Jump to content


Orumanam
Photo

பூவுக்கும் பெயருண்டு


 • Please log in to reply
157 replies to this topic

#101 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 01 March 2012 - 11:40 AM

53 தும்பைப் பூ .

Posted Image

தும்பை (Leucas Aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. இலங்கையின் சில ஊர்களிற் தும்பங்காயைக் கறி சமைத்து உண்பர்.


Posted Image

இலையின் மருத்துவ குணங்கள

1 .குடற் புழுக்களை வெளியேற்றும் .
2 .வயிற்று வலியைக் குணப்படுத்தும் .
3 .மாதவிலக்கைத் தூண்டும் .
4 .சளியை இளக்கி வெளிப்படுத்தும் .
http://ta.wikipedia....%AE%AA%E0%AF%88

54 துழாஅய் பூ .


Posted Image

Edited by கோமகன், 01 March 2012 - 11:43 AM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

ninaivu-illam

#102 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 01 March 2012 - 12:23 PM

அருமையான விடயங்களை பகிர்ந்த கோமகன் உங்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்.
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#103 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 01 March 2012 - 07:04 PM

கோமகன்! இவ்வளவு பொறுமையாக இருந்து இத்தொடரை முன்னெடுக்கின்றீர்கள்.அதுவும் இன்றையகால கட்டத்தில்.............வாழ்த்துக்கள். :wub:


மிக்க நன்றிகள் குசா அண்ணை உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) .

கோமகன் பூங்காவுக்குள் புகுந்தாலே குதுகலம்தான்.
பார்க்காத பூக்கள் எல்லாம் பார்க்கலாம் இங்கே.
பூங்காவனம் அமைத்த கோமகனுக்கு
இப்பூக்களினால் மாலை அணிவிக்கிறேன்.


உங்கள் எண்ணம் நிறைவேறும் செம்பகன் , மிக்க நன்றிகள் :) :) :) .

அருமையான விடயங்களை பகிர்ந்த கோமகன் உங்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்.


தமிழரசுவையும் கவர்ந்தால் அது ஆச்சரியம்தான் :lol: :lol: :D .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#104 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 02 March 2012 - 03:58 PM

55 தோன்றிப் பூ ( சுடர் பூந் தோன்றி ) .

Posted Image

இதைக் கார்திகைப் பூ அல்லது காந்தள் பூ என்றும் அழைப்பர்.


Posted Image


Posted Image


56 நந்திப் பூ ( நந்தியாவட்டை ) .


Posted Image

Posted Image


இந்தப் பூவானது தற்பொழுது நந்தியாவட்டைப் பூ என்று அழைக்கப்படுகின்றது.

Posted Image

Posted Image

Edited by கோமகன், 02 March 2012 - 03:59 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#105 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 03 March 2012 - 04:19 PM

57 நரந்தம் பூ .

Posted Image

Posted Image

குறுந்தொகை 52, பனம்பாரனார்,

குறிஞ்சி திணை – தோழி சொன்னது

ஆர் களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறும் குவை இருங் கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே.


http://treesinsangam...-bitter-orange/

Posted Image
58 நறவம் பூ .

Posted Image

57 நரந்தம் பூ .

Posted Image

Posted Image

குறுந்தொகை 52, பனம்பாரனார்,

குறிஞ்சி திணை – தோழி சொன்னது

ஆர் களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறும் குவை இருங் கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே.


http://treesinsangam...-bitter-orange/

Posted Image
58 நறவம் பூ .

Posted Image


நரந்தம் பூவில் எனக்கு குளப்பமாக உள்ளது . யாராவது விளங்கப்படுத்தினால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#106 suvy

suvy

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,549 posts
 • Gender:Male
 • Location:France

Posted 03 March 2012 - 06:51 PM

தாழம் பூவில் மிகவும் சிறிய தங்கூசி போன்ற வடிவில் பாம்பு இருக்கும். அது வேகமாக அசையாது, ஆனால் அதைக் கவனிக்காமல் கூந்தலில் சூடினால் காதுக்குள் போகச் சாத்தியம் உண்டு.

யாழ் இந்துவுக்கு பக்கத்தில் கொண்டலடிப் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. அங்கு கொண்டல் மரமும், வில்வ மரமும் அருகருகே தல விருட்சமாய் இருக்கின்றன! கொன்றைப் பூவின் நாடு அல்லியைச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.

தொடருங்கள் கோமகன்!! :D
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#107 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 04 March 2012 - 03:07 PM

59 நாகப் பூ ( நறும் புன்னாகம் ) .

Posted Image


Posted Image

சிறுபாணாற்றுப்படை .

ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார் .

நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்
மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை
பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை [116-125]


கருத்துரை :

மணம் வீசும் மலர்களையுடைய புன்னை, அகில் சந்தனம் ஆகிய மரங்களின் கட்டைகளை நீர்த் துறையிலே நீராடுகின்ற மகளிருக்குத் தெப்பமாக நீர்ப்பெருக்குக் கொணர்ந்து தருகின்ற குற்றமில்லாத பழமையான புகழினையுடைய, தொன்மையான பெரிய இலங்கையின் பெயரைத் தான் கருவிலே தோன்றிய போதே பெற்று, நல் இலங்கை நாட்டை ஆண்ட மன்னருள்ளும் குறையின்றி விளங்கிய குற்றமில்லாதவன். குறி தப்பாது வாளேந்தி வெற்றி பெற்ற வீரன். வலிமையில் புலியினைப் போன்றவன். ஓவியர் குடியிலே பிறந்தவன். பெருமைக்கு உரியவன். யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்புடைய வீரக்கழல் ஒளிவீசுகின்ற திருந்திய அடியினை உடையவன். பெண் யானைக் கூட்டங்களை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்த மழை போலும் கைகளை உடையவன். பல வாத்தியங்களை இசைக்கும் கூத்தர்களைப் பாதுகாப்பவன். பெரும் புகழினை உடையவன்.


Posted Image

இதற்குப் புன்னை என்ற பெயரும் உண்டு .


Posted Image

60 நாகப் பூ .

Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#108 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 05 March 2012 - 03:44 PM

61 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் ) .

Posted Image

Posted Image62 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) .

Posted Image


Posted Image


Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#109 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 06 March 2012 - 05:52 PM

63 பகன்றைப் பூ .

Posted Image

Posted Image

64 பசும்பிடிப்பூ .

Posted Image


Posted Image

ப தி ற் று ப் ப த் து
மன்னன் – பெருஞ்சேரல் இரும்பொறை .
பாடியவர் – அரிசில் கிழார் .


காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பு ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து (22 – 25)

http://treesinsangam...mysore-gamboge/

Posted Image

Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#110 sudalai maadan

sudalai maadan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 264 posts
 • Gender:Male

Posted 07 March 2012 - 01:26 PM

இது ஒரு பிரஜோசனம் உள்ள வேலை . பாராட்டுகள் அண்ணா , இவ்வளவு காலமும் சின்ன பூ, வெள்ளை பூ என்று குறிப்பு பெயர்களை தான் சொன்னான். இப்பதான் அதனுடைய உண்மையான பெயர் தெரிந்து கொண்டோம்

#111 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 07 March 2012 - 02:31 PM

இது ஒரு பிரஜோசனம் உள்ள வேலை . பாராட்டுகள் அண்ணா , இவ்வளவு காலமும் சின்ன பூ, வெள்ளை பூ என்று குறிப்பு பெயர்களை தான் சொன்னான். ப்பதான் அதனுடைய உண்மையான பெயர் தெரிந்து கொண்டோம்எல்லோரும் சேர்ந்து அறிவது மட்டும் அல்லாது , இந்தப் பெயர்களை நடைமுறையினில் பாவிப்பதும் அத்தியாவசியமாகின்றது . மிக்கநன்றிகள் சுடலைமாடன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#112 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 07 March 2012 - 02:36 PM

தாழம் பூவில் மிகவும் சிறிய தங்கூசி போன்ற வடிவில் பாம்பு இருக்கும். அது வேகமாக அசையாது, ஆனால் அதைக் கவனிக்காமல் கூந்தலில் சூடினால் காதுக்குள் போகச் சாத்தியம் உண்டு.

யாழ் இந்துவுக்கு பக்கத்தில் கொண்டலடிப் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. அங்கு கொண்டல் மரமும், வில்வ மரமும் அருகருகே தல விருட்சமாய் இருக்கின்றன! கொன்றைப் பூவின் நாடு அல்லியைச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.

தொடருங்கள் கோமகன்!! :Dஇந்தக் கொண்டலடிப் பிள்ளையார் கோயலடியெல்லாம் எங்கடை கட்டுப்பாட்டுக்குள்ளை இருந்தது :lol: :D . தாழம் பூ நாகத்தைப் பற்றி விளக்கமாகச் சொன்னதிற்கு மிக்க நன்றிகள் சுவியர் :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#113 Sembagan

Sembagan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 507 posts
 • Gender:Male

Posted 07 March 2012 - 07:14 PM

தாழம்பூவுக்குள் பாம்பு இருப்பதாகவும் அதனைப் பூ நாகம் என்று கூறுவதாகவும் கேள்வி.
பூ நாகம் என்றபெயரில் சிறிய குத்து வாளுக்கும் பெயர் உண்டு.

#114 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 07 March 2012 - 08:34 PM

தாழம்பூவுக்குள் பாம்பு இருப்பதாகவும் அதனைப் பூ நாகம் என்று கூறுவதாகவும் கேள்வி.
பூ நாகம் என்றபெயரில் சிறிய குத்து வாளுக்கும் பெயர் உண்டு.


மிக்க நன்றிகள் செம்பகன் பூ நாக விளக்கத்திற்கு . நானும் அப்பிடித் நினைக்கின்றேன் . ஆனால் , பூ நாகம் குறுவாள் இன்றுதான் உங்கள் மூலம் அறிகின்றேன் :) :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#115 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 07 March 2012 - 08:49 PM

65 பயனிப் பூ .

Posted Image


Posted Image


66 பலாசம் பூ .

Posted Image

Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#116 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 08 March 2012 - 11:55 AM

67 பாங்கர்ப் பூ .

Posted Image

நற்றிணை 98 குறிஞ்சி திணை – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, தலைவி சொன்னது .

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.


http://treesinsangam...oth-brush-tree/


Posted Image

Posted Image68 பாதிரிப் பூ ( தேங்கமழ் பாதிரி ).


Posted Image

குறுந்தொகை 147. பாலை திணை, -கோப்பெருஞ் சோழன் – தலைவன் சொன்னது.
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.


Posted Image

பாதிரி (Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
இதன் வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும்.
இதன் காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்.
இதன் பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது (சங்ககால மலர்கள்) கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறத
http://ta.wikipedia....%AE%B0%E0%AE%BF

நற்றிணை 52, பாலத்தனார், பாலை திணை – தலைவன் தன் நெஞ்சுக்கு சொன்னது .
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே.


Posted Image

அகநானூறு 99, பாலைப் பாடியப் பெருங்கடுங்கோ
பாலை திணை தலைவன் , தலைவியிடம் சொன்னது
வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
அதிரல் பரந்த அம்தண் பாதிரி
உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ
மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்
அணங்குடை நகரின் மணந்த பூவின்
நன்றே, கானம்; நயவரும் அம்ம,
கண்டிசின வாழியோ – குறுமகள்! நுந்தை
அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,
பிடிமிடை களிற்றின் தோன்றும்
குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ


http://treesinsangam...r-trumpet-tree/

Posted Image

Edited by கோமகன், 08 March 2012 - 12:10 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#117 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 08 March 2012 - 12:23 PM

61 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் ) .

Posted Image

Posted Image62 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) .

Posted Image


Posted Image


Posted Image


கோமகன் இணைப்புக்கு நன்றி,
இந்த பூவை நாங்கள் அல்லிபூ என்றுதான் அழைப்போம். :(

Posted Image

இந்தப்பூக்களை நான் எமது ஊரில் பத்திருக்கின்றேன்.
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#118 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 08 March 2012 - 10:03 PM

கோமகன் இணைப்புக்கு நன்றி,
இந்த பூவை நாங்கள் அல்லிபூ என்றுதான் அழைப்போம். :(

Posted Image

இந்தப்பூக்களை நான் எமது ஊரில் பத்திருக்கின்றேன்.


மிக்க நன்றிகள் தமிழரசு உங்கள் கருத்துகளுக்கு :) :) :) .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#119 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 09 March 2012 - 08:17 PM

69 பாரம்பூ .

Posted Image

இந்தப் பூவானது பருத்திப் பூ என்றும் அழைக்கப்படும் .

70 பாலைப் பூ .


Posted Image


ஐங்குறுநூறு 317

ஓதலாந்தையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

சூழ்கம் வம்மோ தோழி பாழ் பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே
.
http://treesinsangam...ivorywood-tree/

பாலைப் பழம் .
Posted Image
 • கவிதை likes this
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#120 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 March 2012 - 04:01 PM

71 பிடவம் பூ .

Posted Image

இது இந்தப் பூவுடன் சம்பந்தமில்லாவிட்டாலும் இந்தச் சங்ககாலப் பாடல் சொல்லும் செய்திக்காக இதில் இணைப்பது அத்தியாவசியமாக எனக்குப் படுகின்றது . உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன் .

பூங்கணுத்திரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் என்று பிரித்துப் பார்க்கின்றனர். ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் 27 நாள்மீன் வரிசையில் 12ஆவது மீன். உத்திரை நாளில்(நட்சத்திரத்தில்) பிறந்த இவருக்கு உத்திரை என்று பெயரிட்டனர். புலவராக விளங்கியதால் இவரை உத்திரையார் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கலாயினர். இவரது கண்ணில் பூ விழுந்திருந்தது. அதனால் இவரைப் பூங்கண் உத்திரையார் என்றனர்.
சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு 277 ஆகியவை

மூங்கில் இலையில் தூங்கும் பனிநீர் போல தாயின் கண்ணில் மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளி தொங்குகிறது. அவள் தலைமுடி மீன் உண்ணும் கொக்கின் தூவி போல் வெளுத்திருக்கிறது. அவள் மகன் போருக்குச் சென்றான். போரில் மாண்டான். எனினும் பகைவனின் களிற்றை வெட்டி வீழ்த்திய பின் மாண்டான். இதனை அறிந்தபோது அந்தத் தாய் மகனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைந்தாளாம். புறநானூறு 277

http://ta.wikipedia....%AE%B0%E0%AF%8D


Posted Image

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 154ஆம் பாடலாக உள்ளது.

போர்வினை முடிந்து மனை திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.
பகுவாய்த் தேரை மழை பொழிந்ததால் தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கறங்குகிறது(ஒலிக்கிறது).
பிடவம் பிடவம் பூக்கள் நுண்மணல் போல் வழியெங்கும் வரிவரியாக வரித்துக் கிடக்கின்றன.
கோடல் பாம்பு படமெடுப்பது போல கோடல் பூ பூத்திருக்கிறது.
இரலை இரலைமான் ஊற்றோடும் அறல்நீரைப் பருகித் தன் துணையோடு படுத்துக்கிடக்கிறது.
வலவ! நம் தேரில் பூட்டிய குதிரை ஓடும் மணியோசை காடு முழுவதும் கேட்கும்படி தேரை ஓட்டுக!

(தேர்க்காலில் அகப்பட்டுக்கொள்ளாமல் அவை விலகட்டும்).
நான் அம்மா அரிவையைத் துன்னவேண்டும்.
 • துன்னல் = தைத்தல், புணர்தல்
http://ta.wikipedia....%AE%B0%E0%AF%8D


72 பிண்டிப் பூ (பல் பூம் பிண்டி ) .

Posted Image

இந்தப் பூவும் மரமும் இப்பொழுது அசோகமரம் , அசோகப்பூ என்று அழைக்கப்படுகின்றது .

குறுந்தொகை 214, கூடலூர்கிழார், குறிஞ்சி – குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அம் சில் ஓதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல
அரலை மாலை சூட்டி
ஏம் உற்றன்று இ அழுங்கல் ஊரே.
Posted Image


நற்றிணை 244, கூற்றங்குமரனார், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது .

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய்
தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.


Posted Image


நற்றிணை 376, கபிலர், குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ அறன் இல் யாயே.http://treesinsangam...%88-asoka-tree/

Edited by கோமகன், 10 March 2012 - 04:03 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]