நன்றி உறவுகளே
போன கிழமை நடந்த ஒரு விடயம். அதையும் இங்கு பதிகின்றேன்.
எனது 2வது மகனுடன் (வயது 17) இரவு 11 க்கு பின் வேலை முடிந்து வீடு நோக்கி காரில் போய்க்கெகாண்டிருந்தேன். நாங்கள் நண்பர்கள்போல் சிரித்து பகிடிவிட்டு பழகுவோம். அதேபோல் அன்றும் சிரித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தபோது அவனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறும் செய்தி வந்தது. அதைப்பார்த்ததும் அவனது முகம் மாறியதை அவதானித்தேன். நான் தொடர்ந்து பகிடி விட்டபோதும் அவரால் அதற்கு பதிலோ சிரிப்பையோ தரமுடிடியவில்லை. என்னடா என்று கேட்டேன். ஒன்றுமில்லையப்பா என்றான். சிறிது நேரம் கழித்து மீண்டும் நான் என்னப்பு ஏதாவது பிரச்சினை?. இல்லையப்பா. தொலைபேசியில் ஏதாவது கெட்ட தகவல் உனது நண்பிகள் எவராவது ஏதாவது எழுதினார்களா? என மீண்டும் நான் பகிடிவிட. அவரது முகம் இறுகுவதைக்கண்டேன்.
கொஞ்சம் நானும் மாறி குறும் செய்தியில் என்ன வந்தது? என்றேன். எனது நண்பன்(பிரெஞ்சுக்காறன்) ஒருவன் தாய் தகப்பனுடன் கோவித்துக்கொண்டு வெளியில் வந்து றோட்டில் நிற்கிறார் என்றான். எங்கே அவரது வீடு? என்று நான் கேட்க எங்களது வீட்டுக்கு பக்கத்தில் தான் என்றான்.
சரி அவருக்கும் பெற்றோருக்கும் என்ன பிரச்சினை? என்று கேட்டேன்
அவரை 3 வருடங்களுக்கு முன் அவரது பெற்றோர் அவரை கத்தோலிக்க பாடசாலையில் சேர்த்துவிட்டனர். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. அன்றிலிருந்து அவர்களுக்குள் பிரச்சினை.
சரியடாப்பா. பெற்றவர்கள் பிள்ளையின் நன்மைக்குத்தானே எதையும் செய்வர். அவர் படிப்பை முடித்துக்கெகாண்டு வெளியில் வரவேண்டியதுதானே? இது நான்.
இல்லையப்பா
அந்தப்பாடசாலையில் படிப்பைவிட மதத்துக்கும் அதனுடைய போதனைகளுக்குமே இ முதலிடமும் நேரமும் ஒதுக்கப்படுகிறது.
சரி
அவர் பல்லைக்கடித்துக்கொண்டு படிப்பை முடிக்கலாம்தானே. இது நான்.
அப்பா அது அவனால்முடியாது. அவன் சாத்தானை வணங்குபவன்.
என்னடா இது. ஏன் அவன் சாத்தானை இந்த வயதில் வணங்கணும். பெற்றோர் கண்டிப்பதிலும் அர்த்தம் இருக்குத்தானே. இது நான்.
இங்கு இவனைப்போல் பலபேர் இருக்கினம் சாத்தானை வணங்குவோர்.
சரி
சாத்தானை வணங்குபவர்களின் பழக்கவழக்கம் என்ன?
இவனது பழக்கவழக்கம் எப்படி? இது நான்.
திறமான பிள்ளையப்பா. நல்லவன். என்னுடன் 3 வருடத்துக்கு முன்பு படித்தும் இன்றுவரை எங்கள் நட்பைத்தொடரவிரும்பும் ஒரு நல்லல நண்பனப்பா.. அத்துடன் எனக்கு மட்டும்தான் குறும் செய்தி அனுப்பியுள்ளதாக எழுதியுள்ளானப்பா.
சரி
அவனுக்கு 18 வயது கூட இன்னும்ஆகவில்லை. இது பெற்றோர் பிள்ளை பிரச்சினை. நாளைக்கு அவர்கள் ஒன்றாகிவிடுவார்கள். அவனை நான் பேசினால் அவனது பெற்றோருக்கு பிடிக்காது. பெற்றோரை நான் பேசினாலும்அவனுக்கு அது பிடிக்காது. பெற்றோர் பிள்ளை உறவு என்பதுஅப்படித்தான்.
ஆனால் இரவு மழையும் பெய்கிறது. அதனால் அவன் எங்கு போகவேணும் என்று நினைக்கின்றானோ அங்கு கொண்டு போய்விடுகின்றேன். அவனைக்கேள் இது நான்.
தயங்கியபடி
அப்பா என்னை கொஞ்ச நேரம் அவனோடு பொழுதைக்கழிக்க விடுவீர்களா?
நான் கொஞ்ச நேரம் அவனோடு பேசிவிட்டு அதன்பின்னர் அவனது முடிவை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.
சரி போ.
ஆனால் இரவு அதிகநேரம் வெளியில் மினக்கெடக்கூடாது.
சாப்பிட்டாரோ தெரியாது அவருக்கு சாப்பாடு வாங்கிக்கொடு என பொக்கற்றுக்குள் கை வைக்கின்றேன். என்னிடம் காசு இருக்கப்பா.
வீட்டுக்கு ஒரு கிலோமீற்றர் இருக்குமிடத்தில் இறக்கிவிட்டு வீடடுக்கு வருகின்றேன். ஒரு மணித்தியாலத்தால் வீடு வருகின்றார்.
என்ன நடந்தது? இது நான்
அவர் பெற்றோரிடமே போய்விட்டார்.
நான் நல்ல முடிவு நன்றியடா.
Edited by விசுகு, 26 January 2012 - 07:27 PM.