ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நிறுவ விடாமல் கணினியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள் அதுபோன்ற கணினிகளில் எவ்வாறு பாடல்களை கன்வெர்ட் செய்வது என்றால் அதற்கு ஒரே வழி ஆன்லைன் மட்டுமே ஆகும். அந்த வகையில் பாடல்களை கன்வெர்ட் செய்ய ஒருதளம் உதவி செய்கிறது. தளத்திற்கான சுட்டி சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய பாடல்கோப்பினை தேர்வு செய்யவும். பின் எந்த பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். கடைசியாகSwitch my file என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் உங்களுடைய பாடலானது கன்வெர்ட் செய்யப்பட்டு உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்கம் செய்வதற்கான சுட்டி அனுப்பி வைக்கப்படும்.
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]