Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .
Posted 13 March 2012 - 12:24 PM
சிரியாவில் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிரிய பாதுகாப்பு படையினர் தான் காரணம் என்று எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 11 மாதங்களாக நடந்து வரும் போராட்டங்களுக்கு 8,500 பேர் பலியாகியுள்ளனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. தூதர் கோஃபி அன்னன் ஆகியோர் டமாஸ்கஸ் சென்று அரசு மற்றும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே கடும் போராட்டம் நடந்து வரும் ஹோம்ஸ் நகரில் 26 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 47 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கழுத்து அறுக்கப்பட்டும், பலர் கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பிணங்கள் ஆங்காங்கே கிடந்தன. அவர்களை தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் ராணுவத்தினர் கொன்றதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 47 பேரையும் பாதுகாப்பு படையினர் தான் கொன்றார்கள் என்று எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் கொல்லப்பட்ட பெண்களில் பலர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது. http://www.koodal.co...aims-opposition
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!!
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]