Jump to content


Orumanam
Photo

மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன்


 • Please log in to reply
60 replies to this topic

#41 வீணா

வீணா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 790 posts
 • Gender:Female

Posted 29 February 2012 - 07:09 AM

வன்னியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதும் கிழக்கில் நிற்காது வெளிநாடொன்றிற்குச் சென்றுவிட வேண்டுமென்றும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் தன்னிடமுள்ள பணமனைத்தையும் கூடவே எடுத்துச் செல்ல முடியுமெனவும் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இணைத் தலைமை நாடுகளில் ஏதாவதொன்றின் மூலம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் புலிகள் கூறியதாகவும் இதற்காகக் கருணாவுக்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அப்போது கசிந்த தகவல்கள் தெரிவித்திருந்தன.
ஆனால் கருணா அந்த ஏற்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. பதிலாகத் தான் தொடர்ந்தும் கிழக்கிலிருந்து செயற்படவுள்ளதாகவும் அதற்குப் புலிகள் இடையூறு செய்யக்கூடாது எனவும் இடையூறு செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்தத்துணிவுக்கு இலங்கை ராணுவம் புலிகளினால் வரக்கூடிய சவாலை எதிர்கொள்ள உதவும் என்ற அவரின் நம்பிக்கையும் கிழக்கிலங்கையின் ராணுவத் தளபதியான சாந்த கோத்தகொடவுடன் அவர் கொண்டிருந்த மிக நெருக்கமான உறவுமே அடிப்படையாக அமைந்தன. ஆனால் இவை வெறும் பிரமைகளே என்பதைக் கருணா உணர்வதற்கு அதிககால மெடுக்கவில்லை.
/Portals/0/02_2012/prabhkaran_col_karuna_ltte_spl.jpg
புலிகளினால் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது படையணிகளைக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தார். இந்த அணிகளுக்கு கேணல் சொர்ணம் கேணல் பானு கேணல் றமேஸ் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் தலைமை தாங்கி இருந்தனர். பிரிகேடியர் பால்ராஜும் சென்றதாகக் கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களைத்தவிரத் தயாமோகன் கௌசல்யன் றமணன் ஆகியோரும் சிறு அணிகளுடன் மட்டக்களப்பினுள் பிரவேசித்திருந்தனர்.
மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக சுமார் 68 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வெருகல் ஆற்றின் வடக்கு மருங்கில் புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ஸ் அன்றனி படைப்பிரிவு தரையிறங்கியது.
ஆனால் புலிகளின் தரையிறங்கலை வெருகல் ஆற்றிற்குத் தெற்காக எதிர்பார்த்த கருணா தனது போராளிகளை அங்கே குவித்திருந்தார். கருணாவின் மூத்த சகோதரரான லெப்டினட் கேணல் ரெஜி தலைமையில் சுமார் 500ற்கும் மேற்பட்ட போராளிகள் பலமான ஆயுதங்களுடன் அன்று அங்கு கருணா தரப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கருணா அணியினர் வெருகல் ஆற்றைக் குறிவைத்து காத்திருக்க மறுபுறம் கடல் மூலமாகவும் வாவி மூலமாகவும் நகர்ந்த ஜெயந்தன் விஷேட படைப்பிரிவுப் போராளிகள் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் ஊடுருவி தம்மை பலப்படுத்தி விட்டிருந்தனர்.
இதேவேளை கடற்புலிகளின் சிறு சிறு வள்ளங்கள் மூலம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் புலிகளின் சில அணிகள் தரையிறங்கின. ஜெயந்தன் படைப்பிரிவின் முக்கிய தளபதிகளான ஜனார்த்தனன் மற்றும் ஜெயமோகன் தலைமையிலான சில படையணிகள் முன்னேறி எந்தவித எதிர்ப்புக்களும் இன்றிக் கஞ்சிகுடியாறு தளத்தை மீட்டார்கள். அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அம்பாறை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அலுவலகங்களும் புலிகளின் அரசியல் துறையினரால் பொறுப்பேற்கப்பட்டன.
அதேவேளை விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் ரமணன் தலைமையிலான படையணி ஒன்று நாவிதன்வெளி வழியாகப் படுவான்கரைப் பிரதேசத்தினுள் நுழைந்தது. அந்த அணி புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் கொக்கட்டிச் சோலையில் இருந்த மாவட்டச் செயலகம் தமிழ்அலை பத்திரிகைக் காரியாலயம் தாந்தா மலைப் பிரதேசத்தில் இருந்த சோலையகம் என்பனவற்றை கைப்பற்றியது.
இவ்வாறு புலிகள் கிழக்குமாகாணத்துக்குள் நுழைந்து தம்மை தாக்குவதற்கு இலங்கை அரசபடையினர் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் தமது பக்கம் நிற்பார்கள் எனவும் கருணா தரப்பினர் நம்பியிருந்தனர். உண்மையில் கருணாவுடன் நின்ற அரச புலனாய்வுப் பிரிவினரும் அரசபடையினரும் புலிகளைத் தடுத்து நிறுத்த விரும்பிய போதும் றணில், கருணா- புலிகள் மோதலில் படையினரைத் தலையிடாது விலகியிருக்கும்படி கிழக்கின் தளபதியான லெப்டினன் கேணல் சாந்த கோத்தகொட ஊடாகத் தெளிவான அறிவித்தலை வழங்கியிருந்தார். அத்துடன் முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார்.
புலிகளின் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசாங்கமோ அல்லது படையினரோ எடுப்பது சமாதானப் பேச்சுவார்த்தையைக் குழப்புவதாக அமைந்துவிடும் என்பதால் புலிகளின் உள்வீட்டுச் சண்டையில் அரசாங்கமோ படையினரோ தலையிடப் போவதில்லையென மிகச் சாதுரியமான பதிலையும் றணில் அப்போது தெரிவித்திருந்தார்.
உண்மையில் றணிலின் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவோ கருணா அணியினரைப் புலிகளுடன் மோத விடாது தென்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்திருக்க முடியும். அல்லது வன்னியில் இருந்து புறப்பட்ட புலிகளைக் கிழக்கிற் தரையிறங்க அனுமதிக்கப் போவதில்லை என றணிலின் அரசாங்கமோ ஜனாதிபதி சந்திரிக்காவோ உறுதியாகத் தெரிவித்திருக்க முடியும். அதற்கப்பாலும் யுத்த நிறுத்த காலத்தில் ஆயுத மோதல்களை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருக்கவும் முடியும். சமாதான காலத்தில் புலிகள் ஆயிரக்கணக்கான யுத்தநிறுத்தமீறல்களைச் செய்தார்கள் எனப் பட்டியலிட்ட அரசாங்கம் இதற்கு மட்டும் ஏன் அனுமதித்தது?
இந்தவிடத்தில்தான் இரணிலின் இராசதந்திரம் மற்றும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களின் ஒற்றுமை என்பன மிகத்தெளிவாகத் தெரிந்தன.
புலிகளிடமிருந்து வலிமையான ஒரு இராணுவத் தளபதியை உடைத்து எடுத்தல்
வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழப்படுத்தல்
ஐந்தாயிரம் போராளிகளோடு கிழக்கில் பலமாக இருந்த கருணா அந்தப்பலத்துடனேயே இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமக்குத் தலையிடியாகலாம் என்பதால் புலிகளையும் கருணாவையும் மோதவைத்துப் போரனுபவம் கொண்ட தமிழ்ராணுவத்தைப் பலமிழக்கச் செய்தல்
கருணா என்னும் பாம்பின் பல்லைப் புலிகளைக் கொண்டே பிடுங்கிப் பின் தேவைப்படும் போது பாவிப்பதற்காக தமது மகுடிப் பேழைக்குள் எடுத்தல்
எனப் பல நோக்கங்களைத் தனது இராசதந்திரத்தின் முலம் ரணில் சாதித்துக் கொண்டிருந்த போது கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் போராளிகள் தமக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
சந்திரிக்காவும் றணிலும் கடுமையானதொரு அதிகாரப்போட்டியில் ஈடுபட்டிருந்தபோதும் தங்களுக்குள் முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் கருணாவும் புலிகளும் தங்களுக்குள் அடிபட்டழிவது சிங்களப் பெருந்தேசியவாத்திற்கு நன்மையே என்பதில் ஒன்றுபட்டனர். ஆனால் புலிகளின் தலைமையோ அல்லது கருணாவோ இந்த ஒற்றுமையையோ அதன் பின்னால் உள்ள சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்களையோ புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வில்லை. இத்தனை ' ஆத்திரக்காரர்களுக்குப் புத்தி மத்திமம்' எனப்பழமொழியிற் சொல்வார்கள்.
தமிழ்த்தேசியவாதம் அதன் போராட்ட வரலாற்றில் பல தடவைகள் தானே தனது கண்ணில் குற்றிக்கொண்டுள்ளது. டெலோப் போராளிகளைக் கொன்ற போது ஈ.பி.அர். எல் எ·ப் போராளிகளைக் கொன்றபோது இன்னும் சிறிய மாற்று இயக்கங்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்ற போதும் இரத்தம் வடிந்தது தமிழ்தேசியத்தின் கண்களில்தான். அந்த இரத்தம் தேசிய விடுதலை என்ற பெயரால் நியாயப்படுத்தப்பட்டது. சரி இந்த இரத்தம் இனியொரு போதும் வடியாதென்று மக்கள் மாயையில் ஆழ்ந்திருந்த காலத்தில் மீண்டுமொருமுறை தமிழ் தேசியம் தனது கண்ணில் குற்றிக் கொண்டது.
/Portals/0/02_2012/Karuna%20carders1.JPG
(புலிகளுடன் மோதிய கருணாவின் சிறுவர் அணியினர் காயங்களுடன் வைத்தியசாலையில் )
41 நாட்கள் தொடர்ந்த கருணா புலிகள் மோதலில் முன்னூறு வரையான புலிகள் கிழக்கில் கொன்றொழிக்கப்பட்டனர். இதில் கருணாவின் மூத்த சகோதரர் லெப்டினட் கேணல் ரெஜி துரை விசு ஜிம்கலித்தாத்தா ராபர்ட் திருமாள் உள்ளிட்ட முக்கிய தளபதிகளும் அடங்குகின்றனர். இதேபோல் நீலன் என்ற புலனாய்வுப் பொறுப்பாளர் உள்ளிட்ட பல விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகளைக் கருணா அணியினர் கொன்றொழித்தனர்.
புலிகள் தமது அதிகாரத்தைக் கிழக்கில் நிலைநிறுத்த தாம் வளர்த்து உருவாக்கிய போராளிகளையே பலியெடுக்கத் துணிந்தனர். கருணாவோ தன்னைப் பாதுகாக்கவும் கிழக்கில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் தன்னை நம்பிப் புலிகள் அமைப்பில் இணைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட கிழக்கு போராளிகளைப் பலியாக்கினார்.
/Portals/0/02_2012/Karuna%20carders2.JPG
புலிகளுடன் மோதிய கருணாவின் அணியினர் காயங்களுடன் வைத்தியசாலையில்
இங்கேதான் கிழக்கை வடக்கின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்காகவும் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காகவும் தான் புலிகளின் தலைமையுடன் முரண்பட்டேன் எனக்கூறிய 'கிழக்கின் மைந்தனான கருணாவின்' கோரிக்கைகள் பற்றி ஆழமான கேள்விகள் எழுகின்றன.
புலிகளின் தலைமையுடன் முரண்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறித் தனியாக இயங்க முடிவெடுத்த கருணா இலங்கை அரசிடம் கிழக்கு தொடர்பாக எந்த அரசியற் கோரிக்கைகளையும் வைத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஐயாயிரம் போராளிகளுடன் கிழக்கில் பலமாக இருந்த கருணா கிழக்கின் அபிவிருத்திக்குத் தேவையான குறைந்த பட்ச அதிகாரங்களையாவது பெறுவதற்கு அரசுடன் பேரம் பேச முற்பட்டிருக்க வேண்டும் அரசு எதையாவது வழங்கியிருக்குமோ என்பது சந்தேகமே. ஆனால் கருணா உண்மையிலும் ஒரு அரசியல் நோக்கோடுதான் புலிகளில் இருந்து பிரிகிறார் என்னும் ஒரு தோற்றப்பாடாவது உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகள் தம்மீது தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் எனத் தெரிந்திருந்தும் கிழக்கின் அனைத்துப் போராளிகளையும் சகோதரப் படுகொலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய எந்த முன்னேற்பாடுகளையோ அரசியல் முனைப்புக்களையோ கருணா செய்யவில்லை. கிழக்கில் இருந்த போராளிகள் அனைவரையும் வைத்துப்பராமரிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக கணிசமான போராளிகளை விடுகளுக்கு போங்கள் என்றும் கூப்பிடும் பொது வாருங்கள் என்றும் அனுப்பி வைத்த கருணா போரிடும் திறனும் அனுபவமும் கொண்ட ஒரு தொகையான போராளிகளை மட்டும் (500க்கும் 1000க்கும் இடையில்) தன்னுடன் வைத்திருந்ததேன்?
/Portals/0/02_2012/karuna3.bmp
(புலிகளுடனான பிளவின் பின் கருணா)
வன்னியில் இருந்து அனுப்பப்பட்ட புலிகளின் படை அணிகளுடனும் கிழக்கில் வன்னித் தரப்பினருக்கு ஆதரவாக இருந்த தளபதிகளின் அணிகளுடனும் மோதிக் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவ்வளவு போராளிகளும் போதுமென்று முன்னொரு காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அபிமான தளபதியாகவும் இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொற்பனமாகவும் விளங்கிய கருணா அம்மான் கணக்கிட்டிருப்பாரேயானால் அது நம்ப முடியாததாகும். ஆனால் பிற்பாடு நான்கு லட்சம் படைகளுடன் பெரும் எடுப்பில் இலங்கை இராணுவம் வன்னிக்குள் நுழையும் போது எல்லா வளங்கற்பாதைகளும் அடைபட்ட நிலையில் 10000 ஆயிரம் போராளிகளுடன் வன்னியைக் காப்பாற்ற முடியுமென விடுதலைப்புலிகள் சொல்லிக் கொண்டிருந்ததை நினைக்கும் போது கருணாவும் புலிகளும் ஒரேமாதிரியான சிந்தனையையே கொண்டிருந்ததை அறியமுடிகிறது. இது ஒன்றும் வியப்பானதல்ல. எனேனில் கருணாவும் புலிகளும் கொண்டிருந்த இராணுவ அறிவு அரசியலினால் வழிநடத்தப்படாத அறிவாகும். மேலும் இரு தரப்பினரினதும் இராணுவக்கணிப்புகளும் தவறாகிப் போனதற்கான அடிப்படை ஒன்றுதான். இருதரப்புமே நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர்களின் சொந்த இருப்புக்கு அச்சுறுத்தல் வந்த போது தம்மைப்பாதுகாக்கக் கூடிய வழிகளை மட்டுமே சிந்தித்திருந்தனர். மக்களின் நலன்களில் இருந்து முடிவுகளை எடுக்கக்கூடிய அரசியல் அறிவையோ சிந்தனைப் புலத்தையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை. புலிகளிடம் பிற்பாடு வெளிப்பட்ட இந்தக் குணாம்சம் முன்னரே கருணாவிடமும் வெளிப்பட்டது.
எந்த விதமான அடிப்படைத் திட்டங்களும் முன்னேற்பாடுகளும் இல்லாமல் கிழக்கில் செயற்படப்போவதாக அறிவித்த கருணா தெரிந்தெடுத்த போராளிகளைத் தனது பாதுகாப்புக்காகக் கிழக்கில் பலியிட்டார். கருணா இந்த மோதல்கள் உருவாவதற்கு முன்பே (புலிகளுடன் முரண்பாடு முற்றிவந்த போதே) தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசாங்கத்தின் உதவியுடன் மலேசியா அனுப்பி வைத்துவிட்டார். இதன் போது விடுதலைப் போராட்டத்திற்கெனச் சேகரித்த இலட்சக்கணக்கான் பணத்தையும் தனது மனைவியின் தேவைக்காகக் கொடுத்து விட்டதனை கருணாவுடன் இருந்த போராளிகளே அம்பலப்படுத்தியும் இருந்தனர். கருணா தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு ஐக்கியதேசியக் கட்சியில் அமைச்சராக இருந்தவரும் பின்னாளில் மலேசியத் தூதராக இருந்தவருமான செல்லையா இராஜதுரையின் உதவியையும் பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையில் நடந்த 41 நாட்கள் மோதலில் கருணாவிடம் இருந்த போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகளும் அதன் தளபதிகளும் கொல்லப்பட்டனர். றணில் அரசாங்கம் எதிர்பார்த்தது போன்றே கிழக்குப் போராளிகளின் பலம் பெருமளவுக்கு அழிக்கப்பட்டது. பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மார்க்கன் இனியபாரதி போன்ற இளநிலைத் தளபதிகளும் சில அணியினரும் எஞ்சினர்.
இதில் வேதனைப்பட வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் புலிகள் தமக்குள்ளே மோதி நூற்றுக் கணக்கான தமிழ்ப்போராளிகள் இறந்து கொண்டிருந்த போது தங்களது பிள்ளைகளை இப்படியும் இழக்க நேருமென்றெதிர்பாராத பெற்றோர் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த போது கிழக்குத் தேசியம் பேசிய சிவராம் உள்ளிட்ட இராணுவ ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் இந்தச்சமருக்கு புதிய இலக்கணத்தை அளித்தனர். அதுவரைகாலமும் எதிரிப் படைகளைச் சமரில் வெற்றி கொண்ட புலிகள் தாம் பயிற்றுவித்து வளர்த்து உருவாக்கிய தமது பலம்மிக்க அணிகளையும் எதிர் கொள்ளும் இராணுவப் புலமையைப் பெற்றுள்ளார்கள் என அவர்கள் புகழாரம் சூட்டினர். இது புலிகளின் அடுத்த கட்ட இராணுவ முதிர்ச்சி எனவும் வியந்தனர்.
எதிரியின் அரசியற் காய்நகர்த்தல்கள் இராணுவத்தந்திரங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து இடித்துரைத்து வழிகாட்ட வேண்டிய மதியுரைஞர்களும் ஆய்வாளர்களும் இவ்வாறு கூழுக்குப் பாடிக் கொண்டிருந்தபோது சிங்களப் பெருந்தேசியவாதம் நான்காவது ஈழப்போருக்குத் தன்னைப்பட்டை தீட்டிக்கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளுடன் நிகழ்ந்த அதிதீவிர மோதல்களில் தனது தனது பலத்தை இழந்த ஒரு இரவில் கிழக்கின் மைந்தனான கருணா தனது பால்ய மற்றும் பாடசாலை நண்பர் அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் வெறுங்கையோடு சென்று சிங்கத்தின் காலடியில் விழுந்தார்.
லிசாஹிர் மொலானா கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதி

(சண்டையை கைவிட்டுவிட்டு பின்வாங்குமாறு அவரிடம் கூறினேன். அவரும் அங்கிருந்து தப்பி தொப்பிகலக் காட்டுப்பகுதிக்கு சென்றார். நான் அங்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு ‐ ஏப்ரல் 12 ஆம் திகதி ‐ கொழும்புக்கு வந்ததாகவும் அலிசாகிர் தனது செவ்வியில் தெரிவித்தார். ஆயுதங்கள் எதுவுமின்றி சாதாரண பயணிகள் போல வாகனத்தில் சென்றதால் வரும்வழியில் சோதனைசாவடிகளில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.

கொழும்புக்கு அழைத்துச் சென்ற கருணாவை முதல்நாள் ஜெய்க் ஹில்ட்டன் ஹோட்டலில் தங்கவைப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட நான், இது விடயம் சம்பந்தமாக சமாதான செயலக பணிப்பாளர் பேர்னாட் குணத்திலக்கவிடம் எடுத்துக்கூறி, கருணாவை அவரிடம் பொறுப்பளித்ததாக கூறுகிறார். தான் வெறுமனே டக்ஸி ஓட்டுநர் வேலை மட்டும் பார்க்கவில்லை. பொறுப்புடன் இந்த விடயத்தை செய்துமுடிதததாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.)

/Portals/0/02_2012/alizahir_karuna.jpg
அலிசாகிர் மௌலானாவுடன் கருணா
இவ்வாறு அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் 2004 ஏப்ரல் 12ஆம் திகதி கருணா கொழும்பு அழைத்து செல்லப்பட்ட செய்தியை அன்றே இரவு 9.15 மணிச் சூரியன் செய்தியில் வெளியிட்டு இருந்தேன். இது எல்லோருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. காரணம் மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டு கருணா கொழும்பு வருவதற்கு முன்பே சூரியன் எ·ப் எம் வானொலியில் அச் செய்தி ஒலிபரப்பானமை கருணாவின் பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எனது நிறுவனத்தின் தலைவர் கூட எனது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எவ்வாறு இந்தச் செய்தியைப் பெற்றாய் என வினவியிருந்தார்.
ஒரு பத்திரிகையாளனாக இவ்வாறான செய்திகளை பெற்றுக்கொள்வதும் உறுதிப்படுத்துவதும் சவாலான விடையங்களாகும். அன்றைய காலப்பகுதியில் சூரியனின் செய்தியாளர்கள் செய்தி ஆசிரியர்கள் மற்றும் எம்மோடு இணைந்திருந்த மக்கள் என அனைவரது உழைப்பாலும் உருவாகியிருந்த ஒரு வலையமைப்பாலேயே அது சாத்தியமாகியிருந்தது. இவை தொடர்பாக பின்னர் வரும் தொடர்களில் பார்ப்போம்.
பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறிய கருணாவுக்கு இருந்த ஒரு தெரிவு இலங்கை அரச ராணுவத்தின் துணைக்குழுத் தலைவராக மாறுவதே. இலங்கை அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச புலனாய்வு மற்றும் இராணுவப் பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு உதவுதல் எனக் கிழக்கின் மைந்தனின் வேலைப்பழு அதிகரித்ததே அன்றிக் குறையவில்லை.
2009 இல் நிகழ்ந்த நான்காம் ஈழப்போரில் கருணா, புலிகளின் பலம் தொடர்பாக இராணுவத்திற்கு வழங்கிய தகவல்களும் இராணுவத்தின் வெற்றிக்கு வழிவகுத்திருந்ததாகக் கூறப்பட்டது.
கொழும்பிற்குச் சென்ற கருணா பின்னர் இலங்கை அரசின் முகாம்களில் இருந்து கொண்டு (பானாங்கொடை மற்றும் வேறு சில இரகசிய முகாம்களில் இருந்து) எஞ்சிய தனது போராளிகளை குழுக்களாக்கி வழிநடத்தி வந்தார். இந்தக் குழுக்களுக்கு தற்போதைய கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் களத்தளபதியாக இருக்க மார்க்கன். இனியபாரதி போன்றோர் கீழ்நிலைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். கருணாவினால் வழிநடத்தப்பட்ட குழுக்களின் முகாம்கள் கிழக்கின் எல்லைப்புறங்களில் இலங்கை அரசின் இராணுவ படைமுகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மீதும் புலிகள் பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டு கருணா குழுவினரை அழித்துள்ளனர்.
வடக்கைச் சேர்ந்த அரசியல் வாதிகளும் பின்னாளில் வந்த போராளிக்குழுக்களும் குறிப்பாக விடுதலைப் புலிகளும் கிழக்கின் போராளிகளையும் கிழக்கு மக்களையும் தமது நலன்களுக்காக பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதும் அதில் பெருமளவு உண்மைகள் இருப்பதும் ஏற்கனவே எனது தொடர்களில் ஒப்புக்கொள்ளப்பட்டு அலசப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும் பின்னாளிற் போராளித் தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடனோ அன்றி ஆளும் அரசாங்கங்களுடனோ தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் முந்தைய தொடரில் வெளிப்படுத்தியிருந்தேன்.
கருணாவின் பிளவை இந்தக்கண்ணோட்டத்தில் இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோம்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்த அனேகமான இளைஞர்களைப் போலவே பாடசாலைப் பருவத்திலேயே கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து விட்டார். இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்பதித்தவுடன் குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட கிழக்கில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் 1987களில் வடக்கிற்கு அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் கருணா என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன் அவரது அயராத உழைப்பு அர்பணிப்புடன் கூடிய போராட்டத் திறன் தலைமை மீது கொண்ட அதீத விசுவாசம் என்பன காரணமாக மட்டக்களப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பின் கிழக்கின் தளபதியாக உயர்த்தப்பட்டார்.
'சொல்லுறதைச் செய்யிறவனே எங்களுக்குத் தேவை' என்பது புலிகளின் தலைமையினது பிரபல்யமான வாசகம். தலைமை எதனைக் கூறுகிறதோ அல்லது உத்தரவிடுகிறதோ அதனை கேளிவிகளுக்கு அப்பாற்பட்டு நிறைவேற்ற வேண்டுமென்பதே புலிகளுக்குள் நிலவிய அடிப்படைத்தாரக மந்திரம். இந்தக் கோட்பாட்டைக் கருணா அளவுக்குக் கடைப்பிடித்தவர்கள் புலிகள் அமைப்பில் எவருமில்லை என்னுமளவுக்கு கருணா விளங்கியிருந்தார்.
வடக்கில் ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது இலங்கைப் படையினர் தமிழ்ப் பொதுமக்கள் மீது மேற்கொண்ட ஒரு தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என வன்னியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடனேயே தனது தொடர்பாடற் கருவி மூலம் மட்டக்களப்பில் இருந்த போராளிகளுக்கு சிங்களக் குடியேற்றமொன்றின் மீதான தாக்குதலுக்கான உத்தரவைக் கருணா வழக்கிவிட்டார். கூட்டத்தின் போக்கில் சற்றுச் சிந்தித்த பின் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவிடம் இப்போதைக்கு வேண்டாம் அரசியல் சூழல் சரியில்லை பின்னொரு போது பார்க்கலாம் எனக்கூறியிருகிறார் உடனே கருணா கிழக்குப் போராளிகளைத் தொடர்புகொண்டு நிறுத்துங்கள் எனச் சொல்ல முன்பே கருணாவின் உத்தரவின் பேரில் சென்ற அணி எல்லையிற் பலரை வெட்டிச் சரித்தபின் மீண்டு வந்து கொண்டிருப்பதாக கருணாவின் உதவியாளர் மறுமுனையில் பதிலளித்திருக்கிறார். புலிகளின் தலைமை மீது அன்று தான் கொண்டிருந்த விசுவாசம் மற்றும் எந்த நேரத்திலும் தாம் தாக்குதல்களுக்கு தயாராக இருந்தநிலை போன்றவற்றை விளக்க இந்தக்கதையினை கருணாவே சிலரிடம் கூறியிருக்கிறார். எது எப்படியிருப்பினும் புலிகளின் தலைவர் பிரபாகரன் எள் என்றால் எண்ணையாக நின்ற கருணாவின் இயல்பு குறித்ததே இக்கதை.
விடுதலைப்போராட்டம் எழுச்சியடைந்து வந்த காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் எல்லைப் புறக்கிராமங்களில் அடிக்கடி நிகழ்ந்தன. புலிகளின் இராணுவக் கண்ணோட்டத்தில் கிழக்கின் எல்லைப்புறச் சிங்களக் கிராமங்களைத் தொடர்ச்சியாகத் தாக்கிப் பதட்டத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கை அரச இராணுவத்திற்கு தனது ஆள் மற்றும் படை உபகரண வலுவை பிரித்து எல்லைப் புறங்களுக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்க முடியுமென்று கருதினார்கள். இதன் மூலம் அரச படைகளின் பலம் ஒரிடத்தில் திரள முடியாதென்பதுடன் ஆள் மற்றும் வளப்பற்றாக் குறைகளுக்கும் இலங்கை அரசாங்கம் முகம் கொடுக்க நேரிடுமென்றும் கருதினார்கள். ஆனால் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் தமிழ் தேசிய விடுதலையின் அரசியல் பரிமாணத்தின் மீது இரத்தக்கறையைப் பூசியதைப்பற்றி அவர்கள் அன்று கவலைப்பட்டிருக்கவில்லை.
பின்னாளில் உலக ஒழுங்கு மாறியபோது புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகக் காட்டுவதற்கான ஆதாரங்களாக இவையும் அமைந்தன.
இவ்வாறான அரசியற் சிந்தனையற்ற போர் விழுமியங்களுக்குட்படாத மனித்தன்மையற்ற தாக்குதல்களை தொலைதூர அரசியற் சிந்தனை கொண்ட ஒரு விடுதலை அமைப்பு செய்ய முடியாது, செய்யக்கூடாது. இவ்வாறான தாக்குதல்களை அனேகமான தமிழீழவிடுதலை அமைப்புக்களில் இருந்த போராளிகளும் குறிப்பாக விடுதலைப்புலிகளில் இருந்த போராளிகளும் (கருணா உட்பட) இலகுவான முறையில் செய்தே இருந்தனர்.
சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான கொலைகள் மட்டுமல்ல ஈழப் போராட்ட வரலாறு நெடுகிலும் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் மாற்றுக்கருத்தாளர்கள் மீதான கொலைகள் மற்றும் சித்திரவதைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் செய்த விடுதலை இயக்கங்களில் இருந்தவர்கள் செய்திருந்தனர்.
ஆக விடுதலைப் போராட்டத்தின் இராணுவ உருவாக்கத்தில் அதன் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்ட அடிப்படையான தவறு காரணமாக தமிழ் ஈழ விடுதலை வீரர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதத்துவத்துக்கெதிரான குணாம்சங்களை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது கண்கூடு.
1987ஆம் ஆண்டின் பின் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லைப்புறக் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் யாவும் கருணாவின் நேரடி உத்தரவிற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் எந்தத் தாக்குதல்களையும் குறிப்பாக இராணுவத்தின்மீது மேற்கொள்ளப்போகும் தாக்குதல்களை முதலில் அவர்கள் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்திய பின்பே மேற்கொள்ளும் வழமை இருந்த போதும் எல்லைப்புறக் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றைக் கருணா தன்னுடைய முடிவிற் செயற்படுத்திவிட்டுப் பின்னர் அறிவித்த சந்தர்ப்பங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
புலிகளின் தலைமையோடு முரண்பாடு முற்றிய ஒரு நிலையிலேயே கிழக்கில் புலனாய்வுத் துறை தவிர்ந்த அனைத்து நடவடிக்கை களையும் தனது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருந்த கருணா புலிகள் அமைப்பின் முக்கியமான 16 துறைகளுக்கான பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். புலிகளுடன் பாலும் நீரும் போலச் சேர்ந்திருந்த காலத்தில் அவர் இதனை உணராதிருந்தது வியப்பானது.
/Portals/0/02_2012/karuna_addressing.png
(புதிதாக இணைக்கப்பட்ட போராளிகளுடன் கருணா)
கிழக்கின் முடி சூடாமன்னனாக விளங்கிய கருணா பற்றியும் அப்போது கிழக்கில் இருந்த போராளிகளுக்குள் விமர்சனங்கள் எழாமல் இல்லை ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிழக்கு மாகாணத்தில் போராளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் விசுவாசமான முகாமையாளனாகக் கருணா விளங்கியமையால் கருணா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் விடுதலைப்புலிகளின் தலைமை கண்டும் காணாமலும் விட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணா தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது விமர்சனங்கள் அடங்கிய பல கடிதங்களை விடுதலைப்புலிகளின் தலைமை கருணாவிடமே கையளித்துமிருக்கிறது. அதனால் அக்கடிதங்களை எழுதிய போராளிகளைக் கருணா பழிவாங்கியும் உள்ளார். கருணா மீது குற்றசாட்டுக்களை முன்வைத்த முக்கியமான தளபதிகளான நிஸாம் ஜீவன் போன்றவர்கள் இந்தவடிப்படையில் கருணாவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கிழக்கின் போராளிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது தொடர்பாக புலிகளின் தலைமை எந்த நடவடிக்கைகளையும் கருணா மீது எடுக்கவில்லை.
இந்திய அமைதிப்படை காலத்தில் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் ஈ.என்.டீ.எல்.எவ் அமைப்புகள் தமிழ்த்தேசிய இராணுவம் என்றவொரு கட்டமைப்பை உருவாக்கி அதற்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். அவ்வாறு வடக்கு கிழக்கில் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் பல நூற்றுக்கணக்கான கிழக்குமாகாணத்தைச் இளைஞர்களும் அடங்குவர். இந்திய ராணுவம் இலங்கையை விட்டு நீங்கிய போது இந்த இளைஞர்கள் அனாதரவாக விடப்பட்டனர். இவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை எந்தவித அரசியற்சிந்தனையோ மனிதாபிமானமோவின்றிக் கருணா அன்று பிறப்பித்திருந்தார். இந்தக்கொலைச் செயலுக்கு 1990களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப்போராளியான றேகன் என்பவர் தலைமை தாங்கியிருந்தார். தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட தனது மகனை தேடித் திரிந்த தாய் ஒருவர் கிழக்குமாகாணத்தில் மாமாங்கம், புன்னைச் சோலை, பார்றோட் கள்ளியங்காடு, ரெயில்வே ஸ்ரேசன் ஏரியா கள்ளியங்காடு போன்ற பகுதிகளில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய இராணுவ முகாம்களில் கைப்பற்றப்பட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தேசிய இராணுவத்தினர் கள்ளியங்காட்டில் அமைந்திருந்த ஒரு அரிசி ஆலையொன்றினுள் குவிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து அங்கு சென்று குவிந்திருந்த சடலங்களை ஒவ்வொன்றாக எண்ணி அழுதழுது புரட்டித் தனது மகனை தேடியிருந்தார். ஏறாத்தாள 843 சடலங்களை அவர் எண்ணியிருந்தார். இவர்களும் கிழக்கின் மைந்தர்கள்தான் என்பதனைக் கருணா அன்று அறியவில்லையோ?
புலிகளுக்கு ஆட்களை வழங்கிய போதும் சரி, மற்ற இயக்கங்களில் இருந்த கிழக்குமாகாணப் போராளிகளை மனிதாபிமானமே இல்லாமல் கொன்ற போதும் சரி கிழக்குப்பற்றிய துளி உணர்வு கூட இந்தக்கிழக்கின் மைந்தனுக்கு ஏற்படவேயில்லையே?
/Portals/0/02_2012/Child%20soldiers%20TMVP2%20BBC%20NEWS%20.jpg
(Col Karuna's faction has forced many children into its ranks
Page last updated at 15:15 GMT, Friday, 9 May 2008 16:15 BBC UK )
பாரிய படையெடுப்பை மேற்கொண்டு கிழக்கை இலங்கை இராணுவம் முழுமையாக விடுவித்தபோது கருணாவினது குழுவினர் கிழக்கில் மீண்டும் துணை இராணுவக் குழுவாகத்தானே மாற்றிச் செயற்பட ஆரம்பித்தனர். கருணாவினது இந்தக்குழுக்கள் பலவந்தமான முறையில் சிறுவர்களைத் தம்முடன் இணைத்திருந்தமை குறித்து மனித உரிமைக்குழுக்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தன. விடுதலைப்புலிகள் சிறுவர்களை போராளிகளாக இணைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சர்வதேச ரீதியில் வலுப்பெற்றுக் கொண்டு இருந்த போது அரசாங்க படைகளின் ஆதரவுடன் கருணாவின் முகாம்களிலும் சிறுவர்கள் துப்பாக்கிகளின் சுமைதாங்காது நின்றார்கள் இவர்களும் கிழக்கின் பிஞ்சுகள்தானே?
பிரபாகரனிடமிருந்தும் வடக்குப் புலிகளிடமிருந்தும் கிழக்கை விடுவிக்கப் புறப்பட்ட விடிவெள்ளி, கிழக்குப் பிஞ்சுகளின் கையில் கையிலும் கொள்ளிக்கட்டையைக் கொடுத்ததேனோ?
இங்குதான் கருணா அரசியல் ரீதியாக அம்பலப்படுகின்றார். கருணாவின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து புலிகளின் தலைமை அவருக்கெதிராக திரும்பத் தொடங்கிய போதுதான் கிழக்கு பற்றிய அவரது அக்கறை விழித்துக்கொள்கிறது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு தான் அதுவரை காலமும் அனுபவித்துவந்த உயர்நிலையை அனுபவிக்க முடியாது என்று வந்த போது இலங்கை அரசு கருணா என்ற தனிமனிதனுக்கு வழங்க முன்வந்த வசதிகளும் பாதுகாப்பும் சுகபோகமும் முக்கியமானதில் வியப்பேதுமில்லை. கருணா விரும்பினால் அவரிடம் இருக்கும் பணத்துடன் வெளிநாடொன்றுக்குப் போக முடியும் எனப் புலிகள் கூறியிருந்த போதும் அந்தத் தெரிவு ஒரு போதும் தனது உயிருக்கு உத்தரவாதத்தை வழங்காது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.
/Portals/0/02_2012/Karuna%20dance.jpg
ஆகத் தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டமென்ற தளத்தில் நிலவிய பிரதேசவாதம் என்னும் பேயை விரட்ட ஒரு வேப்பமிலையைக்கூட எடுக்காத கருணா, புலிகள் கிழக்குமாகாணத்தின் போராளிகள் உற்பத்தித்தொழிற்சாலையின் கணக்கு வழக்குகளையும் நடைமுறைகளையும் கேட்ட போது பிரதேச வாதமென்ற ஒரு சொல்லையே பதிலாக எழுதிக்கொடுத்தது எடுபடவில்லை.
இந்தக் கட்டத்தில் கருணாவின் வெளியேற்றத்தை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மறுமலர்ச்சி, கிழக்கில் ஏற்பட்ட உதயம் என்றெல்லாம் வாயார வாழ்த்தி அதனை நியாயப்படுத்திப் போற்றித் துதித்த கிழக்கின் புத்திஜீவிகள், சமூகப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் யாவரும் மௌனித்துப்போயினர்.
கருணா அணியினர் கிழக்கில் செய்த அடாவடித்தனங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் வாயைமுடிக் கொண்டனர். இதனைவிடப் புலிகளின் தலைமையின் கீழேயே இருந்திருக்கலாம் என்றும் குறைந்தபட்சம் அரச படைகளின் அடாவடித் தனங்களில் இருந்தாவது புலிகள் தம்மைக் காத்திருப்பார்கள் என்ற எண்ண அலை கூட அன்று அவர்களிடம் ஏற்பட்டிருந்தது.
கருணாவினுடைய பிளவு மட்டுமல்ல அதற்கு முன்னர் நிக‌ழந்த தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் உட்பிளவுகள் பலவற்றையும் அவதானிக்கும் போது தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அடிப்படையான தவறு புலப்படுகிற‌து.
விடுதலைப் புலிகளுடன் முரண்பட்ட எவருக்கும் மரணம் அல்லது இலங்கை அரசுடன் சேர்வதென்ற தெரிவே இருந்தது இது விடுதலைப்புலிகள் விட்ட‌ பாரதூரமான தவறாகும்.
மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால் வெற்று இராணுவக் கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டது நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது....
இது பற்றி அடுத்த தொடரில்...
http://www.globaltam...98-Jj4.facebook

ninaivu-illam

#42 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,571 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 29 February 2012 - 08:02 AM

.

அன்றைய காலப்பகுதியில் சூரியனின் செய்தியாளர்கள் செய்தி ஆசிரியர்கள் மற்றும் எம்மோடு இணைந்திருந்த மக்கள் என அனைவரது உழைப்பாலும் உருவாகியிருந்த ஒரு வலையமைப்பாலேயே அது சாத்தியமாகியிருந்தது. .


அடிடா சக்கை என்றானாம்....உங்களுக்கு உளவு பார்த்து செய்தி சொன்னால் அவர்கள் மக்கள் போராளி ...மக்களின்ட தலையில மிளகாய் அரைக்கிறது என்றே 1977 இருந்தே தொடங்கிட்டியள் போல அரையுங்கோ.......


பரபரப்பு ரிஷி புலிகளின் திறமையை மிகைப்படுத்தி எழுதி எம்மை முட்டாள் ஆக்கினார்
இவர் புலிகளின் குறைகளை மிகைப்படுத்தி எழுதி எம்மை முட்டாள் ஆக்குகிறார்
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#43 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,125 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 29 February 2012 - 10:50 AM

தொடருங்கள் குருபரன்.
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவுகள் இவை .(வாலுகளை விட்டுவிடுவோம்.அவர்கள் ஒரு போதும் மக்களை பற்றி சிந்தித்ததே இல்லை )
 • I.V.Sasi likes this

#44 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 29 February 2012 - 11:27 PM

குருபர‌ன் உண்மையை எழுதுகிறாரோ,இல்லையோ அவருக்கு சிவராம் மீது கோபம் இருக்குது என்று மட்டும் தெரியுது

Edited by ரதி, 29 February 2012 - 11:27 PM.

பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#45 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,125 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 29 February 2012 - 11:59 PM

குருபர‌ன் உண்மையை எழுதுகிறாரோ,இல்லையோ அவருக்கு சிவராம் மீது கோபம் இருக்குது என்று மட்டும் தெரியுது

ஏன் தோற்றோம் என்ற ஆதங்கம் தான் எல்லார் மனதிலும்.பிழை சரி விளங்கினாலும் சுத்துமாத்து விளங்காமல் போய் விட்டது .

#46 I.V.Sasi

I.V.Sasi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,886 posts
 • Gender:Male
 • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 01 March 2012 - 12:10 AM

குருபர‌ன் உண்மையை எழுதுகிறாரோ,இல்லையோ அவருக்கு சிவராம் மீது கோபம் இருக்குது என்று மட்டும் தெரியுதுகுருபரனின் கட்டுரைக்கு முன்னமே( ஏன் கருணா பிரிந்து கொஞ்ச காலத்தில்) சிவராமும் கருணா விடயத்தில் டபில் கேம் விளையாடி இருக்கார் என்று கேள்விப்பாடு இருக்கேன்.
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#47 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 01 March 2012 - 08:13 AM

சிவராம் பிழை விடவில்லை என நான் சொல்லவில்லை அது பற்றி நான் கூட யாழில் எழுதியிருக்கேன் ஆனால் தனிய சிவராமில் மட்டும் பிழையை போட்டு விட்டு[அவர் உயிரோடு இல்லை தன் பக்க நியாயத்தை சொல்வதற்கு] தான் நல்லவன் மாதிரி வந்து எப்படி குருபரனால் எழுத முடிகிறது?...தான் செய்ததையும் எழுதியிருந்தால் தொடர் நடுநிலையாக இருந்திருக்கும்...செய்த பிழைக்கு பிராய சித்தம் செய்வது போலவும் இருக்கும்.
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#48 I.V.Sasi

I.V.Sasi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,886 posts
 • Gender:Male
 • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 01 March 2012 - 09:32 AM

சிவராம் பிழை விடவில்லை என நான் சொல்லவில்லை அது பற்றி நான் கூட யாழில் எழுதியிருக்கேன் ஆனால் தனிய சிவராமில் மட்டும் பிழையை போட்டு விட்டு[அவர் உயிரோடு இல்லை தன் பக்க நியாயத்தை சொல்வதற்கு] தான் நல்லவன் மாதிரி வந்து எப்படி குருபரனால் எழுத முடிகிறது?...தான் செய்ததையும் எழுதியிருந்தால் தொடர் நடுநிலையாக இருந்திருக்கும்...செய்த பிழைக்கு பிராய சித்தம் செய்வது போலவும் இருக்கும்.


இருக்கலாம்,
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#49 sathiri

sathiri

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,354 posts
 • Gender:Male
 • Location:பிரான்ஸ்
 • Interests:எதுவும் இல்லை

Posted 08 April 2012 - 09:31 PMபுலிகள் தம்மை அழித்துக் கொண்டிருக்க சிங்கங்கள் ஒன்றாகி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நிகழ்த்த தயாராகின08 ஏப்ரல் 2012


மௌனம் கலைகிறது

மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால் - வெற்றுஇராணுவக் கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டமை நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது என எனது எட்டாவது தொடரிற் குறிப்பிட்டிருந்தேன்.
விடுதலைப்புலிகள் மாற்று இயக்கங்களைத் தடை செய்து அவர்களுட் பலரைக் கொன்றொழித்த போது அதனைத் துரோகிகளை அழிக்கும் ஒருநடவடிக்கையாகவே தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தினர். புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்கள் உண்மையான விடுதலைக்கு போராடவில்லை எனவும் விடுதலைப் புலிகள் மட்டுமே தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்பு என்ற விம்பமும் ஏற்படுத்தப்பட்டது. எனவே இயக்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்ட போது பெரும்பான்மையான தமிழர்கள் அமைதியாகவே அதற்குத் துணைபோனார்க
விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி காரணமாகவும் புலிகளின் பரவலான தாக்குதல்கள் காரணமாகவும் இலங்கை இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படத் தொடங்கியிருந்த காலத்தில் விடுதலைப்புலிகள் மற்ற இயக்கங்களை அழித்து எடுத்துக்கொண்ட முன்னிலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் அரசியல் அடிப்படையில்லாத ஆயுத கலாசாரத்தை வீரபுருச வழிபாட்டை ஒரு இயக்கம் ஒரு தலைவன் என்கிற கோட்பாட்டை தமிழ் சமூகத்துள் வித்திடுவதற்கான அடித்தளத்தை வழங்கியது. இலங்கை இராணுவத்திடமிருந்து தமிழர்களைக் காப்பவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிற சூழ்நிலை ஏற்பட்டபோது புலிகளுடன் முரண்படுபவர்களை துரோகிகளாக தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்களாக காட்டக்கூடிய சூழ்நிலை மிக விரைவாகவே ஏற்பட்டு விட்டது.

மற்றைய இயக்கங்களில் இருந்தவர்களை விடுதலைப் புலிகளை விமர்சித்தவர்களை ஏன் மாத்தையாவைக்கூட இந்தத் துரோகிப்பட்டியலுக்குள் அடக்கி விடுதலைப் புலிகளால் இலகுவாக அழிக்க முடிந்த போதும் கருணாவுடனான முரண்பாட்டை மட்டும் புலிகளால் சந்தடியில்லாமல் இலகுவாகக் கையாள முடியவில்லை. இதற்குப் பலகாரணங்கள் உள்ளன. கருணா தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடி இராணுவ வளையத்துக்குள் குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனக்கென ஒரு தளத்தைக் கிழக்கில் கொண்டிருந்தார். கருணாவினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அவர்களுக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்த போதும் கருணாவின் நேரடி ஆளுகையின் கீழேயே இருந்தனர். இதுமட்டுமன்றிக் கருணா விடுதலைப் புலிகளுள் நிலவிய பிரதேசவாத்தின் காரணமாகவே புலிகளில் இருந்து பிரிந்தார் என்கிற அரசியற் தோற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கிழக்கின் புத்திசீவிகளும் உதவியிருந்தனர். மேலும் கருணாவின் பிளவு நிகழ்ந்த நேரம் உலகத்தின் கவனமும் அன்று நிகழ்ந்து வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த முரண்பாட்டை நோக்கியும் திரும்பியிருந்தது.

Posted Image[
ஆயினும் புலிகள் வழமைபோலவே அரசியல் விளைவுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றிக் கருணா தரப்பையும் அவர்களது ஆதரவாளர்களையும் தேடி அழிப்பதில் முனைப்புக்காட்டியதுடன் அதற்காகாத் தமது பெருமளவு சக்தியையும் செலவிட்டனர். பதிலுக்கு கருணா தரப்பும் புலிகளையும் அவர்களது ஆதரவுத்தரப்பையும் குறிவைத்துப் பழிதீர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கியது.


தாங்கள் என்ன விதமான அரசியற் சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதையிட்டு அன்றைக்கு விடுதலைப்புலிகளின் தலைமை நிதானமுடன் சிந்தித்திருக்குமேயானால் பிற்பாடு முள்ளி வாய்க்காலில் மக்களையும் தமது ”மண்ணின் விடுதலையை” மட்டுமே சிந்தித்த பல ஆயிரம் போராளிகளையும் காவு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. கருணாவினது பிளவை அரசியல்ரீதியாகவும் இராசதந்திரரீதியாகவும் எதிர்கொள்வதை புலிகளின் இராணுவவழிப்பட்ட சிந்தனை தடுத்திருந்தது. முரண்பாடுகளுக்கு எப்பொழுது ஆயுதங்களினாலேயே தீர்வைக்கண்டு வந்த கலாசாரத்தின் வன்மப்பிடியுள் புலிகள் மீளமுடியாதபடி சிக்கியிருந்தனர்.
இலங்கை இராணுவமும் சர்வதேசமும் சேர்ந்து தம்மைச் சூழ ஒரு பயங்கரமான இராணுவப் பொறியை உருவாக்கி வருவதை அறியாமல் புலிகள் கருணாகுழுவை வேட்டையாடுவதில் முனைந்து கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த போது புலிகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட கடும்புலி எதிர்ப்பாளர்களையும் உள்ளடக்கிய ஆழ ஊடுருவும் படையணிகளையும் உளவாளிகளையும் பயிற்சியளித்து இலங்கை இராணுவம் வன்னிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து பின்னர்வரும் தொடர்களில் விலாவாரியாக பார்ப்போம்.
இந்த சந்தர்ப்பத்தில் புலிகள் கருணா பிளவின் பின் நிகழ்ந்த உயிர்ப்பலிகள் அவற்றின் பின்னணிகள் அவற்றின் அரசியற்பரிமாணங்கள் குறித்தும் ஆராயவேண்டும்.
Posted Image[
ராஜன் சத்தியமூர்த்தியின் மரண வீடு[
இதில் 2004 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் இணைக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி கருணாவின் நெருங்கிய ஆதரவாளர் என்பதனால் 2004 மார்ச் 30ஆம் திகதி விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இவரது உறவினர் கந்தன் கனகசபை என்பவரும் கொல்லப்பட்டதோடு கனகசபை பாபு என்பவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார். இங்கே கவனிக்க வேண்டிய விடையம் என்னவெனில் கருணா புலிகளுடன் இருந்தபோது புலிகளின் முழுச் சம்மதத்தோடேயே 2004 ம் ஆண்டு நிகழவிருந்த பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் ராஜன் சத்தியமூர்த்தி வேட்பாளராகச் சேர்க்கப்பட்டார். ஆனால் கருணா புலிகளில் இருந்து நிரந்தரமாகப் பிரிந்ததும் திரு ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை அவர் கருணாவின் ஆதரவாளர் என்பதற்காகப் புலிகள் சுட்டுக் கொன்றனர். தேர்தல் முறை சனநாயகத்தில் பங்கு கொள்வதற்கெனத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை- தாங்களே தெரிவுசெய்த ஒருவரைப் புலிகள் சுட்டுக்கொன்றமை தேர்தல் வன்முறையாகவும் யுத்தநிறுத்த மீறலாகவும் பதிவுசெய்யப்பட்டது.
Posted Image
சிவகீதா பிரபாகரன்
இதுமட்டுமல்ல இச்சம்பவம் வேண்டப்படாத இன்னொரு விளைவையும் ஏற்படுத்தியது. புலிகளின் இச்சிந்தனையற்ற வன்முறையின் காரணமாகச் சத்தியமூர்த்தி குடும்பம் புலிகளின் நிரந்தர எதிரியானது மட்டுமல்ல ராஜன் சத்தியமூர்த்தியின் மகளான சிவகீதா பிரபாகரன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அங்கத்துவத்தைப்பெற்று மட்டக்களப்பு மாவட்ட முதல்வராகி அரச ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டமையும் காண நேர்ந்தது.
இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க European Union Election Observation Mission (EU EOM) Chief Observer Mr.John Cushnahan உடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான விசேட குழுவின் தலைவர் (European Union (EU) Sri Lankan delegation head) Mr.Wouter Wilton னும் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தனர்.

புலிகளின் இந்த அல்லது இத்தகைய நடவடிக்கைகள் பின்னர் சமாதானப் பேச்சுக்களின்போது தமிழர்களுக்கு எதிராக எவ்வாறு பாவிக்கப்பட்டன விடுதலைப்புலிகளின் அரசியல் முகத்திற்கு அதன்வழி தமிழர்களின் அரசியல் நியாயங்களுக்கு எத்தகைய எத்தகைய பாதிப்புக்களை அல்லது தாக்கங்களைக் கொண்டு வந்தனவென்பதைப் பின்னர் பார்க்கலாம்.2004ம் ஆண்டுத் தேர்தலில் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்ட ஓய்வுபெற்ற மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளரான கிங்ஸ்லி ராஜநாயகம் 2004 ஒக்டோபர் 19ஆம் திகதி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்கழப்பு மாவட்ட இணைப்பாளராக இருந்த இவர் புலிகளின் வற்புறுத்தலிலேயே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இவர் புலிகளுக்காகத் தனது தனிப்பட்ட நலன்கள் பலவற்றை இழந்தவர். ஆயினும் தேர்தலில் வெற்றி பெற்ற பின் கருணாவின் ஆதரவாளர் என முத்திரை குற்றப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் எடுக்காமல் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு பதவியை ராஜினாமாச் செய்வதாகக் கடிதம் கொடுக்கும்படி புலிகளால் நிர்பந்திக்கப்படார். இந்தக் கடிதத்தை கௌசல்யனே நிர்ப்பந்தித்துப் பெற்றுக் கொண்டதாக பின்னர் அறிந்தேன்.

வன்னியில் நிகழ்ந்த ஒரு ஊடகச் சந்திப்புக்காக சென்றிருந்த வேளையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் அலுவலகத்தில் திரு கிங்ஸ்லி ராஜநாயகம் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது உறவினர்கள் சிலருடன் ஒரு ஓரத்தில் வேண்டத் தகாதவர்களாகக் காத்திருந்தனர்.
அவர் யார் எனத் தெரியாத போதும் தயா மாஸ்ரர் இவர்தான் கிங்ஸ்லி ராஜநாயகம் எனக் காட்டியது இப்போது ஞாபகம் வருகிறது.

புலிகளின் தலைமையுடன், தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு அந்தச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்க தேர்தலில் வெற்றி பெற்ற கிங்ஸ்லி ராஜநாயகம் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் காத்திருந்தார்.ஆனால் பா. அரியநேந்திரன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இதற்கு இன்னுமொரு காரணமும் அப்பொழுது புலிகளால் முன்வைக்கப்பட்டது. வன்னித் தரப்பிற்கு ஆதரவாக இருந்த அரியநேந்திரனை தோலிவியுறுச் செய்து கிங்ஸ்லி ராஜநாயகத்தை கருணா தரப்பினர் செயற்கையாக வெல்ல வைத்தனர் என்பதே அது. இந்த நிலையில் வற்புறுத்திக் கடிதத்தை வாங்கிய பின்பும் கூட புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். இது குறித்து இவரது மரண வீட்டில் இவரது மகள் "நீங்களே பட்டியலில் இணைத்து பின்னர் நீங்களே ராஜினாமாச் செய்யச் சொல்லி பின்னர் நீங்களே கொன்றும் விட்டீர்களே” என வேதனையையுடன் கதறியதாக என் மட்டுநகர் நண்பர் சொன்னதும் இப்பொழுது ஞாபகம் வருகிறது. இதுவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதனால் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளப்பட்டது. (அடிக்குறிப்பு 1)
Posted Image[
தம்பையாவின் மரண வீடு
புலிகள் கருணாவின் ஆதரவாளர்களையும் அவரின் போரணிகளையும் இலக்கு வைக்க தானும் புலிகளின் குணாம்சத்தில் இருந்து எள்ளளவும் மாறுபடாதவர் என்பதை நிரூபிக்க கருணாவும் தயாரானார். இதன் பெறுபேறாக வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட பொருளியல் விரிவுரையாளர் தம்பையா 2004 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் அவரது வீட்டில் வைத்துக் கருணாதரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தம்பையாவை வன்னிப்புலிகளுக்கு ஆதரவானவர் என்ற குற்றச்சாட்டில் கருணாதரப்பினர் சுட்டுக் கொன்ற போது கருணாவை ஆதரித்த கிழக்குப் பல்கலைக்கழக புத்திசீவிகள் எந்தவித எதிர்ப்பையும் காட்டாது மௌனம் காத்தனர் இந்தச்செயலுக்கு இப்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர் ஒருவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளிநாடு சென்ற ஒருவர் மற்றும் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய இன்னுமொருவர் என சிலர் துணைபுரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


2004 மே 31 அன்று மட்டக்களப்பு நகரில் தனது வேலைக்கு செல்லும் வழியில் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான ஐயாத்துரை நடேசன் என்பவரையும் கருணா தரப்பினர் பலியெடுத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்று அரை மணிநேரத்தில் சூரியனில் அதுபற்றி அறிவித்தோம். அப்போது எமது மட்டக்களப்பு நிருபராக இருந்த திரு துரைரத்தினம் அவர்களுக்குக் கூடத் தனது நண்பர் சுடப்பட்டது தெரியாது. நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு துயரமான சம்பவம் இடம்பெற்று விட்டது உடனேயே குறித்த இடத்திற்கு செல்லுங்கள் என வேண்டினேன். அதன்பின்னரே அவர் முதலில் அவ்விடத்தை அடைந்து நேரடி ஒலிபரப்பை வானொலிக்குத் தந்தார். இவ்வாறான எமது உடனடிச் செய்திவழங்கலை இட்டு இலங்கை இராணுவப்பிரிவும் கடும் கடுப்பைக்கொண்டிருந்தது. புளொட் மோகன் சுட்டுக்கொல்லப்பட்டதையறிந்து நான் பம்பலப்பிட்டியியில் அந்த இடத்திற்குச்சென்றபோது இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் “ சுடுகிறவர்கள் சுடுவதற்கு முன் சூரியனுக்கு சொல்லி விட்டா சுடுகிறார்கள் எனக் கடுமையான தொனியில் கேட்டார். உண்மையிலும் இந்த வகையான செய்திவழங்கல் என்பது எமது வானொலி செய்திப் பிரிவு மக்களிடமும் பல்வேறு தரப்பினரிடமும் கொண்டிருந்த தொடர்பாடற் பலம் காரணமாகவே சாத்தியமானது.
Posted Image
ஐயாத்துரை நடேசனின் மரண வீடு
ஐயாத்துரை நடேசனின் கொலையில் அந்நாளில் கருணாவின் அம்பாறை மாவட்டத்தளபதியாக இருந்தவரும் இன்னாளில் “அதி உத்தம ஜனாதிபதி” மகிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும் இருக்கும் இனியபாரதியே நேரடியாகப் பங்கு கொண்டிருந்தார். இந்தப் பலி எடுப்பிற்கு கருணாதரப்புக் கூறிய காரணமும் நடேசன் வன்னிப்புலிகளுக்கு ஆதரவானவர் என்பதாகும்.

இவ்வாறு கருணாவின் பிளவோடு வாகரையில் தொடங்கி கிழக்கில் பரவிய மோதல் கொழும்பிற்கும் வந்து தொலைத்தது. [

குகனேசன், கேசவன், காஸ்ரோ. TMVP[/background
Posted ImagePosted ImagePosted Image
2004 யூலை 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை என நினைக்கிறேன் அதிகாலை 4.15ற்கும் 4.30ற்கும் இடையில் நான் தூக்கத்தில் இருந்த போது எனது கையடக்கத் தொலைபேசி அலறியது. அதனை எடுத்த போது “அண்ணன் கொழும்பில் ஏதாவது பிரச்சனை நடந்ததா” என மறு முனையில் பேசியவர் கேட்டார். “இல்லை தம்பி இப்போ அதிகாலைதானே ஏதாவது நடந்திருந்தால் இனிமேல்தான் தகவல்கள் வரும் எனக் கூறினேன்.

“இல்லை அண்ணன் ஒரு சூட்டிங்கேஸ் ஒண்டு நடந்திருக்கு ஒருக்கா செக் பண்ணிப் பாருங்கோ” எனச் சொல்லி விட்டு அவர் தொடர்பைத் துண்டித்தார

சரி எனக்கூறிவிட்டுத் தூங்கி விட்டேன். சிறிது நேரத்தின் பின் திரும்பவும் அவரே தொலைபேசியில் தொடர்புகொண்டார். “அண்ணன் ஏதாவது தகவல் அறிந்தீர்களா” “இல்லைத் தம்பி எமது செய்திப்பிரிவில் பணிபுரிபவர்கள் காலை ஐந்து மணிக்குத்தான் வருவார்கள் அவர்கள் வந்தவுடன் இது பற்றி விசாரிக்கும்படி சொல்கிறேன். அவ்வாறு நடந்திருக்கும் பட்சத்தில் எமது காலை 6.45 செய்தியில் அது ஒலிபரப்பப்படும்” எனக் கூறினேன்.

சரி அண்ணன் ஆனால் கொழும்புக்குக் கிட்டவாக ஒரு சம்பவம் நடந்திருக்கு உங்கள் செய்தியாளர்கள் மூலம் கேட்டு உறுதிப்படுத்திக் கெதியா பிறேக்கிங் நியூசில் சொல்லுங்கோ எனக் கூறி தொலைபேசியை உரையாடலைத் துண்டித்தார். அந்த அனாமதேய அழைப்பாளரின் விடாப்பிடியான தொல்லைகாரணமாகச் சரி என்னதான் நடந்தது என விசாரிக்கலாம் எனத் தீர்மானித்து காலை 5.10 அளவில் எமது செய்திப்பிரிவிற்கு தொலைபேசி எடுத்து காலைநேரச் செய்தி ஆசிரியரிடம் கொழும்பிற்கு வெளியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அனாமதேயத் தகவல் ஒன்று வந்துள்ளது. பொலிசாருக்கு போன் செய்து விசாரியுங்கள் எனக் கூறியதுடன் சிங்கள மொழிச் செய்தி ஆசிரியருக்கும் தகவலைத் தெரிவித்தேன். அவர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனத்தெரிவித்தனர்


மீண்டும் காலை 6 மணிக்கு அதிகாலை தொடர்புகொண்ட அதே நபர் தொடர்புகொண்டார்: “அண்ணன் ஏதாவது செய்தி வந்ததா” “இல்லைத் தம்பி எமது காலைநேரச் செய்திப்பிரிவு பொலீஸ், குற்றத்தடுப்புபிரிவினர் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் என யாவரையும் அதிகாலையில் தொடர்புகொண்டு விசாரிப்பது வழமை. இன்றும் அவ்வாறு விசாரித்தபோது நீங்கள் குறிப்பிடும்படியான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்த்தாகத் தெரியவில்லை”
“இல்லை அண்ணன் கொட்டாவவில் கருணா குறுப்பை சுட்டுப் போட்டாங்களாம் பாருங்கள் விசாரியுங்கள்” எனக் கூறித் தொலைபேசியை துண்டித்தா
Posted Image
கருணா அணியினர் தங்கியிருந்த கொட்டாவ வீடு
மீண்டும் எமது செய்தி அலுவலகத்தினூடாகப் பொலிசாரை அணுகி விசாரித்த போதும் திரும்பவும் பொலிசார் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என மறுத்திருந்தனர். ஆனால் அந்த அனாமதேயத் தொலைபேசி நபரோ என்னை விடுவதாய் இல்லை. மீண்டும் எடுத்தார்
“என்ன அண்ணன் ஒன்றும் வரவில்லையா” என்றார் “இல்லை” என்றேன்.


“சரி அண்ணன் என்ன எங்கை நடந்தது என விளக்கமாகச் சொல்லுறன் எழுதுங்கள்” என்றார்.
மகரகம கொட்டாவ சந்தியில் இருந்து உட்புறமாக செல்லும்போது வரும் சனசந்தடியில்லாத ஒரு கிராமத்தில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றினுள் கருணா தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் வரை சுடப்பட்டுள்ளார்கள். இனி விசாரித்து பாருங்கள். சிவராம் அண்ணனுக்கும் இது பற்றிச் சொல்லி இருக்கிறோம், அவரிடம் வேண்டுமானால் கேட்டு உறுதிப் படுத்துங்கள் என்றார்
சற்று நேரத்தில் சிவராமே என் கையடக்கத் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டார். “இப்படிச் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது கேள்விப்பட்டாயா?” என்றார் .
ஆம் ஆனால் பொலிசாரோ குற்றத்தடுப்புபிரிவினரோ வைத்தியசாலையோ இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தாத படியினால் இதனைச் செய்தியாகப் போட முடியாது எனவும் சொன்னேன்.

என்னடாப்பா சம்பவம் உண்மை என்றால் அதனை நாமாக உறுதிப்படுத்தினால் செய்திப் பிரிவின் பொறுப்பாளர் என்ற வகையில் நீ அதனைச் செய்தியாக வெளியிடலாமல்லவா என்றார்.

“இல்லை எங்காவது குற்றச்சம்பவங்கள் விபத்துக்கள், மோதல்கள், உயிரிழப்புகள் போன்ற விடையங்கள் இடம்பெற்றால் எமது செய்தியாளர்கள் அதனை உறுதிப்படுத்திச் செய்தி அனுப்ப வேண்டும். அல்லது அரசாங்க நிறுவனங்கள், காவற்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு, அல்லது வைத்தியசாலை என ஏதாவதொன்று அவற்றை உறுதிப்படுத்த வேண்டும் இல்லாவிடில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தனிப்பட்ட வகையில் நானே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினேன்.
அத்துடன் உரையாடலை நிறுத்தி மீண்டும் வருகிறேன் எனக் கூறிச் சிவராம் தொடர்பைத் துண்டித்தார். இதற்கிடையில் அன்று காலை சற்று முன்னதாகவே நானும் அலுவலகம் சென்று விட்டேன். மீண்டும் அந்த அனாமதேய நபர் தொடர்புகொண்டு “என்ன அண்ணன் இன்னுமா சம்பவத்தை அறிய முடியவில்லை உங்கள் காலைச் செய்தியில் அதனை கேட்கலாம் என காத்திருந்தோம். சரி மேலும் விபரங்களைச் சொல்கிறேன் இதன்மூலமாவது உண்மையை அறிந்து விரைவில் வானொலியில் கூறுங்கள். சிவராம் அண்ணன் உறுதிப்படுத்தியும் நீங்கள் செய்தியைப் போடமறுப்பதேன்” எனக்கேட்டு என்னில் வெறுப்படைந்து தொடர்பைத் துண்டித்தார்.

மீண்டும் சிவராம் அழைப்பில் வந்தார் “என்னடாப்பா இவங்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை. சம்பவம் நடந்தது உண்மை. கெதியாக உறுதிப்படுத்திப் போடமுடியாதா” எனக் கேட்டார் நான் சொன்னேன் “சிவராம் சம்பவம் உண்மையானால் நீங்கள் தமிழ்நெற்றில் போடுங்கள் அதனை கோடிட்டு நான் வானொலியில் சொல்கிறேன் பிரச்சனை இலகுவாக முடியும் என்றேன். சரி பார்ப்போம் என கூறிய சிவராம் சற்று நேரத்தில் தமிழ்நெற்றில் புலிகளை ஆதாரம் காட்டி அதனைச் செய்தியாக பிரசுரித்தார். அதன் பின் செய்தி பரபரப்பாகி பொலிசாரும் சம்பவம் நடந்த இடத்தைச் தேடிச் சென்று அதனை உறுதிப்படுத்தினர்.

எனினும் பாதுகாப்புத்தரப்பிற்கோ பொலிசுக்கோ தகவல் தெரிவதற்கு முன்பாகவே தமிழ்நெற்றிற்கு எவ்வாறு செய்தி கிடைத்தது என்பது குறித்து பின்னர் இலங்கைப் புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முடுக்கி விட்டதாக ஞாபகம். ஆனால் இது பற்றி சிவராமிடமும் புலனாய்வுப்பிரிவு விசாரித்ததா? என்பது பற்றித் தெரியவில்லை. ]
இந்த நிலையில் பொலிசார் அவ்விடம் செல்வதற்கு முன்பே தமிழ் நெற்றில் வந்த செய்தி பரவியதால் பல ஊடகங்களும் கொட்டாவ்வில் அமைந்திருந்த அந்த வீட்டைத் தேடி சென்றன. கூடவே நானும் சிங்களப் பிரிவின் செய்தி ஆசிரியர் ஒருவரும் அந்த இடத்தை தேடிச் சென்றடைந்தோம்.


அப்பிரதேசத்தின் காவற்துறை அலுவலகத்தினரின் கண்காணிப்புக்குக் கூட அகப்படாதபடிக்கு அந்த வீடு அமைந்திருந்தது அதிர்ச்சியாகவிருந்தது. யாருடைய பார்வையும் படாதபடிக்கு சுற்றிவரச் செடி கொடிகள் படர்ந்திருக்க நடுவே ஒரு அழகான மாடிவீடு. தளப்பகுதியில் ஒரு ஆடம்பரக்கார் நின்றிருந்தது. வீட்டின் சுற்றயலில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் குழுமி இருந்தார்கள். ஊடகவியலாளர்களும் மக்களும் அவ்விடத்தை அடைந்த பின்புதான் பொலிசாரும் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் அவ்விடத்தை வந்தடைந்திருந்தனர். இவர்கள் வருவதற்கு முன்பேயே நாங்கள் அங்குசென்று விட்டதனால் வீட்டினுள்ளே சென்று மாடியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த அனைவரையும் காணக் கூடியதாக இருந்தது.
Posted Image

மேல் மாடியின் நடுவறையில் வாட்டசாட்டமான நான்கு மனித உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. அருகாமையில் உள்ள கொரிடோரில் ஒருவுடலும் மற்றொரு அறையில் இரு உடல்களும் மாடிப்படிக்கு அண்மையில் இன்னுமொரு உடலுமாக எட்டு உடல்கள் இரத்தவெள்ளத்தில் கிடந்தன. கொல்லப்பட்டவர்களுள் மூவர் 17ற்கும் 19ற்கும் இடைப்பட்ட வயதினராக இருக்க வேண்டும் காரணம் அவர்கள் முகத்தோற்றத்திலும் சிறியவர்களாக இருந்தனர். மேல் மாடியில் நடு அறையில் கிடந்த நால்வரில் ஒருவர் கருணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் எனக் கருதப்பட்டவரும் அவரது நிதிப் பொறுப்பாளராக இருந்தவருமான குகனேசன் ஆவார். மற்றய இருவரில் ஒருவர் கருணாவின் அரசியல் பிரிவைச்சேர்ந்த கேசவன், மற்றவர் தாக்குதல் பிரிவைச்சேர்ந்த காஸ்ரோ. நான்காமவர் இலங்கை இராணுவப்புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்த்தர்.


ஏனைய அறையில் இருந்த இருவரும் ரூபன், அற்பரன் எனவும் மற்றும் கொரிடோரிலும் படிக்கு அருகாமையிலும் இருந்தவர்கள் விக்கி, விமலகாந் எனவும் பிற்பாடு அடையாளம் காணப்பட்டார்கள்.
Posted Image

கொல்லப்பட்டவர்களிற் சிலரின் தலையணைகளுக்கு அருகில் சிறிய வாக்மன் றேடியோக்கள் இயங்கிக்கொண்டிருந்தன. சூரியன் வானொலியே அதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான செய்தி சூரியனில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது இவர்களின் உடல்களுக்கு அருகிலிருந்த வானொலிகளிலும் அது ஒலித்துக்கொண்டிருந்தது.


இதனை விட இவர்களின் படுக்கை அறைகளில் ஆயிரக்கணக்கான கையடக்கத் தொலைபேசிகளுக்குரிய சிம் அட்டைகளும் அவற்றிற்கு பணம் ஏற்றும் பணஅட்டைகளும் காணப்பட்டன.
இவ்வாறு நாம் அங்குள்ள நிலமைகளைப் பார்வையிட்டுச் செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்த வேளையில் அங்கு வந்து குவிந்த பாதுகாப்புப்படையினர் எம்மை வீட்டிற்கு வெளியில் அனுப்பி விட்டனர். காரணம் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டிருருந்த எட்டாவது நபர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரியாவார். அவரது கட்டுப்பாட்டிலேயே கருணா குழுவின் இந்த முக்கியஸ்த்தர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த விடயத்தை ஊடகவியலாளர்கள் இனம் கண்டு துருவத் தொடங்கியதும் பாதுகாப்புத்தரப்பு தம்மை விழிப்படைந்து செய்தியாலளர்கள் யாவரையும் வெளியே அனுப்பிவிட்டது. இவற்றையும் மீறி ஊடகங்களில் இந்த விடயம் கசிந்த போது இலங்கைப் புலனாய்வுப்பிரிவு அதனை முழமையாக மறுத்திருந்தது. ஆனால் அங்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் புலனாய்வுப்பிரிவின் முக்கியஸ்த்தர் என்பதனை நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம

கொட்டாவ்வில் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் யூன் 2004ல் பொலநறுவையை அண்மித்த கிங்குரான்கொட பௌத்த ஆலயத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட கருணா தரப்பு உறுப்பினர்களாவார். இவர்கள் குகநேசன் உள்ளிட்ட பதின்நான்கு பேராவார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொட்டாவவில் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால் அப்பதின்நான்கு பேரில் புலிகளின் புலனாய்வுக்கட்டமைப்பைச் சேர்ந்த ஆறுபேர்களும் இருந்திருக்கிறார்கள் இவர்கள் சம்பவம் நடந்த இரவு மயக்கமாத்திரைகளை மற்றவர்களுக்கு உணவுடன் பரிமாறியிருக்கிறார்கள். இவ்வாறு மயக்கமருந்துண்ட கருணா விசுவாசிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஒலியடக்கித்துப்பாக்கிகளால் அவர்களை இவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டு அதிகாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு அம்பாறை போய்ச் சேர்ந்துவிட்ட்தாக பின்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் குறிப்பாகக் கொலையைப் புரிந்தவர்களே எம்முடன் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தந்தார்கள் எனவும் பின்னர் அறிந்து கொண்டேன்.
Posted Image
யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர்
இந்த சம்பவமும் சமாதான காலத்தில்(2004ல்) நடந்தமையினால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சம்பவம்ந் நடந்த இடத்திற்குச் சென்று அதனைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறலாகப் பதிவு செய்து கொண்டனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் (திகதிகள் ஞாபகம் இல்லை) கொழும்பை அண்மித்த நுகேகொடவில் இலங்கை புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த கருணாகுழுவின் பெண்கள் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச்சேர்ந்த முக்கியஸ்த்தர்களைப் புலிகள் தமது சாமர்த்தியத்தால் ஒரு வாகனத்தில் ஏற்றி அம்பாறைக்கு கடத்திச் சென்று பின்னர் சுட்டுக் கொன்றனர்.
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி திங்கட் கிழமை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அரசியற் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் (சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு அவர் வந்திருந்த போதும் மட்டக்களப்பிற்கு சென்றிந்த பல தடவைகளிலும் கௌசல்யனோடும் உரையாடி இருக்கிறேன். சமாதான காலத்தில் சூரியன் எவ்.எம்மிற்காகப் பல பேட்டிகளையும் அவரிடம் எடுத்திருக்கிறேன்.) மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேரு உள்ளிட்ட நால்வர் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாமல் கம பிள்ளையாரடி என்ற இடத்தில் வைக்கப்பட்ட கிளைமோரில் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலையும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் கருணா தரப்பினரே மேற்கொண்டிருந்தனர்.

2005 டிசம்பர் 25 ஞாயிறு அதிகாலை 1.15 அளவில் கருணா தரப்பின் இரண்டு ஆயுததாரிகள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் துணையுடன் கிறிஸ்மஸ் இரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தைச் சுட்டுக் கொன்றனர்.


திரு பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முதல்நாள் இரவு சனிக்கிழமை 9 ற்கும் 9.30ற்கும் இடையில் என நினைக்கிறேன் (மரணிப்பதற்கு சுமார் 4 மணிநேரத்திற்கு முன்னர்)அவருடன் மட்டக்களப்பின் பாதுகாப்பற்ற சூழல் குறித்து தொலைபேசியில் உரையாடி இருந்தேன். நான் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போதெல்லாம் அவரே முதலில் எடுத்து நீங்கள் யாரென்று கேட்பார். பின்னர் குருபரன் லைனில் நிற்கிறார் என்று கூறிக் கணவரிடம் கொடுப்பார். அன்றைக்கும் அவ்வாறு அவருடன் உரையாடிய போது இன்னும் நான்கு மணிநேரத்தின் பின்பு இந்த மனிதரின் மரணத்தையும் அறிவிக்க நேருமென்று நான் நினைத்திருக்கவில்லை. திருமதி சுகுணம் பரராஜசிங்கத்திற்கு அவர்களுக்கு இது நினைவிலிருக்குமோ தெரியவில்லை. மரணங்களை இலக்கச்சட்டத்தில் உள்ள உருளைகளைப்போல் தட்டித்தட்டி எண்ணவும் பின்னர் எதுவுமே நடக்காதது போல் நமது அலுவல்களைப்பார்கவும் பழகிப்போன சமூகமாக தமிழ்சமூகம் மாறிப்போனதைக் கண்டபோது எமது விடுதலைபோராட்டம் என்னவிதமான மனித விழுமியத்தைத் தந்ததென்று திகைக்கிறேன்.
31 January 2006 காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் பணியாற்றிய எட்டுப்பேர் புலிகள் கருணா முரண்பாடு காரணமாகக் கிழக்கை விட்டு நீங்கி வன்னிக்குச் செல்வதற்காக பேருந்தில் புறப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் (இரண்டு பெண்கள் உட்பட்ட எட்டுப் பேரைப்) பொலநறுவைக்கு அண்மையில் வைத்துக் கருணாகுழு கடத்திச்சென்றது. கடத்தப்பட்டவர்களுள் பிறைநிதி என்ற பெண் பாலியல்வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். மற்றைய பெண்ணைக் கருணாகுழுவின் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்வதற்காகக் காப்பாற்றிக்கொள்ள மிகுதி ஆறு ஆண்களையும் அவர்கள் கொலை செய்திருந்தனர். இந்தச் செயலுக்கான நேரடி உத்தரவைக் கருணா பிறப்பிக்க அப்போது அவரின் கட்டளைத் தளபதியாக இருந்த பிள்ளையான் என்கிற சிவனேசதுரை சந்திர காந்தனின் தலைமையிலான படை நிறைவேற்றிமுடித்தது. இவை யாவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துணை இராணுவக் குழவின் யுத்த நிறுத்த மீறல்கள். புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களின் கடத்தல் தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட குறிப்புக்கள் அடிக்குறிப்பு 2ல் இணைக்கப்பட்டுள்ளது.

Posted Image
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலையையும் இலங்கைப் புலனாய்வுப்பிரிவின் துணையுடன் கருணா தரப்பே மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக இவரது கொலையுடன் இனியபாரதி சம்பந்தப்பட்டிருந்ததாக அப்போது பரவலாகத் தகவல்கள் கசிந்திருந்தன.
நான் 2006 ஆகஸ்ட் 29 திகதி அதிகாலை கடத்தப்பட்டு பாரிய அழுத்தங்களின் பின்பு விடுவிக்கப்பட்டிருந்த நாட்களில் ஒருநாள் தொலைபேசியில் என்னைத்தொடர்பு கொண்ட
[background=transparent]
ரவிராஜ் “அண்ணை உனக்கென்ன விசரோ இப்பவும் சூரியனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருக்கிறாய். ஒருமுறை உயிர் தப்பி விட்டாய் இது நெடுகலும் வாய்க்காது. எங்கையாவது வெளியில போய் வாழுற வழியைப்பாருங்கோ. அண்ணை நாங்கள் இந்த பாழாய் போன அரசியலில் இறங்கி விட்டோம். ஏதோ முடிந்தவரை இழுபட வேண்டும் நீங்கள் செய்யக் கூடிய அளவிற்கும் செய்து மயிரிழையில் தப்பி வந்திருக்கிறீர்கள். இது போதும் வெளிநாட்டிற்குச் சென்று செற்றிலாகப் பாருங்கள். விசப்பரீட்சை வேண்டாம் எனக் கூறினார். அன்றைக்கு நீண்ட நேரம் நாங்கள் உரையாடி இருந்தோம்.


திரு ரவிராஜ் கொல்லப்பட்ட போது நான் ஜரோப்பாவில் நின்றிருந்தேன். எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தபோது மிகவும் வேதனை அடைந்து போனேன்.
2006 நவம்பர் 19ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி எடுத்து மிரட்டிய கருணாவின் உதவியாளர் குணாளன் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்திற்கு முன்னதாக எம்.பி பதவியை விட்டு விலகாவிட்டால் அவர்கள் அனைவரும் மாவீரர்களாகவேண்டிவருமென அம்மான் (கருணா) கூறியதாக மிரட்டியிருந்தார்.
Posted Image
[]Posted ImageProf. Raveendranath addressnig a conference [
[background=transparent](inset) Prof. Raveendranath's wife[
2006 டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை மாலை 1:15 அளவில் கிழக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ரவீந்திரநாத் காணாமல் போனார். பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தினுள் நடந்த முக்கிய கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச்சென்ற அவர் அதன் பின்னர் மண்டபத்திற்கு வெளியே வரவில்லை. அவருக்காகக் காத்திருந்த அவரது வாகனச்சாரதி வெற்று வாகனத்துடன் திரும்பநேர்ந்தது. பல புலமைவாதிகள் நிறைந்திருந்த மண்டபத்தினுள் அவரைகடத்தும் துணிச்சலான உத்தரவைக் கருணா அம்மான் அரச ஆதரவுடன் வழங்கப் பிள்ளையான் அவர்கள் திறமையாகச் செய்து முடித்திருந்தார். திரு ரவீந்திரநாத் அவர்கள் காணாமல் போனதிலிருந்து அவரது குடும்பத்தினர் பட்ட துன்பத்தினை நேரடியாக கண்டுணர்ந்தவன் என்ற வகையில் இந்தப்பதிவும் கடுமையான துயரத்தைத் தருவது..
[background=transparent]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 2007. நவம்பர் 19 ஆம் திகதி நிகழவிருந்த பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட முதல் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது. என முற்கூட்டியே( 2007 நவம்பர் 16 ஆம் திகதி) எச்சரிக்கப்பட்டார்கள். அவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதைத் தடுக்கும் நோக்குடன் நவம்பர் 17 திகதி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி கனகபையின் மருமகன் கழுதாவளையில் வைத்துக் கடத்தப்பட்டார்.


பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் மீதான 2ஆம் கட்ட வாக்களிப்பு 2007 டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெற்ற போதும் இதே வகையான அச்சுறுத்தும் நடவடிக்கை முன் கூட்டியே நிகழ்ந்தது.2007 டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனின் சகோதரர், தங்கேஸ்வரியின் செயலாளர், ஜெயானந்த மூர்த்தியின் மருமகன் ஆகியோர் அச் சந்தர்ப்பத்தில் கடத்தப்பட்டு நிர்ப்பந்தம் வழங்கப்பட்டது.. தற்போதய மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்ரரே இந்தக் கடத்தல் சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பு பட்டிருந்தார். மேற்குறித்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டதன் பின்னர் 15ஆம் திகதி கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது இது தொடர்பாகவும் பின்னர் எழுதுவேன்.
இந்த இடத்தில் இடைச்செருகல் என்னினும் முக்கியமானதொரு விடையத்தையும் கவனிக்க வேண்டும்[
கொழும்பின் தெற்காக உள்ள சுற்று வட்ட பிரதேசங்களில் நிகழ்ந்த சில சம்பவங்களை இங்கே தருகிறேன்.[
•கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானின் உதவியாளர் ரகு காரில் சென்ற போது கருணாவினதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரதும் இணைந்த முயற்சியால் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் மகரகமவை அண்மித்த கொட்டாவ. [மிலேனியம் சிற்றி என பலராலும் பேசப்பட்ட இடத்தில் சமாதான காலத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டபோது அவை புலிகளால் வைக்கப்பட்டதாகக் கருதப்படபோதும் பின்னர் அவை இலங்கைப்புலனாய்வுப் பிரிவினரினால் வைக்கப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டதால் சந்திரிக்காவுக்கும் றணிலுக்கும் இடையில் கடும் அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கிய இடமும் மகரகமவை அண்மித்த கொட்டாவ.
]கருணா குழுவின் முக்கியஸ்த்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் மகரகம கொட்டாவ.
]கருணா குழுவினரின் மகளீர் பிரிவினர் தங்க வைக்கப்பட்ட இடம் நுகெகொட,
]சிவராம் கொல்லப்பட்ட இடம் பாராளுமன்றத்தை அண்மித்த பத்தரமுல்ல.
•லசந்த விக்கிரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்ட இடம் அத்தியடி றோட் றட்மலான.
•வித்தியாரன் அவர்கள் கட்த்தப்பட்டு றோட்டில் தள்ளிவிடப்பட்ட இடம் நுகேகொட

]நான் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட இடமும் நுகெகொடவை அண்மித்த கொகுவல.
[பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்பு பட்ட பல விடயங்களை கையாளுகின்ற பல புலனாய்வாளர்களைக் கொண்ட இடம் நுகெகொடவை அண்மித்த மீரிகான.
]புலிகளால் கொல்லப்பட்ட ஜெயரட்ணம், தாப்று மற்றும் நிலாப்டீன் ஆகியோர் இயக்கிய பிரதான பொலிஸ் புலனாய்வு மையம் இயங்கியது கல்கிசை.
இவை யாவும் கொழும்பின் தெற்காக உள்ள ஒரு சுற்று வட்ட பிரதேசங்கள்.
இந்தப் பிரதேசங்களிலேயே இராணுவ, பொலிஸ், துணை இராணுவக் குழக்களின் இரகசிய தடுப்பு முகாம்கள், வதை முகாம்கள், விசாரணை மையங்கள், விசேடமாக புலிகளில் இருந்து விலகிய கருணா மற்றும் இனியபாரதி மற்றும் பிள்ளையான் தரப்பினரின் தங்குமிடங்கள் அமைந்திருந்தன. இப்பொழுதும் அமைந்திருக்கின்றன.
முடிவாக நான் மேலே விபரித்தபடிக்கு கருணா தரப்பும் புலிகள் தரப்பும் ஒருவரை ஒருவர் பலி எடுத்துக்கொண்டிருந்த போது சிங்களப்பேரினவாத அரசு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நசுக்குவதற்கான மும்முரமான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தது.

Edited by sathiri, 08 April 2012 - 09:45 PM.

மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#50 I.V.Sasi

I.V.Sasi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,886 posts
 • Gender:Male
 • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 08 April 2012 - 11:32 PM

கடசியில் தெனிந்திய சினிமாவில் வருவது போல் , ஒன்ராக இருந்தவர்கள் ஆலை ஆள் போட்டுதள்ளிவிட்டார்கள் இடையில் சிங்களவன் புகுந்து தன் விளையாட்டை காட்டிவிட்டான்,..

கருணாவை பாக்கும் போது இரத்தாழுத்தம் ஏற்படுகிறது ஆனால் அவனுக்கு கொஞ்சமேனும் கவலை அல்லது குற்ற உணவ்ரு இருக்க தெரியவில்லை.
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#51 பகலவன்

பகலவன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 945 posts
 • Gender:Male
 • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
 • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 09 April 2012 - 04:32 PM

ஆராவது ஒருத்தர் எண்டாலும் கருணா ஏன் புலிகளை விட்டு பிரிந்தார் என்ற உண்மை காரணத்தை சொல்லுங்கவனப்பா.? :lol: :icon_idea:

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#52 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,932 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 09 April 2012 - 05:28 PM

உண்மையில் இவற்றை வாசித்தால் எனக்கு இவர்கள்மீது பரிதாபம் தான் வருகிறது.
புலிகள் வென்றிருந்தால் இந்தப்பேனாக்கள் எப்படி எழுதித்தள்ளியிருக்கும்....???
புலிகளால் ஏற்படாத ஒரு தோல்வியை வைத்துக்கொண்டு....... என்ன வெல்லாம் கற்பனை செய்கிறார்கள்???

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#53 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 09 April 2012 - 05:44 PM

கருணாவை புலிகளில் இருந்து பிரிப்பதற்கான பங்கு வகித்தவர்களில் முக்கியமானவர் ராஜன் சத்திய மூர்த்தி ஆனால் இங்கு குருபரன் அவரை புனிதராக்கி இருக்கிறார்...சத்திய மூர்த்தியை உள் கட்சி பூசல்கள் காரண்மாக கருணா அணியினரே போட்டார்கள் என அந்த நேரம் கதைத்தார்கள்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#54 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,125 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 09 April 2012 - 05:44 PM

வன்னியில் நிகழ்ந்த ஒரு ஊடகச் சந்திப்புக்காக சென்றிருந்த வேளையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் அலுவலகத்தில் திரு கிங்ஸ்லி ராஜநாயகம் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது உறவினர்கள் சிலருடன் ஒரு ஓரத்தில் வேண்டத் தகாதவர்களாகக் காத்திருந்தனர். [/background][background=transparent]
அவர் யார் எனத் தெரியாத போதும் தயா மாஸ்ரர் இவர்தான் கிங்ஸ்லி ராஜநாயகம் எனக் காட்டியது இப்போது ஞாபகம் வருகிறது.

புலிகளின் தலைமையுடன், தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு அந்தச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்க தேர்தலில் வெற்றி பெற்ற கிங்ஸ்லி ராஜநாயகம் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் காத்திருந்தார்.ஆனால் பா. அரியநேந்திரன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இதற்கு இன்னுமொரு காரணமும் அப்பொழுது புலிகளால் முன்வைக்கப்பட்டது. வன்னித் தரப்பிற்கு ஆதரவாக இருந்த அரியநேந்திரனை தோலிவியுறுச் செய்து கிங்ஸ்லி ராஜநாயகத்தை கருணா தரப்பினர் செயற்கையாக வெல்ல வைத்தனர் என்பதே அது. இந்த நிலையில் வற்புறுத்திக் கடிதத்தை வாங்கிய பின்பும் கூட புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். இது குறித்து இவரது மரண வீட்டில் இவரது மகள் "நீங்களே பட்டியலில் இணைத்து பின்னர் நீங்களே ராஜினாமாச் செய்யச் சொல்லி பின்னர் நீங்களே கொன்றும் விட்டீர்களே” என வேதனையையுடன் கதறியதாக என் மட்டுநகர் நண்பர் சொன்னதும் இப்பொழுது ஞாபகம் வருகிறது. இதுவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதனால் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளப்பட்டது. (அடிக்குறிப்பு 1)


புலி அழிந்ததன் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று .

#55 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,932 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 09 April 2012 - 05:49 PM

என்னைக்கௌரவப்படுத்தவில்லை. அதனால் தமிழரின் போராட்டம் அழியணும் என்று எந்த தமிழனும் விரும்பமாட்டான். :( :( :(

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#56 கிருபன்

கிருபன்

  வலைப்போக்கன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,018 posts
 • Gender:Male
 • Location:முடிவிலி வளையம்
 • Interests:போஜனம், சயனம்

Posted 09 April 2012 - 06:22 PM

கருணாவை புலிகளில் இருந்து பிரிப்பதற்கான பங்கு வகித்தவர்களில் முக்கியமானவர் ராஜன் சத்திய மூர்த்தி ஆனால் இங்கு குருபரன் அவரை புனிதராக்கி இருக்கிறார்...சத்திய மூர்த்தியை உள் கட்சி பூசல்கள் காரண்மாக கருணா அணியினரே போட்டார்கள் என அந்த நேரம் கதைத்தார்கள்

குருபரன் ராஜன் சத்தியமூர்த்தியைப் புனிதராக்கவில்லை. போட்டுத்தள்ளும் அரசியல் பலமடங்கு எதிரிகளை அதிகரித்ததைத்தான் சொல்ல வருகின்றார்.

தமிழரின் விடுதலைக்கு தமிழர்கள் செய்த பாதகங்கள்தான் அதிகம்.. அதைத் தமிழர்கள் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள்..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#57 ரதி

ரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,208 posts
 • Gender:Female
 • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
 • Interests:வாசித்தல்

Posted 09 April 2012 - 07:01 PM

குருபரன் ராஜன் சத்தியமூர்த்தியைப் புனிதராக்கவில்லை. போட்டுத்தள்ளும் அரசியல் பலமடங்கு எதிரிகளை அதிகரித்ததைத்தான் சொல்ல வருகின்றார்.

தமிழரின் விடுதலைக்கு தமிழர்கள் செய்த பாதகங்கள்தான் அதிகம்.. அதைத் தமிழர்கள் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள்..


நான் புலிகள் செய்தது எல்லாம் சரியென்டோ அல்லது அவர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளினது சரியென்டோ சொல்லவில்லை ஆனால் ச.மூ என்னென்ன செய்தவர் என குருபரனுக்கு தெரியும் அப்படித் தெரிந்தும் கருணாவுக்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்தால் தான் ச.மூ சுடப்பட்டார் என சொல்றார் பாருங்கோ அங்க தான் நிற்கிறார் குருபரன்...உண்மை தெரிந்தவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் போல கருணா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியல்ல
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#58 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,104 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 20 April 2012 - 01:42 AM

கடத்தலும் - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்


அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடக தர்மம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று அன்றைக்கே நினைத்த ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம். ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்த்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக அன்றைக்கே நானிருந்தேன்
எனது முந்தைய தொடரில் என்னையும் இலங்கை அரசே கடத்தியது எனத் தெரிவித்திருந்தேன். இலங்கை அரசாங்கத்தின் குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிவரும் பல்வேறு புலனாய்வுக் குழுக்களில் ஒன்றே என்னைத் துணை ஆயுதக்குழு ஒன்றின் உதவியுடன் ஓகஸ்ட் 2008 இல் என்னைக் கடத்திச் சென்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பதவிக்கு வந்தபின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பித்தது. யுத்தம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள் கொழும்பில் கடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளனாக நான் இருந்தேன்.
2005ன் பிற்பகுதியில் சந்திரிக்கா குமாரணதுங்க ஆட்சியில் சிவராம் கொல்லப்பட்டார். அவரின் பின் கொல்லப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபராக நான் இருந்தேன் என்பதை நினைக்கும் போது கடத்தப்பட்ட அந்தக்கணங்களை மீட்கும் போது இதயம் உறைந்து போகிறது. அந்தக் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை என்பதனை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களாக இத்தகைய மனித்தன்மைக்கு விரோதமான செயல்கள் சர்வ சாதாரணமாக அரசாலும் போராளிக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டே வருகின்றன. அதிஸ்டவசமாக நானும் இன்னும் சிலரும் முதலைகளின் வாயிலிருந்து மீண்டிருக்கிறோம். அந்தக்கணங்களை நினைவுகூருகிறோம். ஆனால் துரதிருஸ்ட வசமாக அந்தக்கணங்களை நீனைவுகூரப் பாக்கியமில்லாமல் மனிதர்கள் ஆயிரக்கணக்கில் மடிந்தும் போயிருக்கிறார்கள்.
மகிந்த சகோதரர்களின் ஆட்சியில் ஊடகத்துறையில் முதலாவது பலிக்கடாவாக நான் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணங்களைத்தேட வேண்டுமாயின் சூரியன் செய்திப் பிரிவினது அர்பணிப்புடன் கூடிய ஊடக வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
இலங்கையின் இலத்திரனியல் ஊடக வரலாற்றில் அதுவும் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் மக்களின் பங்களிப்புடன் கூடிய மக்களுக்கான ஒரு ஊடகமாகச் சூரியன் செய்திகள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது.
2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி சூரியனில் நான் இணைந்து கொண்டேன். ஏற்கனவே முன்னர் எனது தொடரில் குறிப்பிட்டது போன்று நான் இணைந்து ஒரு சில நாட்களில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை சில நிமிட இடைவெளியில் வானொலியில் அறிவித்திருந்தோம். இந்தத் தகவல் எனது தனிப்பட்ட தொடர்பொன்றினூடாகவே எனக்குக் கிடைக்க அதனை உடனடியாகச் செய்தியாக அறிவித்திருந்தோம். விரைவானதும் நம்பகமானதுமான செய்தி அளிக்கைக்கு அது ஒரு உதாரணமாக அமைந்தது. மேலும் ஒரு ஊடகவியலாளனுக்கு இருக்க வேண்டிய தனிப்பட்ட வலையமைப்பை நான் கொண்டிருந்ததையும் சூரியன் நிர்வாகம் உணர்ந்துகொண்டது. சூரியன் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆகியிருந்தபோதும் அது விரைவாக மக்களை அணுகிக்கொண்டிருந்தது. மக்களின் பங்களிப்புக்கள் ஊக்குவிக்கப்பட்டு சூரியன் மக்கள் வானொலியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. நான் இணைவதற்கு முன்னரேயே சூரியனின் பிரதம செய்தி ஆசிரியர், மற்றும் செய்தி ஆசிரியர்கள், சூரியனின் செய்தி முகாமையாளர் அறிவிப்பாளர்கள் எல்லோரும் தமது தொழிலை வயிற்றுப் பிழைப்புக்கானது என எண்ணாமல் ஊதியம் பெறும் தொழில் என்பதற்கு அப்பால் உணர்வுள்ளவர்களாக தொழிற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு உணர்வுள்ள துடிப்புள்ள செயற்பாட்டாளர்களோடு இணைந்துகொண்டபோது சூரியனில் எனது பங்களிப்பும் ஆழமாகியது.
சூரியனில் நான் இணைவதற்கு முதற் காரணியாக இருந்த றமணன் சூரியன் ஊடக வாழ்வு குறித்த தனது அனுபவப் பதிவில் பின்வருமாறு கூறுவார்: குரு அண்ணாவின் கடந்த கால போராட்ட வாழ்வு மற்றும் சரிநிகர் காரணமாக அவர் கொண்டிருந்த ஊடகத் தொடர்புகள் என்பன காரணமாக தமிழ் ஊடகத்துறையில் வரலாறு தெரிந்த ஒரு சில ஊடகவியலாளர்களில் ஒருவராக குரு அண்ணா இனம் காணப்பட்டார்
சூரியனில் குறுங்கால ஒப்பந்த அடிப்படையில் இணைந்த நான் குறுகிய காலப் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டதுடன் எனது செயற்பாடுகள் காரணமாக சூரியன் செய்திப்பிரிவின் பிரதம ஆசிரியராகவும் தரமுயர்த்தப்பட்டேன்.
நான் இணைந்து கொண்ட 2000 ஆண்டில் தொடங்கி 2002ல் சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் காலம் வரையிலான பகுதி மிகவும் கடினமான காலப்பகுதியாகும். அக்காலத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சிசெய்ய அனுருத்த ரத்வத்தை பாதுகாப்பு அமைச்சராகவிருந்தார். இந்த 2 வருட காலப்பகுதி கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியாகும். ஆனையிறவு முகாம் நிர்மூலமாக்கப்பட்டது, கட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்டது உள்ளிட்ட மிக முக்கியமான தாக்குதல்கள் நிகழ்ந்த காலம் அது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் கடுமையான செய்தித் தணிக்கையும் நடைமுறையில் இருந்தது.

செய்தித் தணிக்கை நடைமுறையில் இருந்த போதும் கூட அவற்றையும் மீறி நாசூக்காகச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றோம். கட்டுநாயக்கா தாக்குதலின் போது எமது அறிவிப்பாளர் ஒருவர் சிங்களச் செய்தியாளர்களுடன் சென்று துணிவுடன் நேரடியாகத் தகவல்களைப் பெற்று வானொலிக்குத் தந்துகொண்டிருந்தார். ஆனையிறவு புலிகள் வசம் வீழ்ந்த போது தணிக்கையையும் மீறி ஆனையிறவின் வரலாற்றைக் கூறியதன் ஊடாக அந்தச் செய்தியை மக்களுக்கு விளங்க வைத்தோம். பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த செய்தியையும் விசேட நிகழ்ச்சியாகச் செய்தோம். அப்போது மலையகத்தில் எழுந்த வன்முறைகளுக்குச் சூரியன் அளித்த செய்திகளே காரணம் எனக் ஹற்றனில் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனின் பல போராட்டங்களுக்கும், மலையகத்தில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும் சூரியன் செய்திகள் வழியமைத்துக் கொடுத்ததாகச் குற்றம் சாட்டப்பட்து. இதனை யடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தரவின் பேரில் அன்றய ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா என்னையும் அப்போது தமிழ் சிங்கள செய்திகள் அனைத்தினதும் மேலாளராக இருந்த சந்தன திலகரத்னவையும் அழைத்து நீண்ட நேரம் உரையாடி இருந்தார். உலக வர்த்தக மையத்தில் இருந்த ஊடக அமைச்சில் நடந்த உரையாடலில் சூரியனின் செய்திகளே மலையகத்தின் எழுச்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு காரணம் எனத் தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் ஜனாதிபதி சந்திரிக்கா உடனடியாக உங்களுடன் பேசும்படி கூறியதாகவும் யாப்பா அப்பொழுது தெரிவித்திருந்தார். அத்துடன் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு சூரியன் செய்திகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சூரியனின் பிரதான செய்திகள், மணித்தியாலச் செய்திகள், உடனடிச் செய்திகள் மட்டுமன்றி ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30ற்கு நடைபெற்ற சூரியப்பார்வைகள் நிகழ்ச்சி, 2004களில் ஆரம்பிக்கப்பட்ட சனிக் கிழமைகளில் இடம்பெற்ற விழுதுகள் நிகழ்ச்சி என யாவுமே மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டவையாக விளங்கியிருந்தன.
இது பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி 'செய்தியின் அரசியலும் அரசியற் செய்திகளும்' என்ற தனது குறிப்பொன்றில் கூறும் போது: இலங்கையின் பண்பலை ஒலிபரப்பு தவிர்க்க முடியாதபடி இன்றியமையாத முக்கியத்துவம் பெற்றுவிட்ட சூழலில் இந்தப் பண்பலை ஒலிபரப்பின் பிரதான தள கவர்ச்சிகளுக்கு (ஜனரஞ்சகப் பாடல்கள் - தமிழில் இது சினிமாப் பாடல்தான் (சினிமாப் பாடல் பண்பாடு) அப்பாலே போய் இந்த ஒலிபரப்புகளின் பாடல் அம்சத்தை முக்கியத்துவப் படுத்தாத அரசியல் விடயங்கள் பற்றிச் சொல்லப்படுவதாக இன்று சூரியன் பண்பலை ஒலிபரப்பு 'தமிழ் நேயர்களின்' முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் எவ்வித கணக்கீட்டிற்கும் அவசியம் இல்லை.
சூரியனில் வரும் நாளந்த செய்திகள், அரசியல் விமர்சனங்கள் ஆகியன சினிமா பாடல் பண்பாட்டிற்குள் நிற்க விரும்பாதவர்களுக்கு கூட அவர்களது ஒழுங்கான கேட்புக்கு ( டுளைவநசniபெ) உரித்தாகி விட்டன. இவ்வாறு தொடர்ந்து செல்லும் பேராசிரியர் இப்படிக் கூறுகிறார் ' இனக்குழும அடையாளம் மேலிருந்து திணிக்கப்படம் இலங்கையில் தமிழ் நேயர்கள் தங்களுக்கு முக்கியமான விடயங்கள் பற்றி தரவுகள், தகவல்கள், விளக்கங்கள் பற்றி அறிய விரும்புவது இயல்பெ. சூரியன் செய்திகள் அந்தத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இலங்கையின் தமிழ் நிலைப்பட்ட, தமிழ்ப் பிரதேச நிலைப்பட்ட செய்திகளை தெரிவிப்பதில் இவர்கள் ஆர்வம் காட்டுவது இவர்களது கேட்டுணர் ஈர்ப்பை வளர்த்து உறுதிப்படுத்தி உள்ளது.
இதற்கு மேலேபோய் தமிழ் இருப்பு பற்றிய பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதும் விவாதிப்பதும் முக்கிய நிகழ்ச்சிகளாகி உள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணியில் இருந்து 10மணி வரை ஒலிபரப்பாகும்; சூரியப் பார்வையில் ஒரு பார்வைச் செழுமையும் உன்னிப்பும் உண்டு.சனிக்கிழமை காலையில் விழுதுகள் நிகழச்சியில் ஒரு படி மேல் சென்று சில காத்திரமான அரசியல் விவாதிப்புக்களை செம்மையாக நடத்துகின்றது.
பண்பலை நுகர்வோர் ஒலிபரப்பின் ஊடே அரசியல் நுகர்வை மிகுந்த சாதுரியத்துடன் கொண்டுவந்துள்ள சூரியன் செய்தியாளர்களுக்கும் ஒலிபரப்பாளர்களுக்கும் எனது நன்றிகள்.” எனக் கூறினார்.
2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்ந்தங்கள் குறித்துக் கூட இலங்கையின் அனைத்து ஊடகங்களுக்கும் முன்னதாகக் காலையில் சூரியனே அறிவித்தது.
எனது ஒன்பதாவது தொடரில் குறிப்பிட்டது போன்று இலங்கையில் ஏதாவதொன்று நிகழ்வதற்கு முன்பு அது பற்றிச் சூரியனுக்கு அறிவித்து விடுவார்கள் என இராணுவப்படைத்தரப்பு கோபம் கொள்ளுமளவுக்கு சூரியன் செய்திகளின் விரைவுத்தன்மை இருந்தது.
இதுமட்டுமல்ல இலங்கையின் இலத்திரனியல் ஊடக வரலாற்றில் தமிழ்ச் செய்திப்பிரிவொன்று அதனை இயக்கிய நிறுவனத்தின் சிங்கள ஆங்கில மொழிமூல செய்திப் பிரிவுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் ஒரு முழுமையான செய்திப்பிரிவாக இயங்கியது சூரியனிலேயே ஆகும். தனக்கான சுதந்திரத்தை தன்னகத்தே கொண்டிருந்த செய்திப்பிரிவாக சூரியனின் தமிழ்ச் செய்திப் பிரிவே விளங்கியது. அதன் முழு அதிகாரமும் கொண்ட செய்திமுகாமையாளராக நான் கடமையாற்றினேன். ஏனைய மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படாத தமிழிலேயே செய்திகளை உருவாக்குகின்ற செய்திப்பிரிவாக நாங்கள் இயங்கினோம். இந்த குறிப்பான நிலைமைக்கு (இன்று பல்வேறு நெருக்குதல்களால் இந்த முழு நிறுவனமும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளபோதும்) சூரியன் நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்போதைய நிறுவனத் தலைவருமான றேனேர்சில்வா அவர்களது தனிப்பட்ட துணிவே காரணம் என்பதை நன்றியோடு கூற விரும்புகிறேன்.
Posted Image
எமக்கு வழங்கிய சுயமாக இயங்கும் அதிகாரத்துக்கு எதிராக நிறுவனத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் தமிழ்ப் பிரிவு தமிழ் நேயர்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதனை வழங்கட்டும் ஏனைய மொழிகளின் திணிப்பு வேண்டாம் என எமது நிறுவனத்தலைவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டிருந்தார். மிக நெருக்கடியான காலத்தில் அவர் காட்டிய துணிவும் எடுத்த முடிவுமே சூரியன் செய்திப்பிரிவு அக்காலத்தின் கண்ணாடியாக விளங்கக் காரணமாகியிருந்தது.
ஆனால் இந்த நிலைப்பாடுகாரணமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சியில் தொடங்கி என்னைக் கடத்தும் வரையிலும் பின்னர் 2007ல் மகிந்த சோதரர்கள் இந்த நிறுவனத்தை மூடும் வரையிலும் இந்த நிறுவனத்திற்குத் தொல்லைகள் தொடர்ந்தே சென்றன.
இவ்விடத்தில் எனது மௌனம் கலைகிறது தொடர் 10 இனை வாசித்த ஒரு வாசகர் எனக்கு எழுதிய கடிதத்தையும் பகிரவிரும்புகிறேன். சூரியன் வானொலியும் அதில் என் பங்களிப்பும் அன்று அதன் வாசகர்களிடையே என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு இது ஒரு உரைகல்.
அன்பின் குரு அண்ணாவிற்க்கு அன்பும் பாராட்டுதலும் கலந்த எனது இனிய வணக்கம்!
உங்களின் 'மௌனம் கலைகிறது-10' தொடரை படித்தவுடன் இதனை உங்களுக்கு எழுதுகிறேன். சரியான சந்தர்ப்பத்தில், பொருத்தமான நேரத்தில் உங்கள் மௌனத்தை நீங்கள் கலைத்திருப்பதானது ஜனநாயகத்தை விரும்புகின்ற, தனிமனித உரிமையையும் பாதுகாப்பையும் பாதுகாக்க நினைக்கின்ற என்னைப்போன்ற ஆயிரமாயிரம் பேருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.
உங்கள் கடத்தல் இடம்பெற்றபோது நான் யாழ்பல்கலையில் மாணவன், ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் நிகழ்ச்சியை கேட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை... அப்படி ஒருநாள் காலையில் சூரியனோடு இணைந்திருக்கையில்தான் லோசன் மிகவும் பதட்டத்துடன் உங்கள் கடத்தல் பற்றிய செய்தியை சொல்லிவிட்டு கலையகத்திலிருந்து உடனடியாக செல்கின்றார்..... அந்த நிமிடத்திலிருந்தே என்னைப்போன்று ஊடகத்துறையை ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஆயிரமாயிரம் பேருக்கும், நாட்டின் அரசியல் களநிலவரங்களை சரியாக புரிந்துகொண்ட லட்சக்கணக்கான சாதாரண பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும் இது மஹிந்த கொம்பனியின் வேலைதான் என்று. அக்காலகட்டத்தில் நாட்டின் அடிமட்ட மக்களோடு இணைந்திருந்தவன் என்ற ரீதியில் நானிதைச் சொல்கிறேன்.
ஊடகத்துறையால் தமக்கு கிடைதிருக்கும் மக்கள் செல்வாக்கையும், பிரபல்யத்தையும் வைத்துக்கொண்டு பிழைப்பு நடாத்துகின்ற ஒரு புது நாகரீகம் தமிழ்நாட்டைப்போன்று நமது நாட்டிலும் வளர்ந்துவருகின்றது என்பதை ஒரு கவலைக்குரிய விடயமாகவே நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் உங்களை போன்ற ஊடகத்தை உயிரிலும் மேலாக நேசிக்கின்றவர்கள் மகிந்த கொம்பனி போன்றவர்களின் முகத்தை மட்டுமல்லாது எமது ஊடகத்துறையில் இருக்கின்ற புல்லுருவிகளினதும் போலியான முகங்களையும் கிழித்தெறியவேண்டும். அப்படியான ஒரு சூழலில் நீங்கள் அப்படி நடந்துகொண்டதும், இப்போதய சூழலில் நீங்கள் உங்கள் மௌனத்தை கலைத்திருப்பதானதும் பாராட்டுக்குரியதே. இதுவும் ஒரு வாக்குமூலமாக சர்வதேசத்தால் பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் பணி தொடரட்டும்.....
நன்றி
இப்படிக்கு,
வி....
பி.குறிப்பு:- நான் இதனை நேற்றுமுந்தினமே எழுதிவிட்டேன். ஆனால் என்னால் இதனை உடனடியாக உங்கள் தளத்தில் பதிவுசெய்யமுடியவில்லை. காரணம் நான் .... அதனால்தான் இதனை தனிப்பட்டரீதியில் உங்களுக்கு எழுதுகிறேன். இந்த நிலை மாறவேண்டும் அண்ணா! உங்களால் முடிந்தால் இதனையோ அல்லது இதன் சாரம்சத்தையோ உங்கள் தளத்தில் பதிவுசெய்யுங்கள்....
இந்த நிலையில் 2005ஆம் ஆண்டு கடைசியில் ஒருநாள் எனது நண்பர் ஒருவர் தன்னை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என இன்னுமொரு நண்பர் ஒருவரூடாகத் தகவல் அனுப்பி இருந்தார். (சமூகத்தில் பிரபலமான இவர் அநாட்டில் இருப்பதால் இங்கு பெரைக் குறிப்பிடவில்லை.) நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன். விபரமாக விடயங்களைக் கூறித் தொலைபேசியில் உரையாட முடியாதென அவர் கூறியமையால் விடையத்தின் கனதியை உணர்ந்து கொண்டு எனது நண்பன் சிவகுமாரையும் அழைத்து அவனுடன் மோட்டார்வண்டியில் சுற்றுவழிகளால் அவரது வீட்டிக்கு நேரடியாகவே சென்றோம்.
25 பெயர்களைக்கொண்ட கொலைப்பட்டியல் ஒன்றை இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாகத் தகவல் ஒன்று அவருக்கு வந்ததாகவும் அதில் எனது பெயரே முதலாவதாக உள்ளதாக அறிவதாக அவர் கலவரமுடன் தெரிவித்தார். அது உண்மையா பொய்யாவென்பதை என்பதைத் தனக்கு உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் மிகக் கவனமாக இருங்கள் என அவர் கூறினார். இந்தத்தகவலையடுத்து ஒருசில நாட்களிலேயே நான் தமிழகம் சென்று 10 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்...
பின்னர் நான் கட்த்தப்பட்ட போது நிகழ்ந்த விசாரணையின் போது நீ ஏன் அண்மையில் தமிழகம் சென்று வந்தாய் என அரச புலனாய்வாளர்கள் என்னைக் கேட்டபோது நான் இந்தியா செல்லாமல் இருந்திருந்தால் அப்போதே கடத்தப்பட்டிருப்பேன் என்பதை உணர்ந்தேன். என் ஆயுளுக்கு ஒரு நீடிப்பைத்தந்த அந்த நண்பரை நான் நன்றியுடன் இங்கு நினைவுகூருகிறேன்.
2006ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இருந்து புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிகழ்ந்த சமாதானப்பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானது. இந்தகாலத்திலும் சூரியனின் செய்தியிடல் விரைவானதாகவும் நம்பகமானதாகவும் இருந்தது.
திருகோணமலையில் ஆரம்பித்த யுத்தம் குறித்தும், அதன் போது முஸ்லீம்கள் மூதூரில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது குறித்தும், பிரான்ஸ் தொண்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்தும் சூரியன் பல அம்பலப் படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.
மூதூரில் இடம்பெற்ற கடுமையான மோதலில் பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுச் சடலமாகக் கிடப்பதை எமது செய்தியாளர் அந்தக் கட்டடத்தின் கூரையில் இருந்து அவதானித்து தனது கையடக்கத் தொலைபேசியூடாக எமது நேரடி வானொலி ஒலிபரப்புக்கு வழங்கினார் என்பது பலருக்குக் தெரியாது. எமது செய்தியாளர் தனது உயிரையும் துச்சமென மதித்து அச்செய்தியை வழங்கிய பின்னரே ஏனைய அனைத்து ஊடகங்களும் அதனை அறிந்து கொண்டன.
இந்தக் காலப்பகுதியில் இலங்கை வந்து திருகோணமலை சென்ற சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர் விழுதுகள் நிகழ்ச்சியை கேட்டுவிட்டு அந்த நிகழ்ச்சியை மிக அருமையாக செய்திருந்தீர்கள் எனப் பாராட்டியிருந்தார்.
யுத்தம் ஆரம்பிப்பதற்கு முதல் ஆனால் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை மெதுவாக வெளித் தெரிய ஆரம்பித்த போது திருகோணமலையில் சம்பூர் பகுதிக்கான உணவு விநியோகத்தில் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தபோது அப்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் இப்போதைய ஊடகத் துறை அமைச்சருமான ஹெகலிய றம்புக்வெலவிடம் உலக வர்த்தக மையத்தில் ஒரு செவ்வியை எடுத்திருந்தேன்.
அதன் பின்னர் அவர் கூறிய கருத்துகள் குறித்து விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலனுடனும் ஒரு செவ்வியை எடுத்திருந்தேன். பின்னர் இவற்றை ஒலிபரப்பினேன்.
இவை ஒலிபரப்பாகிய சில நிமிடங்களில் எனது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஹெகலிய றம்புக்வெல நான் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர். எழிலன் விடுதலைப் புலிகளின் திருமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எப்படி எனது செவ்விக்குப் பின் நான் கூறியவைகள் பொய் எனக்கூறும் எழிலனின் செவ்வியை நீ ஒலிபரப்புவாய் எனக் கேட்டு இருந்தார்.
ஒருபக்கத்தின் செய்திகளை மட்டும் ஒலிபரப்பும் பக்கசார்பான பத்திரிகையாளனாக இருப்பதில் உள்ள உடன்பாடின்மை காரணமாகவே புலிகள் பக்கத்து அபிப்பிராயங்களையும் பதிவுசெய்து ஒலிபரப்பியிருந்தேன். இந்த வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தீவிர புலியெதிப்புவாதிகளின் கருத்துக்களுக்கும் எமது வானோலியில் திறந்த களம் வளங்கப்பட்டிருந்தது. அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடகதர்மம் வளைந்து போகவேண்டுமென் நினைத்தவர் ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம். ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக அன்றைக்கே நானிருந்தேன்.
ஆயினும் ஊடக தர்மம் குறித்து ஹெகலிய றம்புக்வெல அவர்களுக்கு பாடமெடுப்பது பலன் தராது என்பதனால் சட்டரீதியாகப் பொருந்தக்கூடிய பதில் ஒன்றை அவருக்குத் தெரிவித்தேன்:
புலிகள் மீது உத்தியோகபூர்வமாகத் தடையை நீங்கள் இன்னும் விதிக்கவில்லை. சமாதானப் பேச்சுக்கள் உத்தியோக பூர்வமாக இன்னும் முறியவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுடனான தொலைபேசிகள் துண்டிக்கப்படவில்லை எல்லாவற்றிற்கும் மேலாகப் புலிகளுடன் ஊடகங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது என இன்னும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. இப்போதும் சமாதான கால நடைமுறைகளே தொடர்கின்ன எனவேதான் அவர்களிடம் செவ்வியைப்பெற்று ஓலிபரப்பினேன் . என்றேன்.
ஆனால் ஹெகலிய றம்புக்வெல அவர்கள் எனது பதிலை ஏற்காது தனது செவ்வியின் பின் எழிலனது செவ்வியை ஒலிபரப்பியதன் மூலம் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கடுமையான தொனியிற் கூறிக் கோபம் கொண்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
பின்னர் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அரளிமாளிகையில் மகிந்த ராஜபக்ச சந்திக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோது அங்கு பிரசன்னமாகியிருந்த ஹெகலிய றம்புக்வெல எழிலனின் பேட்டியை சூரியன் ஒலிபரப்பிய சம்பவத்தை ஒரு குற்றச்சாட்டாக எனது நிறுவனத் தலைவரிடம் முன்வைத்திருந்ததை எனது கடத்தலின் பின் வெளிவந்த சண்டே லீடர் பத்திரிகையில் லசந்த விக்கிரமதுங்க அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்.
ஹெகலிய றம்புக்வெல அவர்களுடனான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்து சில நாட்களின் பின் ஒருநாள் உலக வர்த்தக மையத்தின் 35ஆவது மாடியில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு வந்த ஒருவர் நடராஜா குருபரனைச் சந்திக்க வேண்டும் எனவும் தான் லையன்ஸ்கிளப்பில்(lionsclup) இருந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அலுவலக வரவேற்பாளர் என்னைத் தொலைபேசியில் அழைத்து தகவலைத்தெரிவித்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது படையினருக்குரிய முடிவெட்டுடன் படையினர் அணியும் சப்பாத்தும் அணிந்த “லயன்ஸ்கிளப் உறுப்பினர்” எனக்காகக் காத்திருந்தார்.
சிங்களத்திலேயே அவர் உரையாடலை ஆரம்பித்தார்.
“ கொழும்பில் உள்ள லயன்ஸ் கிளப்பில் இருந்து வந்திருக்கிறேன். நாம் திருகோணமலையில் உள்ள வறிய மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய உதவி வேண்டும்என்றார்.
என்ன உதவியெனக் கேட்டபோது அந்தப் பகுதியில் இருந்து தொடர்பொன்று எடுத்து தாருங்கள் எனக் கேட்டார். நான் சொன்னேன் தனிப்பட்ட வகையில்எனக்கு அந்தப்பகுதியில் எவருடனும் தொடர்பில்லை. நீங்கள் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர் என்கிறீர்கள் எனெவே திருகோணமலையில் உள்ள லயன்ஸ் கிளப்புடன் தொடர்பு கொண்டீர்கள் என்றால் விடயம் இலகுவாகிவிடும். அவர்கள் சகல உதவிகளையும் செய்வார்கள். எனக் கூறினேன்.
உண்மையிலும் அவர் என்னைச்சரியாக அடையாளம் காண்பதற்கும் திருகோணமலையில் உள்ள புலிகளுடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா எனத்துருவுதற்கும் குறிப்பாக எழிலனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன என்பதைக் கணக்கிடுவதற்குமே புலனாய்வாளராகிய அந்த “ லயன்ஸ்கிளப் உறுப்பினர் அன்றைக்கு வந்திருந்தார்

http://www.globaltam...IN/article.aspx

#59 அபராஜிதன்

அபராஜிதன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,366 posts
 • Gender:Male

Posted 01 May 2012 - 04:10 AM

'
மரணத்தின் வாசல் வரை....மௌனம் கலைகிறது 12புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள் முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.'Wednesday 30th August 2006 The Island
Posted Image
Posted Image
Posted Image
உலக வர்த்தக மையத்தில் அமைந்திருந்த சூரியன் அலுவலகத்திற்கு லயன்ஸ் கிளப் உறுப்பினர் எனக்கூறிக்கொண்டு வருகைதந்த என்னை படைப் புலனாய்வாளர் ஒருவர் நேரடியாகப்பார்த்து உரையாடிச் சென்ற பின்னர் என்னையும் எமது சூரியன் எவ் எம் வானொலியின் செய்திகளையும் முழுமையாக கண்காணிக்கும் படலத்தில் அரச புலனாய்வாளர்கள் களம் இறங்கி இருந்தனர்.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் ஒருதடவை கடல் மார்க்கமாக இடம்பெற்ற ஆட்கடத்தல் குறித்த மிக முக்கியமான செய்தி ஒன்றை எனது செய்தி அறிக்கையில் வெளியிட்டு இருந்தேன். அந்தச்செய்தியில் அக்கடத்தல் எவ்வாறு இடம்பெற்றது என்ற விபரம் துல்லியமாக இடம்பெற்றிருந்தது. இந்தத்தகவலை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியாக இருந்த எனது சிங்கள நண்பர் ஒருவர் மூலமாகப் பெற்றிருந்தேன் இந்தச் செய்தி அன்றைய காலைச்செய்தியாக ஒலிபரப்பாகிய அன்று மாலை கடற்படையின் அப்போதைய ஊடகப் பேச்சாளராக இருந்தவர் (தகநாயக்கா என நினைக்கிறேன் பெயர் சரியாக ஞாபகம் இல்லை) எனது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது என்றும் அதனை ஏன் தம்மிடம் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தவில்லை எனவும் கடுமையான தொனியில் பல கேள்விகளைக் கேட்டு மிரட்டியிருந்தார்.
இதேபோன்று இன்னும் பல சம்பவங்கள் நான் கடத்தப்படுவதற்கு முன்பு இடம்பெற்றிருந்தன.
மீண்டும் யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கொழும்பு துறைமுக உயர்பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் புலிகளின் மூன்று தாக்குதல் படகுகள் உட்பிரவேசித்து தாக்குதலை நடத்த முற்பட்டிருந்தன. ஆயினும் கடற்படையினர் விழிப்பாக இருந்ததனைக் கண்ட புலிகள் சிறு துப்பாக்கிச்சண்டையின் பின் தப்பித்துச் சென்று விட்டார்கள்.
அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து எல்லா ஊடகங்களுமே குளப்பத்தில் இருந்த போது அன்ரைய காலைச் செய்தியில் அந்தத் தாக்குதல் முனைப்பு தொடர்பான முழு விபரத்தையும் நான் துணிந்து வெளியிட்டிருந்தேன். ஆயினும் இந்தச் செய்தியை அரச படைகளின் பேச்சாளர்கள் மறுத்திருந்ததுடன் அந்தச் செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பாகக் கடுமையான கோபத்தையும் கொண்டிருந்தனர். காரணம் வத்தளை நீர்கொழும்புப் பக்கமாக இருந்து வந்த மீனவப் படகுகளை ஒத்த புலிகளின் படகுகள் அதியுயர் பாதுகாப்பு வலையமான துறைமுகத்துள் புகுந்தமை வெளித்தெரிவது அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தை அளிக்கும் செயலாக இருந்தது. அதனால் அச்செய்தி வெளியில் கசியாமல் தடுக்கவே படையினர் முனைந்தனர். ஆனால் எமது செய்தி அறிக்கையில் அது வெளியிடப்பட்டவுடன் படையினர் கடுமையான கோபம் அடைந்தனர்.
முன்பு ஒருமுறை என்னுடன் தொடர்பு கொண்ட அதே கடற்படைப் பேச்சாளர் மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரத்துக்கத்தினார். அந்தச் செய்தியை துறைமுகத்துள் இருந்தே பெற்றுக் கொண்டேன் எனவும் மேலும் அந்தச் சம்பவம் நிகழவில்லை எனப்படையினர் மறுத்ததனையும் எமது மதியச்செய்தியில் ஒலிபரப்பி விட்டோம் எனவும் நான் பதிலளித்திருந்தேன்.
இன்னுமொரு சம்பவத்தையும் இங்கு நினைவுகூரலாம். வடமாராட்சியில் பொது மக்களின் வீடுகள் சில எரியூட்டப்பட்டமை தொடர்பாக செய்தி ஒன்றை எமது அப்போதைய யாழ்ச்செய்தியாளர் வழங்கியிருந்தார். அந்த எரியூட்டலின் பின்னணியில் படையினரே இருந்தார்கள் என்பதனையும் ஆதாரபூர்வமாக அந்த செய்தியில் ஒலிபரப்பி இருந்தோம். இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியிருந்ததோடு எனது வேலைக்கும் ஆபத்து ஏற்படும் நிலையை தோற்றுவித்துமிருந்தது.
இந்த செய்தி பொய்யானது என இராணுவப் பேச்சாளர் என்னுடன் வாதிட்டிருந்ததுடன் எமது சிங்கள பிரிவின் செய்தியாளர்களுக்கும் கூறி கோபப்பட்டு உள்ளார். அதனால் இந்தப் பிரச்சனை எமது அலுவல நிர்வாக மட்டத்திலான கூட்டத்திலும் எதிரொலித்தது. குருபரன் எமது படையினரைப் பற்றித் தவறான செய்தியை பிரசுரித்திருக்கிறார் எனவும் இது எமது நிறுவனத்தையே பாதிக்கும் என என் முன்னிலையிலேயே ஒரு கடும்போக்கு சக உத்தியோகத்தர் ஒருவர் எனது தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறைப்பாடு செய்தார். எமது முகாமைத்துவப் பணிப்பாளர் அந்தச் செய்தி குறித்து ஒரு மெல்லிய சிரிப்புடன் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். எனினும் இது குறித்து ஏற்கனவே சகல ஆதாரங்களையும் திரட்டி ஒரு கோர்ப்பாக எடுத்து சென்றிருந்ததால் அதனை உடனடியாகவே அவரிடம் கையளித்தேன். அவற்றைப் பரிசீலித்துப் பார்த்த பின் செய்தியளிப்பதென்றால் இப்படித்தான் செய்தி அளிக்கவேண்டும். வெளியிடுகிற செய்திகளுக்கு தகுந்த ஆதாரங்களை வைத்திருந்தால் அதனால் வரும் விளைவுகளை என்னால் பிரச்சனையின்றி எதிர்கொள்ளமுடியும் என எமது தலைமை நிர்வாகி கூறிய போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே கடுமையான நிசப்தம் நிலவியது.
ஓவ்வொரு தடவையும் யுத்தம் ஆரம்பிக்கப்படும் போது உடனடியான நேரடியான தாக்கங்களை அனுபவிக்கும் தமிழ்ச் சமூக நிறுவனங்களில் யாழ் பல்கலைக் கழகம் மிக முக்கியமானது. 1983களில் இருந்து யுத்தத்தை நடத்திய இலங்கை அரசாங்கங்களின் படைத் தரப்புகளால் யாழ் பல்கலைக் கழகமும் அதன் மாணவர்களும் அடைந்த துன்பங்கள் அளவிட முடியாதவை. அந்த வகையில் 2005 இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது படைத்தரப்பினர் கடுமையான அழுத்தங்களையும் தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி இருந்தனர். இது சம்பந்தமான செய்திகள் யாவற்றையும் உடனுக்குடன் சூரியனே வெளியிட்டு வந்தது.
ஒரு முறை பல்கலைக்கழக மாணவர் ஒருவரோ இருவரோ சரியாக ஞாபகம் இல்லை திருநெல்வேலி பரமெஸ்வராச் சந்திக்கு அருகாமையில் படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் போன செய்தியை ஒலிபரப்பி இருந்தேன்.
அன்றிரவு எனது வீட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் 'ஆ... மேக்க கொட்டியா கெதர னேத' எனத் தொடங்கி பின்னர் தமிழில் பேசினார். மட்டக்குளியில் இருந்து கதைப்பதாக கூறிய அவர் தான் முதலில் பகிடியாகப் பேசியதாகவும் திருநெல்வேலியில் காணாமல் போனவர் தமது உறவினர் என்றும் அவர் கடத்தப்பட்ட தகவல் எப்படி வந்தது என்றும் மேலதிக தகவலைப் பெற அவருடன் தொடர்பை ஏற்படுத்தி தருவீர்களா எனவும் கேட்டார். மனதுக்குள் சிரித்தபடி இந்தத் தகவல் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து தான் வந்தது. இதனைக் கடத்தப்பட்டவர்களுடைய உறவினர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தகவல் யாரூடாகக் கிடைத்தது என்பதனை படையினர் மட்டுமல்ல ஆண்டவன் கேட்டால் கூட நாங்கள் சொல்ல மாட்டோமென்றேன். 'ஓ அப்படியா' மீண்டும் தனது குரலை கடுமையாக்கிய அவர் சரி சரி பார்ப்பம் நீங்கள் எல்லாம் புலிகள் தானே எத்தனை நாளுக்கு ஆடப் போகிறீர்கள் எனக் கூறி அந்த அரசபடைகளின் தமிழ் எடுபிடி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.
இப்படி வீட்டு தொலைபேசிக்கும் அலுவலகத் தொலைபேசிக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் எத்தனையோ மிரட்டல் அழைப்புக்கள் வந்தன. அரசாங்க அமைச்சர், இராணுவப் பேச்சாளர், கடற்படைப் பேச்சாளர் புலனாய்வுப்படையினர் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பெயர் சொல்லியும் சொல்லாமலும் வந்த எல்லாக்குரல்களுக்கும் ஒரு ஊடகவியலாளனின் நேர்மையுடனும் தர்மத்துடனும் நான் கடத்தப்படும் வரை பதில் அளித்துக்கொண்டேதானிருந்தேன்.
இன்னும் ஒருநாள், நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த போது எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஒருவர் சிங்களத்தில் மிக மரியாதையுடன் நீங்கள் நடராஜா குருபரன் தானே உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உங்கள் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டேன். தெகிவளை குவாரி றோட்டில் மிகப் பெரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. உங்களது வானொலியில் உடனடி இடையீட்டுச் செய்தியாக வழங்கலாம் உடன் வருகிறீர்களா? எனக் கேட்டார். இந்த குவாரி றோட்டில் தான் ஊடகவியலாளர் சம்பத் லக்மல் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு சடலமாக போடப்பட்டு இருந்தார்.
எனது உள்ளுணர்வு அவர் எதற்கோ வலைவிரிப்பதாகச் சொல்லவே இப்போது என்னால் வர முடியாது நான் அலுவலகத்தில் இரவுக் கடமையில் இருப்பவருக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அவர் பொலிஸ் மற்றும் வைத்தியசாலைகளுடன் தொடர்பு கொண்டு செய்தியின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் அதனைச் செய்தியாக ஒலிபரப்புவார் எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் எனது தொலைபேசியை எடுக்காமல் அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டேன். மறு நாள் விசாரித்தபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அறிந்து கொண்டேன்.
இவை தவிரவும் நான் விடுதலைப்போராட்ட அமைப்பில் இருந்த போது எனக்கு நண்பர்களாக இருந்த பலரிடம் கூட படைப் புலனாய்வாளர்கள் என்னைப்பற்றி பலமுறை விசாரித்து இருந்திருக்கிறார்கள். உலக வர்த்தக மையத்தில் 35 ஆவது மாடியில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு குருபரன்தான் பொறுப்பெனவும் இராணுவத்தரப்பு என் நண்பர்களிடம் கூறியிருக்கிறது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து எனக்காக வாதாடிய நண்பர்கள் அதனை எனக்கு தெரிவித்துமிருந்தார்கள்.
இப்படியே எனக்கு எதிராகத் அரசபடை தொடர்ந்த புலனாய்வு யுத்தம் ஒருநாள் எனது வீட்டிற்குள்ளும் வந்தது.
ஒருநாள் அதிகாலை 1.45 மணியிருக்கும் வீட்டின் அழைப்புமணி அலறியது. எழுத்து கதவருகில் வந்து யார் என்று கேட்ட போது மீரிகானா பொலிசில் இருந்து வந்திருக்கிறோம். கதவைத்திறவுங்கள் எனக் கூறினார்கள். கதவைத் திறந்தேன். போலிஸ் உடையிலும் சாதாரண உடையுடனும் ஏகே 47 துப்பாக்கியுடனும் துப்பாக்கி இல்லாமலும் 10ற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். சிலர் வீட்டின் உள்ளே சென்று எதனையோ தேடினார்கள். சிலர் கூரையின் மீது ஏறித் தேடினார்கள். சிலர் வீட்டை சுற்றி நின்றார்கள். என்னுடன் சாதாரணமான முறையில் உரையாடுவது போல உரையாடி நான் வேலைக்கு செல்லும் நேரம் திரும்பும் நேரம் போன்றவற்றையும் கேட்டுப்பெற்றுக் கொண்டார்கள்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனைக்காக வந்ததாகவும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிப்போனார்கள். அதே அதிகாலை 2.15 இருக்கும் மீண்டும் அழைப்புமணி அலறியது. நாங்கள் கல்கிசைப் பொலிசில் இருந்து வந்திருக்கிறோம். சற்று முன்னர் யாராவது பொலிஸ் உடையில் வந்தார்களா எனக் கேட்டார்கள். (வந்தவர்களில் ஒரு உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர். அவரைக் கல்கிசைப் பொலிஸ்நிலையத்தில் கண்டிருக்கிறேன்.) 'ஆம் யார் சொன்னார்கள்' எனக் கேட்டேன் உங்கள் அயல் வீட்டவர்கள் சிலர் கல்கிஸைப் பொலிஸ் நிலையத்தைத்தொடர்பு கொண்டு சாதாரண உடையுடனும் பொலிஸ் உடையுடனும் சில ஆயுதங்களுடன் வந்து உங்கள் கதவைத் தட்டிக் கரைச்சல் தருவதாக முறைப்பாடு செய்தார்கள். அதுதான் வந்தோம் எனக் கூறினார்கள்.
ஆம் வந்தார்கள் வந்தவர்கள் தாம் மீரிகானா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்கள் வீட்டைச் சோதனை செய்தார்கள் பின் திரும்பிச் சென்றுவிட்டார்கள். என நான் கூறினேன்.
இந்தப்பகுதிக்குப் பொலிஸ் வருவதாக இருந்தால் அது கல்கிசைப் பொலிஸிலிருந்தது தான் வரமுடியும். தாங்கள் அப்படியான நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவே இது வேறு ஏதாவது ஒரு குழுவாக இருக்கலாம் எனக் கூறிப் போனார்கள்.
உண்மையில் வீட்டுக்கு முதலில் வந்து சென்றவர்கள் அரச படைகளோ பொலிசோ அல்ல என்னும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான நாடகத்தையே கல்கிசைப்பொலிஸ் அன்று அதிகாலையில் ஆடியிருந்தது.
ஆனால் நானோ ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்கிற மெல்லிய உணர்வைத்தவிர கடத்தப்படப்போகிறேனென்ற உணர்வோ எனது மரண நாள் எண்ணப்படுகிறதேன்ற வலிமையான உணர்வோ இல்லாமல் எதுவுமே நடக்காதவன் போல் காலை எழுந்து வழமை போல் அலுவலகம் சென்றேன்.
எனது வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் அதன் அயலில் நாய்கள் அளவுக்கதிகமாக குரைத்த நாட்கள் எல்லாம் எனது மரணத்திற்கு குறிவைக்கப்பட்ட நாட்கள் என்பதை உணராதிருந்திருக்கிறேன் என்பதை எத்தனை நாட்கள் என்னைப் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை என்னை கடத்தி வைத்திருந்த போது தொடுத்த கேள்விகளின் போதேயே உணர்ந்து கொண்டேன்.
என்னைக் கடத்திய அதிகாலைக்கு முதல் நாள் வேறு எங்காவது சென்று படுத்ததாயா? அதிகாலையில் வீட்டில் வாகனம் இல்லையே எனக் கேட்டிருந்தார்கள்.
அது போல ஏன் வேலை முடிந்து நேரே வீடு செல்லாமல் வெள்ளவத்தை சென்று பின் வீடு செல்கிறாய் எனக்கேட்டிருந்தார்கள்?
வேலை முடிந்து செல்லும் வழியில் அனேகமாக வெள்ளவைத்தையில் உள்ள என் உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வது வழமை அதுபற்றியே ஏன் வேலை முடிந்ததும் வெள்ளவத்தைபோய் பின் வீட்டுக்குப் போவாய் எனக்கேட்டிருந்தார்கள்.
உண்மையில் எனக்கெதிரான மிரட்டல்கள் வர ஆரம்பித்ததில் இருந்து என்னை யாராவது பின் தொடரக்கூடும் என்பதனை உணர்ந்து கொண்டு அவதானமாக இருந்தேன். எனது வேலைக்கு செல்லும் நேரமோ வேலையில் இருந்து வீடு திரும்பும் நேரமோ ஒழுங்கற்றவையாக எவராலும் ஊகிக்க முடியாதவையாக அமையும் படி பேணியிருந்தேன்.
இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்த போதும் இவற்றைப் பகிரங்கப்படுத்தி எனக்கு சுய விளம்பரம் தேடவோ அல்லது வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெறவோ விரும்பவில்லை. நான் கடத்தப்படும் வரை கொழும்பில் எனக்கென ஒரு இருப்பிருந்தது. இலங்கையில் வாழவதனால் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளைத்தவிர நானும் எனது குடுப்பமும் வேரறாத வாழ்க்கையை கொண்டிருந்தோம்.
எனக்கு தரப்பட்ட நெருக்கடிகளைப் பெரிதுபடுத்தினால் இலங்கையில் வாழும் சூழல் அற்றுப் போய்விடும் என்பதை உணர்ந்திருந்தேன்.
ஆனால் நான் கடத்தப்பட்டதும் விடுவிக்கப்பட்டதும் ஒரு நாடகமென்று கிண்டல் செய்து என்னைக் காயப்படுத்தியவர்கள் பலர். கடத்தப்பட்டவரைக் காலையில் பிணமாகத்தானே காண்பது வழக்கம் ஆனால் இவர் மட்டும் எப்படி உயிருடன் வந்தார் எனச் சிலர் ஆய்வில் ஈடுபட்டு இருந்தார்கள். இன்னும் சிலர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியவருக்கு 'இதுவும் வேணும் இன்னமும் வேணும்' எனக்கூறினார்கள்.
புலிகளை அடியோடு வெறுத்தவர்களும், சில ஈ.பீ.டீ.பீ உறுப்பினர்களும் என்னைப் புலியாகவே சித்தரித்து அதனாற்தான் நான் கடத்தப்பட்டதாகவும் விவாதித்தார்கள்.
'எங்கட பெடியள் மற்றும் எங்கடை ஊடகவியலாளர்கள்
(ஊடகவியலாளர் சின்ன பாலா போன்றோரை) புலிகள் சுட்ட போது உந்தப் புலி ஆதரவாளர்கள் அதனை எல்லாம் ஆதரிச்சவர்கள்தானே! இப்ப தங்கடையாள் கடத்தப்பட்டவுடனே குமுறுகினம்' என ஈ.பீ.டீ.பீ.யின் பாக்றோட் முகாமில் உரையாடப்பட்டதாகவும் நான் கடத்தப்பட்டது தொடர்பாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்ததாகவும் அந்த முகாமில் இருந்த என்னுடன் நல்ல தொடர்பைக்கொண்டிருந்த ஒரு ஈ.பீ.டி.பீ உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கவலையடைந்தார்.
புலிகளைத் தனிப்பட்ட வெறுப்புணர்வின் காரணமாக எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியான காரணங்களுக்காக வெறுத்தவர்கள் அரசை ஆதரித்த தமிழர் என யாவருக்கும் சூரியன் வானோலி அவர்களது கருத்தை தணிக்கை இன்றி தெரிவிக்க முழுமையான இடமளித்திருந்தது. புலிகள் வடக்கு கிழக்கில் பலமாக இருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை கொண்ட அரசியல் வாதிகளுக்கும் புத்திஜீவிகளுக்கும் சூரியன் அளித்த சனநாயக ரீதியான களம் போன்று இலங்கையின் அரச வானொலி கூட களம் அளிக்க வில்லை.
இங்கே சில முக்கியமான சில சம்பவங்களை நினைவு கூரலாம்.
ஈ.பீ.டீ.பீ.யின் அரசியல்செயற்பாட்டாளராக மாறிய ஊடகவியலாளரும் எழுத்ததாளருமான சின்னபாலா என்கிற பாலநடராஜ ஐயர் புலிகளால் சுடப்பட்ட போது அது குறித்தும், ஊடகவியலாளர் றேலங்கியும் அவரது கணவரும் புளொட் உறுப்பினருமான செல்வராஜாவும் சுடப்பட்ட போது அது குறித்தும் ஊடகவியலாளர்களின் கொலை என்ற வகையில் அவற்றைக் கண்டித்து தனித்தனியாக சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் பலரையும் இணைத்துக் கருத்துக்களை பரிமாறும் ஒரு நிகழ்ச்சியை நடாத்தியிருந்தேன்.
மூதூரில் யுத்தம் வெடித்து முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேறிய போது ஆண்களையும் பெண்களையும் பிரித்து தனித்தனியாக இரண்டு வழிகளால் புலிகள் வெளியேற்றினர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஆண்களில் சிலரைப் புலிகள் சிறைப்பிடித்துச்சென்று காணாமல் போகச்செய்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களின் உறவினர்களின் கண்ணீரை உடனடியாகவே சூரியன் தனது விழுதுகள் நிகழ்ச்சியில் பதிவு செய்திருந்தது. எந்த ஊடகமும் செய்யாத ஒன்றை நாம் அன்று செய்திருந்தோம்.
நான் சூரியனில் இணைந்த 2000 ஆண்டில் இருந்து நாட்டை விட்டு வெளியேறும் வரை இலங்கையில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள் முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக்கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.
நிலைமை இவ்வாறிருக்க என்னைப்புலியாக அல்லது புலி ஆதரவாளனாக முத்திரை குத்துவதற்கு இவர்கள் முயன்றமை விசித்திரமானது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விழுதுகள் நிகழ்ச்சிக்கு அழைத்தால் வானொலியில் வந்து மூச்சு விடாமல் புலிகளைக் கண்டபடி திட்டுவார். ஜே.வீ.பி சந்திரசேகரனை நிகழ்ச்சிக்கு அழைத்தால் தொடங்கியதில் இருந்து முடியும் வரை கொலைகாரப்புலிகள் பாசிசப்புலிகள், வன்னிப்புலிகள் என வாய்க்கு வந்தபடி திட்டுவார். ஆனந்தசங்கரி, பத்மநாபா ஈபீ.ஆர்.எல்.எவ் சுகு, சித்தார்த்தன் போன்றோரை அழைத்தால் அவர்கள் வந்து புலிகளின் செயற்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சிப்பார்கள். அரசாங்கத்துடன் இருந்த முஸ்லீம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தால் முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றி பேசி புலிகளை கடுமையாக விமர்சிப்பார்கள்.
புலிகளுக்கெதிரானவர்களின் கருத்துக்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் நான் விழிப்புடனேயே இருந்தேன். இங்கே இன்னுமொரு விடையத்தையும் நான் பதிவு செய்யவேண்டும். புலிகள் மீது வசவு பாடும் நிகழ்வாக இருந்தாலும் சரி அவர்கள் மீதான அரசியல் விமர்சன நிகழ்வாக இருந்தாலும் சரி அவற்றைச் செய்வதால் எனக்கு ஆபத்து ஏற்படுமேன அவர்கள் என்னை ஒரு போதும் மிரட்டவில்லை.
நான் ஊடகவியலாளனாக இலங்கையில் இருந்த காலத்தில் புலிகளின் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் மட்டுமே மிரட்டல்கள் வந்திருந்தன.
ஆனையிறவு யுத்தத்தில் கேணல் பானு கொல்லப்பட்டதாக ஒரு செய்தியை அவ்யுத்தகாலத்தில் ஒலிபரப்பியிருந்தோம். எமது செய்தியாளரின் தகவலில் இருந்த தவறுகாரணமாக அது நிகழ்ந்தது. தவறான செய்தியை ஒலிபரப்பியமைக்காக என்னைத் தூஸணவார்த்தைகளால் புலிகள் திட்டியிருந்தனர். அது ஒரு சம்பவம். மற்றைய சம்பவத்தில் புளியங்குளத்தில் இருந்து எமக்கு அனுப்பிய ஒரு செய்தியை அதன் தன்மை கருதி நாங்கள் சூரியனின் செய்தியில் சேர்க்கவில்லை. அதனால் கோபமடைந்த புளியங்குள பகுதியில் செயற்பட்ட போராளி ஒருவர் புளியங்குளத்தில் ஏ9 வீதியில் அமைந்திருந்த புலிகளின் பிரதான அலுவலகத்தில் இருந்துதொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருந்தார். பதிலுக்கு நானும் 'தம்பி நீர் வந்து எனது கதிரையில் இரும் நான் புலிகளின் குரலில் வேலைக்கு வருகிறேன்' எனக்கோபமாக சொல்லியதோடு தயா மாஸ்ரருடன் நான் நேரடியாக பேசுகிறேன் எனச் சொல்லி தொலைபேசி அழைப்பை துண்டித்திருந்தேன். உடனே தயா மாஸ்ரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் முறையற்ற அணுகு முறையைக்கூறினேன். ' உவங்கள் விசரன்கள். உவங்கடை கதையை விட்டுட்டு நீங்கள் உங்கட வேலையை பாருங்கள்' எனக்கூறியிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் தவிர வேறு எந்தப் பொழுதிலும் புலிகள் எம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவோ மிரட்டவோ தங்களது ஆளுமைக்குள் கொண்டுவரமுயலவோ இல்லை.
ஆனால் அரச படையினரும், அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களும் எனக்கு எல்லா வகையிலும் நெருக்குவாரங்களையும் அச்சமூட்டல்களையும் வழங்கி இறுதியில் எனக்கு மரணத்திகதியை குறிக்குமளவுக்கும் சென்றனர்.
http://globaltamilne...IN/article.aspx

" துரோகத்தின் வலி அறிந்தவன் மற்றோருக்கு துரோகம் இழைக்க மாட்டான், துரோகியையும் மன்னிக்க மாட்டான் "


#60 நிழலி

நிழலி

  ர.சி.க.ன்

 • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • 9,104 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:காமமும் கலவியும்

Posted 30 June 2012 - 02:17 AM

அவர்களைப் பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக்கொண்டிருந்தேன்!அவ்வளவுதான்

எனது மெளனம் கலைகிறது தொடர் சிலகாலம் வெளிவராமல் இருந்தது குறித்துப் பல வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அக்கறையுடன் கேட்டிருந்தார்கள். குருபரன் மீண்டும் மௌனமாகி விட்டாரோ எனப்பலரும் எண்ணத் தலைப்பட்டிருந்தனர். இடையறாத வேலைப்பழுவும் மனிதர்களுக்கே உரிய இடையிட்டு வரும் மனச் சோர்வுகளும் நினைவுகளையும் உணர்வுகளையும் கோர்த்துக் கட்டுரையாக்குவதற்குரிய உழைப்பை செய்ய முடியாமலாக்கி விட்டன. இப்பொழுது சற்று இளைப்பாறிய பின் மீண்டும் கலைகிறது என் மௌனம்.
கடந்த 12 ஆவது தொடரில் ஒரு ஊடகவியலாளனாக ஊடக தர்மங்களைப்பேணுவதிலும் மாற்றுக்கருத்துக்களுக்கு களம் அளிப்பதிலும் கவனமுடனிருந்தேன் என்பதைக் கூறியிருந்தேன். அதே தொடரில் வடமராச்சியில் படையினரால் தீயிடப்பட்ட நலன்புரி முகாம் ஒன்று குறித்தும் அதனைச் செய்தியாக வெளிட்டதனால் நாம் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் குறிப்பிட்டு இருந்தேன். அந்தச்செய்தியிடலைப் பிரதம செய்தி ஆசிரியன் என்ற வகையில் கையாண்ட விதம் குறித்து எமது நிறுவனத்தலைவர் பாராட்டியிருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். குறித்த எம்மால் வெளியிடப்பட்ட அந்தச் செய்தியின் பிரதியையும் அச்செய்தியினால் பாதுகாப்பு அமைச்சுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது எமது செய்தி சரியானது என்பதை நிரூபிக்கும் விதத்தில் நான் நிர்வாகத்திற்கு கொடுத்த ஆதாரங்களையும் இங்கே தருகிறேன்.
Posted Image
Posted Image
இது மட்டுமன்றி எனது தலைமையில் செயற்பட்ட சூரியன் செய்திப் பிரிவு எவ்வாறு ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தது என்பதற்கு இன்மொரு உதாரணத்தையும் தரமுடியும்.
மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகக்களமிறங்கிய போது இலங்கையின் அனைத்து முக்கிய ஊடகங்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட றணில் விக்கிரமசிங்கவுக்கே அதிகளவு பிரச்சார ஒலி ஒளிபரப்பு நேரங்களை ஒதுக்கி இருந்தன. ஆனால் எமது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் அன்றைய காலப் பகுதியில் மெல்லிதான ஐக்கியதேசியக் கட்சிசார்புத்தன்மையைக் கொண்டிருந்த போதும் அதன் சூரியன் எவ் எம் வானொலி ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் றணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய அதே அளவு நேரத்தை வழங்கியிருந்தது.
Posted Image
குறித்த தேர்தல் முடிந்திருந்த காலத்தில் ஒருநாள் எமது நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் செயலாளர் எனக்கு ஒரு டெய்லி மிரர் பத்திரிகைச் செய்தி ஒன்றை அனுப்பி அதில் குறிப்பு ஒன்றையும் அனுப்பி இருந்தார். அந்த செய்தியை பெற்றவுடன் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி. அந்த செய்தி பவ்ரல் அமைப்பு ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்கள் அறிக்கையிட்ட செய்திகள் தொடர்பானதாக இருந்தது. செயலாளர் குறிப்பிட்டது போன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அதன்போது முகாமைத்துவப் பணிப்பாளர் தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியதாக சொன்னார். அவரைச் சந்தித்த போது அந்தச் செய்தியை வாசித்துக்காட்டி பாராட்டுக்குரிய முறையில் தொழிற்பட்டிருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டு என்னை வாழ்த்தினார்.
அவர் என்னைப்பாராட்டுவதற்கு காரணமான செய்தியில் தேர்தல் காலங்களில் பவ்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றின் படிக்கு நடந்து முடிந்திருந்த ஜனாதிபதி தேர்தலில் எமது சூரியன் எவ் எம் வானொலியைத் தவிர ஏனைய அனைத்து ஆங்கில சிங்கள இலத்திரணியல் ஊடகங்களும் றணில் விக்கிரம சிங்கவுக்கே பிரச்சாரத்திற்கு அதிகளவு நேரத்தை வழங்கியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதே ராஜபக்ஸ அரசின் சகோதரரின் வழிகாட்டலில் இயங்கிய புலனாய்வுப் பிரிவினர் தான் என்னைக் கடத்தி கொலை செய்ய முயன்றனர்.
Posted Image
ஊடக தர்மம் பற்றிய நுண்ணுணர்வை நாங்கள் (அனேகமான பத்திரிகையாளர்கள்) கொண்டிருக்கிற போதும் ஆட்சியாளர்கள் சனநாயகம் பற்றிய குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு தாரை தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் அல்லது ஊடகவியலாளர்கள் மக்கள் நலன்கருதி தங்களை விமர்சித்தார்கள் என்றால் அவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க அல்லது கடத்திகொலை செய்ய நினைக்கிறார்கள்.
எமது சூரியன் செய்திப் பிரிவுபற்றியும் எமது அன்றைய நிலைப்பாடு குறித்தும் நான் இங்கே ஏன் அழுத்திக் கூறினேன் என்றால் நான் கடத்தப்பட்ட போது அரசாங்க தரப்பில் இருந்த பலரும் குறிப்பாக அரசாங்கத்தை அன்று ஆதரித்துக்கொண்டிருந்த தமிழ்த் தரப்புகள் பலவும் எமது வானொலியையும் என்னையும் புலிகளிற்கு சார்பானவர்களாகச் சித்தரித்து அதனால் தான் நான் கடத்தப்பட்டேன் என நிறுவ முற்பட்டிருந்தனர். இந்த நிறுவலைச் செய்யக்கூடிய சில தோற்றப்பாடுகளும் அக்காலத்தில் இருந்தனவென்பதைப் பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன்.
அத்தோற்றப்பாடுகளை பற்றியும் இங்கு பார்த்து விடுவோம்.
அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான அனைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் செய்தி சேகரிப்பாளராக நான் சென்று வந்தேன் என்பதை இத்தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் . சமாதான காலப் பகுதியில் வன்னியில் இடம்பெற்ற பல ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்கும் நான் சென்று வந்திருக்கிறேன். அப்போது புலிகளின் உயர் மட்ட தலைவர்களுக்கும் எனக்கும் இடையில் ஊடகவியலாளர் என்ற வகையில் நல்ல உறவு இருந்திருக்கிறது.
புலிகளின் புலனாய்வு மட்டத்தில் இருந்த சில முக்கியஸ்த்தர்களில் தொடங்கி அரசியல் மட்டத்தில் இருந்த பலர் வரையும் வன்னிக்கு சென்ற பல சந்தர்ப்பங்களில் என்னுடன் வந்து உரையாடி இருக்கிறார்கள். அவ்வாறான உரையாடல்களின் போது அவர்களின் நோக்கம் என்னவாக இருந்த போதும் ஊடகவியலாளன் என்ற எல்லையைத் தாண்டி அல்லது ஊடக செயற்பாடுகளுக்கு அப்பால் எனது செயற்பாடுகள் அமைய மாட்டாது என்பதனை அவர்களுக்கு முற்று முழுதாகத் தெளிவுபடுத்தி இருந்தேன்.
புலிகளின் குரல் முக்கியஸ்த்தர்களாக இருந்த தவபாலன், யவான் என்ற தமிழன்பன் ஆகியோர் ஊடகத்தில் வெளிவரும் செய்திகள் குறித்து என்னுடன் பலமுறை பேசியிருக்கிறார்கள். புலிகளின் மாவட்ட தளபதிகளாக இருந்தவர்களுடனும் அரசியற் பொறுப்பாளர்களாக இருந்தவர்களுடனும் பலமுறை நாளாந்தச் செய்திகள் தொடர்பாகவும் விசேட செவ்விகள் பெறுவது தொடர்பாகவும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறேன். சமாதான காலத்தில் வன்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில்அப்போதைய ஊடகத் தொடர்பாளராக இருந்த தயா மாஸ்ரருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.
ஒரு தடவை முக்கிய ஊடகச் சந்திப்பிற்கு சென்ற போது அடுத்த நாளும் முக்கிய சந்திப்பு ஒன்று இருந்ததனால் கிளிநொச்சியில் தங்க வேண்டி ஏற்பட்டது. புலிகளின் ஊடகத்தொடர்பு மையமாக இருந்த மிகப்பெரிய அலுவலக அறை ஒன்றில் ஒருசில ஊடகவியலாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தயாமாஸ்ரர் செய்திருந்தார்.
குளிரூட்டப்பட்ட அந்த அறைக்கதவைத் தட்டிக் காலையில் எங்களை எழுப்பிய போராளி ஒருவர் மிகவும் மரியாதையாக சேர் எனக் கூப்பிட்டுத் தேனீர் தந்தார். அந்தத் தேனீரைக் குடித்து விட்டு தயா மாஸ்ரரிடம் கூறினேன்: மாஸ்ரர் சற்று பின்னோக்கி 1986ஆம் ஆண்டின் பிற்பகுதியை நினைத்துப்பார்க்கிறேன். அப்பொழுது புலிப் போராளிகளால் கைது செய்யப்பட்டு அவர்களின் ஒரு முகாம் ஒன்றில் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன். கைகள் பின்னாற் கட்டப்பட்டு உள்ளாடை மட்டும் அணிய அனுமதிக்கப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்பொழுது “டேய் நாங்கள் வாறம் கதவுக்கு கிட்ட நிற்காதே!”எனக் கூறி கதைவைத் திறந்து ஒரு றப்பர் குவளையில் தேனீரை வைத்து “குடியடா தேனீரை” எனச் சொன்னது நினைவுக்கு வருகிறது எனக் கூறினேன். வழமை போலவே தனக்குரிய ஒரு சிரிப்புடன் “காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது குருபரன்” எனத் தயாமாஸ்ர்ர் சொன்னது ஞாபகம் வருகிறது.
உண்மைதான் காலம் ஒரே மாதிரிச் செல்லவில்லை.
சமாதான காலத்தில் தெற்கைச் சேர்ந்த பல ஊடகங்கள் வடக்கு கிழக்கிற்கு தமது சேவையை விஸ்தரிக்க முயற்சி செய்தன. சூரியனும் அதனை விஸ்தரிக்க முயன்றது. அப்போது வடக்கிற்கு சூரியனின் சேவையை விஸ்தரிக்க விரும்பினால் ஒரு தொகைப் பணத்தை தமக்கு செலுத்த வேண்டும் எனப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுச் சில நிறுவனங்கள் புலிகளுக்கு வரியை செலுத்தி இருந்தன.
இந்த நிலையில் எமது நிறுவனத்தின் நிர்வாகத்தினர் இதுபற்றி என்னுடன் உரையாடி மற்றைய நிறுவனங்களைப் போலல்லாமல் நாம் தமிழ்ப்பிரிவிற்கு அனைத்து சுதந்திரங்களையும் தந்திருக்கிறோம். இதனால் பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறோம். இவ்வாறு இருக்கையில் எமக்கு வரிவிதிப்பது என்றால் வடக்கிற்கு எமது சேவையை விஸ்தரிக்க நாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டார்கள்.
இந்த நிலையில் இந்த விடயத்தை நான் கையாள்வதாக எனது நிறுவனத்துக்குத் தெரிவித்து உடன் தயா மாஸ்ரருடன் பேசினேன். அவர் அப்போதைய அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் பேசி முடிவு சொல்வதாக தெரிவித்தார். எனினும் பல நீண்ட விவாதங்களின் பின் குறிப்பிட்ட தொகை செலுத்தாமல் வடக்கிற்கு சேவையை விஸ்த்தரிக்க முடியாது என கூறுகிறார்கள் என தயா மாஸ்ரர் தொலைபேசியில் சொன்னார்.
இந்த விடயம் அரசியல் துறைக்கு அப்பாற்பட்டது என்பதனை மாஸ்ரரின் கதையில் உணர்ந்து கொண்ட நான் வன்னி சென்ற போது என்னுடன் உரையாடிய புலனாய்வுத் துறை முக்கியஸ்த்தர் ஒருவருடன் சூரியன் சேவையை வடக்குக்கு விஸ்தரிப்பது பற்றி உரையாடினேன். சூரியன் எஃப் எம்மின் முழுச் செயற்பாடுகளையும் விபரித்து வடக்கிற்கான சேவை விஸ்த்தரிப்பிற்கு நீங்கள் பணம் கேட்டால் அது எமது தமிழ்ப் பிரிவின் செயற்பாட்டிற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவு படுத்தியிருந்தேன். இதுபற்றி உரிய இடத்தில் பேசி முடிவைச் சொல்வதாக கூறிய அவர் அன்று மாலையே கிளிநொச்சிக்கு வாருங்கள் வரிவிலக்குக் கடிதத்தை பெற்றுச் செல்லலாம் எனக் கூறினார். எமது நிறுவனம் தனியான வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்து கடிதத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னைக் கிளிநொச்சிக்கு அனுப்பியது. நான் புறப்பட்டு கொழும்பை தாண்டிப் புத்தளத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது தயா மாஸ்ரரிடம் இருந்து அழைப்பு வந்தது. நாம் கடிதத்தை தொலைநகலில் அனுப்பி விட்டோம். மூலப்பிரதியை வேண்டுமானால் கையில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்.
இங்கே இன்னும் ஒரு விடயத்தை சொல்லி ஆக வேண்டும். எந்த ஒரு நிறுவன அல்லது ஸ்தாபன அமைப்புகளுக்குள்ளும் அதன் அலகுகளுக்குள் இருக்கக்கூடிய போட்டிகள் குத்து வெட்டுக்கள் போலவே புலிகள் அமைப்பிற்குள்ளும் புலனாய்வுப் பிரிவு அரசியல் பிரிவு நிதிப்பிரிவு போன்ற பிரிவுகளிடையே போட்டியும் முரண்பாடுகளும் வலுவான நிலையில் இருந்தன. அதனை இந்தக் கடிதம் வாங்கும் விடயத்தில் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.
விடவும் தராக்கி என்கிற அமரர் சிவராம் அவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பும் அவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதனை அவர்களது விசாரனைகளில் புரிந்து கொண்டேன். இலங்கை அரசாங்கத்தையும் அவர்களின் படைகளையும் புலனாய்வுப் பிரிவினரையும் பொறுத்த வரையில் தராக்கி என்ற சிவராம் புலிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டவர் அவர்களின் அதி முக்கிய செயற்பாட்டாளர். சிவராம் ஆசிரியராக இருந்த தமிழ் நெற் சர்வதேச மட்டத்தில் அவர்களுக்கு பலத்த தலையிடியை கொடுத்த ஊடகம். அதுவும் புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டிலேயே இயங்கியது என்ற மிக உறுதியான நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருந்தமையினை அவர்களின் உரையாடல்கள் மூலம் என்னால் உணரக் கூடியதாக இருந்தது.
இந்த எண்ணப்பாடு புலிகளுடன் என்னை தொடர்புபடுத்த காரணமாக இருந்திருக்கலாம். ஊடகவியலாளன் என்ற வகையில் சிவராம் அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு செய்திகள் தொடர்பாக உரையாடிச் சில விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வார். சிவராம் தமிழ்நெற் ஆசிரியர் என்பதும் சிவராமுடன் எனக்கு உறவு இருந்தது என்பதும் எமது நிறுவனத்தில் கடமையாற்றிய சிங்களமொழி ஊடகவியலாளர்கள் பலருக்கும் தெரிந்தே இருந்தது.
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் எமது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு எதிராக அமைச்சர்கள் மங்களசமரவீர மற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோர் கொடுத்த நெருக்குதல்கள் குறித்த செய்திகள் தமிழ் நெற்றில் வெளியாகியும் இருந்தன. அந்த செய்திகள் பலவற்றை என்னிடமே சிவராம் உறுதிப்படுத்திக் கொண்டார். இவையெல்லாவற்றையும் கணக்கிட்ட என்னுடன் பணியாற்றிய சிங்களமொழி ஊடகவியலாளர்கள் சிலருக்கு தமிழ் நெற்றை கொழும்பில் இருந்து நானே இயக்குவதாகக் கடுமையான சந்தேகம் எழுந்திருந்தது. அவர்களது சந்தேகத்திற்கு வலுப்படுத்தக்கூடிய இன்னுமொரு சம்பவமும் நடந்தது.
3 ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக நான் நோர்வே சென்ற போது 18 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்த எனது பாடசாலை கால நண்பனும் இற்றை வரையும் என் உற்ற நண்பனாக விளங்குகின்றவருமான சுரேஸ் எனக்கு ஒஸ்லோவில் வைத்து மிகத் தரமான மடிக்கண்ணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
என் போன்ற ஊடகவியலாளர்கள் விலை கொடுத்து வாங்க முடியாத கண்ணி ஒன்றை நான் என் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது சிங்களமொழி ஊடகவியலாளர்கள் பலருக்கு அது புலிகளால் வழங்கப்பட்டது போன்றே தோன்றியது. ஒருவருக்கும் தெரியாமல் மடிக்கணணியூடாக நான் தமிழ் நெற்றுக்கு செய்தி அனுப்புகிறேன் என்றே அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். என்னை எனது வாகனத்தில் இருந்து இழுத்து வெளியில் எடுத்த போது கையில் பிஸ்ரலுடன் நின்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரி வாகனத்துள் இருக்கும் இவரது லப்டொப்பை எடு என மற்றவருக்கு கூற அதனை அவர்கள் தேடிய போதும் அன்று அதனை நான் கொண்டு வரவில்லை. எனது தேவைக்காக நான் வைத்திருந்த லப்டொப் எந்தளவுக்கு பலனாய்வுப் பிரிவினரை குழப்பியது என்பதனை அந்த அதிகாலைப் பொழுதில் என் வாகனத்தில் அதனை தேடியதன் மூலம் புரிந்து கொண்டேன்.
ஆனால் சிவராமுடனும் அவரின் பின்னால் நண்பர் ஒருவர் மூலமாக தமிழ் நெற் ஜெயாவுடனும் எனக்கிருந்த ஒரு ஊடகவியலாளனுக்குரிய தொடர்பைத் தவிர தமிழ் நெற்றை நோக்கிச் செல்லவேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.
இவை யாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை, அரசாங்கப் படையினரின் மனித உரிமை மீறல்களை, அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகின்ற ஊடகங்களை, புலி முத்திரை குத்துவதன் மூலம் இலகுவாக தென்பகுதி மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் பலமான பாரம்பரியம் அன்று இலங்கையில் வேருன்றி இருந்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
நான் மேற்சொன்ன காரணங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைய போர் தொடங்கும் போது கொல்லப்பட்ட வேண்டிய அல்லது இல்லாமல் செய்யப்பட வேண்டியோர் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுவிட்டது. அவர்களைப் பொறுத்த வரை நான் ஈழப் பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளுக் குடித்துக் கொண்டிருந்தேன்! அவ்வளவுதான்!!!
அதனால் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை கல்கிசையில் இருந்த எனது வீட்டு ஒழுங்கையில் நான் அலுவலகம் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்டு ஒழுங்கை முகப்பைச் சென்றடைந்த போது துப்பாக்கி முனையில் எனது வாகனம் வழி மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வாகனத்தில் இருந்து இழுத்துக் கீழிறக்கப்பட்டு என் நெற்றியில் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டு மிரட்டப்பட்டு அவர்களது வாகனத்தில் தூக்கி ஏற்றப்பட்டேன்.
ஏற்றப்பட்டுச் சில நிமிடங்களுக்குள் என் மேலுடுப்பு கழட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டு பின் கைகள் கட்டப்பட்டு வானின் தரையில் தலை வெளித்தெரியாது மடக்கி வைக்கப்பட்டேன்.
கிட்டத்தட்ட 1 மணிநேரமாக வாகனம் மேடு பள்ளங்கள் எனத்தாண்டி
ஓடிச் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தினுள் இருந்த தமிழ்ச் சகோதரர்கள் அவ்வப்போது அடிபோட்டு கழுத்தை அழுத்தி நெஞ்சை அழுத்தி கடைந்தெடுத்து வருத்தியதோடு கையில் அணிந்திருந்த 3 மோதிரங்களையும் உருவிக்கொண்டனர். அவற்றை உருவி எடுத்ததை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த தமது எஜமானர்களுக்கு சொல்லக் கூடாது என்றும் சொன்னால் அடித்தே கொல்லுவோம்என்றும் கூறினார்கள்.
நானும் அன்பே சிவம் கமலகாசன் போல் “பிழைத்துப்போங்கள்” என விட்டுவிட்டேன்( வேறு வழி உயிரா மோதிரமா?)
போகிற வழியில் இரண்டு இடங்களில் என்னைக் கடத்திச் செல்ல உதவிக்கு அழைத்து வரப்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறக்கி விடப்பட்ட இடங்கள் துணை ஆயுதக் குழுக்களிற்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்கள் என நினைக்கிறேன். இவர்கள் இலங்கைப் புலனாய்வாளர்களின் பிரதான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. அவை அமைந்திருக்கும் இடங்கள் துணை ராணுவக்குழுக்களுக்கு காட்டப்படுவதும் இல்லை. இறுதியில் காலை 5:30 அல்லது 5:45 மணியிருக்கும் என நினைக்கிறேன். மிகவும் அமைதியான ஒரு பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு வாகனத்தை விட்டு இறக்கப்பட்ட நான் ஒரு வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டேன். கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட என்னை வரவேற்று வாசலில் நின்ற அதிகாரி தலையில் டமார் என்றொரு குத்து விட்டார் சிறிது நேரம் எடுத்தது என்னை சுதாகரித்து கொள்வதற்கு.
பின்னர் என்ன நடந்தது ? 14 ஆவது தொடரில்

http://www.globaltam...IN/article.aspx


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]