Jump to content


Tamil Star News
Photo

ஆளை அசத்தும் லெக்கிங்ஸ்.

ஆளுக்கேற்ப அணிய...

  • Please log in to reply
30 replies to this topic

#1 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,546 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 December 2011 - 09:04 AM

Posted ImagePosted Image


ஆளை அசத்தும் லெக்கிங்ஸ் – ஆளுக்கேற்ப அணிய ஆலோசனை.


உடலை மறைக்க மட்டுமே உடைகள் என்றிருந்த நிலைமாறி அழகை வெளிப்படுத்தவே ஆடைகள் என்ற நிலைக்கு வந்துவிட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். எட்டுமுழம் புடவையும், தழைய தழைய பாவாடை தாவணியும் கட்டிய காலம் மலையேறி விட்டது.
சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ், டைட் பேண்ட், என்ற வரிசையில் கால் அழகை வெளிப்படுத்தும் லெக்கிங்ஸ் ஆடைகள் இளைஞிகள் மத்தியில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இது தற்காலத்திய உடை இல்லை என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள்.

மொகலாயர் காலத்திய உடை.

லெக்கின்ஸ் எனப்படும் டைட் பேண்ட் உடை மொகலாயர் காலத்தில் அறிமுகமானது. இதுதான் தற்போது மாற்றம் செய்யப்பட்டு பல வண்ணங்களில் இன்றைய யுவதிகளிடையே வலம் வருகிறது. கோல்டு, சில்வர், காப்பர் மற்றும் கண்ணைப் பறிக்கும் ப்ளரெசன்ட் வர்ணங்களிலும் கிடைக்கிறது. வெல்வெட், லேஸ், டெனிம், லைக்கரா போன்ற துணிவகைகளில் இந்த லெக்கின்ஸ் விற்பனைக்கு கிடைக்கிறது.

உடலை தழுவும் உடை.

அநேகம் பெண்கள் லைக்கரா துணியில் தைக்கப்படும் லெக்கிங்ஸ்சையே விரும்பி அணிகின்றனர் காரணம் அதுதான் உடலோடு ஒட்டி இருக்கிறது. ஆனால் இந்த உடை பெண்களின் உடல் அமைப்பினை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி அடுத்தவர்களின் கண்களை உறுத்துவதை கவனிக்க மறந்துவிடுகின்றனர். எனவே உடலை இருக்கிப் பிடிக்கும் டாப்ஸ் அணியாமால் இடுப்பிற்கு கீழ் இருக்கும் வகையில் டாப்ஸ் தேர்ந்தெடுத்து அணியவேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரை. முட்டிவரை நீண்ட குர்தா, லூசான டாப், சல்வார், போன்றவைகளை மேட்சாக தேர்ந்தெடுத்து அணிவது அந்த உடைக்கு பொருத்தமாக இருக்கும்.

உடல் அமைப்பிற்கு ஏற்ற உடை.

லெக்கிங்ஸ் பல வகைகளில் உண்டு என்றாலும் அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்பவே அணியவேண்டும் என்கின்றனர் ஆடை வடிவமைப்பாளர்கள். இந்த உடை நமக்கு பொருந்துமா என்பதை தெரிந்து கொண்ட பின்னரே அணியவேண்டும் உயரத்திற்கு ஏற்ப பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆளுக்கேற்ற ஆடை.

ஒல்லியாக இருப்பவர்கள் லெக்கிங்ஸ் அணிவதே ஏற்புடையது. ஒல்லியாகவும், உயராமாகவும் இருப்பவர்கள் முக்கால் நீளமுள்ள லெக்கிங்ஸ் அணியலாம். குண்டாக இருப்பவர்கள் அணியவேண்டும் எனில் அவர்களின் இடுப்பளவிற்கு ஏற்ப தேர்வு செய்யவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உயரம் குறைவாக, குண்டாக, இருப்பவர்கள் முழு லெக்கிங்ஸ் அணிந்து முட்டி கால் வரையுள்ள லூசான டாப் அணிவதே எடுப்பாக இருக்கும் என்கின்றனர். நீளமான டாப் அணிவது மேலும் குள்ளமாக காட்டும் .
எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் லெக்கிங்ஸ் அணியும் போது பாக்சர் உள்ளாடையை அணிவதே பாதுகாப்பானது என்பதே ஆடை வடிவமைப்பாளர்களின் அறிவுரையாகும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

பெண்கள் அணியும் உடைகளில் ...
தொள,தொள என்று இல்லாமல் உடலோடு ஒட்டியிருப்பதால், லெகிங்ஸ் எனக்குப் பிடித்தது. :)

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


Advert

#2 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 30 December 2011 - 09:22 AM

சிலர் தங்கள் தோலின் நிறத்திலேயே அணிவார்கள். மிக நன்றாக இருக்கும்.
முழு உடையும் 'லெக்கின்ஸ்' வடிவிலேயே உள்ள ஆடைகளை இன்னும் வடிவமைப்பாளர்கள் உருவாக்காதது துரதிஸ்டமே.

#3 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,412 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 30 December 2011 - 12:55 PM

காலணியும் கவர்ச்சியாய் தெரியும்

கால் அழகை ரசிப்பவர்க்கு :D.............ஏற்ற உடை

Edited by நிலாமதி, 30 December 2011 - 02:22 PM.

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#4 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,119 posts
  • Gender:Male

Posted 30 December 2011 - 01:06 PM

உடைகள் அணிவது உடம்பை மறைக்க

அழகை  வெளிப்படுத்த

கவர்ச்சிகரமாக இருக்க

என்ற நிலை போய்

இப்போது காமனுக்கு அம்பு விடும்

நிலையில் வந்து நிற்கின்றது :o :lol:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#5 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,142 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 30 December 2011 - 08:34 PM

ஜீன்ஸ் அணிவதிலும் பார்க்க லெக்கிங்ஸ் எல்லாத்திற்கும் வசதி :D
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#6 Maruthankerny

Maruthankerny

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,669 posts
  • Gender:Not Telling
  • Location:USA
  • Interests:In Anything

Posted 30 December 2011 - 10:47 PM

ஜீன்ஸ் அணிவதிலும் பார்க்க லெக்கிங்ஸ் எல்லாத்திற்கும் வசதி :D


??????????????????????????????????????????????
I dont hate anyland.....But Ilove my motherland

#7 யாழ்கவி

யாழ்கவி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,291 posts
  • Gender:Female
  • Location:தமிழீழம்

Posted 30 December 2011 - 11:04 PM

என்ன கறுமமடா, பார்க்கவே சகிக்காது.

உடம்பு மெல்லிய ஆக்கள் போட்டாலும் பரவாயில்லை, குண்டானவை போடுவினம் சொல்லவே தேவையில்லை.
தாயினும் பெரியது தாயகம்
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை

#8 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,851 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 30 December 2011 - 11:57 PM

தமிழ்சிறீ இங்கு நீங்கள் இணைத்திருக்கும் "
லெக்கிங்ஸ் என்ற சொல்லுக்கான தமிழ் பதம் என்ன?

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.


#9 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,891 posts
  • Gender:Not Telling
  • Location:North America

Posted 31 December 2011 - 03:58 AM

தமிழ்சிறீ இங்கு நீங்கள் இணைத்திருக்கும் "
லெக்கிங்ஸ் என்ற சொல்லுக்கான தமிழ் பதம் என்ன?

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.



ஆண்டவா இந்த வயதிலை லெக்கிங்ஸ், கைகீல்ஸ் எல்லாம் தேவை தானா??? நடந்து போய் வாறதே பெரும்பாடு சகாறா அதுக்குள்ள........

நண்பியாய்சே அதுதான் புத்திமதி .............

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#10 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,418 posts
  • Gender:Male

Posted 31 December 2011 - 05:09 AM

தமிழ்சிறீ இங்கு நீங்கள் இணைத்திருக்கும் "
லெக்கிங்ஸ் என்ற சொல்லுக்கான தமிழ் பதம் என்ன?

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.

'கால்க் கச்சை' என்று அழைத்தால் என்ன :icon_idea:
  • தமிழ் சிறி likes this

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#11 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,546 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 31 December 2011 - 05:16 AM

'கால்க் கச்சை' என்று அழைத்தால் என்ன :icon_idea:

"கச்சைக் கால்" என்று மாற்றிவிட்டால்... இன்னும் நல்லாயிருக்கும். :lol:

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#12 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,546 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 31 December 2011 - 06:06 AM

சிலர் தங்கள் தோலின் நிறத்திலேயே அணிவார்கள். மிக நன்றாக இருக்கும்.
முழு உடையும் 'லெக்கின்ஸ்' வடிவிலேயே உள்ள ஆடைகளை இன்னும் வடிவமைப்பாளர்கள் உருவாக்காதது துரதிஸ்டமே.


Posted Image
இப்பிடியா.... தப்பிலி,
மேல் சட்டையை, உடலோடு ஒட்டிப் போடும் நங்கையரை... நீங்கள் இங்கிலாந்தில் காணவில்லையா?

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#13 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 31 December 2011 - 09:40 AM

Posted Image
இப்பிடியா.... தப்பிலி,
மேல் சட்டையை, உடலோடு ஒட்டிப் போடும் நங்கையரை... நீங்கள் இங்கிலாந்தில் காணவில்லையா?


இப்பிடியில்லை.
'கால் குழாய்க்கச்சை' வடிவமைப்பில், துணி உடலோடு இறுக்க ஒட்டியதாக இருக்கும். தோலிற்கும் உடைக்குமிடையில் காற்று புகாத இடைவெளி இருக்க வேண்டும்.

பி.கு.
'பமேக' வின் 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' கொள்கையை நாங்களும் பின்பற்றுவதை கவனத்தில் எடுக்கவும்.

#14 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,851 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 31 December 2011 - 03:41 PM

இப்பிடியில்லை.
'கால் குழாய்க்கச்சை' வடிவமைப்பில், துணி உடலோடு இறுக்க ஒட்டியதாக இருக்கும். தோலிற்கும் உடைக்குமிடையில் காற்று புகாத இடைவெளி இருக்க வேண்டும்.

பி.கு.
'பமேக' வின் 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' கொள்கையை நாங்களும் பின்பற்றுவதை கவனத்தில் எடுக்கவும்.


நன்றி தோழர் தப்பிலி. ப.மே.க வின் கொள்கையை கருத்தில் எடுத்து செயலில் காட்டும்
தோழர் தப்பிலியின் இப்பதிவை எமது கழகத்தோழர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் எடுக்கவும்..

"கால் கச்சை" என்பது ஓரளவு பொருத்தமானதாக இருக்கிறது....


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.


#15 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,142 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 31 December 2011 - 08:54 PM

??????????????????????????????????????????????

நான் இதற்கு பதில் எழுதப் போக ஒன்றும் தெரியாத ஒரு அப்பாவி இளைஞனை ரதி பழுதாக்கி விட்டால் என்ட கெட்ட பெயர் எனக்கு வந்து விடும்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#16 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 31 December 2011 - 09:31 PM

"கால் கச்சை" என்பது ஓரளவு பொருத்தமானதாக இருக்கிறது....


'கால் கச்சை' என்றால் கணுக்காலா முழங்காலா குதி காலா என தமிழ் கூறும் நல்லுலகம் தனை நொந்து கொள்ளும். புங்கையூரான் நல்ல அடித்தளமிட்டிருக்கிறார். அதனை விவாதத்திற்கு உட்படுத்தி நல்லதொரு 'சொல்' காண்போம். :lol:


நன்றி தோழர் தப்பிலி. ப.மே.க வின் கொள்கையை கருத்தில் எடுத்து செயலில் காட்டும்
தோழர் தப்பிலியின் இப்பதிவை எமது கழகத்தோழர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் எடுக்கவும்..

பொல்லுக் குடுத்து அடி வாங்கப் போறியள். :D

#17 குட்டி

குட்டி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,460 posts
  • Gender:Male

Posted 31 December 2011 - 09:34 PM

இப்பிடியா தப்பிலி? :rolleyes:
Posted Image

:blink: :unsure: :lol:

Posted Image
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#18 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,546 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 31 December 2011 - 09:46 PM

வருசப் பிறக்கிற நாளிலை, வாழ்க்கையை வெறுக்கப் பண்ண... ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு!!!!!!

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#19 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 31 December 2011 - 09:59 PM

இப்பிடியா தப்பிலி? :rolleyes:
Posted Image

:blink: :unsure: :lol:

Posted Image


ச்சே............. என்ன குட்டி இது?
கொஞ்சம் கற்பனை பண்ணுங்கோ என்று எழுதினால் இப்படியா? :lol: :lol: :lol:

Edited by தப்பிலி, 31 December 2011 - 10:00 PM.


#20 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,418 posts
  • Gender:Male

Posted 31 December 2011 - 10:05 PM

ச்சே............. என்ன குட்டி இது?
கொஞ்சம் கற்பனை பண்ணுங்கோ என்று எழுதினால் இப்படியா? :lol: :lol: :lol:

அது தானே குட்டி?
நல்ல நாள், பெரிய நாள் என்று கூடப் பார்க்காமல்!!!! :D

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com





Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]