எனது கலண்டர் பொன்மொழிகள்

#22
Posted 18 January 2012 - 08:07 AM
அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;
இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.
#23
Posted 18 January 2012 - 09:52 AM
திகதி 18
அங்கே முதலில் மூன்று முடிச்சு, பின்னர் முந்தானை முடிச்சு;
இங்கே முந்தானையைக் காணோம்,அதில் முடிச்சுக்கு எங்கே போவது.
அங்கேயும் ..............
இங்கேயும்............
என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.
#24
Posted 19 January 2012 - 07:56 AM
விவாஹ சுப முகூர்த்தத்தின் நோக்கம்,மணமக்களின் நல்வாழ்வே தவிர,
விருந்தினர்கள் விருந்துண்ணும் பொழுதோ,விடுப்பெடுக்கும் நாளோ அல்ல.
#25
Posted 19 January 2012 - 06:51 PM
அங்கேயும் ..............
இங்கேயும்............
என்றால் ? என்னங்க ஒன்னும் புரியல்லை.
நான் நினைக்கிறேன் அங்கே என்டால் ஊரில்,இங்கே என்டால் புலத்தில்...இங்கே பொண்ணுங்கள் புடவை உடுப்பதில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்
#26
Posted 19 January 2012 - 08:02 PM
#27
Posted 19 January 2012 - 08:17 PM
நிழலும் கூட மிதிக்கும்.
#28
Posted 19 January 2012 - 09:46 PM
ஏன் பெறுமதியான விசயங்களை பொண் மொழிகள் என்கிறோம்.பொண் என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொண்ணை ம்ட்டும் பாதுகாக்கிறோம்
![]()
ஏன் பெறுமதியான விசயங்களை பொன் மொழிகள் என்கிறோம்.பொன்என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொன்னை ம்ட்டும் பாதுகாக்கிறோ.............
பொண் ......என்று ஒரு சொல் இல்லை
பெண் ..........பெண்டாட்டி ..............பெண்கள்
Edited by நிலாமதி, 19 January 2012 - 09:47 PM.
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#29
Posted 19 January 2012 - 10:45 PM
தாய் தந்தையர் மகனை சேர்த்தனர்
பல்கலைக் கழகத்தில்
சில காலம் செல்ல
மகன் தாய் தந்தையரை சேர்த்தான்
முதியோர் இல்லத்தில்
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#30
Posted 19 January 2012 - 11:52 PM
மனசில பட்டதை எதுக்குமே பயப்பிடாம எடுத்துவிடுற ..ரதி சகோதரம்,
என்ன எழுதினாங்கன்னு, ஓடி ஓடி வாசிக்க ஒரு கூட்டம் இருக்கு,,
அதுல நானும் ஒண்ணு!
- ஈசன் and ஜீவா like this
#31
Posted 20 January 2012 - 06:49 AM
பொன். இப்ப சரியா ரீச்சர்.ஏன் பெறுமதியான விசயங்களை பொன் மொழிகள் என்கிறோம்.பொன்என்றும் பெறுமதிஎன்பதலா.அதாலதானா நாங்கள் மொழிகளை விட்டு பொன்னை ம்ட்டும் பாதுகாக்கிறோ.............
பொண் ......என்று ஒரு சொல் இல்லை
பெண் ..........பெண்டாட்டி ..............பெண்கள்
Edited by sagevan, 20 January 2012 - 06:50 AM.
நிழலும் கூட மிதிக்கும்.
#32
Posted 20 January 2012 - 08:06 AM
காதலுக் குரிய கண்ணிணை யொத்த
மாதருக் குரிமை மறுப்பவர் மடையர்.
#33
Posted 21 January 2012 - 10:00 AM
இலங்கைப் பஞ்சாங்கத்தை இங்கிலாந்தில் பின்பற்றுவது,இலங்கையில்
பெய்யும் மழைக்கு லண்டனில் குடை பிடிப்பது போன்றது.
#34
Posted 22 January 2012 - 09:23 AM
காசே தான் கடவுளடா என நினைத்து 2,3 வேலை
செய்பவர்களின் வீட்டு வேலையை யார் செய்வது யார்?
#35
Posted 22 January 2012 - 09:44 AM
#36
Posted 22 January 2012 - 10:44 AM
திகதி 21
இலங்கைப் பஞ்சாங்கத்தை இங்கிலாந்தில் பின்பற்றுவது,இலங்கையில்
பெய்யும் மழைக்கு லண்டனில் குடை பிடிப்பது போன்றது.
ரசித்தேன் அக்கா. பகிர்வுக்கு நன்றி!
கொக்குவிலான்
#37
Posted 22 January 2012 - 12:45 PM
திகதி 22
காசே தான் கடவுளடா என நினைத்து 2,3 வேலை
செய்பவர்களின் வீட்டு வேலையை யார் செய்வது யார்?
வீட்டு வேலைக்காரி தான் செய்யவேண்டும்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#38
Posted 23 January 2012 - 07:53 AM
வெளிநாடு வந்து தமிழ் படிக்க மறுப்பவர்கள்
சிறிலங்காவில் இருந்து சிங்களம் படித்திருக்கலாமே!
- தமிழரசு likes this
#39
Posted 24 January 2012 - 07:52 AM
பிள்ளைகளுக்காக வாழ்வதாக கூறி சொத்திற்காக உழைப்பவர்கள்
பிள்ளைக்கு கல்வியே சொத்து என்பதை மறந்து போய் விடுகின்றனர்.
#40
Posted 24 January 2012 - 12:25 PM











