எனது கலண்டர் பொன்மொழிகள்
#1
Posted 14 January 2012 - 08:11 PM
மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால்
உயிரொளி வீச உலகில் வாழலாம்.
திகதி 2
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
போல் இனிதாவதெங்கும் காணோம்.
திகதி 3
யார் பார்க்கா விட்டாலும் கடவுள்
நம்மை பார்க்கிறார்.
திகதி 4
உயர்ந்த விசயங்கள் எல்லோரையும்
நிமிர்ந்து பார்க்க செய்யும்.
திகதி 5
கெளரீசன் கெளரீயை அடித்ததில்லை
இவன் அவளை அடிக்கலாமா?
திகதி 6
சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்:
சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும்.
திகதி 7
அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன்
சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா?
திகதி 8
மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை
அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.
திகதி 9
அர்த்தமற்ற கண்டறியாத புதுப் பெயர்களை விட
அழகு தமிழ் பழைய பெயர்களே மேல்.
திகதி 10
சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு:
அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு.
திகதி 11
சின்னத் திரைக்குள் தொலைக்கும் மாந்தரே!
சிந்தித்து எழா விட்டால் சிதையும் குடும்பம்.
திகதி 12
புகையிலையைப் பற்ற வைத்தால் அது நெஞ்சின் மேல் புற்று
வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்.
திகதி 13
பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல,
கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.
திகதி 14
வாழ்க்கை என்பது வாகனமல்ல, அடுத்தவன்
வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு.
- thanga, nunavilan, சுபேஸ் and 7 others like this

#2
Posted 14 January 2012 - 08:18 PM
#3
Posted 14 January 2012 - 08:20 PM
கெளரீசன் கெளரீயை அடித்ததில்லை
இவன் அவளை அடிக்கலாமா?
திகதி 3
யார் பார்க்கா விட்டாலும் கடவுள்
நம்மை பார்க்கிறார்.
இங்கை தான் ரதியக்கா நிக்கிறா
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???
#4
Posted 14 January 2012 - 11:11 PM
www.theeraanathi.blogspot.com/
#5
Posted 15 January 2012 - 12:06 AM
#6
Posted 15 January 2012 - 12:08 AM
வண்டியில் பழகிய பிறகு சொந்த வண்டி வாங்குவதற்கு
எனக்குப் பிடித்தது, இது தான் ரதி!
தொடருங்கள், உங்கள் கலண்டர் பொன்மொழிகளை!!!
- நிலாமதி likes this
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#7
Posted 15 January 2012 - 12:18 AM
தொடருங்கள் ரதி
.
Edited by esan, 04 February 2012 - 07:42 AM.
#8
Posted 15 January 2012 - 01:04 AM
மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை
அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சியில்லை.
மனச்சாட்சி பலருக்கு இல்லாததால் தான் இன்று உலகமே ஒரு பதட்ட நிலையில் உள்ளது.
நாட்காட்டி பொன்மொழிகளை தொடருங்கள்,ரதி.
#9
Posted 15 January 2012 - 10:21 AM
உள்ளங்கள் பொங்க- உணர்வுகள் பொங்க
-உவகைகள் பொங்கும்.
Edited by ரதி, 15 January 2012 - 10:23 AM.
#10
Posted 15 January 2012 - 12:30 PM
தொடருங்கள் ரதி
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#11
Posted 15 January 2012 - 12:32 PM
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#12
Posted 15 January 2012 - 01:58 PM
#13
Posted 15 January 2012 - 02:06 PM
கட்டுக்கள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு.
இதை விட சிறப்பாக சொல்ல இயலாது,,,,,,,,,,,
நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள் ,
#14
Posted 16 January 2012 - 08:18 AM
பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்
பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!
- சுபேஸ் and தப்பிலி like this
#15
Posted 16 January 2012 - 09:21 AM
ரதி இது உங்கள் சொந்த ஆக்கமா?
#16
Posted 16 January 2012 - 10:22 AM
நல்லாய் இருக்குதிகதி 16
பட்டிப் பொங்கல் தினத்தன்று மாட்டுக்குப்
பொங்காவிடினும் மாட்டைப் பொங்காதீர்கள்!
இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#17
Posted 16 January 2012 - 07:21 PM
#18
Posted 16 January 2012 - 09:17 PM
நல்லாய் இருக்கு
.
இந்தப் பொன் மொழிகள் எல்லாம்... மெய்கண்டான் நாட்காட்டியா, லீலா நாட்காட்டியா... ரதி.
அப்படியும் ஒன்று இருக்கின்றதா சிறீ அண்ணா ?
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#19
Posted 17 January 2012 - 07:54 AM
சீதனம் வாங்கிச் செய்யும் திருமணம்
காதலின் அருமை காணா வெறுமணம்.
- நிலாமதி likes this
#20
Posted 17 January 2012 - 12:09 PM
..........மேலும் தொடர வாழ்த்துக்கள்
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.













