Jump to content


Tamil Star News
Photo

வெள்ளைக் கடற்கரையில்...


  • Please log in to reply
20 replies to this topic

#1 Sembagan

Sembagan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 454 posts
  • Gender:Male

Posted 23 January 2012 - 11:44 PM

வெள்ளைக் கடற்கரையில்...

வெள்ளைப் புற்றடி விநாயகரை
வணங்கியே நாம் செல்ல
மண்கும்பான் கும்பி மணல்
மலையழகு காட்டும்.
மணலிடையே பனைமரங்கள்
நுங்குதாங்கி நிற்கும்
இதைப் பாhத்து நடக்கையிலே
சோமர் கிணறு தெரியும்
சுகமான குளிப்பென்று - அது
எம்மை அழைக்கும்.
தெங்குகள் இடையினிலே
பள்ளிவாசல் மிளிரும்
தெவிட்டாத நீர் இங்கேயென
சாட்டி வழி சொல்லும்.
மாதாவின் திருத்தலத்தின்
மணி ஓசை கேட்கும்;
மனத்திலே அதன் ஒலி
அருள் நினைவு சுரக்கும்
மேல் வானில் செங்கதிர்கள்
அழகுக் கோலம் தெளிக்கும்
அதன் கீழே பறவை இனம்
வரிக் கோலம் போடும்.
கீழ்வானம் தேடியெங்கும்
படகுகள் பாய் இழுக்கும்
அதைப் பாhர்த்துச் சிறையாக்கள்
பாய்ந் தழகு கொடுக்கும்
இதைப் பார்த்து நிற்கையிலே
கடல் அலைகள் அழைக்கும்
இருந்து பார் என்றெம்மை
வெள்ளை மணல் பாய் விரிக்கும்.
நிலம் மீது கடல் வந்து
அலை கொண்டு மோதும்
அலை போன பின்னாலே
நண்டு படம் கீறும்
இதைப் பார்த்த அலையொன்று
அதை அழித்துப் போகும்
அதனோடு அந் நண்டு
கடலுக்குள் செல்லும்.
இவை கண்டு என்னவளும் -தன்
கால் நனைத்து மகிழ்ந்தாள்.


அதன் பின் அவள்...

கரைமேலே குழி ஒன்று தோண்டி
கரத்தாலே நீர் கொஞ்சம் மொண்டு - என்
வாயுள்ளே அதைமெல்ல விட்டு
புள்ளிமான்போல துள்ளி அவள் நகர்ந்தாள்.

சுவையான நீர் என்று கூறி நானும்
மெதுவாக என் பக்கம் இழுத்தேன்.
கொடிபோலே என் கையில் துவண்டு
பூப்போலே மென்மண்மீது வீழ்ந்தாள்.

மயிலோடு நானும் விழ்ந்தேன்
மதிமுகம் பொத்தியே மடிமீது சாய்ந்தாள்.
இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்
இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே.

இதைக் கண்ட முள்ளிப்பூ ஒன்று – அவள்
இடையினிலே குத்தியதால் எழுந்து
கடல் உள்ளே மெதுவாக இறங்க - நானும்
கைநீட்டி அவள் பின்னே சென்N;றன்.


என் வருகை கண்டு அவளோ
இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே
அலையிடை அவள் கண்கள் ஒளிக்க
இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்.

ஆவலாய் அங்கு நானும் போக
கோபமாய் அலை ஒன்று வந்து
வேகமாய் நீரினுள்ளே தள்ள
பாவமாய் என் கையைப் பிடித்தாள்.

கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்
என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.
அலைமேலே முத்துக்கள்போலே
பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.

இதமான குளிரொன்று வரவே
இறங்கினோம் இருவரும் கரையே.
பௌர்ணமி நிலா முகம் காட்ட
பசியுடன் கரையைச் சேர்ந்தோம்.

அந்தியேட்டி மடத்தி னுள்ளே
ஆடையை மாற்றிய பின்னே
மடுவார்கேணி தாண்டி மயானக்கரை இறங்கி;
ஐயனாரை வணங்கி அமைதியாகச் சென்றோம்.
  • BLUE BIRD, தமிழ் சிறி, ரதி and 5 others like this

Advert

#2 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,216 posts
  • Gender:Male

Posted 24 January 2012 - 01:50 AM

ஆவலாய் அங்கு நானும் போக
கோபமாய் அலை ஒன்று வந்து
வேகமாய் நீரினுள்ளே தள்ள
பாவமாய் என் கையைப் பிடித்தாள்.

கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்
என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.
அலைமேலே முத்துக்கள்போலே
பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.


நல்ல ஒரு கவிதைக்கு நன்றிகள், செண்பகன்!

சாட்டியின் நினைவுகளை மீண்டும் கண் முன்பு கொண்டு வந்ததுக்கு நன்றிகள்! >
  • தமிழ் சிறி likes this

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#3 nige

nige

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 255 posts
  • Interests:kavithai ,sirukathai eluthal

Posted 24 January 2012 - 03:10 AM

நல்ல கவிவரிகள் செண்பகன்!
தவறித் தவறல் தவறல்ல தவறிவிட்டு
தவறல்ல என்பதே தவறு



நினைவுகளுடன்..
நிகே

#4 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,935 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 25 January 2012 - 03:21 PM

மூச்சு விடாமல் எழுதியிருக்கிறிர்கள்...நானும் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்...நீங்கள் நடந்துபோன அந்த வெள்ளை மணல்க் கடற்க்கரையில் நடந்தது போலிருக்கு...என்ன துணைக்குத்தான் யாருமில்லை...தனிய நடந்தேன்... :D
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#5 Sembagan

Sembagan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 454 posts
  • Gender:Male

Posted 27 January 2012 - 09:42 PM

கருத்துரை வழங்கிய புங்கையூரான், நிகேக, சுபேஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

#6 கவிதை

கவிதை

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 953 posts
  • Gender:Male
  • Interests:வேலை, எதையாவது வாசித்தல்,எழுதுதல்

Posted 27 January 2012 - 09:54 PM

செம்பகன்...! இப்பதான் பார்த்தேன்! அருமையான கவிதை.

தங்களின் கவி வரிகளில் என் மனமும் நனைந்தது அந்த கடலலைகளில். :)

வார்த்தைக் கோர்ப்பும் அதனாலான சப்த ரிதமும் நன்றாகவே அமைந்திருக்கின்றது.

பாராட்டுக்கள்!
:) 4

Edited by கவிதை, 28 January 2012 - 10:08 PM.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை! :)

-ஒருவன்-

"கவிதை"

#7 அறிவன்

அறிவன்

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 58 posts
  • Gender:Male

Posted 27 January 2012 - 10:04 PM

அழகான கவிதை செண்பகன்!!!

"இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்
இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே."

அருமையான வரிகள்!!
நீண்ட நெம்புகோலும் அதைத் தாங்கும் புள்ளியும் இருந்தால் உலகத்தை அசைக்கலாம் என்றான் ஆக்கிமீடிஸ். நீயும் நெம்புகோல்தான். நம்பிக்கையை தாங்குபுள்ளியாகக் கொண்டு உன்னை நீ வளர்த்தால் நீயும் உலகைப் புரட்டிப்போடலாம்!!

#8 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,381 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 27 January 2012 - 10:48 PM

என் தாயக மண் மணம் வீசும் கவிதை .....

.என் வருகை கண்டு அவளோ
இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே
அலையிடை அவள் கண்கள் ஒளிக்க
இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்........

கண்கள் ஒளிர ...கயல்கள் நீந்த
கவிஞ்சன் தோற்றான் போங்கள் :D
...........பாராட்டுக்கள் .
.

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#9 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,048 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 28 January 2012 - 11:04 AM

பாராட்டுக்கள் தொடருங்கள் :)
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#10 Sembagan

Sembagan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 454 posts
  • Gender:Male

Posted 29 January 2012 - 02:47 PM

கவிதை வரிகளை பாராட்டிய கவிதை, அறிவன், நிலாமதி அக்கா, சாத்திரி ஆகியோருக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்
  • அறிவன் likes this

#11 புலவர்

புலவர்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,639 posts
  • Gender:Male

Posted 29 January 2012 - 04:09 PM

வெள்ளைக் கடற்கரை நினைவுகளை மீண்டும் மீட்டியதற்கு நன்றி.வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் பணி!!!!!!!!!!!!!

#12 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,001 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 29 January 2012 - 09:47 PM

ஆஹா ஊர் வாச‌னை தூக்குது...பாராட்டுக்கள்...தொட‌ர்ந்தும் எழுதுங்கள்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#13 கல்கி

கல்கி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 314 posts
  • Gender:Female
  • Location:Nature
  • Interests:to make good friendship, reading books and writing poems

Posted 30 January 2012 - 07:52 AM

ஊரை வர்ணித்த விதம், கூடவே பெண்ணை வர்ணித்த விதம் மிக அருமை. உண்மையில் மூச்சு விடாமல் தான் படிக்கமுடிந்தாலும் மிக நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் . தொடருங்கள்.......

கல்கி Posted Image

#14 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,250 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 30 January 2012 - 08:44 AM

செண்பகன் வர்ணனை அருமை, தொடர்ந்து பகிருங்கள்

Edited by உடையார், 30 January 2012 - 08:45 AM.

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#15 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,270 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 January 2012 - 09:56 AM

அழகிய கவிதை வரிகள் செம்பகன்.
வெள்ளைக்கடற்கரை சில கிலோ மீட்டர் தூரமே... இருந்தும், சில வருடங்களுக்கு முன்... ஒருமுறையே அங்கு குளிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#16 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 30 January 2012 - 08:37 PM

இதுவரை அந்தக் கடற்கரைக்கு நான் செல்லவில்லை.
செம்பகனின் கவிதை அங்கே கூட்டிச் சென்றுவிட்டது.

அழகான ஆழமான கடலைப் போல உங்கள் கவிதையும் இருக்கின்றது

வாழ்த்துகள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#17 Sembagan

Sembagan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 454 posts
  • Gender:Male

Posted 01 February 2012 - 07:05 PM

வெள்ளைக் கடற்கரைக்கு வந்து கால் நனைத்துச் சென்றவர்களுக்கும் கருத்தெழுதியவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். வெள்ளைக் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு மைலுக்கு அப்பால் சில கற்பாறைகள் உண்டு. இதற்கு சட்டிவைத்தபார் எனப் பெயர். குளிக்கும்போது இப்பகுதிக்கு நண்பர்களுடன் நீந்திச் சென்றதுண்டு, அங்கே அழகான முருகைக் கற்கள் பல வர்ணங்களில் காட்சி அளிக்கும். சென்றால் பார்க்க முயற்சி செய்யுங்கள். நன்றி.

#18 மெசொபொத்தேமியா சுமேரியர்

மெசொபொத்தேமியா சுமேரியர்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,728 posts
  • Gender:Female
  • Location:மெசொப்பொத்தேமியா
  • Interests:எதைச் சொல்லுறது

Posted 07 September 2012 - 04:52 PM

கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.

ஊரோடும் உறவோடும் உயிரிற்கு மேலான மண்வாசனையோடும் உறவாட

 

http://poongkaadu.blogspot.uk/

 


#19 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,270 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 07 September 2012 - 05:22 PM

கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.


கவிதையை... பற்றி கருத்து சொன்னீர்கள் சகோதரி.
ஒகே...., மற்றவர்களின் கருத்தைப் பற்றி, உங்களின் கருத்தையும்... தெரிவிக்கலாம் தானே... :D

பிற்குறிப்பு: உங்களது பெயர் மிக நீண்டதாக உள்ளது.
சுருக்கமாய்... அழைக்க, ஏதாவது வழி உள்ளதா? :rolleyes:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#20 தமிழினி

தமிழினி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 904 posts
  • Gender:Female

Posted 07 September 2012 - 05:38 PM

மீண்டும் சாட்டி கடற்கரைக்கு அழைத்துச்சென்ற நல்லதொரு கவிக்கு நன்றிகள் செண்பகன்.
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]