உயிரின் அடுத்த நிலை என்ன..?
#81
Posted 26 June 2012 - 07:35 PM
ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி கோடி சூரிய பிரகாசம் உடையது.அதில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இது எல்லா ஜீவ
ராசிகளிலும் உள்ளதாகும் பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் எடுக்கிறது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .
இது மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனிதேகத்தில் புருவமத்தியில் இருந்துகொண்டு உள்ளது .அதற்கு லலாடம் ஸ்தானம் என்பார்கள் .அதன் வண்ணம் கால பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் .பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .
அதன செயல் பாட்டிற்க்காக ஐம புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது .அதற்குப் பெயர் உபகாரக் கருவிகலாகும்.அதுதான் கண், காது,மூக்கு,வாய் உடம்பு என்பதாகும் .இவை கண்களுக்குத் தெரியும் .இவைகள் மூலமாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.
இந்திரியங்கள் என்னும்;-- கண்,காத்து ,மூக்கு,வாய்,உடம்பு என்பதாகும்
கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் ,என்பதாகும்
ஜீவன் என்னும் ;--உயிராகும் .
ஆன்மா என்பது .;--அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.
ஆன்மா எனபது இல்லை என்றால் எதுவும் இயங்காது .ஆன்மாவின் தேவைக்காக அனைத்து கருவி காரணங்களையும்,அதுவே உருவாக்கிக் கொண்டு உள்ளதாகும்.ஆதலால் ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.
ஆன்மா உண்மையை அறிந்து கொள்ள கருவிகளை இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுள்ளது.ஆனால் புறத தோற்ற க் கருவிகளான ஐம புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றம் உள்ள அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிருக்கு மாயா சத்தியின் பலம் உள்ளது, மாயா சத்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].
அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளில் பலவிதமாக சொல்லி உள்ளார்கள் .மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .
உடம்பின் முக்கிய கருவிகள் எது என்றால் .கண் ,மனம் ,என்பாதாகும் .கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது அனைத்தும் செய்யும் .அதனால்தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் .கண் போகும் இடம் மனம் போகும் .கண்கள் வெளியே செல்லாமல் புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.எப்படி தொடர்பு கொள்ள முடியும்? அதற்குததான் தியானம் ,தவம .யோகம ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் .
ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் அப்படி செய்ய வேண்டும் ?என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?நாம் மாயா சத்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்க்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் ,தவம ,யோகம ,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருனயமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அடையமுடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.
சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவர்போல் வாழ்ந்தால்தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் காணமுடியாது அருள் பெற முடியாது ''நான என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ;--
கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்தது இல்லீரே
விண்டதினால் என்ன நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !
அடுத்து ஒரு பாடல் .;-
உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பே ய் மனத்தாலே மயங்குகின்றீர் மனதை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி வகையை அறியீர்
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைகின்றீர் ஏழை உலகிலீர்
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !
http://suddhasanmargham.blogspot.in/2011/09/blog-post_15.html
- sudalai maadan likes this
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..

#82
Posted 18 July 2012 - 11:50 PM
யாராவது வந்து ஏதாவது பதியுங்கப்பா.. செத்து செத்து விளையாடிதான் மறுபடியும் பதியணும் போல கிடக்கு
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#83
Posted 19 July 2012 - 04:01 PM
#84
Posted 19 July 2012 - 04:09 PM
#85
Posted 19 July 2012 - 04:20 PM
#86
Posted 19 July 2012 - 04:31 PM
#87
Posted 20 July 2012 - 11:23 AM
இங்கு பிறவியிலே கண் தெரியாத பெண்ணும் விபரிக்கிறார் தனது இறப்பு அனுபவத்தை ....
பிறவியிலேயே கண்தெரியாத பெண் இவ்வளவு மொழித்தேர்ச்சியோடு உரையாடுவது, நன்கு கற்றவரைப் போல் தகவல் செறிவோடு பேசுவதும்உண்மையில் நடக்கக்கூடியதல்ல..
#88
Posted 22 July 2012 - 11:20 AM
பிறவியிலேயே கண்தெரியாத பெண் இவ்வளவு மொழித்தேர்ச்சியோடு உரையாடுவது, நன்கு கற்றவரைப் போல் தகவல் செறிவோடு பேசுவதும்உண்மையில் நடக்கக்கூடியதல்ல..
பீத்தோவன் உலக புகழ் பெற்ற இசைமேதை . அவருக்கு பிறவியிலே காது கேளாது . இப்படியான விடயங்களில் எமக்கு சந்தேகம் ஏற்படாது .ஆனால் மரணத்துக்கு பின்னதான நிலை என்பதை யார் வந்து சொன்னாலும் நாம் ஏற்று கொள்வது சற்று கடினம்தான் . ஒவ்வொருவரினதும் மரணத்தின் பின்னதான் அனுபவங்கள் NDE இல் ஆயிரக்கணக்கில் இருக்கிறது . வெவ்வேறு நாடுகளில் இருந்தும் , வெவ்வேறு மொழிகளில் இருந்தும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் 70% ஒரே மாதிரியானவை . புலன்களை கொண்டு அதை அளக்க முடியாது . அது புலன்களை தாண்டிய நிலை . மரணத்தின் பின்தான் அந்த பேரொளியை பார்க்க முடியும் என்றில்லை . தியானத்தில் சித்தர்களும் , ரிஷிகளும் கண்டது அந்த ஒளியைத்தான் .
#89
Posted 23 July 2012 - 01:27 PM
மிஞ்சும்......................சாதாரணமாக சொன்னால் கடவுளை நம்புகிறவர்கள் உயிரின் மகத்துவத்தை மதிப்பார்கள்.................கடவுளை நம்பாதவர்களுக்கு அது வெறும் தூசு போல்தான் இருக்கும்..............முதலில் கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற ஆராச்சியை நடத்துவோம்
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#90
Posted 23 July 2012 - 07:56 PM
இது கடவுளுடன் சம்பந்தப்பட்ட பிரச்னை ...............புரட்சி ............இதைப்பற்றி நீங்கள் அறியவேண்டுமென்றால் கடவுளைப்போல் வாழ [மாற]வேண்டும்
![]()
.................மனிதர்களாக வாழும்வரை இதைப்பற்றி கற்பனைக்கதைகளையும் ,விஞ்சான ஆராய்ச்சி கதைகளையும் மட்டும்தான் உங்களுக்கு
மிஞ்சும்......................சாதாரணமாக சொன்னால் கடவுளை நம்புகிறவர்கள் உயிரின் மகத்துவத்தை மதிப்பார்கள்.................கடவுளை நம்பாதவர்களுக்கு அது வெறும் தூசு போல்தான் இருக்கும்..............முதலில் கடவுள் இருக்கிறாரா,இல்லையா என்ற ஆராச்சியை நடத்துவோம்.....அதன் பின் உயிரின் ஆராச்சியை நடத்தினால் தெளிவான விடை கிடைக்கும் என நான் நினைக்கிறேன்..............
![]()
தோழர் கடவுளை காண குரு வழிகாட்டல் அவசியம் வேண்டும் தனியாக எல்லாம் உட்கார்ந்து தியானம் செய்தால் மெண்டல் ஆகிடுவம்.... எனக்கு நித்தியனந்த சுவாமிஜி சரியாக படுகிறார்.. நான் அவருடைய சீடர் ஆகலாம் என இருக்கன்...
ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..
#91
Posted 27 July 2012 - 08:28 AM
தோழர் கடவுளை காண குரு வழிகாட்டல் அவசியம் வேண்டும் தனியாக எல்லாம் உட்கார்ந்து தியானம் செய்தால் மெண்டல் ஆகிடுவம்.... எனக்கு நித்தியனந்த சுவாமிஜி சரியாக படுகிறார்.. நான் அவருடைய சீடர் ஆகலாம் என இருக்கன்...
![]()
எனக்கும் அது தான் நீண்ட நாள் கனவு தோழர்............
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg














