Jump to content


Orumanam
Photo

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6


 • Please log in to reply
303 replies to this topic

#141 samiyar

samiyar

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 105 posts
 • Gender:Male
 • Location:பூலோகம்
 • Interests:அறிவியல், சமயம், கலை , கலாச்சாரம், சினிமா,புதிய நட்பு,

Posted 10 March 2012 - 11:33 AM

நல்ல ஆக்கம் சாத்திரியார்.

ஏன் உங்களால யுரேக்காவை விளங்கிக்கொள்ள முடியவில்லை?

சிம்பிளா சொல்லுறதெண்டால் அவவுக்கு உங்களில இருந்த நம்பிக்கை போட்டுது.
அன்புடன் சாமியார்

அன்பே சிவம் ! / Love is God!

ninaivu-illam

#142 Innumoruvan

Innumoruvan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 705 posts

Posted 11 March 2012 - 09:57 PM

அற்புதமாக எழுதுகிறீர்கள். இன்று இப்பதிவில் பலவற்றை வாசித்தேன். 'நட்பு' என்ற தலைப்பில் அமைந்துள்ளதும் மிகச்சிறப்பாய் உள்ளது, மிகவும் கனதியாகவும் அற்புதமாகவும் உள்ளது. யுரேகா பாலு மகேந்திரா படம் பாத்தமாதிரி இருக்கு. யுரேக்கா ஆரென்றே தெரியாதபோதும் அப்பாத்திரத்திரம் மூடுபனி சோபா போன்று மனதுள் விரிகிறது. நுpச்சயமாக உங்கள் நாவலிற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

நன்றி

#143 உடையார்

உடையார்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,695 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 12 March 2012 - 12:11 AM

காளியிட்டையும் வாங்கியிருக்கிறீங்கள் போலை உடையார். நான் படிக்கேக்கை காளி நூலக பொறுப்பிலை இருந்தவர். விவசாயம் படிப்பித்த சிறி வாத்தியை தெரியுமா??


ஆமாம் நூலகத்தில் கதைத்து அடி வாங்கினான், நானும் விவசாயம் தான் எடுத்தனான் ஆனா ரீச்சர் தான் படிப்பித்தவா, எனக்கு சிறி வாத்தியை ஞாபகமில்லை இப்ப
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#144 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 12 March 2012 - 03:28 PM

அற்புதமாக எழுதுகிறீர்கள். இன்று இப்பதிவில் பலவற்றை வாசித்தேன். 'நட்பு' என்ற தலைப்பில் அமைந்துள்ளதும் மிகச்சிறப்பாய் உள்ளது, மிகவும் கனதியாகவும் அற்புதமாகவும் உள்ளது. யுரேகா பாலு மகேந்திரா படம் பாத்தமாதிரி இருக்கு. யுரேக்கா ஆரென்றே தெரியாதபோதும் அப்பாத்திரத்திரம் மூடுபனி சோபா போன்று மனதுள் விரிகிறது. நுpச்சயமாக உங்கள் நாவலிற்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்.

நன்றி

கருத்திற்கு நன்றிகள் இன்னுதொருவன் இப்படி ஆடிக்கொருகாக்கா அமாவாசைக்கு ஒருக்கா எண்டாலும் இந்தப் பக்கம் வாறது :wub:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#145 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,190 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 12 March 2012 - 03:47 PM

சாத்திரியார்! "கவர்ச்சி,காதல்,காமம்,காட்சி,நட்பு காணாமல் காய்ஞ்சுவறண்டு கவிண்டு வந்தபாதை" எண்டு இன்னொரு திரியை நான் பத்தவைக்கலாமெண்டு யோசிக்கிறன் அதைப்பற்றி என்ன நினைக்கிறியள்?ஏனெண்டால் உந்த காதல்,கவர்ச்சி,காமம்,காட்சி எல்லாருக்கும் சரிவராதெல்லே :icon_idea: :lol:

#146 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,129 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 08 April 2012 - 01:58 PM

சாத்திரி, உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் திறந்து விட்டாச்சு. உங்களா நீக்கியவற்றை வந்து ஒட்டுங்கோ
 • ஜீவா likes this

#147 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 08 April 2012 - 06:36 PM

கடந்துவந்தபாதை.


யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் அந்த ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால் நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள். எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்காக சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர்.

எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர். தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை யாரோ வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.

அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.
00000000000000000000000000000
அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.

என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலவரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைந்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.
0000000000000000000000000000000000
பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநான் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.


நிருவாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இப்பதிவில் மாற்றங்களை செய்து இணைத்துள்ளேன்

Edited by sathiri, 17 April 2012 - 09:00 PM.

மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#148 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,129 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 09 April 2012 - 12:03 PM

நிருவாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க இப்பதிவில் மாற்றங்களை செய்து இணைத்துள்ளேன்


நன்றி சாத்து... .. :icon_idea:

#149 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,984 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 11 April 2012 - 11:36 AM

இங்கு சாத்திரி மீண்டும் இணைத்துள்ள கதை ஏற்கனவே நிர்வாகத்தால் நீக்கப்பட்டதாகும்.
அவரால் அல்ல.
(பல கள உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க).

நிர்வாகம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன். வேறு எதுவும் எழுதுவதற்கில்லை. :( :( :(

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#150 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 11 April 2012 - 01:38 PM

இங்கு சாத்திரி மீண்டும் இணைத்துள்ள கதை ஏற்கனவே நிர்வாகத்தால் நீக்கப்பட்டதாகும்.
அவரால் அல்ல.
(பல கள உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க).

நிர்வாகம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவே நினைக்கின்றேன். வேறு எதுவும் எழுதுவதற்கில்லை. :( :( :(வணக்கம் விசுகு அவர்களே இங்கு யாழ் நிருவாகத்திற்கு சிக்கல் கொடுகக்கூடாது என்பதற்காக மேலும் சில பகுதிகளை நீக்கியுள்ளேன். ஆனால் நிருவாகம் ஏதோ விரல்சூப்பும் குழந்தை போலவும் அதற்கு நான் இனிப்பு வாங்கி கொடுத்து விட்டு அது ஏமாந்திருந்த வேளையில் எனது பதிவை மீண்டும் எழுதியிருப்பது என்பது சரியான நகைச்சுவையாக இருக்கின்றது. அது மட்டுமல்ல இங்கு எனது பதிவில் நீக்கக்கூடிய அளவிற்கு அப்:படி என்ன மோசமாக எழுதியிருக்கிறேன் என்பதனையும் அதன் காரணத்தால் தான் அந்தப் பதிவினை நீக்கவேண்டும் என்றும் நீங்கள் அந்த வசனங்களை அடிக்கோடிட்டு அதனால் யார் எங்கே எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்று ஒரு பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாரா?? இங்கு விவாதிப்பதில் உங்களிற்கு சங்கடங்கள் ஏதும் இருப்பின் நாற்சந்தி பகுதியில் யாழ் உறவுகள் மட்டும் பார்கும்படி நாங்கள் விவாதத்தினை வைப்போம்.; அதில் நீங்கள் மட்டுமல்ல அந்த பதிவினை நீக்கச்சொல்லி நிருவாகத்திற்கு குடைச்சல் கொடுத்த அனைவரும் பங்கெடுக்கலாம். நீக்குவதற்கான தகுந்த காரணங்களை நீங்கள் முன்வையுங்கள் நானும் ஆதாரங்களுடன் என்தரப்பு வாதத்தினை முன் வைக்கிறேன்..

விசுகு நீங்கள் யாழில் அடிக்கடி எழுதுகின்ற வசனம் நாங்கள் நியை போசவேணும் நிறைய விவாதிக்கவேணும் என்கிற வசனத்தை உங்களை நோக்கியே திருப்பி விடுகிறேன். இததை சவாடலாக ஏற்:காமல் சவாலாகவே யாழில் உங்களிடம் வைக்கிறேன். அதற்காக தனித்திரி திறப்பதற்கு யாழ் நிருவாகத்திடமும் அனுமதி கோருகிறேன்.தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் ஒழிந்திருந்து கல்லெறிதலும் குனியும்வரை குத்துவதற்கு காத்திருத்தலும் வேண்டாம். என் பதிவை நீக்கக்கோரிய அனைவரும் வாருங்கள் நான் தயார். நீங்கள்????????????????????

Edited by sathiri, 11 April 2012 - 01:42 PM.

 • கிருபன், சுபேஸ் and கோமகன் like this
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#151 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 11 April 2012 - 01:47 PM

இத் தொடரை தொடங்கியபொழுது நான் எழுதியது பலர் மறந்திருக்கலாம் எனவே மீள் பதிவு செய்கிறேன்

இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.

ஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......

Edited by sathiri, 11 April 2012 - 01:48 PM.

 • சுபேஸ் likes this
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#152 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 11 April 2012 - 02:16 PM

விசுகு உங்களிற்கு தனிமடல் இட்டுள்ளேன் பார்கக்வும் விவாதத்திற்கு தயாரானால் தனியாக ஒரு திரியை விரும்பிய பகுதியில் திறக்கவும் நன்றி நட்புடன் சாத்திரி
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#153 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,984 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 11 April 2012 - 07:24 PM

முதலில் நான் பார்த்தபோது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட காமம் என்னும் தலைப்பில் எழுதியது அப்படியே சில சொற்களை அழித்து மீண்டும் இடப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றம் கண்டுள்ளது. முதலில் இருந்தது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு நீக்கப்பட்டதால் மட்டுமே அதை நான் நிர்வாகத்திடம் கேட்டேன்.

மற்றும் படி
சாத்திரிக்கும் விசுகுக்குமான சிக்கலன்று இது.
இது தமிழர் நலன் மற்றும் வரலாறு சார்ந்தது.
நீங்கள் கதைகள் எழுதுவதை நான் என்றுமே வரவேற்பவன்.
ஆனால் பாதி கதை பாதி வரலாறு என்பது இது போன்ற சிக்கலான அதேநேரம் தடுத்தே ஆக வேண்டியநிலையை ஏற்படுத்திவிடுகிறது.

நாம் பேசவேண்டும். என்பது உண்மைதான்.
அதற்காக எது பற்றி பேசவேண்டும் என்றும் இருக்கிறது.
நீங்கள் காமம் பற்றி எழுதியது என்றால் அப்படியொரு விவாதம் வேண்டவே வேண்டாம்.
நன்றி.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#154 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 11 April 2012 - 07:48 PM

முதலில் நான் பார்த்தபோது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட காமம் என்னும் தலைப்பில் எழுதியது அப்படியே சில சொற்களை அழித்து மீண்டும் இடப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றம் கண்டுள்ளது. முதலில் இருந்தது நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு நீக்கப்பட்டதால் மட்டுமே அதை நான் நிர்வாகத்திடம் கேட்டேன்.

மற்றும் படி
சாத்திரிக்கும் விசுகுக்குமான சிக்கலன்று இது.
இது தமிழர் நலன் மற்றும் வரலாறு சார்ந்தது.
நீங்கள் கதைகள் எழுதுவதை நான் என்றுமே வரவேற்பவன்.
ஆனால் பாதி கதை பாதி வரலாறு என்பது இது போன்ற சிக்கலான அதேநேரம் தடுத்தே ஆக வேண்டியநிலையை ஏற்படுத்திவிடுகிறது.

நாம் பேசவேண்டும். என்பது உண்மைதான்.
அதற்காக எது பற்றி பேசவேண்டும் என்றும் இருக்கிறது.
நீங்கள் காமம் பற்றி எழுதியது என்றால் அப்படியொரு விவாதம் வேண்டவே வேண்டாம்.
நன்றி.


விசுகு நான் வரலாறு எழுதுவதாக எங்கும் குறிப்பிடவில்லை அதே நேரம் நான் வரலாற்று பதிவாளரோ ஆய்வாளரோ ஆசிரியரோ அல்ல. அதற்காகத்தான் ஆரம்பத்தில் நான் எழுதிய குறிப்பினை மீனவும் இங்கு இணைத்தேன்.

என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.

அதே நேரம் நான் நீக்கிய பகுதிகள் என் வலைப்பக்த்தில் அப்படியே தான் இருக்கின்றது. அதில்தமிழினத்திற்கு எதிரானது அல்லது தமிழர் நலனிற்கு எதிராக என்னென்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பதனை தனித்தனியே பிரித்து அடிக்கோடிட்டு காட்டி விவாதத்திற்கான தனியொரு திரியை விரும்பிய பகுதியில் திறக்கவும் நான் காத்திருக்கிறேன்.
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#155 உடையார்

உடையார்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,695 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 11 April 2012 - 11:56 PM

விசுகு நீங்கள் யாழில் அடிக்கடி எழுதுகின்ற வசனம் நாங்கள் நியை போசவேணும் நிறைய விவாதிக்கவேணும் என்கிற வசனத்தை உங்களை நோக்கியே திருப்பி விடுகிறேன். இததை சவாடலாக ஏற்:காமல் சவாலாகவே யாழில் உங்களிடம் வைக்கிறேன். அதற்காக தனித்திரி திறப்பதற்கு யாழ் நிருவாகத்திடமும் அனுமதி கோருகிறேன்.தமிழ் தேசியத்தின் போர்வைக்குள் ஒழிந்திருந்து கல்லெறிதலும் குனியும்வரை குத்துவதற்கு காத்திருத்தலும் வேண்டாம். என் பதிவை நீக்கக்கோரிய அனைவரும் வாருங்கள் நான் தயார். நீங்கள்????????????????????


இப்ப தேவையில்லை, இப்பதான் கொஞ்சம் அமைதியாக யாழ் போய்கிட்டிருக்கு, அத்துடன் வரும் மாதம் இன்னும் பல வலிகளை தாங்கி வருகின்றது
 • தமிழினி likes this
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#156 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,355 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 12 April 2012 - 09:08 PM

வணக்கம் நிழலி கதைகதையாம் பகுதியில் ஜீவா என்னை நோக்கி வைத்த கேள்விகளிற்கு பதிலை அதே பகுதியில் வைக்கவா அல்லது அதனை நிருவாகம் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தபோகிறீர்களா என்பதை அறியத்தரவும் பின்னர் நான் பதில் எழுதத் தொடங்கியபின்னர் அங்கு என் கருத்துக்களை நீங்கள் நீக்ககூடாது என்பதற்காகவே இதனை கேட்கிறேன் காரணம் நான் வைக்கு பதில் கருத்து அனைத்து ஆதாரங்களுடனும் வைக்கப்படும் என்பதால் பின்னர் யாரும் வந்து கூப்பாடு போடக்கூடாது எனவே உங்கள் பதில் கண்டதும் எனது பதில் கருத்துக்களை வைக்கத் தொடங்குகிறேன் ஜீவா உங்களிற்கும் தனிமடல் இட்டுள்ளேன்எனது தளத்தில் படித்ததை யாழில்தான் கேள்விகள் கேட்கவேண்டும் என எவ்வித கடப்பாடும் இல்லை அதனை என்னுடைய தளத்திலேயே கேட்கலாம் அதற்கான பதிலையும் அங்கு நான் தருவேன் நிருவாகம் அனுமதிக்கும் பகுதியில் என் பதில்கள் ஆதாரங்களுடன் நான் எழுதத் தயார். அனுமதி கேட்டதன் காரணம் நான் எழுதி முடித்து விட்டு அதை இணைக்க பிறகு அதனை நீக்கிவிட்டால் நான் தந்த பதில்கள் விரயமாகிவிடும் அதனால்தான் அவர்கள் அனுமதியோடு எழுத நினைத்துள்ளேன் நன்றி

Edited by sathiri, 12 April 2012 - 09:25 PM.

மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#157 சுபேஸ்

சுபேஸ்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,594 posts
 • Gender:Male
 • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 12 April 2012 - 09:44 PM

வணக்கம் நிழலி கதைகதையாம் பகுதியில் ஜீவா என்னை நோக்கி வைத்த கேள்விகளிற்கு பதிலை அதே பகுதியில் வைக்கவா அல்லது அதனை நிருவாகம் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தபோகிறீர்களா என்பதை அறியத்தரவும் பின்னர் நான் பதில் எழுதத் தொடங்கியபின்னர் அங்கு என் கருத்துக்களை நீங்கள் நீக்ககூடாது என்பதற்காகவே இதனை கேட்கிறேன் காரணம் நான் வைக்கு பதில் கருத்து அனைத்து ஆதாரங்களுடனும் வைக்கப்படும் என்பதால் பின்னர் யாரும் வந்து கூப்பாடு போடக்கூடாது எனவே உங்கள் பதில் கண்டதும் எனது பதில் கருத்துக்களை வைக்கத் தொடங்குகிறேன் ஜீவா உங்களிற்கும் தனிமடல் இட்டுள்ளேன் நிருவாகம் அனுமதிக்கும் பகுதியில் என் பதில்கள் ஆதாரங்களுடன் நான் எழுதத் தயார். அனுமதி கேட்டதன் காரணம் நான் எழுதி முடித்து விட்டு அதை இணைக்க பிறகு அதனை நீக்கிவிட்டால் நான் தந்த பதில்கள் விரயமாகிவிடும் அதனால்தான் அவர்கள் அனுமதியோடு எழுத நினைத்துள்ளேன் நன்றி


நிச்சயம் நிர்வாகம் இதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்....சாத்திரி அண்ணை சரியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்....இது எமது போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வைக் குடுக்கும் என்பதை சாத்திரி அண்ணை மறக்கக் கூடாது...மிகப்பெரிய அதிர்வென்றால் சாதாரணமாக் இதை எடுக்கமுடியாது...ஒரு இனம் கண்ணை மூடிக்கொண்டு புலிகள் மேல் கட்டிவைத்திருக்கும் நம்பிக்கைகள் தகரும் இடம் இது...ஆதாரங்கள் பொய்யானவையாக இருந்தால் இதுவரையும்,இனிமேலும் போராட்டம் பற்றி எழுதும் உங்கள் எழுத்துக்கள் கேலிக்குரியவை ஆகிவிடும்...போராட்டம் பற்றிய பதிவுகளை எழுதும் தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்...உண்மையாக இருந்துவிட்டால் இங்கு பல மாய விம்பங்கள் தகரும்..எனவே ஆதாரங்கள் மிகச்சரியானவையாக அசைக்க முடியாதவையாக இருக்க வேண்டும்..இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருங்கள்...இல்லாவிட்டால் இதுவரை எங்களைப் போன்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் மேல் வைத்திருக்கும் கருத்து நேர்மை தலைகுனியும்...பொய்யான மாயைகளில் நாங்கள் வாழ்கிறோமானால் அவை களையப்படவேண்டும்...எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் பகுத்தறிந்து வாழும் மனிதர்களாக இருக்கவேண்டும்..எனவே உண்மைகள என்றால் யாருக்கும் தயங்காமல் எழுதுங்கள்....உண்மைகள் உங்கள் பக்கம் இருந்தால் அதை எழுத யாருக்கும் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை...

Edited by சுபேஸ், 12 April 2012 - 11:46 PM.

 • Thumpalayan and ஆரதி like this

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

 

Arguing with stupid people is like killing the mosquito on your cheek...... :D 

 

www.theeraanathi.blogspot.com/


#158 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,129 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 13 April 2012 - 12:32 AM

வணக்கம் நிழலி கதைகதையாம் பகுதியில் ஜீவா என்னை நோக்கி வைத்த கேள்விகளிற்கு பதிலை அதே பகுதியில் வைக்கவா அல்லது அதனை நிருவாகம் நாற்சந்தி பகுதிக்கு நகர்த்தபோகிறீர்களா என்பதை அறியத்தரவும் பின்னர் நான் பதில் எழுதத் தொடங்கியபின்னர் அங்கு என் கருத்துக்களை நீங்கள் நீக்ககூடாது என்பதற்காகவே இதனை கேட்கிறேன் காரணம் நான் வைக்கு பதில் கருத்து அனைத்து ஆதாரங்களுடனும் வைக்கப்படும் என்பதால் பின்னர் யாரும் வந்து கூப்பாடு போடக்கூடாது எனவே உங்கள் பதில் கண்டதும் எனது பதில் கருத்துக்களை வைக்கத் தொடங்குகிறேன் ஜீவா உங்களிற்கும் தனிமடல் இட்டுள்ளேன்எனது தளத்தில் படித்ததை யாழில்தான் கேள்விகள் கேட்கவேண்டும் என எவ்வித கடப்பாடும் இல்லை அதனை என்னுடைய தளத்திலேயே கேட்கலாம் அதற்கான பதிலையும் அங்கு நான் தருவேன் நிருவாகம் அனுமதிக்கும் பகுதியில் என் பதில்கள் ஆதாரங்களுடன் நான் எழுதத் தயார். அனுமதி கேட்டதன் காரணம் நான் எழுதி முடித்து விட்டு அதை இணைக்க பிறகு அதனை நீக்கிவிட்டால் நான் தந்த பதில்கள் விரயமாகிவிடும் அதனால்தான் அவர்கள் அனுமதியோடு எழுத நினைத்துள்ளேன் நன்றிநிச்சயம் நிர்வாகம் இதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும்....சாத்திரி அண்ணை சரியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்....இது எமது போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வைக் குடுக்கும் என்பதை சாத்திரி அண்ணை மறக்கக் கூடாது...மிகப்பெரிய அதிர்வென்றால் சாதாரணமாக் இதை எடுக்கமுடியாது...ஒரு இனம் கண்ணை மூடிக்கொண்டு புலிகள் மேல் கட்டிவைத்திருக்கும் நம்பிக்கைகள் தகரும் இடம் இது...ஆதாரங்கள் பொய்யானவையாக இருந்தால் இதுவரையும்,இனிமேலும் போராட்டம் பற்றி எழுதும் உங்கள் எழுத்துக்கள் கேலிக்குரியவை ஆகிவிடும்...போராட்டம் பற்றிய பதிவுகளை எழுதும் தார்மீக உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்...உண்மையாக இருந்துவிட்டால் இங்கு பல மாய விம்பங்கள் தகரும்..எனவே ஆதாரங்கள் மிகச்சரியானவையாக அசைக்க முடியாதவையாக இருக்க வேண்டும்..இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருங்கள்...இல்லாவிட்டால் இதுவரை எங்களைப் போன்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் மேல் வைத்திருக்கும் கருத்து நேர்மை தலைகுனியும்...பொய்யான மாயைகளில் நாங்கள் வாழ்கிறோமானால் அவை களையப்படவேண்டும்...எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் பகுத்தறிந்து வாழும் மனிதர்களாக இருக்கவேண்டும்..எனவே உண்மைகள என்றால் யாருக்கும் தயங்காமல் எழுதுங்கள்....உண்மைகள் உங்கள் பக்கம் இருந்தால் அதை எழுத யாருக்கும் நீங்கள் அஞ்சவேண்டியதில்லை...


எம் விடுதலைப் போராட்டத்தினை மீள் விமர்சனம் செய்வதன் மூலம் இனி வரும் சந்ததிகள் நாம் விட்ட தவறுகளை விடக்கூடாது என்ற ரீதியான ஆரோக்கியமான விவாதங்களே இன்று எமக்கு மிக அவசியமானது. முள்ளிவாய்க்காலின் முடிவிற்கு காரணமான எத்தனையோ விடயங்கள், நபர்கள் பற்றிய விடயங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இவை ஆதாரபூர்வமாக வெளிவருவதும் அவசியமானது. ஆனால் போராளிகளின் தனி மனித வாழ்வில் நிகழும் விடயங்களை பற்றி வெளியில் சொல்வது எமக்கு இன்றைய தேவை அல்ல. போராட்டம் மீதான மீள்பார்வைக்குப் பதிலாக போராளிகளின் மீதான விமர்சனம் இன்றைய நிலையில் தேவையற்றது.

மாவீரர்களும், களமாடி காயமடைந்த போராளிகளும், போராடி சிறை சென்று வாடும் ஏராளமானவர்களும், ஒரு கட்டத்தில் போராடி தாயக விடுதலைக்கு தம்மாலான பங்களிப்பை தந்து விட்டு பின் குடும்ப வாழ்வுக்கு திரும்பியவர்களும் (போராட்டத்துக்கும் மக்களுக்கும் துரோகம் செய்தவர்கள் நீங்கலாக) என்றுமே புனிதமானவர்களாகவே பார்க்கப்படல் வேண்டும். இந்த போராளிகள் மீதான புனிதத்தை உடைத்து நாம் அடையப் போவதும் ஒன்றும் இல்லை.

யாழின் புதிய விதிகளில் ஒன்று "தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" என்பது. இந்த விதியில் கூறப்பட்டுள்ள போராளிகள் என்பதன் பதம் புலிகளில் இணைந்து போராடியவர்களை மட்டும் குறிப்பதற்கு அல்ல; ஏனைய இயக்கங்களில் இருந்து மக்களின் விடுதலைக்காக மட்டும் போராடிய அனைவர்களையும் குறிப்பதற்கானது. இந்த விதியின் படி, போராளிகள் பற்றிய அவதூறான விடயங்கள் நிச்சயம் அகற்றப்படும்.

சாத்திரி எழுதி இருக்கின்ற மாதிரி ஜீவா சாத்திரியின் புளொக்கில் விரும்பினால் உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஆனால் யாழில் அதற்கான கேள்விகளையும் பதில்களையும் தொடரும் போது கள விதிகளுக்கு ஏற்ப அவற்றை மட்டுறுத்த வேண்டிய தேவை கண்டிப்பாக எமக்கு இருக்கு. இதனை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்

நன்றி வணக்கம்
 • சுவைப்பிரியன், விசுகு, இணையவன் and 2 others like this

#159 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,984 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 13 April 2012 - 08:19 AM

மாவீரர்களும், களமாடி காயமடைந்த போராளிகளும், போராடி சிறை சென்று வாடும் ஏராளமானவர்களும், ஒரு கட்டத்தில் போராடி தாயக விடுதலைக்கு தம்மாலான பங்களிப்பை தந்து விட்டு பின் குடும்ப வாழ்வுக்கு திரும்பியவர்களும் (போராட்டத்துக்கும் மக்களுக்கும் துரோகம் செய்தவர்கள் நீங்கலாக) என்றுமே புனிதமானவர்களாகவே பார்க்கப்படல் வேண்டும். இந்த போராளிகள் மீதான புனிதத்தை உடைத்து நாம் அடையப் போவதும் ஒன்றும் இல்லை.

யாழின் புதிய விதிகளில் ஒன்று "தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றகத் தவிர்க்கப்படல் வேண்டும்" என்பது. இந்த விதியில் கூறப்பட்டுள்ள போராளிகள் என்பதன் பதம் புலிகளில் இணைந்து போராடியவர்களை மட்டும் குறிப்பதற்கு அல்ல; ஏனைய இயக்கங்களில் இருந்து மக்களின் விடுதலைக்காக மட்டும் போராடிய அனைவர்களையும் குறிப்பதற்கானது. இந்த விதியின் படி, போராளிகள் பற்றிய அவதூறான விடயங்கள் நிச்சயம் அகற்றப்படும்.

சாத்திரி எழுதி இருக்கின்ற மாதிரி ஜீவா சாத்திரியின் புளொக்கில் விரும்பினால் உங்கள் கேள்விகளை கேட்கலாம். ஆனால் யாழில் அதற்கான கேள்விகளையும் பதில்களையும் தொடரும் போது கள விதிகளுக்கு ஏற்ப அவற்றை மட்டுறுத்த வேண்டிய தேவை கண்டிப்பாக எமக்கு இருக்கு. இதனை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்

நன்றி வணக்கம்


100வீதம் இதுவே எனது நிலை.
நன்றி நிழலி.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#160 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 13 April 2012 - 09:45 AM

நிழலியின் பதிவுக்குப் பிறகு,விசுகண்ணா பதிவு போட முன்னர் சுபேஸ் இதில் ஒரு பதிவு போட்ட மாதிரி இருக்குது அதைக் காணேல்ல...அதில் ஒன்றும் அவர் தப்பாக எழுதவில்லையே நிர்வாகம் நீக்குவதற்கு என்ன நடந்தது :unsure:
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]