எனது கலண்டர் பொன்மொழிகள்
#181
Posted 02 April 2012 - 06:59 PM

#182
Posted 03 April 2012 - 07:22 AM
கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்;
முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது,மறக்கவும் முடியாது.
#183
Posted 04 April 2012 - 07:15 AM
மனிதனை வாகனமாக கொண்டால்,தன்னை கடத்தி விடுவார்கள்
என்பதற்காகவே,இறைவன் விலங்குகளை வாகனமாக கொண்டான்.
- புங்கையூரன் likes this
#184
Posted 04 April 2012 - 08:01 AM
திகதி 4
மனிதனை வாகனமாக கொண்டால்,தன்னை கடத்தி விடுவார்கள்
என்பதற்காகவே,இறைவன் விலங்குகளை வாகனமாக கொண்டான்.
இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#185
Posted 04 April 2012 - 12:02 PM
இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பொன்மொழி!
எனக்கென்டால் இந்த பொன்மொழியைப் பார்த்தால் கடவுளுக்கே[அவர் தான் மனிசனைப் படைச்சார்] மனிதனைப் பார்த்தால் பயமாயிருக்குதே அப்படியிருக்கும் போது ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனைப் பார்த்தால் பயம் வாறதில் தப்பேயில்லை என்டு சொல்வது போல இருக்குது.
#186
Posted 05 April 2012 - 09:16 AM
நம்பிக்கை இழந்து மதம் மாறுபவன்
நம்பி வந்தவளை மாற்ற மாட்டானா?
#187
Posted 06 April 2012 - 07:40 AM
அன்று செய்தால் என்றோ என்பது அந்தக் காலம்;
இன்று செய்தால் இன்றே என்பது இந்தக் காலம்.
#188
Posted 07 April 2012 - 09:50 AM
மனநலம் இன்றி இனநலம் இல்லை;
குணநலம் இன்றி வாழ்க்கையே இல்லை.
#189
Posted 08 April 2012 - 10:06 AM
பாவம் கொண்டது தான் நடனம்,
பாவம் இல்லையெனில் நடனம் பாவம் ஆகி விடும்.
#190
Posted 09 April 2012 - 09:04 AM
எழுது கருவிகள் சரியாய் எழுந்தால்
பொழுதுகள் எமக்காய் வளமாய் புலரும்.
- நிலாமதி likes this
#191
Posted 09 April 2012 - 09:34 PM
இன்னும் உங்கட கலண்டரை எங்க வாங்கினீங்கள் என்று சொல்லவே இல்லையே!
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"
#192
Posted 10 April 2012 - 07:25 AM
மனிதன் வெட்டும் போது ஆட்டின் இதயம் ஆடுகின்றது;
அதன் கொலஸ்ரோல் மனித இதயத்தை ஆட்டுவிக்கின்றது.
- தமிழ் சிறி and நிலாமதி like this
#193
Posted 11 April 2012 - 07:26 AM
மனிதா, நீ வணங்கும்படி சில விலங்குகள் நடக்கின்றன;
ஆனால், விலங்குகள் வணங்கும்படி நீ நடந்ததுண்டா?
#194
Posted 12 April 2012 - 07:32 AM
பகட்டுக்கு வீடு வாங்கி ஈட்டுக்கு கடன் கட்ட ஈடாடும் மாந்தரே!
தகுதிக்கேற்ற வீட்டில் வசித்திருந்தால் தொலையாது இருந்திருக்குமே வாழ்வு.
#195
Posted 13 April 2012 - 09:40 AM
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன்
திண்ணியராக எண்ணியதை முடிப்போம்.
#196
Posted 13 April 2012 - 10:22 PM

தங்கச்சிக்கு ஆகலும் தமாசு கூடிப்போச்சு.........நிர்வாகமே!படத்தை தூக்குங்கோ......இல்லாட்டி படத்தோடை சேர்த்து ஆளையும் தூக்கிவிடுங்கோ...கலியாணம் காட்சியொண்டுமில்லாமல்...குளுவன் குணம் கூடீட்டுது
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#197
Posted 13 April 2012 - 11:19 PM
இந்த... விரலாலை, கு*டியிலை குத்தினவனதுக்குத்தான்... பளார் விட்டானான்.
தங்கச்சிக்கு ஆகலும் தமாசு கூடிப்போச்சு.........நிர்வாகமே!படத்தை தூக்குங்கோ......இல்லாட்டி படத்தோடை சேர்த்து ஆளையும் தூக்கிவிடுங்கோ...கலியாணம் காட்சியொண்டுமில்லாமல்...குளுவன் குணம் கூடீட்டுது
"எய்தவன் இருக்க.... அம்பை, நொந்து... என்ன பயன்" குமாரசாமி அண்ணா.
மேலதிக தகவலுக்கு, கீழே... சின்ன விரலை மட்டும்... அழுத்தவும்.
http://www.yarl.com/...howtopic=100802
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#198
Posted 14 April 2012 - 08:54 AM
எல்லோரிடத்தும் தெய்வம் உண்டு;
ஆனால் எல்லோரும் தெய்வத்திடம் இல்லை.
#199
Posted 15 April 2012 - 09:46 AM
தலைவிரி கோலத்தில் கோவிலுக்குப் போனால்
கைவிரி கோலம் தான் கை மேல் பலன்
#200
Posted 15 April 2012 - 02:27 PM

ராதியின் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு ரதி சொல்லும் கருத்துப் படம் இது... ![]()
ரதி இந்தப் படம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் உங்களின் பெயருக்குப் பொருந்தவில்லை!












