முடிந்தளவில் திருத்தியுள்ளேன் :) :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#15 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 15 March 2012 - 10:24 PM

கோமகன்,

இந்தக்கதையில் நீங்கள் கூற விரும்பும் கருத்துப்பொருள் கடந்த (பரிமளம்), நிகழ் (பாமினி), சரியாக நிலைமைகளை ஆராய்ந்து நடக்காவிட்டால், எதிர்கால (பமி) கதைகளாக நீடிக்கும்.

கருத்துப்பொருள் என்னவென்றால் 'சந்தர்ப்பங்களை பயன்படுத்தல்' என்பதாகும்.

அந்தவகையில் கடந்தகாலத்தில் பாமினி கூறுவதற்கும், அவவின் பாட்டியார் பரிமளம் கூறுவதும் அரசியல் வரலாறு. இங்கே பமி, பாமினியின் பேத்தியார் நாளை எம்மைவைத்து கண்ஸ்க்கு கதை கூறாமல் சுதந்திரமாக வாழ இன்றைய சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#16 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,591 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 15 March 2012 - 10:35 PM

ஒரு சம்பவத்தை அதற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் பின்னணியில் வைத்துப் பார்க்காமல் "stand alone" ஆக பாமினி பார்த்திருக்கிறார் என்று தான் நான் சொல்வேன். ஈ.பி.ஆர்.எல்.எவ் குறிப்பிட்ட பத்மனாபா உரைக்கு முன்னர் என்ன செய்தது என்றும் பாமினி சொல்லவில்லை (இது அவர்கள் சொல்வதை நம்பலாமா என்பதற்கு ஒரு குறி காட்டி). பின்னர் இந்திய ராணுவம் புலிகளை காட்டுக்குள் அனுப்பி தேர்தல் நடந்து அதில் வரதராஜப் பெருமாள் தலைமையில் ஒரு மாகாண அரசு அமைந்த போது என்ன மாதிரியான வேலைகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட அமைப்புகள் ஈடு பட்டன என்றும் பாமினி செலக்டிவாக மறந்து விட்டார். இந்த மாதிரியான "செலக்டிவ்" ஞாபக மறதி எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் இருக்கும் ஒருவர் சில திறந்திருக்கும் வழிகளூடாகத் தப்பிச் செல்வதற்காக மனமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு நிலை தான். அப்போது புலிகள் ஒரு நம்பிக்கையான வழியாக இருந்ததால் பத்மனாபா பேச்சு ஈழத்தில் எடுபடவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற புலிகளை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் வும் மற்ற இயக்கங்களும் ஏதாவது செய்திருந்தால் (அல்லது சில வேலைகளைச் செய்யாமல் விட்டிருந்தால்) சில சமயம் பத்மனாபா பேச்சு எடுபட்டிருக்கும் என நினைக்கிறேன். இது என் தாழ்மையான அபிப்பிராயம் மட்டுமே!

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

 • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
 • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
 • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
 • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
 • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
 • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
 • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.
http://www.yarl.com/...showtopic=22182

ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea: :rolleyes: :(

Edited by nedukkalapoovan, 15 March 2012 - 10:38 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#17 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,119 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 15 March 2012 - 11:08 PM

ஜஸ்ரின் அண்ணா இப்படியான கதைகள் வேண்டும் என்றே புனையப்படுபவை. இவற்றிற்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது.

யாழ் கள விதி இப்படிச் சொல்கிறது..ஆனால் கதை என்ற போர்வையில் சிலர் இந்த விதி மீறலையே அண்மைக் காலமாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு தீய அல்லது பழிவாங்கும் உள்நோக்கம் உள்ளது..! அதை அவர்கள் எட்ட நினைக்கிறார்களே தவிர.. அவர்களுக்கு நீதி.. நியாயம்.. ஆதாரம்.. தர்மம்.. விதி..சமூக அக்கறை பற்றி எல்லாம் கவலை இல்லை..!

நிர்வாகமும் சில இடங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகிறது..! ஏன் என்றும் புரியவில்லை..! :icon_idea: :rolleyes: :(

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.
மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

#18 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,591 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 15 March 2012 - 11:15 PM

அடுத்த தலைவர் உருவாகின்றார் ,அவர் சொல்வது மட்டும் தான் உண்மை ,சட்டம் ,சரியானது .தமிழர்களுக்கும் விடுதலைக்கு வழிகாட்டும்.
மற்றவர்கள் எல்லோரும் துரோகிகள் ,கூலிக்கு மாரடிப்பவர்கள்.

கனடா நாட்டுச் சட்டத்திற்கும் விதிக்குள்ளும் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். அதை மீறினால் தூக்கி கட்டுநாயக்காவில வீசிடுவாங்கள்.

ஒரு அமைப்பிற்கு.. ஒரு நிறுவனத்திற்கு.. ஏன் இணையத்திற்கு.. விதிகள் சட்டதிட்டங்கள் அவசியமானவை.

Governance அரசுக்கு மட்டுமல்ல.. இணைய உலகில்.. ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. தகவல்தொழில் நுட்பம் அதை இன்று வலியுறுத்தியும் வருகிறது.

இயக்க விதி அற்றவர்கள் இயக்கமற்று போனதையும்.. இயக்க விதி கொண்டவர்கள்.. நீண்ட காலம் இயங்கியதையும் நாம் காண்கிறோம். யாழ் விதியோடு இருப்பதால் தான் இத்தனை ஆண்டுகளாக அதன் பெருமை சொல்லி வளர முடிந்திருக்கிறது. அதை யாழ் என்றும் காப்பது அவசியம்.!

இயற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தை மீறுவோர்.. சட்டவிரோதிகள்.. அதேபோல்.. மக்கள் பொது விருப்பை மீறுவோர் துரோகிகள்.. விதிகளை மீறுவோர்.. விதிமீறிகள்..! இவர்கள் எல்லோரும் தண்டனைக்குரிய மனிதர்களே..! :icon_idea:

Edited by nedukkalapoovan, 15 March 2012 - 11:22 PM.

Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#19 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,119 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 16 March 2012 - 12:31 AM

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.
ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.
சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.
காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .
வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

#20 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,160 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 16 March 2012 - 12:43 AM

கோமகனின் கதைக்கு கீழ் ஏன் உமது பதிவு வந்தது.
ஒரு கண்ணும் ஒரு காதும் வேலை செய்வதால் எழும் பிரச்சனைகள் தான் இவை.
சட்டமும் ஒழுங்கும் விளங்கியிருந்தால் உலகெங்கும் பயங்கரவாதிகள் ஆகியிருக்க மாட்டார்கள்.
காதல் ,கலியாணம் பற்றி சட்டம் போட்டு காதலித்தவனை கைலாசம் அனுப்பி, பின் தனக்கு காதல் வந்தவுடன் சட்டத்தை மாற்றியவர்கள் வைத்ததுதான் சட்டமாம் .
வன்னியில் இருந்து இப்படியான மனோபாவம் கொண்டவர்களை மன்னிக்கலாம் புலம் பெயர்ந்த பின்பும் அப்படி இருந்தால் --------------.

அண்ணை சொல்லுறார் எல்லாரும் கவனமாய் கேளுங்கோ!!!!!!......அது சரி இஞ்சை இருக்கிறதுகள் எல்லாம் கூன் குருடு செவிடுகள் தானே....அவர் சொல்லுற தெய்வ வாக்கெல்லாம் இதுகளுக்கு எங்கை விளங்கப்போகுது...

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]