Jump to content


Tamil Star News
Photo

எப்படி எப்படி எல்லாம் ஆண்களைக் கவுக்க ஆராய்ச்சி பண்ணுறாங்கப்பா.


  • Please log in to reply
11 replies to this topic

#1 nedukkalapoovan

nedukkalapoovan

    நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 17,003 posts
  • Gender:Male
  • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests:nothing

Posted 20 February 2012 - 11:34 AM

கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல்


Posted Image

திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது.

பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம். ( மனைவியோடு சண்டை போட்டு இதயநோய் வருதே என்ன செய்ய? என்று கேட்பவர்கள் விதிவிலக்கானவர்கள் )

கனடாவைச் சேர்ந்த 4403 இதய நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 33 சதவிகிதம் பேர் பெண்கள். இவர்களில் திருமணம் முடித்தவர்களை விட விவாகரத்தானவர்கள், மனைவியை இழந்தவர்கள், தனியாக வசிப்பவர்களுக்கு இதயவலி தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதிலிருந்து வாழ்க்கைத் துணைவியின் மூலம் கணவரின் நலன் பாதுகாப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கணவரின் உடல் நலனில் அக்கறையோடு செயல்பட்டு அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுப்பதினாலேயே ஆண்களுக்கு இதயநோய் ஏற்படுவதில்லையாம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள். எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.

http://tamil.boldsky...rt-aid0174.html

Edited by nedukkalapoovan, 20 February 2012 - 11:35 AM.

  • நிலாமதி likes this
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 February 2012 - 11:53 AM

முற்றிலும் உண்மை, திருமணம் செய்தால் இருதய நோய் வராது.
ஆனால், மிகுதியான அனைத்தும் வரும், தலைமயிர் கொட்டுவதில் தொடங்கும் :D

  • வினித் likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 முனிவர் ஜீ

முனிவர் ஜீ

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,435 posts
  • Gender:Male
  • Location:அந்தப்புறம்
  • Interests:உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Posted 20 February 2012 - 11:54 AM

கல்யாணத்தின் பின்தான் கன பேருக்கு வந்ததாக கேள்வி பட்டிருக்கன் இது என்ன புதுசா கிடக்கு
உதவி செய் உபத்திரம் செய்யாதே......

...........அன்புடன் முனிவர்

#4 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,158 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 February 2012 - 12:13 PM

நீங்கள் எதற்காக இணைத்திருந்தாலும்
எனது அனுபவத்திலிருந்து அத்தனையும் உண்மை
நான் சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து போடும் சப்பாத்துவரை...
எனது உடல் நலத்திற்கு எது சரி என்று என்னைவிட அதிகம் பார்ப்பது என் மனைவிதான்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#5 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 20 February 2012 - 01:00 PM

இதில் பல உண்மைகள் அடங்கியுள்ளது. தனியே வாழும் ஆண்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் தறி கெட்ட வாழ்க்கை வாழ்ந்து பாரிய நோய்களுக்கு உள்ளாவதை அவதானித்திருக்கிறேன். அத்துடன் வாரத்திற்கு 3 முறையாவது உடலுறவு கொள்வது இதயத்திற்கு நல்லது என்று கூறுகிறார்கள்.

எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.



இது நெடுக்காலபோவானுக்கு சொன்ன மாதிரி இருக்கு. :icon_idea:

#6 BLUE BIRD

BLUE BIRD

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,734 posts
  • Gender:Male
  • Location:canada
  • Interests:watching news,need a freedom

Posted 20 February 2012 - 02:36 PM

நீங்கள் எதற்காக இணைத்திருந்தாலும்
எனது அனுபவத்திலிருந்து அத்தனையும் உண்மை
நான் சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து போடும் சப்பாத்துவரை...
எனது உடல் நலத்திற்கு எது சரி என்று என்னைவிட அதிகம் பார்ப்பது என் மனைவிதான்.



உண்மைதான் எல்லாத்துக்கும் ஒரு சில காரணங்களும் இருந்தாலும் இருக்கலாம்.
பூவும் பொட்டும்.தாலி,வெள்ளைச்சேலைஇப்படி பயமும் உண்டு.இதைவிட பெரிய பயம்.இப்போ வீட்டில் பிரச்சனையென்றால் எங்கள் ஆண்கள் கொலிவூட்டில் எல்லோ வலை விரிக்கிறார்கள். நடிகை சக்களத்தியாக வரக்கூடது என்ற பயமும் உண்டு.

BLUE BIRD

#7 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 13,158 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 February 2012 - 08:21 PM

உண்மைதான் எல்லாத்துக்கும் ஒரு சில காரணங்களும் இருந்தாலும் இருக்கலாம்.
பூவும் பொட்டும்.தாலி,வெள்ளைச்சேலைஇப்படி பயமும் உண்டு.இதைவிட பெரிய பயம்.இப்போ வீட்டில் பிரச்சனையென்றால் எங்கள் ஆண்கள் கொலிவூட்டில் எல்லோ வலை விரிக்கிறார்கள். நடிகை சக்களத்தியாக வரக்கூடது என்ற பயமும் உண்டு.


இந்தாள் பெரிய சந்தேகக்காறன் போலுள்ளது. :lol: :D
ஏனப்பா நல்லதே கண்ணில் படாதா? :(
கல்லைத்தானே கும்பிடுகின்றோம் கடவுள் என்று? அதைவிடவா?? :lol: :icon_idea: :icon_idea:
  • BLUE BIRD likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#8 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

    ரசிகன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,673 posts
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 20 February 2012 - 09:43 PM

உண்மைதான் எல்லாத்துக்கும் ஒரு சில காரணங்களும் இருந்தாலும் இருக்கலாம்.
பூவும் பொட்டும்.தாலி,வெள்ளைச்சேலைஇப்படி பயமும் உண்டு.இதைவிட பெரிய பயம்.இப்போ வீட்டில் பிரச்சனையென்றால் எங்கள் ஆண்கள் கொலிவூட்டில் எல்லோ வலை விரிக்கிறார்கள். நடிகை சக்களத்தியாக வரக்கூடது என்ற பயமும் உண்டு.

உது தான் உண்மை.அதுக்காகதான் கணவணை :lol: சாக விடாமல் வைச்சிருக்க காரனம்.கணவன் இல்லாமல் உந்த தாலி நகை எல்லாம் போடலாம் என்டால் பல கணவருக்கு எப்பவோ சங்கு ஊதப்பட்டிருக்கும் :rolleyes: :lol:

உதுக்கு கலியானம் தான் தேவை என்டு இல்லை கிரமமாக உடலுறவு கொன்டாலும் கானும். :lol: :)
  • BLUE BIRD likes this
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

#9 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,890 posts
  • Gender:Not Telling
  • Location:North America

Posted 20 February 2012 - 10:55 PM

உண்மைதான் எல்லாத்துக்கும் ஒரு சில காரணங்களும் இருந்தாலும் இருக்கலாம்.
பூவும் பொட்டும்.தாலி,வெள்ளைச்சேலைஇப்படி பயமும் உண்டு.இதைவிட பெரிய பயம்.இப்போ வீட்டில் பிரச்சனையென்றால் எங்கள் ஆண்கள் கொலிவூட்டில் எல்லோ வலை விரிக்கிறார்கள். நடிகை சக்களத்தியாக வரக்கூடது என்ற பயமும் உண்டு.



கொலிவூட்டிலை வலை, அதைவிட நடிகை சக்களத்தி........... யாருக்கு????????? தமிழ் ஆண்களுக்கா?????????????

பெண்களே முதலில் முகம் பார்க்கும் கண்ணாடியை வாங்கி உங்கள் கணவருக்குப் பரிசாக அளியுங்கள்...... பிறகு அவை எந்த

வூட்டுக்கு.......
  • BLUE BIRD likes this

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#10 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,408 posts
  • Gender:Male

Posted 21 February 2012 - 01:08 AM

திருமணமானது, உடலின் 'Early Warning System" -முன்கூட்டியே எச்சரிக்கும் பொறிமுறையை நிறுத்தி விடுவதால், இதய நோய் உடனடியாகத் தெரிவதில்லை!
ஆனால் வந்தால், நித்திரையில் வந்த மாதிரிதான்!!! :wub:

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#11 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,808 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 21 February 2012 - 01:24 AM

முற்றிலும் உண்மை, திருமணம் செய்தால் இருதய நோய் வராது.
ஆனால், மிகுதியான அனைத்தும் வரும், தலைமயிர் கொட்டுவதில் தொடங்கும் :D

தொப்பி என்னத்துக்கு விக்கிறாங்கள்? :icon_idea:

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#12 Eas

Eas

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,577 posts
  • Gender:Male
  • Location:யாதும் ஊரே
  • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 22 February 2012 - 03:12 PM

கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொன்னார்கள். எனவே ஆண்களே திருமணம் என்றாலே அலறவேண்டாம். உங்களை கவனிக்க அக்கறையான ஒருவர் வரப்போகிறார் என்று உற்சாகத்துடன் திருமணத்திற்கு தலையாட்டுங்கள்.


இத்தால் தாங்கள் சொல்ல வருவது என்னவென்றால்? .. :D

தலையாட்ட ரெடியோ?




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]