விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?
#1
Posted 19 January 2012 - 11:49 AM
சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க உதவ விந்தணுவை விலைக்குத் தர முன்வருவோரைக்கோரி விளம்பரம் செய்துள்ளனர்.
விந்தணுவைத் தர விரும்புபவருக்கு அழகு, உயரம், தீய பழக்கவழக்கங்கள் இல்லாத சிறந்த உடல்நலம் ஆகியன இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அந்த விளம்பரம், இந்தியாவின் தலையாய தொழில்நுட்பக் கல்விக்கூடங்களான ஐஐ.டி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பக்கழகங்களில் படிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்பதையும் தகுதியாக கூறியிருந்தது.
இந்தத் தகுதிகள் இருக்கும் நபரின் விந்தணுவுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இந்த விளம்பரத்தில் கூறியிருக்கிறார்கள்.
இந்த விளம்பரம் இப்போது இந்தியாவில் ஊடகங்களிலும் சமூக இணைய தளங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஐ.ஐ.டி மாணவனின் விந்தணு தேவை என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறியிருப்பது, அறிவு என்பது மரபணு மூலம் அடுத்த தலைமுறைக்கு மாறும் என்ற நம்பிக்கை சமூகத்தில் இருப்பதைக் காட்டுகின்றது.
'மருத்துவ ஆதாரங்கள் இல்லை'
இந்த நம்பிக்கைக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது மரபணு விஞ்ஞான ரீதியாகவோ அடிப்படை ஏதும் இருக்கிறதா என்று சென்னை செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் செயற்கை கருத்தரிப்பு மருந்தியல்துறை தலைவருமான டாக்டர் என்.பாண்டியனிடம் கேட்டபோது, இவ்வாறான நம்பிக்கைகளுக்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லையென்று அவர் தெரிவித்தார்.
நுண்ணறிவுத் திறன் என்பது தந்தையிடமிருந்து பிள்ளைக்கு விந்தணுமூலம் மாறுகிறது என்ற நம்பிக்கை ஆதாரமற்றது என்றும் ஐஐடித் துறைச் சார்ந்தவர்கள் திறமையானவர்கள், மற்றவர்கள் திறமை குன்றியவர்கள் என்று கருதுவது தவறான அபிப்பிராயம் என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
சொந்த முயற்சி, சூழல் மற்றும் அனுபவங்கள் மூலம் மட்டுமே நுண்ணறிவுத் திறமையாளர்கள் உருவாவார்கள் என்பதற்கான ஆதரங்களே உள்ளதாகவும் டாக்டர் என்.பாண்டியன் கூறினார்.
http://www.bbc.co.uk...fertility.shtml
- ராசம்மா likes this
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 19 January 2012 - 04:17 PM
ஒரு நுகம்.. அல்லது முளைய முதற் கலத்தை ஆக்க பெண் முட்டையும் ஆணின் விந்தும் சேர்ந்தாக வேண்டும். பெண்ணின் முட்டை 23 நிறமூர்த்தங்களை காவ.. ஆணின் விந்து 23 நிறமூர்த்தங்களை காவ.. கருட்டலின் போது அவை சேர்ந்து 23 சோடி நிறமூர்த்தங்களாக சாதாரண மனித கலத்திற்குரிய நிறமூர்த்தங்கள் உருவாகின்றன.
இந்த நிறமூர்த்தங்களில் டி என் ஏ என்ற பெரிய சங்கிலி மூலக்கூறுகள் உண்டு. அவற்றில் ஜீன்கள் எனப்படும் பகுதிகள் உண்டு. அந்த ஜீன்களே எமது இயல்புகளுக்கு காரணம்.
ஒரு முதிர்ந்த ஆணிடம் இருந்து இயற்கையாக தோன்று விந்தணுக்களில் உள்ள நிறமூர்த்தங்கள் ஒருபோதும் அவர்களில் உள்ள உடற்கலங்களில் உள்ளது போன்று அமைவதில்லை. காரணம்.. விந்தணு ஒரு தோன்றும் நிகழ்வின் போது cross over என்ற செயற்பாட்டின் மூலம் ஜீன்கள்.. ஒரு நிறமூர்த்தத்தில் இருந்து அடுத்ததற்கு பகுதியாக பரிமாறப்படுவதன் மூலம்.. நிறமூர்த்த அடிப்படையில்.. தனித்துவமான விந்துகள் உருவாகின்றன.
ஆக ஒருவரின் வாழ்நாளில் அவர் சார்ந்த இயல்புகள் அப்படியே விந்தணுவில் அடக்கப்படுவதில்லை. மாறல்கள் நிகழ்கின்றன. அதுவும் இல்லாமல்.. ஒரு ஆணின் ஜீன் தனது இயல்பை வெளிப்படுத்த வேண்டின் பெண்ணின் அதே நிலைக்குரிய ஜீன் சோடியின் தன்மையும் அதற்கு இணங்கியாக வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெண் ஆதிக்கமுள்ள ஜீனையும் அதேவேளை அதே சோடிக்குரிய ஆதிக்கமற்ற ஜீனை ஆண் கொண்டிருந்தாலும்.. பெண்ணின் இயல்பே வெளிப்படும். மேலும் மனிதரில் குறிப்பிட்ட பல இயல்புகள் பல ஜீன்களின் ஒருமித்த வெளிப்பாட்டாலும் உருவாகின்றன.. (மதிநுட்பம் போன்றவை.)
ஆக.. விந்துகளை மட்டும் வைச்சுக் கொண்டு இயல்புகளை பூரணமாக தீர்மானிக்க முடியாது. ஆனால் முட்டையையும் விந்தையும் தேர்வு செய்து கருக்கட்ட விட்டால் மட்டுமே நல்ல இயல்புகளைப் பெற முடியும்.
எனி முட்டை + விந்து ஜீன்கள் அப்படியே பொருந்தினாலும்.. நல்ல இயல்பை வெளிப்படுத்தி விடுமா என்று பார்ப்போம்..
நல்ல ஜீன்களை பெண்ணின் முட்டையூடும்.. ஆணின் விந்தோடும்.. தெரிவு செய்து இணைத்துக் கொண்டாலும்.. ஜீன்கள் சரியாக வெளிப்பட கலங்கள் வளரும் முளையச் சூழல் சரியாக அமைய வேண்டும். முளையம் சரியான சூழலில் வளராவிட்டால்.. ஜீன்களின் வெளிப்படுத்தலில் தவறுகள் மாற்றங்கள் நிகழலாம்.
மேலும்.. முளையமும் சரியாக வளர்ந்து.. இயல்பும் வெளிப்பட்டு குழந்தையும் பிறந்திட்டு என்று வையுங்கோ..! அதன் பின் சூழல் இயல்பை தீர்மானிக்கும். சூழல் என்பது நாம் வாழும் பூமியின் பெளதீகச் சூழல்.. இரசாயன.. சமூகச் சூழல்.. எமது உடலினுள் உள்ள சூழல்.. என்று பல.
எனி மூளைத் திறமை.. அல்லது திறனை எடுத்து கையாண்டால்.. அதைத் தீர்மானிப்பது ஜீன்கள் மட்டுமல்ல. சூழலும் தீர்மானிக்கிறது. அந்த வகையில்.. எல்லாம் ஜீன் அளவில் சரியாக அமைந்து சூழல் சரியான சூழல் அமையவில்லை என்றால் திறமையான ஜீன் சரியாக வெளிப்பட மாட்டாது.
ஆகவே இந்த விளம்பரங்கள்.. ஓரளவுக்கு மேலோட்டமாக கருத்தைக் காவி வர முடியுமே அன்றி.. எல்லாம் 100% சரியாக அமைய வேண்டின் இயற்கையின் தேர்வும்.. சூழலும் சரியாக அமைய வேண்டும்.
இன்னொரு விடயம்.. ஒரு குழந்தையை இவ்வாறு தேர்வு முறையில் உருவாக்க ஆகும் செலவு பல மடங்கு. அந்தச் செலவை மீதப்படுத்தி இயற்கை வழியில் குழந்தையை உருவாக்கின்.. அந்த பணம்.. குழந்தைக்கு நல்ல உணவு உட்பட்ட சூழலை ஏற்படுத்தி உள்ள இயல்புகள் சரிவர வெளிப்படுத்த வகை செய்ய முடியும். உள்ளதை வைச்சு உச்ச பயனை பெறலாம்.
எனவே சாதாரண மக்கள் இதற்கு ஆசைப்படுவதை விடுத்து.. உருப்படியா இயற்கை வழியில் சிந்தியுங்கோ.
அழகு.. கல்வி அறிவு.. விளையாட்டுத் திறன்.. கணணி அறிவு.. இதெல்லாம் வெறும் ஜீன்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜீன்களின் வெளிப்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இயற்கைச் சூழலே இன்றும் இருக்கிறது..! என்பதை மக்கள் உணர்ந்து கொள்வது நன்று.
இதனை படிப்பறிவு மூலம்.. தருவது.. நெடுக்ஸ்..!
Edited by nedukkalapoovan, 19 January 2012 - 04:40 PM.
- மோகன், விசுகு, இணையவன் and 7 others like this
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#3
Posted 19 January 2012 - 04:17 PM
இப்படியான நல்ல அறிவுள்ள ஒரு ஆணுக்கு பிறக்கும் குழந்தைக்கு, 25 % தந்தையிடம் இருந்து வருவதற்கு சாத்தியம் உள்ளது. அம்மாவும் கொஞ்சம் அறிவுள்ளவராக இருக்க வேண்டும். வளர்க்கும் விதத்திலும் தங்கியுள்ளது.
#4
Posted 19 January 2012 - 04:29 PM
இதனை படிப்பறிவு மூலம்.. தருவது.. நெடுக்ஸ்..!
![]()
விரைவில் பட்டறிவு ஊடாகவும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்
மேலே உள்ள உங்கள் அலசல் நான்றாக உள்ளது, நன்றிகள்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#5
Posted 19 January 2012 - 04:30 PM
intelligence என்பது பாதி பிறப்பிலும், பாதி வளரும் சூழ்நிலையிலும் தங்கியுள்ளது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
இப்படியான நல்ல அறிவுள்ள ஒரு ஆணுக்கு பிறக்கும் குழந்தைக்கு, 25 % தந்தையிடம் இருந்து வருவதற்கு சாத்தியம் உள்ளது. அம்மாவும் கொஞ்சம் அறிவுள்ளவராக இருக்க வேண்டும். வளர்க்கும் விதத்திலும் தங்கியுள்ளது.
இப்படி 25% என்று சொல்ல முடியாது. காரணம்.. intelligence என்பதை வெறும் ஒரு சோடி ஜீன்கள் (allele) தீர்மானிப்பதில்லை. அந்த வகையில் 25% என்ற நிகழ்தகவு (probability) இங்கு பொருந்தி வர வாய்ப்புக் குறைவு. பல alleles தீர்மானிக்கும் இயல்புகளில் நிகழ்தகவும்.. அதாவது சாத்தியப்பாட்டுக்கான வாய்ப்பும் குறைகிறது. காரணம்.. இடைநிலை இயல்புகள் பல உருவாகின்றன. அதாவது continuous variaion.. நிலை காணப்படுகிறது.
எனவே.. மக்கள் பிறப்புரிமை (genetics) சார்ந்து இதனை சரியாக விளங்கிக் கொண்டு.. இப்படியான non- scientific claims ( நம்ம.. சிங்கள அரச விசுவாச அரசியல் புத்திசீவிகள் விடுறாங்களே.. ஆதாரமற்ற அறிக்கைகள்.. அதுகளும் இதுகளும் கிட்டத்தட்ட ஒன்று தான்..) பற்றி தெளிவாக அறிந்து கொண்டு.. ஏமாற்றங்களையும் பண.. மற்று கால விரயங்களையும் தவிர்ப்பது நன்று.
Edited by nedukkalapoovan, 19 January 2012 - 04:36 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#6
Posted 19 January 2012 - 05:23 PM
#7
Posted 19 January 2012 - 07:58 PM
நிழலும் கூட மிதிக்கும்.
#8
Posted 19 January 2012 - 08:02 PM
#9
Posted 19 January 2012 - 10:33 PM
நல்ல விளக்கம் நன்றிகள்...இப்படியே மருத்துவம் சம்பந்தமான தொடர் எழுதும் பகுதியையும் திரு.நெ.கா அ.வை ஆரம்பித்து வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..கொஞ்சமாவது இவை பற்றிய மருத்துவ ரீதியிலான அறிவு இருந்தாலும் நாமள் இது பற்றி எல்லாம் எழுதும் அளவுக்கு நமக்கு பொறுமை ரொம்ப கம்மி சார்..நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான் தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயங்களில் மருத்துவரீதியிலான விளக்கங்கள்,கட்டுரைகள் எழுதவேண்டும்.அவற்றுக்கு பூரண ஆதரவு கிடைக்கும்.
அறிவியல் சார்ந்த விடயங்களை மிணக்கட்டு.. பந்தி பந்தியா எழுதி யாருமே படிக்கப் போறதில்ல. அதில ஆர்வமுள்ளவங்க மட்டுமே படிப்பாங்க. அதே இடத்தில் ஒரு மொக்கை காதல் கவிதை.. கதை எழுதினீங்கண்டு வையுங்க.. கன பேர் படிப்பாங்க. ஏன்னா.. இப்ப மனிசாள்.. வாழ்க்கையே மொக்கை. மொக்கைக்கு தான் வரவேற்பும் ஜாஸ்தி..!
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#10
Posted 20 January 2012 - 01:26 AM
அறிவியல் சார்ந்த விடயங்களை மிணக்கட்டு.. பந்தி பந்தியா எழுதி யாருமே படிக்கப் போறதில்ல. அதில ஆர்வமுள்ளவங்க மட்டுமே படிப்பாங்க. அதே இடத்தில் ஒரு மொக்கை காதல் கவிதை.. கதை எழுதினீங்கண்டு வையுங்க.. கன பேர் படிப்பாங்க. ஏன்னா.. இப்ப மனிசாள்.. வாழ்க்கையே மொக்கை. மொக்கைக்கு தான் வரவேற்பும் ஜாஸ்தி..!
![]()
![]()
சளைக்காமல் எழுதுங்கள். அந்த அலை வரிசையில் உள்ளவர்கள் வாசிப்பார்கள், பயனடைவார்கள், யாழுக்கும் கிராக்கி கூடும்.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#11
Posted 20 January 2012 - 01:52 AM
இவர் கொஞ்சம் அழகில்லாதவர் என்று ஒரு கருத்து! ஆனால் அவர் ஒரு அறிவாளியாகக் கருதப் பட்டவர்!
இவரை ஒரு அழகி சந்தித்துத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டாள்!
தனது அழகும், பெர்னார்ட் ஷாவின் அறிவும் உள்ள குழந்தையொன்று பிறந்தால், அந்தக் குழந்தைக்கு உலகில் நிகரே இருக்காது என்று கூறினாள்!
ஷா சற்று நேரம் யோசித்தார்!
அவள் இதில் யோசிக்க என்ன இருக்கின்றது என அவரைக் கேட்டாள்!
இல்லை, ஒரு வேளை குழந்தை, எனது அழகும், உனது அறிவும் கொண்டு பிறந்து விட்டால், அதன் எதிர்காலம் என்ன ஆகும் என்று தான் யோசிக்கின்றேன் என்றார்!
- akootha likes this
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#12
Posted 20 January 2012 - 05:43 PM
அறிவியல் சார்ந்த விடயங்களை மிணக்கட்டு.. பந்தி பந்தியா எழுதி யாருமே படிக்கப் போறதில்ல. அதில ஆர்வமுள்ளவங்க மட்டுமே படிப்பாங்க. அதே இடத்தில் ஒரு மொக்கை காதல் கவிதை.. கதை எழுதினீங்கண்டு வையுங்க.. கன பேர் படிப்பாங்க. ஏன்னா.. இப்ப மனிசாள்.. வாழ்க்கையே மொக்கை. மொக்கைக்கு தான் வரவேற்பும் ஜாஸ்தி..!![]()
![]()
எதைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டாலும் யார்,யாருக்கு எந்தப் பகுதியில் ஆர்வம் இருக்கிறதோ அதைத்தானே கூடுதலாக கவனத்தில் கொள்வார்கள். ஆனாலும் மருத்துவம் பற்றி எழுனாலும் அந்தப்பகுதி கூட மக்களுக்கு உபயோகமானதாக தான் எப்போதும் இருக்கும்..கண்டிப்பாக நீங்கள் மருத்துவ தொடர் எழுதினால் வாசிப்பார்கள்,பயன்பெறுவார்கள்..கிழமையில் ஒரு மருத்துவ தொடர்,அதனூடாக எழும் கேள்விகளுக்கு பதில் என்று போனால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது ..நான் கஸ்ரப்படுத்த இல்லை உங்கள் விருப்பம் எப்படியோ அப்படிச் செய்யுங்கள்.
#13
Posted 20 January 2012 - 07:30 PM
விந்தணு உருவாக்கம் என்பது ஆண்களில் விதைகளில் நிகழ்கிறது.
பள்ளியில சொல்லி தந்தாங்க என்டு சும்மா பொய் சொல்லகூடாது சார்
#14
Posted 20 January 2012 - 10:51 PM
பள்ளியில சொல்லி தந்தாங்க என்டு சும்மா பொய் சொல்லகூடாது சார்
பள்ளில படிச்சு.. யுனில.. dissection எல்லாம் செய்து.. சோதனையும் பாஸாகிட்டன். நீங்க என்னடான்னா.. இப்ப தான் பள்ளில நிற்கிறியள்..!
http://youtu.be/7SMoq8GSAFQ
(18.. + மாணவர்கள்.. பெரியவர்கள் பார்வையிடலாம்.)

(ஒப்பீட்டிற்கு உடலமைப்பியல் விளக்கப் படம்.. எளிமை)
Edited by nedukkalapoovan, 20 January 2012 - 10:55 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#15
Posted 20 January 2012 - 11:08 PM
#16
Posted 20 January 2012 - 11:12 PM
பேசாப் பொருள் பக்கம் இனிமேல் அடல்ஸ் ஒன்லி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்....
![]()
மேற்குலக நாடுகளில் உள்ள எமது பிள்ளைகளுக்கோ எல்லா சட்டபூர்வமாக படிப்பிக்கின்றார்கள், பத்து வயதிலிருந்தே
Edited by akootha, 20 January 2012 - 11:13 PM.
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#17
Posted 20 January 2012 - 11:27 PM
பேசாப் பொருள் பக்கம் இனிமேல் அடல்ஸ் ஒன்லி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்....
![]()
இந்த dissection ஐ பார்வையிட 18 வயது அவசியம் என்றில்லை. ஆனால் யுரியுப்பில் தரவேற்றம் செய்தவர்கள் இதனை அப்படி பகுத்திருப்பதால்.. அப்படி இட வேண்டி இருக்கிறதே அன்றி.. இந்த காணொளி மனித உடலமைப்பியல் (Human anatomy) சார்ந்தது..! விடயத்தை விளங்கக் கூடிய எவரும் பார்வையிடலாம்.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#18
Posted 20 January 2012 - 11:41 PM
மருத்துவ அறிவியல் சார்ந்த விடயங்களை எளிமையாக எழுதுகிறீர்கள். எளிமைப்படுத்தி எழுதும் பொழுது கூறும் விடயங்கள் இலகுவாக பலரைப் போய்ச் சேரும். தொடருங்கள்.
அறிவியல் / மருத்துவத்திற்கு ஒரு திரியும், உங்கள் துறை சார்ந்த மருத்துவம் சம்பந்தமான கேள்வி பதிலிற்கு இன்னுமொரு திரியும் திறந்தால் நன்று.
ஒவ்வொரு திரியிலும் வந்து தொடர்பில்லாமல் கேட்டால் நன்றாக இராது. உதாரணத்திற்கு Homeopathy சிகிச்சை முறைபற்றி கேள்வி கேட்க நினைத்தேன். அதனை இங்கு கேட்பது சரியில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைவதால் உழைப்பு வீணாகப் போகின்றது.
#19
Posted 20 January 2012 - 11:47 PM
இந்த dissection ஐ பார்வையிட 18 வயது அவசியம் என்றில்லை. ஆனால் யுரியுப்பில் தரவேற்றம் செய்தவர்கள் இதனை அப்படி பகுத்திருப்பதால்.. அப்படி இட வேண்டி இருக்கிறதே அன்றி.. இந்த காணொளி மனித உடலமைப்பியல் (Human anatomy) சார்ந்தது..! விடயத்தை விளங்கக் கூடிய எவரும் பார்வையிடலாம்.![]()
18 + எங்கயோ எழுதிக்கிடந்திச்சு.......சரி விடுங்கோ புரிந்து கொள்ளக் கூடிய எல்லாரும் பார்க்கலாம்..
#20
Posted 21 January 2012 - 12:23 AM
- இசைக்கலைஞன் likes this
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.















