Jump to content


Orumanam
Photo

பூவுக்கும் பெயருண்டு


 • Please log in to reply
157 replies to this topic

#141 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 April 2012 - 01:19 PM

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!


மிக்க நன்றிகள் இசை உங்கள் வரவேற்பிற்கு .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

ninaivu-illam

#142 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 April 2012 - 01:29 PM

யாழிலை கனபேர் உங்களுக்கு பூ போட நினைச்சவை ஆனாலும் மீண்டும் வந்து யாழிற்கு பூ போடுவது மகிழ்ச்சிஉங்கடை சாத்திரத்தில கிரகநிலையள் அப்பிடி இருக்கோ தெரியாது . உங்கள் கருத்திற்கு நன்றிகள் சாத்திரி .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#143 Sembagan

Sembagan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 507 posts
 • Gender:Male

Posted 10 April 2012 - 03:47 PM

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!

#144 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 11 April 2012 - 03:45 AM

வணக்கம் கோமகன்..! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்..!


மிக்க நன்றிகள் செம்பகன். விரவில் பூந்தோட்டம் திறக்கும் .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#145 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 24 April 2012 - 06:25 PM

மௌவல் பூ 83
Posted Image

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன. சங்கநூல் குறிப்புகள்
 • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.
 • குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.
 • இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.
 • ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.
 • மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.
 • மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.
 • சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.
 • நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்.
http://ta.wikipedia.....org/wiki/மௌவல்Posted Image

வகுளம் பூ 84

Posted Image


பாறையில் மலர் குவித்த பாவையர்
———– ———— ———– வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான்பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க்
காயா,
விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை பிடவம், சிறுமா ரோடம்,
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள்தாள் தாமரை
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை
அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்
அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ(61-98)

கருத்துரை - வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், ஆம்பல் மலர்,
குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், செங்கோட்டு வேரி, இனிய கனிகளைத்
தரும் மாம்பூ , செம்மணிப்பூ, தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,வில்வம்,
தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரம், வடவனம், வாகைப்பூ, வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,
பஞ்சாய்க்கோரை, வெண்காக்கண மலர், நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ, பயினிப்பூ, வானிப்பூ, பல கொத்துக்களையுடைய குரவ மலர், பச்சிலைப்பூ, மகிழம்பூ, கொத்தாய் மலர்ந்திருக்கும் காயாம்பூ, விரிந்த பூக்களையுடைய ஆவிரம், சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, சிறு பூளை,குன்றிப்பூ, முருக்கிலை, மருதப்பூ, விரிந்த பூக்களையுடைய கோங்கமலர், மஞ்சாடிப்பூ, திலக மரத்தின் மலர், தேன் மணக்கும் பாதிரிப்பூ, செருந்தி மலர், புனலி, பெரிய குளிர்ச்சியான சண்பக மலர், கரந்தைப்பூ, காட்டு மல்லிகைப்பூ, மிக்க மணம் வீசும் மாம்பூ, தில்லைப்பூ, பாலைப்பூ, கல்லில் படர்ந்திருக்கும் முல்லைப்பூ, கஞ்சங்குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்டிருக்கும் மணம் வீசும் நெய்தற்பூ, தெங்கம்பாளைப்பூ, செம்முல்லைப்பூ, முள்ளினையுடைய தண்டினைக் கொண்ட தாமரைப்பூ , ஞாழல்பூ, முல்லைப்பூ, குளிர்ந்த கொகுடிப்பூ, பவழமல்லிப்பூ, சாதிப்பூ, கருந்தாமக் கொடிப்பூ, கோடல்பூ, தாழைப்பூ, தாது முதிர்ந்து மணம் வீசும் சுரபுன்னைப்பூ, காஞ்சிப்பூ, நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேன் நாறும் கருங்குவளைப்பூ,பாங்கர்ப்பூ, ஓமைப்பூ, மரவப்பூ, பல பூக்களும் நெருங்கியிருக்கும் தணக்கம்பூ, இண்டம்பூ, இலவம்பூ, கொத்தாய் தொங்கும் சுரபுன்னைப்பூ, அடும்பம்பூ, ஆத்திப்பூ, நீண்ட கொடியில் மலரும் அவரைப்பூ, பகன்றைப்பூ, பலாசம்பூ, அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பைப்பூ, துளசிப்பூ, விளக்கின் ஒளி போன்றிருக்கும் தோன்றிப்பூ, நந்திவட்டப்பூ, நறவம்பூ, மணம் வீசும் புன்னாகம் பூ, பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பசுமையான குருக்கத்தி மலர், சந்தன மலர், அகிற்பூ, மிக்க மணத்தினையுடைய பெரிய புன்னைப்பூ, நாரத்தம்பூ, நாகப்பூ, நள்ளிரவிலே மணம் வீசும் இருவாட்சி மலர், கரிய பெரிய குருந்த மலர், வேங்கை மலர் முதலிய பிற பூக்களையும் சிவப்பு நிறத்தைப் பரப்பி வைத்தாற் போன்றிருக்கும் மிக்க அழகுடைய செம்பூவினையும் அங்கு இருந்த மிக்க காடு அடர்ந்த பகுதியில் மனமகிழ்ச்சியோடு உலவித் திரிந்து, ஆசையோடு மலர்களைப் பறித்து வந்தோம். மழை பெய்ததால்
கழுவி சுத்தம் செய்யப்பெற்ற அகன்ற மலைப்பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தோம்.


http://treesinsangam...ளம்-bakul-tree/

Edited by கோமகன், 25 April 2012 - 04:23 AM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#146 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 25 April 2012 - 07:26 PM

வஞ்சிப் பூ 85

Posted Imageவடவனம் பூ 86 ( துளசிப் பூ ) .

Posted Image

Posted Image

வடவனம் என்னும் மலரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒரே ஒரு இடத்தில் மட்டுந்தான் உள்ளது. துழாஅய் என்னும் மலரும் 99 மலர்களில் ஒன்றாக எண்ணப்படுவதால் வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம். துளசி போலவே இருக்கும் மற்றொரு செடி திருநீற்றுப்பச்சை.
குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறும் 99 மலர்களின் தொகுப்பில் அது இடம்பெற்றுள்ளது.

http://ta.wikipedia....org/wiki/வடவனம்

Posted Image

Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#147 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 26 April 2012 - 06:14 PM

வழை மரப் பூ ( கொங்கு முதிர் நறுவழை ) 87 .

Posted Image

வழை என்பது சுரபுன்னை மரத்தைக் குறிக்கும். 'கொங்கு முதிர் நறு வழை' எனக் குறிஞ்சிப்பாட்டு விளக்கம் தருகிறது. அதன்படி இந்தப் பூவில் மகரந்தப்பொடிகள் முதிர்ந்து கிடக்கும் காட்சியை இந்தப் படத்தில் கண்டு இன்புறலாம். வழைமரம் பற்றிச் சங்கப்பாடல்கள் தரும் செய்திகள்
 • ஆய் அண்டிரனின் குடிப்பூ வழை.
 • குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று வழை.
 • வையை ஆறு அடித்துக்கொண்டுவந்த மலர்களில் ஒன்று.
 • நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
 • கழை என்னும் பெருமூங்கில், ஆசினிப்பலா போன்ற மரங்களுடன் சேர்ந்து வளரும்.
 • குமணன் ஆண்ட முதிரமலையில் கழை வளர்ந்திருந்த்து.
 • தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்த்து.
 • யானை விரும்பும் தழைமரம்.
 • மூங்கில் நெல் அரிசி போட்டுக் குறமகள் வழை வளர்ந்த மலைச்சாரல் மணக்கும்படி சோறு ஆக்கினாள்.
 • வழை வளர்ந்த காடு நீர்வளம் மிக்கது ஆகையால் பாலைநிலமாக மாறுவதில்லை.
 • வழைக்காட்டில் வருடை மான்களை மலைமக்கள் வளர்ப்பர்.
http://ta.wikipedia....g/wiki/வழை_மரம்

Posted Image

குறுந்தொகை 260, கல்லாடனார், பாலை திணை – தோழி தலைவியிடம் சொன்னது .

குருகும் இரு விசும்பு இவரும் புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே
சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும்
வருவர் கொல் வாழி தோழி பொருவார்
மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்துக்
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.


http://treesinsangam.../வழை-சுரபுன்னை/

Posted Image

வள்ளிப் பூ 88 .


Posted Image

Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#148 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 27 April 2012 - 03:18 PM

வாகைப் பூ 89 .

Posted Image

குறுந்தொகை 39. இயற்றியவர் ஔவையார், பாலை திணை – தலைவி சொன்னது .

வெந்திறற் கடுவளி பொங்காப் போந்தென
நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பநம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.


வாகை மரம் உழிஞ்சில் மரம் என்றும் அழைக்கப்படும் .

http://treesinsangam...ை-sirissa-tree/

Posted Image

வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீர்கமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகைச் சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

http://ta.wikipedia....a.org/wiki/வாகை


வாழைப் பூ 90 .

Posted Image


Posted Image

பட்டினப்பாலை, ஆசிரியர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார் .

மருத நிலத்தின் வளமை

விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)


கருத்துரை :

சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சி செடிகளும் காணப்படும்.

http://treesinsangam...ழை-banana-tree/

Posted Image

வாழை அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். அனைத்து இன வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பப்புவா நியூ கினியில் கொல்லைப்படுத்தப்பட்டது. இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை மரமாக கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு போலித்தண்டாகும் . சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும் ஆனால வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துகினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.
http://ta.wikipedia....a.org/wiki/வாழை

Posted Image

Edited by கோமகன், 27 April 2012 - 03:21 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#149 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,114 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 27 April 2012 - 04:07 PM

வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. இதில் பல பூக்களை அல்லது பூக்களின் தமிழ் பெயரை அறியக்கூடியதாக உள்ளது... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....

#150 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 27 April 2012 - 06:55 PM

வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா. இதில் பல பூக்களை அல்லது பூக்களின் தமிழ் பெயரை அறியக்கூடியதாக உள்ளது... உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்....


மிக்க நன்றிகள் காதல் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . இத்தொடர் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றது . இந்த பூந்தோட்டத்தில் உங்களைப்போலப் பல இளையவர்கள் வந்தது தோட்டக்காறனுக்குச் சந்தோசமே .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#151 Sembagan

Sembagan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 507 posts
 • Gender:Male

Posted 28 April 2012 - 10:14 AM

மனதுக்கு இதமளிக்கும்
மலர்ச்சோலை - என்றும்
மணங்கமழ வேண்டும்.
மனமாற வந்தவர்கள் மலர்பார்த்து
மகிழ்வுடனே திரும்ப வேண்டும்.

#152 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 28 April 2012 - 03:03 PM

மனதுக்கு இதமளிக்கும்
மலர்ச்சோலை - என்றும்
மணங்கமழ வேண்டும்.
மனமாற வந்தவர்கள் மலர்பார்த்து
மகிழ்வுடனே திரும்ப வேண்டும்.


மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் குறுங்கவிக்கு . மீண்டும் ஒரு சுவாரசியமான குறுந்தொடரில் சந்திப்போம் .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#153 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,207 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 28 April 2012 - 03:28 PM

Posted Image


படத்தை பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கப்பா.#154 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 28 April 2012 - 03:48 PM

வானிப் பூ 91 .

Posted Image

வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.
இளஞ்சேரல் இரும்பொறை ‘சாந்துவரு வானி நீரினும் தண் சாயலன்’ எனப் போற்றப்படுகிறான்.
வானியாறு இக்காலத்தில் சிறுவானியாறு என வழங்கப்படுகிறது. இது கோயமுத்தூருக்கு நீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றுப்படுகையில் வானி மலர் மிகுந்திருந்தது பற்றி இவ்வாற்றுக்கு இப் பெயர் தோன்றியது.

http://ta.wikipedia..../wiki/வானி_மலர்

Posted Image

வெட்சிப் பூ 92 .

Posted ImagePosted Image

வெட்சி (இட்லிப் பூ அல்லது இட்லி பூ) என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன.
உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது.
இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது.

http://ta.wikipedia....org/wiki/வெட்சி

Posted Image

Posted Image

வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.
இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
இது ஊசி போல் அரும்பு விடும்.
வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ.
செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர்.


http://ta.wikipedia....org/wiki/வெட்சி

Posted Image

Posted Image
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#155 Volcano

Volcano

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,284 posts
 • Gender:Male
 • Location:Canada

Posted 28 April 2012 - 08:34 PM

வெட்சி பூ என்பது "எச்ரோச" போல இருக்கு. சில பூக்கள் தெரிந்திருந்தாலும் அவற்றை வெறும் பல பூக்கள் உடன் பார்க்க மகிழ்சியாக இருக்கிறது.
மௌவல், என்னும் பூவை பற்றி எழுதும் போது அந்த பாடலையும் சேர்த்திருக்கலாம்


#156 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 29 April 2012 - 02:21 PM

வெட்சி பூ என்பது "எச்ரோச" போல இருக்கு. சில பூக்கள் தெரிந்திருந்தாலும் அவற்றை வெறும் பல பூக்கள் உடன் பார்க்க மகிழ்சியாக இருக்கிறது.
மௌவல், என்னும் பூவை பற்றி எழுதும் போது அந்த பாடலையும் சேர்த்திருக்கலாம்
http://www.youtube.com/watch?v=-UAsvNGGl3k&feature=related


மிக்க நன்றிகள் எரிமலை உங்கள் கருத்துக்களுக்கும் , ஒளியிழை இணைப்பிற்கும் .
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#157 துளசி

துளசி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,114 posts
 • Gender:Female
 • Location:கடலுக்கடியில்
 • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 29 April 2012 - 02:56 PM

Posted Image


படத்தை பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கப்பா.

குளிர்ச்சியாய் இருக்கிறதை பார்த்து வரும் மகிழ்ச்சியா அல்லது உடனே வாழைப்பூ வறை சாப்பிடுற எண்ணமோ? :lol: :D விட்டு வைக்க மாட்டீர்களே.. :icon_idea:

#158 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 29 April 2012 - 05:27 PM

வேங்கைப் பூ 93 .
Posted Image

URL=http://img571.imageshack.us/i/27399569.jpg/]Posted Image[/URL]

வேங்கை (Pterocarpus marsupium) எனப்படுவது நடுத்தர அளவிற் பெரியதான இலையுதிர் தாவரம் ஒன்றாகும். இது 30 மீ உயரம் வரை வளரக் கூடியது. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டதான இம்மரம் இந்தியாவின் கேரள-கருநாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் காணப்படுகிறது.
வேங்கை மரத்தின் (வைரம், இலைகள், பூக்கள் உட்படப்) பல்வேறு பகுதிகளும் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்திற் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. வேங்கை மரவைரம் காயங்களை மூடவும், எரிவு மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சிமிலிப்பால் தேசிய வனப் பகுதியில் வாழும் கொல் இனத்தினர் வேங்கை மரப் பட்டையை மா மரப் பட்டை உட்பட வேறு சில மரங்களின் பட்டைகளுடன் அரைத்து பெருங்குடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர் . கன்னட மக்கள் வேங்கை மரவைரத்தால் ஒரு வகையான கண்ணாடி செய்து அதனை நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
கணையத்திலிருந்து இன்சுலினை மீளச் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு தாவரப் பொருள் வேங்கை மரப் பிசின் ஆகும்.
http://ta.wikipedia....ki/வேங்கை_(மரம்)

Posted Image

ஐங்குறுநூறு 208, கபிலர், குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்
கிழங்கு அகழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு
அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.

http://treesinsangam...ங்கை-kino-tree/

ஐங்குறு நூறு 276, கபிலர், தோழி தலைவனிடம் சொன்னது .

மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியல் அறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.

http://treesinsangam...ங்கை-kino-tree/

வேரல்ப் பூ (மூங்கில் , உந்துள் , கழை ) 94 .

வேரல் தற்பொழுது மூங்கில் என்று அழைக்கப்படுகின்றது . இதைக் கழை என்றும் உந்துள் என்றும் அழைப்பார்கள் .

Posted Image

குறுந்தொகை 18, இயற்றியவர் கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவனிடம் சொன்னது .

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!


கருத்துரை :
மூங்கிலை வேலியாகக் கொண்டவிடத்தில், வேரிலுள்ள கொம்புகளில் பழங்கள் தொங்கும் வேர்ப்பலா மரங்கள் நிறைந்த மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை ஆக்கிக் கொள்க! உன்னைத் தவிர யாரால் தலைவியின் இந்நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்புகளிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருந்தவாறு , தலைவியின் உயிரோ மிகச்சிறியது. அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.
http://treesinsangam...ூங்கில்-bamboo/

Posted Image

குறுந்தொகை , 201 பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சி திணை – தலைவி சொன்னது .*

அமிழ்தம் உண்க அயல் இல் ஆட்டி
பால் கலப்பு அன்ன தேக்கொக்கு அருந்துபு
நீல மென்சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்திஅயலது
முள் இல் அம்பணை
மூங்கில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வருமென் றாளே.

http://treesinsangam...ூங்கில்-bamboo/

Posted Image

அகநானூறு 12, கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவனிடம் சொன்னது .

யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
நல்வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

http://treesinsangam...ூங்கில்-bamboo/

Posted Image

Edited by கோமகன், 29 April 2012 - 05:29 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]