Jump to content

Orumanam
Photo

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு

 • Please log in to reply
108 replies to this topic

#1 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,156 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 19 February 2012 - 06:38 PM

Posted Image

Wall Photos
புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.See More

By: Trc Thedakam
 • நிழலி likes this

ninaivu-illam

#2 பெருமாள்

பெருமாள்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,266 posts
 • Gender:Male

Posted 20 February 2012 - 09:54 AM

ஆரம்பியுங்கோ நரி ஊளையிடாமல் ஊருக்குள்ளை வராது .
 • spyder12uk, Maruthankerny, nunavilan and 1 other like this
ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்

#3 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 19,009 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 20 February 2012 - 11:32 AM

இவர் ஆதரவு தெரிவித்து இங்கு ஆரம்பித்து வைக்கிறார் என்றால் புலிகளை பிரபாகரனைப்பற்றி ஏதாவது தப்பாக அவர் எழுதியிருக்கணும் என்றுதான் அர்த்தம். இவர் தனது வாதங்களுக்கு தனது கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுகிறாரே தவிர தமிழர் பற்றி எந்த முன்னெடுப்புகளும் இதுவரை வரவில்லை. வராது. :( :( :(
 • Maruthankerny likes this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

http://imageshack.us...es/593/rit.gif/

#4 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 20 February 2012 - 12:09 PM

ஈழத்துச் சிறுமியின் சோக கீதம்! அழுதது கண்கள்!! ஆறெனப் பாய்ந்தது கண்ணீர்!!!

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

 • spyder12uk, விசுகு, சித்தன் and 1 other like this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#5 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,156 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 20 February 2012 - 07:35 PM

இவர் ஆதரவு தெரிவித்து இங்கு ஆரம்பித்து வைக்கிறார் என்றால் புலிகளை பிரபாகரனைப்பற்றி ஏதாவது தப்பாக அவர் எழுதியிருக்கணும் என்றுதான் அர்த்தம். இவர் தனது வாதங்களுக்கு தனது கற்பனைகளுக்கு ஆதாரம் தேடுகிறாரே தவிர தமிழர் பற்றி எந்த முன்னெடுப்புகளும் இதுவரை வரவில்லை. வராது. :( :( :(

யாழிலேயே இணைத்த தொடர்தான் இப்போ புத்தகமாக வெளிவருகின்றது.என்னத்தை வாசிக்கின்றனிர்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
உங்களுக்கு தெரிந்து நாங்கள் முன்னெடுப்பு எடுக்க தேவையில்லை .அதற்குள்ளும் சுத்த பூந்துவிடுவீர்கள்.
 • shanthy, I.V.Sasi, நிழலி and 1 other like this

#6 I.V.Sasi

I.V.Sasi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,886 posts
 • Gender:Male
 • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 20 February 2012 - 11:11 PM

கிருபன் அண்ணை பாகம் பாகமாக யாழில் இனைத்து தான் தற்போது புத்தாகமாக வெளிவருகிறது.
அந்த தொடரில் அவர் புலிகளை( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) கேவலமாக வோ அல்லது இழிவாகவோ சில்லவில்லை........

விசுகு அண்ணையின் நிலை புரிந்துவிட்டது..............
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#7 கிருபன்

கிருபன்

  வலைப்போக்கன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,042 posts
 • Gender:Male
 • Location:முடிவிலி வளையம்
 • Interests:போஜனம், சயனம்

Posted 20 February 2012 - 11:54 PM

"எனக்கு விருப்பமானதை மட்டும்தான் நான் வாசிப்பேன். வாசிக்காதவற்றைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறும் பழக்கம் அறவே இருக்கக்கூடாது" என்று உறுதிமொழி பலர் எடுக்காமல் இருப்பதனால்தான் குழப்பங்கள், சேறடித்தல்கள் நிகழ்கின்றன.

மார்ச் 10இல் இலண்டனிலும் புத்தகம் வெளியிடப்படுகின்றதாம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

#8 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,140 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 21 February 2012 - 12:11 AM

Posted Image

Wall Photos
புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

அர்ஜுன்,

நான் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்னுமொரு நிகழ்வு ஒன்றுக்கு போக இருப்பதால் இதற்கு வரமுடியாது போல் இருக்கு. நான் வர விரும்புகின்ற 3 நிகழ்வுகள் இதே சனி நடக்க இருக்கு.. ஒன்றுக்குத் தான் போக முடியும்..

என்னால் வர முடியாமல் போனால் என் சார்பாக ஒரு புத்தகம் வாங்கினால் நல்லது. இது பற்றி தொலைபேசுகின்றேன்...

நன்றி

"எனக்கு விருப்பமானதை மட்டும்தான் நான் வாசிப்பேன். வாசிக்காதவற்றைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் கருத்துக் கூறும் பழக்கம் அறவே இருக்கக்கூடாது"

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்

#9 வல்வை சகாறா

வல்வை சகாறா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,556 posts
 • Gender:Female
 • Location:கனடா
 • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 21 February 2012 - 12:19 AM

இந்நூல் வெளியீட்டிற்கு நான் செல்வேன்.

எழுதி முடிக்காத என் கவிதை

இறுதி மூச்சுவரை பயணிக்கும்.

#10 nunavilan

nunavilan

  நிர்வாகம்

 • கருத்துக்கள நிர்வாகம்
 • 30,645 posts
 • Gender:Male
 • Location:USA

Posted 21 February 2012 - 12:56 AM

யாழிலேயே இணைத்த தொடர்தான் இப்போ புத்தகமாக வெளிவருகின்றது.
இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.
ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.
பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#11 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 01:23 AM

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.
ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.
பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.

நன்றி தகவலுக்கு. நிச்சயம் முழுமையானதாக இருக்க முடியாது. தமக்கு விருப்பமானதை மட்டுமே சரி என்று எழுதி இருப்பார்கள்.

இதுவும் சில குழப்பங்களையும் சேறடித்தலையும் உருவாக்கிவிடலாம்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#12 வல்வை சகாறா

வல்வை சகாறா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,556 posts
 • Gender:Female
 • Location:கனடா
 • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 21 February 2012 - 01:53 AM

நிச்சயமாக தகவல்கள் திரிவு படுத்தப்படுவது எல்லா இடங்களிலும் இருக்கும். அநேகமாக எழுத்தைக் கையாள்பவர் தனக்கு சாதகமாகவோ அல்லது தன் எண்ணத்திற்குச் சாதகமாகவோ எழுதுவது எல்லா இடங்களிலும் இயல்பு. ஏற்பதும் மறுப்பதும் வாசகனின் நோக்கில் உள்ளது. ஒருவருடைய நூலை வாங்குகிறோம் என்றால் அவருடைய கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அர்த்தமாகிவிடாது. எவ்வளவு தூரத்திற்கு ஏற்பில்லா விடயங்களை எழுதி இருக்கிறார் என்று அளவிடவும் முடியும் இல்லையா?

எழுதி முடிக்காத என் கவிதை

இறுதி மூச்சுவரை பயணிக்கும்.

#13 தமிழச்சி

தமிழச்சி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,508 posts

Posted 21 February 2012 - 02:54 AM

என்னாலும் இந்த நூல் வெளியீட்டிற்குச் செல்ல முடியாது. ஆனால், நிச்சயம் புத்தகம் வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை எமது போராட்டத்தைப் பற்றி யாராலும் முழுமையாக எழுத முடியாது. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கவும் முடியாது. இப்படி ஒதுக்கியதால்தான் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். கிருபன் மற்றும் நிழலிக்கு ஒரு பச்சை.
தமிழச்சி

முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்

பின்னே பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்

பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்

மானே வடுகாய் வரும்

#14 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 02:59 AM

கிருபன் அண்ணை பாகம் பாகமாக யாழில் இனைத்து தான் தற்போது புத்தாகமாக வெளிவருகிறது.
அந்த தொடரில் அவர் புலிகளை( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) கேவலமாக வோ அல்லது இழிவாகவோ சில்லவில்லை........

விசுகு அண்ணையின் நிலை புரிந்துவிட்டது..............

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#15 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,140 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 21 February 2012 - 03:35 AM

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) -

அகூதா சில கேள்விகள்,

1. தற்போது மக்கள் நினைக்கின்ற மாதிரி என்று சொல்ல நீங்கள் மக்களின் நாடி பிடித்தறிந்தவரா?, சரி ஓமெனில் நீங்கள் மக்கள் என்று அழைப்பது புலம்பெயர் மக்களையா அல்லது ஈழத்தில் இன்றும் வாழும் மக்களையா, அல்லது இரு பிரிவையும் ஒரே தராசில் வைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற பார்வையா?

இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

2. இதில் எதிரி என்று எவரை குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களத்தையா, இல்லை மாற்றுக் குழுக்களையா?, இல்லை போராட்டத்தை விமர்சிர்ப்பவர்களையா? அல்லது அப்படி விமர்சிப்பவர்களை துரோகி என்று முத்திரை குத்துபவர்களையா? இல்லை சர்வதேசத்தையா? இல்லை இந்தியாவையா?

...சரி எல்லாவற்றுக்கும் முதல்,

கிருபன் இணைத்த திரியின் பதிவுகளை பார்த்து தான் பதில் எழுதினீர்களா? இல்லயெனில் முன்முடிவுகளை எந்த ஆதாரங்கள் வைத்து எழுதினீர்கள்?
 • Thumpalayan likes this

#16 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,211 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 21 February 2012 - 08:06 AM

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#17 I.V.Sasi

I.V.Sasi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,886 posts
 • Gender:Male
 • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 21 February 2012 - 08:53 AM

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.மேல எழுதிய கருத்து உண்மையில் சக உறுப்பினர்களை உள்குத்து குத்துவதாகவே எழுதினேன்......

உங்களுக்காக இல்லை. ^_^

இல்லையே.மேலும் பல விடுபட்ட தகவல்கள் புத்தகவடிவில் வரவிருப்பதாக அறிந்தேன்.
ஐயரினால் புலிகளை பற்றி 99% எழுதி விட முடியும் என நினைக்கவில்லை.இறுதிப்போரில் தப்பிய நீண்ட கால புலி உறுப்பினரால் தான் மேலும் பல உண்மைகளை எழுத முடியும்.
பல முன்னை நாள் போராளிகளின் பின்னூட்டங்களின் மூலம் ஐயரின் எழுத்து ஒரு முழுமைப்படுத்தப்படாத எழுத்து என அறிய முடிந்தது.இறுத்திப்போரில் தப்பிய நீண்டகால புலிகள் யார்?

ஜயர் எழுதியது ஆரம்பக்கால போராட்டத்தை பற்றி அதில் மாற்று இயக்கங்களில் இருந்து ஒதுங்கிய பலர் சொல்கிறார்கள் ஜயரின் தகவல்கள் சில விடுபட்டு போய் இருக்கிறது என்று. ஆனால் நீண்ட கால புலிகள் உறுப்பினர் யாரும் பெரிதாக இல்லை....

இந்த நூல்வெளியிட்டுக்கு எப்படி விடுதலைஉணவர்கள் செல்ல முடியும்,?
தூரோகம் ஆகாதா?

அர்ஜுன்,

நான் கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இன்னுமொரு நிகழ்வு ஒன்றுக்கு போக இருப்பதால் இதற்கு வரமுடியாது போல் இருக்கு. நான் வர விரும்புகின்ற 3 நிகழ்வுகள் இதே சனி நடக்க இருக்கு.. ஒன்றுக்குத் தான் போக முடியும்..

என்னால் வர முடியாமல் போனால் என் சார்பாக ஒரு புத்தகம் வாங்கினால் நல்லது. இது பற்றி தொலைபேசுகின்றேன்...

நன்றிஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்ஒரு மட்டுநிறுத்தினர் இப்படி பேசலமா?
வேலையே பயிரை பேய்ந்தது போல் ஆகாதா? :rolleyes:

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?யாழ்களத்தோடு எல்லாம் முடிந்து விடுமா?

யாழில் ஒரு 10 ஆயிரம் பேர் வாசித்து இருப்பார்களா?
ஆனால் லண்டனிலும் கனடாவிலும் யாழுக்கு வராதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#18 கிருபன்

கிருபன்

  வலைப்போக்கன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,042 posts
 • Gender:Male
 • Location:முடிவிலி வளையம்
 • Interests:போஜனம், சயனம்

Posted 21 February 2012 - 10:42 AM

இனியொரு தளத்தில் தொடராக வந்த பதிவுகளை வாசித்துப் பின்னர் யாழில் ஒட்டியிருந்தாலும் ஐயரின் புத்தகத்தை எமது போராட்டத்தைப் பற்றிய ஒரு ஆவணமாகக் கொள்வதால் கட்டாயம் வாங்குவேன்.

ஐயர் தமிழீழப் போராட்டத்தைப் பற்றிச் சேறடித்ததாக எனது வாசிப்புப் புரிதலில் தெரியவில்லை. அதே நேரத்தில் புஸ்பராஜா எழுதிய "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்" என்ற புத்தகம் அவரது சுயதம்பட்டத்தை அதிகம் கொண்டிருந்ததோடு, ஈபிஆர்எல்எவ் இந்திய படைகளின்ஆக்கிரமிப்புக் காலத்தில் செய்த அட்டூழியங்களை விமர்சிக்காமல் மென்மையாகக் தொட்டுச் சென்றமை போன்ற காரணங்களால் ஒரு நேர்மையான முறையில் ஆவணப்படுத்தப்பட்ட முயற்சி என்பதை ஏற்கமுடியவில்லை.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

#19 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 12:42 PM

மேல எழுதிய கருத்து உண்மையில் சக உறுப்பினர்களை உள்குத்து குத்துவதாகவே எழுதினேன்......

உங்களுக்காக இல்லை. ^_^

நன்றி, ஆனால், எமக்குள் ஒற்றுமையை நாம் எல்லோரும் வேண்டும்பொழுது இப்படி எழுதுவதை இந்தக்காலகட்டத்தில் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#20 சித்தன்

சித்தன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,268 posts
 • Gender:Male
 • Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.
 • Interests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.

Posted 21 February 2012 - 01:09 PM

என்னாலும் இந்த நூல் வெளியீட்டிற்குச் செல்ல முடியாது. ஆனால், நிச்சயம் புத்தகம் வாங்குவேன். என்னைப் பொறுத்தவரை எமது போராட்டத்தைப் பற்றி யாராலும் முழுமையாக எழுத முடியாது. அதற்காக எல்லாவற்றையும் ஒதுக்கவும் முடியாது. இப்படி ஒதுக்கியதால்தான் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். கிருபன் மற்றும் நிழலிக்கு ஒரு பச்சை.

என்னத்தை ஒதுக்கினியல் என்னத்தை இழந்து இருக்கிறியள்?

( தற்போது மக்கள் நினைக்கிற மாதிரி ) - இது ஆதாரமற்ற அநாவசியமான, எதிரிக்கு பலம் சேர்க்கும் கருத்து.

அவர்கள் எதற்காக இங்கு எழுதுகிரார்களோ அந்த வேலையை செய்கிரார்கள்.

ஏற்கனவே இணையத்தில் எழுதி நாங்கள் வாசித்தது தானே புத்தகமாக வருகிறது பிறகு ஏன் அதை காசு கொடுத்து வாங்குவான்?

இது புத்திசாலிதனம். :) :) :)
ஏழு குறுக்கு....... இரண்டு நெடுக்கு....... நாலுபேரு தூக்கும் வாகனம்........ அதில் நீயும் ஒருநாள் போகனும்........ நானும் ஒருநாள் போகனும்.
-சித்தன்-

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]