Jump to content

Tamil Star News
Photo

சாத்தானின் குழந்தை.

  • Please log in to reply
28 replies to this topic

#1 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 14 January 2012 - 07:52 PM

சாத்தானின் குழந்தை.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான்.

கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் அவசரமாய் ஓடிய தாதி குழந்தையின் மீது வெளிச்சத்தை பாச்சினாள். என்ன அதிசயம் அதன் தலையின் பின்னால் ஒளி வட்டம் மினுமினுத்தது. அவள் வீல்.....என்று அலறியபடி மயங்கிச்சாய ஓடிவந்த மற்றையவர்கள்.மயங்கியவளை ஒரு வீல் கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு போக அங்கேயே தங்கியிருந்த குழந்தையின் தந்தையும் ஓடிவந்து பார்தார் ரோச்லைற் வெளிச்சத்தில் ஒளிவட்டம் மின்னியது. அவசரமாய் தொப்புள் கொடியை அறுதெறிந்துவிட்டு குழந்தையை ஒரு துணியில் சுருட்டிக்கொண்டு சண்டிலிப்பாயில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி ஓடியவர் கோயில் வீதியில் குடியிருந்த சடாமுடிச்சாமியரின் கதவில் அவசரமாய் தட்டவே சோம்பல் முறித்தபடி நித்திரையால் எழுந்து வந்த சாமியாரின் காலடியில் குழந்தையை கிடத்தி விட்டு சாமி நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும் இந்த குழந்தை பிறந்ததும் அதுகின்ரை தலையிலை ஒளிவட்டம் தெரிஞ்சது அதுதான் பயத்திலை உங்களிட்டை தூக்கிக் கொண்டு ஓடியந்தனான்.என்று மூச்சிரைக்க கூறி முடித்தார்.

குழந்தையை குனிந்து பார்த்த சாமியார் திடுக்கிட்டவராய் ஆ..இது சாத்தானின் குழந்தை என்றார்.. ஜயோ சாமியார் இது என்ரை குழந்தை நாலாவது நாயாய் அலையவைக்கப் போகுது .அழுதார் அந்த தந்தை.
இன்று பத்தாம் திகதி குழந்தை பத்தாம் இலக்க வார்ட்டில் பத்தாம் இலக்க கட்டிலிலா பிறந்தது

ஓம் சாமியார்.

சாமியார் கண்களை மூடினார் அம்மா தாயே நாகபூசணி எந்த குழந்தை பிறக்கக்கூடாதென்று இத்தனை நாளாய் கடும் தவம் செய்தனோ அந்த சாத்தானின் குழந்தை பிறந்து விட்டது. இனி நீதான் இந்த உலகத்தை காப்பாற்றவேண்டும். பலபேரின் நிம்மதியை கெடுக்கப்போகிறானே என்று மனதில் துதித்தவர்.

அவரைப் பார்த்து ஓன்றும் பயப்படாதே அம்மா துணையிருப்பார் .இந்தக் குழந்தை சாத்தானின் குழந்தையாக இருந்தாலும் வினை தீர்க்கும் வேல் முருகனின் பெயரை இவனிற்கு சூட்டுகிறேன். அந்த பெயரால் அனைவரும் இவனை அழைக்கும் பொழுது இவனது தீய குணங்கள் மாறி இவனிற்கு கடவுள் அருள் கிடைக்கும்.என்று கூறியவர் குழந்தையின் காதில் ஸ்ரீ கொளரி பாலகன் என்று மூன்றுமூறை சொன்னதும் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியில் தடவிவிட்டு எல்லாம் நன்றாக நடக்கும் போய்வாருங்கள் என வழியனுப்பிவைத்துவிட்டு. இந்தக் குழந்தையின் பத்தாவது வயதின் எனக்கல்லவா ஆபத்து என்றபடி கவலையுடன் கடவுளை தியானிக்கத் தொடங்கினார் சாமியார்.

வைத்தியசாலையில் காலை மயக்கத்திலிருந்து விழித்த குழந்தையின் தாயார் காலடியில் அவரிற்கு முதல்நாளிரவு வைத்தியசாலையில் உணவு கொடுத்த அலுமினியத் தட்டு கிடந்ததை கவனித்தார். அந்த தட்டைத்தான் ரோச்லைற் வெளிச்சத்தில் எல்லோரும் ஒளிவட்டம் எண்டு தவறாய் நினைச்சிட்டினம் என்பது அவரிற்கு புரிந்தது. உடைனையே அவசரமாய் அந்த அலுமினிய தட்டை களவெடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்விட்டார். களவெடுத்த அலுமினியத் தட்டிலேயே குழந்தை உணவு உண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோஞ்சானாய் வளர்ந்தது.
0000000000000000

இப்பொழுது அந்தக் குழந்தைக்கு வயது பத்து அந்த வருடம் அதே நாகபூசணி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தவேளை கச்சான் கடலை வாங்குவதற்காக கோயிலிற்கு போனவன் கோயில் வீதியில் அந்த சாமியாரை கண்டுவிட்டான். உடனேயே சாமியார் முன்னால் போய் நின்றவன்.

சாமீ.............எனக்கொரு உண்மை தெரிஞ்சகணும் சாமீ........என்றான்.

அவனை குனிந்து பார்த்த சாமியார் யாராப்பா நீ உனக்கென்ன உண்மை தெரியவேண்டும்.

சாமீ..நீங்கள் நல்லவரா கெட்டவரா??

கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தவர் பின்னர் அவனை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து உதட்டை பிதுக்கியபடி தெரியலையேப்பா என்றார். ( இந்தக் காலகட்டங்களில் சிவாஜியின் முதல் மரியாதை படம் மற்றும் கமலின் நாயகன் படம் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.)

அப்ப எதுக்கு சாமி எனக்கு அப்பிடியொரு பேரை வைச்சனி சாமி??

என்ன பெயரப்பா ??

ஸ்ரீ கொளரி பாலகன் ..அதற்கு அர்த்தம் என்ன சாமீ

அதுவா திருகைலாய மலையில் வீற்றிருக்கும் பெருமானின் திருவாட்டி கொளரி அம்மையின் அழகுமகன் முருகன் என்று அர்த்தம்.

நல்லவேளை இந்த அர்தத்தையே எனக்கு பெயரா வைக்கமல் விட்டியே .கந்தன் கடம்பன்.வேலன் இப்பிடி அவருக்கு எத்தினை பேர் இருக்கு. ஆனால் எதுகய்யா இப்பிடி ஒரு பெயர்.உனக்குத் தெரியுமா ஒவ்வொருதடைவையும் வகுப்பிலை வாத்தியார் டாப்பு கூப்பிடேக்குள்ளை என்ரை பெயரை கூப்பிடும்போது அவர் பாட்டுபாடுறார் என்று நினைச்சு நான் நித்திரையாய் போயிடுறன் சாமி.என்றபடி அவன் கீழே குனிய. அய்யோ அம்மா தாயே காப்பாற்று சாத்தனின் குழந்தை பத்து வயதாகிவிட்டது காப்பாத்து என்றபடி அவர் கோயில் உள்ளே ஓடிக்கொண்டிருக்க அவன் எறிந்த கல்லு சாமியாரின் பின்மண்டையில் பட்டுத்தெறிக்க சாமியார் மயங்கி விழுந்தார்.
00000000000000
திரும்பிப் பார்க்காமல் அவன் ஓடினான்..ஓடினான்..ஓடினான்..(பராசக்க்தி படம் வெளிவந்துவிட்டிருந்தது) பத்துவருடங்களாக ஓடி யெர்மன் எல்வைவரை ஓடி ஒற்றைகள் கிழிக்கப்பட்ட பாஸ்போட்டுடன் பிராங்போட் விமான நிலையத்தில் நின்றான். அதை வாங்கிப் போன ஒரு யேர்மன் காரன் சிறிது நேரத்தில் திரும்ப வந்து சிரி கொரி பலகான் என்று கூப்பிட்டான். அதை அவன் கவனிக்கமல் அங்கு நடந்து போய்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களின் பின்னழகில் மயங்கி நிற்க அந்த யெர்மன் காரன் வந்து அவனை கையில் பிடித்து சிரி கொரி பலகான் கம் என்று அழைத்துப் போனான்.அன்றே அந்த சாமியார் சொன்து போல் பலரது நிம்மதியை கெடுத்தபடியேதான் இருக்கின்றான். சாத்தானின் குழந்தை..சாத்திரி என்கிற பெயரில் :lol: :lol: :lol:

பி.கு...நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக ஒருவர் என்னை நீ சாத்தான் என்று முன்பொருதரம் திட்டியிருந்தார். இன்று கொஞ்சம் நேரம் கிடைத்து உண்மையில் அப்பிடி இருந்தால் எப்பிடியிருக்கும் எண்டு கற்பனையா நினைச்சு பார்த்தன் அதோடை அந்த பெயர் தான் எனதுமுழுப்பெயர். அந்த சாமியாரேதான் அதனை எனக்கு வைத்திருந்தார்.

Edited by sathiri, 14 January 2012 - 11:47 PM.

  • கந்தப்பு, Thumpalayan, தமிழ் சிறி and 4 others like this
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

Advert

#2 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,688 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 January 2012 - 07:59 PM

:D :D :D

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

#3 shanthy

shanthy

    முல்லைமண்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,122 posts
  • Gender:Female
  • Location:Germany

Posted 14 January 2012 - 08:25 PM

சிரி கொரி பலகான் அடிச்ச சக்கையளில உடைஞ்ச பாலங்களுக்கு உரியவர்கள் உங்கை தேடுறதாக கேள்வி. :D

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

nesakkaram1.gif
முல்லைமண் வலைப்பூ

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

#4 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 14 January 2012 - 08:36 PM

< ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான். >

வரலாற்றில் ஒரு ஏடும் , குறிப்பும் , செரியான லொள்ளு அப்பனே :lol: :D :lol: :icon_idea: 1 .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/

#5 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 14 January 2012 - 08:44 PM

சிரி கொரி பலகான் அடிச்ச சக்கையளில உடைஞ்ச பாலங்களுக்கு உரியவர்கள் உங்கை தேடுறதாக கேள்வி. :D

நான் அவன் இல்லை.. :icon_mrgreen:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#6 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,688 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 January 2012 - 08:49 PM

சிரி கொரி பலகான் அடிச்ச சக்கையளில உடைஞ்ச பாலங்களுக்கு உரியவர்கள் உங்கை தேடுறதாக கேள்வி. :D

இடையில் சில காலம் மனிதனாக வாழ்ந்ததை மட்டும் மறைத்தது பிடிககவில்லையா சகோதரி?

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

#7 புலி

புலி

    புதிய உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • Pip
  • 75 posts
  • Gender:Male
  • Location:London-united kingdom

Posted 14 January 2012 - 08:53 PM

சொந்தக்கதை சோகக்கதை என்றில்லாமல், ஒரு பேய்க்கதை மாதிரி நல்ல கதை. :wub: த்ரில்லா இருந்திச்சு. ஆனா எயர்போர்ட் சீன் கொஞ்ச_ :rolleyes: நல்லா இருந்தாலும், பின்னாடி ஜோசிச்சுப் பார்க்கும்போது :wub: ஓவர்தான்.
"வலி தாங்கிய தமிழர் - நாம்
வரி தாங்கிய புலிகள்"

#8 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,924 posts
  • Gender:Male

Posted 14 January 2012 - 09:36 PM

அதுவும் ஜேர்மன் காவல்துறைக்கே இவர்
கண்ணில் மண்ணைத் தூவியிருக்கின்றார் என்பதால்
சாத்திரியாரிடம் எதோ ஒரு சக்தி இருக்கின்றது

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#9 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,923 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 14 January 2012 - 09:38 PM

:lol:
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#10 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 14 January 2012 - 10:16 PM

< ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான். >

வரலாற்றில் ஒரு ஏடும் , குறிப்பும் , செரியான லொள்ளு அப்பனே :lol: :D :lol: :icon_idea: 1 .

இதெல்லாம் வரலாற்றில் பதியப்படவேண்டியவை :lol:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#11 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 14 January 2012 - 10:33 PM

பதிவு நல்லாயிருக்கு.
அம்மா வழி, அப்பா வழி
சித்தப்பா, மாமா, பாட்டன்.........ஒன்றுவிட்ட கும்மியோட பெரியப்பா.......... என்று எல்லோருறைய பெயர்களையும் சேர்த்து வைத்திருப்பார்கள். அதான் எல்லோருறைய குணமும் சேர்ந்து வந்திருக்கும். :lol:

#12 shanthy

shanthy

    முல்லைமண்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,122 posts
  • Gender:Female
  • Location:Germany

Posted 14 January 2012 - 10:41 PM

அதுவும் ஜேர்மன் காவல்துறைக்கே இவர்
கண்ணில் மண்ணைத் தூவியிருக்கின்றார் என்பதால்
சாத்திரியாரிடம் எதோ ஒரு சக்தி இருக்கின்றது

அந்த சக்திதான் சக்கையாகி.....வெடியாகி.....போராகி.... :icon_idea:

இடையில் சில காலம் மனிதனாக வாழ்ந்ததை மட்டும் மறைத்தது பிடிககவில்லையா சகோதரி?

ஐயோ விசுகு இதுதான் உண்மையான சக்கையடி. :D

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

nesakkaram1.gif
முல்லைமண் வலைப்பூ

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

#13 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,185 posts
  • Gender:Male

Posted 15 January 2012 - 12:17 AM

அட, நான் ஏதோ ஏசுநாதர் பிறந்த மாதிரிக் கதை போகுது என்று பார்த்தால், முடிவு சப்பென்று போய் விட்டது!
பிறக்கும் போதே பெரிய ஆரவாரத்துடன் தான் பிறந்திருக்கிறீங்க போல!
உயிர் விட்ட அந்த மாட்டின் ஆவி தான்........ :icon_mrgreen: ..

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com

#14 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,943 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 15 January 2012 - 05:59 AM

எனக்கு என்னமோ இப்பவும் சாத்திரியாரிட்ட ஒளிவட்டம் தெரிவது போல கிடக்கு.....தயாபரன் குருபரன் இவர்களின் தம்பிதானே நீங்கள்.....
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"

http://putthan.blogspot.com/

#15 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 15 January 2012 - 08:26 AM

பதிவு நல்லாயிருக்கு.
அம்மா வழி, அப்பா வழி
சித்தப்பா, மாமா, பாட்டன்.........ஒன்றுவிட்ட கும்மியோட பெரியப்பா.......... என்று எல்லோருறைய பெயர்களையும் சேர்த்து வைத்திருப்பார்கள். அதான் எல்லோருறைய குணமும் சேர்ந்து வந்திருக்கும். :lol:

பரம்பரை குணம் எண்டுறீங்கள். :lol: :lol:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#16 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,086 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 15 January 2012 - 05:15 PM

இப்ப அந்த சாத்தான் வேதம் ஓதுகின்றது என்று பலருக்கு கோபம்.

மானிப்பாய் பக்கம் "ஓமன்" படம் ஓடிய சிலமன்?

#17 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,166 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 15 January 2012 - 05:40 PM

ஒளிவட்டம் பின்னர் சாப்பாட்டு தட்டம் என தெரிந்த போது.... :lol: :lol: :lol: நகைச்சுவையான பதிவு.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#18 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 15 January 2012 - 05:57 PM

சொந்தக்கதை சோகக்கதை என்றில்லாமல், ஒரு பேய்க்கதை மாதிரி நல்ல கதை. :wub: த்ரில்லா இருந்திச்சு. ஆனா எயர்போர்ட் சீன் கொஞ்ச_ :rolleyes: நல்லா இருந்தாலும், பின்னாடி ஜோசிச்சுப் பார்க்கும்போது :wub: ஓவர்தான்.

பின்னாடி யோசிச்செல்லாம்.. பார்த்தால் ஓவராய்தானிருக்கும் யோசிக்காமல் பார்க்கவேண்டும். :lol:

அதுவும் ஜேர்மன் காவல்துறைக்கே இவர்
கண்ணில் மண்ணைத் தூவியிருக்கின்றார் என்பதால்
சாத்திரியாரிடம் எதோ ஒரு சக்தி இருக்கின்றது

என்னட்டை சக்தியிருக்கெண்டு நீங்களாவது ஒத்துக்கொண்டீங்களே நன்றிகள். :lol:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#19 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,308 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 15 January 2012 - 09:35 PM

எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்............அப்ப சாத்து நீங்கள் சாத்தானின் குழந்தை இல்லையா?

Edited by நிழலி, 15 January 2012 - 09:36 PM.

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??

தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

#20 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,035 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 15 January 2012 - 09:44 PM

எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்............அப்ப சாத்து நீங்கள் சாத்தானின் குழந்தை இல்லையா?

ஆறறிவிலை அரையறிவு கொஞ்சம் அஞ்சறிலை அரையறிவு கொஞ்சம் கலந்து செய்த கலவைநான். (படம் வெளிவந்துவிட்டது) :lol:
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]